காயிதேமில்லத் திடலில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

ஷவ்வால் பிறை காணப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் 3 இடங்களில் திடலில் தொழுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் காலை 6 மணி அளவில் கடையநல்லூரைச் சார்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு. புத்தாடைகள் அணிந்து தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர். இவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் பேரீத்தம்பழம் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். 
காயிதே மில்லத் ஈத்கா திடலில் சரியாக 6.30 மணி அளவில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிய உரையில்- இஸ்லாம் என்பது சாந்தியையும் அமைதியையும் போதிக்கக் கூடிய மார்க்கம் கடந்த ஒரு மாத காலம் உண்டு, பருகி, மனைவியோடு உறவு கொண்டு இன்புற்றிருக்க வேண்டிய முஸ்லிம்கள் பகல் முழுக்க இவைகளையெல்லாம் விலக்கிக் கொண்டனர். யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் படைத்த ஏகப் பரம்பொருhகிய அல்லாஹ் பார்க்கிறான் என்ற எண்ணம்தான். இது உலக மக்கள் அனைவருடைய உள்ளத்திலும் ஏற்பட்டு விட்டால் லஞ்சம், ஊழல், மோசடி, தீவிரவாதம் போன்ற அநியாயங்கள். அக்கிரமங்கள். அக்கிரமங்கள் ஏற்பட வாயப்பில்லை.  இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஒரு உயிரை
வாழவைத்தவன் உலகமக்கள் அனைவரையும் வாழவைத்தவன் போன்றாவான். நியாயமின்றி அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்பவன் உலகமக்கள் அனைவரையும் கொலைசெய்தவனாவன் என்று திருக்குர்ஆன் தீவிரவாதத்திற்கு எதிராக உரக்க குரல் கொடுக்கின்றது. நோன்புப் பெருநாளில் கூட இஸ்லாமியர்கள் ஏழைகளின் பசிப் பணியைப் போக்குவதற்காக ஈகையுடன் நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுகின்றனர். இத்தகைய ஈகைப் பண்பை ஏற்படுத்துவதுதான் இஸ்லாம் என்று அவர் தன்னுடைய பெருநாள் பேருரையில் எடுத்துரைத்தார்.
கடையநல்லூர் முழுவதிலும் இருந்து இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வமுடன் பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

மேலும் 2 இடங்களில் திடல் தொழுகை

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 3 வது தெரு மர்யம் பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்லாமிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி அப்துந் நாஸிர் அவர்களும் மேலும் மக்காநகர் பள்ளிவாசல் சார்பில் மௌலவி பஷீர் அஹமது MISC அவர்களும் பெருநாள் தொழுகையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள். அனைவரும் தங்களது உரைகளில் இஸ்லாம் கூறும் ஈகை பற்றி எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்ஜித் மர்யம், மக்கா நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
தொழுகைக்கு முன்பாக கடையநல்லூர் நகரில் ஆயிரக்கணக்கான ஏழைஎளிய மக்களை கண்டரிந்து வீடு தேடி தலா 5கிலோ அரிசி வீதம் பித்ரா எனும் பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.  
கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சொக்கலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் கடையநல்லூர் நகரக் காவல்துறை ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் பெருநாள் தொழுகை நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. 

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாக்குகிறோம்…!

கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்பெருநாள் தொழுகை

புனித ரமலான் மாதம்- ஒரு ஜெர்மானியப் பயணியின் இனிய அனுபவம்!

 German Touristதுபாய்: துபாயில் ரமலான் மாதத்தில் சுற்றுலாப் பயணியாக வருகை புரிந்த ஜெர்மனியைச் சேர்ந்த டேனியலுக்கு ரமலான் மாதம் இனிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து அவர் தெரிவிப்பதாவது :

வியட்நாம், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராகக் கருதப்படும் துபாய் வருகை புரிந்தவுடன் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் உணர்த்துகிறது.

கடுமையான வெயிலிலும் தொழிலாளர்கள் முதல் உயர்நிலைப் பணியாளர்கள் இறைக்கட்டளையான நோன்பை கடைப்பிடித்து வருவது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. கடுமையான வெயிலில் தண்ணீர் கூட அருந்தாமல் எப்படி சுமார் 14 மணி நேரம் இருக்க முடிகிறது என்பதனை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது.

இரவு நேரங்களில் அனைவரும் சிறப்புத் தொழுகைகளை தொழுது வருவது, சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் போட்டிகள் நடந்து வருவது, பகலில் நோன்பு வைக்காத பிற சமயத்தவர்கள் பொது இடங்களில் சாப்பிடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பல்வேறு இடங்களில் நோன்பாளிகளுக்கு பிரியாணி உணவு பரிமாறப்படுவதையே பார்த்து வந்த எனக்கு துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பாரம்பர்ய நோன்புக் கஞ்சியினை தினமும் 3000 பேருக்கு மேல் வழங்கி வருவது ஒரு வித்தியாசமான அனுபவம். மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படும் அதன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டுக்குரியவர்கள் என்று வியந்து பாராட்டினார்.

பின்னர், நோன்பு திறப்பதற்கு முன்பு பொது இடத்தில் அருந்தக்கூடாது என்ற சட்டம் இருப்பதன் காரணமாக தமிழகத்து நோன்புக் கஞ்சியினை பார்சல் வாங்கிக் கொண்டு வாழ்த்துக் கூறி விடைபெற்றார் ஜெர்மானிய சுற்றுலாப் பயணி டேனியல்.

thatstamil

சமச்சீர் கல்வித் திட்டம்-அரசின் குழப்பத்தால் அநியாயமாக வீணாகிப் போன 60 நாட்கள்!

கடந்த 60 நாட்களாக விடை தெரியாமல் நீண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டக் குழப்பத்திற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஆனால் இனிமேல்தான் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பிரச்சினையே ஆரம்பமாகப் போகிறது.

அரசு – உனக்கு இலவச லேப்டாப் வேணுமா?
மாணவன் – வேண்டாம்
அரசு – இலவச சைக்கிள் வேண்டுமா?
மாணவன் – வேண்டாம்
அரசு – வேற என்ன வேணும்?
மாணவன் – படிக்க ஏதாவது ஒரு புக் கொடுங்க போதும்

இதுதான் கடந்த 60 நாட்களில் தமிழகத்தை அதிகமாக வலம் வந்த எஸ்.எம்.எஸ்-ஸாக இருக்க முடியும். அந்த அளவுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும், விரக்தியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.

மிக மிக எளிதாக அணுகப்பட்டிருக்க வேண்டிய ஒரு விஷயத்தை மிகப் பெரிய சட்டச் சிக்கலாக்கி கடைசியில் தனக்குப் பாதகமாக அதை முடித்துள்ளது தமிழக அரசு. மக்களின் மிகப் பெரிய வரவேற்புடன், அமோக ஆதரவுடன், ஆட்சிக்கு வந்த அதிமுக அரசுக்கு இது நிச்சயம் மிகப் பெரிய பின்னடைவுதான், சறுக்கல்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மேலும் படிக்க..

முஸ்லீம்களும், நோன்புக் கஞ்சி அரசியலும்.

 
 புனித ரமழான் மாதம் என்பது முஸ்லீம்களின் மிக முக்கியமான காலமாகும். உலகுக்கான வழிகாட்டி திருமறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம்.
 
காலை மூன்று மணிக்கே எழுந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள்.
பஜ்ருத் தொழுகைக்கு பள்ளியை நிறைக்கும் மக்கள் கூட்டம்.
லுஹர் தொழுகைக்கு தவறாமல் வருபவர்கள்.
அசர் தொழுகையுடன் சேர்த்து நோன்புக் கஞ்சி வாங்க வருபவர்கள்.
நோன்பைத் திறக்க வேண்டும், சூரியன் எப்போது மறையும் என வைத்த கண் வாங்காமல் காத்திருக்கும் உள்ளங்கள்.
தொழுகை தொழப் போக வேண்டும் அனைத்து  வேலைகளையும் இப்போதே முடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே சமையலில் ஈடுபடும் தாய்மார்கள். என்று அனைவரும் ஆசுவாசமாக போற்றிப் புகழும் மாதம் தான் இந்த ரமழான்.
இஸ்லாமிய ஆன்மீகக் கருத்துக்கள் எப்போதும் பேசப்படும் இம்மாதத்தில் தற்போது அரசியலும் கலக்கப்படுவது ஓர் கவலையான உண்மையாகும்.

அதிகாலையில் இருந்து மாலை வரை உண்ணாமல், பருகாமல் இறைவனுக்காக தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளும் மக்கள் சூரியன் மறையும் நேரத்தில் நோன்பைத் திறப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு அங்கென்ன வேலை என்ற கேள்வி எழுவது நியாயமானதே!
ஆம் எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற பாணியில் கொடிகட்டித் திரியும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு தங்கள் பச்சோந்தித் தனத்தை காட்டிக் கொள்ளக் கிடைத்த பெரும் சந்தர்ப்பமாக இந்த ரமழான் மாதத்தை நினைக்கிறார்கள்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோன்புக் கஞ்சி அரசியல் மிகவும் பிரபலமானதாகும் அம்மா வருகிறார், ஐயா வருகிறார், தமிழினக் காவலர் வருகிறார், முஸ்லீம்களின் இதயம் வருகிறார் என்றெல்லாம் வாசகங்கள் அடங்கிய “கட்டவுட்களை” நாடு முழுவதும் இம்மாதத்தில் காணக்கிடைக்கும்.
பள்ளிவாயல்களில் நோன்பு திறக்கும் நிகழ்வு என்று கூறி அரசியல் வாதிகள் வரவேற்கப்படுவார்கள்.
தொப்பி அணிந்து, சில நேரங்களில் ஜுப்பாவும் போட்டுக் கொண்டு, வெள்ளையும் சொல்லையுமாக வரும் அரசியல் பிரபலங்கள். ஆன்மீக அரங்கில் தங்கள் அரசியல் தர்பாருக்கான இடத்தைப் பிடிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
ஒரு முஸ்லிம் நோன்பு காலத்தில் நோன்பு திறப்பதில் நியாயம் இருக்கிறது.
ஆனால் பல இடங்களில் இஸ்லாத்திற்கே தொடர்பில்லாதவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் என்ற பெயரில் அரசியல் நாடகம் போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
 
நோன்பு திறத்தல் என்ற உண்ணதமான ஒரு நிகழ்வையும் அரசியல் சாக்கடையாக்க முனையும் இவர்களை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்பது ஒரு புனிதப் பணி. நோன்பு திறப்பதற்கு உதவி செய்யும் பொது மக்களின் பணத்தை வீண் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்ததாதீர்கள்.
அரசியலை அரசியலுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளுங்கள், ஆன்மீக செயல்பாட்டில் நுழைத்து, புனித செயல்பாடுகளின் புனித தன்மையை கெடுக்காதீர்கள்.

அரசியல் வாதிகளுக்கு அரங்கம் அமைத்துக் கொடுத்து, ஆன்மீகத்தைக் கெடுக்கும் அசிங்கமான செயல்பாட்டைத் தவிர்த்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக!
சகோ.ரஸ்மின் MISC

மூடிக் கிடக்கும் கடையநல்லூர் ரயில் நிலைய கழிப்பிடம்-மக்கள் பெரும் அவதி

கடையநல்லூர்: வளர்ந்து வரும் முக்கிய நகரமான கடையநல்லூரில் உள்ள ரயில் நிலைய வளாகத்தில் இருக்கும் கழிப்பிடம் மூடியே கிடப்பதால் பயணிகள், குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில், கடையநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும. இங்கு ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கனக்கானோர் துபாய், சவுதி அரேபியா, குவைத் போன்ற வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.

அத்துடன் இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் தொழில் செய்தும், பணிபுரிந்தும் வருகின்றனர். இதனால் கடையநல்லூர் ரயில்வே ஸ்டேசன் ரயில் நேரங்களில் மிகவும் கூட்டமாக இருக்கும். தற்போது கடையநல்லூர் வழியாக மதுரைக்கும், சென்னைக்கும், ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கடையநல்லூர் ரயில்வே ஸ்டேசனில் கழிப்பறை செயல்படாமல் இருப்பதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரியிடம் கேட்டால் ரயிலில் ஏறி கழிப்பறை செல்லுமாறு பொறுப்பின்றி அலட்சியமாக கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் பயணிகளுக்கும் ரயில்வே அலுவலர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. அத்துடன் ரயில் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீரும், சுகாதாரமான சூழ்நிலையும் இல்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேபோல பயணிகள் காத்திருக்கும் அறையும் திறந்து வைக்கப்படாமல் பூட்டியே இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

உலக அளவில் புகழ் பெற்றதாக கூறப்படும் இந்திய ரயில்வே, நிர்வாக மேலாண்மை குறித்து ஐஐஎம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யும் இந்திய ரயில்வே, இப்படி பயணிகளுக்கு குறைந்தபட்ச வசதிகளை கூட செய்து தர மறுப்பது எந்தவகையில் நியாயம் என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.

பயணிகள் நலன் கருதி கடையநல்லூர் ரயில்வே ஸ்டேசனில் கழிப்பறை செயல்பட நடவடிக்கை எடுக்கவும், குடிநீர் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் ரயில்வே துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.

thatstamil

TNTJ நிர்வாகிகள் கைது ! காவல் நிலையம் முற்றுகை !!

தமிழக முதல்வரை கண்டித்து போஸ்டர் ஒட்டிய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கைது!!! விடுவிக்கக் கோரி காவல்நிலையம் முற்றுகை!!!

கடையநல்லூரில் 01.08.2011 திங்கள் அதிகாலை 1:00 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பில் கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கும் ஜெயலலிதாவை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அப்பொழுது காவல் துறையினரால் நகர டவுண்கிளை செயலாளர் ஹாஜா மைதீன் மற்றும் மாணவர் அணி செயலாளர் ரமீஸ் ஹஸன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதனை கேள்விப்பட்ட நிர்வாகிகள் நள்ளிரவில் காவல் நிலையத்தை சகோதரர்களுடன் முற்றுகையிட்டனர்.அப்பொழுது கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜ்மீம் அவர்களிடம் ஜனநாயக முறைப்படி தமிழகம் முழுவதும் இது போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஆகவே கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை உடனே விடுவிக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அலுவல் செயலாளர் சகோ.சுலைமான் வலியுறுத்தினார்.அதற்கு அதிகாலை 5:00 மணிக்கு விடுவிப்பதாக கூறிய துணைக் கண்காணிப்பாளர் அவர்களை விடுதலை செய்யாமல் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.இதனைக் கேள்விப்பட்ட கடையநல்லூரைச் சார்ந்த நூற்றுக்கணக்கான சகோதரர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

kdnltntj.tk