சவூதி மன்னர் நாடு திரும்பினார்! 10 ,000 கைதிகள் விடுதலை!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சவூதி மன்னரின் மீள்வருகையை முன்னிட்டு பொது உரிமைமீறல் குற்றங்களில் கைதாகியிருந்தவர்களுள் 10,000 க்கும் மேற்பட்ட கைதிகள்  விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
விடுதலையாக உள்ளவர்களில் சவூதி மண்ணின் மைந்தர்களும், அந்நிய நாட்டவரும் அடங்குவர் என்று சவூதி  சிறைத் துறை தலைமை பொது இயக்குனர் அலீ பின் ஹுசைன் அல் ஹாரிதி தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் கூடலாமே தவிர குறையாது என்றார் அவர்.

அவர் மேலும் கூறுகையில், பொது உரிமைமீறல் குற்றங்களின் அடிப்படையில், சீர்திருத்த மையங்களிலும் சிறைகளிலும் 49 ,000 பேர் அடைபட்டுள்ளனர் என்றார்.

இந்த விடுதலை ஆணை, அரசின் பொது உரிமையை மீறிய குற்றவாளிகளுக்கே பொருந்தும் என்றும், தனி மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் மேலும் சொன்னார்.

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு :- அத்வானி பெயரை நீக்கிய அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு தவறு- சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மீதான கிரிமினல் சதி குற்றச்சாட்டை நீக்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,உமாபாரதி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வினய் கட்டியார், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்பாரா மற்றும் மஹாந்த் அவிதயா நாத் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கிரிமினல் சதி குற்றச்சாட்டு நீக்கப்பட்டதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.
அதில் இவர்கள் மீதான மேற்கூறிய குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என சிபிஐ விடுத்த வேண்டுகோளை கடந்த ஆண்டு மே மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அம்மனுவில், அத்வானி உள்ளிட்டவர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டை நீக்கும் விடயத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் சரியான முடிவெடுக்கவில்லை என்றும், எனவே அவர்களுக்கு எதிரான கிரிமினல் சதி குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய புலனாய்வு கழகமான சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

– வெப்துனியா

வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – சிறப்பு கட்டுரை

மத்திய கிழக்கில் கத்தரில் அதிக சம்பள உயர்வு.

2011 ல் ஓரளவு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மனித வள அதிகாரிகளுக்கு அதிக சம்பள உயர்வு.

அதிகரிக்கும் சீனர்களின் பரவல்.

ஐக்கிய அரபு அமீரகம் அதிகம் விரும்பப்படும் நாடு

மத்திய கிழக்கின் புகழ் பெற்ற வேலை வாய்ப்பு இணைய தளம் நடத்திய ஆய்வின் முடிவுகளின் சாரம் இந்நேரம் வாசகர்களுக்காக.

2011ல் வளைகுடா நாடுகளில் தனியார் நிறுவனங்களில் சம்பள உயர்வு சுமாராக இருக்கும், அதாவது 6.6 சதவிகிதம் இருக்கும் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இவ்வாய்வு ஆறு வளைகுடா நாடுகளில் உள்ள 1400 நிறுவனங்களிலும் 32,000 நபர்களிடமும் எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு வளைகுடா நாடுகளில் கத்தாரில் அதிகபட்சமாக 6.8 % ஊதிய உயர்வும், அதை தொடர்ந்து சவூதி அரேபியாவில் 6.7 %, ஓமனில் 6.4% மற்றும் குவைத்தில் 5.7 % ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் 5.2 % மற்றும் 4.9 % ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளின் சராசரி சம்பள உயர்வு எதிர்பார்க்கப்படுவது

நாடு 2010 2011 *
கத்தார் 6. 8 % 7. 2 %
சவூதி அரேபியா 6. 7 % 7. 0 %
ஓமன் 6. 4 % 7. 0 %
குவைத் 5. 7 % 5. 9 %
ஐக்கிய அரபு அமீரகம் 5. 2 % 6. 3 %
பஹ்ரைன் 4. 9 % 5. 1

  • 2010 ல் மக்களின் செலவழிக்கும் பழக்கம் அதிகரித்ததற்கேற்ப ரீடெய்ல் துறையில் அதிக பட்சமாக 6.4 % சம்பள உயர்வு கல்வி துறையில் குறைந்த பட்சமாக 3. 8 % சம்பள உயர்வும் இருந்தது. அது போல் மனித வளத்தில் பணி புரிகிறவர்கள் அதிக பட்சமாக 7. 1 % உயர்வும் வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்சமாக 4. 3 % உயர்வும் இருந்துள்ளது.

சவூதி மற்றும் கத்தரில் அதிகரித்த வேலை வாய்ப்புகள் மற்றும் திறமையான ஊழியர்களை தக்க வைக்கவே நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. ஒப்பீட்டளவில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட அதிக அளவில் இருந்ததால் ஆசியர்கள் சராசரியாக 6.1 % ஊதிய உயர்வும் மேற்கத்தியர்கள் 3.2 % ஊதிய உயர்வும் பெற்றுள்ளனர்

மத்திய கிழக்கின் வேலைவாய்ப்பில் புதிய அம்சமாக சீனர்களின் அதிகரிப்பை சொல்லலாம். வழக்கமாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தொழிலாளர்களை தருவிக்கும் மத்திய கிழக்கு நாடுகள் தற்போது ஓரளவு சீனர்களை தருவிக்க ஆரம்பித்துள்ளன. சவூதியின் ரயில் திட்டம், கத்தாரில் தோஹா துறைமுகம் உள்ளிட்ட திட்டங்கள் சீன நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுவதால் அவை பெரும்பாலும் சீனாவில் இருந்து ஆட்களை வரவைப்பதும் இதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம்.

அதிகமானோர் வேலைக்கு செல்லும் இடமாக கத்தார் மாறி வருகிறது. அதிகமான சம்பளம், சற்றே குறையும் விலை வாசி, அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள் போன்றவற்றால் கத்தார் கவர்ச்சிகரமான இடமாய் மாறி வருகிறது. ஆனால் அதிகமானோர் போக விரும்பும் நாடாக இன்னும் ஐக்கிய அரபு அமீரகம் தான் உள்ளது. அமீரகத்திற்கு செல்ல விரும்புவதாக 49 % நபர்களும், அதனை தொடர்ந்து 44 % நபர்கள் கத்தருக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அது போல் தற்போது அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களில் அதிகமானோர் அதாவது 72 % நபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணமாக உள் கட்டமைப்பு விளங்குவதாக சொன்னவர்கள் அதற்கு அடுத்த படியாக 59 % குவைத்திலேயே இருக்க விரும்புவதாகவும் மூன்றாவதாக 50 % கத்தாரிலேயே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

inneram.com

நெஞ்சில் கால் முளைத்த இந்திய சிறுவன்!

இந்த உலகத்தில் விசித்திரங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றது, அதில் சில விசயங்கள் அதிசயம் மற்றும் நம்மை வியப்பில் கொண்டு செல்லக்கூடியதாக உள்ளன.

மனிதனாக பிறக்கும் போதே ஒரு விசித்திரமான அங்க அமைப்பை கொண்டு பிறந்தவர்கள் பற்றி ஏராளமான செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

இந்தியாவின் Buxar, Bihar என்ற இடத்தில் வாழும் 8 வயது நிரம்பிய தீபக் குமார் பஸவான் என்ற சிறுவனின் நெஞ்சுப்பகுதியில் இருந்து மேலதிகமாக இரு கால்கள் வெளியே வந்து காணப்படுகிறது.

அதனுடன் சிறியதாக இரு கைகளும் காணப்படுகிறது. நெஞ்சில் காணப்படும் மேலதிகமான அந்த உடல் சிறுவன் நடக்கின்ற போழுதெல்லாம் அவனுக்கு பெரும் சுமையை தோற்றுவிக்கின்றது.

இந்த சிறுவனின் இந் நிலையை சரி செய்வதற்கு முயன்ற போதிலும், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் அவனுடைய பெற்றோருக்கு அது முடியாத செயலாகி விட்டது.

நாள் வருமானமாக வெறும் 200 ரூபாய் மட்டுமே பெறக்கூடிய என்னால் சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கும் மேலதிய உடலை அகற்ற எவ்வாறு மருத்துவரை நாடுவது என கவலை தெரிவித்துள்ளனர் இந்தச் சிறுவனின் பெற்றோர்.

newindianews.com

பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்!

பிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது.

கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.

உங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.

காதலிப்போர் கவனத்திற்க்கு :

காதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.

பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல,

ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.

சினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.

காதல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் :

இளம் பெண்களே! பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.

காதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா? சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே! ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்

படிக்கும் இளைஞர்களே!

காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.

இளைஞர்களே!

உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே! இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.

காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்

காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.

இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது”

(நூல்: புகாரி 6243)

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா? ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா?’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!

டிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்

எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

TNTJ மாணவர் அணி

எகிப்தில் மக்கள் புரட்சி வெற்றி-ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

கெய்ரோ: எகிப்தில் மக்கள் புரட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார். ஆட்சி பொறுப்பை ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு, குடும்பத் துடன் தலைநகர் கெய்ரோவை விட்டு வெளியேறினார்.
அதிபர் பதவியில் இருந்து முபாரக் (82) விலகியதாக துணை அதிபர் உமர் சுலைமான் நேற்று அறிவித்தார். ஆட்சி பொறுப்பை ராணுவம் ஏற்றதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு அதிபர் முபாரக் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
அதிபர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என சில வெளிநாட்டு தலைவர்கள் என்னை வலியுறுத்தி வருகின்றனர். யாருடைய கோரிக்கையையும் நான் ஏற்க மாட் டேன். செப்டம்பரில் என் பதவி காலம் முடிகிறது. அதுவரை பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. நாட்டு மக்களின் நலன் கருதியும், அரசியல் அமைப்பு சட்டத்தை பாது காக்கவும்தான் இத்தகைய முடிவை எடுத்துள்ளேன். அதே நேரம், துணை அதிபர் ஓமர் சுலைமானுக்கு சில அதிகாரங்களை வழங்கி உள்ளேன். அவர் எதிர்க்கட்சிகளின் போராட் டத்தை முடிவுக்குக் கொண்டு வருவார். இவ்வாறு முபாரக் தெரிவித்தார்.
குறிப்பாக, உடனடியாக பதவி விலகி நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.  இதன் மூலம், முபாரக் உடனடியாக பதவி விலகுவார் என்ற போராட்டக்காரர்களின் நம்பிக்கை தகர்ந்து விட்டது. தஹ்ரிர் சதுக்கத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்கள், அதிபரின்  பேச்சை கேட்டபிறகு Ôகழுதையே வெளியேறுÕ என கோஷம் எழுப்பினர்.  இதற்கிடையில் கடந்த 18 நாட்களுக்கு மேல் தொடரும் போராட்டத்தில் இதுவரையில் 150 பேர் பலியாகியுள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கெய்ரோ மற்றும்  முக்கிய நகரங்களில் நேற்று பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் மற்றும் போராட்டக்காரர்கள் இதில் கலந்து கொண்டனர். வானொலி மற்றும் தொலைக்காட்சி  நிலையங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு போராட்டம் வலுத்து வருவதால், அதிபர் முபாரக் தனது குடும்பத்தினருடன் கெய்ரோவை விட்டு வெளியேறிவிட்டார். எகிப்துக்குள் தனக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்றுக்கு  சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் அதிகாரம் மிக்க ராணுவ உயர் நிலைக் குழு நேற்று கெய்ரோவில் கூடி ஆலோசனை நடத்தியது.  இதற்கிடையில்,  நேற்று திடீர் திருப்பமாக, அதிபர் பதவியில் இருந்து முபாரக் விலகியதாக துணை அதிபர் உமர் சுலைமான் அறிவித்தார். ஆட்சி பொறுப்பை ராணுவம் ஏற்றது. தங்களது 18 நாட்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக கூறி, கெய்ரோ உட்பட நாடு முழுவதும் மக்கள்  வெற்றியைக் கொண்டாடினர்.

dinakaran.com

மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஒரு ஐயம்

கணக்கெடுப்பு பணி துவங்கிது

இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று இப்படி தெரிவிக்கிறது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சரியான விவரங்களை வழங்குமாறு அனைவரையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம்களை பொருத்தவரை மதம் என்னவென்ற கேள்விக்கு முஸ்லிம் என்றே பதிலளித்து பதிவுச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதங்கள் என்ற அட்டவணையின் கீழ் இஸ்லாம் என்று குறிப்பிடப்படாமல் முஸ்லிம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செய்த தவறாகும். இது குறித்து முஸ்லிம் சமுதாய அமைப்புகள் புகார் தெரிவித்தும் இது சரி செய்யப்படவில்லை. தற்போது நீதிமன்றம் சென்று முறையிடுவதற்கும் கால அவகாசம் இல்லை. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதுஇஸ்லாம் என்று குறிப்பிட்டால் அது முஸ்லிம் என்ற கணக்கில் சேர்க்கப்படாமல் இதர மதத்தினர் பட்டியலில் சேர்க்கும் அபாயம் உள்ளது. எனவே கவனமாக மதம் என்ற கேள்விக்கு முஸ்லிம் என்ற பதிலை மட்டும் அளிக்குமாறு முஸ்லிம் சமுதாயத்தினரை கேட்டுக் கொள்கிறேன். இது பற்றிய விழிப்புணர்வை துண்டு பிரசுரங்கள், தெரு முனைப் பிரச்சாரங்கள், பள்ளிவாசல் அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டு்க் கொள்கிறேன். கண்ணியத்திற்குரிய இமாம்கள் இது குறித்து ஜும்ஆவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சேகரிக்கும் விவரங்கள்… :

  1. பெயர்
  2. குடும்பத் தலைவருக்கு உறவுமுறை
  3. இனம்
  4. பிறந்த தேதி
  5. திருமண நிலை
  6. திருமணத்தின் போது வயது,
  7. மதம்
  8. எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவரா
  9. மாற்றுத் திறனாளியா
  10. தாய்மொழி
  11. அறிந்த பிறமொழிகள்
  12. எழுத்தறிவு நிலை
  13. கல்வி நிலையம் செல்பவரா
  14. அதிகபட்ச கல்வி
  15. கடந்தாண்டு வேலை செய்தவரா
  16. பொருளாதார நடவடிக்கை வகை
  17. தொழில்
  18. தொழில் (அ) வியாபார நிலை
  19. வேலை செய்பவரின் வகை
  20. பொருளீட்டா நடவடிக்கை
  21. வேலை தேடுகிறவரா (அ) வேலை செய்பவரா
  22. பணிக்கு பயணம் செய்யும் முறை
  23. பிறந்த இடம்
  24. கடைசியாக வசித்த இடம்
  25. இடப் பெயர்ச்சிக்கு காரணம்
  26. இடப் பெயர்ச்சிக்கு பின் வசிக்கும் காலம்
  27. உயிருடன் வாழும் குழந்தைகள்
  28. உயிருடன் பிறந்த குழந்தைகள்
  29. கடந்த ஆண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை

உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.nallurmuzhakkam.wordpress.com

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதியின் மனதை மாற்றிய முஸ்லிம்!

ஹைதராபாத்,
ஜன.31:சிறையில் இரண்டு தடுப்புகளைத் தாண்டி தனிமையிலிருந்த முதியவரிடம் பேசத் துவங்கிய பொழுதும், அவருக்கு உணவும், குடிநீரும் கொண்டுவந்துக் கொடுத்த பொழுதும் எவ்வித குற்றமும் செய்யாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ள தான் விரைவில் இச்சிறையிலிருந்து விடுதலையாகி வெளியுலகை காணப் போகிறேன் என்பதை அப்து கலீம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்ட்டார்.
செய்யாத குற்றங்களுக்காக சித்திரவதைகளையும், சிறைவாசத்தையும் அனுபவித்து தளர்ந்துபோன அப்துல்கலீம் சமீபத்தில் விடுதலையான பொழுது தனது அனுபவத்தை நினைவுக் கூறுகிறார்:
“சஞ்சல்குடா சிறையில் நான் ‘அங்கிள்’ என்றழைத்த அஸிமானந்தாவின் மனமாற்றம், நான் மற்றும் அப்பாவிகளான இதர முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகளாக நிரூபிக்க உதவும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.”
ஷேக் அப்துல் கலீம் என்ற 19 வயது இளைஞர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்படுகிறார். 10 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை சேகரித்ததாகவும், குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய சிம் கார்டை பரிமாறினார் எனவும் போலீஸ் அப்துல் கலீம் மீது குற்றஞ் சுமத்தியது.தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அப்துல் கலீமுக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன. நிரபராதி என நீதிமன்றம் கூறிய பொழுதும் உள்ளத்தில் ஏற்பட்ட ஆறாத காயக்களுடன் அப்துல் கலீம் சிறையிலிருந்து விடுதலையானார்.
கடுமையான நிராசை, உதவுவதற்கு எவருமில்லாத சூழல் என்ற அப்துல் கலீமின் நிலைமை அஸிமானந்தாவின் உள்ளத்தை உருக வைத்தது.செர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது சகோதரன் காஜாவுக்கு மொபைல் ஃபோனை கொண்டு கொடுத்தார் எனக் குற்றஞ்சாட்டி மீண்டும் 2010 ஆம் ஆண்டு அப்துல் கலீம் சிறையிலடைக்கப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டி காஜாவை போலீஸ் கைதுச் செய்திருந்தது. ஆனால், சிறையில் போலீசாரே மொபைலைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு தன் மீது பொய்வழக்குப் போட்டதாக கூறுகிறார் அப்துல் கலீம்.என்னவாயினும், சஞ்சல்குடா சிறையில் என்னை அடைத்தது ஒருவகையில் எனக்கு அருள்தான் என அப்துல்கலீம் கூறுகிறார்.ஆறுமாத காலமாக நீண்ட இச்சிறை வாழ்க்கையின் போதுதான் அஸிமானந்தாவை அப்துல் கலீம் சந்தித்தார். சிறையில் வைத்து எப்பொழுதாவது முகமன் கூறுவதன் மூலம் இருவரும் அறிமுகமாகினர்.அஸிமானந்தாவுக்கு உணவும், குடிநீரும் கொண்டு கொடுத்துவிட்டு சிறைக் கம்பிகளுக்கு வெளியே நின்றுக் கொண்டு தனது கதையை கூறியுள்ளார் அப்துல் கலீம்.
அஸிமானந்தாவை அப்துல் கலீம் ‘அங்கிள்’ என அழைத்துள்ளார்.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில்தான் அப்துல் கலீமும் கைதுச் செய்யப்பட்டார் என அஸிமானந்தா அறிந்தபொழுது, அப்துல் கலீமின் வீட்டுச்சூழல் மற்றும் அவரது வாழ்க்கையைக் குறித்து விசாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார் அஸிமானந்தா.முஸாராம்பாகிலிருந்து கடந்த 2007-ஆம் ஆண்டு தானும் இதர முஸ்லிம் இளைஞர்களும் கைதுச் செய்யப்பட்ட நிகழ்விலிருந்து கூறத் துவங்கினார் அப்துல் கலீம். அங்கிருந்து ஒரு பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்றது, அங்கு வைத்து நான்கு தினங்களாக கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கியது, இரண்டுமுறை நார்கோ பரிசோதனைக்கு உட்படுத்தியது பின்னர் தான் உயிருள்ள சடலமாக மாறிய சூழல் வரை அனைத்தையும் அஸிமானந்தாவிடம் கூறியுள்ளார் அப்துல் கலீம்.
இதனைக் கேட்டு தலையை அசைத்துள்ளார் அஸிமானந்தா. பின்னர் கைதுச் செய்யப்பட்ட இதர இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப சூழல்களை குறித்து கேட்டறிந்துள்ளார். தனது சொத்துக்கள் அனைத்தையும் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப் போவதாக ஒருமுறை அஸிமானந்தா கூறியுள்ளார்.குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தனது தலைமையின் கீழ் செயல்பட்டவர்கள்தான் என அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை ஒரு சிறை அதிகாரி மூலமாக அறிந்துள்ளார் அப்துல்கலீம்.
“என்னைப் போன்ற நிரபராதிகளான இளைஞர்கள் பொய் வழக்குகளிலிருந்து விடுபட வழிவகுத்த இந்த ஒப்புதல் வாக்குமூலம் குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நான் இதற்கு காரணமல்ல, அல்லாஹ்தான் காரணம். என்னை நீதிமன்றம் குற்றமற்றவர் எனக்கூறி விடுவிக்கலாம். ஆனால், தீவிரவாதி என்ற முத்திரை எப்பொழுதும் எனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்”- தழுதழுத்த குரலில் கூறுகிறார்
அப்துல்கலீம்.

குற்றவாளிகளை பிடிப்பதில் இந்தியா முன்னணி: இன்டர்போல் பாராட்டு!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாரிஸ் : “”குற்றவாளிகளைப் பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீசை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது,” என, சர்வதேச போலீசின் செகரட்டரி ஜெனரல் ரொனால்டு கே.நோபிள் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சந்தேகத்திற்குரியவர்களை கண்டறியவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் சர்வதேச போலீசின் உதவியை நாடுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. “இன்டர்போல்’ என்னும் சர்வதேச போலீஸ் அமைப்பு மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்து, குற்றவாளிகளை எளிதில் கண்டறிகிறது. ரெட் கார்னர் நோட்டீசின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாடுகளில், இந்தியா மிக முக்கியமானது. குற்றவாளிகளை கண்டறியவும், அவர்களைப் பிடித்துக் கொண்டு வரவும், நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளை பிடித்துத் தருவது தொடர்பான ஒப்பந்தம் இருக்க வேண்டியது அவசியம். சர்வதேச போலீசார் மூலம், ஒரு குற்றவாளி பற்றி ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கும் போது, அந்த குற்றவாளி எளிதில் சுதந்திரமாக நாடுகளுக்கு இடையே உலவிட முடியாது.

ரெட் கார்னர் நோட்டீஸ் ஒரு சர்வதேச கைது வாரன்ட் இல்லை என்றாலும், அதன் மூலம் ஒருவரை கைது செய்யும்படி, உலக நாடுகளை குறிப்பிட்ட நாடு கேட்டுக் கொள்ள முடியும். குற்றவாளியைப் பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகோள் விடுக்கலாம். சர்வதேச போலீசின் தலைமையகம் பிரான்சில் உள்ளது. சர்வதேச போலீஸ் தன் திறனை மேம்படுத்தவும், உலக அளவில் அதன் பலம் அதிகரிக்கவும் இந்தியா மேலும் பல உதவிகள் அளிக்க வேண்டியது அவசியம். போலீசாரின் திறனை மேம்படுத்தும் பயிற்சி அளிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. எனவே, திட்டமிட்ட குற்றங்கள், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி தொடர்பான உயர் தொழில்நுட்ப குற்றங்கள் போன்றவற்றிலும் சர்வதேச போலீசுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். அதற்கு இந்திய அரசு உதவ வேண்டும். சர்வதேச போலீசுக்கு இந்தியா மிகவும் முக்கியமான நாடு. அவ்வப்போது திறமையான அதிகாரிகளை அனுப்பி வைக்கிறது. அவர்களும் சர்வதேச போலீசில் திறமையாகச் செயல்படுகின்றனர். பயங்கரவாதம் உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக நிபுணர்களின் கூட்டம் நடக்கும் போதெல்லாம், அதில், இந்தியாவும் பங்கேற்கிறது. இவ்வாறு ரொனால்டு கே.நோபிள் கூறினார்.