
நவம்பர் 26, 2005 அன்று குஜராத்தில் சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கவுஸர்பீவி ஆகியோர் என்கவுண்டர் என்ற மோதல் சாவில் கொல்லப்பட்டதாக குஜராத் காவல்துறையினர் அறிவித்தனர். இந்த சம்பவத்தை முதலில் குஜராத் சி.ஐ.டி. துறையும் பிறகு குஜராத் ஏ.டி.எஸ்.சும் விசாரித்தனர். பிறகு உச்சநீதிமன்ற தலையீடு காரணமாக மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ) இந்த வழக்கை விசாரித்து குஜராத் மாநில உயர் காவல்துறை ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்ஜாரா, ராஜ்குமார் பாண்டியன் மற்றும் திலீப் குமார் உட்பட 14 காவல்துறை அதிகாரிகளை கைதுச் செய்தது. இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விசாரணையின் போது பல சாட்சிகள் சோராபுதீன் காவல்துறையை நோக்கி சுடவில்லை என்று குஜராத் காவல்துறையின் கட்டுக் கதையை அம்பலப்படுத்தி வருகின்றார்கள். இந்த வரிசையில் தடய அறிவியல் அலுவலர் ஒருவரும் தனது சாட்சியத்தில் காவல்துறையினரை நோக்கி சோராபுதீன் சுடவில்லை என்று சாட்சியம் அளித்துள்ளார்.
சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவரது ஆடைகள் மற்றும் கைகள் தொடர்பான தடயங்களை ஐ.பி.எஸ். அதிகாரி வன்ஜாரா காந்திநகரில் உள்ள தடய அறிவியல் நிறுவனத்திடம் ஒப்படைத்தார். இந்த தடயங்களை ஆய்வுச் செய்த பிறகு தடய அறிவியல் நிபுணர் எஸ்.பி. பட்ரிவாலா நீதிமன்றத்திற்கு அளித்துள்ளா அறிக்கையில் சோராபுதீன் கை தடயங்களில் நைட்ரேட்டோ அல்லது ஈயமோ இருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கியை ஒருவர் பயன்படுத்தும் போது அவரது கைகளில் நைட்ரேட் அல்லது ஈயத்தின் தடயங்கள் நிச்சயமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள் என்றும் ஆனால் சோராபுதீன் கைககளில் இந்த உலோகங்களின் தடயங்கள் இல்லாதது அவர் மோதலின் போது காவல்துறையை நோக்கி சுட்டார் என்ற வாதம் தவிடுபொடியாகிவிட்டது என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கின்றது.
சோராபுதீன் உடலில் உள்ள குண்டு காயங்கள் அவர் சம்பவம் நடைபெற்ற போது அணிந்திருந்த சட்டையில் உள்ள துளைகளுடன் ஒப்பிடவில்லை என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு தடய அறிவியல் நிறுவனத்தின் ஆவணம் தெரிவிக்கின்றது.உடலில் உள்ள காயங்களுடன் சட்டடையில் உள்ள ஒட்டைகள் ஒத்துப் போக வேண்டும். ஆனால் சோரபுதீன் சம்பவத்தில் அவ்வாறு அமையவில்லை.
அஹ்மதாபாத்திற்கு வெளியில் இரு சக்கர வாகனத்தில் வந்த சோரபுதீனை தாங்கள் வழிமறித்த போது சறுக்கி அவர் விழுந்ததாக குஜராத் ஏ.டி.எஸ்.காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறினர். ஆனால் தடய அறிவியல் துறை நிறுவனத்தின் அறிக்கையில் நின்று கொண்டிருந்த நிலையில் அவர் சுடப்பட்டதாக தெரிவிக்கின்றது. ஏ.டி.எஸ். தரப்பு அறிக்கை உண்மை எனில் சோராபுதீனின் உடலில் சிராய்ப்புகள் இருந்திருக்கும் என்றும் ஆனால் அப்படி எதுவும் அவரது உடலில் இல்லை என்றும் தடய அறிவியல் துறையின் அறிக்கை தெரிவிக்கின்றது. சோராபுதீன் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை தடய அறிவியல் துறை ஆய்வுச் செய்த போது அதில் சாதாரண உரசல்கள் தான் இருந்ததாக அத்துறை கூறுகின்றது.
அப்பாவி சோரபுதீனை சுட்டுக் கொன்ற வன்ஜாரா தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் மீது பிடி இறுக்கி வருகின்றது. நியாயம் பிறக்கட்டும். நீதி மலரட்டும்
tmmk
Filed under: பொதுவானவை | Tagged: சோரபுதீன்-என்கவுண்டர்-க | Leave a comment »