தமிழ் மொழிபெயர்ப்பு சேவையை நேற்று அறிமுகப்படுத்தி அசத்தியது கூகுள் – இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்! தமிழை எந்த மொழிக்கும் மாற்றலாம்!!

தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது.

ஆம் ! இனி தமிழில் நாம் எழுதும் வாக்கியங்களை எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போன்று ஆங்கிலம் அரபி ஜெர்மனி போன் எந்த மொழியில் உள்ள வாக்கியங்களையும் யாருடைய துனையும் இன்றி தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

மற்ற மொழிகளில் உள்ள இணையதளங்களையும் நம் தாய் மொழி தமிழில் யாருடைய துனையின்றியும் படித்துக் கொள்ளலாம்.

எனக்கு ஆங்கிலம் தெரியும் , அரபி தெரியும் என்று யாரும் இனிமேல் பில்டப் கொடுக்க முடியாது.

நமக்கு தமில் தெரிந்திருந்தால் போதும் அது சகல மொழிகளும் தெரிந்ததற்கு சமம்…

Google Translate  என்று சொல்லப்படும் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இன்று 5 இந்திய மொழிகளுக்கான  (Bengali , Gujarati , Kannada , Tamil and Telugu) மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஆச்சிரியமாக உள்ளதா ? நீங்களே முயற்சி செய்து பாருங்கள்…

http://translate.google.com/#ta|en

எனினும் கூகுள் இதை மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று துள்ளியமான மொழிபெயர்ப்பாக (supported language) இதை அறிமுகப்படுத்தவில்லை alpha languages என்று சொல்லப்படும் பரிசோதனை மொழிபெயர்ப்பாக இதை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது இந்த தமிழ் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் முழுவதுமாக முடியவில்லை பரிசோதனையில் உள்ளது போகப் போகப் தமிழ் மொழிபெயர்ப்பின் தரம் மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று மிகத்துள்ளியமாக இருக்கும்.

அபு நபீலா-tntj.net

கடையநல்லூர் கிளைகளின் ஒன்றினைந்த பொதுக் குழு கூட்டம் – சைபுல்லாஹ் காஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் பொதுக் குழுக் கூட்டம் கடந்த 19.06. 2011 ஞாயிறு அன்று சரியாக காலை 10 மணிக்கு ஆரம்பமானது. இந்தப் பொதுக் குழுவில் கடையநல்லூர் டவுண், ரஹ்மானியா புரம், மக்கா நகர், பேட்டையைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக் குழுவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள். தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்களும், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் அனைத்துக் கிளைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

முதலாவதாக சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ஏகத்துவக் கொள்கைக்காக நபிமார்களும், ஸஹாபாக்களும் பட்டதியாகங்களை எடுத்துரைத்து அது போன்று தவ்ஹீத் வாதிகளும் ஏகத்துவத்திற்காக தியாகம் செய்ய ஒரு போதும் தயங்கக்கூடாது என்பதை சுருக்கமாக தனது உரையில் எடுத்துரைத்தார்கள்.

அதன் பிறகு மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி ஷம்சுல்லுஹா அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவர் தனது உரையில் ஸஹாபாக்கள் சத்திய மார்க்கத்திற்கு எதிராக தம்முடைய இரத்த உறவுகளே நின்ற போதும் அவர்கள் குருதி உறவிற்கு சிறிதும் முக்கியத்துவம் வழங்கவில்லை. கொள்கை உறவிற்குத் தான் அவர்கள் முக்கியத்துவம் வழங்கினார்கள். ஆனால் இன்றோ சிலர் சொந்த பந்தங்கள் என்று வரும் போது தம்முடைய கொள்கையில் ஆட்டம் கண்டு விடுகின்றனர் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்து பெண்வீட்டு விருந்து எவ்வளவு பெரிய அனாச்சாரம் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.மேலும் படிக்க..

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு நான்காவது இடம்

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு நான்காவது இடம்பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா, நான்காவது இடத்தில் உள்ளது. பெண் சிசுக் கொலை, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில். உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. காங்கோ குடியரசு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக் இந்தியா, சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.
பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வ தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் 3 நாடுகள் தெற்காசியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் கொடுமைகள், சுகாதார சீர்கேடு, பாலியல் அல்லாத கொடுமைகள், கலாச்சார ரீதியிலான சித்திரவதைப் பழக்கவழக்கங்கள், மதம் அல்லது பாரம்பரியம் சார்ந்த பெண்களுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், கடத்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாடுகள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை பெண் சிசுக் கொலை, சிசுக் கொலைகள், பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம். 2009ம் ஆண்டு இந்தியாவில் 1 கோடி பேர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியதாக ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவுக்குள் நடந்தவையாகும். மீதமுள்ள 10 சதவீதம் வெளிநாட்டுக் கடத்தல் சம்பவங்களாகும். மேலும் இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
கட்டாயத் திருமணங்களும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாக இருந்துவருகின்றது

maalaimalar.com

குரான் படிக்கிறார் டோனி பிளேர்

லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக  செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.  இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.

சிறுமியை வன்புணர்ந்த இருவருவருக்கு நடுத்தெருவில் தூக்குதண்டனை!

Iran Hanging Image

ஈரான் நாட்டில் 9 வயது சிறுமியை வன்புணர்ந்த இருவருக்கு நடுத்தெருவில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் விபச்சார வழக்குகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன் 9 வயது சிறுமியை வன்புணர்ந்து, அதை வீடியோ படமெடுத்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று தெருவில் மக்கள் முன்னிலையில் வைத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. காவல்துறை வாகனத்தின் மேல் இருவரையும் நிற்க வைத்த நிலையில், கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிய பின்னர் வாகனம் நகர்த்தப்பட்டது. உயிர் பிரிந்தப்பின் இருவரது உடலையும் தூக்குக் கயிற்றிலேயே சிறிது நேரம் மக்கள் காட்சிக்காக அப்படியே விடப்பட்ட பின்னர் காவல்துறையினர் உடலை அப்புறப்படுத்தினர். இதை ஆயிரகணக்கான மக்கள் பார்த்தனர்.

ஈரானில் இருந்து வெளிவரும் பத்திரிக்கையான ஈமா (IMA), கூடியிருந்த பொதுமக்கள் ‘இந்தத் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்தாக’ செய்தி வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் கணக்கிட்டால் இந்த வருடத்தின் 145வது மரண தண்டனை இதுவாகும் என்று ‘அசோசியேட்டட் பிரஸ்’ தெரிவித்துள்ளது. சென்ற வருடம் 179 மரண தண்டனை ஈரானில் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இதனைவிட அதிக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கழகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான், அதிக மரண தண்டனைகள் வழங்கும் நாடாக உலக அளவில் முதலில் இருக்கும் சினாவிற்கு அடுத்தநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

inneram.com