பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை விற்ற இந்திய பெண் தூதரக அதிகாரி கைது .

Masjid Wazir Khan by HsnAli.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய பெண் தூதரக அதிகாரி கைது!

டெல்லி: நாட்டின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்று வந்த இந்திய பெண் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த மாதுரி குப்தா (53) என்ற அந்த ஐபிஎஸ் அதிகாரி, பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடஙகளாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார். அவரை கண்காணித்து வந்த இந்திய உளவுப் பிரிவினர் இப்போது அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய ‘ரா’ உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மா மீதும் சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடமும் இந்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இது குறித்து உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறுகையில், இஸ்லாபாத்தில் உள்ள ரா பிரிவுத் தலைவரிடமிருந்து தகவல்களைப் பெற்று அதை பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு மாதுரி குப்தா வழங்கி வந்துள்ளார்.

அவர் எந்த வகையான தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால், பாதுகாப்பு தொடர்பாக ரகசிய தகவல்களை பாகி்ஸ்தானுக்கு விற்று வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்பியுள்ள மாதுரி குப்தா, கோலாலம்பூர் உள்பட சில நாடுகளிலும் பணியில் இருந்துள்ளார்.

மாதுரி குப்தாவை கடந்த 2 வருடமாக கண்காணித்து வந்தனர். அவர் தவறு செய்தது உறுதியானதையடுத்து இரு நாட்களுக்கு முன் பணி நிமித்தமாக என்று கூறி டெல்லிககு வரவழைத்து இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Read: In English

அவரிடம் ரா, ஐபி மற்றும் டெல்லி உளவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து நீதிமன்றத்தில் ரகசியமாக ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரி்க்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!

Tamil news paper, Tamil daily news  paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political  news, business news, financial news, sports news, today news, India  news, world news, daily news update


அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ‘ பார்க்கும்’ வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி ‘ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ‘ ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது. இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் , பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள். அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.

dinakaran

டி.வி., ரியாலிட்டி ஷோவில் நிர்வாண நடனத்தால் பரபரப்பு


Obscene dance in Tv reality show

டி.வி.,க்களில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதும், ஆட்டம் போடும் பெண்களை ஆபாசமாக வர்ணிப்பதும் டி.வி., சேனல்களுக்கு புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முளைத்து, இன்று விஸ்வரூபமாக வளர்ந்திருக்கும் இந்த புது கலாச்சாரத்தில் சமீபகாலமாக குழந்தைகளும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் சினிமா திரையில் தோன்றும் கவர்ச்சி நடிகைக்கு நிகராக குழந்தைகளை மேடையில் ஆட விட்டு ரசிக்கிறார்கள். இந்த விவகாரம்தான் இப்போது ஆந்திர சின்னத்திரை வட்டாரத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளை அரை நிர்வாண ஆட்டம் போட வைக்கும் தனியார் டி.வி., சேனல்கள் மீது ஆந்திராவை சேர்ந்த சமூக சேவகி ஒருவர் மனித உரிம‌ை கமிஷனில் புகார் செய்தார். அதில், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனியார் டி.வி.க்கள் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட வைக்கின்றனர். இது பிஞ்சு உள்ளங்கள் மனதில் விஷ கலாசாரத்தை பரப்புவதாக உள்ளது. தனியார் டி.வி.க்கள் தங்களது நிகழ்ச்சியை பிரபலப்படுத்த எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அதை விட்டுவிட்டு குழந்தைகளை அலங்கோலமாக்கி ஆட வைப்பது நல்லதல்ல. இது அந்த சிறுமிகளின் எதிர் காலத்தை கடுமையாக பாதிக்கும். பெற்றோர்களும் டி.வி. சானல்கள் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் குழந்தைகளை ஆட விடுகிறார்கள். எனவே குழந்தைகளை நிர்வாணமாக ஆட விடும் டி.வி.சானல் உரிமையாளர்கள், பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

சின்னத்திரை உலகத்தையே பரபரக்க வைத்த இந்த புகார் குறித்து ஆந்திர மனித உரிமை கமிஷனர் சுபாஷன் ரெட்டி விசாரித்தார். அப்போது அரை நிர்வாண நடனம் ஆடிய குழந்தைகளின் பெற்றோர் மற்றும் டி.வி., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது சுபாஷன் ரெட்டி கூறுகையில், டி.வி., சானல்களில் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட விடுவது குற்றமாகும். இது நம் நாட்டின் கலாசாரத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது. குழந்தைகளை வலுக்கட்டாயமாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் பெற்றோர் ஆட விடக்கூடாது. இது குழந்தைகளின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இனியும் பெற்றோரும், டி.வி. சேனல் நிர்வாகிகளும் குழந்தைகளை அலங்கோலப்படுத்தி ஆடவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரத்தில் திருந்த வேண்டியது தனியார் டி.வி., சேனல்களா அல்லது டி.வி., மோகத்தால் குழந்தைகளை அரைகுறை ஆடையுடன் ஆபாச ஆட்டம் போடவைக்கும் பெற்றோர்களா?

dinamalar

இந்திய தருதலை ஜமாஅத்

நான் தவ்ஹீத் வாதியல்ல எனக்கு எம்மதமும் சம்மதமே

25-4-2010 தினகரன் நெல்லை பதிப்பில் வெளியான செய்தி இது. சிலை திறக்கும் தேவநாதன் பக்கத்தில் இருப்பது யார் தெரிகின்றதா? ”நபிகள் நாயகத்திற்கு சிலை வைக்காத சமுதாயமடா இது” என மேடைகளில் அக்ரோஷமாய் வீர வசனம் பேசிய அதே பாக்கர் தான்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!

யார் இவர்?

இவருடைய கொள்கை என்ன?

இவரின் தற்போதைய நிலை என்ன?

புரிந்து கொள்ள முடிகிறதா?

இவர்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற ஓர் உன்னதமான ஜமாத்தால் ஒழுக்கம் கெட்டவர் என்றும்,மக்கள் பணத்தை மேசடி செய்தவர் என்றும் நிரூபிக்கப் பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஜமாத்தின் அடிப்படை உருப்பினர் அந்தஸ்து கூட இல்லை என்று கூறி ஜமாத்தை விட்டு நீக்கப் பட்ட பாக்கர் என்ற பூசாரி.
இவரை ஜமாத் நீக்கம் செய்த உடன் மக்களிடம் தான் ஒரு யோக்கியன் என்றும் தான் உத்தமன் என்றும் கூறித்திரிந்தார் ஆனால் இவர் யார் என்பதை இவரே பல முறை மக்கள் மன்றத்தில் நிரூபித்தும் இருக்கிறார்.


இறுதியாக யாதவர் சமுதாயத்தினருடன் சேர்ந்து சிலைத் திறப்பு விழாவில் பங்கெடுத்து தான் ஒரு எம்மதமும் சம்மதம் என்ற கருத்தில் உள்ளவன்தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
சிலை வணக்கத்தை வேரடி மண்ணோடு புதைக்க வந்த மார்க்கமாம் இஸ்லாத்தில் இருந்து கொண்டு அழகு முத்துக்கோன் சிலை திறப்பு விழாவுக்கு செல்கின்ற பாக்கர் போன்ற நபர்களை இன்னும் தவ்ஹீத்வாதிகளென்றும் ஏகத்துவவாதிகள் என்றும் நம்பும் சகோதர சகோதரிகளே உங்களின் பகுத்தறிவை கொஞ்சம் பயன்படுத்தி சிந்தித்து பாருங்கள். இந்த இலட்சணத்தில் இருந்து கொண்டு பாக்கர் போன்றவர்கள் பிற மத சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்கிறார்களாம்.
rasminmisc

தேநீர்’… சில உண்மை!

`டீ` எனப்படும் `தேநீர்` நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. நாம் பொதுவாக `சுறுசுறுப்பு பானமாக` அறிந்த டீ, பல விசேஷமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பது தேநீர்ப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

நாம் அன்றாடம் பருகும் `தேயிலை டீ` தவிர பல்வேறு வகையான டீக்கள் உண்டு. அவற்றின் மகத்துவங்கள் இங்கே…

* சூடான லவங்கப்பட்டை டீ, பெண்க ளுக்கு அற்புதம் நிகழ்த்தும். இது மனஅழுத் தத்துக்கு நல்லது. தளர்விலிருந்து உடம்பு விடுபட்டுச் சுதந்திரமாக உணர உதவும். மேலும், சுவாசம், செரிமானம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கும் உதவுகிறது.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு `மசாலா டீ`யும், `சிலோன் டீ`யும் இதமளிக்கும்.

`கிரீன் டீ`யில் உள்ள `பாலிபினால்கள்` அல்லது `பிளேவனாய்டுகள்` ஒட்டுமொத்த உடல்நலத் துக்கு நல்லது. குறிப்பாக புற்றுநோய் வராமல் தடுப்பதில். புற்றுநோய் போன்ற ஆபத்து களுக்குக் காரணம், செல்களின் சிதைவாகும். அதைத் தடுக்கும் பணியில் டீயில் உள்ள `ஆன்டிஆக்சிடன்ட்கள்` உதவுகின்றன.

* `மூலிகை டீ`யில் `டேனின்` இல்லை. எனவே நெருக்கடியான வாரம் அல்லது அதிகமான அழுத்தங்களின்போது மூலிகை டீ அருந்த லாம். மூலிகை டீயில் தேர்ந்தெடுப்பதற்கு அதிக வகைகள் உள்ளன என்பதும் மகிழ்ச் சிக்குரிய செய்தி.

* `இஞ்சி டீ` கொஞ்சம் காரசாரமாக இருந்தாலுமë, இதமான உணர்வைக் கொடுக்கும். பசியைத் தூண்டும். வாந்தி உணர்வைத் தடுக்கும். அதிகமாகப் புத்துணர்வு அளிக்கும்- குறிப்பாகப் பெண்களுக்கு.

* `அஸ்வகந்தா டீ` மனநிலையை உயர்த்தும், மனதுக்கும் உடம்புக்கும் ஓர் துடிப்பை ஏற்படுத்தும். தவிர நல்ல பலத்தைக் கொடுப்பதுடன், நோய்கள், கட்டிகள், ஞாபக இழப்பு ஆகியவற்றைத் தடுக்கும். மனநிலைக்கு ஊக்க சக்தி அளிக்கும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.

* டீயுடன் `ஸ்வீட் ரூட்` அல்லது `லீகோரைஸை` சேர்த்தால் வழுக்கை, பொடுகு, பற்சிதைவு, தொண்டைப் புண், காசநோய், உடம்பு துர்நாற்றம், மனஅழுத்தம், சோர்வு, தூக்கமில்லாமை, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகளைக் குறைக்கும்.

* ஏலக்காய் டீயை எவர் விரும்ப மாட்டார்? அது இதமளிக்கும், வாநëதி உணர்வைத் தடுக்கும், ஜலதோஷம், இருமலுக்கு மிகவும் ஏற்றது. மனஅழுத்தத்தைக் குறைத்து உடலுக்குப் புத்துயிர் அளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஏலக்காய் டீ நல்ல சுவையாகவும் இருக்கும்.


ரியாத்தில் ரத்ததான முகாம்ரியாத் : சவுதி அரேபிய தலைநகரான ரியாத்தில் பல்வேறு மனிதநேயப் பணிகளை தொடர்ந்து செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம், தனது 8 வது ரத்ததான முகாமை ஏப்ரல் 23ம் தேதியன்று ரியாத் மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடத்தியது. காலை 10 மணிக்கு துவங்கிய இந்த முகாமில் நூற்றுக்கணக்கான குருதிக் கொடையாளிகள் பங்கு பெற்றனர். தமிழகம், இலங்கை போன்ற தமிழ் பேசும் மக்களுடன் இந்தியாவின் பிற மாநிலத்தவர்கள்,சவுதி அரேபியா, எகிப்து, பங்களாதேஷ், சிரியா போன்ற பிற நாட்டவர்களும் கலந்து கொண்டனர். பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்துவரும் இந்த சேவையை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டன.

ஹஜ் பயணிகளுக்காக, சுதந்திர தினத்தின் போது, அவசர தேவைக்காக என அடிக்கடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரத்ததான முகாம்களை நடத்துவதால் சவுதி அரேபியாவின் எப்பகுதியில் யாருக்கு இரத்தம் தேவைப்பட்டாலும் அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக ரத்தம் வழங்கி உயிர்காத்து வருகின்றது. சவுதி அரேபியாவிலேயே அதிகமானோர் ரத்ததானம் வழங்கியவர்கள் என்ற இடத்தை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழர்களால் நடத்தப்படும் இந்த முகாம்களால் கடல் கடந்த மனித நேயத்தை அரேபியர்களும் பாராட்டி வருகின்றனர்.
– தினமலர் வாசகர் முஹம்மது மாஹீன்

இஸ்லாத்தின் பார்வையில் ஊடகங்களின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும்.

http://mindofandre.files.wordpress.com/2008/01/1876984873_2a026900d4.jpg

இன்றைய நவீன உலகத்தின் இயக்கம் ஊடகத்துறையில்தான் அமைந்துள்ளது.சமய கலாசார பொருளாதார அபிவிருத்தி அனைத்துத் துறைகளிலும் இதன் பங்களிப்பு செல்வாக்குச் செலுத்துகின்றது.உலக வரலாற்றை நாம் சற்று உற்று நோக்கும் போது ஐரோப்பிய மறுமலர்ச்சி,பிரான்சிய மறுமலர்ச்சிக்கு முன்பு மேற்க்கத்திய நாடுகள் அறிவுத்துறையில் இருன்டே காணப்பட்டன.ஆயினும் இங்கு ஏற்பட்ட மறுமலர்ச்சி அறிவியல் துறையில் வித்திட்டதென மேற்கத்திய வாதிகள் கூறுகின்றனர்.இருப்பினும் ஆராபியத் தீபகற்பத்தில் வளர்ச்சி கண்ட அறிவியல் துறைபற்றிய உண்மைகளை வரலாற்று ஆசிரியர்கள் மறந்து விட்டனர்……… ஆனால் அறிவியலின் வளர்ச்சியை சீர் தூக்கிப் பார்ப்பவர்கள் இவ்வுண்மைகளை மறந்துவிடலாகாது.

ஊடகத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களும் அத்தீப கற்பத்தில் வாழ்ந்தவர்களே.தற்காலத்தைப் போன்று அன்று நவீன யுக்திகள்,சாதனங்கள் காணப்படாத போதும் கூட,ஆங்கு வானியல்,மருத்துவம்,கணிதவியல்,பூகோலவியல் போன்ற துறைகளில் தேற்ச்சிபெற்றவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.இதனை அராபிய வரலாறு என்ற நூலை எழுதிய பேராசிரியர் ஹிட்டி என்பவர் தன்னுடைய புத்தகத்திலே அடிக்கடி குறிப்பிடுகின்றார்.

மேலும் படிக்க…


கேதன்தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார்

Front page news and headlines today

இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் பதவிக்காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,)அங்கீகாரம் வழங்கி வருகிறது. மருத்துவக் கல்லூரியில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனை வசதிகள், அங்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை, பேராசிரியர்கள் எண்ணிக்கை ஆய்வு நடத்தப்பட்டு எம்.சி.ஐ., அங்கீகாரம் வழங்கப்படுகிறது. எம்.சி.ஐ., தலைவராக இருப்பவர் கேதன் தேசாய். இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நாட்டில் தற்போது 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 28 ஆயிரத்து 742 இடங்கள் உள்ளன. கேதன் தேசாய் எம்.சி.ஐ.,யின் தலைவராக இருந்த காலகட்டத்தில், 60க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 40க்கும் மேற்பட்டவை தனியார் மருத்துவக் கல்லூரிகள்.கேதன் தேசாய், புது மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க ஒவ்வொரு கல்லூரிக்கும் 30 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. அவர் எம்.சி.ஐ., தலைவராக பதவி வகித்த காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், இதன் மூலமாகவே கேதன் தேசாய் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக பெற்றிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.மேலும் படிக்க…

அமெரிக்காவில் சர்வதேச முஸ்லிம் தொழிலதிபர்கள் மாநாடு!

வாஷிங்டன்: உலகின் முக்கியமான 55  நாடுகளில் மிகப்பெரிய முஸ்லிம் தொழிலதிபர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை அமெரிக்கா அடுத்த வாரம் நடத்துகிறது. அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம்களை மட்டும் அழைத்து நடத்தும் முதல் மாநாடு இதுதான்.

நியூயார்க், உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு முஸ்லிம்கள் என்றாலே அமெரிக்காவில் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள், படிப்பு, வேலை வாய்ப்பு விஷயத்தில் பாரபட்சமாக நடத்துகிறார்கள் என்று உலகம் முழுவதும் பரவியுள்ள எண்ணத்தைப் போக்கும் விதத்தில் இந்த மாநாட்டை அதிபர் பராக் ஒபாமா ஏற்பாடு செய்திருக்கிறார்.

மேலும் முஸ்லிம்களுக்கு அமெரிக்க அரசு மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பது பிரதான நோக்கமாக இருந்தாலும்  சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் முஸ்லிம் தொழிலதிபர்களுடன் அமெரிக்கா நேரடியாகத் தொடர்பு கொண்டால் அது வாணிபம் பெருக மிகுந்த உதவியாக இருக்கும், அதன் மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பும் வருவாயும் பெருகும் என்பவை மற்ற நோக்கங்களாகும். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் பேசவிருக்கிறார்கள். அடுத்த முஸ்லிம் தொழிலதிபர்களின் கருத்துகளையும் இருவரும் கேட்பார்கள்.

இராணுவத் தகவல் தொடர்புக்கான தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் இந்த மாநாட்டு ஏற்பாட்டில் முக்கியமானவர். முஸ்லிம் நாடுகளுடன் வலுவான வர்த்தக உறவு அவசியம் என்று அமெரிக்க அரசு கருதுவதாக சர்வதேச வர்த்தகத்துக்கான துணைச் செயலர் பிரான்சிஸ்கோ சாஞ்சஸ் தெரிவிக்கிறார். 2008-ம் ஆண்டில் முஸ்லிம் நாடுகளுடன் அமெரிக்கா நடத்திய வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 16 லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் என்று சாஞ்சஸ் தெரிவிக்கிறார். வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, சுமுகமான நல்லுறவு ஆகியவற்றுக்கு இந்த மாநாடு பெரிதும் உதவும் என்பதால் ஒபாமா இதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறார் என்பது குறிப்பிட்த்தக்கது.

inneram.com

செக்ஸ் சாமியார் நித்யானந்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை!

நித்யானந்தா ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்து வருவதால், உண்மை கண்டறியும் சோதனை மூலம் விசாரணை நடத்த கர்நாடக போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நித்யானந்தாவிடம் 3வது நாளாக இன்று காலை 11 மணிக்கு கர்நாடக போலீசார் விசாரணையை தொடங்கினர். நித்யானந்தாவின் முன்னாள் சீடர்கள் லெனின் கருப்பன், அமெரிக்காவைச் சேர்ந்த டக்ளஸ் மெக்கல்லர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நித்யானந்தாவுக்கு உதவியாளராக இருந்த கோபிகா தற்போது எங்கே இருக்கிறார். ரஞ்சிதா தலைமறைவாக இருக்கும் இடம் எங்கே போன்ற கேள்விகள் நித்யானந்தாவிடம் கேட்கப்பட இருக்கிறது.


இருப்பினும் நித்யானந்தா முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், தியான நிலையில் இருப்பதாக நாடகம் ஆடுவதாகவும் கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர். மிகவும் அழுத்தக்காகராக இருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.


நித்யானந்தாவுக்கான போலீஸ் காவல் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. ஆனால் நித்யானந்தா ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்து வருவதால், உண்மை கண்டறியும் சோதனை மூலம் விசாரணை நடத்துவதற்காக திங்கள் கிழமை அன்று நீதிமன்றத்தில் மனு செய்யவும் கர்நாடக போலீஸ் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே நித்யானந்தாவுக்கு எதிரான சாட்சிகளை பாதுகாப்பு கருதி, அவர்களுடைய வீட்டுக்கே நேரிடையாக சென்று காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து வாக்குமூலம் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

நித்யானந்தாவிடம் தற்போது நடத்தப்படும் விசாரணையில் எந்த உண்மையும் வெளிவராததால், உண்மை கண்டறியும் சோதனையில் உண்மைகள் அம்பலமாகும் என தெரிகிறது.

nakkheeran.