மாணவர்களின் நலன் கருதி ஐ.பி.எல் போட்டிகளைத் தடை செய்ய கோரிக்கை!

10 ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள  ஐ.பி.எல் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

 

 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

 

தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி முதல் நடைபெற உள்ளது. ஆனால் அதே நாளில் ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது என்ற செய்தியும், அதற்காக செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்களும் கவலை அளிப்பதாக உள்ளது.

 

கிரிக்கெட் மோகம் கொழுந்து விட்டு எரியும் நம் நாட்டில் கல்வி என்பது இரண்டாம் பட்சமாக பார்க்கப் படுகிறது.  வாழ்கையின் முக்கியமான தருணத்தில் உள்ள மாணவர்கள் கிரிக்கெட் போதையில் தங்கள் வாழ்கையை தடுமாறத்திற்கு உள்ளாக்கி விடுவார்களோ என்ற பயம் பெற்றோர்களுக்கும், மாணவர்களின் வாழ்கையில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.

 

ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்காவிட்டால் எதையோ பறிகொடுத்த போக்கில் பல மாணவர்கள் அலைவதும், கிரிக்கெட் போட்டிகளை குறித்து பல மணிநேரம் அரட்டை அடித்து நேரத்தை வீணாக்குவதும், ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்த வேண்டிய பொதுத்தேர்வு நேரத்தில் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

 

ஆபாசத்தின் உச்சக்கட்டத்தை விளையாட்டு போட்டிகளின் வாயிலாக கடை விரிக்கும் கலாச்சாரத்தை இந்தியாவில் துவக்கி வைத்த ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடரை உடனடியாக தடுத்து நிறுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.

 

ஐபிஎல் எனும் குழுவை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பி.சி.சி.ஐ  மாணவர்களின் வாழ்க்கையை குறித்து யோசிக்காமல் முடிவெடுத்ததில் வியப்பில்லை.

 

பணம் சம்பாதிப்பதற்காக யாரைப் குறித்தும் கவலைப்படாத சாராய வியாபாரிகளும், சமுதாயத்திற்கு மோசமான காரியங்களை கற்று தரும் நடிகர்களும் முதலாளிகளாக இருக்க கூடிய ஐபிஎல் குழு, மாணவர்களின் வாழ்கையை காவு வாங்க காத்துக் கொண்டிருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

 

ஒரு பொறுப்புள்ள அரசு மாணவர்களின் எதிர்காலம் குறித்து கண்டிப்பாக சிந்திக்கும். எனவே தமிழகத்தை 2023ல் ஆசியாவின் முதல் இடத்தில் வைக்க நினைக்கும் தமிழக அரசு அதற்கு அச்சாணிகளான மாணவ சமுதாயத்தைக் காக்கும் வகையிலும், பெற்றோர்களின் மனக்கவலைகளை போக்கும் வகையிலும் ஐபிஎல் டுவென்டி20 போட்டிகளை பொதுத் தேர்வுகள் முடிவடையும் வரை நடத்த அனுமதிக்க கூடாது.

 

ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ள சோனி மாக்ஸ் தொலைகாட்சியின் ஒளிபரப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து சமுதாய மாணவர்களின் சார்பாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுக்கிறது.

 

 

இஸ்ரேலிய குடியேற்றங்கள் – சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு: ஜெனீவாவில் தீர்மானம்

Security Council Meets on Sierra Leoneஜெனீவா: இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்த உத்தரவிடும் தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள், பாலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைக்கும் இத்திட்டத்தின் மூலம் தங்களது பகுதியை ஆக்கிரமிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு.

இது தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இஸ்லாமிய நாடுகள் சார்பில் பாகிஸ்தான் முன்வைத்தது. கியூபா, வெனிஸுலா நார்வே, இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட 36 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. இத்தாலி, ஸ்பெயின், உட்பட 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக அதாவது தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.

இத்தகைய தீர்மானங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு நிராகரித்துள்ளார். தங்களது பிரதேசத்தில் இத்தீர்மானம் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதும் இஸ்ரேலின் கருத்து.

நரபலி மோடியை கைது செய்ய கோரி அமெரிக்காவில் மிகப் பெரும் பேரணி

modi நியூ யார்க் : கோத்ராவை தொடர்ந்து குஜராத்தில் சிறுபான்மையினர் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி அமெரிக்காவில் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த 40 குழுக்கள் ஒன்று திரண்டு நடந்த சம்பவங்களுக்கு நீதி வேண்டும் என்றும் மோடி உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரி மாபெரும் பேரணி நடத்தினர்.

பேரணியில் கலந்து கொண்ட 40 குழுக்களில் ஒன்றான மதங்களுக்கிடையான புரிந்துணர்வு குழுவின் தலைவர் மார்க் லூகென்ஸ் “எச்சமூகத்தை சார்ந்த எந்த ஒரு தனி நபரும் அவர் சார்ந்த மதத்தின் பெயரால் இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் போது அவர்களுக்கு ஆதரவாகவும் அநீதிக்கு எதிராகவும் போராடுவது எங்கள் மீது கடமையாக உள்ளது” என்று கூறினார்.

“மதத்தின் பெயரால் அநீதி இழைக்கப்படும் போது அம்மதத்தை சேர்ந்தவர்கள் முன்னின்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அதனால் தான் இப்பேரணியில் கலந்து கொள்ள முடிவு செய்தோம்” என்று ப்ரொகரஸிவ் இந்துக்களின் கூட்டமைப்பின் தலைவரான சுனிதா விசுவநாத் கூறினார்.

2005ம் ஆண்டு இதே குழுக்களின் முயற்சியினாலேயே நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுக்கு வருகை தர விசா மறுக்கப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2002 கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி விரைவாக கிடைக்க குஜராத் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

inneram.com