சுனாமியால் பிரிந்த குழந்தை 7 வருடங்களுக்குப் பின் பெற்றோருடன் சேர்ந்த அற்புதம்!


டிசம்பர் 26, 2004. யாராலும் மறக்க முடியாத அந்த தினத்தில்தான் சுனாமி என்ற பேரலைகள் தாக்கி ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். தற்போது இந்த சுனாமியில் சிக்கி உயிர் இழந்து விட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் குடும்பத்தினருடம் மீண்டும் இணைந்த அற்புத சம்பவம் நடைபெற்றுள்ளது.டிசம்பர் 26, 2004. யாராலும் மறக்க முடியாத அந்த தினத்தில்தான் சுனாமி என்ற பேரலைகள் தாக்கி ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். தற்போது இந்த சுனாமியில் சிக்கி உயிர் இழந்து விட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் குடும்பத்தினருடம் மீண்டும் இணைந்த அற்புத சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

 

 

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவையும் அன்றைய தினம் சுனாமி தாக்கியது. அந்த தீவிலுள்ள யுஜோஹ் பரோஹ் என்ற கிராமத்தில் வசித்து வந்த வதி என்ற பெண்ணும் அவருடைய குடும்பமும் சுனாமியினால் இழுத்துச் செல்லப்பட்டனர். வதியின் பெற்றோர்கள் வதியினையும் மற்ற இரு குழந்தைகளையும் காப்பாற்றிட பெரு முயற்சி மேற்கொண்டனர். மற்ற இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முடிந்த பெற்றோரினால் வதியைக் காப்பாற்ற இயலவில்லை. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வதியினை யாரும் அதன் பிறகு பார்க்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 21.12.2011 அன்று வதியின் தாத்தாவான இப்ராஹிம் வீட்டிற்கு ஒரு பெண்ணை அழைத்து வந்தார் இப்ராஹிமின் நண்பர். பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இந்தச் சிறுமி வதியைப் போல் இருந்ததால் அவரை விசாரித்திருக்கிறார் அந்த நண்பர். தாத்தா இப்ராஹிமின் பெயர் தவிர வேறு பெயர் நினைவில்லை என்றும் தனக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் உண்டு என்ற விபரத்தையும் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை இப்ராஹிமின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் அவர்.

உடனடியாக வதியின் தந்தைக்கும் தாயாருக்கும் தகவல் தரப்பட்டு அவர்கள் வந்து பார்த்தனர். சிறுமியின் உடலில் இருந்த மச்சத்தினையும் தழும்புகளையும் வைத்து அது வதிதான் என உறுதிப்படுத்தினார் தாய் யுஸ்னியார். தாயைக் கண்டதும் பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டார் வதி. வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட வதி ஒரு பெண்ணினால் தத்து எடுக்கப்பட்டு பிச்சை எடுக்க வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரத்தையும் வதி தெரிவித்துள்ளார். பந்தா ஏக் என்ற இடத்திலிருந்து பேருந்தின் மூலமாக இப்ராஹிமின் ஊரான மியுலோப் என்ற ஊருக்கு வந்துள்ளார் வதி. 7 வருடங்களுக்கு பின்பு தனது குடும்பத்தினருடன் வதி சேர்ந்தது அற்புதமான நிகழ்வுதானே!

inneram.com

பின்னூட்டமொன்றை இடுக