முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள். பகல் 12.25 முதல் 12.35 வரை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து இட ஒதுக்கீட்டை வலியுதித்தினார்கள்.
இது குறித்த முழு விபரம் வருமாறு:
மாநாட்டுக்கு முதல் நாள் ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தனி இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்துவதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கோரும் இரு கடிதங்கள் தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் மூலம் இருவருக்கும் சேர்ப்பிக்கச் செய்தோம்.
மாநாடு நடத்துவது மட்டும் போதாது. இட ஒதுக்கீடு தரும் இடத்தில் இருப்பவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? இட ஒதுக்கீடு தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா? இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுப்பூர்வமான மாநாடு மற்றும் பேரணி குறித்த தகவல்கள் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பை விரும்பினோம்.
பிரதமரும் சோனியா காந்தி அவர்களும் நேரம் ஒதுக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நேரம் ஒதுக்குவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.
மாநாடு முடிந்த மறுநாளே ஆறாம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.
தமிழக வரலாறு காணாத அளவுக்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உணர்ச்சிப் பிளம்பாகக் கலந்து கொண்ட தகவல் உளவுத்துறை மூலமும் மாநாட்டில் கலந்து கொண்ட சகோதரர் ஜெ. எம். ஹாருன் அவர்கள் மூலமும் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவருக்கும் செய்திகள் சென்றடைந்ததே இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் காரணமாக இருந்தது. பிரதமரி சந்திப்பின் போது இதைக் கண்டு கொண்டோம்.
தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் பி. ஜைனுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அஹமது ஆகியோர் காலை 7.00 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு குறித்த நேரத்தில் பிரதமரை சந்திக்கச் சென்றோம். வழக்கமான பாதுகாப்பு சோதனை முடிந்தபின் பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டோம்.மேலும் படிக்க…
Filed under: பொதுவானவை | Tagged: சோனிகாந்தி, பிரதமர் மன்மோகன் | Leave a comment »