தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலத்தில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு ! தீர்மானங்கள், புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (30-1-11) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில்சேலத்தில் பரபரப்புடன் துவங்கியது.

இதில் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு என்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றது.

முதலாவதாக மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

புதிய மாநில நிர்வாகிகள்

தலைவர் பி.ஜே
பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ்
பொருளாளர் அன்வர் பாஷா
து. தலைவர் அப்துர் ரஹீம்
து. பொதுச் செயலாளர் சைய்யத் இப்ராஹீம்

மாநிலச் செயலாளர்கள்
அப்துல் ஹமீது
சாதிக்
அப்துல் ஜப்பார்
யூசுப் (திருவள்ளூர்)
அஷ்ரஃப்தீன் பிர்தௌசி
மாலிக் (ராம்நாடு)
சாதிக் ( கோபிசெட்டிபாளையம்)

பொதுக்குழு தீர்மானம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

2011 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சேலம் நேரு கலை அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

மேலும் படிக்க..


சங்பரிவாரும் தேசீயச் சின்னங்களும்

காஷ்மீரிலுள்ள மசூதி ஒன்றின்மீது பலவந்தமாக கொடிகட்டும் பாஜக, விஹெச்பி தொண்டர்கள்

உள்ளத்தை இந்தியாவுக்கு இணக்கமாகத் திருப்ப வேண்டிய நேரத்தில், குறுகிய அரசியல் லாபங்களுக்காக பீ ஜே பீ  காஷ்மீரில் கொடியேற்றும் நாடகத்தை நடத்த முயன்றது. பீ ஜே பீ இந்தியாவை ஆண்ட காலத்தில் காஷ்மீரும் இருந்தது; குடியரசு மற்றும் விடுதலைநாள் கொண்டாட்டங்களும் வந்தன; இப்போது கொடியேற்றுவதற்காகத் தனிவிமானத்தில் பறந்து சென்ற அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஆனந்த குமார் போன்ற பி ஜே பீ தலைவர்களும் அந்தக் கட்சியில்தான் இருந்தனர். ஆனால் அப்போது அவர்களுக்கு அங்கே கொடியேற்றும் எண்ணம் வராத மர்மம் என்ன? இப்போது இந்தியாவை ஆளும் காங்கிரஸுக்கும் காஷ்மீரை ஆளும் ஓமர் அப்துல்லாவுக்கும் நெருக்கடி கொடுக்க நினைத்ததைத் தவிர வேறு நோக்கம் என்ன?

பீ ஜே பீ யின் கொடியேற்றும் திட்டத்தால் பிரிவினை பேசுவோரின் வலிமையும் அவர்களுக்கு மக்கள் ஆதரவும் கூடுமே தவிர அவர்களின் நெஞ்சங்கள் இந்தியாவிடம் நெருங்கா!

“இந்தியாவில் எங்கும் கொடியேற்றும் உரிமை உண்டு” என முழங்கும் பீ ஜே பீ க்கு,  அவர்களின் தலைமைக் கட்சியான ஆர் எஸ் எஸ் தலைமையக நாக்பூர் அலுவலகத்தில் கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்புவரை இந்தியத்  தேசீயக்கொடி ஏற்றப்பட்டதில்லை என்ற உண்மை தெரியாதா?

RSS தலைமையகத்தில் காவிக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்நாட்டு விடுதலை நாளில் இந்நாட்டுக் குடிமக்களான முஸ்லிம்கள் தங்கள் அமைப்பு சார்பாக விடுதலைநாள் பேரணி நடத்தி மூவண்ணக் கொடியேற்றுவதற்கு எதிராகக் குரல் எழுப்பித் தடை கோர முயலும் சங்பரிவார் அமைப்புகளுக்கு, “இந்தியாவில் எங்கும் கொடியேற்றும் உரிமை உண்டு” என்பது வெற்றுக் கூச்சல்தானா?

நாட்டு விடுதலை மற்றும் தன்னாட்சி தொடர்பான நாட்களும் நாட்டுக் கொடியும் உணர்வு பூர்வமானவை; உண்மையான தேசபக்தனின் போற்றுதலுக்குரியவை. உண்மையான தேச பக்தர்கள் அவற்றைத் தம் குறுகிய ஆசை அல்லது லாபத்துக்காகப் பயன்படுத்த மாட்டார்கள். கோடிக்கணக்கான ஏழைப் பாட்டாளி மக்களின் உணவாகப் பயன்படும் மாடுகளை அறுப்பதற்கு எதிராக உணர்ச்சிக் குரல் எழுப்பும் சங்பரிவார், தேசீய நாட்களையும் தேசீயக் கொடியையும் சுயலாபத்துக்காகப் பயன்படுத்துவது தன் அரசியல் வாழ்விற்காகவும் வெடிகுண்டு வழக்குகளில் சிக்கியிருக்கும் சங்பரிவார் முகத்தைக் காப்பதற்காகவுமே என்பது இந்திய மக்களுக்குத் தெரியாதா?

சங்பரிவார் தலைவர்கள் திரைமறைவில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல்கள் தற்போது வழக்கு-விசாரணைகளில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருப்பதும் அவற்றைக் காஷ்மீரில் கொடியேற்றும் நாடகம்போல் எத்துணை முயன்றாலும் திசைதிருப்பிவிட முடியாது என்பதும் மக்களுக்குப் புரியாதா என்ன?.

– ரஸ்ஸல்.

ஹஜ் மானியம் சட்ட விரோதம் அல்ல – உச்ச நீதி மன்றம் தீர்ப்பு!

ஹஜ் யாத்திரிகர்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை எதிர்த்து நாடாளுமன்ற பாஜக முன்னாள் உறுப்பினர் தொடர்ந்த வழக்கில், “அரசு ஹஜ் மானியம் வழங்குவது சட்ட விரோதமல்ல” எனக்கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பா.ஜ.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபுல் கொராடியா என்பவர், ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிக்கப்படுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவில், “மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, அரசின் வரிப் பணம் பயன்படுத்தப்படுவது, அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறும் செயல். எனவே ஹஜ்ஜுக்காக அரசு வழங்கும் மானியத்தை ரத்து செய்து உத்தரவிடவேண்டும்” என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.

இருபக்க வாதப்பிரதிவாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “புனித யாத்திரை செல்பவர்களுக்காக, சிறிய தொகையிலான அரசுப் பணம் பயன்படுத்தப்படுவது, சட்ட விரோதமாகாது. சட்டத்தைப் பொறுத்தவரை, வருமான வரி மூலம் வசூலிக்கப்பட்ட ஒட்டு மொத்த தொகையில் கணிசமான பகுதியையோ, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்ட மற்ற வரிகள் மூலம் வசூலிக்கப்படும் ஒட்டு மொத்த தொகையில், கணிசமான பகுதியையோ, மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக செலவிட்டால் தான், அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறியதாகக் கருத முடியும். ஒட்டு மொத்த வருமான வரி வசூலில், 25 சதவீதத்தை குறிப்பிட்ட மதத்தினரை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தினால், அதுவும் விதிமுறைகளை மீறியதாகக் கூறலாம்.

ஆனால், சிறிய அளவிலான தொகையை இதற்காக செலவிடுவதைச் சட்ட விரோதமாகக் கருத முடியாது. பாகிஸ்தானில் உள்ள கோவில்கள் மற்றும் குருத்வாராக்களுக்குச் செல்வதற்காக, இந்து மற்றும் சீக்கிய மதத்தினருக்கும், சில மாநில அரசுகள் சார்பில் வசதிகள் செய்து தரப்படுகின்றன. இவையெல்லாம், அரசின் ஒட்டு மொத்த வரி வசூல் தொகையை ஒப்பிடும் போது, மிகவும் சிறிய தொகையே” என தீர்ப்பளித்து, பிரபுல் கொராடியா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

பாபர் மசூதி தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு:

சென்னை, ஜன. 27,

பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது தலைமை தாங்கினார்.

நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு சட்டத்துக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.

எனவே உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு தானாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். மாநில துணைத் தலைவர் ரகமத்துல்லா உள்பட ஏராளமான பிரமுகர்களும் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பஸ்லிவேன்களில் வந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் ஐகோர்ட்டை நோக்கி முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்தை திருப்பி விட்டனர்.

27-1-2010 மாலை மலர்

தர்மத்தை வலியுறுத்த உலக பணக்காரர்கள் இந்தியா வருகை!

உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவரான பில்கேட்ஸும் மூன்றாவது இடத்தில் உள்ள பங்குச் சந்தை வர்த்தக மன்னரான பப்பெட் ஆகியோர், இந்திய பணக்காரர்களிடம் தர்மத்தை வலியுறுத்தி சமூக சேவையை ஊக்கப்படுத்துவது குறித்து விவாதிக்க இந்தியா வருகை தர உள்ளனர்.
உலகப் பணக்காரர்களில் ஒருவரும், சமூக சேவைகளில் சிறந்து விளங்குபவருமான பில் கேட்ஸ், தனது சேவையை சீனா மற்றும் இந்தியாவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, “நான், எனது மனைவி மெலிண்டா, மற்றும் பங்குச் சந்தை வர்த்தக மன்னரான பப்பெட் மூவரும் இந்த வருடம் இந்தியா சென்று, அங்குள்ள பணக்காரர்களிடம் சமூக சேவை செய்வதை ஊக்கப்படுத்துவது பற்றி விவாதிக்க உள்ளோம். இந்த விவாதக் கூட்டம் கடந்த வருடம் சீனாவில் நடந்ததைப் போன்று இருக்கும்.

பப்பெட்ஸும் நானும் அமெரிக்காவைச் சேர்ந்த பில்லியனர்கள் பலரை தங்களது செல்வத்தில் பாதியை தங்கள் வாழ்நாளுக்குள் அல்லது தங்கள் இறப்பின் போது சமூக சேவைக்குத் தர வற்புறுத்தி வருகின்றோம். Giving Pledge  எனப்படும் இந்த ஒப்பந்தத்திற்கு 57 பெரும் பணக்காரர்கள் கையெழுத்திட்டு உள்ளனர். சீனாவில் நடந்த கூட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததைப் போலவே இந்தியாவிலும் இருக்குமென எதிர்பார்க்கிறோம்.

சீனாவின் பணக்காரர்களுக்கு, அவர்கள் வழியில் சமூக சேவை செய்தாலும் எங்களின் முறையைப் பற்றி அறிந்து கொள்ளும் தாகம் அதிகமாக இருந்தது. பணக்காரர்களிடம் தனது செல்வத்தை மற்றவருக்குக் கொடுக்கும் எண்ணம் வளர சிறிது காலம் பிடிக்கும். Giving Pledge போன்ற திட்டங்கள் மூலம் உலகளவில் மனித இனத்திற்குச் சேவை செய்யும் தன்மையை அதிகரிக்க முடியும்.

அமெரிக்காவில் இத்திட்டத்தை செயல்படுத்த அதிக காலம் ஆனது. மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தங்கள் செல்வத்தை மற்றவருக்குக் கொடுக்க முன்வருகின்றனர்” என்று கூறினார்.

உலக பெரும் பணக்காரர்களில் பில் கேட்ஸ் $53 பில்லியன் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும் பப்பட் $47 பில்லியன் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தற்போது $34 பில்லியன் மதிப்புள்ள கேட்ஸ் பவுண்டேஷன் என்னும் சமூக சேவை நிறுவனத்தை நடத்துகிறார். இந்நிறுவனம் வளரும் நாடுகளின் ஆரோக்கியம் சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

inneram.com

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்த் கைது!

ஹைதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பு மற்றும் சம்ஜெளதா விரைவு ரயில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஒப்புதல் வாக்கு மூலமும் அளித்துள்ள சுவாமி அசீமானந்த் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சுவாமி அசீமானந்த் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அஜ்மீர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஏற்கனகே கைது செய்யப்பட்டு தேசிய உளவு நிறுனத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சுவாமி அசீமானந்தை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புக் காவல் படையினர் தங்களது பாதுகாப்பில் எடுத்து அஜ்மீர் நீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று முன்னிலைப்படுத்தினர்அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரித்து மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாஜிஸ்ட்ரேட்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தீவிரவாதத் தடுப்புப் படையினர் சுவாமி அசீமானந்தை தங்கள் காவலில் விசாரணைக்குக் கொண்டு சென்றனர். திங்கள் கிழமை மாலை மீண்டும் அவர் அஜ்மீர் மாஜிஸ்ட்ரேட் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்.

ஹைதரபாத் மக்கா மசூதி, மாலேகான் குண்டு வெடிப்பு மற்றும் சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள அசீமானந்த், ஹைதராபாத் குண்டு வெடிப்பில் தவறாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்து முஸ்லிம் கைதி ஒருவரின் நன்னடத்தையைத் தொடர்ந்து, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி!!!

https://nallurpeer.files.wordpress.com/2011/01/ms05.jpg

நாம் வளர்த்த இயக்கம் சமுதாய, அரசியல் ரீதியான பிரச்சனைகளில் தலையிடாமல் தூரப் போனது.
வெளிவந்தவுடன் சமுதாய, அரசியல் ரீதியிலான பிரச்சனைகளையும் நாம் கையில் எடுத்தாக வேண்டும் என்ற நம்முடைய வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்கானது. பற்பல ஊர்களில் பற்பல அமர்வுகள்!

சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுப்பது காலத்தின் கட்டாயம், ஒட்டுமொத்த தமிழகத்தில் அரசியல் ரீதியிலான பிரச்சனைகளில் முஸ்லிம்களுக்கு ஒரு வெற்றிடம் உள்ளது; அதை நம்மைத் தவிர வேறு யாரும் நிரப்ப முடியாது என்று விளக்கி, அதற்குக் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இன்னின்ன ஆதாரங்கள் என்று சமர்ப்பணம் செய்தோம்.மேலும் படிக்க..

ஒபாமாவிற்கு விலைவுயர்ந்த பரிசுகளை தந்தவர் சவுதி மன்னர்

https://i0.wp.com/odagam.com/wp-content/uploads/2011/01/Obama-and-abdullah.jpg

அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்ற பிறகு வெள்ளை மாளிகையின் முதல் ஒரு வருடத்தில் அவருக்கு அதிக மதிப்புள்ள பரிசுகளை வழங்கியவர் சவுதி மன்னர் என்று அமெரிக்க அரசு செய்தி வெளியிட்டு உள்ளது. சவுதி மன்னர் அப்துல்லாஹ் 2009 ஆம் ஆண்டில் மட்டும் ஒபாமா குடும்பத்திற்கு 190,000 டாலர்கள் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கொடுத்து உள்ளார். இதன் இந்திய மதிப்பு 86 லட்சம் ரூபாய். இதில் ஒபாமாவின் மனைவிக்கு கொம்பு, வைர நகைகள், காதணி, மோதிரம், காப்பு  மற்றும் கழுத்து மாலை என அவருக்கு மட்டும் அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொடுத்து உள்ளார். ஆனால் இது போன்ற நகைகள் அவர் அணியும் பழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர் அப்துல்லாஹ்வை அடுத்து அவருக்கு அதிக மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கியவர் என்ற இரண்டாவது இடத்தில் இருப்பவர் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுச்கோம் (Silvia Berluscom). இவர் பதினைந்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்து இருக்கிறார் என்றாலும் அதில் ஒரு லட்சத்திற்கு விதவிதமான collar tie(சவடி இழுவைமரம்) கொடுத்து இருக்கிறார்.

சீனா அதிபர் ஹு ஜின்டோ (Hu Jintao) பத்து லட்சம் மதிப்புள்ள பட்டு பூத்தையல்(silk embroidery) பரிசளித்துள்ளாராம். மேலும் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கொழி (Nicolas Sarkozy) இரண்டு லட்சம் மதிப்புள்ள கிறிஸ்டியன் டியோர் (Christian Dior) கம்பெனி பரிமளப் பை(Perfume) ஒன்றை வழங்கியுள்ளார்.

பிரிட்டிஷ் அதிபர் கோர்டன் ப்ரௌன் (Gordon Brown) பேனா, பேனா ஸ்டாண்ட் மற்றும் வின்ஸ்டன் சர்சில் பற்றிய சுயசரிதை என இவர் வழங்கியுள்ள பரிசுகளின் மதிப்பு எழரை லட்சம் இருக்குமாம்.

இஸ்ரேலிய அதிபர் சைமன் பெரேஸ்(Shimon Peres) ஒரு பெண் புறாவை பறக்க விடுவது போன்ற ஒரு வெண்கலச் சிலை ஒன்றை பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு  மூன்றரை லட்சம்.

ரோமன் கதோலிக மார்க்கத்தாரின் பிரதான குருவான போப் மூன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்கள் மற்றும் புத்தகங்களை கொடுத்துள்ளார்.

பிரிட்டனின் எலிசபெத் ராணி (Elizabeth Rani) தன்னுடைய ஓவியம் ஒன்றை பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு நாப்பதாயிரம்.

பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் (Mahmoud Abbas)இருபத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கியுள்ளார், அதில் நாலாயிரம் மதிப்புள்ள ஒலிவ் எண்ணெய்களும் அடங்கும்.

odagam.com

எக்ஸிமா, ஆஸ்த்மா, அலர்ஜி நோய்கள் ஏன் அதிகரிக்கின்றன

தடிமன், சளி, தொடர்ச்சியான இருமல் என பலர் இந்த மார்கழி, தை மாதத்தில் மருந்திற்கு வந்திருந்தனர். பனிக்குளிர் நேரத்தில் இது வழமையானதுதான். ஆயினும் ஒரு காலமும் ஆஸ்த்மா நோய் வராத சிலருக்கு ஆஸ்த்மா இருப்பதாகக் கூறியவுடன், நான் சொல்வது சரிதானா என்ற சந்தேகம் அவர்களிடம் எழுந்ததை உணர முடிந்தது.
ஒவ்வாமை நோய்கள்
ஆஸ்த்மா மாத்திரமின்றி அதனுடன் தொடர்புடைய பிரச்சனையான அலர்ஜி (Allergy) எனப்படும் ஒவ்வாமையும் உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

நூற்றுக்கு 50 பேர் ஒவ்வாமை ஏற்படுவதற்கு பதமாக இருக்கிறார்கள் எனச் சில ஆய்வுகள் கூகின்றன. இவை காரணமாக பலரும் ஏடொபிக் (Atopic) நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

சளி, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுகடி, ஆஸ்த்மா, எக்ஸிமா போன்ற பலவும் இத்தகைய ஏடொபிக் மனிதர்களுக்கே வருகிறது.

அதாவது அவர்கள் அத்தகைய நோய்கள் வருவதற்கு பதமாக இருக்கிறார்கள். இதைத்தான் எமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் ‘கிரந்தி உடம்பு’ என்று குறிப்பிடுகிறார்கள் என எண்ணுகிறேன்.

சுகாதாரமான சூழல் கோட்பாடு

அது சரி, இத்தகைய நோய்கள் இப்பொழுது அதிகரிப்பதற்குக் காரணம் என்ன?

(விளக்கப் படத்தை தெளிவாகப் பார்க்க அதன் மேல் கிளிக் பண்ணுங்கள்)

கிருமிகள் அற்ற  சுகாதாரமான சூழல்தான் (hygiene Hypothesis) காரணம் என்ற கோட்பாட்டை பல மருத்துவ ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள்.

முன்னைய காலங்கள் போல இப்பொழுது மனித இனம் தொற்று நோய்களுக்கு ஆளாவதில்லை.
மண்ணிலும் புழுதியிலும், அழுக்கிலும் இன்றைய குழந்தைகள் உழல்வதில்லை.

அவர்களது உணவு, சுற்றாடல் யாவும் சுத்தமாக சுகாதாரமாக இருப்பதால் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன.

இது நல்லதுதானே என்று கேட்கிறீர்களா?

இல்லை!

கிருமித் தொற்று ஏற்படும்போது எமது உடல் அதற்கு எதிராகப் போராடுகிறது. அதனால் உடலின் நோயெதிர்புச் சக்தி வளர்கிறது.

ஆனால் தொற்றுநோய்கள் குறைந்த தற்காலச் சூழலில் குறைந்தளவு நோயெதிர்புச் சக்தியே (Reduced Immune Stimulation) அவர்களில் ஏற்படுகிறது.

நோயெதிர்புச் சக்தி குறைந்ததாலேயே ஏடொபிக் (Atopic)  நோய்கள் அதிகமாகிவிட்டது என்கிறார்கள்.

ஆனால் மேற்கூறிய கோட்பாட்டை மட்டுமே அதிகரிக்கும் ஆஸ்த்மாவிற்குக் காரணமாகக் கூறமுடியாது. வேறு விடயங்களும் இருக்க வேண்டும்.

வைரஸ் தொற்று நோய் (Human Immunovirus Infections)

தற்காலத்தில் உலகெங்கும் அதிகமாகத் தொற்றும் கிருமியாக ஹியுமன் ரைனோ வைரசைக் (Human Immunovirus Infections) கூறுகிறார்கள்.
இதுவே தடிமனுக்குக் காரணமான வைரஸ் ஆகும். இதனை அழிக்கும் வைரஸ் கொல்லி மருந்துகள் கிடையாது.

தணிந்திருக்கும் ஆஸ்த்மா நோய் திடீரெனத் தீவிரமடைவதற்கு வைரஸ் தொற்று நோய்கள் காரணம் என்பது தெரிந்த விடயமே.

அத்துடன் சிறுவயதில் ரைனோ வைரஸ் தொற்றினால் மூச்சிழுப்பதில் சிரமம் ஏற்படும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பும் அதிகம் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.

இந்த ரைனோ வைரஸ் தொற்றானது சாதாரணமானவர்களிலும் ஏடொபிக் மனிதர்களிலும் வெவ்வேறு விதங்களில் செயற்படுகிறது.

ஏடொபிக் மனிதர்களில் ரைனோ வைரஸ் தொற்றினால் சுவாசத் தொகுதியின் கலங்கள் அழற்சியடைந்து, சேதமாவதுடன் சுவாசக் குழாய்களும் இறுக்கமடைகின்றன.

இதனால் அவர்களுக்கு வரும் ஆஸ்த்மா சற்று தீவிரமாக இருப்பதுடன் சிகிச்சைகள் பலனளிப்பதும் தாமதமாகிறது.

மார்கழி, தை ஆகியன குளிர் அதிகமான மாதங்கள். அத்துடன் சுற்றுச் சுழல் பாதிப்படைந்து பூமி வெப்பம் அடைவதால் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் அதிகமாக உருகுவதால் இவ்வருடம் வழமையை விடக் குளிர் அதிகம் என்கிறார்கள்.

ஹியுமன் ரைனோ வைரசையால் தடிமன் தொற்றும் அதிகமாயிருந்தது. இதுதான் இவ்வருடம் சளிசம்பந்தமான நோய்கள் அதிகரித்ததற்கும் பலருக்கும் ஆஸ்த்மா இழுப்பு வந்ததற்கும் காரணமாக இருக்கலாம். அதைத் தடுக்க இன்ஹேலர்களை உபயோகிக்கவும் நேர்ந்திருக்கலாம்.

இத்தகவல்கள் நோயாளிகளான உங்களை நீங்களே பாதுகாக்க எந்தவிதத்தில் உதவும் என்று புரியவில்லை.

ஆயினும் எதிர்கால மருத்துவ ஆய்வுகள் அத்தகைய வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்தவும், அதை மீறித் தொற்றினால் அதைக் குணப்படுத்தவும் புதிய சிகிச்சைகளைக் கொண்டு ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்கவும் ஆவன செய்யும் என நம்பலாம்.

நன்றி -டாக்டர்.எம்.கே.முருகானந்தன்.

காங்கிரஸின் கரசேவை! பறிக்கப்படும் பள்ளிவாசல் – நடந்தது என்ன?

https://nallurpeer.files.wordpress.com/2011/01/masjid.jpg?w=300

கடந்த ஜனவரி 12 ஆம் தேதி டெல்லி வளர்ச்சி ஆணையத்தினரால் இடித்து நீக்கப்பட்ட நூர் பள்ளிவாசல் இடம் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான கெஸட் ஆதாரம் வெளியாகியுள்ளது. அதே நேரம் இப்பள்ளிவாசலின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ள வால்மீகி கோவில் அரசு நிலத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டது எனவும் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை நீக்கம் செய்வதற்காக நடவடிக்கை துவங்கிய டெல்லி வளர்ச்சி ஆணையம் இக்கோயில் நிலத்தைக் கோயிலுக்காக விட்டுக்கொடுத்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பள்ளிவாசல் எனக்கூறி, டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்து நீக்கம் செய்த நூர் பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்த 350 சதுரமீட்டர் நிலம், முஸ்லிம்களுக்கென வக்ஃப் செய்யப்பட்டு வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான 1975 ஆம் ஆண்டு கெஸட் ஆதாரம் வெளியாகியுள்ளது. 1947-48 ஆம் ஆண்டின் ஜமாபந்தி(நிலத்தின் உரிமையாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பு)யில் இவ்விவரம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இப்பள்ளிவாசலை இடித்து நீக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க..