தொப்பி, ஸ்கார்ப், டர்பன் அணிய முஸ்லீம், சீக்கியர்களுக்கு நியூயார்க் அனுமதி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நியூ யார்க் : நியூயார்க்கில் உள்ள அனைத்து போக்குவரத்து அமைப்புகளிலும் பணியாற்றும் முஸ்லீம், சீக்கியர்களுக்கு தொப்பி, தலைப்பாகை அணிவதில் விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து நியூயார்க் மாகாணத்தில் பேருந்து, ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் தலையில் தொப்பி, தலைப்பாகை, டர்பன், ஸ்கார்ப், ஹிஜாப் உள்ளிட்டவை அணியும் போது அதில் போக்குவரத்து அலுவலகத்தின் சின்னம் பொறிக்கப்பட்டதை தான் அணிய வேண்டும் என்று கட்டுபாடு விதிக்கப்பட்டது.

மார்ச் 2002ல் அமுல்படுத்தப்பட்ட உத்தரவுக்கு சீக்கியர்களும் முஸ்லீம்களும் தங்களை தனிமைப்படுத்துவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சட்டத்தை வாபஸ் பெற மெட்ரோ போக்குவரத்து அமைப்பு மறுத்தது. 2004ல் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக 8 ஆண்டுகள் கழித்து முஸ்லீம்களும் சீக்கியர்களும் எவ்வித கட்டுபாடுகளும் இன்றி தலைப்பாகை, தொப்பி, ஸ்கார்ப் உள்ளிட்டவற்றை அணியலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சீக்கிய கூட்டமைப்பின் தலைவர் அமர்தீப் சிங் இது வரை தங்கள் நம்பிக்கை அல்லது வேலை இரண்டில் ஒன்றை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலையிலிருந்து சிறுபான்மையினரை காப்பாற்றிய தீர்ப்பை வரவேற்பதாகவும் இரட்டை கோபுர தாக்குதலுக்காக பழிவாங்கபட்ட அப்பாவி சீக்கிய மற்றும் முஸ்லீம் மக்களின் துயரம் முடிவுக்கு வந்ததற்காகவும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

குஜராத் கலவரத்தில் நரபலி மோடியின் பங்கு — உரிய விசாரணை தேவை– ராஜூ ராமச்சந்திரன்

கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த கலவரத்தில் அம்மாநில முதல்வர் மோடியின் பங்கு பற்றி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமிக்கஸ் கரியான ராஜு ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

 குல்பர்க் ஸொஸைட்டி கலவரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம் பி இஹ்ஸான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மோடிக்குத் தொடர்பில்லை என எஸ் ஐ டி அறிக்கை கொடுத்திருந்தது. குல்பர்க் ஸொஸைட்டி வழகுக்கு மட்டும் கொடுத்த அறிக்கையை வைத்துக்கொண்டு குஜராத் கலவரத்தில் மோடிக்குத்தொடர்பில்லை என பாஜகவினரும் அவர்களது ஆதரவாளர்களும் கூறினர். இதுபற்றி விளக்கமாக ரமது தளத்தில் வணங்காமுடி விடைப்பகுதியிலும் விவரிக்கப்பட்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. குஜராத் கலவர வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த அமிகஸ் கரி ராஜூ ராமச்சாந்திரன் தமது அரிக்கையைத் தாகல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–

குஜராத் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.காவல்துறை அதிகாரிகள் பலரும் சில அரசு வழக்கறிஞர்களும் சரியான முறையில் சட்டப்படிச் செயல்படவில்லை; கலவர வழக்குகளை அவர்கள் சரியாகக் கையாளவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்புக்குப் பின்னர் அதுதொடர்பான செய்தி குஜராத் முழுவதும் பரப்பப்பட்ட விதம் பற்றியும் அதைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டதா என்பது குறித்தும் தீர விசாரிக்க வேண்டியுள்ளது.

மேலும் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 11 மணியளவில் முதல்வர் மோடியின் இல்லத்தில், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதாக அப்போதைய உளவுப் பிரிவு துணை ஆணையரான சஞ்சீவ் பட் கூறியதில் உண்மை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடியின் தலைவர் கூறியுள்ளார்.

ஆனால், அப்போது மூத்த உளவுப் பிரிவு அதிகாரியாக சஞ்சீவ் பட் இருந்தார் என்பதால், அவர் கூட்டத்தில் கலந்து கொண்டாரா என்பது குறித்து ஆராய வேண்டியது அவசியமாகிறது. அவர் கலந்து கொண்டதற்கான நேரடி ஆதாரம் பட்டிடம் இல்லாவிட்டாலும் கூட, சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரம் இருக்கிறதா எனன்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் இந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்று முதல்வர் மோடி கூறியதாக பட் கூறியுள்ள வாக்குமூலம் முக்கியமானது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். மோடி அப்படிக் கூறினாரா இல்லையா என்பது உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம். ஒரு வேளை அவர் அப்படிச் சொல்லியிருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். மேலும் எனது கருத்துப்படி, மோடி மீது தொடக்க நிலையிலேயே 1 153A (1) (a) மற்றும் (b), 153B (1) (c), 166 மற்றும் 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு  செய்ய முடியும். இருப்பினும் இதுகுறித்து கோர்ட்டே முடிவு செய்ய வேண்டும்.

அகமதாபாத் நகர முன்னாள் இணை ஆணையர் எம்.கே.டாண்டன், அகமதாபாத் முன்னாள் துணை கமிஷனர் பி.பி.கோண்டியா ஆகியோர் மீது ஐபிசி 304A  மற்றும் 166 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது..

நரபலி மோடி நுழைய இங்கிலாந்திலும் தடை?

 

 

 

 

 

 

 

 

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மனித இனப் படுகொலைகள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் 2005 ஆண்டு முதல் அமெரிக்காவில் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தும் நரேந்திர மோடிக்குத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

பிரிட்டன் அரசு மனித உரிமை மீறல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற உள்ளது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை இங்கிலாந்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளதாக மனித உரிமைப் பிரசாரகர்கள் தெரிவித்துள்ளனர்.

2005-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் நுழைய மோடிக்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்திலும் அவர் நுழைய விரைவில் தடைவிதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த தெற்காசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மற்ற நாடுகளில் மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்படுபவர்களை பிரிட்டன் கண்காணிப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் இதுபோன்ற சட்டம் இயற்றப்பட்டால் அதைப் பயன்படுத்தி நரேந்திர மோடி வருவதைத் தடுக்க வேண்டும்.

ஏனெனில் குஜராத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதில் நரேந்திர மோடிக்கு பங்கு உள்ளதாக பல்வேறு மனித உரிமைக் குழுக்களும், ஆம்னஸ்டி உள்ளிட்ட சுயேச்சை அமைப்புகளும் தெரிவித்துள்ளன  என்று  அச்செய்தித் தொடர்பாளர் சுட்டிக் காட்டினார்.

சிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா??

ஏப்ரல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தம்புள்ளை மாநகரில் பௌத்த பிக்குகள் தலைமையில் சுமார் 2000 சிங்கள பௌத்தர்கள் மாபெரும் பேரணியொன்றில் கலந்துகொண்டனர்.

“ரங்கிரி விகாரையை மையமாகக் கொண்ட தம்புள்ளைப் புனித பூமியில் ‘சட்டவிரோதமாக’ நிர்மாணிக்கப்பட்டுள்ள அல் ஹைரியா முஸ்லிம் பள்ளிவாயில் மற்றும் ஹிந்துக் கோவில் என்பவற்றை இடித்துத் தகர்த்து, புனித பூமியைத் தூய்மைப்படுத்துவோம், சிங்கள பௌத்தத்தைக் காக்க அணி திரள்வோம், அந்நிய சக்திகளை வெளியேற்றுவோம்” எனும் எதிர்ப்புக் கோஷங்களை முழங்கியபடி பேரணியாளர்கள் முன்னேறிச் சென்றனர்.

இந்தப் பேரணி இடம்பெறுவதற்கு முதல் நாள் நள்ளிரவில் பள்ளிவாயிலை நோக்கிப் பெட்ரோல் குண்டு ஒன்று எறியப்பட்டிருந்தது. ஆனால், அதன் மூலம் யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்தக் கலவரமான சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை ரத்து செய்யப்பட்டது. தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்கள் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். பேரணியாளர்கள் முஸ்லிம் பள்ளிவாயிலை இடித்துத் தகர்க்கும் நாசகாரப் பணியில் ஈடுபட்டபோது, காவல்துறையினரும் விசேட பாதுகாப்புப் படையினரும் தலையிட்டு, தம்புள்ளை கைரியா முஸ்லிம் பள்ளிவாயிலை மூடி “சீல்” வைத்தனர்.

வெற்றிப் பெருமிதத்தில் மிதந்த இனவாத பௌத்தர்கள் முன்னிலையில், ஒரு முன்னணி பௌத்தப் பிக்கு, “இதற்குப் பின் இந்தப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிமுக்கு சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்க மாட்டோம்,மேலும் படிக்க…

சவூதி: இருநாள் வார விடுமுறை கட்டாயம்?

சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகத் திட்டத்தின் படி, அனைத்து ஊழியருக்கும் (அரசுத்துறை, தனியார்) இரு நாள்கள் வார விடுமுறை வழங்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது.

அமைச்சகத்தின் இத்திட்டம்  பல்லாயிரக்கணக்கான தனியார் துறை ஊழியர்களை மகிழ்ச்சியுறச் செய்துள்ளது.தற்சமயம் சவூதி அரசு அலுவலகங்கள் வியாழன் வெள்ளி இருநாள்கள் வார விடுப்பு அளிக்கும் நிலையில்,  பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் வெள்ளி மட்டுமே வார விடுமுறை அளிக்கின்றன.

சவூதியில் மண்ணில் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நேஷனலிசேஷன் (அ) சவூதிசேஷன் எனப்படும் உள்நாட்டுமயமாக்கல் திட்டப்படி தனியார் நிறுவனங்கள் சவூதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வந்த போதும், ஒப்பீட்டளவில் அரசுத்துறை சார் பணிகளையே சவூதி இளைஞர்கள் விரும்புகின்றனர். அதன் காரணிகளாக, தனியார் துறையின் அதிக வேலை நாள்கள் உள்ளிட்ட அம்சங்கள் இருந்துவந்தன. இந்நிலையில், வார விடுப்புகளைப் பொருத்த வரை, அரசுத் துறையை பின்பற்றி தனியார் நிறுவனங்களும் இருநாள்கள் வார விடுமுறை அளிக்கும்படி பணிக்கப்பட்டால், சவூதி இளைஞர்கள் தனியார் நிறுவனங்களையும் விரும்ப வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பொதுவாக சவூதியின்  வார இறுதிகளாக வியாழன் வெள்ளி அமைவதை வெள்ளி, சனி என்று மாற்றி அமைப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.

பிரசித்திப் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளர் மார்க் எல்.பொகோக் கூறுகையில், இருநாள் வார விடுமுறை மிகவும் வரவேற்கத்தக்கது; ஊழியர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது என்றார். மேலும், “உலகெங்கும் சனி, ஞாயிறு வார இறுதிகளாக அமைகையில் சவூதியில் வியாழன், வெள்ளி என்று அமைவது பொருந்தவில்லை; வேலையளவில் உலகத்தோடு ஒட்ட மூன்று நாள்களே கிடைக்கின்றன” என்று ஆதங்கம் தெரிவித்தார்.

தலால் அல் ஹாதி என்னும் சவூதி இளைஞர் கூறுகையில் “குடும்பத்தோடு செலவிட ஒரு நாள் வாரவிடுப்பு நிச்சயம் போதாமையாகவே இருக்கிறது. அந்த ஒரு நாளிலும் அடுத்தடுத்த நாள்களில் தொடர உள்ள பணியழுத்தம் குறித்தே சிந்திக்க வேண்டியதாகிறது. எனவே, இருநாள் வார விடுப்பை நான் மிகவும் வரவேற்கிறேன்.தாமதமின்றி இதை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்

inneram.com

ஒபாமாவை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் : பிரிட்டிஷ் எம்.பி

லண்டன் : அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை பிடித்து கொடுப்பவருக்கு 10 மில்லியன் பவுண்ட் வழங்கப்படும் என்று அறிவித்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிலாளர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

2008 மும்பை தாக்குதலில் பங்குண்டு என்று கூறி பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையத்தை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் டாலர் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.

ஹபீஸ் சையது தலைக்கு விலை வைத்த அமெரிக்காவின் செயல் உலக முஸ்லீம்களை இழிவுபடுத்தும் செயல் என்று கூறிய லார்ட் நசீர் அஹ்மது ஒபாமாவையும் புஷ்ஷையும் பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் அளிப்பதாக கூறியதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

லார்ட் அஹ்மதின் இத்தகைய கருத்துகள் ஏற்று கொள்ள முடியாதவை என்று கூறிய தொழிலாளர் கட்சி தற்காலிகமாக அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. தான் அவ்வாறு ஒபாமாவின் தலைக்கு விலை வைக்கவில்லை என்று கூறியுள்ள லார்ட் அஹ்மது ஈராக்கிலும் ஆப்கனிலும் நடத்திய கொடூரங்களுக்காக புஷ்ஷூம் டோனி ப்ளேயரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று மட்டும் தான் கூறியதாக சொன்னார்.

அமெரிக்கா திடீர் பல்டி: ஈரான் அணுசக்தித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கத் தயார்!

மக்கள் நலத்தினை  முன்னிறுத்தும் அணுசக்தித் திட்டங்களுக்காக ஈரான் செயற்பட்டால் அதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க அணுகுமுறை மாற்றம் அடைந்துவருவதை இச்செய்தி தெரிவிக்கிறது.

அணுஆயுதங்களை ஈரான்  தயாரிப்பதை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா அவையில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் முறையிட்டு வந்தன. இதையே காரணம்காட்டி ஈரான் மீது இராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டி அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தன. ஆனால், ஈரான் சுப்ரீம் தலைவர் அலி கமேனி, அதிபர் அகமதி நிஜாத் ஆகியோர், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பதிலடி கொடுத்தனர்.

இதற்கிடையில், ஈரானில் செயல்படுத்தப்படும் அணுசக்தித் திட்டங்களை பார்வையிட ஐ.நா. குழுவை அனுமதிக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இவ்விரு தரப்புக்கும் துருக்கி உள்பட சில நாடுகள் சமரச முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன.  ஈரானிலும், அமெரிக்கா, சவூதி உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என்று முன்னாள் அதிபர் ரஃப்சஞ்சானிகருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்பாரா மாற்றமாக “அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை என்பதைஈரான் நிரூபித்தால், மக்கள் நலனுக்கான அணுசக்தித் திட்டங்களை ஏற்றுக் கொள்வோம்” என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்த தகவலைதுருக்கி பிரதமர் தய்யிப் எர்தோகனிடம் கூறி, அதை ஈரான் தலைவர்களிடம் தெரிவிக்கும்படி ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, ஒபாமாவின் தகவலைஅலி கமேனியிடம் தய்யிப் கடந்த வாரம் தெரிவித்து விட்டார் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன

inneram.com

அமெரிக்காவின் “டைம்” இதழின் டாப் 100 மனிதர்கள்

மூன்றாம் இடத்தில் (?)நரபலி மோடி.
உலக புகழ் பெற்ற அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை இந்த வருடத்திற்குறிய 100 முன்னனி மனிதர்களின் பட்டியலை வெளியிடுவதற்குறிய வாக்கெடுப்பை இணையதளம் மூலம் நடத்தி வருகின்றது.
இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மூன்றாவது இடம் என்று அதன் தற்போதைய நிகழ்வுகள் சொல்கின்றன. ஆம் இது வரைக்கும் டாப் 100 மனிதர்கள் பட்டியலில் மோடிக்கு ஆதரவாக பதியப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை  256003 மோடிக்கு எதிராக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 265664 ஆதரவாக கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இவர் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்று வாக்குப் பதிவாகியுள்ளது.
 
மோடி பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று வாக்களித்தவர்களை விட இவர் பட்டியலில் இடம் பெறக் கூடாது என்று சுமார் பத்தாயிரம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளார்கள்.
 
இவரைப் பற்றி டைம் இதழின் வாக்களிக்கும் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியில் இந்தியாவை வழிநடத்திச் செல்ல சிறந்த பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் பல்லாயிரக் கணக்கான முஸ்லீம்களை இவர் கொலை செய்த காரணத்தினால் இவர் முஸ்லீம்களுக்கு எதிரி என்ற பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும் இதுவரைக்கும் (இந்தச் செய்தி எழுதப்படும் வரை) மோடிக்குக் கிடைத்திருக்கும் வாக்கின் அடிப்படையில் டாப் 100 மனிதர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்மணி

அமெரிக்காவின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்மணிகராச்சி: கடந்த வெள்ளிக்கிழமை (30.03.2012) பயங்கரவாதக் குற்றச்செயலில் ஈடுபட்டார் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய நரம்பியல் நிபுணரான டாக்டர் ஆஃபியா ஸித்திக்கியை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, பாகிஸ்தான் தலைநகரில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது.

இப்பேரணியில் கலந்துகொண்டு கருத்துரைத்த பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் கராச்சி பிராந்தியத் தலைவர் முஹம்மத் ஹுஸைன் மெஹந்தி, “ஆஃபியா ஸித்தீக்கியின் வழக்கில் அவருக்கு 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானதும் முற்றிலும் பாரபட்சமானதுமான தன்னுடைய போக்கை அமெரிக்க நீதிமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது ” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த சுலோகங்களைத் தாங்கிய ஆயிரக்கணக்கான பேரணியாளர்கள், ஆஃபியா ஸித்தீக்கியின் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வராமல் மௌனம் சாதிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கோழைத்தனத்தையிட்டுத் தமது அதிருப்தியை வெளிக்காட்டவும் தவறவில்லை.

2008 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கஸ்னி காவல் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அமெரிக்க எஃப்.பி.ஐ. அதிகாரிகள் மீதும் அமெரிக்கப் படைவீரர் ஒருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2010 செப்டெம்பர் மாதம் ஆஃபியா ஸித்திக்கிக்கு நிவ் யோர்க் நீதிமன்றம் 86 வருடச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்புக் குறித்து மேன்முறையீடு செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று குழந்தைகளின் தாயான ஆஃபியா ஸித்தீக்கி தன்னுடைய குழந்தைகள் சகிதம் 2003, மார்ச் 30 ஆம் திகதி கராச்சியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.

பயங்கரவாதக் குற்றச் செயல்களோடு தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் அமெரிக்கப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக மறுநாள் உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

அதைத்தொடர்ந்து அவரைப்  பற்றிய மிக ரகசியமாகவே பேணப்பட்ட நிலையில், அவர் காபூலில் உள்ள பக்ராம் சித்திரவதை முகாமுக்கு இரகசியமாக இடமாற்றப்பட்டு, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தகவல் தெரிவித்தன.

ஆஃபியா மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டு போலியானது, நீதியான விசாரணை மறுக்கப்பட்ட நிலையில் மூன்று குழந்தைகளின் தாயான அவர் தொடர்ச்சியாக மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவது சர்வதேச மனித விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது என உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான ஆர்வலர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் உரத்துக் குரல் எழுப்பத்தொடங்கிய நிலையில், மேற்படி போலிக் குற்றச்சாட்டின் பேரில், ஆஃபியா 2008 ஜூலை மாதம் நிவ்யோர்க்குக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு 2010 பெப்ரவரியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின் பின் நிவ்யோர்க் கார்ஸ்வெல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆஃபியாவின் உடல்நிலையும் மனோநிலையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய சகோதரியைச் சந்திக்க பலதடவை அனுமதி கோரியும் சிறை நிர்வாகத்தால் தொடர்ந்தும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் ஆஃபியாவின் சகோதரி டாக்டர் ஃபௌஸியா ஸித்தீக்கி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“கார்ஸ்வெல் சிறைச்சாலை மனிதத்துவத்துக்கு முற்றிலும் எதிரான நிலைமையில் இருக்கிறது.  உண்மையான நீதிக்கும் மனிதாபிமானதுக்கும் எதிரான இத்தகைய பாரபட்சமான நிலைமையை எதிர்த்து, நீதியையும் மனித நேயத்தையும் விரும்பும் அமெரிக்கப் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து குரல்கொடுக்க முன்வரவேண்டும்” என்று டாக்டர் பௌஸியா ஸித்தீக்கி அமெரிக்க மக்களை நோக்கி அழைப்பு விடுத்துள்ளார்.

inneram.com

மாணவர்களின் நலன் கருதி ஐ.பி.எல் போட்டிகளைத் தடை செய்ய கோரிக்கை!

10 ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள  ஐ.பி.எல் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

 

 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

 

தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி முதல் நடைபெற உள்ளது. ஆனால் அதே நாளில் ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது என்ற செய்தியும், அதற்காக செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்களும் கவலை அளிப்பதாக உள்ளது.

 

கிரிக்கெட் மோகம் கொழுந்து விட்டு எரியும் நம் நாட்டில் கல்வி என்பது இரண்டாம் பட்சமாக பார்க்கப் படுகிறது.  வாழ்கையின் முக்கியமான தருணத்தில் உள்ள மாணவர்கள் கிரிக்கெட் போதையில் தங்கள் வாழ்கையை தடுமாறத்திற்கு உள்ளாக்கி விடுவார்களோ என்ற பயம் பெற்றோர்களுக்கும், மாணவர்களின் வாழ்கையில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.

 

ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்காவிட்டால் எதையோ பறிகொடுத்த போக்கில் பல மாணவர்கள் அலைவதும், கிரிக்கெட் போட்டிகளை குறித்து பல மணிநேரம் அரட்டை அடித்து நேரத்தை வீணாக்குவதும், ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்த வேண்டிய பொதுத்தேர்வு நேரத்தில் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

 

ஆபாசத்தின் உச்சக்கட்டத்தை விளையாட்டு போட்டிகளின் வாயிலாக கடை விரிக்கும் கலாச்சாரத்தை இந்தியாவில் துவக்கி வைத்த ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடரை உடனடியாக தடுத்து நிறுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.

 

ஐபிஎல் எனும் குழுவை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பி.சி.சி.ஐ  மாணவர்களின் வாழ்க்கையை குறித்து யோசிக்காமல் முடிவெடுத்ததில் வியப்பில்லை.

 

பணம் சம்பாதிப்பதற்காக யாரைப் குறித்தும் கவலைப்படாத சாராய வியாபாரிகளும், சமுதாயத்திற்கு மோசமான காரியங்களை கற்று தரும் நடிகர்களும் முதலாளிகளாக இருக்க கூடிய ஐபிஎல் குழு, மாணவர்களின் வாழ்கையை காவு வாங்க காத்துக் கொண்டிருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

 

ஒரு பொறுப்புள்ள அரசு மாணவர்களின் எதிர்காலம் குறித்து கண்டிப்பாக சிந்திக்கும். எனவே தமிழகத்தை 2023ல் ஆசியாவின் முதல் இடத்தில் வைக்க நினைக்கும் தமிழக அரசு அதற்கு அச்சாணிகளான மாணவ சமுதாயத்தைக் காக்கும் வகையிலும், பெற்றோர்களின் மனக்கவலைகளை போக்கும் வகையிலும் ஐபிஎல் டுவென்டி20 போட்டிகளை பொதுத் தேர்வுகள் முடிவடையும் வரை நடத்த அனுமதிக்க கூடாது.

 

ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ள சோனி மாக்ஸ் தொலைகாட்சியின் ஒளிபரப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து சமுதாய மாணவர்களின் சார்பாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுக்கிறது.

 

 

இஸ்ரேலிய குடியேற்றங்கள் – சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு: ஜெனீவாவில் தீர்மானம்

Security Council Meets on Sierra Leoneஜெனீவா: இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்த உத்தரவிடும் தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள், பாலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைக்கும் இத்திட்டத்தின் மூலம் தங்களது பகுதியை ஆக்கிரமிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு.

இது தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இஸ்லாமிய நாடுகள் சார்பில் பாகிஸ்தான் முன்வைத்தது. கியூபா, வெனிஸுலா நார்வே, இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட 36 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. இத்தாலி, ஸ்பெயின், உட்பட 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக அதாவது தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.

இத்தகைய தீர்மானங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு நிராகரித்துள்ளார். தங்களது பிரதேசத்தில் இத்தீர்மானம் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதும் இஸ்ரேலின் கருத்து.

நரபலி மோடியை கைது செய்ய கோரி அமெரிக்காவில் மிகப் பெரும் பேரணி

modi நியூ யார்க் : கோத்ராவை தொடர்ந்து குஜராத்தில் சிறுபான்மையினர் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி அமெரிக்காவில் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த 40 குழுக்கள் ஒன்று திரண்டு நடந்த சம்பவங்களுக்கு நீதி வேண்டும் என்றும் மோடி உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரி மாபெரும் பேரணி நடத்தினர்.

பேரணியில் கலந்து கொண்ட 40 குழுக்களில் ஒன்றான மதங்களுக்கிடையான புரிந்துணர்வு குழுவின் தலைவர் மார்க் லூகென்ஸ் “எச்சமூகத்தை சார்ந்த எந்த ஒரு தனி நபரும் அவர் சார்ந்த மதத்தின் பெயரால் இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் போது அவர்களுக்கு ஆதரவாகவும் அநீதிக்கு எதிராகவும் போராடுவது எங்கள் மீது கடமையாக உள்ளது” என்று கூறினார்.

“மதத்தின் பெயரால் அநீதி இழைக்கப்படும் போது அம்மதத்தை சேர்ந்தவர்கள் முன்னின்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அதனால் தான் இப்பேரணியில் கலந்து கொள்ள முடிவு செய்தோம்” என்று ப்ரொகரஸிவ் இந்துக்களின் கூட்டமைப்பின் தலைவரான சுனிதா விசுவநாத் கூறினார்.

2005ம் ஆண்டு இதே குழுக்களின் முயற்சியினாலேயே நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுக்கு வருகை தர விசா மறுக்கப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2002 கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி விரைவாக கிடைக்க குஜராத் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

inneram.com

இஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்பல்!

 
நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான “பூஜா லாமா” சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார். பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை “ஆம்னா ஃபாரூகி” என்று மாற்றிக் கொண்டதாக
 
கூறினார்.மேலும்”இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே 
 
இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்.” என்பதாக கூறினார்.
 
மேலும் அவர் கூறுகையில் “நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன் ,தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன்.இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியது நான் இப்பொழுது ஆபாசம்,மது ,புகை அகத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டு விட்டேன்.இஸ்லாத்தை பற்றி உலகம் கூறும் அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன்” என்றார் அவர்.
 
பூஜா லாமா என்ற தனது பழைய பெயரை கொண்டு தன் பழைய வாழ்கையை நினைவு படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இஸ்லாத்தை ஏற்ற பின் தனது நடிக்கும் தொழிலையும்,குடி,புகை போன்ற தீய பழக்கங்களை விட்டு விட்டார் ஆனால் இவர் ஆபாசமாக நடித்த படங்களைக்காட்டி இந்த பெண்ணின் மனதை நோகடித்துக் கொண்டிருக்கும் அவலமும் ஒரு புறம நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.அந்த பெண்ணிற்கு நேர் வழி காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்.

விபச்சாரத்தின் மறு பெயர் “காதல்”.

உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது.
 
இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன.
 
# முத்தமிடுவோர் தினம்,
 
# நிர்வாணமாக இருப்போர் தினம்,
 
# இறுகக் கட்டியணைப்போர் தினம்,
 
# ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்,
 
# பாலுணர்வைத் தூண்டுவோர் தினம் 
 
என்று நாளுக்கு நாள் தினங்களைப் பிரித்து வைத்து அதனைக் கொண்டாடி மகிழ்வதை ஒரு ஆரோக்கியமான செயல்பாடாக மேற்குலகு கருதுகின்றது.
 
கடந்த ஜனவரி மாதத்தில் நிர்வாணமாக இருப்போர் தினம் என்றொன்றை ரஷ்ய மக்கள் கொண்டாடியதும், ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் நிர்வாணமாக காட்சி தந்ததையும் மிகப் பெரிய சாதனையாக ஊடகங்கள் கொண்டாடின.
 
அதே ஜனவரி மாதத்தில் முழு உடம்பையும் காட்டிக் கொண்டு திரியும் சுமார் இருபத்தி ஐயாயிரம் பெண்களை ஓரிடத்தில் கூட்டி உலகிலேயே அதிகமான நிர்வாணிகள் ஒன்றினைந்த இடம் என்ற உலக சாதனையை(?) படைத்தமை ஒழுக்க விழுமியங்களை பேணிப் பாதுகாப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.
 
இது வரைக்கும் பல நாடுகளிலும் ஒழுக்க சீர் கேட்டை ஆதரிக்கும் தருதலைகள் முன்வைத்த ஒரு கோரிக்கைகளில் ஒன்றுதான் பாலியல் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். அதில் ஆண் பெண் வித்தியாசமின்றி பாலியல் தொடர்பான செய்திகள் செயல்பாட்டுடன் விபரிக்கப்பட வேண்டும் என்பது. மேலும் படிக்க…

அந்த மாணவனின் கையில் யார் கத்தியைக் கொடுத்தது?

நேற்றைய தொலைக்காட்சிகளிலும், இன்றைய பத்திரிகைகளிலும் இதுவே முக்கிய செய்தி. தன்னை நோக்கி கத்தியுடன் வந்த மாணவன் இர்ஃபானைப் பார்த்து டீச்சர் உமாமகேஸ்வரிக்கு வந்த பயமும், பதற்றமும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இன்று வந்திருக்கிறது. அதனை  எதிர்கொள்ள, தப்பிக்க அல்லது முறியடிக்க  கூடவே சிந்தனைகளும் முளைக்கின்றன.

 
“அந்தச் சிறுவன் ஒரு மனநல நோயாளி”,  “அவனைத் தூக்கில் போட வேண்டும்”,  “வளர்ப்பு சரியில்லை எனவே பெற்றோரையும் தண்டிக்க வேண்டும்”,  “சினிமாக்களும், தொலைக்காட்சிகளும்தான் இதுபோன்ற வன்செயல்களுக்கு வித்திடுகின்றன” இப்படியான கருத்துக்கள் அதிகமாக வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
 
“யாரும் பெயில் கிடையாது என்னும் பெயரை சம்பாதிக்க  பள்ளிகள் மாணவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகளே காரணம்”,   “ மார்க்குகளை மட்டுமே முக்கியமாகக் கருதும் இந்தக் கல்விமுறையே காரணம்”, “தொடர்ந்த  கட்டாயங்களால் ஏற்படும் மன அழுத்தம் இதுபோன்ற குற்றங்களுக்கு கொண்டு செல்கிறது” என நிதானமாக கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
 
இவைகள் வெறும் உணர்ச்சிகளின் தரப்பிலிருந்தும் அல்லது  முற்றிலும் அறிவின் தரப்பிலிருந்தும் சமூகத்தின் முன்னே நடத்துகிற உரையாடல்களாகத் தெரிகின்றன.  தற்காலிகமான ஆனால் உடனடியான தீர்வுகளுக்கான அல்லது நிரந்தரத்தீர்வுகளுக்கான  வழிகளை ஆராய்வதாக இருக்கின்றன. இவைகள் யாவிலும் உண்மைகளின் கூறுகள் இருப்பினும், மனித மனங்கள் பற்றி நிறைய பேச வேண்டியிருகிறது நாம். ஒரு கொலை, அதன் பின்னணி, கொலை செய்யப்பட்டவர், கொலை செய்தவர், ஆயுதம்,  சாட்சிகள் என்ற ரீதியில் இதனை ஒரு கேஸ் கட்டுக்குள் அலசிடமுடியாது.
 
கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் மகள் தொலைக்காட்சியில் பேசுவதைப் பார்க்க  கஷ்டமாயிருந்தது. “எங்க அம்மா ரொம்ப நல்லவங்க. எல்லார்ட்டயும் அன்பா இருப்பாங்க” என்று குரல் தழுதழுக்கச் சொல்லும்போது நமக்கும் தொண்டை அடைக்கிறது.  எப்பேர்ப்பட்ட இழப்பு அந்த குடும்பத்துக்கு. இனி அதை யாரால், எப்படி திரும்பக் கொண்டு வந்து சேர்த்துவிட முடியும்? அந்தக் கேவல்களை எப்படி நிறுத்த முடியும்?
 
“நான் தவறு செய்துவிட்டேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். நான் என் பெற்றோர்களையும் பார்க்க விரும்பவில்லை” என இர்ஃபான் அளித்துள்ள வாக்குமூலம், அவன் தன்னை உலகிலிருந்தே துண்டித்துக் கொள்ள முயல்பவனாகக் காட்டுகிறது. “அந்த டீச்சர் கதறியது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது” எனச் சொல்வதில் அவன் அடையும் சித்திரவதை இருக்கிறது.
 
இப்படிப்பட்ட இர்ஃபான் கையில் கத்தியையும் அவனது சிந்தையில் தன் டீச்சரைக் கொல்ல வேண்டும் எனகிற வெறியை யார் திணித்தது? இரண்டுநாளாய் கத்தியை தனது புத்தக்கட்டுக்குள் வைத்து திட்டமிட்டு இருந்திருக்கிறான். தக்க தருணம் எதிர்பார்த்திருக்கிறான். ஒரு குத்து அல்ல. மாறி மாறி குத்தியிருக்கிறான். கையெடுத்துக் கும்பிட்ட பிறகும் குத்தியிருக்கிறான். அவ்வளவு ஆத்திம் அவனுக்குள் எப்படி விதைக்கப்பட்டது? இதுதான் பெரும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
 
பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் என் மனைவி செய்தியை படித்துவிட்டு, “இப்போல்லாம் பிள்ளைங்கள எதுவும் சொல்லவே பயமா இருக்கு. உடனே அழுது தள்ளிருவாங்க. நிப்பாட்டவே மாட்டாங்க.” எனச் சொல்லி வந்தவள், “ஆனா,  எல்லோரையும் பொதுவா சத்தம் போட்டா அமைதியா இருப்பாங்க. அல்லது சிரிக்கக்கூடச் செய்வாங்க” என்றாள்.  “அதே மாதிரி, தனியா அழைத்துப் போய் கடுமையாப் பேசினாலோ, புத்திமதி சொன்னாலோ கேட்டுக்குவாங்க. அழல்லாம் மாட்டாங்க. ஆனா அதுக்குல்லாம் எங்க நேரம்? ஒரு வகுப்பிலேயே நாப்பது ஐம்பது புள்ளைங்க இருக்காங்க” என்றும் சொன்னாள். இந்த இடம்தான் வெளிச்சம் காட்டுவதாக இருக்கிறது.
 
இன்றைய குழந்தைகள் பொதுவெளியில் தங்களுக்கு ஒரு தோல்வியோ, அவமானமோ நிகழ்ந்தால்  அதனைத்  தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். தவறுகளை எப்படி யாருக்கும் தெரியாமல் செய்கிறார்களோ அதுபோல  தண்டனைகளையும் மற்றவர்களுக்குத் தெரியாமலேயே அனுபவித்துவிட  தயாராய் இருக்கிறார்கள். வெளிப்படையாய் தங்கள் பலவீனங்களை ஒப்புக்கொள்ள மருக்கிறார்கள். மனித மனத்தின் பொதுவான தன்மைகள் இவற்றிலிருப்பினும் இன்றைய குழந்தைகள் மிக தீவீரமாகவும், நுட்பமாகவும் இவ்விஷயத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் உலகில் அவர்கள் தங்களை மட்டுமே மிக அதிகமாக நேசிக்கிறார்கள். அதல் சிராய்ப்புகள் வருவதைக் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தங்களிடமிருக்கும் இந்த அன்பை எப்படி உலகம் முழுமைக்கும் அவர்களை பரிமாற வைப்பது என்பதுதான் இன்றைய சமூகத்தின் சவால். நிகழ்காலத்தின் கேள்வி. டீச்சர் உமா மகேஸ்வரியின் மரணம் இரத்தம் சிந்த சிந்த படுகொலையாக நிகழ்த்தப்பட்ட புள்ளி இதுவாகவும் தெரிகிறது.
 
ஒருவேளை, நேற்று வகுப்பறையில் உட்கார்ந்திருந்த உமாமகேஸ்வரி டீச்சர், அந்த மாணவன் உள்ளே நுழைந்ததும்,  “வா, இர்ஃபான் முதல் ஆளா கிளாஸுக்கு  வந்திருக்கியே. சந்தோஷமாயிருக்கு. இப்படி இருந்தா நீ எவ்வளவோ சாதிக்கலாமே” என்கிற தொனியில் பேசி முகம் மலர்ந்து வரவேற்றிருந்தால் அந்தக் கத்தி இர்ஃபானின் பையிலேயே இருந்திருக்கலாம். உமா மகேஸ்வரி அவர்களும் இப்போது ஒரு வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்திருக்கலாம். நானும், நேற்றைய பதிவுக்கு nellaiconspiracy என்னும் நண்பர் கேட்டிருந்ததற்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்திருக்கலாம்.
 
யோசித்துக்கொண்டே இருக்கிறேன். கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

லேப்டாப் தீப்பிடித்து வெடித்த விபத்தில் வாலிபர் பலி

கொல்கத்தாவில் இன்னொருவரின் உயிரைக் குடித்துள்ளது லேப்டாப் ஒன்று. ஆனால் இந்த முறை தவறு அந்த இளைஞரின் மீதுதான்.

கொல்கத்தாவில் 3 மாதங்களுக்கு முன்பு சயன் செளத்ரி என்ற பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவன ஆலோசனை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அருகே சார்ஜரில் மாட்டப்பட்டிருந்த லேப்டாப்பும், இயர்போன்கள் அவரது காதுகளில் மாட்டப்பட்டும் இருந்தது.

இந்த நிலையில் லேப்டாப்பால் இன்னொரு உயிர் போயுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சப்தரிஷி சர்கார். 30 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அருகில் எரிந்த நிலையில் லேப்டாப் கிடந்தது.அறை முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வந்து கதவைத் திறந்தபோது இந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், அறைக்குள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் சர்க்கார். அறை ஜன்னல்கள், கதவு மூடப்பட்டிருந்தது. அறை முழுவதும் புகையாக காணப்பட்டது. மூச்சுத் திணறி அவர் இறந்துள்ளார்.

லேப்டாப் ஒன்று வெடித்து எரிந்த நிலையில் காணப்பட்டது. அவர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்று தெரிகிறது. சிகரெட் பிடித்தபோது அது லேப்டாப்பில் விழுந்து அது தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

இதில் எந்த சதியும் இருப்பதாக தெரியவில்லை. விபத்தாகவே தெரிகிறது என்றனர்.

லேப்டாப்பில் அஜாக்கிரதை- உயிரைக் குடிக்கும்

லேப்டாப்பை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். படுக்கை அறையில் வைத்து அதைப் பயன்படுத்துவதோ, அதை அப்படியே அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதோ கூடாது என்கிறார்கள்.

படுக்கையானது மிகவும் மென்மையாக இருப்பதால், லேப்டாப்பின் கீழ்ப்பகுதி வழியாக காற்று புகுவதைத் தடுக்குமாம். சரியான காற்றோட்டம் லேப்டாப்புகளுக்குத் தேவை. அது தடைபடும்போது லேப்டாப் சூடாகி வெடிக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே லேப்டாப் வெடித்து உயிர்ப் பலி ஏற்பட்ட சம்பவங்கள் ருமேனியா மற்றும் நியூசிலாந்திலும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சார்ஜ் செய்து கொண்டே லேப்டாப்பை பயன்படுத்தியதால் விபத்து நடந்தது. bharathcommunication.blogspot.com


முன்னால் கிருத்தவ கன்னியாஸ்திரி Irena Handono இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.

இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவகன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்துஎழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.
 
நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.
 
பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த Liaision Maria என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை)அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் Stray Sheeps என்று சொல்லப்படக் கூடிய காணாமல் போன ஆடுகளை தேடுவதாகும். காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல.மாறாக காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.மேலும் படிக்க..

பைபிள் இறை வேதமா – விவாதம் குறித்த ஒரு பார்வை!

 

 

 

 

 

 

 

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான  இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும்.
மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.
 
பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாக பிரச்சாரங்கள் செய்கிற வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான். மேலும் படிக்க…

உடல் எடை குறையனுமா? மனசால நினைக்கனுங்க….!

மாறிவரும் உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குண்டான உடலை குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்முடைய உடல் மீது அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

மனசால நினைக்கனும்

நம்முடைய உடல் எடையை குறைக்கவேண்டுமெனில் உளரீதியாக நினைக்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். அப்பொழுதுதான் நாவை கட்டுப்படுத்தமுடியும். அதை விடுத்து கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு பின்னர் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பதில் எந்த பலனும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். எனவே உடல் எடை குறைப்பு பயிற்சியை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும்.

நமக்கான உணவு எது?

நம்முடைய உடலுக்கு தகுந்த உணவு எது என்பதை நாம் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். ருசிக்காக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதை விடுத்து சத்தான உணவுகளை, குறைந்த கலோரி உள்ள உணவுகளை உண்ணவேண்டும் அப்பொழுதுதான் உடல் எடை எளிதாக குறையும். பாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

நார்ச்சத்துள்ள உணவுகள்

உடல் எடை குறைய முதலில் கவனம் செலுத்தவேண்டியது உணவு. அதுவும் சத்தான ராகி, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இது உடலுக்கு தேவையான சத்துக்களை நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது பசி தூண்டும் உணர்வையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தண்ணீர் குடிங்க

உடல் எடையை குறைப்பதில் தண்ணீரின் பங்கு மிக முக்கியமானது. எனவே உணவுக்கு முன்னரே தண்ணீரை குடித்தால் பசி கட்டுப்படும் உணவும் குறைவாக எடுக்கும். இதனால் உடலுக்கு குறைந்த அளவு கலோரியே கிடைக்கும். தண்ணீரானது உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.

மெதுவா சாப்பிடுங்க

உணவை நன்றாக அரைத்து மென்று உண்பது உடலுக்கு ஏற்றது. ஏனெனில் ஜீரணத்திற்குத் தேவையான என்சைம்கள் நாவில் இருந்துதான் கிடைக்கின்றன. எனவே சத்தான உணவுகளை அள்ளி விழுங்காமல் நன்றாக மென்று அரைத்து உண்பது அதிக அளவு உணவு உட்கொள்வதை தடுக்கும். உடல் எடையும் கட்டுப்படும்.

நொறுக்குத் தீனிக்கு பை

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னர் நொறுக்குத் தீனிக்கு பை சொல்வது அவசியட். எனவே குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்து சுகர் ஃப்ரி சுயிங்கம் மெல்லுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

குறைந்த உப்பு, சர்க்கரைக்கு நோ

தினமும் உபயோகிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொள்வது உடலுக்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை உடலின் கலோரியை அதிகரிக்கிறதாம். ஜூஸ், மில்க்ஷேக் போன்றவற்றிர்க்கு சர்க்கரை உபயோகிக்காமல் பருகுவது உடல் எடையை குறைக்கும் என்பது நிபுணர்களின் அறிவுரை. அதேபோல் உப்பின் அளவையும் குறைத்தே உபயோகிக்க வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனையாகும்.

உடற்பயிற்சி தேவை

உடற்பயிற்சி என்றாலே ஜிம் போய்தான் செய்யவேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே எளிமையான எக்ஸர்சைஸ்களை செய்யலாம். இதனால் உடலில் தேங்கும் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுவதோடு, உடல் நலமும் பாதுகாக்கப்படும். உடல் பருமனால் இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்க நடந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்லலாம். அதனால் கலோரியும் எரிக்கப்படும், உடலும் சிக் என்று ஆகும்.

புரதம் அவசியம்

உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று சத்தான உணவுகளை தவிர்க்க வேண்டாம். அது உடலின் பலத்தை குறைத்துவிடும். உடலின் திசுக்களுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த உணவுகளை அவசியமான அளவில் உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். முட்டையின் வெள்ளைக்கரு தினமும் எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள் கருவை தவிர்த்து விடலாம். ஏனெனில் அதில் அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளது.

thatstamil

 

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்? இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bokker-ன் பரபரப்பான வாக்குமூலம்

[ நான் ‘நிகாப்’ அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, ‘ஸ்டைல்’ என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.

எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் ‘நிகாப்’ அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, ‘நிகாப்’ அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ”அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது” என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.

பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு ‘நிகாப்’ தான். நீச்சலுடை அல்ல. – முன்னாள் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர்

அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.

 ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.

 நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?

செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ”கூடாரத்துக்குள்” அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.

அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குரானை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன்.

கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான ‘கவுன்’ ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து ‘பெரிய சுமை’ கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.

”பெண்களை அவமதிக்கும் மதம்” என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (ஹிஜப்) அணிந்து கொண்டாலும் நிகாபை (ணிஃஅப்) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

 எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது ‘ஹிஜாப்’ அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர ‘நிகாப்’ அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, ‘நிகாப்’ என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)

ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது ‘நிகாப்’ இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், “நான் ‘நிகாப்’ அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்” என்றேன்.

இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.

நான் ‘நிகாப்’ அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!) அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு ‘நிகாப்” அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.

பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன்.

நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, ‘நிகாப்’ அல்லது ‘ஹிஜாப்’ அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, ‘ஸ்டைல்’ என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன்.

எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் ‘நிகாப்’ அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, ‘நிகாப்’ அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ”அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது” என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு ‘நிகாப்’ தான் என்று.

சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் ‘நிகாப்’ அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான்.

நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின்  குறியீடு ‘நிகாப்’தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ”நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.”

madawalanews.com

இது இந்தியாவின் வெட்கக் கேடு!

டெல்லி: உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. இது ஒரு தேசிய அவமானமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.Hungerநாடு முழுவதும் பொருளாதாரரீதியில் மிகவும் கீழ் நிலையில் உள்ள 9 மாநிலங்களின் 112 மாவட்டங்களில் 73,000 வீடுகளில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது HUNGaMA (Hunger and Malnutrition) என்ற அமைப்பு. இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் கூறுகையில்,

நமது நாடு மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வந்தாலும், குழந்தைகளிடையே ஊட்டச் சத்து குறைபாடு ஏற்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த நாட்டில் 6 வயதுக்கு உட்பட்ட 16 கோடி குழந்தைகள் உள்ளனர். நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் எடை குறைவாக உள்ளன.

நமது நாட்டின் எதிர்காலம் இவர்கள் தான். இவர்களது நலனைப் பேணாவிட்டால் நாட்டின் எதிர்கால நலன் நிச்சயம் பாதிக்கப்படும்.

நான் முன்பே கூறியது போல, ஊட்டச் சத்து குறைபாடு என்பது தேசிய அவமானமாகும். இதைக் கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி பெறவில்லை.

73,000 தாய்மார்களிடம் நேரடியாகப் பேசி 1 லட்சம் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வருத்தத்தையும் தருகிறது, ஒரு நல்ல விஷயத்தையும் சொல்கிறது.

நல்ல விஷயம் என்னவென்றால், இந்த 112 மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆரோக்கியமான எடையை எட்டியுள்ளது என்பது தான். இதற்கு இந்த மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் அமலாக்கிய சில நலத்திட்டங்களும் காரணம்.

அதாவது ஊட்டச் சத்து குறைபாட்டை நீக்குவதில் நாம் 20 சதவீத வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம், நாட்டின் இன்னும் 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக, ஊட்டச் சத்து பற்றாக்குறையுடன் வாழ்கின்றன என்பது தான்.

தாயின் கல்வி நிலை, குடும்பத்தின் பொருளாதார நிலை, சுகாதாரம், தாய்ப்பால், குடும்பத்தில் பெண் நடத்தப்படும் முறை ஆகியவை, குழந்தைகளின் நலனில் முக்கிய பங்கு வகிப்பதை இந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

1975ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போதும் அமல்படுத்தப்பட்டு வரும் Integrated Child Development Services திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு இந்த ஊட்டச் சத்து குறைபாடு விஷயத்தை தீர்த்துவிட முடியாது. குழந்தைகள் விஷயத்தில் மிக மோசமான நிலையில் உள்ள மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தியாக வேண்டும்.

முதல்கட்டமாக ஊட்டச் சத்து குறைபாடு மிக அதிகமாக உள்ள நாட்டின் 200 மாவட்டங்களில் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார் பிரதமர்.

tamil.oneindia.in

 

அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.

இஸ்லாத்தில் முளையவியல்.

பாத்திமா ஷஹானா (கொழும்பு)

அல்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயமாகிய அல் அலக் எனும் அத்தியாயத்தில் அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஓதுவீராக! ஏன்று கூறிவிட்டு மனிதன் படைக்கப்பட்ட விதத்தைப் பற்றிக் கூறுகின்றான்.
 

(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான் (அல்குர்ஆன் 96: 1,2)


மனிதனைப் படைத்த இறைவன் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சட்ட திட்டத்தை தன் தூதராகிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கும்போது மனிதனை தான் எவ்வாறு படைத்தான் என்ற உண்மையை முதன் முதலில் தெரியப்படுத்துகின்றான். அலக் என்ற அரபுப் பதத்தின் அர்த்தம் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது. அதாவது கருவுற்ற சினை முட்டை என்பது ஆணிணது விந்தும், பெண்ணினது சினை முட்டையும் கருக்கட்டப்பட்டு ஒன்றுடன் ஒன்று கோர்க்கப்பட்ட நிலையாகும். மனிதனது உருவாக்கத்திற்கு ஆணின் விந்தும், பெண்ணின் சினை முட்டையும் தான் காரணம் என்பதை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அவனது அல்குர்ஆனில் மேற்குறிப்பிட்ட வசனத்தின் மூலம் விவரிக்கின்றான்.மேலும் படிக்க.. 

முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மதம் மாறினார்!

பாரீஸ் : ப்ரான்சிலிருந்து வெளி வரும் ‘லீ மாண்டே’ எனும் இதழுக்கு பேட்டியளித்த ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்களை விசாரித்த ப்ரான்ஸின் பெண் காவல்துறையினரில் கால்வாசி பெண் காவலர்கள் இஸ்லாத்தை தழுவியது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இத்தடையானது முஸ்லீம் பெண்களின் மத உரிமையை பறிப்பதாக எதிர்ப்பாளர்களும், ப்ரான்ஸின் மதசார்பின்மையை பாதுகாப்பதாகவும் இஸ்லாமிய தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய கூடியது என்றும் இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.

புத்தாண்டு கொண்டாடலாமா? வாழ்த்து சொல்லலாமா?

கிறிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.
3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)
மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?
ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.
 
இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.
மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர். இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
959 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ رواه أبو داود
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள்.  (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன.  அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபி (ஸல்) கேட்டார்கள்.  அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான்.  அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்” என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (959)
புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும். 
ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவது தான் மார்க்கத்தில் தடை. நாம் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு “முஹர்ரம் பிறை 1 அன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது”
மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ”இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று சொல்வதும், அதை கொண்டாடுவதும் தவறாகும்.

சுனாமியால் பிரிந்த குழந்தை 7 வருடங்களுக்குப் பின் பெற்றோருடன் சேர்ந்த அற்புதம்!

டிசம்பர் 26, 2004. யாராலும் மறக்க முடியாத அந்த தினத்தில்தான் சுனாமி என்ற பேரலைகள் தாக்கி ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். தற்போது இந்த சுனாமியில் சிக்கி உயிர் இழந்து விட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் குடும்பத்தினருடம் மீண்டும் இணைந்த அற்புத சம்பவம் நடைபெற்றுள்ளது.டிசம்பர் 26, 2004. யாராலும் மறக்க முடியாத அந்த தினத்தில்தான் சுனாமி என்ற பேரலைகள் தாக்கி ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். தற்போது இந்த சுனாமியில் சிக்கி உயிர் இழந்து விட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் குடும்பத்தினருடம் மீண்டும் இணைந்த அற்புத சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

 

 

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவையும் அன்றைய தினம் சுனாமி தாக்கியது. அந்த தீவிலுள்ள யுஜோஹ் பரோஹ் என்ற கிராமத்தில் வசித்து வந்த வதி என்ற பெண்ணும் அவருடைய குடும்பமும் சுனாமியினால் இழுத்துச் செல்லப்பட்டனர். வதியின் பெற்றோர்கள் வதியினையும் மற்ற இரு குழந்தைகளையும் காப்பாற்றிட பெரு முயற்சி மேற்கொண்டனர். மற்ற இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முடிந்த பெற்றோரினால் வதியைக் காப்பாற்ற இயலவில்லை. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வதியினை யாரும் அதன் பிறகு பார்க்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 21.12.2011 அன்று வதியின் தாத்தாவான இப்ராஹிம் வீட்டிற்கு ஒரு பெண்ணை அழைத்து வந்தார் இப்ராஹிமின் நண்பர். பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இந்தச் சிறுமி வதியைப் போல் இருந்ததால் அவரை விசாரித்திருக்கிறார் அந்த நண்பர். தாத்தா இப்ராஹிமின் பெயர் தவிர வேறு பெயர் நினைவில்லை என்றும் தனக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் உண்டு என்ற விபரத்தையும் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை இப்ராஹிமின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் அவர்.

உடனடியாக வதியின் தந்தைக்கும் தாயாருக்கும் தகவல் தரப்பட்டு அவர்கள் வந்து பார்த்தனர். சிறுமியின் உடலில் இருந்த மச்சத்தினையும் தழும்புகளையும் வைத்து அது வதிதான் என உறுதிப்படுத்தினார் தாய் யுஸ்னியார். தாயைக் கண்டதும் பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டார் வதி. வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட வதி ஒரு பெண்ணினால் தத்து எடுக்கப்பட்டு பிச்சை எடுக்க வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரத்தையும் வதி தெரிவித்துள்ளார். பந்தா ஏக் என்ற இடத்திலிருந்து பேருந்தின் மூலமாக இப்ராஹிமின் ஊரான மியுலோப் என்ற ஊருக்கு வந்துள்ளார் வதி. 7 வருடங்களுக்கு பின்பு தனது குடும்பத்தினருடன் வதி சேர்ந்தது அற்புதமான நிகழ்வுதானே!

inneram.com

மகளுடன் 34 வருடங்களாக பாலியல் உறவுகொண்ட நபருக்கு 3 வருட சிறை

தனது மகளுடன் சுமார் 500 தடவைகள் பாலியல் உறவு கொண்டுவிட்டு அதனூடாக 3 பிள்ளைகளுக்கு அப்பெண்ணை தாயாக்கிய ஜேர்மனிய நபருக்கு ஜேர்மன் நீதிமன்றமொன்று 3 வருடங்களுக்கு குறைவான சிறைத்தண்டனை விதித்துள்ளமை தொடர்பில் பெண்கள் அமைப்புகள் அதிருப்தி தெரவித்துள்ளன.

அடோல்வ் பி எனும் 69 வயதான நபருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நபர் தனது மகளை அப்பெண்ணின் 12 ஆவது வயதிலிருந்து 30 வருடங்களுக்கு மேலாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார்  என பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு உரிமை அமைப்புகள் தெரிவித்திருந்தன.

 தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கொடுமைப்படுத்தியதாக அந்நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவருக்கு 14 வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டுமென வழக்குத் தொடுநர்கள் கோரினர்.

ஆனால், நியூரம்பர்க் நகரிலுள்ள நீதிமன்றமொன்றின் நீதிபதி மேற்படி பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். இது வல்லுறவு அல்ல எனவும் சம்மதத்துடனேயே அந்நபர் உறவுகொண்டுள்ளார் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்படி நபருக்கு இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அடோல்வ்,கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த 34 வருடங்களாக 497 பாலியல் வல்லுறவுக் குற்றங்களைப் புரிந்தாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

இப்போது 46 வயதாகும் அப்பெண் அடோல்வ்வுடனான உறவுமூலம் 3 குழந்தைகளுக்கு தாயானார். அவற்றில் இரு குழந்தைகள் இறந்துவிட்டன.

இந்த உறவு முறைக்கு அவள் மிகவும் விருப்பம் என அடோல்வ் தெரிவித்துள்ளார்.

எனினும் அப்பெண் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், ‘இது குறித்து யாரிடமாவது சொன்னால் நான் உன்னை கொன்று விடுவேன். நீ எங்கு சென்றாலும் நான் உன்னை கண்டுபிடித்து கொன்று விடுவேன்’ என கூறி தன்னை தனது தந்தை அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அப்பெண் தற்போது ஜேர்மனியில் உள்ள வில்மெர்ஸ்பெச் எனும் கிராமத்தில் தனது தாயுடனும் சகோதர சகோதரிகளுடனும் வசித்து வருகின்றார்.

அப்பெண்ணும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் அடிக்கடி தாக்குதல்  மற்றும்  அடக்குமுறை குறித்த அச்சத்துடன் வாழ்ந்துள்ளனர்.

மேற்படி தீர்ப்பு குறித்து ஜேர்மனியிலுள்ள, வல்லுறவு நெருக்கடி குழுவொன்றின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘இவ்வழக்கின் தீர்ப்பு ஆச்சரியமாகவுள்ளது.  நீதிபதி இது என்னவென்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார். அந்த 12 வயது பெண் எவ்வாறான தெரிவுகளை மேற்கொண்டிருக்க முடியும்’ என்று கூறியுள்ளார்

சவூதி அரேபியாவின்;சூனியக்காரிக்கு மரண தண்டனை

சூனிய வேலை செய்த சவூதி பெண்ணுக்கு  அந்நாட்டுச்  சட்டப்படி நேற்று (12.12.11 ) திங்களன்று மரண தண்டனை வழங்கப்பட்டது. இத்தகவலை சவூதி அரேபிய உள்துறை அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சவூதி அரேபியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான SPA (சவூதி ப்ரெஸ் ஏஜன்சி) வெளியிட்ட அறிக்கையில், இத்தண்டனை வடக்குப் பிராந்தியமான அல்ஜவ்ப்  நகரில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. சூனிய சித்து வேலைகளை நடைமுறைப்படுத்தியமைக்காக ஆமினா த/பெ அப்துல்ஹலீம் நாசர் என்ற சவூதி பெண்மணியே இவ்வாறு மரண தண்டனை பெற்றவர் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

சவூதியில் இவ்வாண்டு இதுவரை 73 பேர் மரண  தண்டனை பெற்றுள்ளார்கள். அவர்களில் பெண்கள் எத்தனை என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆயினும் கடந்த அக்டோபர் மாதம் தன் கணவனை உயிரோடு வீட்டில் கொளுத்திய பெண்ணொருவரும் மரணத்  தண்டனைப் பெற்றிருந்தார். அதன்பின்னர், அடுத்து இந்தச் சூனிய மாது தண்டனை பெற்றுள்ளார்.

சவூதியைப் பொருத்தவரை கடந்த 2009 ஆம் ஆண்டில் 67 பெரும்   2010 ஆம் ஆண்டில் 27 பேரும் இப்பெரும் தண்டனைக்கு ஆளாகியிருந்தனர் என்று மனித உரிமைக் கழக அறிக்கை தெரிவித்துள்ளது.

என்றும் அழகு..இளமை..ஆரோக்கியம்..கிரீன் டீ..

”நான் யாருக்கும் அடிமையில்லை, சுதந்திரமாவன்” என்று மார்தட்டுபவர்கள் கூட, தேநீரின் சுவைக்கு சுகமான அடிமைகளாக இருப்பது சுவையான விஷயம் தான். உலகிற்கு காகிதம், பட்டு போன்றவற்றை கொடையாக அளித்த சீனர்கள் தாம் தேநீரையும் அறிமுகப்படுத்தினார்கள். கி.மு.2737 ல் சீனப்பேரரசர் சென் – நுங் என்பவரால் இது கண்டுபிடிக்கப்டடதாக கூறப்படுகிறது. ”கேமலியா சைனன்ஸிஸ்” என்பது இதன் தாவரவியல் பெயராகும். ”ச்சா” என்பது சீன மொழியில் தேநீரை குறிப்பதாகும். இதுவே, பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் ”ச்சாய்” என மாறியிருக்கக்கூடும். இன்று இந்தியா உட்பட 35 க்கும் மேலான நாடுகள் ”டீ” யை உற்பத்தி செய்கின்றன. உலகின் மொத்த ”டீ” உற்பத்தி ஆண்டுக்கு 3 மில்லியன் மெட்ரிக் டன்னை தாண்டுகிறது.
தேயிலை க்ரீன் டீ, பிளாக் டீ, ஒயிட் டீ, மஞ்சள் டீ, ஊலாய் டீ என பல்வேறு வகைகளாக அவதாரம் எடுத்து உள்ளது. இவை அனைத்துமே தேயிலையில் இருந்து வந்தாலும், தயாரிக்கப்படும் முறைகளாலும், பதப்படுத்தப்படும் முறைகளாலும் வேறுபடுகின்றன. இவற்றின் விளைவாக பெரும்பாலான ”டீ” வகைகள் நல்ல மருத்துவ குணங்களை இழந்து விட, இவற்றுள் தன்மை மாறாமல் அப்படியே நம் கைகளில் கிடைப்பது ”கிரீன் டீ” மட்டுமே.
ஜப்பானில் உள்ள டோகோஹூ பல்கலைக்கழக விஞ்ஞானி ஷன்சிகுரியாமா 40,530 நபர்களை வைத்து கிரீன் டீனை பற்றி மிகப்பெரிய ஆராய்ச்சியை நடத்தினார். அது 1994 ல் தொடங்கி 11 ஆண்டுகளாக நீடித்தது. அது மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள ஹார்வேர்ட், டோக்கிலோ போன்ற எண்ணற்ற பல்கலைக்கழகங்களும் கிரீன் டீ குறித்து ஆராய்ச்சிகள் செய்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆச்சரியப்படத்தக்க ஆராய்ச்சிகளின் முடிவுகள் வாழ்நாட்களையே நீட்டிக்க கூடிய அளவுக்கு நல்ல மருத்துவ குணங்கள் கொண்டது கிரீன் டீ என உறுதிப்படுத்தி உள்ளன.
”கிரீன் டீ” யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ”ஆன்டி ஆக்சிடெண்ட்கள்” (யுவெi ழஒனையவெ)தான். அதனை ”நோய் எதிர்ப்பு சக்தி” என தமிழில் அழைக்கிறோம். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக இதில் இருக்கிறது. சுருக்கமாக சொன்னால், ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜூஸூக்கு சமம்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா..! தொடர்ந்து படியுங்கள்.. நிறைய ஆச்சரியப்படலாம்..!
சூரியனின் வெப்பம், புற ஊதாக்கதிர், மாசடைந்த காற்று, சிகரெட் மற்றும் வாகன புகை, அழுக்கான தண்ணீர் என வெளிச்சூழல்கள் அனைத்தும் நம் உடலில் ”பிரீ ரேடிகல்ஸ்” என்னும் கெடுதல் தரும் வேதிப்பொருட்களை ஏற்படுத்துகின்றன. இவைகளே நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் பாதித்து, சீரழித்து சிறிய நோய்கள் முதல் இதய, புற்று நோய்கள் வரை அனைத்து பெரிய நோய்களுக்கும் வழிவகுப்பதோடு சீக்கிரமே நம்மை முதுமை நிலைக்கு தள்ளி விடுகின்றன. கிரீன் டீயின் உயர் தர ஆன்டி ஆக்சிடெண்டன்கள் அபாயகரமான பிரீ ரேடிகல்களை சமன்படுத்தி, நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்;களை நீடிக்க செய்கின்றன. எனவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரீன் டீயின் நன்மைகள் :
இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படவதை குறைக்கிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
நமது உடலில் திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
புற்று நோய் வராமலும், புற்று நோய் செல்களை வளர விடாமலும் தடுக்கிறது.
எலும்பில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
பற்களில் ஏற்படும் பல் சொத்தையும், வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.
ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
சருமத்தை பாதுகாத்து இளமையாக வைக்க உதவுகிறது. பருக்கள் வராமலும் தடுக்கிறது.
வயதான பின் வரும் ஞாபக மறதி நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது. (அல்சீமியர்ஸ் மற்றும் பார்க்கின்சன்ஸ்)
மன அழுத்தத்திற்கும், தலைவலிக்கும் மருந்தாக செயல்படுகிறது.
மூட்டு வாதத்தை குணமாக்க உதவுகிறது.
உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
புகை, மதுவின் விளைவாக உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.
கிரின் டீ உடலுக்கு ஆற்றலை தருவதிலும், நோய் எதிர்ப்பு சக்தி தருவதிலும் நிகரற்று விளங்குகிறது.
டாக்டர். டி. செந்தில்வேல் – சென்னை

Posted by mohamraonline

நிச்சயிக்கப்படும் திருமணங்கள். – இஸ்லாமியத் தீர்வு என்ன?

இஸ்லாமிய மார்க்கம் என்பது இவ்வுலக மக்களுக்குறிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டமாகும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளிலும் நுழைந்து தெளிவான தீர்வை சொல்லும் மிகச் சிறப்பான வழிகாட்டியாகும். இம்மார்க்கத்தில் எந்தவொரு செயல்பாட்டுக்கும் வழிகாட்டுதல் இல்லாமல் இல்லை.

இப்படியிருக்கையில் நமது சமுதாயத்தினர் மத்தியில் திருமணம் பற்றிய சரியான விழிப்புனர்வோ, இஸ்லாத்தின் உண்மையான சட்ட திட்டங்களோ முறையாக சொல்லிக் கொடுக்கப்படாததினால் அல்லது அவர்கள் முறையாக கற்றுக் கொள்ளாததினால் வாழ்கைத் தேர்வு முறையில் பல தவறுகளை செய்கிறார்கள்.
 
நமது காலத்தில் பெரும்பாலும் எல்லா இடத்திலும் திருமணங்கள் பல நிச்சயிக்கப்பட்டு வருடக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. ஆனால் இது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு மிகத் தெளிவானதாகும். அதைப் பற்றியே கட்டுரை ஆராய்கிறது.

கடாபியின் மரணம் உணர்த்தும் உண்மைகள் – ஓர் ஆன்மீக, அரசியல் அலசல்.

மாபெரும்வீரன், இராணுவத் தளபதி, ஆபிரிக்காவின் விடிவெள்ளி, அமெரிக்காவின் எதிரி இது போன்றவார்த்தைகளினால்  ஒரு காலத்தில்புகழப்பட்டவர் தான் இந்த முஅம்மர் கடாபி.

 
கடைசி நேரத்தில் கதரக் கதர அவர் கொலை செய்யப்பட்ட காட்சியை ஊடகங்கள் வாயிலாக உலக மக்கள் அனைவரும் பார்த்தார்கள். 42 வருட காலங்கள் ஓர் நாட்டை ஆட்சி செய்த தளபதி ஒருவரின் மரணம் இப்படியும் அமையும் என்பதை அன்றுதான் உலகம் நிதர்சனமாக நேரடியாக கண்டிருக்கும்.
முஅம்மர் கடாபியின் வரலாறு என்ன? அவரின் நல்ல பக்கங்கள் இருக்கிறதா? அல்லது அவர் செய்தது அனைத்துமே கெட்ட செயல்கள் தானா? என்பதைப் பற்றி நிறையப் பேருக்கு தெரியாமல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கடாபியின் உண்மை வரலாற்றைப் பற்றிய சிகப்புப் பக்கங்களை சரியாக அறியாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.
இந்த ஆக்கம் கடாபியின் வாழ்க்கையின் நல்ல செயல்பாடுகள் மற்றும் மார்க்கத்திற்கு விரோதமான மார்க்கத்தையே இழிவு படுத்த நினைத்த அவரது செயல்பாடுகள் போன்றவற்றைப் பற்றி ஆராய்கிறது.மேலும்  படிக்க.. 

ஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே பயன்பாட்டுக்கு வருகிறது.

இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்லவிருக்கும் முஸ்லிம்கள் மஷாயிர் ரெயில்வேயின் முழுஅளவு பயனையும் பெறலாம் என்று மக்கா நகர ஆளுநர் இளவரசர் காலித் அல் ஃபைசல் அறிவித்துள்ளார். மஷாயிர் ரெயில்வே திட்டமானது ஹஜ் கிரியைகளுக்கான புனித இடங்களாக அறியப்படும் மினா, அரஃபாத், முஜ்தலிஃபா, பகுதிகளை இணைக்கும் புதிய ரெயில்வே திட்டமாகும்.
சவூதி அரேபியாவின் மஷாயிர் ரெயில்வே  குறித்து மக்கா ஆளுநரும், சவூதி அரேபிய மத்திய ஹஜ் கமிட்டியின் தலைவருமான இளவரசர் காலித் அல்ஃபைசல் செய்தியாளர்களிடம் விளக்கினார். “அரஃபாத்திலிருந்து மினா வரை இத்திட்டம் பூர்த்தியடைந்துவிட்டது. மேலும், வெகுவிரைவில்,  ஹரமிலிருந்து அல்ஹரமைன் தொடர் வண்டி நிலையம் வரையிலான இணைப்பும் பூர்த்தி செய்யப்படும். இந்த வருடம் ஹஜ் யாத்ரிகர்கள் முழுவீச்சில் இதன் பயனைப் பெறலாம்” மேலும், “மினாவில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் யோசனையும்  ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார் ஆளுநர் காலித்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முஸ்லிம் பொறிஞர் பால் ஆண்டர்சன், ரியாத்-தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறுகையில், “ஒருமணிநேரத்திற்கு 72,000 பயணிகளைச் சுமந்து செல்லும் இந்தத் தொடர்வண்டி, உலக அளவில் பிரயாண வசதிகளில் முதன்மையானது” என்றார். ஜப்பான், சைனாவில் மேம்படுத்தப்பட்ட தொடர்வண்டிகள் 56,000 பேர் வரை சுமந்துசெல்கின்றன”.

மஷாயிர் ரெயில்வே திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றும் பால் ஆண்டர்சன், “இது ஹஜ் புனிதப் பயணியருக்கு மிகுந்த உதவிகரமானது மட்டுமின்றி காற்று மாசுபடுவதை பெருமளவு குறைக்கிறது “ என்றும் தெரிவித்தார். மேலும், ஹஜ்ஜுக் காலத்தில்,சுமார் 120,000 பேருந்துகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் 30டன் கெடுதியான வாயுக்களிலிருந்து பாதிப்படைவதினின்றும் சுற்றுப்புற சூழல் இனி பாதுகாக்கப்படும் என்றும், இதனால் யாத்ரிகர்களுக்கு இதயப் பிரச்னைகள், ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்க முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

“ஹஜ்ஜுக் காலங்களில் இதுவரை பேருந்துகள் ஒருமணிநேரத்துக்கு ஐந்து கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் தான் சென்றுவந்துகொண்டிருக்கின்றன, இதனால் குறிப்பிட்ட இடங்களை அடைய நான்கு(அ) ஐந்து மணி நேரங்கள் தேவைப்பட்டன.  ஒருமணிநேரத்துக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்தத் தொடர்வண்டிகள் அந்தத் தூரத்தை இனி எட்டே நிமிடங்களில் அடைந்துவிடும். மேலும் சாலைப் போக்குவரத்தால் ஏற்படும் நிறுத்துமிடப் பிரச்னைகளையும் இந்தத் தொடர்வண்டிகளைக் கொண்டு தீர்த்துவிட முடியும்” என்றார் ஆண்டர்சன்.

கடாஃபி லிபிய மக்களுக்குச் செய்த நன்மைகள்.

விடுதலை வீரர்களின் நண்பன்

உலக எண்ணெய் வளத்திலேயே லிபியாவில் உள்ள எண்ணெய் வளம்தான் மிகத் தூய்மையானது. சதாம் ஹுசேயின் அரபு நாடுகள் தமது எண்ணெய் விலையை அமெரிக்க டொலர்களில் நிர்ணயம் செய்யாமல் யூரோ நாணயத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியதற்காக கொல்லப்பட்டார். மும்மர் கடாஃபி எண்ணெய விலையை தங்கத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியதற்காகக் கொல்லப்பட்டார். கடாஃபியை கொல்லாமல் உயிருடன் பிடித்து விசாரித்திருந்தால் அவர் பல ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்குக் கொடுத்த இலஞ்சங்கள் வெளி வந்திருக்கும். ஒரு மடிக்கணனி(Laptop) இலவசமாகக் கொடுத்து ஐந்து ஆண்டுகாலம் ஆட்சியில் அமர்ந்து கொள்கிறார்கள். காடாஃபியோ அள்ளி அள்ளிக் கொடுத்தார்.                                                                              புரட்சி வீரர்களின் நண்பன்.

மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களின் நண்பன்

லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

1. அனைவருக்கும் மின்சாரம் இலவசம்.
2. லிபிய வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு வட்டி அறவிடப்படுவதில்லை.
3. மக்களுக்கு வீடு என்பது அடிப்படை உரிமை. லிபிய நாட்டின் அனைத்து மக்களுக்கும் வீடு கிடைக்கும் வரை தனது தந்தைக்கு கடாஃபி வீடு கொடுக்கவில்லை. கடாஃபியின் தந்தை இறக்கும் வரை ஒரு கூடாரத்திலேயே வசித்தார்.
4. லிபியாவில் திருமணமான தம்பதிகளுக்கு அறுபதினாயிரம் டினார்கள் (50,000அமெரிக்க டொலர்கள்) இலவசமாக அவர்கள் வீடு வாங்கவும் வாழ்க்கையை ஆரம்பிக்கவும் வழங்கப்படும்.
5 அனைவருக்கும் இலவசக் கல்வி. கடாஃபி ஆட்சிக்கு வரமுன் லிபியாவின் படித்தவர்கள் 25%. இப்போது 83%
6. அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.
7. லிபிய மக்கள் எவராவது விவசாயம் செய்ய விரும்பினால் அவர்களுக்கு இலவசக் காணி, வீடு, விவசாய உபகரணங்கள் வழங்கப்படும்.
8. லிபிய மக்களில் எவருக்காவது தேவையான கல்வியோ அல்லது மருத்துவ வசதியோ லிபியாவில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வெளி நாடு சென்று அவற்றைப் பெற அதற்குரிய செலவை லிபிய அரசு பொறுப்பேற்கும். அத்துடன் மாதமொன்றுக்கு அவர்களுக்கு அமெரிக்க டாலர்கள் 2300ஐ இலவசமாக வழங்கும்.
9 லிபிய மக்கள் எவராவது மகிழூர்தி(Car)வாங்க விரும்பினால் அரைவாசிச் செலவை லிபிய அரசு வழங்கும்.
10 லிபியாவில் பெட்ரல் விலை US $0.14. per litre.
11 லிபியாவிற்கு வெளிநாட்டுக் கடன் எதுவுமில்லை.அதன் வெளிநாட்டுச் சொத்து $150பில்லியன்கள்
12. பட்டதாரி ஒருவருக்கு வேலை கிடைக்கும் வரை சராசரி பட்டதாரிக்குரிய சம்பளத்தை லிபிய அரசு வழங்கும்.
13. லிபிய எண்ணெய் விற்பனை வருமானத்தின் ஒரு பகுதி நேரடியாக ஒவ்வொரு லிபிய மக்களினது வங்கிக்கணக்கில் வைப்பிலடப்படும்.
14. பிள்ளை பெறும் ஒரு தாய்க்கு அரசு US $5,000 வழங்கும்.
15 லிபியாவில் 40துண்டங்கள் அடங்கிய பாணின் விலை US $0.15
16. லிபிய மக்களில் 25% மானோர் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்.
17. உலகத்திலேயே பாரிய நீர்ப்பாசனத் திட்டம் – செயற்கை ஆறு லிபியாவில் மேற்கொள்ளபட்டது.
18. ஆபிரிக்காவிற்கான தொலை தொடர்புச் செய்மதியை ஒழுங்கு செய்ய கடாஃபி பணம் கொடுத்தார்.
19. ஆபிரிக்கக் கண்டத்திலேயே லிபியா மிகச் செல்வந்த நாடு.
20. ஆபிரிக்கக் கண்டத்திலேயே வாழ்கைத் தரம் மிக உயர்ந்தவர்கள் லிபியர்கள்.

கடாஃபிக்கு எதிரான கருத்துக்கள்·                     லிபியாவின் வெளிநாட்டுச் சொத்து $150பில்லியன்கள் ஆனால் கடாஃபியின் சொத்து $200 பில்லியன்கள். ·                     கடாஃபி சவுதி மன்னரிலும் பார்க்க மூன்று மடங்கு செல்வந்தர்.·                     கடாஃபி சிறப்பாக பொருளாதாரத்தை நிர்வகிக்கவில்லை.லிபிய வருமானத்தின் 5% கடாஃபியைப் போய்ச் சேரும். கடாஃபி நாட்டின் கட்டமைப்புக்களை(infrastructure) சரியாக அபிவிருத்தி செய்யவில்லை

அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கு கொழும்பு வந்திருந்தபோது கடாஃபியின் படத்தில் கையெழுத்து வாங்கப் பல இலங்கை அதிகாரிகள் திரண்டனர்.

கடாஃபியை மேற்குலகினர் ஏன் வெறுத்தனர்.·                     கடாஃபியின் பெயரை எப்படி எழுதுவது என்பதில் மேற்குலக ஊடகங்களிடை பெரும் குழப்பம்.·                     ஆபிரிக்காவிற்கான தொலை தொடர்புச் செய்மதியை ஒழுங்கு செய்ய கடாஃபி பணம் கொடுத்தார். இதனால் மேற்கத்திய வர்த்தகர்களுக்கு பெரு நட்டம் ஏற்பட்டது.·                     கடாஃபி தனது நாட்டில் சீனாவின் முதலீட்டை அதிகரித்தார். பல அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவிற்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கினார். காடாஃபிக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தவுடன் லிபியாவில் இருந்து 30,000க்கு அதிகமான சீனர்கள் வெளியேறினர்.·                     கடாஃபி ஒரு ஆபிரிக்க நாணய நிதியத்தை உருவாக்க முயன்றார். இது மேற்குலக ஆதிக்கத்தில் உள்ள பன்னாட்டு நாணய நிதியத்திற்கு பெரும் சவாலாக அமையும்.

பேஸ்புக் மூலம் இளம்பெண்களை வசப்படுத்திய இளைஞனுக்கு 50 ஆண்டுகள் சிறை

பேஸ்புக் தகவல் பரிமாற்றம் மூலம் இளம் பெண்கள் பலரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுக்கு 50 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் ஜொகன்னஸ்பேர்க் நகரைச் சேர்ந்தவர் தாபோ பெஸ்டர் (வயது-22). இவர் பேஸ்புக்கில் மொடலிங் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது பெயரை தோமஸ் பெஸ்டர் என்றும், தன்னிடம் வருவோருக்கு மொடலிங் வாய்ப்பு அளிப்பதாகத் தெரிவித்திருந்தார். இதை நம்பிய பல இளம்பெண்கள், தாபோ பெஸ்டரின் வலைக்குள் சிக்கியுள்ளனர். அவர்களில் பல பெண்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார் தாபோ. மேலும், இரண்டு பணக்காரப் பெண்களை ஆயுதம் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களையும் பறித்துக் கொண்டார். இப்படியாக குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த தாபோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்ற விசாரணையின்போது கதறி அழுத தாபோ, தனக்கு பெற்றோர் யார் எனத் தெரியாது எனவும், தன்னை வளர்த்த ஒரு குடிகார பாட்டியினால் பலமுறை செக்ஸ் கொடுமைகளை அனுபவித்ததாகவும் தெரிவித்தார்.

அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதி பெண்களைக் கற்பழித்து, அவர்களிடம் கொள்ளையிலீடுபட்ட பெஸ்டன், சமுதாயத்திற்கு ஓர் ஆபத்தான நபர். தென் ஆபிரிக்காவில் ஆண்டுதோறும் 56ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெஸ்டனின் குற்றங்களுக்காக 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும் : நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கண்டனம்!

புது டெல்லி : “நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது” என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்” என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார்.

குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே மின்னஞ்சல்கள் அல்லது அலைபேசிகளில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மூலம் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் குறித்து முடிவுக்கு வருவதை வண்மையாக கண்டித்தார். “உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் கையில் கிடைக்கும் முஸ்லீம்களின் மீது காவல்துறை பொய் வழக்கு போடுகிறது” என்றார்.

“அது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரபரப்புக்காக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் கலந்துரையாடல்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகவோ அல்லது அபாராதம் மூலமாகவோ, அரசின் விளம்பரங்களைக் கொடுக்காமல் தடுப்பதன் மூலமாகவோ தேவைப்பட்டால் ஊடக உரிமங்களை ரத்து செய்வதன் மூலமாகவோ திருத்தப்பட வேண்டும்” என்றும் மார்க்கண்டே கட்ஜ் குறிப்பிட்டார்.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் டெல்லி என பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் குற்றவாளிகள் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ் தனது கிளைகளை ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்களில் விரிவாக்க திட்டம்!

 

 

 

 

 

 

மும்பை:ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலும் இளைஞர்களை தனது அமைப்புகளில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முக்கியப் பகுதியாக ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்த வாரம் ஆர்.எஸ்.எஸ்யின் தேசிய செயற்குழு கோரக்பூரில் கூடியது. அக்கூட்டத்தில் பேசிய சங்க பரிவார தலைவர் மோகன் பகவத் தற்போது உலகில் உள்ள நவீன தொழிற்நுட்ப சவால்களை சந்திக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் புதிய வழிமுறைகளை மேற்கொள்ளாதது குறித்து தாம் கவலை தெரிவிப்பதாகவும் மேலும் சங்க பரிவார அமைப்புகளை தற்போதைய தொழிற்நுட்பத்திற்கு ஏத்த வகையில் உருவாக்க வேண்டும் என்பதில் தாம் ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார். எனவே ஆர்.எஸ்.எஸ்ஸை தொழிற்நுட்ப ரீதியில் முன்னேற்றும் பொறுப்பை தங்களின் கிளை அமைப்பான சேவா பாரதியிடம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் அதனுடைய வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்களை குறித்து கோரக்பூரில் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கேட்டு தெரிந்து கொண்டாதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

மேலும் பெரு நகரங்களில் தங்களுடைய அமைப்பை வேரூன்ற செய்வதற்காக முக்கிய நகரங்களுக்காக தனித்தனியே இணையத்தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் நகரங்களிலும் அதன் சுற்றியுள்ள ஊர்களுக்கும் விரைவில் இணையதளங்களை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இளைஞர்கள் மத்தியில் தன்னுடைய கொள்கைகளை பரப்புவதற்காக தனது வாழ்நாளில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக பிரசாரக்குகளாக பணிபுரிய இளைஞர்களை தயார்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரசாரக் என்றால் திருமணம் புரியாமல் வேறு எந்த பணிகளுக்கும் செல்லாமல் ஆர்.எஸ்.எஸ்ஸில் முழு நேர ஊழியர்களாக பணிபுரிய வேண்டும். இதற்கு பல இளைஞர்கள் விரும்பாததால் ஆர்.எஸ்.எஸ் தற்போது தன்னுடைய செயல் முறையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இனி பிரச்சாரக்குகள் தன்னுடைய வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அந்த அமைப்பிற்காக முழு நேர ஊழியர்களாக பணி புரிந்தால் போதுமானது என்றும் பிறகு அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்றும் முடிவெடுத்துள்ளது. தற்போது ஆர் எஸ் எஸ் அமைப்பில் பிரசாரக்குகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பணிகளை தொடர சமூக சேவை அமைப்புகள் என்ற முகமூடியில் நடத்தும் கிளைகளின் மூலம் பிரசாரக்குகளை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

குவைத் இளவரசருக்கு மரண தண்டனை!

சகோதரி மகன் உறவுமுறையிலுள்ள சக இளவரசர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற குற்றத்துக்காக, குவைத் இளவரசர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

குவைத் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இளவரசர் ஷேக் ஃபைஸல் அல் அப்துல்லாஹ் அல் சபாஹ் என்கிற அரச குடும்பத்து இளவரசர் தன் சகோதரி மகன் உறவுமுறையிலுள்ள ஷேக் பாசில் சாலிம் சபா அல்சலிம் என்கிற மற்றோர் இளவரசரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக, சட்ட அடிப்படையில் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளியான இளவரசர் ஷேக் ஃபைஸல் குவைத் இராணுவத்தில் ‘கேப்டன்’ அந்தஸ்தில் பணிபுரிபவர் ஆவார்.

கடந்த 2010 ஜூன்மாதம் கொலையுண்ட ஷேக் பாசிலைக் காண அவரது அரண்மனைக்கு வந்த ஷேக் ஃபைஸல் ‘உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்று அவரைச் சற்று வெளியே அழைத்ததாகவும், அதன் பின் ஒருசில நிமிடங்களில் துப்பாக்கி வெடித்த சப்தம் கேட்டு மற்றவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது, இரத்தவெள்ளத்தில் ஷேக் பாசில் கிடந்ததாகவும், அவசரமாக முபாரக் அல் கபீர் மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றும் பலனின்றிப் போனதாகவும் செய்தி வெளியானது.

அரசில் எந்தப் பொறுப்பும் வகிக்காததால், ஷேக் பாசிலின் கொலைக்கு எந்த அரசியல் காரணமும் இல்லை என்று அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.

கொலையுண்ட இளவரசர் ஷேக் பாசில், 1977 வரை குவைத் மன்னராக இருந்த ஷேக் சபாஹ் சாலிம் அல் சபாவுடைய பேரனாவார். அவருடைய தந்தை ஷேக் சாலிம் 1975 வரை அமெரிக்கா, கனடா, வெனிசுலா நாடுகளில் தூதராகப் பொறுப்புவகித்தவர் ஆவார். அதன்பின் நாடு திரும்பி, மந்திரிசபையில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருந்தார். எனினும், அண்மையில் உடல்நலக் காரணத்தால் அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

kadayanallur.org

பலருடன் தொடர்பு வைத்து உறவு கொண்டதால் ஷமீலாவைக் கொன்றேன்- கணவர் பரபரப்பு கடிதம்.

கோபிசெட்டிபாளையம் என்னைக் காதலித்து மணம் புரிந்த ஷமீலா, என்னைத் தவிர மேலும் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, நேரம் காலம் இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்ததால்தான் அவளைக் கொன்றேன். மேலும் டிவியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் நடிகனும் நேரம் காலம் இல்லாமல் தொடர்ந்து அவளுடன் தொடர்பு வைத்திருந்தான். இந்த ஆத்திரத்தையெல்லாம் அவளிடம் காட்டிக் கொலை செய்தேன் என்று தற்கொலை செய்து கொண்ட கணவர் மகேஷ் குமார் பரபரப்பு கடிதம் எழுதி வைத்துள்ளார்.Mageshkumar and Shameela மூணாறில் சென்னையைச் சேர்ந்த பெண் ஷமீலா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பெண்ணைக் கொன்றதாக கருதப்பட்ட மகேஷ் குமார் அவரது கணவர் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால் மகேஷும் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் பட்டிமணியக்காரன் பாளையத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் வழக்கில் பெரும் திருப்பு முனை ஏற்பட்டது.

 தற்கொலை செய்வதற்கு முன்பு மகேஷ் குமார் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட கடிதங்களை எழுதி வைத்திருந்தார். அதில் போலீஸாருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் பல பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.  மேலும் படிக்க…

 

சவூதி: வாயுக் குழாய் வெடித்து நான்கு தொழிலாளர் காயம்

File:Dammam Highway.jpgசவூதி: தம்மாம் நகரில் உள்ள இரண்டாவது தொழிற்பேட்டையில், குளிர்பானங்களுக்கான தகரடப்பாக்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

அத் தொழிற்சாலையில் ‘வாயுக் கசிவு’ இருந்ததால், தொழிலாளர்கள் சிலர் அதனை சரிசெய்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வாயு வெடித்து வெளிப்பட்டதால், மூன்று இலங்கைத் தொழிலாளர்களும், ஒரு இந்தியத் தொழிலாளரும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சரத் அனில், அனில், லயோனல் என்கிற மூன்று இலங்கைத் தொழிலாளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், கண்பார்வை பாதிக்கப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கரீம் என்கிற மற்றொரு தொழிலாளர் நிலை ஒருவாறாக முன்னேற்றமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அத்தொழிற்சாலை அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே இருந்தது என்றும், பதினைந்து வருடத்தில் இதுவே முதல் விபத்து என்றும் அத் தொழிற்சாலையின் மனிதவளப் பிரிவு மேலாளர் அஹ்மத் அல்கிலைகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “தொழிலாளர்களை பாதுகாப்பதே எங்கள் முதல்வேலை” என்றார் அவர்.

இதற்கிடையில், இந்த வாயுக் கசிவின் பரவல் அந்தப் பகுதிகளில் உணரப்படுவதால், அப்பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ராக்காவில் உள்ள,இந்திய தூதரகப் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

குஜராத் முஸ்லிம்கள் படுகொலை: நரபலி மோடிக்கு எதிராக சாட்சி சொன்ன ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்து உள்ளே தள்ளிய நரபலி மோடி!!

குஜராத் முஸ்லிம்களை படுகொலை செய்த மோடிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை, உள்ளூர் நீதிமன்றே விசாரித்துக் கொள்ளலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவித்தை தொடர்ந்து நரபலி மோடி ஹிட்லரை மிஞ்சம் தனது அராஜக போக்கை ஆரம்பிக்க துவங்கி விட்டான்.

குஜராத் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சமீபத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் தத் மோடிக்குஎதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னதுஅனைவருக்கும் நினைவிருக்கலாம்.

”மோடி தான் கலவரத்தை கண்டு கொள்ளாமல் இருக்க சொன்னார்” என பகிரங்கமாக சாட்சி சொன்ன ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் தத் அவர்களை நேற்று மோடி அரசு கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது.

”ஏய் நான் யாரு தெரியுமா எனக்கு எதிரா சாட்சி சொன்ன, உன்ன ஃபொர்ஜரி கேஸ்ல உள்ள போட்ருவேன்” என்ற வில்லன்களின் டயலாக்கை வில்லனுக்கேல்லாம் வில்லனான மோடி தற்போது நடைமுறை படுத்தியுள்ளான்.

ஆம் , சஜ்ஜீவ் தத் மீது ஃபொர்ஜரி கேஸை புக் பன்னி உள்ளே தள்ளியுள்ளார் இந்த மோடி!. இவர் மீது 341, 342, 189, 193 , 195 இத்தனை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த அளவிற்கு எனில் கைது செய்த சஞ்சீவ் விற்கு தனது வளக்கரிஞரை சந்திக்க கூட அனுமதி இல்லை.

இது குறித்து அவரது மனைவி சுவேதா கமிஷனுருக்கு அளித்ததுள்ள புகாரில் ”எனது கவனர் கொலை செய்யப்படும் அபாயத்தில் உள்ளார். ஏனெனில் போலி என்கவுண்டர்களுக்கு பேர் போன சிட்டி கிரைம் போலிசாரால் எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞரை சந்திப்பதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. எனவே அவரது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்” எனக் தெரிவித்துள்ளார்.

மோடி இது போன்று  தனது ஹிட்லர் தனத்தை அதிகரிக்க காரணம், ”மோடி ஊரிலேயே மோடி தனது வழக்கை விசாரித்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது தான்.

பிஜேபி இந்த கைதை வரவேற்றுள்ளது. இது நியாயமான நடவடிக்கையாம்.

அதே நேரத்தில் காங்கிரஸ் இது பற்றி கூறுகையில், சஞசீவ் தத் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மேலும் மேலும் சோதனைகள் வருகின்றது குஜராத்தில் சட்ட ஒழுங்கே இல்ல எனத் தெரிவித்துள்ளது.

மோடியின் பிரதமர் கனவிற்கு நெருடலாக இருப்பது குஜாரத் முஸ்லிம்கள் படுகொலை, இதில் மோடி தான் வெற்றி  பெற, இன்னும் எத்தன நபர்களை பலியாக்க போகின்றானோ தெரிவில்லை!…

அபு அஜீபா

சவூதி: இனி பெண்களுக்கும் வாக்குரிமை;தேர்தலில் நிற்கும் வாய்ப்பு!

 

 

 

இஸ்லாமிய மத சட்டத்திற்குட்பட்டு அரசாட்சி செய்வதாகக் கூறும் சவூதி அரபியாவில், இனி பெண்களும் சுயமாகத் தேர்தலில் நிற்கவும், தம் விருப்பப்படி வாக்களித்துத் தேர்ந்தெடுக்கவும் செய்யலாம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷூரா கவுன்சில் எனப்படும் சவூதியின் நாடாளுமன்றமான ‘அரசாலோசனை மண்டபம்’ நேற்று மீண்டும் கூடிய போது, சவூதி மன்னர் அப்துல்லாஹ் இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை பலத்த கையொலி வரவேற்புகளுக்கிடையே வெளியிட்டார். “இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே, மூத்த மார்க்க அறிஞர்களின் ஆலோசனை பெற்றே இவ்வறிவிப்பு செய்யப்படுகிறது” என்றார் மன்னர்.

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் முதல் சவூதி பெண்டிர் தேர்தலில் நின்று வென்று  ஷூரா கவுன்சிலிலும் பங்கு பெறலாம் என்றும் தேர்தலில் வாக்குரிமையும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் மன்னர் தனது ஐந்து நிமிட தொடக்க உரையில் குறிப்பிட்டார். (இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு எதிர்வரும் வியாழன் அன்று சவூதி நாடு தயாராகி உள்ளது இங்குக்  குறிப்பிடத்தக்கது)

சவூதி அரேபியாவின்  சமூக அரசியல் மாற்றங்களின்  முதல்படியாக இவ்வறிவிப்பு கருதப்படுகிறது. மேலும்  பாலினங்கள் ஒன்று சேர்ந்து கூட்டங்கூட தடை உள்ள சவூதி அரேபிய சமூகத்தில் இவ்வறிவிப்பு கலவையான உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

. “இது மகத்தான நற்செய்தி, இறுதியில் பெண்குரல் செவிசாய்க்கப்பட  வழி கோலப்பட்டுள்ளது ” என்று  சவூதி எழுத்தாளரும், பெண்ணுரிமைப் பேராளருமான வஜிஹா அல் ஹுவைதர் மன்னரின் அறிவிப்பை மகிழ்ந்து  வரவேற்றுள்ளார்.  “பெண்களுக்கான மற்ற தடைகளையும், குறிப்பாக வாகனம் ஓட்டுவதில் , ஆண் துணையின்றி விழாக்கள் நடத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும்  மன்னரின் நேற்றையஅறிவிப்பில், பெண்கள் வாகனமோட்டுவது குறித்த எந்தக் குறிப்பும் இல்லை. (சட்ட ரீதியாக சவூதியில் பெண்கள் வாகனமோட்ட தடை இல்லை எனினும், பெண்களுக்கு வாகன உரிமம் வழங்கப்படுவதில்லை என்பது அறியத்தக்கது )

மதக்கலவரத்தையும் சாதிகலவரத்தையும் உருவாக்கி உயிரை பலி வாங்கும் பிள்ளையார்!

விநாயகர் சதுர்த்தி, தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த விழா மிகச்சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளப்படும். ஒரு சில வட இந்தியர்கள் வாழும் பகுதிகளில் அவரவர்களின் வீடுகளில் மிக எளிமையாக கொண்டாடப்பட்டு வந்தது தமிழகமும் அமைதியாக இருந்தது.

இந்த அமைதியை தமிழகத்தில் விரும்பாத ஒருசில ராமகோபாலன் வகையறாக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை மதங்களுக்குள் மோதலை உருவாக்கி ஓட்டுக்கள் பொறுக்க ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் அதை புகுத்தி மத கலவரம் ஏற்பட்டதையும் அதனால்  ஒரு சில இடங்களில் பல உயிர்கள் கொல்லப்பட்டதையும் நாடே அறியும்.
அதில் ஒரு பகுதியாக இந்த வருடம்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆந்திரா மாநில குர்நூல் மாவட்டம் அதொனியில் மதக்கலவரம் ஏற்பட்டு இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர் மற்றும் பன்னிரெண்டு பேர் படுகாயமுற்றிருக்கின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும்  காவலர்களும் இதில் அடக்கம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் சென்றவர்கள் கஜிபுராவில் உள்ள மதினா மஸ்ஜித் வழியாக மேளதாளம் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் சென்றுள்ளனர். பொதுவாகவே வழிபாட்டு தளங்கள் முன்பாக மேள தாளம் அடித்துச்செல்ல தடை உள்ளது. அதையும் மீறி லுஹர் தொழுகை நடந்துகொண்டிருந்த நேரத்தில் அதிக சப்தத்துடன் மேள தாளம் அடித்துச்சென்றுள்ளனர். முஸ்லிம்கள் மேளதாள சத்தத்தை சிறிது தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஊர்வலம் சென்றவர்களோ மஸ்ஜிதின் மீது கல் எரிந்ததுடன் கலவரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
கலவரகாரர்கள் மஸ்ஜிதில் நுழைந்து தீ வைக்கவும் முயற்சித்துள்ளனர். மேலும் பள்ளியின் மினாராக்களை சேதப்படுத்தியும் உள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிர் இழந்துள்ளனர். 
முஸ்லிம்களின் வீட்டினுள் புகுந்து சமையல் எரிவாயு சிலிண்டரை வெடிக்கச் செய்ததுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான 10  லாரிகளையும் தீக்கிரையாக்கி சொத்துக்களுக்கு சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.
சியாசாத் இணையதள நிருபர் சிராஜுதீன் சம்பவ இடத்திற்கு சென்று செய்தி சேகரித்து கொண்டிருந்தார் அவருடைய இருசக்கர வாகனமும் கேமராவும் தீக்கிரையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவம் குறித்து உள்ளூர்வாசியான அலி ஹஸ்மி இது ஒரு திட்டமிட்ட கலவரம் எனக்கூறியுள்ளார்.
இவர் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது, ஊர்வலத்தை அமைதியாக நடத்த வேண்டும் என்று அவர்கள் உண்மையிலேயே நினைப்பவர்களாக இருந்திருப்பார்களேயானால், அவர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டதும் அமைதியாக ஊர்வலத்தை நடத்தியிருப்பார்கள். ஆனால் வேண்டுகோளை புறந்தள்ளி கலவரத்தில் ஈடுபட்டதை வைத்து பார்க்கும்போது கலவரம் ஏற்படவேண்டும் என்று திட்டமிட்டே வந்ததுபோல் தெரிவது உண்மை.
கலவரத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் கலவரத்தை நிறுத்த இயலவில்லை எனவே  போலீசார் வானத்தை நோக்கி சுட்டு கலவரத்தை நிறுத்தியுள்ளனர். அங்கு மூன்று நாட்களுக்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“இஸ்லாமியர்களுக்கும் இந்து மக்களுக்குமிடையே கலவரத்தை ஏற்படுத்தி உயிரை பலி வாங்கிய இந்த பிள்ளையார் ஊர்வலம் இந்த வருடம் தமிழகத்தில் இந்து மதமக்கள் மத்தியிலேயே ஜாதிக்கலவரமாக மாறியதுதான் கொடுமையிலும் கொடுமை. “
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வருடம் தோறும் அந்த ஊர் சார்பில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஒரு இடத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்படும். அந்த பிள்ளையாரை அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு நடத்தி, ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பார்கள்.
இந்த வருடம் தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாகவும், இதர மக்கள் தனியாகவும் பிள்ளையார் சிலைகளை வைத்துள்ளனர். இறுதியாக ஊர்வலம் இதர மக்கள் வசிக்கும் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால், தங்கள் பக்கம் ஊர்வலம் வரும்போது, மேளம் தாளம் இல்லாமல், எந்தவித சத்தமும் இல்லாமல் செல்ல வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல்துறை உதவியுடன் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பிள்ளையார் சிலையை மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்துள்ளனர்.
போலீஸ் உதவியுடன் பிள்ளையாரை கரைத்தவர்கள், சத்தம் போடாமல் போகச் சொன்னவர்களை, சம்மந்தப்பட்ட தெருவிலேயே ஆபாச வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது.
தாங்கள் வசிக்கும் தெரு வழியாகத்தான், இதர மக்கள் தங்கள் விவசாய வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்பதால், அவர்களை இந்த வழியாக வரக் கூடாது என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அந்த வழியாகச் சென்ற சுப்பிரமணியன் என்பவரை தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் தாக்கியுள்ளனர்.
இந்த செய்தி இருதரப்புக்கும் பரவியதையடுத்து, இருதரப்புக்கும் மோதல் உருவாகியுள்ளது. இந்த மோதலில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதில் இருவர் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் மோதல் உருவாகாமல் தடுப்பதற்காக கடலூர் மாவட்ட எஸ்பி பகலவன் தலைமையில், பண்ருட்டி டிஎஸ்பி, சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரஜேந்திரன், விருத்தாசலம் டிஎஸ்பி அறிவழகன், திட்டக்குடி டிஎஸ்பி வனிதா உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
மேலும்,காஞ்சிபுரம் அருகே நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் இடையே இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் பெண் ஒருவரும் பலியாகியுள்ளார்.காஞ்சிபுரம் பாரதி நகர் பகுதியில் நடந்த ஊர்வலத்தில் இருத்தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினரும் மாறிமாறி தாக்கி கொண்டார்கள். இந்த மோதலில் வையாவூர் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரின் மனைவி பவானி என்பவர், கலவரக்காரர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்து மத ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் பிள்ளையாரை வழிபாடு நடத்தி கொண்டு சென்று தண்ணீரில் கரைப்பது வழக்கம் என்று கூறிதான் இந்த விழா தமிழகத்தில் உட்புகுத்தப்பட்டது. ஆனால் இந்த பிள்ளையார் வழிபாட்டால் சாதி மோதல் உருவாகி ஒருவர் இறந்தும் 3 பேர் கவலைக்கிடமாகவும் உள்ளது நமக்கு கவலையாக உள்ளது. 
எனவே மக்களே சிந்தித்து பாருங்கள் இந்தபிள்ளயார் ஊர்வலத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதுடன் பல உயிர்கள் பலியாவதற்கும் காரணமாக இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
அவர்கள் கடவுளாக மதிக்கக்கூடிய ஒரு சிலையை வழிபட்டு சிறப்பு செய்து பிறகு அந்த சிலையை கொண்டு சென்று கழிவு நீர் செல்லக்கூடிய வாய்க்காலிலும்,அசுத்த நீர் நிலைகளிலும், சாக்கடைகளிலும்,கடல் உள்ள ஊர்களில் கடல்களிலும் சிலைகளை குப்புறத்தள்ளி உடத்து கால்களால் மிதித்து கரைத்து வருகின்றனர். இது அவர்கள் கடவுளை அவர்களே அவமதிப்பது போல் உள்ளது. 
இது போன்ற விழாக்களில் இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாத இஸ்லாமிய பெயர் தாங்கிகளும் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை பேணுகிறோம் என்ற பெயரில் ஈமானை இழக்கும் வேதனையான சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. 
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 78 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கடலூர் கடலில் கரைக்க, மார்க்கெட் கமிட்டி முன் ஊர்வலம் துவங்கியது. பஸ் நிலையம் முன் விநாயகர் சிலைகளுக்கு, இஸ்லாமியர்கள்(?) சார்பில், அவுலியா தர்கா டிரஸ்டி யாசீன், பாபு, தே.மு.தி.க., நகர செயலர் அக்பர் அலி உள்ளிட்டோர், இனிப்பு கொடுத்து வரவேற்பு அளித்தனர். என்ற செய்தியையும் நாழிதழ்கள் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மும்பையில் பிரசித்தி பெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு அம்சமாக இடம்பெற்ற பிள்ளையார் சிலை கரைப்பில், நண்பர்களுடன் சென்று உதவிய முஸ்லிம் பெயர் தாங்கி இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.
ஆட்டம் பாட்டம், கொண்டாட்டங்களுடன் நடைபெறும் இந்த பிள்ளையார் சதுர்த்தி விழாவில் பிற மதத்தின் பெயர் தாங்கிகளும் கூட கலந்துகொள்வதுண்டு.
மும்பையில் கடந்த வியாழன்று(01-09-2011) தொடங்கிய பிள்ளயார் சதுர்த்தி விழா, 10 நாட்கள் நடைபெறும்.நகர் முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிலைகள் அமைக்கப்பட்டு கணபதி மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பிள்ளையார் சிலை 3,5,7 மற்றும் 10 ஆவது நாட்களில் மும்பையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.
அதன் ஒரு அம்சமாகவே மும்பை அந்தேரி பகுதியில் உள்ள “சாத் பங்களா” (ஏழு பங்களா) என்ற இடத்தில் பிள்ளையார் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த விழாவில் தமது இந்து நண்பர்களுடன் சேர்ந்து விழா ஏற்பாடுகளை கவனிப்பது முதல் அனைத்து நடவடிக்கைகளிலும் லச்சாயா என்ற 20 வயது இஸ்லாமிய பெயர் தாங்கிய இளைஞர் ஒருவரும் கலந்துகொண்டிருக்கிறார்.
பிள்ளையார் சிலை கரைப்பு ஊர்வலம் தொடங்கியவுடன், நண்பர்களுடன் சேர்ந்து ஆடிப்பாடி, அருகிலுள்ள கடற்கரைக்கு சென்ற லச்சாயா, சிலையை கரைக்க நண்பர்களுடன் சேர்ந்து கடலில் இறங்கினார்.
அப்போது கடலுக்கு அடியில் திடீரென ஏற்பட்ட வேகமான நீரோட்டம் லச்சாயா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை நீருக்குள் இழுத்து சென்றது. அதில் லச்சாயா, கடலுக்குள் மூழ்கி உயிரிழந்துவிட்டார்.
உயிரிழந்த லச்சாயா,கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.உடல் ஊனமுற்ற தமது பெற்றோரைக் காப்பாற்றுவதற்காக மும்பை வந்து, தமது மாமா வீட்டில் தங்கியிருந்தபடியே வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் குடும்பத்தின் ஒரே வருவாய் ஈட்டக்கூடிய நபரான லச்சாயாவை இழந்தது அவரது பெற்றோர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
ஒரு மனிதனின் இறுதி நிலை எவ்வாறு அமைகிறதோ அதை வைத்தே மறுமையில் இறைவன் நமக்கு கூலி தருவான் இது போன்ற சிலை கரைப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மரணித்தவரின் நிலை?. எனவே இஸ்லாமிய பெயர் தாங்கிகளே சிந்திப்பீர்!!
இதில் ஏதோ விஷேஷம் இருப்பதாக நினைத்துக்கொண்டு தினமும் கூலி வேளைக்கு செல்லும் மக்கள் கூட தங்கள் கூலிப்பணத்தை கொண்டு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கி பூஜை செய்து அதை சாக்கடையில் தள்ளும் அவலமும் நடக்கிறது. இதனால் இந்தியா முழுக்க பல கோடி ரூபாய்கள் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் வீனடிக்கப்படும் வேதனையையும் நாம் காண்கிறோம்.
மேலும் இதுபோன்ற செயல்களால் சுற்றுச்சூழலுக்கு கேடுகளும், இதனால் மிகப்பெரிய பாதிப்பும் மக்களுக்கு ஏற்படும்,என்பதையும் கவனத்தில் கொண்டு ஆட்சியாளர்கள் மக்களுக்கும்,மக்களின் உயிர்களுக்கும், கேடு விளைவிக்கக்கூடிய,மதக்கலவரங்களையும், ஜாதிக்கலவரங்களையும் ஏற்படுத்தி வரும் இந்த கலவர ஊர்வலத்தை தடை செய்தால் மட்டுமே நமது நாடு அமைதிப்பூங்காவாக இருக்கும் என்பதை உணர்ந்து உடனே தடை செய்ய முன் வர வேண்டும்.
மதக்கலவரத்தை ஏற்படுத்தப்பட்ட ஊர்வலம் அவர்களுக்குள்ளேயே ஜாதிக்கலவரமோதல் ஊர்வலமாக மாறியதில் பிள்ளையாரின் நிம்மதி பறி போயிருக்கும் என்பது மட்டும் உண்மை.
நன்றி: உணர்வு வார இதழ்

 

நபரின் ஆண்குறி வழியாக சிறுநீர்பைக்குள் புகுந்த 6 அங்குல விலாங்குமீன்

நபரொருவரின் ஆண்குறி வழியாக 6 அங்குல நீளமான விலாங்கு மீனொன்றை அந்நபரின் சிறுநீரகப் பையிற்குள் புகுந்த  விபரீத சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.

பின்னர் மருத்துவர்கள் 3 மணி போராட்டதிற்கு பிறகு  இந்த விலாங்கு மீனை அகற்றினர்.

சாங் நான் (வயது 56) எனும் இந்நபர் சீனாவிலுள்ள அழகு சிகிச்சை நிலையமொன்றில் தனது உடலின் தோல்களை சுத்தப்படுத்துவதற்காக நீரூற்றுகுளியலை மேற்கொண்டிருந்தார்.

அவ்வேளையிலேயே வில்லங்கமான ஒரு விலாங்கு மீன் அவரது ஆணுருப்பின் வழியாக சிறுநீர்பைக்குள் சென்றுள்ளது.

மீன்கள் நிறைந்த தடாகத்தில் மேற்கொள்ளும் குளியல் தன்னை பத்து வயது இளமையானவராக தோற்றமளிக்கச் செய்யும் என சாங் நான் எண்ணியிருந்தார்.

ஆனால், குளித்துக்கொண்டிருந்தபோது தனது அந்தரங்க உறுப்பில் அதிக வலியை அவர் உணர்ந்தார். மீனொன்று தனது ஆண்குறி வழியாக உடலினுள் செல்வதை அவர் அறிந்தார்.

இது தொடர்பில் சாங் நான் தெரிவிக்கையில், ‘நான் குளிப்பதற்காக தடாகத்தினுள் இறங்கிபோது எனது அந்தரங்க உறுப்பின் முனைக்கு அருகில் விலாங்கு மீனொன்று இருப்பதை உணர்ந்தேன்.  ஆனால் திடீரென எனது உடலில் சடுதியாக வலியேற்பட்டது. அப்போது எனது உறுப்பின் மறுமுனையை விலாங்குமீன் அடைந்துவிட்டதை அறிந்தேன’ எனக் கூறியுள்ளார்.

‘நான் அந்த விலாங்கு மீனை பிடித்து வெளியில் எறிவதற்கு முயன்றேன். ஆனால் அது நழுவிச்சென்று எனது உறுப்பிற்குள் காணாமல் போய்விட்டது’ எனவும் சாங் நான் கூறினார்.

இறந்த நிலையில் அம்மீன் சிறுநீர் பையிலிருந்து அகற்றப்பட்டது.

இது குறித்து சத்திரசிகிச்சை நிபுணர் ஜின் வோங் தெரிவிக்கையில், ‘விலாங்கு மீனாது இயற்கையாகவே நழுவிச் செல்லும் தன்மைக்கொண்டது. அதனால் அந்த விலாங்கு மீனாது மேற்படி மனிதரின் அந்தரங்க உறுப்பில் இலகுவாக ஊடுறுவியிருக்க முடியும்’ என்றார்.

Athirchi.com

அமெரிக்கா: பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடியாக உயர்வு!

 வாஷிங்டன்: அமெரிக்காவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடி பேர் என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

இது கடந்த 50 ஆண்டுகளில் காணாத அதிகபட்ச எண்ணிக்கை என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.US Povertyஉலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அங்கு கடந்த 1983-ம் ஆண்டு முதலே வறுமைக்கோடு என்ற அளவீடு இருந்துவருகிறது.

அமெரிக்காவில் ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் வறுமையில் வாடுபவர்களாக கருதப்படுகின்றனர். அதாவது அவர்களின் பொருளாதார நிலை, தேவையின் அடிப்படையில் இந்த ரூ 10 லட்சம் மிகக் குறைந்த தொகையாகும்.

இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பசி பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 4 கோடியே 62 லட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இது அமெரிக்க மக்கள் தொகையில் 6-ல் ஒருபங்கு ஆகும்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாகாணங்களில் மிஸிஸிப்பி முதலிடம் வகிக்கிறது. அங்கு 22.07 சதவீதம் பேர் வறுமையில் வாடுகின்றனர். அதைத் தொடர்ந்து லூசியானா, கொலம்பியா, ஜார்ஜியா, நியூமெக்சிகோ, அரிஸோனா போன்ற மாநிலங்களும் வறுமையில் வாடுவதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

 
thatstamil
 
 

பெற்ற குழந்தையை கொடுரமாக சாப்பிடும் மனிதன்!(படம் இணைப்பு)

தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசிகள் மாந்திரீக விழாக்களை கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு மாந்திரீக விழா கொண்டாடும்போது அண்மையில் அங்கு வசிக்கும் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை மிகவும் கொடுரமான முறையில் கடித்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

“பப்புவா, நியுகினியா சுரங்க குடியேற்ற வாசிகளால் இவர்கள் அண்மையில் மாந்திரீக விழா தொடங்கப்பட்டது. இதில் மாந்திரீகத்தில் மிக்க நம்பிக்கை உடைய ஒருவர் மிகவும் கொடுரமான ஒரு செயலை புரிந்துள்ளார். அவரது சொந்த மகனையே மிகவும் கோரத்தனமாக கடித்துக்குதறி சாப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த கிராம வாசிகள் அலறியடித்துக்கொண்டு பொலீசாரை வரவழைத்துள்ளனர். பொலீசார் மிகுந்த போராட்டத்தின் பின்னர் குறிதத்த நபர் உட்பட அவரது மனைவியையும் கைது செய்துள்ளர். எனினும் மிகுந்த காயங்களுக்கு உள்ளான குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என பொலீசார் தெரிவித்தனர். மற்றும் இது ஒரு சங்கடமான சம்பவம் எனவும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மிகுந்த பயத்துடனும், கவலையுடனும் வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.

எச்சரிக்கை:- மன்னிக்கவும், சென்சார் செய்யப்படாத புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது. தயவுசெய்து பெண்களோ, இளகிய மனம் கொண்டவர்களோ, சிறுவர்களோ, குறித்த புகைப்படத்தை பார்க்க கூடாது என எச்சரிக்கிறோம்.
Image Link http://athirchi.com/wp-content/uploads/2011/09/00-00-238.jpg

சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு…

சவூதியில் “ஹுரூப்” “Run away ” “هرب” என்ற விதியை இந்தியர்கள் மீது வழுக்கட்டாயமாக திணித்து அவர்கள் பாதிக்கப்படுவதை ரத்துசெய்யும் பணியில் இந்திய வெளியுறவு துறை, இந்திய ஜனாதிபதி, இந்தியாவின்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை, சவூதி மன்னரின் தனிப்பிரிவு போன்ற துறைகளின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று ஹுரூப் என்று சொல்லக்கூடிய அந்த கொடிய சட்டம் எந்த காரணமுமின்றி இந்தியர்கள் மீது பாயாமல் தடைசெய்ய, சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக மற்றும் கேரளா அசோகியேசன் இணைந்து கூட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றன. அதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆலோசனைகளும் பெற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இது சம்பந்தமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் கேரளா அசோசியேசன் நிர்வாகிகள் மூலம் நேரடியாக பேசப்பட்டுள்ளது. சவூதி வாழ் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு  இந்திய உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் தொடர..

காயிதேமில்லத் திடலில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

ஷவ்வால் பிறை காணப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் 3 இடங்களில் திடலில் தொழுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் காலை 6 மணி அளவில் கடையநல்லூரைச் சார்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு. புத்தாடைகள் அணிந்து தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர். இவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் பேரீத்தம்பழம் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். 
காயிதே மில்லத் ஈத்கா திடலில் சரியாக 6.30 மணி அளவில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிய உரையில்- இஸ்லாம் என்பது சாந்தியையும் அமைதியையும் போதிக்கக் கூடிய மார்க்கம் கடந்த ஒரு மாத காலம் உண்டு, பருகி, மனைவியோடு உறவு கொண்டு இன்புற்றிருக்க வேண்டிய முஸ்லிம்கள் பகல் முழுக்க இவைகளையெல்லாம் விலக்கிக் கொண்டனர். யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் படைத்த ஏகப் பரம்பொருhகிய அல்லாஹ் பார்க்கிறான் என்ற எண்ணம்தான். இது உலக மக்கள் அனைவருடைய உள்ளத்திலும் ஏற்பட்டு விட்டால் லஞ்சம், ஊழல், மோசடி, தீவிரவாதம் போன்ற அநியாயங்கள். அக்கிரமங்கள். அக்கிரமங்கள் ஏற்பட வாயப்பில்லை.  இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஒரு உயிரை
வாழவைத்தவன் உலகமக்கள் அனைவரையும் வாழவைத்தவன் போன்றாவான். நியாயமின்றி அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்பவன் உலகமக்கள் அனைவரையும் கொலைசெய்தவனாவன் என்று திருக்குர்ஆன் தீவிரவாதத்திற்கு எதிராக உரக்க குரல் கொடுக்கின்றது. நோன்புப் பெருநாளில் கூட இஸ்லாமியர்கள் ஏழைகளின் பசிப் பணியைப் போக்குவதற்காக ஈகையுடன் நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுகின்றனர். இத்தகைய ஈகைப் பண்பை ஏற்படுத்துவதுதான் இஸ்லாம் என்று அவர் தன்னுடைய பெருநாள் பேருரையில் எடுத்துரைத்தார்.
கடையநல்லூர் முழுவதிலும் இருந்து இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வமுடன் பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

மேலும் 2 இடங்களில் திடல் தொழுகை

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 3 வது தெரு மர்யம் பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்லாமிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி அப்துந் நாஸிர் அவர்களும் மேலும் மக்காநகர் பள்ளிவாசல் சார்பில் மௌலவி பஷீர் அஹமது MISC அவர்களும் பெருநாள் தொழுகையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள். அனைவரும் தங்களது உரைகளில் இஸ்லாம் கூறும் ஈகை பற்றி எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்ஜித் மர்யம், மக்கா நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
தொழுகைக்கு முன்பாக கடையநல்லூர் நகரில் ஆயிரக்கணக்கான ஏழைஎளிய மக்களை கண்டரிந்து வீடு தேடி தலா 5கிலோ அரிசி வீதம் பித்ரா எனும் பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.  
கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சொக்கலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் கடையநல்லூர் நகரக் காவல்துறை ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் பெருநாள் தொழுகை நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. 

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாக்குகிறோம்…!

கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்பெருநாள் தொழுகை

புனித ரமலான் மாதம்- ஒரு ஜெர்மானியப் பயணியின் இனிய அனுபவம்!

 German Touristதுபாய்: துபாயில் ரமலான் மாதத்தில் சுற்றுலாப் பயணியாக வருகை புரிந்த ஜெர்மனியைச் சேர்ந்த டேனியலுக்கு ரமலான் மாதம் இனிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து அவர் தெரிவிப்பதாவது :

வியட்நாம், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராகக் கருதப்படும் துபாய் வருகை புரிந்தவுடன் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் உணர்த்துகிறது.

கடுமையான வெயிலிலும் தொழிலாளர்கள் முதல் உயர்நிலைப் பணியாளர்கள் இறைக்கட்டளையான நோன்பை கடைப்பிடித்து வருவது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. கடுமையான வெயிலில் தண்ணீர் கூட அருந்தாமல் எப்படி சுமார் 14 மணி நேரம் இருக்க முடிகிறது என்பதனை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது.

இரவு நேரங்களில் அனைவரும் சிறப்புத் தொழுகைகளை தொழுது வருவது, சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் போட்டிகள் நடந்து வருவது, பகலில் நோன்பு வைக்காத பிற சமயத்தவர்கள் பொது இடங்களில் சாப்பிடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பல்வேறு இடங்களில் நோன்பாளிகளுக்கு பிரியாணி உணவு பரிமாறப்படுவதையே பார்த்து வந்த எனக்கு துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பாரம்பர்ய நோன்புக் கஞ்சியினை தினமும் 3000 பேருக்கு மேல் வழங்கி வருவது ஒரு வித்தியாசமான அனுபவம். மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படும் அதன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டுக்குரியவர்கள் என்று வியந்து பாராட்டினார்.

பின்னர், நோன்பு திறப்பதற்கு முன்பு பொது இடத்தில் அருந்தக்கூடாது என்ற சட்டம் இருப்பதன் காரணமாக தமிழகத்து நோன்புக் கஞ்சியினை பார்சல் வாங்கிக் கொண்டு வாழ்த்துக் கூறி விடைபெற்றார் ஜெர்மானிய சுற்றுலாப் பயணி டேனியல்.

thatstamil

சமச்சீர் கல்வித் திட்டம்-அரசின் குழப்பத்தால் அநியாயமாக வீணாகிப் போன 60 நாட்கள்!

கடந்த 60 நாட்களாக விடை தெரியாமல் நீண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டக் குழப்பத்திற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஆனால் இனிமேல்தான் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பிரச்சினையே ஆரம்பமாகப் போகிறது.

அரசு – உனக்கு இலவச லேப்டாப் வேணுமா?
மாணவன் – வேண்டாம்
அரசு – இலவச சைக்கிள் வேண்டுமா?
மாணவன் – வேண்டாம்
அரசு – வேற என்ன வேணும்?
மாணவன் – படிக்க ஏதாவது ஒரு புக் கொடுங்க போதும்

இதுதான் கடந்த 60 நாட்களில் தமிழகத்தை அதிகமாக வலம் வந்த எஸ்.எம்.எஸ்-ஸாக இருக்க முடியும். அந்த அளவுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும், விரக்தியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.

மிக மிக எளிதாக அணுகப்பட்டிருக்க வேண்டிய ஒரு விஷயத்தை மிகப் பெரிய சட்டச் சிக்கலாக்கி கடைசியில் தனக்குப் பாதகமாக அதை முடித்துள்ளது தமிழக அரசு. மக்களின் மிகப் பெரிய வரவேற்புடன், அமோக ஆதரவுடன், ஆட்சிக்கு வந்த அதிமுக அரசுக்கு இது நிச்சயம் மிகப் பெரிய பின்னடைவுதான், சறுக்கல்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மேலும் படிக்க..

முஸ்லீம்களும், நோன்புக் கஞ்சி அரசியலும்.

 
 புனித ரமழான் மாதம் என்பது முஸ்லீம்களின் மிக முக்கியமான காலமாகும். உலகுக்கான வழிகாட்டி திருமறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம்.
 
காலை மூன்று மணிக்கே எழுந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள்.
பஜ்ருத் தொழுகைக்கு பள்ளியை நிறைக்கும் மக்கள் கூட்டம்.
லுஹர் தொழுகைக்கு தவறாமல் வருபவர்கள்.
அசர் தொழுகையுடன் சேர்த்து நோன்புக் கஞ்சி வாங்க வருபவர்கள்.
நோன்பைத் திறக்க வேண்டும், சூரியன் எப்போது மறையும் என வைத்த கண் வாங்காமல் காத்திருக்கும் உள்ளங்கள்.
தொழுகை தொழப் போக வேண்டும் அனைத்து  வேலைகளையும் இப்போதே முடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே சமையலில் ஈடுபடும் தாய்மார்கள். என்று அனைவரும் ஆசுவாசமாக போற்றிப் புகழும் மாதம் தான் இந்த ரமழான்.
இஸ்லாமிய ஆன்மீகக் கருத்துக்கள் எப்போதும் பேசப்படும் இம்மாதத்தில் தற்போது அரசியலும் கலக்கப்படுவது ஓர் கவலையான உண்மையாகும்.

அதிகாலையில் இருந்து மாலை வரை உண்ணாமல், பருகாமல் இறைவனுக்காக தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளும் மக்கள் சூரியன் மறையும் நேரத்தில் நோன்பைத் திறப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு அங்கென்ன வேலை என்ற கேள்வி எழுவது நியாயமானதே!
ஆம் எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற பாணியில் கொடிகட்டித் திரியும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு தங்கள் பச்சோந்தித் தனத்தை காட்டிக் கொள்ளக் கிடைத்த பெரும் சந்தர்ப்பமாக இந்த ரமழான் மாதத்தை நினைக்கிறார்கள்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோன்புக் கஞ்சி அரசியல் மிகவும் பிரபலமானதாகும் அம்மா வருகிறார், ஐயா வருகிறார், தமிழினக் காவலர் வருகிறார், முஸ்லீம்களின் இதயம் வருகிறார் என்றெல்லாம் வாசகங்கள் அடங்கிய “கட்டவுட்களை” நாடு முழுவதும் இம்மாதத்தில் காணக்கிடைக்கும்.
பள்ளிவாயல்களில் நோன்பு திறக்கும் நிகழ்வு என்று கூறி அரசியல் வாதிகள் வரவேற்கப்படுவார்கள்.
தொப்பி அணிந்து, சில நேரங்களில் ஜுப்பாவும் போட்டுக் கொண்டு, வெள்ளையும் சொல்லையுமாக வரும் அரசியல் பிரபலங்கள். ஆன்மீக அரங்கில் தங்கள் அரசியல் தர்பாருக்கான இடத்தைப் பிடிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
ஒரு முஸ்லிம் நோன்பு காலத்தில் நோன்பு திறப்பதில் நியாயம் இருக்கிறது.
ஆனால் பல இடங்களில் இஸ்லாத்திற்கே தொடர்பில்லாதவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் என்ற பெயரில் அரசியல் நாடகம் போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
 
நோன்பு திறத்தல் என்ற உண்ணதமான ஒரு நிகழ்வையும் அரசியல் சாக்கடையாக்க முனையும் இவர்களை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்பது ஒரு புனிதப் பணி. நோன்பு திறப்பதற்கு உதவி செய்யும் பொது மக்களின் பணத்தை வீண் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்ததாதீர்கள்.
அரசியலை அரசியலுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளுங்கள், ஆன்மீக செயல்பாட்டில் நுழைத்து, புனித செயல்பாடுகளின் புனித தன்மையை கெடுக்காதீர்கள்.

அரசியல் வாதிகளுக்கு அரங்கம் அமைத்துக் கொடுத்து, ஆன்மீகத்தைக் கெடுக்கும் அசிங்கமான செயல்பாட்டைத் தவிர்த்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக!
சகோ.ரஸ்மின் MISC