சுனாமியால் பிரிந்த குழந்தை 7 வருடங்களுக்குப் பின் பெற்றோருடன் சேர்ந்த அற்புதம்!

டிசம்பர் 26, 2004. யாராலும் மறக்க முடியாத அந்த தினத்தில்தான் சுனாமி என்ற பேரலைகள் தாக்கி ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். தற்போது இந்த சுனாமியில் சிக்கி உயிர் இழந்து விட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் குடும்பத்தினருடம் மீண்டும் இணைந்த அற்புத சம்பவம் நடைபெற்றுள்ளது.டிசம்பர் 26, 2004. யாராலும் மறக்க முடியாத அந்த தினத்தில்தான் சுனாமி என்ற பேரலைகள் தாக்கி ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். தற்போது இந்த சுனாமியில் சிக்கி உயிர் இழந்து விட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் குடும்பத்தினருடம் மீண்டும் இணைந்த அற்புத சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

 

 

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவையும் அன்றைய தினம் சுனாமி தாக்கியது. அந்த தீவிலுள்ள யுஜோஹ் பரோஹ் என்ற கிராமத்தில் வசித்து வந்த வதி என்ற பெண்ணும் அவருடைய குடும்பமும் சுனாமியினால் இழுத்துச் செல்லப்பட்டனர். வதியின் பெற்றோர்கள் வதியினையும் மற்ற இரு குழந்தைகளையும் காப்பாற்றிட பெரு முயற்சி மேற்கொண்டனர். மற்ற இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முடிந்த பெற்றோரினால் வதியைக் காப்பாற்ற இயலவில்லை. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வதியினை யாரும் அதன் பிறகு பார்க்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 21.12.2011 அன்று வதியின் தாத்தாவான இப்ராஹிம் வீட்டிற்கு ஒரு பெண்ணை அழைத்து வந்தார் இப்ராஹிமின் நண்பர். பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இந்தச் சிறுமி வதியைப் போல் இருந்ததால் அவரை விசாரித்திருக்கிறார் அந்த நண்பர். தாத்தா இப்ராஹிமின் பெயர் தவிர வேறு பெயர் நினைவில்லை என்றும் தனக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் உண்டு என்ற விபரத்தையும் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை இப்ராஹிமின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் அவர்.

உடனடியாக வதியின் தந்தைக்கும் தாயாருக்கும் தகவல் தரப்பட்டு அவர்கள் வந்து பார்த்தனர். சிறுமியின் உடலில் இருந்த மச்சத்தினையும் தழும்புகளையும் வைத்து அது வதிதான் என உறுதிப்படுத்தினார் தாய் யுஸ்னியார். தாயைக் கண்டதும் பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டார் வதி. வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட வதி ஒரு பெண்ணினால் தத்து எடுக்கப்பட்டு பிச்சை எடுக்க வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரத்தையும் வதி தெரிவித்துள்ளார். பந்தா ஏக் என்ற இடத்திலிருந்து பேருந்தின் மூலமாக இப்ராஹிமின் ஊரான மியுலோப் என்ற ஊருக்கு வந்துள்ளார் வதி. 7 வருடங்களுக்கு பின்பு தனது குடும்பத்தினருடன் வதி சேர்ந்தது அற்புதமான நிகழ்வுதானே!

inneram.com

மகளுடன் 34 வருடங்களாக பாலியல் உறவுகொண்ட நபருக்கு 3 வருட சிறை

தனது மகளுடன் சுமார் 500 தடவைகள் பாலியல் உறவு கொண்டுவிட்டு அதனூடாக 3 பிள்ளைகளுக்கு அப்பெண்ணை தாயாக்கிய ஜேர்மனிய நபருக்கு ஜேர்மன் நீதிமன்றமொன்று 3 வருடங்களுக்கு குறைவான சிறைத்தண்டனை விதித்துள்ளமை தொடர்பில் பெண்கள் அமைப்புகள் அதிருப்தி தெரவித்துள்ளன.

அடோல்வ் பி எனும் 69 வயதான நபருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நபர் தனது மகளை அப்பெண்ணின் 12 ஆவது வயதிலிருந்து 30 வருடங்களுக்கு மேலாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார்  என பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு உரிமை அமைப்புகள் தெரிவித்திருந்தன.

 தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கொடுமைப்படுத்தியதாக அந்நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவருக்கு 14 வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டுமென வழக்குத் தொடுநர்கள் கோரினர்.

ஆனால், நியூரம்பர்க் நகரிலுள்ள நீதிமன்றமொன்றின் நீதிபதி மேற்படி பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். இது வல்லுறவு அல்ல எனவும் சம்மதத்துடனேயே அந்நபர் உறவுகொண்டுள்ளார் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்படி நபருக்கு இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அடோல்வ்,கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த 34 வருடங்களாக 497 பாலியல் வல்லுறவுக் குற்றங்களைப் புரிந்தாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

இப்போது 46 வயதாகும் அப்பெண் அடோல்வ்வுடனான உறவுமூலம் 3 குழந்தைகளுக்கு தாயானார். அவற்றில் இரு குழந்தைகள் இறந்துவிட்டன.

இந்த உறவு முறைக்கு அவள் மிகவும் விருப்பம் என அடோல்வ் தெரிவித்துள்ளார்.

எனினும் அப்பெண் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், ‘இது குறித்து யாரிடமாவது சொன்னால் நான் உன்னை கொன்று விடுவேன். நீ எங்கு சென்றாலும் நான் உன்னை கண்டுபிடித்து கொன்று விடுவேன்’ என கூறி தன்னை தனது தந்தை அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அப்பெண் தற்போது ஜேர்மனியில் உள்ள வில்மெர்ஸ்பெச் எனும் கிராமத்தில் தனது தாயுடனும் சகோதர சகோதரிகளுடனும் வசித்து வருகின்றார்.

அப்பெண்ணும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் அடிக்கடி தாக்குதல்  மற்றும்  அடக்குமுறை குறித்த அச்சத்துடன் வாழ்ந்துள்ளனர்.

மேற்படி தீர்ப்பு குறித்து ஜேர்மனியிலுள்ள, வல்லுறவு நெருக்கடி குழுவொன்றின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘இவ்வழக்கின் தீர்ப்பு ஆச்சரியமாகவுள்ளது.  நீதிபதி இது என்னவென்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார். அந்த 12 வயது பெண் எவ்வாறான தெரிவுகளை மேற்கொண்டிருக்க முடியும்’ என்று கூறியுள்ளார்

சவூதி அரேபியாவின்;சூனியக்காரிக்கு மரண தண்டனை

சூனிய வேலை செய்த சவூதி பெண்ணுக்கு  அந்நாட்டுச்  சட்டப்படி நேற்று (12.12.11 ) திங்களன்று மரண தண்டனை வழங்கப்பட்டது. இத்தகவலை சவூதி அரேபிய உள்துறை அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சவூதி அரேபியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான SPA (சவூதி ப்ரெஸ் ஏஜன்சி) வெளியிட்ட அறிக்கையில், இத்தண்டனை வடக்குப் பிராந்தியமான அல்ஜவ்ப்  நகரில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. சூனிய சித்து வேலைகளை நடைமுறைப்படுத்தியமைக்காக ஆமினா த/பெ அப்துல்ஹலீம் நாசர் என்ற சவூதி பெண்மணியே இவ்வாறு மரண தண்டனை பெற்றவர் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

சவூதியில் இவ்வாண்டு இதுவரை 73 பேர் மரண  தண்டனை பெற்றுள்ளார்கள். அவர்களில் பெண்கள் எத்தனை என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆயினும் கடந்த அக்டோபர் மாதம் தன் கணவனை உயிரோடு வீட்டில் கொளுத்திய பெண்ணொருவரும் மரணத்  தண்டனைப் பெற்றிருந்தார். அதன்பின்னர், அடுத்து இந்தச் சூனிய மாது தண்டனை பெற்றுள்ளார்.

சவூதியைப் பொருத்தவரை கடந்த 2009 ஆம் ஆண்டில் 67 பெரும்   2010 ஆம் ஆண்டில் 27 பேரும் இப்பெரும் தண்டனைக்கு ஆளாகியிருந்தனர் என்று மனித உரிமைக் கழக அறிக்கை தெரிவித்துள்ளது.