சென்னை 3வது விவாதம். தானாக உளறிய அப்துல்லாஹ் ஜமாலி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் கடந்த இரண்டு (2010-10-23.24) நாட்களாக சென்னை டி நகர் தியாகராஜர் மண்டபத்தில் வைத்து பகிரங்க விவாதம் நடந்தது.
இதில் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.
சுன்னத் ஜமாத் ஐ.பேரவையின் நிலைபாடு :
சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் அசிங்கங்களும் குர்ஆன் ஹதீஸிற்க்கு மாற்றமான கருத்துக்களும் இருக்கின்றன.
தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு :
சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் எந்தவொரு அசிங்கங்களோ குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான கருத்துக்களோ இல்லையென்பதும்.ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களின் பேச்சுக்கள் எழுத்துக்கள் தப்ஸீர்கள் ஆகியவற்றில் தான் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களும் கயமைகளும் பொய்களும் ஆபாசங்களும் நிறைந்துள்ளன.

மேலும் படிக்க…

2002 குஜராத் கலவரத்தை நரபலி மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார்-ஜடாபியா வாக்குமூலம்

modi

அகமதாபாத்: 2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.

கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.

கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.

thatstamil

ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மீது குற்றப்பத்திரிக்கை

டெல்லி: ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவினர் இந்த குற்றப்பத்திரிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இந்திரேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்தான் இந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்திரேஷ் குமார் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஜெய்ப்பூரில் ரகசியக் கூட்டம் போட்டனர். அதில் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர்பான சதித் திட்டம் தீட்டப்பட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி வியாழக்கிழமை மாலை, ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற காஜா மொய்னுதீன் சிஷ்டி தர்காவில் குண்டு வெடித்தது. இதில், நான்கு பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.

ரம்ஜான் மாதத்தின் 3வது நாள் நோண்பை ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் ஒன்று கூடி முடித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.

பள்ளிக் கூட பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திரிக்கை குறித்து இந்திரேஷ் குமார் கூறுகையில், இது எனக்கு எதிரான, காங்கிரஸ் அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். இந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. இது அரசியல் சதி வேலை . விசாரணை அமைப்பை எனக்கு எதிராக காங்கிரஸ் பயன்படுத்துகிறது.

நாங்கள் வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை. அது எங்களது கொள்கைக்குப் புறம்பானது. நீதிக்காக கோர்ட்டை நான் நாடுவேன் என்றார்.

thatstamil

 

பால்தாக்கரேக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதே இந்துத்துவாவினரின் வேலையாகிவிட்டது. அவ்வப்போது இஸ்லாத்திற்கும் , முஸ்லிம்களுக்கும் எதிராக ஏதாவது ஒன்றைக் கூறி அமைதியைக் கெடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்துவதே இந்துத்துவாவினரின் ஒரே குறிக்கோளாகும்.

இந்த அடிப்படையில்தான் அடுத்த சர்ச்சையை இந்துத்துவா வெறியன் சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே கிளப்பியுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பால்தாக்கரே தமது கட்சி ஏடான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார். பர்தாவை தடைசெய்ய வேண்டும் என்பதற்கு பால்தாக்கரே கூறியுள்ள காரணம்தான் முட்டாள்தனமானதாகும்.

சாந்தாகுரூசில் வி.என்.தேசாய் மாநகராட்சி மருத்துவமனையில் பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண்குழந்தையை கடந்த பதினைந்தாம் தேதி பர்தா அணிந்த ஒரு பெண் திருடிச் சென்று விட்டாராம் . இதன் காரணமாகத்தான் திருட்டிற்குப் பயன்படும் பர்தா எனும் ஆடையை தடைசெய்ய வேண்டும் என்ற அறிவுப்பூர்வமான(?) காரணத்தை பால்தாக்கரே கூறியுள்ளான்.

பர்தாவை தடைசெய்ய வேண்டும் என்பதற்கு பால்தாக்கரே கூறியுள்ள காரணம் மிகவும் முட்டாள்தனமானதாகும். பர்தா என்பது பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் தரக்கூடிய ஒரு ஆடையாகும். இந்த கண்ணியமிக்க ஆடையை அணிந்து ஒருவர் ஒரு தவறை செய்து விட்டால் அந்த ஆடையையே தடைசெய்ய வேண்டும் என்பது முட்டாள்தனமானதாகும்.

எத்தனையோ பேர் போலீஸ் அதிகாரி போல் சீருடை அணிந்து மக்களை ஏமாற்றி பலகேடுகெட்ட காரியங்களைச் செய்கின்றனர். மேலும் வங்கி அதிகாரிகளைப் போல் சீருடை அணிந்து மிகப் பெரும் மோசடியில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் கூட வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல் நடித்து ஒரு வீட்டில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பத்ரிகைகளில் பரபரப்பான செய்தியாக வெளிவந்துள்ளது.

பல்வேறு துறைகளில் உள்ளவர்களின் சீருடைகளை அணிந்து சமூகவிரோதிகள் பல்வேறு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அனைத்து சீருடைகளையும் தடை செய்ய வேண்டுமென்று பால்தாக்கரே கூறுவரா?

காவியாடை அணிந்து எத்தனையோ பேர் காமலீலைகளில் ஈடுபட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டு ஊடகங்களால் கேவலப்படுத்தப்படுகின்றனர். எனவே காவியாடை அணிவதற்கு தடைவிதிக்க வேண்டுமென்று பால்தாக்கரே கூறுவாரா?

பர்தா என்ற கண்ணியமிக்க ஆடையை அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கூறுவதின் மூலம் அமைதியாய் உள்ள முஸ்லிம் சமுதாயத்தை தூண்டிவிட்டு பெரும் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்பதே பால்தாக்கரே போன்ற இந்துத்துவவாதிகளின் நோக்கமாகும்.

எனவே இதுபோன்ற சமூகவிரோத கருத்துக்களைத் தெரிவித்து முஸ்லிம்களின் கோபத்தை தூண்டும் பால்தாக்கரே மீது மத்திய அரசும், மகராஷ்டிர மாநில அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் இந்திய அளவில் முஸ்லிம்கள் மாபெரும் போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறோம்.

இப்படிக்கு

ஆர் ரஹ்மதுல்லாஹ்

மாநிலத் துணைத் தலைவர்

தவ்ஹீத் ஜமாஅத்.

அநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்.

இஸ்லாம் என்றால் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களில் ஈடுபடுவது மட்டும்தான் என்று பல எண்ணிக்கொண்டிருக்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச­லேயே தன் வாழ்கை கழித்தார்கள். உலக விஷயங்களைப்பற்றி நபிகளார் கவனத்தில் கொள்ளவில்லை, தொழுவதும் நோன்பு நோற்பதும்தான் அவர்களின் கடமையாக இருந்தது என்று எண்ணுகிறார்கள். அவர்கள் எண்ணும் வண்ணம் பல அறிஞர்களின் சொற்பொழிவுகளும் அமைந்திருக்கிறது.
வணக்க வழிபாடுகளை விட்டு விட்டு அரசியல் விஷயங்களில் ஈடுபட்டால் அது ஆன்மீகத்திற்கு எதிரானது என்றும் அநீததற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ஆன்மீகவாதிகள் இல்லை என்றும் எண்ணுகின்றனர்.
இவ்வாறு செய்பவர்களை காணும் பெற்றோர்கள், நீ உண்டு உன் தொழுகை உண்டு என்று இருக்க வேண்டியதுதானே என்று கண்டிப்பதைக் காண்கிறோம்.
ஆனால், உண்மையில் இஸ்லாம் அனைத்து துறைகளிலும் ஈடுபடவேண்டும் என்றும் அவ்வாறு செய்வதினால் மறுமையில் கூ­லி உண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
மார்க்க விஷயமாக இருந்தாலும் சரி, உலகவிஷயமாக இருந்தாலும் சரி, அநியாயம் நடக்கும்போதும் நீததற்கு மாற்றமாக காரியங்கள் நிகழும் போது அதை தட்டிக் கேட்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.
இவ்வாறு தீமையை தட்டிக் கேட்போர் நல்லடியார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர்ஆன் 3:114)
தீமைக்கு எதிராக போராடும் ஒரு கூட்டத்தினர் இவ்வுலுகில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்றும் இவர்கள் வெற்றியாளர்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
இவ்வசனம், தீமைக்கு எதிரான போராட்டம் மறுமைக்கு வெற்றித் தேடித் தரும் காரியம் என்பதை மிகத் தெளிவாக கூறுகிறது. நபி (ஸல்) அவர்களும் கூட தீமையைக் கண்டவர் எப்படி நடக்க வேண்டும் என்று வழிகாட்டியுள்ளார்கள்.

மேலும் படிக்க…

நவீன நிர்வாகக் கொள்கைகள் இஸ்லாம் வழங்கியதே : நிபுணர் பேச்சு!

குர்ஆனிலிருந்தும் நபிமொழிகள் எனப்படும் ஹதீஸ்களிலிருந்தும்தான்
நவீன உலகம் தனக்கான நிர்வாக மேலாண்மைக் கொள்கைகளைப் பெற்றுக்கொண்டுள்ளது என்கிறார் அய்குட் கிர்பாஸ். துருக்கியிலுள்ள தரச்சான்றிதழ் மையத்தின் தலைவரான இவர் அண்மையில் ஜெத்தா வந்திருந்தார். மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் நிகழ்வுற்ற மூன்றாவது தேசிய தகுதிசார் செவ்வியல் மேலாண்மை மாநாட்டில் இக்கருத்தை அவர் வெளியிட்டார்.
நிருபர்களிடம் பேசுகையில், “இன்றைக்கு உலகின் தலைச்சிறந்த நிறுவனங்களில் பின்பற்றப்படும் நிர்வாக முறைமைகள், கடந்த 1400 ஆண்டுகளாக முஸ்லிம்களிடம் உள்ளவையே. குறிப்பாக, நபிகளார் காலத்திய, பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளே அவை” என்று அவர் குறிப்பிட்டார்.

“செவ்விய மேலாண்மையின் முக்கியக்கூறாக தலைமைத்துவம் விளங்குகிறது. ‘உங்களில் மூவர் பயணம் செய்தாலும் அதில் ஒருவரைத் தலைவராக ஆக்கிக்கொள்ளுங்கள் (அபூதாவுது-2608)’ என்கிற நபிமொழி தலைமைத்துவத்தின் இன்றியமையாமையைத் தெளிவாக உணர்த்துகிறது” என்று கூறிய அய்குட்,

“தலைமையற்றுப் போனால், அது உறுப்பினர்களின் தான்தோன்றித்தனத்திற்கே வழிவகுக்கும்” என்றும் குறிப்பிட்டார். மேலும், “அது ஒட்டுமொத்த அணித்திறனையும் கடுமையாகப் பாதிக்கும்”. என்றார்.

“செவ்வியல் மேலாண்மையின் மற்றொரு பிரதான கூறு, உயர் நிர்வாகிகள் மாதாந்திரமாகவோ, குறிப்பிட்ட கால அளவிலோ சந்தித்து ஆலோசனை மேற்கொள்வதாகும். இது முஸ்லிம்களின் சமூக வாழ்க்கையேயன்றி வேறில்லை” என்றார் அய்குட். “ஒவ்வொரு சமூகப் பிரச்னைகளின் போதும் முஸ்லிம்கள் கலந்தாலோசித்து தீர்வு காண்பது நபிகளார் காலத்திலிருந்தே உள்ள நடைமுறை என்பதை வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறது” என்ற அய்குட் கிர்பாஸ், “ஆயினும் இந்த, நிர்வாகரீதி சந்திப்பு முறைமைகளை புதிய கண்டுபிடிப்புகளாக மேற்குலகம் சொல்லிக்கொண்டிருப்பது தான் விந்தை” என்றார்.

inneram.com

பாபர் மசூதி தீர்ப்பு – சீதையின் சமையலறையில் கருகிய நீதி!

Babri Mosque Demolition

பாபர் மஸ்ஜித் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி நடுநிலையாளர்களுக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின்படி சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகள், ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் நிலைநாட்டியுள்ளமை உலக அரங்கில் இந்திய நீதிமுறையின் லட்சணத்தைக் கேலிக்கூத்தாக்கி உள்ளது!

நான்கரை நூற்றாண்டுகள் அனுபவ பாத்தியதையுள்ள பாபர் மசூதியை 1992, டிசம்பர் 6 அன்று சங்பரிவாரங்கள் வன்முறையாக ஆக்கிரமித்து இடித்துத் தகர்த்தனர். ஒருவரின் சொத்தை ஆக்கிரமிப்பதும், அவர் உடமைக்குச் சேதம் விளைவிப்பதும் சட்டவிரோதம். இதனைத்தொடர்ந்து மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது அதைவிடக்கொடிய கிரிமினல் குற்றம்.

இதற்கெல்லாம் காரணமானவர்களை விசாரித்துத் தண்டிக்க முயற்சி எடுக்காத நீதிமன்றங்கள், பாபர் மசூதி உரிமை குறித்த வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பு தேசிய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்கும் என்பதோடு மக்களுக்கு இருக்கும் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் தகர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. சட்டப்படியல்லாத இத்தீர்ப்பு(கட்டப்பஞ்சாயத்து), ஏற்கனவே ராமர் பெயரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சேதுக்கால்வாய் திட்டத்தையும் இதே நம்பிக்கையின் அடிப்படையில் நிரந்தரமாக முடக்கி வைக்க வழிகோலும்.

மேலும் படிக்க…

ஆர்.எஸ்.எஸ்ஸாக மாறிய நீதிமன்றம் : அயோத்தி தீர்ப்பு குறித்து திருமாவளவன் சீற்றம்

Thol Thirumavalavan Gallery

சென்னை: அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கில் 3 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் “ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் “என்று கூறினார்.

மேலும் அவ்வறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வரலாற்றை பார்க்காமல் வெறும் நம்பிக்கைகளை வைத்ஹு வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்.

ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டிக்கதக்கது என்று கூறிய திருமாவளவன் 450 ஆண்டுகள் மசூதி இருந்ததும், அது இடிக்கப்பட்டதும் நிகழ்கால வரலாறுகள் என்றும் எவ்வித வரலாற்று ஆதாரம் இல்லாத ராமர் பிறப்பை வைத்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாக கூறியுள்ள திருமாவளவன் மசூதி இடித்தவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதையும் சுட்டி காட்டியுள்ளார்.

முஸ்லீம்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய  நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது அனைவரின் கடமை என்றும் பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை  போராட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

inneram.com