இஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்பல்!

 
நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான “பூஜா லாமா” சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார். பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை “ஆம்னா ஃபாரூகி” என்று மாற்றிக் கொண்டதாக
 
கூறினார்.மேலும்”இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே 
 
இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்.” என்பதாக கூறினார்.
 
மேலும் அவர் கூறுகையில் “நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன் ,தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன்.இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியது நான் இப்பொழுது ஆபாசம்,மது ,புகை அகத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டு விட்டேன்.இஸ்லாத்தை பற்றி உலகம் கூறும் அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன்” என்றார் அவர்.
 
பூஜா லாமா என்ற தனது பழைய பெயரை கொண்டு தன் பழைய வாழ்கையை நினைவு படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இஸ்லாத்தை ஏற்ற பின் தனது நடிக்கும் தொழிலையும்,குடி,புகை போன்ற தீய பழக்கங்களை விட்டு விட்டார் ஆனால் இவர் ஆபாசமாக நடித்த படங்களைக்காட்டி இந்த பெண்ணின் மனதை நோகடித்துக் கொண்டிருக்கும் அவலமும் ஒரு புறம நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.அந்த பெண்ணிற்கு நேர் வழி காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்.

விபச்சாரத்தின் மறு பெயர் “காதல்”.

உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது.
 
இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன.
 
# முத்தமிடுவோர் தினம்,
 
# நிர்வாணமாக இருப்போர் தினம்,
 
# இறுகக் கட்டியணைப்போர் தினம்,
 
# ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்,
 
# பாலுணர்வைத் தூண்டுவோர் தினம் 
 
என்று நாளுக்கு நாள் தினங்களைப் பிரித்து வைத்து அதனைக் கொண்டாடி மகிழ்வதை ஒரு ஆரோக்கியமான செயல்பாடாக மேற்குலகு கருதுகின்றது.
 
கடந்த ஜனவரி மாதத்தில் நிர்வாணமாக இருப்போர் தினம் என்றொன்றை ரஷ்ய மக்கள் கொண்டாடியதும், ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் நிர்வாணமாக காட்சி தந்ததையும் மிகப் பெரிய சாதனையாக ஊடகங்கள் கொண்டாடின.
 
அதே ஜனவரி மாதத்தில் முழு உடம்பையும் காட்டிக் கொண்டு திரியும் சுமார் இருபத்தி ஐயாயிரம் பெண்களை ஓரிடத்தில் கூட்டி உலகிலேயே அதிகமான நிர்வாணிகள் ஒன்றினைந்த இடம் என்ற உலக சாதனையை(?) படைத்தமை ஒழுக்க விழுமியங்களை பேணிப் பாதுகாப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.
 
இது வரைக்கும் பல நாடுகளிலும் ஒழுக்க சீர் கேட்டை ஆதரிக்கும் தருதலைகள் முன்வைத்த ஒரு கோரிக்கைகளில் ஒன்றுதான் பாலியல் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். அதில் ஆண் பெண் வித்தியாசமின்றி பாலியல் தொடர்பான செய்திகள் செயல்பாட்டுடன் விபரிக்கப்பட வேண்டும் என்பது. மேலும் படிக்க…

அந்த மாணவனின் கையில் யார் கத்தியைக் கொடுத்தது?

நேற்றைய தொலைக்காட்சிகளிலும், இன்றைய பத்திரிகைகளிலும் இதுவே முக்கிய செய்தி. தன்னை நோக்கி கத்தியுடன் வந்த மாணவன் இர்ஃபானைப் பார்த்து டீச்சர் உமாமகேஸ்வரிக்கு வந்த பயமும், பதற்றமும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இன்று வந்திருக்கிறது. அதனை  எதிர்கொள்ள, தப்பிக்க அல்லது முறியடிக்க  கூடவே சிந்தனைகளும் முளைக்கின்றன.

 
“அந்தச் சிறுவன் ஒரு மனநல நோயாளி”,  “அவனைத் தூக்கில் போட வேண்டும்”,  “வளர்ப்பு சரியில்லை எனவே பெற்றோரையும் தண்டிக்க வேண்டும்”,  “சினிமாக்களும், தொலைக்காட்சிகளும்தான் இதுபோன்ற வன்செயல்களுக்கு வித்திடுகின்றன” இப்படியான கருத்துக்கள் அதிகமாக வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
 
“யாரும் பெயில் கிடையாது என்னும் பெயரை சம்பாதிக்க  பள்ளிகள் மாணவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகளே காரணம்”,   “ மார்க்குகளை மட்டுமே முக்கியமாகக் கருதும் இந்தக் கல்விமுறையே காரணம்”, “தொடர்ந்த  கட்டாயங்களால் ஏற்படும் மன அழுத்தம் இதுபோன்ற குற்றங்களுக்கு கொண்டு செல்கிறது” என நிதானமாக கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
 
இவைகள் வெறும் உணர்ச்சிகளின் தரப்பிலிருந்தும் அல்லது  முற்றிலும் அறிவின் தரப்பிலிருந்தும் சமூகத்தின் முன்னே நடத்துகிற உரையாடல்களாகத் தெரிகின்றன.  தற்காலிகமான ஆனால் உடனடியான தீர்வுகளுக்கான அல்லது நிரந்தரத்தீர்வுகளுக்கான  வழிகளை ஆராய்வதாக இருக்கின்றன. இவைகள் யாவிலும் உண்மைகளின் கூறுகள் இருப்பினும், மனித மனங்கள் பற்றி நிறைய பேச வேண்டியிருகிறது நாம். ஒரு கொலை, அதன் பின்னணி, கொலை செய்யப்பட்டவர், கொலை செய்தவர், ஆயுதம்,  சாட்சிகள் என்ற ரீதியில் இதனை ஒரு கேஸ் கட்டுக்குள் அலசிடமுடியாது.
 
கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் மகள் தொலைக்காட்சியில் பேசுவதைப் பார்க்க  கஷ்டமாயிருந்தது. “எங்க அம்மா ரொம்ப நல்லவங்க. எல்லார்ட்டயும் அன்பா இருப்பாங்க” என்று குரல் தழுதழுக்கச் சொல்லும்போது நமக்கும் தொண்டை அடைக்கிறது.  எப்பேர்ப்பட்ட இழப்பு அந்த குடும்பத்துக்கு. இனி அதை யாரால், எப்படி திரும்பக் கொண்டு வந்து சேர்த்துவிட முடியும்? அந்தக் கேவல்களை எப்படி நிறுத்த முடியும்?
 
“நான் தவறு செய்துவிட்டேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். நான் என் பெற்றோர்களையும் பார்க்க விரும்பவில்லை” என இர்ஃபான் அளித்துள்ள வாக்குமூலம், அவன் தன்னை உலகிலிருந்தே துண்டித்துக் கொள்ள முயல்பவனாகக் காட்டுகிறது. “அந்த டீச்சர் கதறியது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது” எனச் சொல்வதில் அவன் அடையும் சித்திரவதை இருக்கிறது.
 
இப்படிப்பட்ட இர்ஃபான் கையில் கத்தியையும் அவனது சிந்தையில் தன் டீச்சரைக் கொல்ல வேண்டும் எனகிற வெறியை யார் திணித்தது? இரண்டுநாளாய் கத்தியை தனது புத்தக்கட்டுக்குள் வைத்து திட்டமிட்டு இருந்திருக்கிறான். தக்க தருணம் எதிர்பார்த்திருக்கிறான். ஒரு குத்து அல்ல. மாறி மாறி குத்தியிருக்கிறான். கையெடுத்துக் கும்பிட்ட பிறகும் குத்தியிருக்கிறான். அவ்வளவு ஆத்திம் அவனுக்குள் எப்படி விதைக்கப்பட்டது? இதுதான் பெரும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
 
பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் என் மனைவி செய்தியை படித்துவிட்டு, “இப்போல்லாம் பிள்ளைங்கள எதுவும் சொல்லவே பயமா இருக்கு. உடனே அழுது தள்ளிருவாங்க. நிப்பாட்டவே மாட்டாங்க.” எனச் சொல்லி வந்தவள், “ஆனா,  எல்லோரையும் பொதுவா சத்தம் போட்டா அமைதியா இருப்பாங்க. அல்லது சிரிக்கக்கூடச் செய்வாங்க” என்றாள்.  “அதே மாதிரி, தனியா அழைத்துப் போய் கடுமையாப் பேசினாலோ, புத்திமதி சொன்னாலோ கேட்டுக்குவாங்க. அழல்லாம் மாட்டாங்க. ஆனா அதுக்குல்லாம் எங்க நேரம்? ஒரு வகுப்பிலேயே நாப்பது ஐம்பது புள்ளைங்க இருக்காங்க” என்றும் சொன்னாள். இந்த இடம்தான் வெளிச்சம் காட்டுவதாக இருக்கிறது.
 
இன்றைய குழந்தைகள் பொதுவெளியில் தங்களுக்கு ஒரு தோல்வியோ, அவமானமோ நிகழ்ந்தால்  அதனைத்  தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். தவறுகளை எப்படி யாருக்கும் தெரியாமல் செய்கிறார்களோ அதுபோல  தண்டனைகளையும் மற்றவர்களுக்குத் தெரியாமலேயே அனுபவித்துவிட  தயாராய் இருக்கிறார்கள். வெளிப்படையாய் தங்கள் பலவீனங்களை ஒப்புக்கொள்ள மருக்கிறார்கள். மனித மனத்தின் பொதுவான தன்மைகள் இவற்றிலிருப்பினும் இன்றைய குழந்தைகள் மிக தீவீரமாகவும், நுட்பமாகவும் இவ்விஷயத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் உலகில் அவர்கள் தங்களை மட்டுமே மிக அதிகமாக நேசிக்கிறார்கள். அதல் சிராய்ப்புகள் வருவதைக் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தங்களிடமிருக்கும் இந்த அன்பை எப்படி உலகம் முழுமைக்கும் அவர்களை பரிமாற வைப்பது என்பதுதான் இன்றைய சமூகத்தின் சவால். நிகழ்காலத்தின் கேள்வி. டீச்சர் உமா மகேஸ்வரியின் மரணம் இரத்தம் சிந்த சிந்த படுகொலையாக நிகழ்த்தப்பட்ட புள்ளி இதுவாகவும் தெரிகிறது.
 
ஒருவேளை, நேற்று வகுப்பறையில் உட்கார்ந்திருந்த உமாமகேஸ்வரி டீச்சர், அந்த மாணவன் உள்ளே நுழைந்ததும்,  “வா, இர்ஃபான் முதல் ஆளா கிளாஸுக்கு  வந்திருக்கியே. சந்தோஷமாயிருக்கு. இப்படி இருந்தா நீ எவ்வளவோ சாதிக்கலாமே” என்கிற தொனியில் பேசி முகம் மலர்ந்து வரவேற்றிருந்தால் அந்தக் கத்தி இர்ஃபானின் பையிலேயே இருந்திருக்கலாம். உமா மகேஸ்வரி அவர்களும் இப்போது ஒரு வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்திருக்கலாம். நானும், நேற்றைய பதிவுக்கு nellaiconspiracy என்னும் நண்பர் கேட்டிருந்ததற்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்திருக்கலாம்.
 
யோசித்துக்கொண்டே இருக்கிறேன். கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

லேப்டாப் தீப்பிடித்து வெடித்த விபத்தில் வாலிபர் பலி

கொல்கத்தாவில் இன்னொருவரின் உயிரைக் குடித்துள்ளது லேப்டாப் ஒன்று. ஆனால் இந்த முறை தவறு அந்த இளைஞரின் மீதுதான்.

கொல்கத்தாவில் 3 மாதங்களுக்கு முன்பு சயன் செளத்ரி என்ற பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவன ஆலோசனை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அருகே சார்ஜரில் மாட்டப்பட்டிருந்த லேப்டாப்பும், இயர்போன்கள் அவரது காதுகளில் மாட்டப்பட்டும் இருந்தது.

இந்த நிலையில் லேப்டாப்பால் இன்னொரு உயிர் போயுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சப்தரிஷி சர்கார். 30 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அருகில் எரிந்த நிலையில் லேப்டாப் கிடந்தது.அறை முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வந்து கதவைத் திறந்தபோது இந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், அறைக்குள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் சர்க்கார். அறை ஜன்னல்கள், கதவு மூடப்பட்டிருந்தது. அறை முழுவதும் புகையாக காணப்பட்டது. மூச்சுத் திணறி அவர் இறந்துள்ளார்.

லேப்டாப் ஒன்று வெடித்து எரிந்த நிலையில் காணப்பட்டது. அவர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்று தெரிகிறது. சிகரெட் பிடித்தபோது அது லேப்டாப்பில் விழுந்து அது தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

இதில் எந்த சதியும் இருப்பதாக தெரியவில்லை. விபத்தாகவே தெரிகிறது என்றனர்.

லேப்டாப்பில் அஜாக்கிரதை- உயிரைக் குடிக்கும்

லேப்டாப்பை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். படுக்கை அறையில் வைத்து அதைப் பயன்படுத்துவதோ, அதை அப்படியே அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதோ கூடாது என்கிறார்கள்.

படுக்கையானது மிகவும் மென்மையாக இருப்பதால், லேப்டாப்பின் கீழ்ப்பகுதி வழியாக காற்று புகுவதைத் தடுக்குமாம். சரியான காற்றோட்டம் லேப்டாப்புகளுக்குத் தேவை. அது தடைபடும்போது லேப்டாப் சூடாகி வெடிக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே லேப்டாப் வெடித்து உயிர்ப் பலி ஏற்பட்ட சம்பவங்கள் ருமேனியா மற்றும் நியூசிலாந்திலும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சார்ஜ் செய்து கொண்டே லேப்டாப்பை பயன்படுத்தியதால் விபத்து நடந்தது. bharathcommunication.blogspot.com