சவுதி செல்கிறார் மன்மோகன் சிங்!

பிப்ரவரி கடைசி வாரத்தில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் சவுதி அரேபியா நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று சவுதி அரேபியா தூதர் பைசல் எச்.டிராட் தெரிவித்தார்.

2006 ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ், பிரதமர் மன்மோகன்சிங்கை தங்களது நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்ததாகவும், அதை ஏற்று மன்மோகன்சிங் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் சுற்றுப்பயணத்தின் போது சவுதி அரேபியா நாட்டு சிறையில் உள்ள இந்திய கைதிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஒப்பந்தம் உள்பட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் அவர் கூறினார்.  இந்நேரம். காம்-என்ற தளத்திலிருந்து…

முஸ்லிம் பிரதமர் வேண்டும் : அமர்சிங் கூறுகிறார்!

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மனம் புண்பட்டுள்ள முஸ்லிம்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியிலிருந்து அண்மையில் விலகிய அமர்சிங் கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமர்சிங் அண்மையில் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார். இந்நிலையில் மும்பை பீவண்டி சட்டசபைத் தொகுதிக்கு நடைபெறம் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அபூ அஜ்மியின் மகன் பர்ஹான் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அமர்சிங், முஸ்லிம்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் இந்தியாவின் பிரதமராக முஸ்லிம் ஒருவர் வரவேண்டும் என்று கூறினார்.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி மற்றும் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட எந்த தலைவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால், சீக்கியரான மன்மோகன் சிங் பிரதமர் பதவியேற்ற பின், 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியருக்கு எதிரான கலவரத்திற்கு மன்னிப்புக் கோரினார் என்றும் அமர்சிங் கூறினார்.

இந்நேரம். காம்-என்ற தளத்திலிருந்து….

அமெரிக்காவில் தொடர்ந்து கர்ப்பமடையும் ஆண்கள்!

அமெரிக்கா: கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு ஆண்மகன் ஒருவர் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள  போகிறார். அமெரிக்கா, ஓரிகான் மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன் பீட்டில் என்ற ஒரு ஆணுக்கு, குழந்தை பிறந்தது. அவரை அடுத்து தற்போது, கலிபோர்னியா மாநிலத்தில், ஸ்காட் மூர் என்ற ஆண், கர்ப்படைந்துள்ளார்.பெண்ணாகப் பிறந்து, லாரா என்ற பெயருடன் இருந்த ஸ்காட் மூர், சில ஆண்டுகளுக்கு முன் ஆணாக மாற விரும்பி, அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

எனினும், உடலில் பெண்ணுக்கான உள்ளுறுப்புகள் எதுவும் நீக்கப்படவில்லை. இவரைப் போலவே தாமஸ் என்பவரும், பெண்ணாகப் பிறந்து, ஆணாக மாறினார். ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவரும், 2007ல் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.இவர்களில் ஸ்காட் மூருக்கு, உடல் உள் உறுப்புகள், பெண்ணுக்கு இருப்பது போலவே உள்ளதால், செயற்கை கருவூட்டல் முறையில், கடந்த ஜூனில், மகப்பேறு கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, ஸ்காட் மூர் வயிற்றில் குழந்தை வளர்கிறது. வரும் பிப்ரவரியில், அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. இது குறித்து, ஸ்காட் மூர் கூறுகையில், நாங்கள் இருவரும், ஆவலுடன் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். மிக மகிழ்ச்சியாக உள்ளது. நான் கருவுற்ற செய்தியை முதன்முதலில் கேட்டது முதல்  உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்றார். இச்செய்தியை, பிரிட்டனிலிருந்து வெளியாகும், “டெய்லி மெயில்’ என்ற தினசரி பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்நேரம். காம்-என்ற தளத்திலிருந்து….

முஸ்லிம்கள், பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிக்கை

புதுவை : புதுச்சேரி முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினருக்கு அறிவித்த இட ஒதுக்கீட்டை, வரும் கல்வியாண்டிற்குள் அமல்படுத்த வேண்டும் என, சமூக நீதிப் பேரவையின் நிறுவன தலைவர் விஸ்வநாதன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.

புதுச்சேரி சமூக நீதிப் பேரவை கூட்டம் எனது (விஸ்வநாதன்) தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி  பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக கண்ணோட்டத்தோடு அமைக்கப்பட்டது. கடந்த காலங்களில் சமுதாயத்திற்கான அங்கீகாரம் தொடர்பாக சமூக நீதிப் பேரவை மூலம்  பல்வேறு திட்ட அறிக்கைகளை கொடுத்துள்ளோம். அப்போது ஆணையராக இருந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக கண்ணோட்டத்தோடு குறைகளை சரி செய்தனர். ஆனால் இப்போதுள்ள ஆணைய உறுப்பினர்கள் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் வேண்டியவர்களாக செயல்படுவதால் ஆணையத்தின் செயல்பாடுகளில் குறைபாடு உள்ளது.

இஸ்லாமியர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அறிவித்த திட்டங்களை அரசு நிறைவேற்றாமல் இருப்பது வஞ்சிக்கின்ற செயலாக உள்ளது. இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினருக்கு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டிற்குள் அமல்படுத்த வேண்டும்.மிக மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை சரிசமமாக இருப்பதற்கேற்ப 33 சதவீதத்தை 60:60  என்று சமமாக பிரித்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும், மாநில அரசையும் சமூக நீதிப்பேரவை வற்புறுத்துகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு விஸ்வநாதன் எம்.எல்.ஏ., கூறினார். அமைப்பாளர் சம்பந்தம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஈஜிப்ட் ஏர் விமானத்தில் புகை 320 பயணிகள் உயிர் தப்பினர்!

ஜித்தா: சவூதி துறைமுக நகரான ஜித்தாவில் உள்ள அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை எகிப்து நாட்டிற்கு புறப்பட தயாராக இருந்த ஈஜிப்த் ஏர் என்ற எகிப்திய பயணிகள் விமானம் ஒன்றில் திடீரென கரும் புகையுடன் கூடிய வாசம் வந்ததை தொடர்ந்து அவ்விமானம் உடனடியாக ஓடுபாதையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

போயிங் 777, எண் 607 என்ற விமானம் 320 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த்து அப்போது அதன் பின்புறத்திலிருந்து எரிந்து கருகும் வாசம் வந்தது இதனை தொடர்ந்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர், விசாரணை குழுவினர் விசாரணைக்காக அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்றும் விமான நிலைய தலைமை இயக்குனர் மாஸின் கஷோகி தெரிவித்தார் மேலும் தீயணைப்பு படையினர் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மின்சார வயர்கள் எரிந்ததினால் இந்த வாசம் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது

ஆனால் இதுவரையில் அதற்கான காரணம் கண்டறியப்படவில்லை விமான நிலையத்தின் தேர்ச்சி பெற்ற பொறியாளர்கள் தொடர்ந்து விமானத்தை பரிசோதித்து கொண்டிருப்பதாகவும் புகை வந்ததிற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் காஷோகி கூறினார்.இதனிடையே பயணிகள் பத்திரமாக வெயிட்டிங் லவுஞ்சுக்குள் அமர வைக்கப்பட்டனர் அவர்களிடையே எந்த பதற்றமோ பயமோ இன்றி நல்ல நிலமையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

துபையில் சிறுவனை வன்புணர்ந்து கொன்றவனுக்கு மரண தண்டனை!

துபை: ஐக்கிய அரபு நாடான துபையில் கடந்த நவம்பர் மாதம் நான்கு வயது சிறுவனை கழிப்பறையில் வைத்து வன்புணர்ச்சி செய்து கொலை செய்த அந்நாட்டு பிரஜை ஒருவருக்கு துபை கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது.

முப்பது வயது நிரம்பிய துபை பிரஜையான அவர் கப்பல் கேப்டனாக பணிபுரியும் அவர் ஏற்கனவே பாலியல் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து கடந்த ஆண்டுதான் விடுவிக்கப்பட்டார் நீதிபதி தனது தீர்ப்பில் கேப்டன் அந்த குழந்தையிடம் கருணை காட்டாததினால் இந்த நீதிமன்றமும் அவருக்கு கருணை காட்ட வில்லை என்று கூறியிருக்கிறார். இத்தீர்ப்பு குறித்து பாஹிம் முனீர் என்பவர் கூறும்போது இத்தீர்ப்பு கூறப்பட்டபோது நீதிமன்றமே அமைதியானது என்றார்.

தலைமை பிராஸிக்கூட்டர் யூசுஃப் ஃபௌலாஸ் கூறும்போது கடந்த 2009  நவம்பர் மாதம் 29 ஆம் தேதி ஈத் தினத்தன்று பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மூசா குதாப்க்ஷ் என்ற சிறுவனை வன்புணர்ந்து கொன்ற இவனுக்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனையை தீர்ப்பளிக்கும்படி நீதிபதியை கேட்டு கொண்டதாக தெரிவித்தார். விசாரணையில் குற்றவாளி சிறுவனை கழிப்பறைக்கு அழைத்து சென்றதையும் அங்கு அவனை வன்புணர்ந்ததையும் மனித நடமாட்டம் கேட்டதால் அச்சிறுவனை தலையை தரையில் அடித்து கொன்றதாக ஒப்புகொண்டான்.

தீர்ப்பின் போது அச்சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.இதனை தொடர்ந்து மருத்துவர்கள் கொலையாளியை மருத்துவ பரிசோதனை செய்து அவ்ர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக சான்றளித்தனர், அடுத்த 15 தினங்களில் இவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் எனத்தெரிகிறது

ரூ3600 கோடியில் விஐபிக்களுக்கு ஹெலிகாப்டர்கள்: இத்தாலி நிறுவனத்திடம் வாங்க திட்டம்

டெல்லி: மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகள் குறித்து பேசிவரும் நிலையில், விஐபிக்களின் போக்குவரத்துக்காக ரூ.3,600 கோடி செலவில் புதிதாக 12 ஹெலிகாப்டர்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த 12 ஹெலிகாப்டர்களையும் இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற ஒரே நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் வழங்க துடித்துக் கொண்டிருக்கிறது.

இதுதொர்பான ஒப்பந்தங்கள் எல்லாம் கிட்டதட்ட முடிந்து விட்டதாகவே தெரிகிறது. ஆனால், விஐபி ஹெலிகாப்டர்கள் புதிதாக வாங்குவதற்கு ஏற்கனவே திட்டமிட்டபடி நிதியமைச்சகம் ரூ.1,400 கோடிக்கு மட்டுமே ஒப்புதல் தந்துள்ளது.

இதற்கு மிஞ்சிய தொகை தருவதற்கு நிதியமைச்சகம் தயக்கம் காட்டிவருகிறது. இதுதொடர்பாக இரண்டு அமைச்சகங்களுக்கும் இடையே கடந்த ஐந்து மாதங்களாகவே பிரச்சனை நடந்து வருவதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு கொள்முதல் செய்வதற்கான அரசு ஒப்பந்தத்தில் பல விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக டாமன் எம்.பி ஒருவரும் மத்திய புலனாய்வு மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.

விஐபி ஹெலிகாப்டர்களுக்கான செலவு, முன்னணி போர் விமானம் வாங்குவதற்கு ஆகும் செலவை நெருங்குவதாக இருப்பது தெரிந்த போதிலும் பாதுகாப்பு அமைச்சகம் இதில் தனி அக்கறை காட்டிவருவதாகவும் அந்த எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

உலகெங்கும் அரசுகள் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் கூட சமீபத்தில் அதிபருக்கான அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதிக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு புதுகட்டுப்பாடு

துபாய் : சவுதி அரேபியா சென்று பணியாற்ற விரும்பும் இந்தியர்கள், பணியாளர் விசா பெற, போலீசாரின் தடையின்மை சான்றிதழ் பெற்று (கிளியரன்ஸ் சர்டிபிகேட்) சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, “அரபு நியூஸ்’ என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:சவுதி அரேபியாவில் பணியாற்ற விசா பெற விண்ணப்பிக்கும் இந்தியர்கள் அனைவரும், அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு முன், போலீசாரின் தடையின்மை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறையை கண்டிப்பாகப் பின்பற்றும்படி, இந்தியாவில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு பணி நியமன நிறுவனங்கள் ஆகியவை, இந்த புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என, டில்லியில் உள்ள சவுதி தூதரகம் மற்றும் மும்பையில் அமைந்துள்ள துணை தூதரகம் ஆகியவையும் கேட்டுக் கொண்டுள்ளன.

“இந்த புதிய சட்டத்தால், குற்றப்பின்னணி உடையவர்கள், சவுதி அரேபியாவிற்கு வருவது தடுக்கப்படும்’ என, பணி நியமனம் செய்யும் நிறுவனம் ஒன்றின் மேலாண்மை இயக்குனரான இப்ராஹிம் குட்டி என்பவர் தெரிவித்தார்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், “”இந்தப் புதிய சட்டம் இரு நாட்டு ஒப்புதலின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் மட்டுமே, சவுதிக்கு வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தலாம்” என்றார்.

டெல்லியில் மூடு பனிக்கிடையே குடியரசு தின அணிவகுப்பு

இந்தியாவின் 60வது குடியரசு தினமான இன்று தலைநகர் டெல்லியில் நிலவிய கடுமையான மூடுபனியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க குடியரசு தின அணிவகுப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இன்று காலை 9.45 மணிக்கு டெல்லியிலுள்ள அமர் ஜவான் நினைவுச் சதுக்கத்தில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மன்மோகன் சிங்.

அமர் ஜோதி சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் வணக்கம் செலுத்த, அவருடன் முப்படைகளின் தலைமைத் தளபதிகளும் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தினர். அருகில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை தலை கீழாக நிறுத்தி வணக்கம் செலுத்த, அஞ்சலி கீதம் முழங்கப்பட்டது.

டபஐ டட்ர்ற்ர்ஊஐகஉஅதன் பிறகு டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தின அணிவகுப்பு துவங்கியது. அணிவகுப்பு மரியாதையை ஏற்க வந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலையும், அரசு விருந்தினராக தென் கொரிய நாட்டின் பிரதமரையும் பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்றார்.

தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கொடி வணக்கம் செலுத்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், நாட்டின் பாதுகாப்பிற்காக வீரசேவை புரிந்த மூவருக்கு இராணுவ உயரிய விருதான அசோக் சக்ராவை வழங்கி கெளரவித்தார்.

மேஜர் சிறிராம் குமார், மேஜர் மோஹித் சர்மா, ஹவில்தார் இராஜேஷ் குமார் ஆகியோருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மேஜர் மோஹித் குமாருக்கு பதிலாக அவரது மனைவி மேஜர் ரிஷிமாவும், ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான குப்வாராவில் நடந்த மோதலில் வீரமாகப் போராடி உயிர் நீத்த ஹவில்தார் இராஜேஷ் குமாருக்கு வழங்கப்பட்ட அசோக் சக்ராவை அவரது மனைவியும் பெற்றுக் கொண்டனர்.

இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையை பறைசாற்றும் குடியரசு தின அணிவகுப்பினை அணிவகுப்பு கட்டளைத் தளபதி பரம்ஜித் சிங், தனி வாகனத்தில் வந்து குடியரசுத் தலைவருக்கு வணக்கம் செய்துச் செல்ல துவங்கியது.

டோக்ரா ரெஜிமெண்ட், 61வது குதிரைப் படை ஆகியோர் அணிவகுத்து வர, அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அதி நவீன போர் வாகனமான அர்ஜூனா டாங்கிகள் அணி வகுத்து வந்தன.

அவைகளைத் தொடர்ந்து ராக்கெட் ரெஜிமெண்ட் என்றழைக்கப்படும் பல்குழல் பீரங்கிப் படையும், போர்க் களத்தில் முன்னேற்றத்தை உறுதி செய்யும் சர்வாத்ரா பொறியல் படை வாகனங்களும், அவற்றைத் தொடர்ந்து களத்திலிருந்து தகவலளிக்கும் அதிநவீன தகவல் தொடர்பு மற்றும் சம்யுக்தா ராடார் படை வாகனங்களும் அணி வகுத்து வந்தன. டெல்லியில் மூடு பனிக்கிடையே குடியரசு தின அணிவகுப்பு புதுடெல்லி, செவ்வாய், 26 ஜனவரி 2010( 12:59 ஐநப )

இந்தியாவின் 60வது குடியரசு தினமான இன்று தலைநகர் டெல்லியில் நிலவிய கடுமையான மூடுபனியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க குடியரசு தின அணிவகுப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இன்று காலை 9.45 மணிக்கு டெல்லியிலுள்ள அமர் ஜவான் நினைவுச் சதுக்கத்தில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மன்மோகன் சிங்.

அமர் ஜோதி சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் வணக்கம் செலுத்த, அவருடன் முப்படைகளின் தலைமைத் தளபதிகளும் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தினர். அருகில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை தலை கீழாக நிறுத்தி வணக்கம் செலுத்த, அஞ்சலி கீதம் முழங்கப்பட்டது.

அதன் பிறகு டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தின அணிவகுப்பு துவங்கியது. அணிவகுப்பு மரியாதையை ஏற்க வந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலையும், அரசு விருந்தினராக தென் கொரிய நாட்டின் பிரதமரையும் பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்றார்.

தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கொடி வணக்கம் செலுத்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், நாட்டின் பாதுகாப்பிற்காக வீரசேவை புரிந்த மூவருக்கு இராணுவ உயரிய விருதான அசோக் சக்ராவை வழங்கி கெளரவித்தார்.

மேஜர் சிறிராம் குமார், மேஜர் மோஹித் சர்மா, ஹவில்தார் இராஜேஷ் குமார் ஆகியோருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மேஜர் மோஹித் குமாருக்கு பதிலாக அவரது மனைவி மேஜர் ரிஷிமாவும், ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான குப்வாராவில் நடந்த மோதலில் வீரமாகப் போராடி உயிர் நீத்த ஹவில்தார் இராஜேஷ் குமாருக்கு வழங்கப்பட்ட அசோக் சக்ராவை அவரது மனைவியும் பெற்றுக் கொண்டனர்.

இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையை பறைசாற்றும் குடியரசு தின அணிவகுப்பினை அணிவகுப்பு கட்டளைத் தளபதி பரம்ஜித் சிங், தனி வாகனத்தில் வந்து குடியரசுத் தலைவருக்கு வணக்கம் செய்துச் செல்ல துவங்கியது.

டோக்ரா ரெஜிமெண்ட், 61வது குதிரைப் படை ஆகியோர் அணிவகுத்து வர, அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அதி நவீன போர் வாகனமான அர்ஜூனா டாங்கிகள் அணி வகுத்து வந்தன.

அவைகளைத் தொடர்ந்து ராக்கெட் ரெஜிமெண்ட் என்றழைக்கப்படும் பல்குழல் பீரங்கிப் படையும், போர்க் களத்தில் முன்னேற்றத்தை உறுதி செய்யும் சர்வாத்ரா பொறியல் படை வாகனங்களும், அவற்றைத் தொடர்ந்து களத்திலிருந்து தகவலளிக்கும் அதிநவீன தகவல் தொடர்பு மற்றும் சம்யுக்தா ராடார் படை வாகனங்களும் அணி வகுத்து வந்தன.

85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?

பெய்ரூட்: எத்தியோப்பியாவைச் சேர்ந்த விமானம் ஒன்று 85 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் மத்திய தரைக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 85 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இன்று அதிகாலையில், பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய ஐந்து நிமிடங்களில் இந்த விமானம் விபத்தில் சிக்கியது.

விமானம் கிளம்பிய ஐந்து நிமிடத்திலேயே அது ரேடாரின் கண்களிலிருந்து மறைந்தது. விபத்துக்குள்ளான விமானம் போயிங் 737 ரக விமானம் எனக் கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்த பயணிகளில் 50 பேர் லெபனான் நாட்டவர் ஆவர். மற்றவர்கள் எத்தியோப்பியர்கள் எனத் தெரிகிறது. 7 பேர் விமான ஊழியர்கள் ஆவர்.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு இந்த விமானம் கிளம்பியது.

விமானம் தீப்பிடித்த நிலையில் கடலில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதில் இருந்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது.

ஈரான் விமானத்தில் தீ: 46 பேர் காயம்..

இதற்கிடையே ஈரானின் வடகிழக்கு நகரான மஷ்ஹத் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய விமானம் ஒன்றில் தீப் பிடித்தது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 46 பேர் காயமடைந்தனர்.

விமானத்தின் பின் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அதில் 157 பயணிகளும், 13 விமான பணியாளர்களும் இருந்தனர்.

டுபோலேவ் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. தீ விபத்தில் விமானம் பெருக்க சேதமடைந்தது.

ஈரானின் விமானங்கள் சமீபகாலமாக அடிக்கடி விபத்தை சந்தித்து வருகின்றன. இதற்கு பராமரிப்புக் குறைபாடே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
Read: In English
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளால் ஈரானால் கடந்த 20 ஆண்டுகளாக புதிய விமானங்களை வாங்க முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.