டீசல், பெட்ரோல் விலை அதிகரிப்பால் பாதிப்பு : லாரி, ஆட்டோ, டாக்சி கட்டணங்கள் கிடுகிடு உயர்வு


Front page news and headlines today
சென்னை : பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பல மாநிலங்களில், லாரி, பஸ், ஆட்டோ, டாக்சி கட்டணங்கள், “கிடுகிடு’வென உயர்ந்துள்ளன. “சரக்கு போக்குவரத்துக் கான கட்டணத்தை உயர்த்துவது தவிர வேறு வழியில்லை’ என, தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம் கூறியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி, பெட் ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்குமாறு, மத்திய நிதியமைச் சர் பிரணாப் முகர்ஜியி டம் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை அறிவித்தார். உடனடியாக விலை உயர்வும் அமலுக்கு வந்தது. அதன் பாதிப்பு நேற்றே துவங்கிவிட்டது. விலை உயர்வை ஈடுகட்ட, சரக்கு போக்குவரத்துக்கான கட்டணத்தை உயர்த்தப் போவதாக, தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன் பொருளாளர் சென்னகேசவன் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த லாரிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்க, ஒரு கி.மீ.,க்கு 2.30 ரூபாய் சுங்க வரியாகச் செலுத்தப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன், டயர், டியூப் உட்பட உதிரிபாகங்களின் விலை 20 சதவீதம் அதிகரித்தது.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில், கனரக வாக னங்களுக்கான உற்பத்தி வரி 8லிருந்து 10 சதவீதமாகவும், பெட்ரோல், டீசல் விலை 2.75 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், நசிந்த நிலையில் உள்ள லாரி தொழிலில், மேலும் பாதிப்பு ஏற்படும். இது, லாரி தொழிலில் மட்டுமின்றி, அதை சார்ந் துள்ள பிற தொழில்களுக் கும் பாதிப்பு ஏற்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலை இழக்க வேண்டி வரும். இந்த விலை உயர்வை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில், சரக்கு கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு சென்னகேசவன் கூறினார்.

மதுரை லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சாத்தையா கூறியதாவது: வாகனங்களில் உபயோகப்படுத்தப்படும் பேட்டரி, உதிரி பாகங்களின் விலை 8 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், டயர் விலையும் உயரும். வேறு வழியின்றி, மார்ச் முதல் லாரி வாடகை கட்டணம் உயர்த்தப் படவுள்ளது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன், சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 5,856 ரூபாயாக இருந்தது. தற்போது, 3,744 ரூபாயாகக் குறைந்துள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம். இந்த விலை உயர்வு, ஏழை, நடுத்தர மக்களை நேரடியாக பாதிப்படையச் செய்யும். இவ்வாறு சாத்தையா கூறினார்.

லாரி வாடகை உயர்வை தொடர்ந்து, ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலையை உயர்த்த, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். டீசல் விலை உயர்வால், மாநில அரசு போக்கு வரத்துக் கழகங்கள், தனி யார் பஸ் உரிமையாளர் களும் மிகுந்த நஷ்டத்தை அடைய வேண்டியுள்ளது. எனவே, இவர்கள் நஷ்டத்தைக் குறைக்க, பஸ் கட்டணத்தை உயர்த்த, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கேரளாவில் ஸ்டிரைக்:கேரளாவிலும், டீசல் விலை உயர்வு காரணமாக, வரும் 2ம் தேதி தனியார் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் வேலை நிறுத்தம் அறிவித் துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகளையும், சாமானிய மக்களையும் கடுமையாக பாதிப்பதால், அவற்றுக் கான விலை உயர்வை வாபஸ் பெறுமாறு தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி:www.dinamalar.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: