சவூதியில் மன்மோகன் சிங்கிற்கு சிறப்பான வரவேற்பு!

ரியாத்: இந்திய பிரதமர்  மன்மோகன் சிங்  மூன்று நாள் பயணமாக இன்று சவூதி அரேபியா தலைநகர் ரியாத் சென்றடைந்தார். அவரை சவுதி பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஜிஸ் ரியாத் விமான நிலையத்தில் வரவேற்றார்.  கடந்த 28 ஆண்டுகளில் சவூதி அரேபியா செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1982ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சவூதி சென்றிருந்தார் அவருக்கு பின் எவரும் செல்லவில்லை.

பிரதமரின் இந்த பயணத்தின்போது  தீவிரவாதிகள் உள்ளிட்ட குற்றவாளிளை ஒப்படைப்பது தொடர்பான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட 11 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகவுள்ளது. பிரதமருடன் முகேஷ் அம்பானி, சசி ரூயா, ஆசிம் பிரேம்ஜி, டாடா தலைமை நிர்வாக அதிகாரி ராமதுரை உள்ளிட்ட தொழிலதிபர் குழுவும் செல்கிறது

நாளை மறுநாள் சவூதி அரேபிய ஷூரா கவுன்சிலில் உரை நிகழ்த்துகிறார் மன்மோகன் சிங்.  தனது சவூதி பயணத்தின்போது மன்னர் அப்துல்லாவை சந்திக்கிறார் பிரதமர். அப்போது இந்திய சவுதி இருதரப்பு உறவுகள் குறித்தும் பாகிஸ்தான், தலிபான் பிரச்சினை, பாலஸ்தீன பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் அவர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்துவார்

மேலும் பிரதமர் வெளிநாடு வாழ் இந்திய சமுதாயத்தவர்களையும் சந்தித்து பேச இருக்கிறார், மேலும் சவூதி இந்திய இருதரப்பு வர்த்தக உறவுகள் கடந்த 2008-09 ஆம் ஆண்டுகளில் 25 மில்லியன் அமெரிக்க டாலார்களுக்கு மேல் இருந்த்து என்பது குறிப்பிடதக்கது

தனது பயணம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவூதி அரேபியப் பயணம் சிறப்பான முக்கியத்துவம் கொண்டதாகும். இரு நாடுகளுக்கும் இடையே, பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி, மனித வளம், அறிவு சார் தொழில் துறை ஆகியவற்றில் புதிய வளர்ச்சி காண இந்தப் பயணம்  மிகவும் உதவும் என்றார்.

நன்றி:இந்நேரம்.காம்

டீசல், பெட்ரோல் விலை அதிகரிப்பால் பாதிப்பு : லாரி, ஆட்டோ, டாக்சி கட்டணங்கள் கிடுகிடு உயர்வு

Front page news and headlines today
சென்னை : பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பல மாநிலங்களில், லாரி, பஸ், ஆட்டோ, டாக்சி கட்டணங்கள், “கிடுகிடு’வென உயர்ந்துள்ளன. “சரக்கு போக்குவரத்துக் கான கட்டணத்தை உயர்த்துவது தவிர வேறு வழியில்லை’ என, தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம் கூறியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி, பெட் ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்குமாறு, மத்திய நிதியமைச் சர் பிரணாப் முகர்ஜியி டம் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை அறிவித்தார். உடனடியாக விலை உயர்வும் அமலுக்கு வந்தது. அதன் பாதிப்பு நேற்றே துவங்கிவிட்டது. விலை உயர்வை ஈடுகட்ட, சரக்கு போக்குவரத்துக்கான கட்டணத்தை உயர்த்தப் போவதாக, தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன் பொருளாளர் சென்னகேசவன் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த லாரிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்க, ஒரு கி.மீ.,க்கு 2.30 ரூபாய் சுங்க வரியாகச் செலுத்தப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன், டயர், டியூப் உட்பட உதிரிபாகங்களின் விலை 20 சதவீதம் அதிகரித்தது.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில், கனரக வாக னங்களுக்கான உற்பத்தி வரி 8லிருந்து 10 சதவீதமாகவும், பெட்ரோல், டீசல் விலை 2.75 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், நசிந்த நிலையில் உள்ள லாரி தொழிலில், மேலும் பாதிப்பு ஏற்படும். இது, லாரி தொழிலில் மட்டுமின்றி, அதை சார்ந் துள்ள பிற தொழில்களுக் கும் பாதிப்பு ஏற்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலை இழக்க வேண்டி வரும். இந்த விலை உயர்வை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில், சரக்கு கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு சென்னகேசவன் கூறினார்.

மதுரை லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சாத்தையா கூறியதாவது: வாகனங்களில் உபயோகப்படுத்தப்படும் பேட்டரி, உதிரி பாகங்களின் விலை 8 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், டயர் விலையும் உயரும். வேறு வழியின்றி, மார்ச் முதல் லாரி வாடகை கட்டணம் உயர்த்தப் படவுள்ளது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன், சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 5,856 ரூபாயாக இருந்தது. தற்போது, 3,744 ரூபாயாகக் குறைந்துள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம். இந்த விலை உயர்வு, ஏழை, நடுத்தர மக்களை நேரடியாக பாதிப்படையச் செய்யும். இவ்வாறு சாத்தையா கூறினார்.

லாரி வாடகை உயர்வை தொடர்ந்து, ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலையை உயர்த்த, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். டீசல் விலை உயர்வால், மாநில அரசு போக்கு வரத்துக் கழகங்கள், தனி யார் பஸ் உரிமையாளர் களும் மிகுந்த நஷ்டத்தை அடைய வேண்டியுள்ளது. எனவே, இவர்கள் நஷ்டத்தைக் குறைக்க, பஸ் கட்டணத்தை உயர்த்த, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கேரளாவில் ஸ்டிரைக்:கேரளாவிலும், டீசல் விலை உயர்வு காரணமாக, வரும் 2ம் தேதி தனியார் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் வேலை நிறுத்தம் அறிவித் துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகளையும், சாமானிய மக்களையும் கடுமையாக பாதிப்பதால், அவற்றுக் கான விலை உயர்வை வாபஸ் பெறுமாறு தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி:www.dinamalar.com

4 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு! ஆய்வறிக்கை

புதுதில்லி: நடப்பு நிதி ஆண்டில் சுமார் 4.34 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2009-10) ரூ. 70 ஆயிரம் கோடி நிதி வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம்  4.34  கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் 4.51 கோடி பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2009-10-ம் ஆண்டு பட்ஜெட்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ. 39,100 கோடி ஒதுக்கப்பட்டு டிசம்பர் மாதம் வரை ரூ. 24,758.50 கோடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 182.88 கோடி வேலை நாள்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் 29 சதவீத தாழ்த்தப்பட்ட பிரிவினரும் 22 சதவீத பழங்குடியின மக்களும் பலனடைந்துள்ளனர். 50 சதவீத பெண்கள் இத்திட்டம் மூலம்  பயனடைந்துள்ளனர்.

நன்றி:இந்நேரம்.காம்

ஓவியர் M.F.உசேனுக்கு கத்தார் நாட்டுக் குடியுரிமை இந்தியாவுக்கு அவமானம்!?

Imageஓவியர் எம்.எப். உசேனுக்கு கத்தார் நாட்டுக் குடியுரிமை சுதந்திரமாக நடமாடக்கூட அனுமதிக்காத இந்தியாவுக்கு அவமானம் : இந்தியாவின் முன்னணி ஓவியரான எம்.எப்.உசேனுக்கு கத்தார் நாடு குடியுரிமை வழங்கி கவுரவித்துள்ளது.

கத்தார் நாடு குடியுரிமை  வழங்கி இருப்பது குறித்து துபாயில் வசித்து  வரும் உசேன் தன் கைப்பட எழுதிய அறிவிப்பை சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அனுப்பி இருக்கிறார்.

இரட்டைக் குடியுரிமையை இந்தியா ஏற்றுக் கொள்ளாது. ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியக் குடிமகன் என்ற தகுதியை மட்டுமே இந்தியர் ஒருவர் பெறமுடியும். எனவே உசேன் பிறந்து, வளர்ந்து கொண்டாடப்பட்ட இந்திய மண்ணின் குடி உரிமையை அவர் துறக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கத்தார் நாட்டின் குடியுரிமை கோரி அந்நாட்டு அரசாங்கத்திடம் உசேன் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய ஓவியங்களின் சிறப்பை அறிந்த கத்தார் நாட்டு அரசு அவருக்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கி கவுரவிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

இந்து கடவுள்களை ஓவியம் மூலம் விமர்சித்ததால் அவருக்கு எதிராக இந்தியாவில் உள்ள சங்பரிவார் கும்பல் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கியது. இதனால் அவருக்கு எதிராக பல்வேறு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. அவர் வரைந்த ஓவியங்கள் கூட காவிக் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டன. அவருடைய ஓவியக் கண்காட்சியையும் பல்வேறு இடங்களில் சங்பரிவாரக் கும்பல் சீர்குலைத்தது.Image

இந்துத்துவா கும்பலின் தொடர் தொல்லைகளால் அவர் 2006 ஆம் ஆண்டு முதல் துபாயிலும், லண்டனிலும் மாறிமாறி வசித்து வருகிறார். இந்தியாவில் பிறந்த இந்தியக் குடிமகனான அவர், இந்தியாவைத் தவிர வேறு எந்த  உலக நாடுகளிலும் அவரால்  சுதந்திரமாக வலம் வரமுடிகிறது. ஆனால் இங்குள்ள இந்துத்துவா கும்பல் அவருடைய உயிருக்கு குறிவைத்து அலைவதால் அவரால், இந்தியாவில் நடமாடக் கூட முடியவில்லை.  அவருக்கு எதிராக இந்திய நீதிமன்றங்களில் 900-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் உசேனை, இந்தியாவுக்கு  மீண்டும் திரும்ப வரவழைத்து காவிக்கும்பலிடமிருந்து காப்பாற்றி அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க  இந்திய அரசின் நிர்வாகத்திற்கு ஆண்மை இல்லை.  இந்தியாவின் பாஜக, காங்கிரசு கூட்டணி ஆட்சிகள் இரண்டுமே உசேனின் கருத்துச் சுதந்திரத்தைக்  காப்பாற்ற  எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கவில்ல்லை என்பதுதான் உண்மை.

உசேனுக்கு எதிரான  சங்பரிவாரின் தொல்லைகள் 1996 முதல்  தொடங்கிவிட்டன. 1970-களில் அவர் வரைந்த ஓவியங்களை இந்தி மொழி பத்திரிகை 1996-ல் வெளியிட்டது. இந்த ஓவியம் இந்துக் கடவுளை அவமதிப்பதாக அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஓவியத்தின் மூலம் இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாக இந்துத்துவாவாதிகள் எதிர்க் கூச்சலிட்டனர். அன்றுமுதல் காவிக்கூட்டம்  உசேனை தொடர்ந்து துரத்தி வருகிறது. இந்தியாவின் கலாசார மதிப்புகளை தூக்கிப் பிடிப்பதில் யாருக்கும் குறையில்லாத எம்.எப்.உசேனுக்கு இந்தியாவில் நிம்மதியாக வாழக்கூட முடியாத நிலை. இதனால்தான் வேறுவழி தெரியாத அவர் வெளிநாட்டில் அடைக்கலம் புகுந்தார். மதசார்பற்ற இந்தியக் குடியரசு  தேசம் அவருடைய கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும் அவருடைய  உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும்  எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதுதான் இந்த தேசத்தின் படைப்புச் சுதந்திரமும், படைப்பாளியின் பாதுகாப்பு முறையும்?   மத ரீதியாக எழுந்துள்ள உசேன் விவகாரத்தில் மதசார்பற்ற இந்திய தேசத்தின் அணுகுமுறை வெட்கக் கேடான ஒன்றே என்பதில் எவ்வித ஒளிவுமறைவுமில்லை.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம்  தாமதமாக தலையிட்டும் கூட  எம்.எப்.உசேனின் கருத்துச் சுதந்திரம் காப்பாற்றப்படுவதில் எவ்வித  முன்னேற்றமும் இல்லை.

Imageகோயில்களிலும், கஜூரோ சிற்பங்களிலும் வடிக்கப்பட்டுள்ள  ஆபாசமான பாலியல் ரீதியான ஓவியங்கள் வணங்கப்படும் நிலையில், இந்து  கடவுளை உசேனின்  ஓவியங்கள் ஆபாசமாக சித்தரிப்பதாக காவிக்கும்பல்  கூக்குரலிட்டு வருகிறது. இதனால் மதசார்பற்ற நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் அவரால் சுதந்திரமாக தமது கருத்துகளை வெளியிடவும், நடமாட முடியாத நிலையும் உள்ளது.

Imageஇந்நிலையில் 95 வயதான உசேன், துபாயில் தங்கி ஓவியங்கள் வரைந்து வருகிறார். தற்போது வியாபார நோக்கில் அவர் ஓவியங்கள் வரையாமல், இந்திய மற்றும் அரேபிய கலாசாரத் தொடர்புகள் குறித்த ஓவியங்களை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளார். உசேனின்   சிந்தனை வளமிக்க ஓவியம் பற்றி அறிந்த  அய்க்கிய அமீரகத்தின் கத்தார் நாட்டு முதல் பெண்மணியும், அதிபரின் மனைவியுமான ஷேக் மோஷா,  உசேனினின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த ஓவியங்களுக்கு மதிப்பளிக்க முன்வந்துள்ளார். இரு நாட்டு கலாசார உறவுகள் தொடர்பாக உசேனால்  வரையப்படும் ஓவியங்கள்,  தோஹா நகரில் உள்ள தனி அருங்காட்சியகத்தில் வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனை அடுத்து கத்தார் தேசம், உசேனுக்கு குடியுரிமை வழங்கி கவுரவிப்பதாகவும் அறிவித்துள்ளது. அந்நாடு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது என்பது மிகவும் அபூர்வம். ஆனால் எம்.எப்.உசேனுக்கு அந்த  உயரிய மரியாதை வழங்க அத்தேசம் முன்வந்துள்ளது.  அதேவேளை ஒரு மிகச்சிறந்த சிந்தனை வளம் கொண்ட  ஓர்  ஓவியரை இந்த தேசத்தில் சுதந்திரமாகக் கூட நடமாட முடியாமல்  செய்திருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் வருத்தம் தரக்கூடிய ஒன்றே. இந்த நாள் இந்தியாவின் துயரம் நிறைந்த நாளே.

நன்றி: http://www.adhikaalai.com

இரயில்வே பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்.

மத்திய இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, 2010-2011ஆம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட்டை இன்று (24-02-2010) தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* மேலும் 10 துரந்தோ ரயில்கள் அறிமுகம்
* பெண் பயணிகள் பாதுகாப்பு அதிகரிப்படும்.
* 93 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்.
* 21 ரயில் மார்க்கங்களின் தூரம் நீட்டிக்கப்படும்.
* விளையாட்டு வீரர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும்.
*  2011 நிதி ஆண்டில் புதிதாக 54 ரயில்கள் இயக்கப்படும்.

*  வரும் நிதி ஆண்டிற்குள் மேலும் 117 ரயில்கள் இயக்கப்படும்.
* ஒரே ஆண்டில் 1000 கி.மீ., இரயில் பாதைகள் அமைக்கப்படும்.
* 16 வழித்தடங்களில் புதிதாக 16 சுற்றுலா ரயில்கள் இயக்கப்படும்.
* மும்பைக்கு புதிதாக 101 புறநகர் ரயில் நிலையங்கள் இயக்கப்படும்.
* காமன்வெல்த் 2010 போட்டிகளுக்காக சிறப்பு ரயில்கள் இ‌யக்கப்படும்.
* மேலும் பல மேம்படுத்தப்‌பட்ட சரக்கு காப்பகங்கள் உருவாக்கப்படும்.
* ஏ.சி., வகுப்பு சேவை கட்டணம் ரூ. 40ல் இருந்து ரூ. 20 ஆக குறைப்பு.
* ஐ.ஐ.டி., காரக்பூரில் ரயில்வே துறை குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* ரயில்வே பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுவர்.
* சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை நவீனமயமாக்கப்படும்.
* பயணிகள் அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்த 1300 கோடி ஒதுக்கப்படுகிறது.
* மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் ரயில் டிக்கட் கவுன்டர் அமைக்கப்படும்.
* செகந்தரபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் விளையாட்டு அகடமிகள் தொடங்கப்படுகின்றன.
* ரயில் பெட்டிகள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பரிசோதனை நிலையம் பெங்களூருவில் அமைக்கப்படும்.
* உணவு தானியம் மற்றும் மண்ணெண்ணெய் ஏற்றி செல்லும் சரக்கு ரயில்களுக்கு சரக்கு கட்டணம் குறைப்பு.
* ரயில்வே பெண் ஊழியர்கள் வசதிக்காக அவர்கள் குழந்தைகளுக்கென பாதுகாப்புமையங்கள் அமைக்கப்படும்.
* ரயில்வே துறைக்காக குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அம்பாலா, திருவனந்தபுரம், அமேதி, நாசிக் உள்ளிட்ட 6 இடங்களில் தொடங்கப்படும்.
* ரவீந்தரநாத் ‌தாகூரின் 150வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பாரத் தீர்தா என்ற பெயரில் நாட்டின் அனைதது முக்கிய யாத்திரை இடங்களுக்கும் ரயில் விடப்படும்.
* அடுத்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகத்துடன் இணைந்து வீடு கட்டித்தரப்படும்.
* மொபைல், இ. டிக்கெட் சேவையை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகிய இடங்களில் பெற ஏற்பாடு செய்யப்படும்.

நைஜீரிய ஜனாதிபதியாக ஜொனதனே தொடர்வார்

நைஜீரிய அதிபர் உமர் யார் அடுவா

நைஜீரியாவின் ஜனாதிபதி உமர் யார் அடுவா சவுதி அரேபிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நாடு திரும்பிய நிலையிலும் அந்த நாட்டின் துணை அதிபர் குட்லக் ஜோனாதன் தொடர்ந்து நாட்டை வழி நடத்திச் செல்லுவார் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

யார் அடுவாவின் உடல் நிலை மிகவும் மேம்பட்டுள்ளதாக கூறிய ஜனாதிபதியின் பேச்சாளர், ஐனாதிபதிக்கு சிகிச்சைக்கு பின்னான ஒய்வு தொடர்ந்து தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இருதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு ஜீட்டாவில் உள்ள மருத்துவமனையில் மூன்றுமாத காலம் சிகிச்சை பெற்ற பிறகு இன்று அதிகாலை விமானம் மூலம் ஜனாதிபதி தலைநகர் அபூஜா திரும்பினார்.

யார் அடுவா அவர்களுக்கு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெளிவாகவில்லை என்று அபூஜாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

நன்றி:

http://www.worldservice.com/tamil

பிரசவத்தின்போது…அபராசிதன்

ஒரு பெண்ணிற்கு வாழ்வின் முக்கிய கட்டம் எதுவென்றால், அவள் குழந்தை பெற்றுக்கொள்ளும் அந்த தருணத்தைக் குறிப்பிடலாம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்றும் அந்த நிமிடங்களை அவளால் என்றுமே மறக்க முடியாது. தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களை, கிராமப்புறங்களில் ‘பெற்றுப் பிழைத்தவள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பிரசவ நேரத்தில் அப்படி என்னதான் நடக்கிறது? பிரசவ நேரத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன? என்பதைக் கீழே காணலாம்.

  • தயாராகுங்கள்


மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் ஊட்ட வசதியாக முன்பக்கம் திறப்பு வைத்த உடை, நீண்ட கவுன் போன்ற மாற்று உடைகள், காலணிகள், குழந்தைக்குத் தேவையான துணிகள், ஈரம் உறிஞ்சும் துண்டுகள் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஏற்கனவே உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும். அதேபோல் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் தேவையான உடைகள், சோப்புகள், நாப்பிகள், துப்புரவுத் துணிகள் போன்றவற்றை தயாராக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்களோ, உங்களை கவனித்துக் கொள்பவரோ கடைக்குச் செல்ல முடியாத நிலையில் இவை கைகொடுக்கும்.

உங்கள் மருத்துவர், மருத்துவமனை, கணவர், நண்பர், அவசரத்திற்கு கூப்பிட்டால் ஓடிவரும் உறவினர்கள் போன்றோரின் செல் நம்பர்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவசர நேரத்தில் அவர்களை அழைப்பதற்கு உதவியாக இருக்கும். பிரசவத்தின்போது மருத்துவமனைக்குச் செல்லும் வாகன ஏற்பாட்டையும் தயார் செய்து கொள்ளுங்கள்.

  • பிரசவத்தின் இறுதி நேரம்


முதன்முறையாக குழந்தை பெறும்போது பிரசவ நேரம் பொதுவாக சுமார் பதிமூன்று முதல் பதினான்கு மணி நேரமும், ஏற்கனவே குழந்தை பெற்றிருந்தால் சுமார் எட்டு முதல் ஒன்பது மணி நேரமும் நீடிக்கும். கர்ப்பகாலம் முழுவதும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து பிரசவத்திற்குத் தயாராகும்.  கர்ப்பத்தின் கடைசிக் காலத்தில் இந்த சுருக்கங்கள் அடிக்கடி நிகழும். தொடக்கத்தில் மிகக்குறைந்த அளவிலான தசைச் சுருக்கங்களே காணப்படும். ஒவ்வொரு சுருக்கத்திற்கும் சிறிது இடைவெளி இருக்கும். படிப்படியாக சுருக்கங்கள் அதிகமாகி, அடிக்கடி வரத் தொடங்கும். இந்த நேரத்தில் ஏற்படும் வலி சற்று அதிகமாவே இருக்கும். இதுதான் பிரசவம் நிகழப்போகும் நேரம்.

பிரசவ வலி எப்போது எடுக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. அதிகமாக வலி எடுத்தால் சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளை குளிப்பாட்டுவர். இளஞ்சூடான நீரில் குளித்தால் ஆரம்பகால பிரசவ வேதனையை சற்று தணிக்கும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள். தாங்க முடியாத வலி ஏற்படும்போது சில குறிப்பிட்ட வலி நிவாரணிகளை மருத்துவர் தருவார். பேறு காலத்தில் ஏற்படும் வேதனையை நினைத்து கவலைப்படுவதால் வலி அதிகரிக்கும். எனவே, வலியைக் குறைக்க மூச்சுப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சுவாசிக்கும்போது மார்பகச்சுவர் விரிவடைந்து, உதரவிதானம் அதிகளவு கீழ் இறங்குவதுதான் முழுமையான சுவாசம். நீங்கள் சரியான வழியில் சுவாசித்தால் குழந்தைப்பேற்றின்போது மிகச்சுலபமாக குழந்தை வெளித்தள்ளப்படும்.

பிரசவ வலி துவங்கும்போதோ அல்லது பிரசவத்தின் முதற்கட்டத்திலேயோ, கருப்பைக் கழுத்துப் பகுதியிலிருந்து கோழையானது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதற்கு ‘பிரசவத்திற்கு முன்னான கோழைக்கசிவு’ என்று பெயர். இது பசைத்தன்மையுடன் இளஞ்சிவப்பு நிறமான சளியாக இருக்கும். பிரசவ வலிக்கு முன்னர் ஏற்படும் இந்தக் கசிவின்போது, சளியுடன் கலந்து சிறிது ரத்தமும் வெளியேறும். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். பிரசவ வலி ஆரம்பித்தவுடன் குழந்தை மிதந்து கொண்டிருக்கிற பனிக்குடம் உடைந்து விடும். இந்த பனிக்குட நீர் உங்களின் பிறப்புறுப்பு வழியாக தாரைதாரையாக வெளியேறும்.

மருத்துவர் உங்களுடைய நாடித்துடிப்பு, உடல் வெப்பம், ரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதிப்பார். உங்கள் அடிவயிற்றைத் தொட்டு குழந்தையின் கிடைநிலை, இதயத்துடிப்பு ஆகியவற்றையும் கண்டறிவார். பிரசவத்தில் மொத்தம் இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் கருப்பைக் கழுத்து படிப்படியாக விரிகிறது. அப்போது தசை சுருங்கி விரியும் நிலை தீவிரமாகும். வலி அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறை தசைச்சுருக்கம் வரும்போதும் கருவை உந்தி வெளியே தள்ள வேண்டும் என நினைப்பீர்கள். கருப்பைக் கழுத்து முற்றிலுமாகத் திறந்து குழந்தையின் கழுத்து வெளியே தெரியும் வரை முக்கக்கூடாது. கர்ப்பிணிகளுக்கு இந்த நேரத்தில் மன உளைச்சலும், அயர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

இரண்டாவது நிலை 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை கூட நீடிப்பதுண்டு. கருப்பை தசைச்சுருக்கம் அதிகமாகி, குழந்தையைப் பிடுங்கி வெளியே போட்டுவிடலாமா என்று எண்ணக்கூடிய நிலையை கர்ப்பிணிகளுக்கு ஏற்படுத்திவிடும். கருப்பை வாய் போதுமான அளவு அகலமாகத் திறந்தவுடன், தசைச்சுருக்கங்கள் தங்கள் இயல்பு நிலையை மாற்றிக்கொண்டு அதிவேகத்தோடு இயங்கும். ஒவ்வொரு சுருக்கத்திற்குப் பிறகும் கருப்பையின் தசைநார்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறுகத் தொடங்கும். இதனால் குழந்தை யோனிக்குள் தள்ளப்படுகிறது.

யோனித்திறப்பில் குழந்தையின் தலை அரைப்பாகம் தெரிய ஆரம்பித்த உடனேயே வாயால் காற்றை உள்ளிழுத்து வேகமாக, அதேசமயம் நேர்த்தியாக முக்க வேண்டும். இல்லையென்றால் தசைகளும், திசுக்களும் கிழிந்து போக வாய்ப்பு ஏற்படும். தலை வெளியே வந்ததும், அடுத்தடுத்த முக்குதல்கள் மூலம் எஞ்சியுள்ள உடற்பகுதிகள் சுலபமாக வெளியே வந்துவிடும். குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை அறுத்துவிட்டு குழந்தையை சுத்தம் செய்வர். பின்னர் எடை, உயரம் போன்றவற்றைக் கணக்கிடுவார்கள். குழந்தைநல மருத்துவர் வந்து குழந்தையை பரிசோதித்து குறிப்பு எழுதி வைப்பார்.

சில சமயங்களில் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள். எல்லா நேரங்களிலும் சிசேரியன் செய்ய வேண்டிய அவசியமில்லை. பனிக்குடத்தில் அதிக நீர் இருத்தல், கருப்பைக் கோளாறுகள், பிரசவத்தின்போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, குழந்தை தடம் மாறியிருத்தல், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படுதல்  போன்ற சிக்கலான நேரங்களில் மட்டுமே சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. மயக்கமருந்து  கொடுத்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்படும்.

நன்றி:pularimgz.blogspot.com

ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு : மசோதா தாக்கல்

புதுடில்லி :ஊழலை வெளிப்படுத்துபவர்களை பாதுகாப்பதற்கான சட்டம், வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரில், சில ஆண்டுகளுக்கு முன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிய, சாலை பணிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடுகளை சத்யேந்திர துபே என்ற இன்ஜினியர், வெளிப்படுத்தினார்.

11112866

இதையடுத்து, அவர் கொல்லப்பட்டார். இது போன்று பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. எனவே, ஊழலை வெளிப்படுத்துபவர்களை பாதுகாக்க தீர்மானம் கொண்டு வர சுப்ரீம் கோர்ட், கடந்த 2004ம் ஆண்டு பரிந்துரை செய்தது. இதையடுத்து, ஊழலை வெளிப்படுத்துபவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக, மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில், மேம்படுத்தப்பட்ட அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், சட்டம் கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் ஈடுபடுவர்.

இதுகுறித்து, பணி நியமனம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு துறை இணையமைச்சர் பிரித்விராஜ் சவான் கூறியதாவது:அமைச்சர் அந்தோணி தலைமையிலான மேம்படுத்தப்பட்ட அமைச்சர்கள் குழு, விரைவில் கொண்டு வரப்பட உள்ள மசோதாவில் காணப்படும் விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்வர். “பொது மக்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பவர்கள் பாதுகாப்பு மசோதா’, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட உள்ளது.இவ்வாறு பிரித்விராஜ் சவான் கூறினார்.

நன்றி: stopbribe.blogspot.com

சவூதி அரேபியா வாழ் அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

சவூதிஅரேபியா வாழ் வெளிநாட்டினர்கள் அவர்களின் அரசாங்கம் சார்ந்த கீழ்க்கண்ட தகவல்களை அறிய சவூதி அரேபிய அரசின் உள்விவகாரதுறை அமைச்சகம் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்;

உங்கள் குடும்பத்தினர்களின் விசா வரவு மற்றும் வெளியேற்றம் அறிய வேண்டுமா?
உங்களுக்கு இந்த வருடம் ஹஜ் செய்வதற்கு அனுமதியுள்ளதா / தகுதிபெற்றவரா?
உங்களின் சுகாதார அட்டை புதுப்பிக்கப் பட்டுள்ளதா?
உங்களுடைய ஆதரவில் வேலை செய்பவர்களின் குடியரசு அட்டை நிலை என்ன?
உங்களின் குடியரசு அட்டை (இக்காமா) நிலை என்ன?
உங்களின் விசா நிலை என்ன? (Exit / Re-Entry)
உங்களின் கைரேகை எடுக்கப்பட்டு அது அங்கீகரிக்கப் பட்டுவிட்டதா?
உங்களுக்கு போக்குவரத்து துறையின் அபராதம் உள்ளதா?
உங்கள் வாகனத்திற்கு எதுவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?
இதுபோன்ற தகவல்களையும், மேலும் தகவல்களையும் பெற…

http://www.moi. gov.sa/wps/ portal

என்ற மேலேயுள்ள சுட்டியை அழுத்தி, E-Services Tab என்ற பகுதியை அழுத்தி ”Passports” என்ற தலைப்பை அழுத்துங்கள்.


நாம் எதிர்பாராமல் திடீரென்று பயணம் செல்ல நேரலாம், மேலேயுள்ள எதாவது ஒன்றின் தடங்கலால் உங்கள் பயணம் செல்லமுடியால் ஆகலாம். எனவே இன்றே இவைகளை சரிபார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் கடவுச்சீட்டு (Passport) கலாவதியாகியிருந்து நீங்கள் அவசரமாக பெறவேண்டியிருந்தால் “தட்கல்” என்ற அவசரமுறையில் இந்தியத் தூதரகத்தை அனுகினால் தருவார்கள் அவர்களின் இணையதள முகவரி

http://www.indianem bassy.org. sa
(Tatkal service for issue of passport is also available)

”பிரச்னைகள் வருமுன் காப்போம்”.

உங்களுக்கு தெரிந்த சவூதிவாழ் அன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Thanks and Regards,
B. ASHRAF KHAN
hp – Service Center
Nahil Computer Co.
Riyadh, K.S.A

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம். மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் வாசகர்கள் கவனத்தில் கொள்க!

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?

தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?

இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

‘மவ்லித்’ என்பதின் பொருள்

‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் :

மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?

மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர்,தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

ஆஹா மெகா ஆஃபர்

உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுயைக பாதுகாப்பு பெற வருடத்தில் ஒருமாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.

மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி

மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.

”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன? என்று கூறுவதை பாருங்கள் : நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்,(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(23 : 1-11)

செலவு செய்யும் முறை

நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : ”உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்ய விரும்புவேன்” என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஆனால் திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள்

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)

மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?

”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

அமுத சுரபி மவ்லித்

அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம்.
”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார்.மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி

எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித்.
”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள்,ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான் மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4 : 19)

மலக்குகளின் வருகை

”எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் : அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும் மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.’ அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார்,மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.

ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

தொகுப்பு:-எம்.ஐ சுலைமான்

tntj.net என்ற தளத்திலிருந்து…