தொப்பி, ஸ்கார்ப், டர்பன் அணிய முஸ்லீம், சீக்கியர்களுக்கு நியூயார்க் அனுமதி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நியூ யார்க் : நியூயார்க்கில் உள்ள அனைத்து போக்குவரத்து அமைப்புகளிலும் பணியாற்றும் முஸ்லீம், சீக்கியர்களுக்கு தொப்பி, தலைப்பாகை அணிவதில் விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து நியூயார்க் மாகாணத்தில் பேருந்து, ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் தலையில் தொப்பி, தலைப்பாகை, டர்பன், ஸ்கார்ப், ஹிஜாப் உள்ளிட்டவை அணியும் போது அதில் போக்குவரத்து அலுவலகத்தின் சின்னம் பொறிக்கப்பட்டதை தான் அணிய வேண்டும் என்று கட்டுபாடு விதிக்கப்பட்டது.

மார்ச் 2002ல் அமுல்படுத்தப்பட்ட உத்தரவுக்கு சீக்கியர்களும் முஸ்லீம்களும் தங்களை தனிமைப்படுத்துவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சட்டத்தை வாபஸ் பெற மெட்ரோ போக்குவரத்து அமைப்பு மறுத்தது. 2004ல் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக 8 ஆண்டுகள் கழித்து முஸ்லீம்களும் சீக்கியர்களும் எவ்வித கட்டுபாடுகளும் இன்றி தலைப்பாகை, தொப்பி, ஸ்கார்ப் உள்ளிட்டவற்றை அணியலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சீக்கிய கூட்டமைப்பின் தலைவர் அமர்தீப் சிங் இது வரை தங்கள் நம்பிக்கை அல்லது வேலை இரண்டில் ஒன்றை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலையிலிருந்து சிறுபான்மையினரை காப்பாற்றிய தீர்ப்பை வரவேற்பதாகவும் இரட்டை கோபுர தாக்குதலுக்காக பழிவாங்கபட்ட அப்பாவி சீக்கிய மற்றும் முஸ்லீம் மக்களின் துயரம் முடிவுக்கு வந்ததற்காகவும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

குஜராத் கலவரத்தில் நரபலி மோடியின் பங்கு — உரிய விசாரணை தேவை– ராஜூ ராமச்சந்திரன்

கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த கலவரத்தில் அம்மாநில முதல்வர் மோடியின் பங்கு பற்றி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமிக்கஸ் கரியான ராஜு ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

 குல்பர்க் ஸொஸைட்டி கலவரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம் பி இஹ்ஸான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மோடிக்குத் தொடர்பில்லை என எஸ் ஐ டி அறிக்கை கொடுத்திருந்தது. குல்பர்க் ஸொஸைட்டி வழகுக்கு மட்டும் கொடுத்த அறிக்கையை வைத்துக்கொண்டு குஜராத் கலவரத்தில் மோடிக்குத்தொடர்பில்லை என பாஜகவினரும் அவர்களது ஆதரவாளர்களும் கூறினர். இதுபற்றி விளக்கமாக ரமது தளத்தில் வணங்காமுடி விடைப்பகுதியிலும் விவரிக்கப்பட்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. குஜராத் கலவர வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த அமிகஸ் கரி ராஜூ ராமச்சாந்திரன் தமது அரிக்கையைத் தாகல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–

குஜராத் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.காவல்துறை அதிகாரிகள் பலரும் சில அரசு வழக்கறிஞர்களும் சரியான முறையில் சட்டப்படிச் செயல்படவில்லை; கலவர வழக்குகளை அவர்கள் சரியாகக் கையாளவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்புக்குப் பின்னர் அதுதொடர்பான செய்தி குஜராத் முழுவதும் பரப்பப்பட்ட விதம் பற்றியும் அதைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டதா என்பது குறித்தும் தீர விசாரிக்க வேண்டியுள்ளது.

மேலும் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 11 மணியளவில் முதல்வர் மோடியின் இல்லத்தில், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதாக அப்போதைய உளவுப் பிரிவு துணை ஆணையரான சஞ்சீவ் பட் கூறியதில் உண்மை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடியின் தலைவர் கூறியுள்ளார்.

ஆனால், அப்போது மூத்த உளவுப் பிரிவு அதிகாரியாக சஞ்சீவ் பட் இருந்தார் என்பதால், அவர் கூட்டத்தில் கலந்து கொண்டாரா என்பது குறித்து ஆராய வேண்டியது அவசியமாகிறது. அவர் கலந்து கொண்டதற்கான நேரடி ஆதாரம் பட்டிடம் இல்லாவிட்டாலும் கூட, சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரம் இருக்கிறதா எனன்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் இந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்று முதல்வர் மோடி கூறியதாக பட் கூறியுள்ள வாக்குமூலம் முக்கியமானது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். மோடி அப்படிக் கூறினாரா இல்லையா என்பது உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம். ஒரு வேளை அவர் அப்படிச் சொல்லியிருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். மேலும் எனது கருத்துப்படி, மோடி மீது தொடக்க நிலையிலேயே 1 153A (1) (a) மற்றும் (b), 153B (1) (c), 166 மற்றும் 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு  செய்ய முடியும். இருப்பினும் இதுகுறித்து கோர்ட்டே முடிவு செய்ய வேண்டும்.

அகமதாபாத் நகர முன்னாள் இணை ஆணையர் எம்.கே.டாண்டன், அகமதாபாத் முன்னாள் துணை கமிஷனர் பி.பி.கோண்டியா ஆகியோர் மீது ஐபிசி 304A  மற்றும் 166 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது..

நரபலி மோடி நுழைய இங்கிலாந்திலும் தடை?

 

 

 

 

 

 

 

 

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மனித இனப் படுகொலைகள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் 2005 ஆண்டு முதல் அமெரிக்காவில் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தும் நரேந்திர மோடிக்குத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

பிரிட்டன் அரசு மனித உரிமை மீறல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற உள்ளது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை இங்கிலாந்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளதாக மனித உரிமைப் பிரசாரகர்கள் தெரிவித்துள்ளனர்.

2005-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் நுழைய மோடிக்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்திலும் அவர் நுழைய விரைவில் தடைவிதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த தெற்காசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மற்ற நாடுகளில் மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்படுபவர்களை பிரிட்டன் கண்காணிப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் இதுபோன்ற சட்டம் இயற்றப்பட்டால் அதைப் பயன்படுத்தி நரேந்திர மோடி வருவதைத் தடுக்க வேண்டும்.

ஏனெனில் குஜராத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதில் நரேந்திர மோடிக்கு பங்கு உள்ளதாக பல்வேறு மனித உரிமைக் குழுக்களும், ஆம்னஸ்டி உள்ளிட்ட சுயேச்சை அமைப்புகளும் தெரிவித்துள்ளன  என்று  அச்செய்தித் தொடர்பாளர் சுட்டிக் காட்டினார்.

சிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா??

ஏப்ரல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தம்புள்ளை மாநகரில் பௌத்த பிக்குகள் தலைமையில் சுமார் 2000 சிங்கள பௌத்தர்கள் மாபெரும் பேரணியொன்றில் கலந்துகொண்டனர்.

“ரங்கிரி விகாரையை மையமாகக் கொண்ட தம்புள்ளைப் புனித பூமியில் ‘சட்டவிரோதமாக’ நிர்மாணிக்கப்பட்டுள்ள அல் ஹைரியா முஸ்லிம் பள்ளிவாயில் மற்றும் ஹிந்துக் கோவில் என்பவற்றை இடித்துத் தகர்த்து, புனித பூமியைத் தூய்மைப்படுத்துவோம், சிங்கள பௌத்தத்தைக் காக்க அணி திரள்வோம், அந்நிய சக்திகளை வெளியேற்றுவோம்” எனும் எதிர்ப்புக் கோஷங்களை முழங்கியபடி பேரணியாளர்கள் முன்னேறிச் சென்றனர்.

இந்தப் பேரணி இடம்பெறுவதற்கு முதல் நாள் நள்ளிரவில் பள்ளிவாயிலை நோக்கிப் பெட்ரோல் குண்டு ஒன்று எறியப்பட்டிருந்தது. ஆனால், அதன் மூலம் யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்தக் கலவரமான சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை ரத்து செய்யப்பட்டது. தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்கள் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். பேரணியாளர்கள் முஸ்லிம் பள்ளிவாயிலை இடித்துத் தகர்க்கும் நாசகாரப் பணியில் ஈடுபட்டபோது, காவல்துறையினரும் விசேட பாதுகாப்புப் படையினரும் தலையிட்டு, தம்புள்ளை கைரியா முஸ்லிம் பள்ளிவாயிலை மூடி “சீல்” வைத்தனர்.

வெற்றிப் பெருமிதத்தில் மிதந்த இனவாத பௌத்தர்கள் முன்னிலையில், ஒரு முன்னணி பௌத்தப் பிக்கு, “இதற்குப் பின் இந்தப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிமுக்கு சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்க மாட்டோம்,மேலும் படிக்க…

சவூதி: இருநாள் வார விடுமுறை கட்டாயம்?

சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகத் திட்டத்தின் படி, அனைத்து ஊழியருக்கும் (அரசுத்துறை, தனியார்) இரு நாள்கள் வார விடுமுறை வழங்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது.

அமைச்சகத்தின் இத்திட்டம்  பல்லாயிரக்கணக்கான தனியார் துறை ஊழியர்களை மகிழ்ச்சியுறச் செய்துள்ளது.தற்சமயம் சவூதி அரசு அலுவலகங்கள் வியாழன் வெள்ளி இருநாள்கள் வார விடுப்பு அளிக்கும் நிலையில்,  பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் வெள்ளி மட்டுமே வார விடுமுறை அளிக்கின்றன.

சவூதியில் மண்ணில் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நேஷனலிசேஷன் (அ) சவூதிசேஷன் எனப்படும் உள்நாட்டுமயமாக்கல் திட்டப்படி தனியார் நிறுவனங்கள் சவூதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வந்த போதும், ஒப்பீட்டளவில் அரசுத்துறை சார் பணிகளையே சவூதி இளைஞர்கள் விரும்புகின்றனர். அதன் காரணிகளாக, தனியார் துறையின் அதிக வேலை நாள்கள் உள்ளிட்ட அம்சங்கள் இருந்துவந்தன. இந்நிலையில், வார விடுப்புகளைப் பொருத்த வரை, அரசுத் துறையை பின்பற்றி தனியார் நிறுவனங்களும் இருநாள்கள் வார விடுமுறை அளிக்கும்படி பணிக்கப்பட்டால், சவூதி இளைஞர்கள் தனியார் நிறுவனங்களையும் விரும்ப வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பொதுவாக சவூதியின்  வார இறுதிகளாக வியாழன் வெள்ளி அமைவதை வெள்ளி, சனி என்று மாற்றி அமைப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.

பிரசித்திப் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளர் மார்க் எல்.பொகோக் கூறுகையில், இருநாள் வார விடுமுறை மிகவும் வரவேற்கத்தக்கது; ஊழியர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது என்றார். மேலும், “உலகெங்கும் சனி, ஞாயிறு வார இறுதிகளாக அமைகையில் சவூதியில் வியாழன், வெள்ளி என்று அமைவது பொருந்தவில்லை; வேலையளவில் உலகத்தோடு ஒட்ட மூன்று நாள்களே கிடைக்கின்றன” என்று ஆதங்கம் தெரிவித்தார்.

தலால் அல் ஹாதி என்னும் சவூதி இளைஞர் கூறுகையில் “குடும்பத்தோடு செலவிட ஒரு நாள் வாரவிடுப்பு நிச்சயம் போதாமையாகவே இருக்கிறது. அந்த ஒரு நாளிலும் அடுத்தடுத்த நாள்களில் தொடர உள்ள பணியழுத்தம் குறித்தே சிந்திக்க வேண்டியதாகிறது. எனவே, இருநாள் வார விடுப்பை நான் மிகவும் வரவேற்கிறேன்.தாமதமின்றி இதை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்

inneram.com

ஒபாமாவை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் : பிரிட்டிஷ் எம்.பி

லண்டன் : அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை பிடித்து கொடுப்பவருக்கு 10 மில்லியன் பவுண்ட் வழங்கப்படும் என்று அறிவித்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிலாளர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

2008 மும்பை தாக்குதலில் பங்குண்டு என்று கூறி பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையத்தை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் டாலர் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.

ஹபீஸ் சையது தலைக்கு விலை வைத்த அமெரிக்காவின் செயல் உலக முஸ்லீம்களை இழிவுபடுத்தும் செயல் என்று கூறிய லார்ட் நசீர் அஹ்மது ஒபாமாவையும் புஷ்ஷையும் பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் அளிப்பதாக கூறியதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

லார்ட் அஹ்மதின் இத்தகைய கருத்துகள் ஏற்று கொள்ள முடியாதவை என்று கூறிய தொழிலாளர் கட்சி தற்காலிகமாக அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. தான் அவ்வாறு ஒபாமாவின் தலைக்கு விலை வைக்கவில்லை என்று கூறியுள்ள லார்ட் அஹ்மது ஈராக்கிலும் ஆப்கனிலும் நடத்திய கொடூரங்களுக்காக புஷ்ஷூம் டோனி ப்ளேயரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று மட்டும் தான் கூறியதாக சொன்னார்.

அமெரிக்கா திடீர் பல்டி: ஈரான் அணுசக்தித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கத் தயார்!

மக்கள் நலத்தினை  முன்னிறுத்தும் அணுசக்தித் திட்டங்களுக்காக ஈரான் செயற்பட்டால் அதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க அணுகுமுறை மாற்றம் அடைந்துவருவதை இச்செய்தி தெரிவிக்கிறது.

அணுஆயுதங்களை ஈரான்  தயாரிப்பதை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா அவையில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் முறையிட்டு வந்தன. இதையே காரணம்காட்டி ஈரான் மீது இராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டி அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தன. ஆனால், ஈரான் சுப்ரீம் தலைவர் அலி கமேனி, அதிபர் அகமதி நிஜாத் ஆகியோர், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பதிலடி கொடுத்தனர்.

இதற்கிடையில், ஈரானில் செயல்படுத்தப்படும் அணுசக்தித் திட்டங்களை பார்வையிட ஐ.நா. குழுவை அனுமதிக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இவ்விரு தரப்புக்கும் துருக்கி உள்பட சில நாடுகள் சமரச முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன.  ஈரானிலும், அமெரிக்கா, சவூதி உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என்று முன்னாள் அதிபர் ரஃப்சஞ்சானிகருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்பாரா மாற்றமாக “அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை என்பதைஈரான் நிரூபித்தால், மக்கள் நலனுக்கான அணுசக்தித் திட்டங்களை ஏற்றுக் கொள்வோம்” என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்த தகவலைதுருக்கி பிரதமர் தய்யிப் எர்தோகனிடம் கூறி, அதை ஈரான் தலைவர்களிடம் தெரிவிக்கும்படி ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, ஒபாமாவின் தகவலைஅலி கமேனியிடம் தய்யிப் கடந்த வாரம் தெரிவித்து விட்டார் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன

inneram.com

அமெரிக்காவின் “டைம்” இதழின் டாப் 100 மனிதர்கள்

மூன்றாம் இடத்தில் (?)நரபலி மோடி.
உலக புகழ் பெற்ற அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை இந்த வருடத்திற்குறிய 100 முன்னனி மனிதர்களின் பட்டியலை வெளியிடுவதற்குறிய வாக்கெடுப்பை இணையதளம் மூலம் நடத்தி வருகின்றது.
இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மூன்றாவது இடம் என்று அதன் தற்போதைய நிகழ்வுகள் சொல்கின்றன. ஆம் இது வரைக்கும் டாப் 100 மனிதர்கள் பட்டியலில் மோடிக்கு ஆதரவாக பதியப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை  256003 மோடிக்கு எதிராக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 265664 ஆதரவாக கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இவர் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்று வாக்குப் பதிவாகியுள்ளது.
 
மோடி பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று வாக்களித்தவர்களை விட இவர் பட்டியலில் இடம் பெறக் கூடாது என்று சுமார் பத்தாயிரம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளார்கள்.
 
இவரைப் பற்றி டைம் இதழின் வாக்களிக்கும் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியில் இந்தியாவை வழிநடத்திச் செல்ல சிறந்த பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் பல்லாயிரக் கணக்கான முஸ்லீம்களை இவர் கொலை செய்த காரணத்தினால் இவர் முஸ்லீம்களுக்கு எதிரி என்ற பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும் இதுவரைக்கும் (இந்தச் செய்தி எழுதப்படும் வரை) மோடிக்குக் கிடைத்திருக்கும் வாக்கின் அடிப்படையில் டாப் 100 மனிதர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்மணி

அமெரிக்காவின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்மணிகராச்சி: கடந்த வெள்ளிக்கிழமை (30.03.2012) பயங்கரவாதக் குற்றச்செயலில் ஈடுபட்டார் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய நரம்பியல் நிபுணரான டாக்டர் ஆஃபியா ஸித்திக்கியை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, பாகிஸ்தான் தலைநகரில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது.

இப்பேரணியில் கலந்துகொண்டு கருத்துரைத்த பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் கராச்சி பிராந்தியத் தலைவர் முஹம்மத் ஹுஸைன் மெஹந்தி, “ஆஃபியா ஸித்தீக்கியின் வழக்கில் அவருக்கு 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானதும் முற்றிலும் பாரபட்சமானதுமான தன்னுடைய போக்கை அமெரிக்க நீதிமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது ” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த சுலோகங்களைத் தாங்கிய ஆயிரக்கணக்கான பேரணியாளர்கள், ஆஃபியா ஸித்தீக்கியின் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வராமல் மௌனம் சாதிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கோழைத்தனத்தையிட்டுத் தமது அதிருப்தியை வெளிக்காட்டவும் தவறவில்லை.

2008 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கஸ்னி காவல் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அமெரிக்க எஃப்.பி.ஐ. அதிகாரிகள் மீதும் அமெரிக்கப் படைவீரர் ஒருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2010 செப்டெம்பர் மாதம் ஆஃபியா ஸித்திக்கிக்கு நிவ் யோர்க் நீதிமன்றம் 86 வருடச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்புக் குறித்து மேன்முறையீடு செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று குழந்தைகளின் தாயான ஆஃபியா ஸித்தீக்கி தன்னுடைய குழந்தைகள் சகிதம் 2003, மார்ச் 30 ஆம் திகதி கராச்சியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.

பயங்கரவாதக் குற்றச் செயல்களோடு தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் அமெரிக்கப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக மறுநாள் உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

அதைத்தொடர்ந்து அவரைப்  பற்றிய மிக ரகசியமாகவே பேணப்பட்ட நிலையில், அவர் காபூலில் உள்ள பக்ராம் சித்திரவதை முகாமுக்கு இரகசியமாக இடமாற்றப்பட்டு, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தகவல் தெரிவித்தன.

ஆஃபியா மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டு போலியானது, நீதியான விசாரணை மறுக்கப்பட்ட நிலையில் மூன்று குழந்தைகளின் தாயான அவர் தொடர்ச்சியாக மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவது சர்வதேச மனித விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது என உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான ஆர்வலர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் உரத்துக் குரல் எழுப்பத்தொடங்கிய நிலையில், மேற்படி போலிக் குற்றச்சாட்டின் பேரில், ஆஃபியா 2008 ஜூலை மாதம் நிவ்யோர்க்குக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு 2010 பெப்ரவரியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின் பின் நிவ்யோர்க் கார்ஸ்வெல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆஃபியாவின் உடல்நிலையும் மனோநிலையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய சகோதரியைச் சந்திக்க பலதடவை அனுமதி கோரியும் சிறை நிர்வாகத்தால் தொடர்ந்தும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் ஆஃபியாவின் சகோதரி டாக்டர் ஃபௌஸியா ஸித்தீக்கி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“கார்ஸ்வெல் சிறைச்சாலை மனிதத்துவத்துக்கு முற்றிலும் எதிரான நிலைமையில் இருக்கிறது.  உண்மையான நீதிக்கும் மனிதாபிமானதுக்கும் எதிரான இத்தகைய பாரபட்சமான நிலைமையை எதிர்த்து, நீதியையும் மனித நேயத்தையும் விரும்பும் அமெரிக்கப் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து குரல்கொடுக்க முன்வரவேண்டும்” என்று டாக்டர் பௌஸியா ஸித்தீக்கி அமெரிக்க மக்களை நோக்கி அழைப்பு விடுத்துள்ளார்.

inneram.com

மாணவர்களின் நலன் கருதி ஐ.பி.எல் போட்டிகளைத் தடை செய்ய கோரிக்கை!

10 ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள  ஐ.பி.எல் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

 

 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

 

தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி முதல் நடைபெற உள்ளது. ஆனால் அதே நாளில் ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது என்ற செய்தியும், அதற்காக செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்களும் கவலை அளிப்பதாக உள்ளது.

 

கிரிக்கெட் மோகம் கொழுந்து விட்டு எரியும் நம் நாட்டில் கல்வி என்பது இரண்டாம் பட்சமாக பார்க்கப் படுகிறது.  வாழ்கையின் முக்கியமான தருணத்தில் உள்ள மாணவர்கள் கிரிக்கெட் போதையில் தங்கள் வாழ்கையை தடுமாறத்திற்கு உள்ளாக்கி விடுவார்களோ என்ற பயம் பெற்றோர்களுக்கும், மாணவர்களின் வாழ்கையில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.

 

ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்காவிட்டால் எதையோ பறிகொடுத்த போக்கில் பல மாணவர்கள் அலைவதும், கிரிக்கெட் போட்டிகளை குறித்து பல மணிநேரம் அரட்டை அடித்து நேரத்தை வீணாக்குவதும், ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்த வேண்டிய பொதுத்தேர்வு நேரத்தில் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

 

ஆபாசத்தின் உச்சக்கட்டத்தை விளையாட்டு போட்டிகளின் வாயிலாக கடை விரிக்கும் கலாச்சாரத்தை இந்தியாவில் துவக்கி வைத்த ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடரை உடனடியாக தடுத்து நிறுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.

 

ஐபிஎல் எனும் குழுவை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பி.சி.சி.ஐ  மாணவர்களின் வாழ்க்கையை குறித்து யோசிக்காமல் முடிவெடுத்ததில் வியப்பில்லை.

 

பணம் சம்பாதிப்பதற்காக யாரைப் குறித்தும் கவலைப்படாத சாராய வியாபாரிகளும், சமுதாயத்திற்கு மோசமான காரியங்களை கற்று தரும் நடிகர்களும் முதலாளிகளாக இருக்க கூடிய ஐபிஎல் குழு, மாணவர்களின் வாழ்கையை காவு வாங்க காத்துக் கொண்டிருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

 

ஒரு பொறுப்புள்ள அரசு மாணவர்களின் எதிர்காலம் குறித்து கண்டிப்பாக சிந்திக்கும். எனவே தமிழகத்தை 2023ல் ஆசியாவின் முதல் இடத்தில் வைக்க நினைக்கும் தமிழக அரசு அதற்கு அச்சாணிகளான மாணவ சமுதாயத்தைக் காக்கும் வகையிலும், பெற்றோர்களின் மனக்கவலைகளை போக்கும் வகையிலும் ஐபிஎல் டுவென்டி20 போட்டிகளை பொதுத் தேர்வுகள் முடிவடையும் வரை நடத்த அனுமதிக்க கூடாது.

 

ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ள சோனி மாக்ஸ் தொலைகாட்சியின் ஒளிபரப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து சமுதாய மாணவர்களின் சார்பாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுக்கிறது.

 

 

பெண் விடுதலை

ஹிஜாப் பற்றி PJ

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் அது “ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.
“ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!” என்று முற்போக்குவாதிகளும் அறிவுஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் அந்தப் போலித்தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.
“ஹிஜாப்” என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.
இதுபற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.
ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம்

ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். அனால் சமத்துவம் பேசும் இவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை, பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். இதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை எதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் அந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.
அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல்மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை எதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் அவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் அந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே உழைக்கும் வர்க்கத்துப் பெண்கள் அவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட அந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. என் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே அதை அனுமதிக்க மாட்டார்கள்.
“ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்” என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஒரளவுக்கு அவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு யாருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.
பெண்களுக்கு பாதுகாப்பு
இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இருபாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு அதுதான்.
பெண்களின் ரசனை அத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. அதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப்பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே இவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். அந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு அவ்வாதம் வலுவானதன்று.

ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும், ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. அனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

ஹிஜாபைக் குறை கூறுவோர் அதைச் சிந்திப்பதில்லை.

பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்குவாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். “இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச்சட்டம் இங்கும் வேண்டும்” என்றெல்லாம் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது?

பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா? பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் என்?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும்போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?

பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?
எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.
பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத்தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானதுதான். அதைவிட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் அந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக்குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவதுதான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இதுதான் காரணம்.

முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும்போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுயரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்டவேண்டும்.

மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக்கூடிய நிலமையும் ஏற்படலாம்.

எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக்கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.

கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபட கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக்கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். அதனால்தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக்கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் ஆடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக்கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர்மாறாக நடப்பதுதான் நமக்கு வியப்பாகவுள்ளது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

http://islamicdress.blogspot.com/ என்ற வலைத்தளத்திலிருந்து

மொபைல் போன்கள் – சிறு கேமராக்கள் பெண்கள் எச்சரிக்கை

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றைய‌ நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள  சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே,  பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது இடங்களில் காமிராக்கள் :

பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :

பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.

மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான். இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :

நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.

நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.

சுலைமான் – தமிழ்நாடு

திருக்குர்ஆனில் பெண்கள்!

திருக்குர்ஆனில் பெண்கள்!

ஆண்கள் உலகில் பெண்கள் காலாகாலமாக பல கோணங்களில் பார்க்கப்படுகிறார்கள். விவாதிக்கப்படுகிறார்கள்.

பெண்களை மிக உயர்ந்த உன்னதப் படைப்பாக பார்த்து கவுரவிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை மிக மட்டரகமாக பார்த்து இழிவுபடுத்தும் ஆண்கள் மறுபுறம்.

பெண்களை தாய்மையுடன் பார்த்து மதிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை வெறும் பாலியல் இயந்திரமாக பார்த்து பழகிப் போன ஆண்கள் மறுபுறம்.

மனிதப் பிறவியில் பெண் தனித்தன்மை வாய்ந்தவள் என்று உணர்ந்து மதிப்பவர்கள் ஒரு புறம் என்றால், அவளுக்கு ஆத்மா என்று ஒன்று உண்டா என்று காராசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பவர்கள் மறுபுறம்.

இப்படியாக ஆண்களின் பார்வையிலும் சிந்தனையிலும் பெண் பல நிலைகளில் பரிணமிக்கிறாள்.

பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்த வரலாறு மிக நீண்டதாகும். 20ம் நூற்றாண்டின் மத்திய பகுதிகளிலிருந்து பெண்கள் உரிமைப் பற்றிய பேச்சுகள் அடிப்பட்டு இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அது எல்லைக் கடந்துப் போய் கொண்டிருக்கின்றது.

பெண்களின் வாழ்வாதாரத் தேவைகள் மற்றும் அறிவாதாரத் தேவைகள் ஆகியவைத்தான் அவர்களுக்கான சரியான உரிமைகள் என்று ஆண்களில் ஒரு சாராரின் சிந்தனை வளர்ந்து அதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது, உலக அழகிப் போட்டியும் உடைக்குறைப்பும் ஊர் சுற்றலுமே பெண்களுக்குத் தேவையான உரிமைகள் என்று அதற்காக பணத்தை அள்ளிக் கொட்டி பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆண்கள் கூட்டம் மறுபுறம்.

உண்மையில் பெண்களின் உரிமைகளை எப்படித் தீர்மானிப்பது என்பதில் பெண்களுக்கு மத்தியிலும் ஆண்களுக்கு மத்தியிலு்ம் பெரும் குழப்பம் நிலவி வருகின்றது என்றால் அதுதான் உண்மை.

பல்வேறு சாசன புத்தகங்கள், சட்ட புத்தகங்கள், அறிஞர் அவைகள் என்று அலசப்படும் இந்த விவாதத்தில் இதோ நாங்கள் குர்ஆனை முன் வைக்கிறோம். திருக்குர்ஆன் பெண்கள் பற்றி வரையறுத்துக் கொடுத்துள்ள அந்த சட்டங்களில் எது பெண்களுக்குக் கிடைக்க வேண்டுமோ அவ அனைத்தையும் நீங்கள் காணலாம்.திருக்குர்ஆன் வரையறுத்துக் கொடுத்துள்ள இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் பெண்ணுரிமை என்ற விவாதமே தேவையற்ற ஒன்றாகி விடும்.

இஸ்லாம் பார்க்கும் பெண் இதோ தொடருங்கள்.

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (திருக்குர்ஆன் 2:228)

அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. (திருக்குர்ஆன் 2:187)

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)

பொருள் திரட்டும் உரிமை
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. (திருக்குர்ஆன் 4:32)

கல்வி கற்றல், கற்பித்தல்
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். (திருக்குர்ஆன் 9:71)

சொத்துரிமை
குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. (திருக்குர்ஆன் 4:7)

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (திருக்குர்ஆன் 4:12)

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:11)

பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன். (திருக்குர்ஆன் 4:176)

மணமகனைத் தேர்வு செய்யும் உரிமை
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (திருக்குர்ஆன் 4:19)

திருமணக் கொடை (மஹர்) பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குதல் கட்டாயம் பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன் 4:4)

கணவனுள்ள பெண்களும் (மண முடிக்க விலக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:24)

இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பு நெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தனது நம்பிக்கையை (இறை) மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (திருக்குர்ஆன் 5:5)

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தன் மகளுக்கு திருமண கொடைக் கேட்டுப் பெற்ற முஸ்லிம்.
எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர் என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன் 28:27)

மஹரை விட்டுத் தரும் உரிமை மனைவிக்கு உண்டு
அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன் 4:4)

மஹரைத் திரும்பக் கொடுக்கத் தேவை இல்லை ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா? (திருக்குர்ஆன் 4:20)

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? (திருக்குர்ஆன் 4:21)

பெண்களுக்குக் கொடுத்த மஹரை எக்காரணம் கொண்டும் திரும்பக் கேட்க முடியாது.

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)

தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)

மறுமணம் செய்யும் உரிமை
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232)

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 2:234)

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:235)

விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (திருக்குர்ஆன் 2:236)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (திருக்குர்ஆன் 2:241)

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:6, 7)

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. (திருக்குர்ஆன் 2:233)

பிரியும் உரிமை
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:128)

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)

ஆன்மீக ஈடுபாட்டில் ஆணும் பெண்ணும் சமம்.
உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) (திருக்குர்ஆன் 3:195)

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (திருக்குர்ஆன் 4:124)

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம். (திருக்குர்ஆன் 16:97)

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள். (திருக்குர்ஆன் 40:40)

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:32)

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 9:72)

நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 57:12)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (திருக்குர்ஆன் 33:35)

பாதுகாப்பு
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (திருக்குர்ஆன் 24:4)

நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (திருக்குர்ஆன் 33:58)

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 24:23)

பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

நபியே! (முஹம்மதே!) பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர். (திருக்குர்ஆன் 65:1)

மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:129)

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:2)

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்) அவனே பொய்யன் என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும் அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூறுவாள்). (திருக்குர்ஆன் 24:6, 7, 8, 9)

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (திருக்குர்ஆன் 4:19)

பண்பாடு
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 24:30)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அழகில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (திருக்குர்ஆன் 24:31)

நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 33:59)

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு. (திருக்குர்ஆன் 24:26)

திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 24:60)

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (திருக்குர்ஆன் 33:32)

உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறி விடுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. அவர்கள் வெறுக்கத்தக்க சொல்லையும் பொய்யையும் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 58:2)

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (திருக்குர்ஆன் 24:27)

இஸ்லாம் வழங்கியுள்ள இந்த சட்டங்களில் எவரேனும் குறை இருப்பதாகக் கருதினால் அவர்கள் தங்கள் வாதத்தை இங்கே எழுதலாம்.

நன்றி: இதுதான்இஸ்லாம் வலைப்பூ

பெண்களின் ஜனாஸா

ஒவ்வொருவர் மீதும் அல்லாஹ் மரணத்தை விதித்துவிட்டான். நிரந்தரமாக இருப்பது என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்.

”(மிக்கவல்லமையும்) கண்ணியமும் சங்கையும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.” (அல்குர்ஆன் 55:27)

‘நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் வந்தடைந்தே தீரும் மிகவும் உறுதியாக கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே” (4:78)

ஜனாஸாக்களில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்துவது உயிரோடு உள்ளவர்கள் மீது கடமையாகும். அவற்றில் பெண்கள் சம்பந்தப்பட்டவைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

1. பெண்களின் ஜனாஸாவை பெண்களே குளிப்பாட்ட வேண்டும்.

ஆண்கள் பெண்கள் ஜனாஸாவை குளிப்பாட்டுவது கூடாது இறந்துபோன பெண்ணின் கணவன் மட்டும் தன் மனைவியை குளிப்பாட்ட அனுமதியுண்டு, ஆண் ஜனாஸாவை ஆண்களே குளிப்பாட்ட வேண்டும். இறந்து போன ஆணின் மனைவி மட்டும் தான் கணவனைக் குளிப்பாட்ட அனுமதியுண்டு.

அலி(ரழி) அவர்கள் தம் மனைவியான பாத்திமா (ரழி) அவர்கள் இறந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.

அபூபக்கர்(ரழி) அவர்கள் மரணமடைந்தபோது அவர்களின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ்(ரழி) அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.

2. பெண் ஜனாஸா ஐந்து துணிகளில் கஃபன் செய்யப்படுவது சிறந்தது.

கீழங்கி, தலையில்போடும் துணி, சட்டை அதற்குமேல் இரண்டு துணியைக் கொண்டு ஜனாஸாவின் உடம்பு முழுவதும் மூடப்படும்.

”நபி(ஸல்) அவர்களின் மகள் உம்மு குல்ஸ_ம்(ரழி) மரணமடைந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப் பாட்டியவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவிற்கு அணிவிப்பதற்காக முதல் முதலாக எங்களிடம் தந்தது கீழங்கி, பின்னர் சட்டை பின்னர் தலையில் போடும் துண்டு, பின்னர் ஜனாஸாவை மூடுவதற்குண்டான துணி, பின்னர் அதே மாதிரி இன்னொரு துணியிலும் மூடப்பட்டார்கள்” என லைலா அத்தகபிய்யா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவுத்)

3. பெண் ஜனாஸாவின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்னால் போடவேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்முஅதிய்யா(ரழி) அறிவிக்கும் போது ”அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம்போட்டோம்” என்று குறிப்பிடுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

4. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து பெண்கள் செல்லுதல்.

”ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது எங்களுக்கு தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது கண்டிப்பான முறையில் தடுக்கப்படவில்லை” என உம்மு அதிய்யா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

5. கப்ர் ஸியாரத் பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.

”கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்” என அபூஹாரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், திர்மிதி மற்றும் இப்னுமாஜா.)

6. ஒப்பாரி வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பாரி வைப்பதும், ஆடைகளைக் கிழிப்பதும் கன்னத்தில் அடிப்பதும் முடியைப் பிடுங்குவதும் முகத்தைப் பறண்டுவதும், தகாத வார்த்தைகளைக் கூறுவதும் இதுபோன்ற அல்லாஹ் விதித்த விதியில் பதட்டத்தை ஏற்படுத்துகின்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது பொறுமை இழந்து நிற்பது பெரிய குற்றமாகும்.

”துன்பத்தின்போது கன்னத்தில் அடிப்பவனும் சட்டையை கிழிப்பவனும் அறியாமை காலத்து பிரார்த்தனையைச் செய்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், ”சோதனையின்போது சப்தத்தை உயர்துப வளை விட்டும் தலைமுடியை மளிப்பவளை விட்டும், ஆடையை கிழித்துக் கொள்பவளை விட்டும் நான் ஒதிங்கிக் கொண்டேன்” என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.

”ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.” (நூல்: முஸ்லிம்)

முஸ்லிம் சகோதரியே! சோதனையின்போது இதுபோன்ற தடுக்கப்பட்ட செயல்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! சோதனையின்போது பொறுமையைக் கடைபிடித்துக் கொள்! உனக்கு ஏற்படக்கூடிய சோதனை உன்னுடைய பாவத்திற்கு பரிகாரமாகவும் உன்னுடைய நன்மையை அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும்.

அல்லாஹ் கூறுகிறான்: ”நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச் சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், (ஆனால்) பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நற்செய்தி கூறுவீராக!”

”அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபை யும் உண்டாகின்றன. இன்னும் இவர்களே நேர்வழியை அடைந் தவர்கள். (அல்குர்ஆன்: 2:155, 157)

அதேநேரத்தில் ஒப்பாரியும், அனுமதிக்கப்படாத செயல்களும், அல்லாஹ்வின் விதியின் மீது கோபப் படுவதும் இல்லாத அழுகை ஆகுமானதாகும். ஏனெனில் அப்படி அழுவது மரணித்தவரின் மீதுள்ள அன்பையும் உள்ளத்தில் மென்மையையும் காட்டுவதுடன் மனிதனால் தடுக்கமுடியாத ஒன்றாகவும் உள்ளது. எனவே அது ஆகுமானதாகிறது. சில வேளை அது அனுமதிக்கப் பட்டதாகவும் சில வேளை அது விரும்பத்தக்கதாகவும் ஆகிறது. அல்லாஹ் உதவப் போதுமானவன்.
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை

ஒற்றுமைக்கு வழி என்ன…!

ஒற்றுமைக்கு வழி என்ன?
செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, November 18, 2009, 12:48
இஸ்லாம்

Otrumaiதிருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு இக்கொள்கையை ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் ஏற்றவர்கள் அதற்காகப் பெரிய விலை கொடுத்தனர்.

- அடி உதைகளுக்கு ஆளானார்கள்.
- ஊரை விட்டு விலக்கி வைக்கப் பட்டனர்.
- பொய் புகார் கூறி சிறையில் அடைக்கப் பட்டனர்.
- சொந்த பந்தங்களுக்குப் பகையாயினர்.

இப்படி ஏராளமான தியாகங்களுக்கு மத்தியில் தான் கொள்கையைக் கடைப்பிடித்தனர்.

இவ்வாறு தியாகம் செய்து கொள்கையை ஏற்றவர்களுக்கு இன்று இருக்கும் ஒரே கவலை “ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்தவர்கள் பிளவு பட்டு நிற்கின்றார்களே?” என்பது தான்.

இது கவலைப் படக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகவே பாடம் பயின்ற நபித்தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து இருபது ஆண்டுகளுக்குள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தாங்கிப் போரிடும் அளவுக்குப் பகைவர்களாகிப் போயினர்.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், அலீ (ரலி) அவர்களுக்கும் நடந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான நபித்தோழர்கள் கொல்லப் பட்டனர். இது போல் முஆவியா (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் நடந்த போரிலும் பல நபித்தோழர்கள் கொல்லப் பட்டனர்.

இன்றைக்கு ஏகத்துவப் பிரச்சாரகர்களிடையே காணப்படும் பிளவுகள் அந்த அளவுக்கு இல்லை என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.

எண்ணிச் சொல்லும் அளவுக்குக் குறைவாக இருக்கும் போது காணப்படும் ஒற்றுமை, அதிகமான மக்கள் ஆதரவைப் பெறும் போது குறைந்து விடுவது சகஜமானது தான் என்பதையும் நபித்தோழர்களிடையே காணப்பட்ட மோதல்கள் மூலம் அறியலாம்.

பிளவுபட்டவர்கள் பிளவிலேயே நீடிக்க வேண்டுமா? ஒற்றுமைக்காக எந்த முயற்சியும் எடுக்கக் கூடாதா? ஒற்றுமையை விரும்பும் யாரும் அவ்வாறு கூற மாட்டார்கள். நாமும் அதில் மாற்றுக் கருத்து கொள்ள மாட்டோம்.

ஆயினும் ஒற்றுமைக்கான வழி எது என்பதில் நமக்குக் கருத்து வேறுபாடு உள்ளது.

பிளவு பட்டு நிற்கும் பிரச்சாரகர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றுவதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்று சில சகோதரர்கள் நினைக்கின்றனர்.

பிளவு பட்டு நிற்பவர்கள் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் சுமத்திக் கொள்ளாமல் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக பிளவு பட்டார்கள் என்றால் அப்போது இந்த நடவடிக்கை பயன் அளிக்க சாத்தியம் உள்ளது.

ஆனால் இன்று பிளவு பட்டு நிற்பவர்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக பிரியவில்லை. ஒருவருக்கு எதிராக மற்றவர் பாரதூரமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளனர்.

பொருளாதார மோசடியிலிருந்து காட்டிக் கொடுத்தது உட்பட பல கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். அவை எழுத்து வடிவிலும் ஒளி நாடாக்கள் வடிவிலும் மக்களிடம் சென்றடைந்து இருக்கின்றன.

இந்த நிலையில் ஒருவருக்கொருவர் கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறிக் கொண்டவர்கள் ஒரே மேடையில் ஏறுவதால் அது சமுதாயத்தையும் நம்மையும் ஏமாற்றுவதாகவே அமையும்.

- ஒவ்வொரு தரப்பினரும் மற்ற தரப்பினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பகிரங்கமாக மக்கள் மத்தியில் அல்லது ஒவ்வொரு தரப்பும் ஏற்கக் கூடிய நடுவர்கள் மத்தியில் விசாரிக்கப் படவேண்டும்.

- குற்றம் சுமத்தியிருப்பவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்காக நடுவர்கள் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு மேடையில் மட்டுமில்லை; ஒரே தலைமையில் கூட ஒன்று பட முடியும்.

அவ்வாறு இல்லாமல் உள்ளம் முழுவதும் பகைமையும் கசப்பும் நிரம்பியுள்ள நிலையில் ஒரு மேடையில் காட்சி அளித்தால், “தங்களுக்குத் தேவையில்லை என்றால் குற்றம் சாட்டிக் கொள்வார்கள். தேவை ஏற்பட்டால் ஒட்டிக் கொள்வார்கள்” என்று நியாயவான்கள் நினைப்பார்கள்.

மேலும் கசப்புணர்வு நிறைந்திருக்கும் நிலையில் ஒருவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மற்ற தரப்பினரால் தவறாகப் பொருள் கொள்ளப்படும்.

எனவே ஒற்றுமைக்கு முயல்பவர்கள் ஒவ்வொரு தரப்பும் மற்ற தரப்பினர் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களைப் பற்றி விசாரிக்கும் வகையில் முயல வேண்டும்.
அதை விடுத்து மேடையில் மட்டும் ஒன்றாகக் காட்சி தாருங்கள் என்று கருதுவார்களானால் அதனால் ஒரு பயனும் இல்லை; அது நேர்மையான நடவடிக்கையாகவும் இருக்காது.

எனவே ஒற்றுமையை விரும்புவோர் அர்த்தமற்ற முயற்சிகளில் இறங்குவதைத் தவிர்த்து அர்த்தமுள்ள முயற்சிகளைக் மேற்கொள்ளலாம்…

-ஷம்சுல்லுஹா

வரதட்சணைக் கொடுமையும் நிரந்தர நரகமும்

வரதட்சணைக் கொடுமையும் நிரந்தர நரகமும்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, December 15, 2009, 16:11

இஸ்லாம்

எம். ஷம்சுல்லுஹா

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்கள் ஏற்கனவே இருந்து வந்த மதக் கலாச்சாரங்களிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை.

விட்ட குறை தொட்ட குறை என்பது போல், தாங்கள் விட்டு வந்த கலாச்சாரங்களை இஸ்லாத்திற்கு வந்த பின்பும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் திருக்குர்ஆனோ இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றச் சொல்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான். (அல்குர்ஆன் 2:208)

பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஏதோ ஒப்பு சப்புக்காக இஸ்லாமிய கடமைகளில் ஒன்றிரண்டைப் பின்பற்றி விட்டு மற்றவற்றில் தங்கள் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் நடந்து கொள்கின்றனர்.

இவ்வாறு சொந்த விருப்பங்களின் அடிப்படையில் நடக்கக் கூடிய விஷயங்களில் ஒன்று தான் வரதட்சணை! இந்த வரதட்சணை மற்றும் அதனால் ஏற்படும் சமூகக் கொடுமைகளை எதிர்த்து, தவ்ஹீது ஜமாஅத் போரிடுவது போன்று வேறெந்த ஜமாஅத்தும் போரிடவில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

எத்தனையோ இளைஞர்கள் இந்தப் பிரச்சாரத்தால் கவரப்பட்டு, மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன் வந்தது, இன்னும் முடித்துக் கொண்டிருப்பது, ஏற்கனவே திருமணம் முடித்தவர்கள் தாங்கள் பெண் வீட்டில் வாங்கிய பொருட்களைத் திருப்பிக் கொடுப்பது போன்ற காரியங்களெல்லாம் நடப்பது ஒரு சரித்திர மாற்றமாகும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மறுமை பயம் தான்! அந்த மறுமை பயத்தைப் பிரச்சாரத்தின் போது ஊட்டியதால் தான் இந்த மாற்றமும் மறுமலர்ச்சியும்!

இதனுடைய முன்னேற்றம் தான் வரதட்சணை திருமணத்தை மக்கள் புறக்கணிக்க முன்வந்த காரியம்! எத்தனையோ சகோதரர்கள் தங்களின் சொந்த சகோதரர்களின் திருமணத்தைக் கூட புறக்கணித்து விட்டு, சாப்பிடாமல் பட்டினி கிடக்கும் இந்தப் போரட்ட உணர்வு, புரட்சித் தீ தொடர்ந்து பற்றி எரியுமானால் இன்ஷா அல்லாஹ் பெருமளவில் இந்த வரதட்சணை எனும் கொடுமையை சுட்டுப் பொசுக்கலாம். ஆனால் இதை ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களே சரியாகப் பேணுவது கிடையாது.

இந்த வரதட்சணை ஏற்படுத்திய மோசமான விளைவுகளைப் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்குத் தீமை என்று வெளிப்படையாகத் தெரியும் விஷயம் தான் வரதட்சணை!
இன்று பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது, பெண்ணினம் கருவில் உருவாகும் போதே நவீன கருவிகள் மூலம் கண்டறியப் பட்டு அதைக் கொலை செய்வது, நீண்ட காலம் ஆகியும் திருமணமாகாமல் பெண்கள் விபச்சாரத்தை நோக்கி ஓடுவது போன்ற குடும்ப மற்றும் சமூக ரீதியான தீமைகள் அனைத்திற்கும் காரணமே வரதட்சணை தான்! வரதட்சணை வாங்கியவர்களிடம் இந்தப் பாவங்களுக்கெல்லாம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப் போவது கிடையாது.

அல்லாஹ் கணக்கு தீர்க்கும் பாவங்களின் பட்டியலில் இன்னும் சில பாவங்களும் சேர்கின்றன. அந்தப் பாவங்கள் எவை என்பதை விளக்குவது தான் இக்கட்டுரையின் நோக்கம்!

பிள்ளைகளிடம் பாரபட்சம்

எல்லாவற்றிற்கும் வழி காட்டும் மார்க்கம், தாய் தந்தையர் தமது பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் வழி காட்டுகின்றது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு எப்படி அன்பளிப்பு வழங்க வேண்டும் என்பதும் அந்த வழி காட்டல்களில் உள்ள ஒன்றாகும்.
நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு பின்வருமாறு அறிவித்தார்கள்:

என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த் ரவாஹாவின் வாயிலாக எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! உங்கள் பிள்ளைகளிடையே நீதம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, அன்பளிப்பை ரத்து செய்தார்.

அறிவிப்பவர்: ஆமிர் பின் ஷர்ஹபீல், நூல்: புகாரி 2587

மற்றொரு அறிவிப்பில், “நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
நீதமாக நடந்து கொள்ளுங்கள்! நீதம் தவறினால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! பாவத்திற்கு என்னை சாட்சியாளனாக ஆக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் வழங்கும் அன்பளிப்புகளில் நூல் பிடித்தாற்போல் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.
ஆனால் நடைமுறையில் பிள்ளைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் அன்பளிப்பு விஷயத்தில் மிக அதிகமாகவே பாரபட்சம் காட்டுகின்றனர். குறிப்பாக, பெண் மக்களுக்கு திருமணத்தின் போது நகை வடிவத்தில் வழங்குகின்ற அன்பளிப்பைப் போன்று ஆண் மக்களுக்கு வழங்குவதில்லை. பெண் மக்களுக்கு மத்தியிலேயே மூத்த மகளுக்கு ஒரு விதம், இளைய மகளுக்கு மற்றொரு விதம் என்று அவர்களுக்கு அளிக்கும் நகை, நிலம், சீர் வரிசைகளில் வேறுபாடுகள் காட்டுவது சர்வ சாதாரணமாக நடக்கின்றது.

இந்த வேறுபாட்டை பெற்றோர்கள் தாங்களாகவும் செய்கின்றார்கள்; வரக் கூடிய மாப்பிள்ளைகள் வைக்கும் கோரிக்கைக்குத் தக்கவும் இந்த வேறுபாட்டைச் செய்கின்றார்கள். இங்கு தான் வரதட்சணையின் முதல் விபரீதத்தை, மோசமான விளைவுகளை நாம் பார்க்கிறோம்.
பிள்ளைகளுக்கு மத்தியில் தாங்களாக வேறுபாடு காட்டினாலும், மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினாலும் அல்லாஹ்விடத்தில் அந்தப் பெற்றோர்கள் நிச்சயமாகக் குற்றவாளிகள் தான்! தாங்களாகவே வேறுபாடு காட்டினால் பெற்றோர்கள் அப்பாவத்திற்கு முழுப் பொறுப்பாளி ஆகின்றார்கள். மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினால் பெற்றோருடன் சேர்த்து மாப்பிள்ளைகளும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள்.

“அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீதமாக நடங்கள்! என்னைப் பாவத்திற்கு சாட்சியாக்காதீர்கள்!” என்ற நபி (ஸல்) அவர்களின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை கருத்தில் கொண்டு பாருங்கள். இந்த வரதட்சணைக் கொடுமை எந்த அளவுக்குப் பெற்றோர்களை தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் நீதம் தவற வைக்கின்றது? எனவே வரதட்சணை வாங்கக் கூடியவர்கள் இந்தப் பாவத்திற்காகவும் அல்லாஹ்விடம் தண்டனை பெற்றாக வேண்டும். அல்லாஹ் காப்பானாக!

பாகப் பிரிவினையா? பாவப் பிரிவினையா?

வரதட்சணை வாங்குவதால் ஏற்படும் தீமைகளில் மிக மோசமான தீமை, பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்துக்களை அவர்களுக்குப் போய் சேர விடாமல் தடுப்பதாகும்.

நாங்கள் எங்கே தடுக்கின்றோம் என்று வரதட்சணை வாங்குபவர்கள் கேட்கலாம். அதற்கான விளக்கம் இதோ!
பொதுவாக சொத்துக்கள் பங்கு வைக்கப்படுவது, சொத்தின் உரிமையாளர் இறந்த பிறகு தான்! ஆனால் வரதட்சணைக் கொடுமை இங்கும் அநியாயமாகப் பாய்கின்றது. மாப்பிள்ளைகள், பெண்ணைப் பெற்ற தகப்பனிடம் நகை, தொகை, நஞ்சை, புஞ்சை என்று கோருகின்றனர். தகப்பனார் தனது மகளுக்காக தான் உயிருடன் இருக்கும் காலத்தில் மேற்கண்டவற்றை அன்பளிப்பாகக் கொடுத்து திருமணம் முடித்து வைக்கின்றார். தகப்பனார் இறந்ததும், அவரது சொத்துக்கள் பாகப்பிரிவினை சட்டப்படி அந்தப் பெண்ணுக்கும் சொத்துக்களின் உரிய பங்கு போய் சேர வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு சேர்கின்றதா என்றால் இல்லை!
பெண்ணின் சகோதரர்கள் அவளை அழைத்து, “உன்னைக் கட்டிக் கொடுக்கும் போது இவ்வளவு தொகை பணமாகவும், பொருளாகவும் தந்திருக்கின்றார். அதன் மதிப்பு இவ்வளவு ரூபாய் ஆகின்றது.

எனவே இப்போது சொத்தில் உனக்குரிய பங்கை எங்களுக்காக விட்டுக் கொடு” என்று அன்பாகவோ, அதட்டலாகவோ பேசி அப்பெண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தை அநியாயமாக அபகரித்து விடுகின்றார்கள்.
ஒரு சில ஊர்களில் பெண்கள் சொத்தில் பங்கு கேட்பதே பாவம் என்று பெண்களே நினைக்கின்றார்கள்.

இந்தக் கொடுமை தமிழக முஸ்லிம்களிடத்தில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தகப்பன் இறந்த பிறகு பங்கு வைக்கப்பட வேண்டிய சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் போது வழங்கிய அன்பளிப்பை எப்படிக் கழிக்க முடியும்? இதைக் காரணம் காட்டி அந்தப் பெண்ணின் சொத்துரிமையை எப்படி மறுக்க முடியும்? பாகப்பிரிவினையைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் சொல்லி விட்டுக் கூறுவதைக் கவனியுங்கள்!
இவை அல்லாஹ்வின் வரம்புகள்.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான்.

அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 4:13,14)

அல்லாஹ்வின் இந்த வரம்புகளை மீறினால் இப்படி மீறுபவர்கள் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றான்.

வரதட்சணைக் கொடுமை பற்றி மக்களிடம் சொல்லும் போது, மற்ற மற்ற மக்களை விட்டு விடுவோம். ஏகத்துவவாதிகளே இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஏகத்துவவாதிகள் எல்லோரையும் இப்படிச் சொல்லவில்லை. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சொந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தைப் புறக்கணித்து பட்டினி கிடப்பவர்களும் இருக்கின்றார்கள்.

இன்னும் சொல்லப் போனால் இந்தத் தீமைகளையெல்லாம் கருத்தில் கொண்டு வரதட்சணை மட்டுமல்ல, பெண் வீட்டில் தாங்களே விரும்பித் தரும் அன்பளிப்பைக் கூட வாங்க மாட்டேன்; பொட்டு நகை கூட போடாமல் வந்தால் தான் திருமணம் முடிப்பேன் என்று சபதம் செய்த ஏகத்துவவாதிகளும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயம், இதையெல்லாம் பெரிய தீமையாக நினைக்காமல் வரதட்சணை வாங்கப் படும் திருமணங்களில் போய் கலந்து கொண்டு, அதை நியாயப்படுத்துபவர்களும் ஏகத்துவவாதிகள் என்ற பெயரில் இருக்கத் தான் செய்கின்றார்கள்.

வரதட்சணை வாங்குவது பெண்களின் சொத்துக்களைப் பறிக்கும் அளவுக்குக் கொண்டு செல்கின்றது. சொத்துக்களைப் பறிப்பது அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதாகும். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவது நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்கின்றது. இப்படி நிரந்தர நரகத்தைப் பெற்றுத் தரும் இந்த வரதட்சணையை வாங்கலாமா? அவ்வாறு வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களில் போய் கலந்து கொள்ளலாமா? முடிவெடுங்கள்!

இது போன்ற திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வரதட்சணை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ளாமல் முற்றிலும் புறக்கணியுங்கள்!
tntj.net என்ற தளத்திலிருந்து….

மனைவியின் கடமைகள்

மனைவியின் கடமைகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, December 19, 2009, 13:04

இஸ்லாம்

இல்லறக் கடமைகளில் முக்கியமான ஒன்று, கணவனுக்கு மனைவி கட்டுப்படுதல் ஆகும்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

பெண்களை நிர்வகிப்பவர்கள் ஆண்கள் என்பதற்கு அல்லாஹ் இரண்டு காரணங்களைக் கூறுகிறான். ஒன்று, அவன் இயற்கையிலேயே ஆண்களை சிறப்புமிக்கவனாகப் படைத்துள்ளான். இரண்டாவது, பெண்களுக்கு ஆண்கள் செலவு செய்வதால்.

இந்த இரண்டு காரணங்களால் பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்கள் பெறுகிறார்கள். எனவே ஒரு குடும்பத்தை நிர்வகிப்பவன் ஆண் என்று அல்லாஹ் கட்டளையிட்ட பின்னர் பெண்கள் அதை ஏற்று நடப்பது கட்டயாமாகும்.

மார்க்கத்திற்கு முரண் இல்லாத அனைத்துக் கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமையாகும். இதை அல்லாஹ் “கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்” என்று குறிப்பிடுகிறான்.

இந்த இறைக் கட்டளையை ஏற்று, மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாகும். கணவனுக்குக் கட்டுப்படுதல் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

“நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1079

இந்த நபிமொழி கணவனுக்குக் கட்டுப்படுதலின் உச்சக்கட்டத்தைத் தெரிவிக்கும் செய்தியாகும். இந்தச் செய்தியைப் படிக்கும் பெண்கள் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்வர்.

ஒழுக்கம் பேணுதல்

கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் முதல் கடமை கணவனின் இடத்தில் மற்றொரு ஆணை வைக்காமல் இருப்பதாகும். தன் கற்பொழுக்கத்தைப் பேணுவதாகும். கணவனுக்குக் கடும் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதில் முதலிடம் வகிப்பது இந்த ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள் தான் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:31)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 33:35)

“உங்கள் படுக்கையை அடுத்தவர்களுக்கு வழங்காமல் இருப்பதும் அவர்களின் அனுமதி இல்லாமல் மற்றவர்களை வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதும் பெண்களின் மீது கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 1083

பெண்கள் ஒழுக்கமாக வாழ்வது மிக முக்கியம் என்பதால் பெண்ணின் ஒழுக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் பல காரியங்களை இஸ்லாம் தடுத்துள்ளது. அதைப் பெண்கள் பேணி, கடைப்பிடித்தால் அவர்களது வாழ்க்கை ஒழுக்கமிக்கதாக அமையும்.

அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது

ஆண்களைக் கவரும் வண்ணம் அலங்காரங்களை அந்நியர்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது. தன் அலங்காரங்களை கணவனுக்கு மட்டுமே காட்டும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன் 24:31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33:59)

மேற்கூறிய வசனங்கள் பெண்களின் ஒழுக்கம் தொடர்பாக அறிவுரை கூறும் வசனங்களாகும். “பெண்கள் அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது” என்ற ஒரு அறிவுரை இந்த வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது.

அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள் ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.

உதட்டுச் சாயம் பூசுவது, நகைகளால் ஜோடனை செய்வது, மேக்கப்’ பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது, இவை ஜீனத் என்ற சொல்ரில் அடங்கும்.

எனவே இவ்வசனத்தில் கூறப் படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக் கூடாது.
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா’ புர்கா’ துப்பட்டி’ என்றும் குறிப்பிடப்படுகின்றது.

ஹிஜாப் என்பது பெண்ணின் பாதுகாப்புக்காகவும், அவர்களைக் கவுரவிப்பதற்காகவுமே ஏற்படுத்தப் பட்டுள்ளது என்பதை முதலில் இஸ்லாமிய பெண்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் நிறம், அல்லது அவர்களின் அழகு, அல்லது அவர்களின் இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்க விரும்புகின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. ஆண்களின் அழகையோ, கட்டுடலையோ, கொள்ளை கொள்ளும் நிறத்தையோ பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்று இதற்கு அர்த்தமில்லை. நிச்சயமாக இதையெல்லாம் பெண்கள் விரும்பவே செய்வர்.

கணவன் கட்டுடலுடன் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது அவனிடம் முழுமையான ஆண்மை இருக்கும் என்று நம்புவதால் தான். கணவன் நல்ல அழகுடனும் நல்ல நிறம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது மற்ற பெண்களிடம் பெருமையடிக்கவும் தங்கள் வாரிசுகள் அழகுடன் பிறக்க வேண்டும் என்பதற்காகவும் தான். ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதில் இருந்தும், ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிரிருந்தும் கூட இதை அறியலாம். ஆண்களும் பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணொருத்தியிடம் எதை எல்லாம் பார்த்து ஒரு ஆண் ரசிக்க விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். முறையின்றி பார்ப்பவனுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும் அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதை அன்றாடம் காண முடிகின்றது. இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந் திருப்பதற்கு முதற்காரணம், பெண்களின் அரைகுறை ஆடைகளும் ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே. எனவே ஒழுக்கத்தை பேணும் பெண்கள் மறைக்க வேண்டிய பகுதிகளை அந்நியர்களிடம் மறைப்பதும் அலங்காரங்களை கணவனுக்கு மட்டும் வெளிபடுத்துவதும் அவசியமாகும்.

ஆனால் இன்று அரைகுறை ஆடைகளுடன் அந்நியர்களுக்கு மத்தியில் பெண்கள் வருவதைப் பார்க்க முடிகிறது. வீட்டிற்கு வரும் வேலையாட்கள், பால்காரர்கள், கேபிள் காரர்கள் என்று ஏராளமான அந்நியர்களுக்கு முன்னால் நைட்டியை அணிந்து கொண்டு காட்சி தருவது மேற்கூறிய இறைவசனத்தின் ஒழுக்க அறிவுரைக்கு முரணானதாகும். இரவு நேர ஆடைகளை இரவு நேரத்தில் வீட்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெருவில் அந்த ஆடைகளை அணிந்து கொண்டே தண்ணீர் பிடிப்பது, மளிகைக் கடை, பால் கடைகளுக்கு போவது ஒழுங்கீனமாகும்.

சில பெண்கள் பர்தா அணியாமல் மெல்லிய சேலைகளை அணிந்து கொண்டு வெளியில் சென்று வருவதும் இஸ்லாமிய ஒழுக்க அறிவுரைக்கு மாற்றமானதாகும்.

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்) மக்களில் சிலர் பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பவர்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்) மெல்லிய உடையணிந்து தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன் பால் ஈர்க்கக் கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை (முடி) கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக் கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். (ஏன்?) சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4316

மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளைக் கவனத்தில் கொண்டு ஒழுக்கத்தை முஸ்லிம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

அபுரபீஹா
tntj.net என்ற தளத்திலிருந்து….

கமல்ஹாசன் Vs இராம கோபாலன்

‘புதிய’ பார்வை : கமல்ஹாசன் Vs இராம கோபாலன்

December 5, 2009 இல் (இராம கோபாலன், கமல்ஹாசன், பாபர் மசூதி)

‘புதிய பார்வை’ இதழில் வெளியான கமல்ஹாசனின் பேட்டியை பிறகு பதிவேன். இப்போது அந்தப் பேட்டி சம்பந்தமாக இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் இராம கோபாலனின் ‘அதிரடி’க் கருத்துக்கள். புதியபார்வை / நவம்பர் 16-30 , 2009ல் வெளியானது. மாற்றுக் கருத்துக்களை தனது திறந்த வெளி மேடையில் இடம் பெற முடிவு செய்திருக்கிறதாம் ‘புதிய பார்வை’. ‘கூர்மையான இடங்களிலே உட்கார்ந்துகொண்டு பஜனை பாட முடியாது, சமன்படுத்துங்கள்’ என்ற வாஜ்பாய்க்கும் விரைவில் இடம் கொடுக்கட்டும். சரி, இராம கோபாலனை சந்தித்தவர் பெயர் : வசீரன். முஸ்லிம் நிருபரா? தெரியவில்லை. ‘ஆயிரம் வாலா சரவெடி போன்று வெடித்துத் தள்ளிவிட்டார் மனுஷன்!’ என்று வியக்கிறார். ‘கலைஞரைப் போன்றே கமல்ஹாசனும் ஒரு இந்து விரோதி’ என்பது ‘புதிய பார்வை’ தந்த தலைப்பு. அப்படியா உலக நாயகா?

**

புதிய பார்வை :கமல் படங்கள், நடிப்புப் பற்றி உங்கள் கருத்து?

இராம கோபாலன் : கமல்ஹாசன் அவருடைய துறையில் அவர் நன்றாகவே விளங்குகிறார். ஆனால் அவரை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகிற ஜால்ரா கும்பலின் நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. அதை அவரும் ரசிப்பதுதான் வேடிக்கை.

சினிமா பார்ப்பீர்களா? எந்த மாதிரியான படங்கள் பார்ப்பீர்கள்?

எப்பொழுதாவது பார்ப்பேன். கடைசியாக பார்த்தது கமல்ஹாசன் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படம். ரஜினிகாந்த், விஜயகாந்த், அர்ஜூன் போன்றோர் நடித்த, தேசபக்தியை தூக்கலாக காண்பிக்கிற படங்கள், ராணுவம், காவல்துறையை உயர்வாக போற்றுகின்ற படங்களை நேரம் கிடைத்தால் பார்ப்பேன். எந்நேரமும் வாய்ப்பும் கிடைப்பது மிகவும் அரிது.

முகலாய மன்னர்கள் நம் நாட்டை வளப்படுத்தினார்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளாரே?

கலப்படமில்லாத கம்யூனிஸ்ட் பொய். கோவிலை உடைத்து, மக்களை மதம் மாற்றி, பசுக்களை வெட்டி, பெண்களை தூக்கிக் கொண்டு போய் கற்பழித்து, மதம் மாற மறுத்தவர்களை துண்டு துண்டாக வெட்டி நம் நாட்டை வளப்படுத்தினார்கள் மொகலாய மன்னர்கள். யதுநாத் சர்க்கார், ஆர்.சி. மஜூம்தார், கே.எம்.முன்சி போன்றவர்கள் எழுதிய புத்தகங்களில் இஸ்லாமியர்களின் கொடூர ஆட்சி அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் உடைக்கப்பட்ட கோவில்கள், இவர்கள் செய்த கொடுமைகளை மேலும் தெரிந்துகொள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்’ – கே. கே. பிள்ளை என்ற புத்தகமும், எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் நூல்களுமே சான்று. மேலும் தகவல்களுக்கு ‘சௌத் இந்தியா அண்ட் இட்ஸ் முஸ்லிம் இன்வேடர்ஸ்’ என்ற புத்தகத்திலும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கோவில் சிற்பங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றனவோ, அவை எல்லாம் யாருடைய கை வரிசை என்பது குழந்தைக்கு கூட தெரியும்.

மதுரை மீனாட்சிய்யம்மன் கோவில் மாலிக்கபூர் படையெடுப்பின்போது உடைக்கப்பட்டதே. ஸ்ரீரங்கம் கோவில் 42 ஆண்டுகள் மூடிக் கிடந்ததே. இவை எல்லாம் கமலுக்குத் தெரியாதா?

கர்நாடகத்தில் ஹளபேடு, கோவாவில் உள்ள அபூர்வ சிற்பங்களை நாசப்படுத்தியது யார்? என்பதை கமல் மட்டும்தான் அறியமாட்டார்.

மேற்சொன்ன விசயங்களில் சிலதான் கமலின் பார்வையில் முகலாய மன்னர்கள் நம் நாட்டை வளப்படுத்தியதோ!

‘இராமர் பிறந்தது ஆப்கானிஸ்தானில்தான்.. இராமருக்கு ஆபாகானிஸ்தானில் கோவில் கட்ட வேண்டும் என்ற முதல்வர் கலைஞரின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடும்’ என்று கமல் சொல்லியிருக்கிறாரே?

சுத்த பேத்தல். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார். நடக்காத சம்பவத்தை நடந்ததாகக் கூறுவதைக் கேட்டு பைத்தியக்காரன் கூட வாய்விட்டுச் சிரித்து விடுவான்.

ராமாயணத்துக்கும் காந்தாரிக்கும் என்ன சம்பந்தம்? காந்தாரி (மஹாபாரதம்) பிறந்ததுதான் காந்தாரத்தில். ஸ்ரீராமர் பிறப்புக்கும் இந்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கோசல நாட்டின் தலைநகரம் தான் அயோத்தி. இங்குதான் ஸ்ரீமார் பிறந்தார். பெண்கள் பிரசவத்திற்கு பிறந்த வீட்டிற்கு போவது என்பது ராஜஸ்தானில் பழக்கமே இல்லை.

கமலுக்கு வரலாறும் தெரியாது. புவியியலும் தெரியாது. நல்ல குரு, நல்ல வழிகாட்டி..

கமல்ஹாசன் இம்சை அரசன் ‘25′ஆம் புலிகேசியாக மாறி வரலாற்றை திரித்துக்கூற முயற்சிக்கிறார். அது எக்காலத்திலும் முடியாது.

முதல்வர் கலைஞருக்கு எப்போதுமே குழப்பம்தான். கமல் கலைஞர் கருத்தை ஆமோதிக்கிறார்!

பயங்கரவாத சம்பவங்களை மதத்தோடு சம்பந்தப்படுத்துவது தவறு என்ற கமலின் கருத்துக்கு உங்கள் பதில்?

எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் முஸ்லீம்களாக இருக்கிறார்கள் என்பதை நடுநிலைவாதிகள் எல்லோரும் உணர்ந்து கொள்கிறார்கள். 18/09/2008 நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் பொருளாதார நிபுணரும் , பிரபல எழுத்தாளருமான எஸ். குருமூர்த்தி ‘மதநூலும் பயங்கரவாதமும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் பயங்கரவாதிகள் தங்களுடைய செயல்களுக்கு அல்லாவின் கட்டளைதான் காரணம் என்று குறிப்பிட்டிருப்பதை ஆதாரத்துடன் எவரும் மறுக்கவில்லை.

டெல்லி, அயோத்யா, மதுரை, மும்பை, அகமதாபாத்..போன்ற பல இடங்களில் குண்டு வைத்தவர்கள் ஊடகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் முன் அறிவிப்பு செய்துள்ளார்கள். குரானின் 9 : 123, 9:14 வசனங்கள் ஆகியவற்றை ஆதாரமாக காட்டியிருப்பதை இஸ்லாமிய மத அறிஞர்கள் கூட இதை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் மூலம் முஸ்லீம்கள் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல, அதே நேரத்தில் முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டும் என்பதும் என் நோக்கம் அல்ல என்று கமல் கூறியுள்ளாரே..?

கமல் கூறுவது வேறு. ஆனால் முஸ்லிம்களை காப்பாற்றுவதுதான் அவருடைய உள்நோக்கம் என்பது நடுநிலையாளர்களுக்கு புரியும்.

அவரே ‘ஹே ராம்’ இந்து தீவிரவாதத்தை எடுத்துக்காட்டிய படம் என்று கூறியிருக்கிறாரே! எனவே அவரும் தி.மு.க தலைவரை போல இந்து விரோதிதான்.

‘ஹே ராம்’ திரைப்படம் இந்துத் தீவிரவாதத்தை எடுத்துக்காட்டிய படம் என்று இப்போது கமல் கூறியிருப்பது ஏன்?

ஹே ராம்! அவருக்கே வெளிச்சம்.

மத வெறியின் காரணமாகவே பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தவறான முன்னுதாரணம். இதற்காக வருத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளாரே?

சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியும், வரலாறு தெரியாது. பாபர் அயோத்யா, மதுரா, காசி ஆகிய கோவில்களைத் தவிர ஏறத்தாழ 3000 கோவில்களை இடித்தார்.

அந்த இடங்களில் எல்லாம் மசூதிகளைக் கட்டினார். இன்றைக்கும் காசிக்கும், மதுராவிற்கும் போய் வருகிறவர்கள் இடிபாடுகளையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களையும் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

அயோத்தியில் பாபர் , ராமர்கோவிலை உடைத்து ஒரு கட்டிடம் கட்டினான். அது மசூதியே அல்ல. மசூதி தூண்களில் தெய்வ சிற்பம் இருக்காது.

முகம், , கை கழுவ ஒரு குளம் இருக்கும். வலம் வருவதற்கான ஏற்பாடு இருக்கது.

நீதிமன்ற உத்தரவுப்படி அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட போது விக்ரமாதித்யன் கட்டிய கோவிலின் மண்டபங்கள் காணக் கிடைத்தன.

ராமர்கோவிலை காப்பாற்ற 43 போர்கள் நடந்தன, ஏறத்தாழ 3 லட்சம் பேர் பலியானார்கள். இதில் ராஜஸ்தானை சேர்ந்த 3 ஆயிரம் பெண்களும் அடங்குவர்.

இந்த ஆதாரங்கள் எல்லாம் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டன. புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் இதனை வெளியிட்டிருக்கிறார்கள்.

பாவம், ப. சிதம்பரத்திற்கு அரசியல் பண்ணவே நேரம் சரியாக இருக்கிறது. வரலாற்றை எங்கு படிக்கப் போகிறார்?

எனவே வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பசை இல்லாத வாதங்களை வெளியிட்டு யாரையோ திருப்திப்படுத்துகிறார்.

மத வெறியின் காரணமாகவே ராமர்கோவில் இடிக்கப்பட்டது. இதற்காக முஸ்லிம்கள் மன்னிப்பு கோரவேண்டும் என்று இன்று கேட்கவில்லை. நாடு முழுவதும் அமைதியாக இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் சில முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பரித்து ராமர் கோவிலை நினைவுபடுத்தி வருகிறார்கள். நன்றி. டிசம்பர் 6ஐ மறக்க வேண்டாம்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மிகத் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை முதல்வர் கண்டுகொள்ளாவிட்டால் என்ன செய்வீர்கள்?

உரிய காலத்தில் உரிய நடவடிக்கையை எடுப்போம்.

பகவத் கீதையுடன் கோபாலபுரத்துக்கு திடீர்ப் பிரவேசம், கலைஞருடன் அதிரடி சந்திப்பு, திரும்பி வரும்போது உங்கள் கையில் கலைஞர் அளித்த கி. வீரமணி எழுதிய ‘கீதையின் மறுபக்கம்’ என்ற புத்தகம்… மறக்க முடியாத சம்பவம் இது. நம்முடைய கேள்வி, அந்த கீதையின் மறுபக்கம் நூலை நீங்கள் படித்துவிட்டீர்களா? பகிர்ந்து கொள்ள அதில் விஷயங்கள் எதுவும் இருக்கிறதா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகும் இன்றும் கூட மக்கள் பக்தி சிரத்தையோடு பகவத்கீதையை படிக்கிறார்கள். விளக்கவுரையும் கேட்கிறார்கள். கி. வீரமணி புத்தகத்தை கலைஞராவது படித்திருப்பார் என்பது கூட சந்தேகம்தான்.

தினமும் ஐந்துவேளை தொழுகை, இது இஸ்லாமியர்களின் வழக்கம். ஞாயிறு அன்று தவறாமல் சர்ச்சுக்கு விசிட், பிரேயர்..இது கிறித்துவர்கள். ஆனால் இந்துக்கள் இப்படி இல்லையே? அவர்களிடம் பக்தி குறைந்து விட்டதா?

குறிப்பிட்ட நேரத்தில்தான் குறிப்பிட்ட முறையில்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இந்து தர்மம் கட்டாயப்படுத்தவில்லை.

வழிபாட்டு விசயத்தில் பூரண சுதந்திரம் அளித்திருப்பது இந்து மதத்தில் மட்டும்தான்.

திருவண்ணாமலை கிரிவலத்தில் கூடுகிற கூட்டம்; புதிய புதிய கோவில் கும்பாபிஷேகத்தில் கூடுகிற கூட்டம், பிரதோஷ வேளையில் சிவன் கோவில்களில் கூடுகிற கூட்டம், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் கூடுகிற கூட்டம், சபரிமலை, பழனிமலை, திருப்பதிமலை போன்ற புனிதத் தலங்களில் கூடுகிற கூட்டம்… பக்தி அதிகரித்துள்ளது என்பதை காட்டவில்லையா?

***

நன்றி : புதிய பார்வை, வசீரன், தாஜ்

வந்தே மாதரம் பாடலை தொடர்ந்து பாடுவேன் என்று அடம் பிடிக்கும் ஏ.ஆர். ரஹ்மான்

வந்தே மாதரம் பாடலை தொடர்ந்து பாடுவேன் என்று அடம் பிடிக்கும் ஏ.ஆர். ரஹ்மான்

Posted in இஸ்லாம் on December 24, 2009

இசை மதங்களை, வேறுபாடுகளை, வெறுப்புகளை கடந்த ஒன்று என்று கூறுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.வந்தேமாதரம் பாடலை இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த ரஹ்மான் பாடியது தவறு என்றும் முஸ்லிம்கள் இந்த பாடலை பாடுவது ஷிர்க் என்றும் பல இஸ்லாமிய அமைப்புகள் கண்டித்தது குறித்து கேட்கப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இந்தியாவின் தேசிய பாடலான வந்தேமாதரம் பாடலை இந்திய சுதந்திரப் பொன்விழாவின் போது வெளியிடப்பட்ட ஒரு இசைத் தொகுப்பில் உணர்சிகரமாக பாடியிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலை தான் தொடர்ந்து பாடிவருவதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பாடலின் சில வரிகள் இஸ்லாமிய கோட்பாடுக்கு எதிராக இருப்பதாகவும் இதை முஸ்லிம்கள் பாடக் கூடாது என்றும் இந்திய உலமாக்கள் சபை என்ற இஸ்லாமிய அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தமை சர்ச்சையை கிளப்பியிருந்தது.வந்தேமாதரம் பாடலை பாடுமாறு யாரும் தன்னை அப்போது நிர்பந்திக்கவில்லை என்றும், அதே போன்ற நிலை தொடர வேண்டும் என்றும் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், ஒவ்வொருவரின் மத நம்பிக்கைகளும் அது தொடர்பிலான புரிதல்களும் மாறுபட்டவை என்றும் அவை மதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார் .தான் இப்போதும் தனது இசை நிகழ்சிகளை நிறைவு செய்யும் முன்பாக இந்தப் பாடலை பாடுவதாகவும் அவர் கூறினார்.

ஏ.ஆர். ரஹ்மான் மிகவும் பிரபல்யமான ஆங்கில பாடகர் லூன்னிடம் பாடம் படிக்கட்டும்

லூன் ( AKA LOON) என்ற மிகவும் பிரபல்யமான பாடகர் இசையின் ஹராமான பகுதிகளை முழுமையாக ஒதுக்கி விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு கிறித்தவ வாலிபர் இவரிடம் ஏ.ஆர். ரஹ்மான் படிப்பினை பெறவேண்டும்.
poralikall-என்ற வலைத்தளத்திலிருந்து…

உலகப் பொருளாதார சிக்கலுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு

உலகப் பொருளாதார சிக்கலுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு

இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதனால் – வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள். சம்பளம் வருகிறதே என்று கடன் வாங்கி சொத்துக்களைச் சேர்த்தவர்கள், கடனை அடைக்க முடியாமல் திணருகிறார்கள். தவணை முறையில் சொத்துக்கள் வாங்கியவர்களுக்கும் இதே நிலை தான்.

வேலை இழந்தவர்கள், வேறு வேலை தேடி அது கிடைக்காமல் போகும் போது அவர்களிடம் தற்கொலை சிந்தனை தலை தூக்குகிறது. பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிப்பவர்களுக்கு – இதோ இஸ்லாமிய ஆலோசனைகள்!

மனித வாழ்வில் சோதனைகள் தவிர்க்க முடியாதவை. பொருளாதாரப் பின்னடைவும் ஒரு சோதனையே.

“சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள், ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும்,நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம்.என்றாலும் பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக!” (திருக்குர்ஆன் 2: 155).

ஆனால் – “அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை”. (திருக் குர்ஆன் 2: 286).

எனவே கவலையை விடுங்கள்!

சோதனைகள் தற்காலிகமானவையே!

“நிச்சயமாக துன்பத்துடன் இன்பமுண்டு. மெய்யாகவே துன்பத்துடன் இன்பமுமுண்டு”. (திருக் குர்ஆன் 94: 5-6).

எனவே இத்துன்பத்திலிருந்து மீண்டு விட முடியும் என்று உறுதியாக நம்புங்கள்.

“ஏன் இந்த சோதனை நமக்கு?” என்று சிந்தியுங்கள். இறைவனுக்கு நன்றி செலுத்தத் தவறி விட்டோமா – என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் இறைவன் கூறுகிறான்:

“நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகப்படுத்துவேன்” (திருக்குர்ஆன் 14:7)

இறைவனுக்கு எப்படி நன்றி செலுத்துவது? இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப் பட்டு நடப்பது தான் அவனுக்கு நன்றி செலுத்துவது ஆகும்!

எனவே -”ஏதாவது பாவமான காரியங்களில் ஈடுபட்டு விட்டோமா?” என்று பாருங்கள். அது வட்டியா அல்லது ஏதேனும் (இறைவன் தடுத்துள்ள) “ஹராமா” என்று பாருங்கள். ஆம் எனில் – அந்தப் பாவங்களில் இருந்து விலகிட முயற்சி செய்யுங்கள்.

தடாலடி நடவடிக்கை வேண்டாம்.

ஆர அமர சிந்தித்து முடிவெடுங்கள்.

பிரச்னைகளில் இருந்து வெளியே வர இரண்டு வழிகள்:

1.ஒன்று நேரான வழி.
2.மற்றொன்று குறுக்கு வழி. குறுக்கு வழி இலகுவானது போல் தோன்றும். நேர் வழி “சுற்று வழி” போல் தோன்றும்.

குறுக்கு வழிகளை நாடாதீர்கள். யாரேனும் அதற்கு ஆலோசனை சொன்னால் – உடன் உங்கள் நினைவுக்கு வர வேண்டியவன் நமது ஆதி பெற்றோர் ஆதம்- ஹவ்வா (அலை) இருவருக்கும் முன்னால் வந்தானே அவன் தான்!

ஆனால், நேர் வழியில் நிலைத்திருந்தால் இறைவன் உங்களைக் கை விட்டு விடுவானா என்ன?

“எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)

“எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்கி விடுகின்றான். (திருக் குர்ஆன் 65: 4)

அடுத்து – உங்கள் நலம் நாடும் சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.

“அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள். (திருக் குர்ஆன் 42:38)

உங்களைக் குத்திக் காட்டுபவர்கள், உங்களின் நலனில் அக்கரை சிறிதும் இல்லாத அறிவீனர்களைப் புறக்கணியுங்கள்.

“இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக! (திருக்குர்ஆன் 7:199)

தேவையற்ற ஆடம்பரப் பொருட்களில் முதலீடு செய்திருந்தால் அவைகளை விற்று விட முயற்சி செய்யுங்கள். விலை உயர்ந்த காராக இருந்தால் விற்று விட்டு விலை குறைந்த கார் அல்லது மோட்டார் சைக்கிள் என்று மாறிக் கொள்ளுங்கள். இதில் கவுரவம் பார்க்கத் தேவையில்லை.

உங்கள் கடனை அடைப்பது குறித்து திட்டமிடுங்கள். கடன் கொடுத்தவர்களையே அணுகுங்கள். ஒத்துழைப்பு கிட்டலாம். இல்லாவிட்டால் சட்ட ஆலோசகர்களை அணுகவும்.

ஒரு கடனை அடைப்பதற்கு இன்னொரு கடன் பக்கம் செல்லாதீர்கள். சான்றாக நகைக் கடன். வட்டிக்கு வைத்து நகைக் கடன் வாங்குவதை விட அவைகளை விற்று விடுதல் மேல். பிறகு வாங்கிக் கொள்ளலாம் – இன்ஷா அல்லாஹ். கடன்களை அடைத்திட முனைப்பு காட்டுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். கடன் கொடுத்தவர் அதனை மன்னிக்காமல் இறைவன் அதனை மன்னிப்பதில்லை என்பதனை நினைவில் நிறுத்துங்கள்.

தேவையற்ற செலவுகளைக் குறையுங்கள். குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். ஆளுக்கு ஒரு செல்ஃபோனா, அறைக்கு ஒரு தொலைக் காட்சிப் பெட்டியா – வேண்டாம்!

“அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்”.(திருக் குர்ஆன் 17:26)

அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து சிந்தியுங்கள்.. முதலில் இறைவனிடம் பாவ மன்னிப்பு கோருங்கள். அவனிடம் உதவி தேடி துஆ செய்யுங்கள்.

ஐந்து வேளையும் நேரம் தவறாது தொழுகைக்குச் செல்லுங்கள்.

“நம்பிக்கையாளர்களே! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்

பொறுமையுடையோர்களுடன் இருக்கிறான்”. (திருக் குர்ஆன் 2:153)

ஏற்கனவே நீங்கள் செய்த வேலை உங்கள் மனதுக்குப் பிடித்திருந்ததா? அவ்வாறு பிடித்திருந்தால் மட்டும் அதே துறையில் வேறு வேலை தேடுங்கள். இல்லாவிட்டால் – பொருளாதாரப் பின்னடைவே உங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்திருப்பதாக எடுத்துக் கொண்டு உங்களுக்குப் பிடித்த வேறு துறைகளில் ஈடுபட முயற்சி செய்யுங்கள்.

உங்களை நீங்களே எடை போடவும் இந்த தருணம் ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது. உங்களின் பலம் எது, பலவீனங்கள் என்னென்ன என்பதை சீர்தூக்கிப் பாருங்கள்… நீங்கள் வேலை செய்து கொண்டிருந்த துறை சாராத உங்கள் பலங்களைக் கண்டுணர இதுவே வாய்ப்பு. அது போல, உங்கள் பலவீனங்களை உதறிடவும் முயற்சி செய்யுங்கள்.

வாய்ப்புகளைத் தேடிக் காத்திருங்கள்.. அதற்கென என்னேரமும் தயாராகக் காத்திருங்கள். தயார் நிலையில் இருப்பவர்களே வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொள்கின்றனர். நாள்தோறும் நாட்டு நடப்புகளை உலக நிகழ்வுகளை குறிப்பாக உங்கள் துறை குறித்த தகவல்களை சேகரிக்கத் தவறாதீர்கள். (“அடடா! எனக்குத் தெரியாமப் போச்சே!”)

ஒரே ஒரு முனையில் மட்டும் முயற்சி செய்தால் போதாது. பல முனை முயற்சிகள் தேவைப் படலாம். அவற்றுள் ஏதாவது ஒன்று நிச்சயம் “க்ளிக்” ஆகும் – இன்ஷா அல்லாஹ். தாழ்வு மனப்பான்மை வேண்டவே வேண்டாம். எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் நிராசை அடைந்து விடாதீர்கள். இது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.

“அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கையிழந்து விடவேண்டாம்!(திருக் குர்ஆன் 39:53)

அதிக கவலை உடல் நலத்தையும் கெடுக்கும். எதிர்காலத்தைக் குறித்த அச்சமும் உடல் நலத்துக்கு நல்லதல்ல. ஒரு அறிஞர் சொன்னார்:

பிரச்னைக்கு தீர்வு இருக்கிறது என்றால் பிறகு ஏன் கவலைப் பட வேண்டும். பிரச்னை தீராது என்றால் கவலைப் பட்டு என்ன பயன்?

எனவே விடுங்கள் கவலையை!

ஆனால், இது போன்ற தருணங்களில் பெரும்பாலான மனிதர்கள் உணர்ச்சி வசப் பட்டு விடுகிறார்கள்.. தங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் எரிந்து விழுந்து நல்ல மனிதர்களின் உறவுகளைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.. எனவே உணர்ச்சி வசப் பட வேண்டாம். இந்த இடத்தில் பிரச்னைகளில் சிக்கியுள்ளவர்களைச் சுற்றியிருப்பவகளுக்கும் சில ஆலோசனைகள்:

மனைவிமார்களே!
இந்த நேரத்தில் உங்கள் கணவருக்கு உற்ற துணையாக இருங்கள். கவலையுற்றிருக்கும் உங்கள் கணவரை உற்சாகப் படுத்துங்கள். அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எவ்வாறு நபியவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் உற்ற மனைவியாகத் திகழ்ந்தார்களோ அது போல் நீங்களும் நடந்து கொள்ளுங்கள். நச்சரிக்காதீர்கள். செலவினங்களைக் கட்டுப் படுத்தல் உங்கள் கரங்களில் தான் இருக்கிறது, புதிய நகைகள் பிறகு செய்து கொள்ளலாம்.. கணவருக்குத் தெரியாமல் சேமித்து வைத்திருப்பீர்களே, அதை எடுத்துக் கொடுத்தால் அவருக்கு எப்படி இருக்கும்?

பெற்றோர்களே!
தைரியம் ஊட்டுங்கள் உங்கள் மகனுக்கு. அவசிய செலவுகளைத் தவிர்த்து இதர செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள் அல்லது குறைக்கப் பாருங்கள். (“தம்பி, மச்சான் வந்திருக்காக,. ரெண்டு கிலோ கறி வாங்கிட்டு வாயேன், பிரியாணி போடலாம்!”)

வளர்ந்து விட்ட மகன்களே- மகள்களே – உங்களைத்தான்!
உங்கள் தந்தை வசதிக்குத் தகுந்தவாறு பாக்கெட்-மணி தந்திருப்பார்கள். ஒரே ஒரு விடுமுறை நாளைக் கழிப்பதற்காக தம் செல்லச் செல்வங்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொடுக்கும் தந்தைமார்களும் உண்டு. இப்போது உங்கள் தந்தை விழி பிதுங்கிய நிலையில். நீங்கள் என்ன செய்யலாம்? பாக்கெட் மணி வேண்டாம். அவராகக் கொடுத்தாலும் மறுத்து விடுங்களேன். உங்கள் பாசம் அவர் கவலை போக்கும் மறுந்தாக அமைந்திடும்.

உறவினர்களே!
உங்களைப் பற்றித் தான் பயமாக இருக்கிறது. குத்திக் காட்டுபவர்கள், உள்ளூர மகிழ்ச்சி அடைபவர்கள் பெரும்பாலும் நீங்களாகத் தான் இருக்கிறீர்கள். ஒரு உறவினர்: “அண்ணே! ச்சீப்பா வந்ததுண்ணேன், ஒரு நாலு மனைக்கட்டு (Plots) வாங்கிப் போடலாம்னு, இந்தப் பத்திரத்தைக் கொஞ்சம் படிச்சுப் பாத்துச் சொல்லுங்கண்ணேன்!”

பொருளாதாரப் பின்னடைவால் பாதிக்கப் பட்டிருக்கும் என்னருமைச் சகோதரர்களே! வேலையும் போய் விட்டது, சேமிப்புகளும் சுருங்கி விட்டது. அடுத்து என்ன செய்வது என்று தானே கேட்கிறீர்கள்.

வெறுங்கையுடன் மக்காவைத் துறந்து மதீனா சென்ற அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைப் பாருங்கள். அங்கே அவருக்கு உதவிட முன் வந்த அன்ஸாரித் தோழரிடம் எதுவும் பெற்றுக் கொள்ளாமலேயே, வெறும் சாக்குப் பையுடன் கடைத்தெருவுக்கு சென்று, சிறிய அளவில் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி (வெண்ணெய் வியாபாரம் தான்!) பின்னர் – ஒரு பத்து ஆண்டுகளுக்குள்ளேயே மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும், இறக்குமதியாளராகவும் வெற்றி பெற்ற ஒரு வணிகராகத் திகழ்ந்தது உங்கள் சிந்தனைக் கதவுகளைத் திறந்து விடட்டும்.

இந்த வரலாற்றில் உங்களுக்கு மூன்று படிப்பினைகள் உண்டு:

1. வெறுங்கையுடன் கூட நீங்கள் உங்கள் “மறு வாழ்வைத்” துவக்கலாம்.. கவலை வேண்டாம்.

2. நீங்கள் பணியாற்றிய இடத்தை மாற்றிப் பாருங்கள். ஹிஜ்ரத் வெற்றி தரலாம்.

3. நீங்கள் கம்பெனி கம்பெனியாக வேலை தேடித் தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வியாபாரத்தில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், தக்க ஒரு துணையுடன் துணிந்து இறங்கிப் பார்க்கலாம். சிறிய அளவில் துவங்குவது நல்லது. வியாபாரத்தில் நேர்மையும், தரமும் அவசியம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாம் இங்கே வலியுறுத்துவது என்னவெனில் – இவ்வுலக வாழ்க்கை அற்பமானது என்பதனை மறந்து விட வேண்டாம். பொருள் மயக்கத்திலிருந்து விடுபடுங்கள்! மறுமைக்குக் கொஞ்சம் சேர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள். போதும் என்ற மனம் முக்கியம்.

இக்கட்டான சூழ்நிலைகளிலும் – தர்மம் செய்யுங்கள். அது உங்களின் விதியை மாற்றிட வல்லது. இதனைப் படிப்பவர்களுடன் சேர்ந்து நாமும் உங்களுக்காக துஆ செய்கிறோம். நீங்களும் துஆ செய்யுங்கள்:

“என் இறைவனே! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டு செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்க பலமாக ஓர் அதிகாரத்தை வழங்குவாயாக!” (திருக் குர்ஆன் 17:80)
(ஆக்கம் சகோதரர் ஹைதர்

ஷைத்தானின்-அடிச்சுவடுகள்

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)

என் இனிய தர்காஹ்வாதிகளே மேற்கண்ட நபிமொழிக்கு ஏற்றாற்போன்று நடந்துக்கொள்கிறீர்களே கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க மாட்டீர்களா?

* சந்தனக்கூடு
* கொடிமரம்
* சமாதி வழிபாடு
* அவ்லியாக்களுக்கு நேர்ச்சை
* கப்ரை உயர்த்திக் கட்டுதல்
* தஸ்பீஹ் மணி உருட்டுதல்
* மவ்லூது பாடல்கள்
* கவ்வாலி இசைக்கச்சேரிகள்
* உரூஸ் உண்டியல்
* யானை குதிரை ஊர்வலங்கள்
* பிறந்த நாள் விழா எடுப்பது
* இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்
* வட்டி வாங்குதல்
* வரதட்சணை பிடுங்குதல்
* ஜோதிட நம்பிக்கை
* கருமணி தாலி கட்டுதல்
* வாழைமரம் நடுதல்
* ஆண்கள் தங்கம் அணிவது
* மஞ்சள் நீராட்டுவிழா
* சுன்னத் கத்னா திருவிழா

ஒருமுறை மறுபடியும் கீழ்கண்ட நபிமொழியை படியுங்கள்

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)

இணைவைத்தால் மன்னிப்பு கிடையாது

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)

தாயத்தை கட்டாதீர்கள்

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)

இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்

அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது
‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)

இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)

இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)

இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
islamicparadise.wordpress.com-என்ற வலைத்தளத்திலிருந்து…

பெண்கள் பேண வேண்டிய நாணம்!

பெண்கள் பேண வேண்டிய நாணம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, December 31, 2009, 17:19

மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும்  ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும்.

இறைவனின் படைப்பான ஆண், பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான். ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் வெட்கம், நாணம் அனைத்தையும் மறந்து அநாகரீகமான செயல்களில் பெண்கள் ஈடுபடத் துவங்கி விட்டனர்.

மேலை நாடுகளில் விடை பெற்று விட்ட இந்த வெட்க உணர்வு தற்போது கீழை நாடுகளிலும் விடைபெறத் துவங்கி விட்டது. அதன் அதிவேக வளர்ச்சி இஸ்லாமியப் பெண்களையும் தொட்டுவிட்டது. அரைகுறை ஆடை அணிவது அந்நிய ஆண்களோடு ஊர் சுற்றுவது கவர்ச்சிகரமான அலங்காரங்களை செய்து கொண்டு வீதிகளில் உலா வருவது என்று பல அநாகரீகச் செயல்கள் இஸ்லாமிய பெண்களிடம் ஒட்டிக் கொண்டு விட்டது.

வெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஈமான் உள்ளவரிடம் வெட்கம் இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களும். அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும் உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள் அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா? அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா?

கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய அலங்காரத்தை உலகமறியக் காட்டுவது தான் நாகரீகமா? நங்கையர்களின் நாட்டம் தான் என்ன?

“கன்னிப் பெண்ணும் விதவைப் பெண்ணும் அனுமதி பெறப்படாமல் திருமணம் முடிக்கப்பட மாட்டாள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, “கன்னிப் பெண்ணின் அனுமதி எப்படி? (அவள் வெட்கப் படுவாளே)” என்று நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவள் மவுனமாக இருப்பதே அனுமதி” என்று கூறினார்கள் அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5136

அனுமதிக்கப்பட்ட ஒன்றிற்குக் கூட ஆம்’ என்று பதில் சொல்ல வெட்கப்பட்ட தீன்குலப் பெண்களின் நாணம் எங்கே? இந்தப் பெண்கள் எங்கே?

நல்ல ஆண்களைக் கூட கெடுக்கும் வண்ணம் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டும் நறுமணப் பொருட்களை பூசிக் கொண்டும் செல்வதால் கெட்டுப் போவது பெண் மட்டுமா? நல்ல ஆண்களும் கூடத் தானே?  வெட்கமில்லாமல் அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்தும் இப்பெண்கள் அண்ணலாரின் பொன் மொழிக்குச் செவி சாய்ப்பார்களா?
நறுமணம் பூசி, தன் கணவனை மயக்கச் செய்யவே ஒரு பெண்ணுக்கு அனுமதியுண்டு.

அதை விடுத்து தெருத் தெருவாக வீட்டில் உள்ளவர்களை வெளியில் வரவழைக்கும் வண்ணம் நறுமணம் பூசிச் செல்வது விபச்சாரியின் செயலுக்குச் சமமில்லையா? ஊரிலுள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பார்க்கின்றார்கள் என்ற வெட்க உணர்வும் இல்லையா?

“எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோ அப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 760

கடமையான தொழுகையில் கூட நறுமணம் பூசிக் கொண்டு பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்குக் காரணம், அதனால் மற்ற ஆண்களின் பார்வை அங்கு செல்லும் என்பதை விட வேறு என்னவாக இருக்கும்? வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன? வெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர் சுற்றியது தானே!

“எந்தவொரு ஆணும் (அந்நியப்) பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: அஹ்மத் 109)

“ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: புகாரி 3281

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் தன் வேலையைக் காட்டுகிறான். இதை நிதர்சனமாக நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

(அல்குர்ஆன் 24:31)

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும்,  நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண் களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 33:32-35)

தீன்குலப் பெண்களாக நாம் வாழ வேண்டுமானால் நபி (ஸல்) அவர்களின் மனைவியரைப் போன்று கண்ணியம் மிக்க ஆடைகளை அணிந்த பெண்களாகவும் அவசியமில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து, தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடிப்பவர்களாகவும், ஜகாத் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டபடி நடக்க வேண்டும். “தீர்ப்பு நாளில் முஃமினின் தராசில் நன்னடத்தையை விடக் கனமானது எதுவும் இருக்காது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹ்மத் (26245), அபூதாவூத் (4166)
நன்மையும் தீமையும் நிறுக்கப்படும் போது நன்மையின் தட்டைத் தாழ்த்தும் பணியில் ஒழுக்கவியலின் பங்கு ஒப்பிட முடியாதது என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது.  “மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “இறையச்சமும் நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள். “நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்?” என கேட்கப்பட்ட போது, “வாயும் பாலுறுப்பும்” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: அஹ்மத் (7566), திர்மிதீ (1927), இப்னு மாஜா (4236)

நம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நடக்கும்

நல்லொழுக்கமுள்ள பெண்களாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!

-ஃபைரோஸ் பானு

மதங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல!மும்பை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு?

ஜனவரி 9, 2010 by vedaprakash

மும்பை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு: மதங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல!

http://viduthalai.periyar.org.in/20100108/news01.html

மதங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல!: மும்பை, ஜன. 8, 2010_ அரசமைப்புச் சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்-டுள்ள பேச்சு சுதந்திரம், கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் போன்ற அடிப்-படை உரிமைகளின் கீழ் மதங்களை, அது இசுலா-மாக இருந்தாலும், இந்து மதமாக இருந்தாலும், கிறித்துவ மதமாக இருந்-தாலும், விமர்சனம் செய்-வது அனுமதிக்கப்பட்-டுள்ளதுதான் என்றும், அந்தக் காரணத்துக்காக மட்டுமே ஒரு புத்தகத்தை தடை செய்ய முடியாது என்றும் மும்பை உயர்நீதி-மன்ற அமர்வு தனது தீர்ப்பில் கூறியுள்ளது. என்றாலும் அத்தகைய விமர்சனங்கள் உண்மை-யான நோக்கம் கொண்-டவையாகவும், இரு மதத்-தினரிடையே பகை உணர்வை வளர்ப்பதாக-வும் இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறி-யுள்ளனர்.  உயர்நீதிமன்றம் இவ்-வாறு கூறியிருப்பது மனித உரிமை ஆர்வலர்-களுக்குப் பெரு மகிழ்ச்-சியை அளித்துள்ளது. இசுலாம்_- அரசியல் உல-கின் மீது முஸ்லிம்களின் படையெடுப்பு (Islam — A Concept of Political World Invasion by Muslims) என்னும் கருத்து என்ற நூலை பாசின் (R.V. Bhasin) என்பவர் 2003 இல் எழுதி வெளியிட்டி-ருந்தார். 2007 ஆம் ஆண்-டில் மகாராட்டிர அரசு அந்த நூலை தடை செய்-தது. இதனை எதிர்த்து பாசின் உயர்நீதிமன்றத்-தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை நீதிபதி-கள் ரஞ்சனா தேசாய், சந்-திரசூட் மற்றும் மொஹிதி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசார-ணைக்கு வந்தது.

இஸ்லாம் பற்றிய நூலின் மீது தடைவிதிக்கப்பட்டது: இசுலாம் பற்றி அதிக-மாக அறியப்படாத சில செய்திகளை ஆசிரியர் இந்த நூலில் கூறியுள்-ளார். அவை தவறாகக் கூட இருக்கலாம்; ஆனால் அதை வெளிப்-படுத்தவும் அவருக்கு உரிமை உள்ளது என்று அவரது வழக்கறிஞர் காமா வாதாடினார். அரசு வழக்கறிஞரும், சில முசுலிம் அமைப்பு-களின் சார்பில் வழக்கறி-ஞர்களும் தடையை ஆதரித்து வாதாடினர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புத்தகத்தின் மீதான தடையை நீக்க மறுத்துவிட்டனர். என்றா-லும் அவர்கள் தங்கள் தீர்ப்பில், தனக்கு சரி என்று பட்டதை ஆசிரி-யர் கூறலாம்; அது தவ-றாக இருந்தாலும் அதற்-காக அவரை தண்டிக்க முடியாது. என்றாலும், இசுலாம் மதக் கட்டளை-களை ஆராயும் உண்மை-யான நோக்கத்துடன் அத்தகைய கருத்து தெரி-விக்கப்பட்டுள்ளதா என்-பதைப் பார்க்க வேண்-டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த நூலில் அத்த-கைய நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கப்பட்-டிருக்கவில்லை. முசுலிம்-களின் மத உணர்வைப் புண்படுத்த வேண்டும் என்ற கெடு நோக்கத்து-டன் செய்யப்பட்டது போலவே தோன்றுகிறது என்று நீதிபதிகள் கூறி-யுள்-ளனர். மதத்தைப் பற்றி விமர்-சனம் செய்ய ஒருவருக்கு உரிமை உள்ளது எனக் கூறிய நீதிபதிகள், ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மீது வெறுப்பு மற்றும் பகை உணர்வைத் தூண்டி-விடும் வகையில் அது இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முஸ்லிம்களும், முஸ்லிம்-அல்லாதவர்களும்: முசுலிம் மத மக்களுக்-கும் மற்ற மத மக்களுக்கு மிடையே போர் நடை-பெறு-வது தவிர்க்க முடி-யாதது என்று கற்பனை செய்து கொண்டு, இந்திய முசுலிம்கள் எவ்வாறு இந்துக்களை மதம் மாறச் செய்ய விரும்புகின்றனர் என்பது பற்றியும், இந்து கோயில்களும் பெண்-களும் எவ்வாறு தாக்கப்-படுகின்றனர் என்பது பற்றியும் ஆசிரியர் எழுதி இருப்பது, மக்களிடையே பகை உணர்வைத் தோற்று-வித்து வன்-முறைக்கு வழிகோலும் என்று நீதிபதிகள் குறிப்-பிட்டுள்ளனர். அதாவது தடை செய்யப்பட்டிருப்பதை உறுதி நீதிபதிகள் செய்கின்றனர்.

புத்தகத்தின் மீதான தடை தொடர்கிறது:இதிலிருந்து தெரிவாது, கருத்து சுதந்திரம் என்று ஒருவர் எதனை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் அத்தகைய விமர்சனம் மற்றவர்களுக்கும் உண்டு. மேலும் அத்தகைய விமர்சனம் மக்களை மோதவிடக்குடியதாக இருக்கக் கூடாது.

உணவு பற்றாக்குறை பத்து ஆண்டுகளில் அதிகரிக்கும்

இந்தியா ஏற்கனவே பணவீக்கத்தால் தள்ளாடி வரும் நிலையில், உணவு தானிய பற்றாக்குறையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் உணவு தானியங்களுக்கான தேவை 30 சதவீதம் வரை உயரும் என தெரிகிறது.
புவி வெப்பமடைந்ததால், இந்தியாவில் பருவ நிலைகள் மாறின, கடுமையான வெப்பச் சூழல் நிலவியது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, வறட்சி நிலவியது. இது உணவு உற்பத்தியிலும் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. மக்கள் தொகை பெருக்கமும் கட்டுக்கு அடங்காமல் போனதால், வரும் பத்து ஆண்டுகளுக்கு உணவு உற்பத்தியை 30 சதவீதம் அதிகரிக்க வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் கூறியதாவது:

கடந்த 1972ம் ஆண்டு 55 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை 2007ம் ஆண்டில் 112 கோடியை தாண்டியது. இதனால், உணவு உற்பத்தியை இரு மடங்குக்கும் அதிகமாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் 20.34 கோடி டன்கள் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. வரும் 2020ம் ஆண்டில் 28.81 கோடி டன்கள் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பால், காய்கறிகள், பழங்கள், சர்க்கரை ஆகியவற்றுக்கு மிகுந்த தேவை ஏற்பட்டுள்ளது.

மண் வளம் குறைந்து வருதல், நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருதல், விவசாய உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இயற்கை வளங்களை பாதுகாத்து, வளப்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் வளர்ச்சியை எட்டலாம்.

விவசாய உற்பத்தியை பெருக்க மத்திய அரசு சமீபத்தில் புதிய புதிய விஞ்ஞான, தொழில் நுட்பங்களை கையாண்டு வருகிறது. 25 கோடி ரூபாய் செலவில் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அதே நேரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு கழகமும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நன்றி : தினமலர்

வேலையில்லா திண்டாட்டத்தில் அலறும் அமெரிக்கா

Pathivu Toolbar ©2010thamizmanam.com

“உலக நிதி நெருக்கடி காரணமாக உலகமெங்கும் பல மில்லியன் கணக்கானோர் வேலையிழந்தனர். இலங்கை இந்தியா போன்ற தெற்காசிய நாடுகள் கூட இந்த நிதி நெருக்கடியில் நொந்து போயின. இதில் என்னவோ அதிகமாக அடிவாங்கியது அமெரிக்காதான்.

2007ல் ஆரம்பித்த இந்த நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் இதுவரை 7.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. இதில் 4.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் நிதிநெருக்கடி உச்சம் கொடுத்த 2009ம் ஆண்டில் இழக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி ஓய்ந்துவிட்டது எல்லாம் மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு திரும்புகின்றது என்று ஒபாமா ஒப்பாரி வைக்கும் நேரத்தில் கடந்த டிசம்பர் மாதக்காலப்பகுதியில் மீண்டும் 85,000 வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. இதேபோல நவம்பர் மாதக்காலப்பகுதியில் 11,000 வேலைகள் இழக்கப்படலாம் என்று அமெரிக்க அலுவலர்கள் எதிர்பார்த்தாலும் எதிர் பார்த்ததைவிட 4000 வேலைவாய்ப்புகள் அதிகமாகவே இழக்கப்பட்டுள்ளன. எது என்னவானாலும் வேலைவாய்ப்பில்லா வீதத்தை 10% பேணுவதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. இது இந்த வருடம் 11 வீதமாக அதிகரிக்கும் என்றும் இது உலக யுத்தம் II இன் பின்னர் ஏற்பட்ட அமெரிக்காவின் மிகப்பெரிய வேலையில்லாத் திண்டாடமாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்கைப் பார்க்கும் போது எமக்கே பீதி ஏற்படும்போது அமெரிக்கா பீதியடைவதில் வியப்பேதும் இல்லை. கடந்த 20 வருடங்களில் அமெரிக்காவில் இப்படியான வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் நிலவியதில்லையாம். ஒபாமாவின் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சோதனையாகவும், தலையிடியாகவும் இந்த வேலையில்லாத் திண்டாட்டம் திகழ்கின்றது. கடந்த டிசம்பர் மாதம் ஒபாமா தனது புதிய பொருளாதார மீட்சி திட்டத்தை அறிவித்தார். அதன்படி சிறிய வியாபாரங்களை ஊக்குவிக்கும் திட்டத்தையும் அறிவித்தார்.

ஒபாமா அமெரிக்க வங்கிகளை சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு பணம் கொடுத்து உதவுமாறு வேண்டிக்கொண்டுள்ளார். அமெரிக்க வங்கிகளுக்கு ஒபாமா நிர்வாகம் சுமார் $700 பில்லயன் அமெரிக்க டாலர்களை உதவித் தொகையாக வழங்கியது. இதனால் சதாரண மக்கள் கடும் கடுப்பாகவுள்ளனர். ஆயினும் ஒபாமா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் 1930ன் பின்னர் அமெரிக்க எதிர்கொள்ளும் இந்த மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொள்ள இந்த கடன் உதவி அவசியமாகின்றது என்று அறிவித்தார்.

முன்பு தான் செய்த உதவிக்கு பரோபகாரம் தேடும் நடவடிக்கையாகவே ஒபாமா இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளார் என எண்ணலாம்.

சில அமெரிக்க வங்கிகள் அரசு கொடுத்த கடன்களை நன்றியுடன் திருப்பி வழங்கிய நிகழ்வுகளும் நடந்தேறத் தொடங்கிவிட்டன. உதாரணமாக அமெரிக்க அரசு கொடுத்த 20பில்லயன் அமெரிக்க டாலர் கடன் தொகையை சிட்டி குரூப் எதிர்பார்த்த காலத்தை விட குறுகிய காலத்தில் மீள அரசிற்கு வழங்கியுள்ளது. இது வங்கித்துறை நிதி நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டு வருவதைக் காட்டுவதாக இருப்பினும், வங்கிகள் அரச தலையீட்டை அவ்வளவாக விரும்பவில்லை என்பதையும் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் என்று கேட்டால் எனக்கும் சத்தியமாக பதில் தெரியாது. ஆயினும் 2012 வரை கூட இதன் தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பல நிறுவனங்கள் புதிதாக வேலையாட்களைச் சேர்க்க கூடிய கொள்ளளவு இருந்தாலும் பயம் காரணமாக சேர்ப்பதில்லை.

இது இப்படியென்றால் நம்மூரில் உலக நிதி நெருக்கடியை காட்டி கொள்ளயடிக்கும் நிறுவனங்கள் அதிகம். மிகுந்த இலாபத்தில் இயங்கினாலும் உலக நிதி நெருக்கடியைக்காட்டி ஊழியரிடம் அளவுக்கு அதிகமாக வேலை வாங்குதல் மற்றும் சம்பள உயர்வு வழங்காமை போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றன. மக்கள் நலம் உள்ள அரசு தலையிட்டால் அன்றி இப்பிரைச்சனைகள் தீர வழியிருப்பதாகத் தெரியவில்லை.

சோரபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவ

First Published : 12 Jan 2010
Last Updated :
புதுதில்லி, ஜன.12: 2005 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சோரபுதீன் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குஜராத் போலீசாரால் போலி என்கவுன்ட்டர் மூலம் சோரபுதீன் கொல்லப்பட்டதாக அவரது சகோதரர் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அவர் தாக்கல் மனுவை விசாரித்த தருண் சாட்டர்ஜி, அப்தாப் ஆலம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் அவரது கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.இவ்வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள டிஐஜி பஞ்சரா மற்றும் பாண்டியன்(இருவரும் குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகள்) தவிர ராஜஸ்தான் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி தினேஷ் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். குஜராத் டிஎஸ்பி அமீனும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.சோரபுதீன் வழக்கு குஜராத் போலீசாரிடமிருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது அம்மாநில அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: பால்தாக்கரே எதிர்ப்பு

First Published : 12 Jan2010

மும்பை, ஜன.12: அடுத்த பொதுத்தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு(என்ஆர்ஐ) வாக்குரிமை அளிப்பதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்த கருத்துக்கு சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.பிரதமர் இவ்விவகாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் என்ஆர்ஐக்களிடம் பணம் நிறைய இருக்கிறது என்பதற்காக அவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது சரியானதாக இருக்காது என்றும் தாக்கரே தனது சாம்னா பத்திரிகை மூலம் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டில் குடியேறிவிட்ட இந்தியக் குடிமகன்களிடமிருந்து இந்தியா பணத்தை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த தாக்கரே, அவர்கள் இந்தியாவில் தங்கியிருந்து தங்களது அறிவு, காலம் மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும் என்பதையே நாடு எதிர்பார்க்கிறது என்றார்.என்ஆர்ஐக்கள், தாங்கள் சார்ந்துள்ள நாட்டையே தாய்நாடாகக் கருத வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையெனில் இரு நாடுகளுக்கும் விசுவாசமாக இல்லை என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஜின்னா – இந்தியா, பிரிவினை, சுதந்திரம் – முக்கிய தகவல்கள்

“ஜின்னா – இந்தியா, பிரிவினை, சுதந்திரம்” என்ற பெயரில்வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் எழுதியதை அடுத்து பாஜகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. பாஜகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் நாட்டுக்கு நல்லதல்ல என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்கும் அளவு பாஜக நிலைகுலைந்தது. ஜஸ்வந்த் சிங் அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் கூறியுள்ளார் என்பதை இந்நேரம்.காம் வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.

  • ஜின்னா, இந்தியராக இருந்தார். இந்திய மண் தான் அவரை பெரும் தலைவராக உருவாக்கியது. ஒருங்கிணைந்த இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டுள்ளார்.
  • சிறுபான்மையினர் என்ற கோஷம், பிரிவினைக்காகவே எழுப்பப்பட்டது. ஜின்னா பெடரல் அமைப்புடன் கூடி இந்தியா அமைய விரும்பினார். முஸ்லிம்கள் தனி அதிகாரத்துடன் வாழ விரும்பினார். இந்த கோஷம், படிப்படியாக எல்லா மட்டங்களிலும் பரவி, ஐக்கிய இந்தியா என்ற பெரிய மாளிகையை தகர்க்கும் அபாயத்துக்கு போனது. இதற்கு தீர்வு என்ன? “பிரிவினை ஒன்று தான் வழி’ என்கிறார் ஜின்னா. நேரு, வல்லபாய் படேல் மற்றும் காங்கிரசில் உள்ள தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்கின்றனர். இப்படித்தான் பாகிஸ்தான் உதயமானது.
  • ஜின்னா இந்துக்களையோ, இந்து மதத்தையோ எதிர்க்கவில்லை; காங்கிரஸ் கட்சியைத் தான் எதிர்த்தார். அதுதான் முஸ்லிம் லீகின் உண்மையான எதிரியாக திகழ்ந்தது. பீகார் உட்பட சில மாநிலங்களில் இந்து – முஸ்லிம் கலவரங்கள் உருவானபோது, முஸ்லிம்களை காக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்பதை நிரூபித்தார் ஜின்னா. அப்போது தான், இந்து ராஜ்யம் உருவாக்கப்படுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது.
  • அவருடன் நான் பலமுறை உரையாடியதில் அவர் இந்துக்களுக்கு எதிராகவே இந்து மதத்திற்கு எதிராகவோ பேசியதில்லை.
  • அவரது எதிர்ப்பு, போகப்போக தான் வெறுப்புணர்ச்சியை தூண்டிவிட்டது. அதிலும், காங்கிரஸ் தலைமை மீது அவருக்கு அதிருப்தி வேரூன்ற காரணமாகவும் இருந்தது என்று அவரது தனிச் செயலர் எம்.ஆர்.ஏ. பெய்க் கூறியுள்ளார்.
  • இப்படிப்பட்ட பலகட்டங்களில் மதம் என்பது ஒரு பொருளாகவே இருந்ததில்லை. அவர் தன்னை மதவாதி என்று காட்டிக் கொண்டதே இல்லை. பிரிவினைக்கு பின், அவருக்கு அப்படிப்பட்ட தோற்றத்தை பாகிஸ்தான் தந்தது. பாகிஸ்தான், தனி நாடாக ஜின்னா தேவைப்பட்டார். அதுபோல, ஜின்னாவின் தேவைகளை பூர்த்தி செய்ய பாகிஸ்தான் தேவைப்பட்டது என்பதே உண்மை.
  • சில கசப்பான உண் மைகளை சொல்லித் தான் ஆக வேண்டும். 1939 முதல் 1947ல் நாடு பிரிவினைக்குள்ளானது வரை பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு, நாட்டின் எதிர்காலம் பற்றிய உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளுதல், பரந்த கண்ணோட்டம், திடமான குறிக்கோள் போன்றவை இல்லாததை சொல்ல வேண்டும்.
  • மவுலானா ஆசாத் தன் புத்தகத்தில் எழுதியது போல, பிரிவினையை தவிர்க்க இந்தியா மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இராணுவம், வெளியுறவு, தொலைத்தொடர்பு ஆகிய விஷயங்களில் பெரும் தன்னாட்சி அளித்து தனி மாநிலங்களை அமைத்திருக்கலாம். இந்த யோசனையை மகாத்மா காந்தி ஏற்றார். ஆனால், சர்தார் படேல் ஏற்கவில்லை.
  • இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்றும் இன்று தனிநாடுகள். அடிப்படையில் சில விஷயங்களை மறக்க முடியாது. கடந்து போனது, கடந்ததாகவே எண்ணினாலும், மறைந்து விடாது. புதிதுபுதிதாக விஷயங்கள் உருவாகி, புதிதாக தகவல் வெளிவரத்தான் செய்யும்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நரசிம்மராவ் முயற்சித்தார் : திடுக் தகவல்

புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்த லிபரான் கமிஷன் நீண்ட காலத்துக்கு பின் பாஜக தலைவர்கள் 68 பேர் குற்றம் சாட்டியது. ஆனால் நரசிம்மராவின் பெயர் இப்பட்டியலில் இல்லாதது பலத்த விமர்ச்னத்துக்குள்ளானது. இச்சூழலில் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதற்கு பின்னர் அவ்விடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் திட்டங்கள் தீட்டினார் என பிரதமர் அலுவலகத்தில் துணைச்செயலாளராகவும் நரசிம்மராவின் ஆலோசகராகவும்(தகவல் ஆலோசகர்) பணியாற்றிய ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.வி.ஆர்.கே பிரசாத் குறிப்பிட்டார்.

”உண்மையில் என்ன நிகழ்ந்தது” (அசலு எமி ஜரிகின்டன்டே?)என்று பெயரிடப்பட்ட தெலுங்கு மொழியிலான இப்புத்தகம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது..ராமர்கோவில் கட்டுவதற்கான நரசிம்மராவின் விருப்பத்தைக்குறித்து இப்புத்தகத்தில் இரண்டு அத்தியாயங்களில் பிரசாத் எழுதியுள்ளார்.1992 டிசம்பர் 6 க்குப்பிறகு இரண்டு வருடத்தில் தனது லட்சியத்தைப் பூர்த்திச்செய்வதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டார்.அதற்காக அரசியல் சார்பற்ற ட்ரஸ்ட் ஒன்றையும் துவக்கினார்.ஆனால் தேர்தலில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதால் ராமர்கோவில் கட்ட இயலவில்லை.நரசிம்மராவ் மீண்டும் பிரதமராக பதவியேற்றிருந்தால் ராமர்கோவிலை கட்டியிருப்பார்,

மேலும் இந்நூலில் பிரசாத் 1993 ஆம் ஆண்டு நான்கு வட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றபொழுது நரசிம்மராவ் தன்னோடு உரையாடிய உரையாடலின் விபரங்களையும் நினைவுக்கூறுகிறார்.அந்த தேர்தலில் பா.ஜ.க வின் முக்கிய பிரச்சாரமே ராமர்கோவில் கட்டுவதைப்பற்றிதான்.இந்நிலையில் ராவ் கூறினார்,”ராமனின் காப்புரிமையை பா.ஜ.க எவ்வாறு உரிமைக்கொண்டாட இயலும்?”பா.ஜ.க வுடன் நாம் போட்டியிடலாம்.ஆனால் ராமனோடு எவ்வாறு போட்டியிட இயலும்? என்ற நரசிம்மராவின் வார்த்தைகளை இந்நூலில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கிறிஸ்துமஸ்’ – ஓர் இஸ்லாமிய பார்வை!

மனிதனானவன் சந்தோசத்திற்கு எப்போதுமே அடிமை தான். மகிழ்ச்சிக்காக மனிதன் படாதபாடுபடுவதை கண்கூடாகக் கண்டுடிகாண்டிருக்கிறோம். அதே நேரம் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரையிலும் சந்தோஷத்தைத் தரும் விடயங்கள்

வித்தியாசப்படுகின்றன. தனிநபர் சந்தோசத்தை விட ஒரு சமூகத்தின் மகிழ்ச்சி தான் முக்கியமான ஒன்றாகும்.

ஒவ்வொரு மத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அந்தந்த மதத்தோடு தொடர்பான பண்டிகைகளை், கொண்டாட்டங்கள் குட்டிப்போட்ட பூனையைப் போல் வருடாவருடம் சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையானது பரவலாக கிறிஸ்தவர்களால் வருடா வருடம் டிசம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

எனவே முஸ்லீம்கள எல்லா நிலைகளிலும் இஸ்லாத்தின் நிழலில் கீழ் நின்று தான் எந்த ஒரு விடயத்தையும் அணுகவேண்டும் என்கின்ற கட்டாய நிலை இருக்கின்றது. ஏனென்றால் நாம் மறுமையை மையமாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிச்செல்பவர்கள். எனவே உலகில்

கிடைக்கும் சந்தோஷத்தை இழந்து விடக்கூடாது. எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையில் முஸ்லீம்களும் பங்குகொள்ளலாமா? என்ற கேள்விக்கு விடைகாணத்தான் வேண்டும்.

முதலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைப் பற்றி கிறிஷ்தவர்களின் வேதநூலான பைபிள் என்ன சொல்கின்றது என்பதனை சற்று ஆராய்ந்து விட்டு கேள்விக்கான விடைக்க வருவோம்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில்: -

‘புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள். ஜனங்களின் வழிபாடுகள் வீணாகயிருக்கிறது. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள். அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப் போல நெட்டையாய் நிற்கிறது. அவைகள் பேச மாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும், அவைகளுக்குப் பயப்படவேண்டாம். அவைகள் தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்’ (எரேமியா 10:2-4)

பைபிளின் இக்கூற்றிலிருந்து நாம் விளங்கக்கூடியது என்னவென்றால்: -

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், கிறிஸ்துமஸ் மரம் நாட்டுவதும், அதை அலங்கரித்து வணங்குவதும் கிறிஸ்துவர்களின் மார்க்கத்தில் உள்ளவையன்று. கர்த்தர் விரும்பாத ஒன்று என்பதையும் நாம் அவர்களது பைபிளிலிருந்தே விளங்க முடிகின்றது. பைபிளின் போதனைக்கே கிறிஸ்தவர்கள் முரண்படுவது உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

எனவே முஸ்லிம்களாகிய நாம் அடிப்படையே இல்லாத ஒன்றின் பக்கம் தலைசாய்ப்பது தவறானதாகும். இஸ்லாத்தைப் பொருத்தவரை கிறிஸ்துமஸ் கொண்டாடுவதோ அல்லது அப்பண்டிகையில் கலந்து கொள்வதோ தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ‘புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்’ என்று பைபிளும் கூறுகிறது. அதைத்தான் இஸ்லாமும் ஆணித்தரமாகக் கூறுகிறது. நமது மார்க்கமான இஸ்லாத்தில் நாம் உறுதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் புதியனவைகள் கலந்துவிடாமலும் கவனமாகவிருக்க வேண்டும். 

ஏனென்றால் அல்-குர்ஆனும் அல் ஹதீஸும் எவைகளை நமக்குப் போதிக்கின்றதோ அவைகள் மட்டுமே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய கிரியைகளாகும். அதுமட்டுமல்லாமல் ‘எவர் அந்நிய சமூகத்தைப் பின்பற்றுகிறாரோ அவரும் அந்நிய சமூகத்தவராவார்’ என்கின்ற ஹதீஸ் இங்கு நினைவு படுத்தப்பட வேண்டியதாகும். அத்தோடு நாம் எப்போதுமே எமது அகீதாவைப் பாதிக்கக் கூடிய விடயங்களில் மிகவும் பேணுதலாக இருக்க வேண்டும். எவைகள் மீது இஸ்லாத்தின் தூண்கள் நிலை பெற்றுள்ளதோ அவைகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாகும். ஏனென்றால் இஸ்லாம் மார்க்கமானது எப்போதுமே தீமைகளின் பக்கம் தலைசாய்ப்பதை விரும்பவில்லை.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மது, புகைத்தல், இசை, வீணான கேளிக்கைகள் போன்ற எத்தனையோ தீமைகள் அங்கே தலை விரித்தாடுவதை நாம் பார்க்க முடியும். அங்கு பங்கேற்கின்ற போது ஏதாவதொரு தீமையில் நாம் விழவேண்டிய சூழ்நிலை உருவாகும். நமது நன்பருக்காக என்று ஏதோ ஒன்றை நாம் செய்யப் போய் நாமேன் தீமைகளில் விழவேண்டும்?

எனவே தீமைகளை விட்டு ஒதுங்குவோம், தீமைகளுக்கு விலை போகாமல் நம் உள்ளங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைப்போம்.

இந்தக் கட்டுரை மூலம் கிறிஸ்தவர்களை நோகடிக்க வேண்டும் என்பது கடுகளவும் எமது நோக்கமல்ல. மாறாக இஸ்லாமியர்களுக்கு தங்களது மார்க்கத்தைத் தெளிவு படுத்துவதே எமது நோக்கமாகும் என்பதை தயவு செய்து இதனைப் படிக்கும் மாற்று மத சகோதரர்கள் புரிந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

by musawir

புர்கா பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமா?

hijab2பிரான்ஸ் அதிபர் சர்கோஸி புர்கா பெண்ணடிமைத்த னத்தின் அடையாளம் என்று கூறியதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இங்குள்ள சில முஸ்லிம் அமைப்புகள் இந்தக் கூற்றுக்கு எதிராக தங் களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன.

பெண்கள் போகப் பொருளாகக் கருதப்படாமல் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டுமானால் புர்கா போன்ற உடல் மறைக்கும் ஆடைகளைத்தான் அணிய வேண்டும். காமுகர்களின் பார்வையில் இருந்து பெண்களைக் காப்பாற்றும் புர்காவை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்று யார் கூறினாலும் அவர்கள் அறிவீனர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
(இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? என நமது நூலில் ஹிஜாப் எனும் புர்கா பெண்ணடிமைத்தனம் அல்ல என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது)

புர்காவைத் தடை செய்வதாக யார் கூறினாலும் உலக முஸ்லிம்கள் ஒன்று திரண்டு போராடுவது அவசியம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இந்திய ஊடகங்கள் செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளதாகவே நமக்குத் தோன்றுகிறது. உடலை மறைக்கும் ஆடைக்கு தடை விதிக்கப்படும் என்றோ, அது பெண்ணடிமைத்தனம் என்றோ பிரான்ஸ் அதிபர் கூறியதாகத் தெரியவில்லை.

புர்காவுடன் முகத்திரை அணிந்து முகத்தை மறைத்து அடையாளம் இல் லாதவர்களாக இருப்பதை மத அடையாளமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதாகவே தெரிகிறது. பள்ளிக்கூடங்களில் தடை செய்ததுபோல் அனைத்து இடங்களிலும் பெண்கள் முகத்திரை அணிந்து வருவது தடை செய்யப்படும் என்றுதான் பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இதை உறுதி செய்யும் வண்ணம் லண்டன் பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி

http://www.telegraph.co.uk/news/worldnews/europe/france/6946579/Women-who-wear-burkas-in-France-face-700-fine.html

(லிங்க் அனுப்பியவர் இனிமை)

இலட்சக்கணக்கான முஸ்ம்கள் வாழும் பிரான்ஸ் நாட்டில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையினர்தான் முகத்திரை அணியும் வழக்கமுடையவர்கள். இதை மற்ற முஸ்ம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாகத்தான் பிரான்ஸின் ஒட்டுமொத்த முஸ்ம்களும் ஒன்று திரண்டு எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை.

முகத்திரை போட்டுக் கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டால் அதை எதிர்க்காமல் இருப்பதுதான் சமூகத்துக்கு நல்லது. முகத்திரை அணிந்து தமது அடையாளத்தை மறைத்துக் கொள்ளும்போதுதான் அதிகமான ஒழுங்கீனங்கள் ஏற்படுகின்றன.

தன்னை யாரும் அடையாளம் காண மாட்டார்கள் எண்ணும்போது சில பெண்கள் யாருடனும் செல்லக்கூடிய துணிச்சல் ஏற்படுகிறது என்பதை நாம் காண முடிகிறது. சில ஆண்களும் முகத்திரை போட்டுக் கொண்டு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கும் இது உதவுகிறது.

கேவலமான தொழில் செய்யும் முஸ் மல்லாத பெண்கள் கூட முகத்திரை போட்டுக் கொண்டு முஸ்ம்களைக் கேவலப்படுத்துவதையும் பெருநகரங்களில் காணலாம். முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளை இடாமல் இருந்தும் முகத்தை மறைப்பதால் மோசமான விளைவுகள்தான் ஏற்படுகின்றன.

சென்னையில் முகத்திரை அணிந்து ஊர் சுற்றும் இளம் பெண்களில் சரி பாதி பேர் முஸ்ம்கள் அல்ல; காதல் லீலையை மறைப்பதற்காக முகத்திரையை தவறாகப்படுத்துவோர்தான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

சென்னை போன்ற நகரங்களில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிந்தவர்கள் இஸ்லாத்தில் இல்லாத முகம் மறைத்தலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதே சமயம் முகம், முன் கை தவிர மற்ற உறுப்புகளை மறைப்பதற்கு தடை சட்டம் போட்டால் அதைக் கடுமையாக நாம் எதிர்த்தாக வேண்டும். அப்படிச் சட்டம் இயற்ற எந்த ஜனநாயக நாட்டிலும் இடமில்லை.

முகத்தை மறைப்பதைத் தடுக்க தக்க காரணங்களைக் கூறுவதுபோல் இதற்கு எந்தக் காரணத்தையும் கூற முடியாது; தடுக்கவும் முடியாது. முகத்தை மறைப்பது தவிர்த்த புர்காவுக்கு பிரான்ஸ் தடை விதிக்கவுள்ளது என்று கருதுவோர் அதற்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டினால் களமிறங்கிப் போராடவும் நாம் தயங்க மாட்டோம்.

(குறிப்பு : பிரான்ஸ் அதிபர் இஸ்லாம் மீது காழ்ப்புணர்வு உள்ளவர் என்பதைப் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளார். அவரது நோக்கத்தை நியாயப்படுத்துவதற்காக இதைக் கூறவில்லை. இஸ்லாம் கூறாத ஒன்று சமூகத்தில் கேடு ஏற்படுத்தும்போது அதைத் தவிர்ப்பது நல்லது என்ற அடிப்படையில்தான் இதைக் கூறுகிறோம்.)

tntj.net என்ற தளத்திலிருந்து….

ஹெய்ட்டியில் ஐநா மீட்பு பணியாளர்கள் 70 பேரை உயிருடன் மீட்டனர்.

ஹெய்ட்டியில் ஐநா மீட்பு பணியாளர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். இதுவரை நடந்த மீட்பு பணிகளிலேயே இம்முறை தான் இவ்வளவு அதிகமானோரை 70 மீட்டுள்ளோம் என ஐநா அதிகாரி தெரிவித்தார். ஐநா வரலாற்றில் இதுவரை நடந்த மீட்பு பணிகளிலேயே ஹெய்ட்டியில் தான் அதிக சவால் நிறைந்ததாக மேலும் தெரிவித்த ஐநா அதிகாரிகள் மேலும் இடைவிடாமல் தங்கள் மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இன்னும் பலர் நல்ல உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். ஆயினும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளான Port-au-Prince எனும் நகர்புரங்களிலில் இருப்பவர்களுக்கு முழுமையாக உதவிகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இன்னும் பல அதிகமானவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவிப்பதால் நிலநடுக்க அழிவிகளில் இருந்து தப்பித்தவர்கள் மற்றும் மீட்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் உறவினர்கள் குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டனாரா என்பதை கூட உறுதிப்படுத்த முடியாத நிலமை உள்ளதாக தெரியவருகிறது. மேலும் குடிநீர் உணவு பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் வெடிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

புத்தாண்டின் பெயரால் நடந்த விபரீதங்கள்

வருடா வரும் புத்தாண்டு தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் குடித்து விட்டு கூத்தடிப்பதையும், நடன நிகழ்ச்சி என்ற பெயரில் ஆண், பெண், இருவரும் இணைந்து உரசி ஆடும் ஆபாசக் கூத்துக்களையும் நடத்திக் கொண்டிருப்போர் இந்த வருடமும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்தனர்.டிசம்பர் 31 அன்று கடந்த வருடங் களைப்போல் இந்த வருடமும் விபத்துக்கள் அசம் பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்று காவல்துறையும் தங்கள் பங்குக்கு குடித்துவிட்டு வாக னம் ஓட்டாதீர்கள், பொது இடங்களில் ஆபாசமாக நடந்துக் கொள்ளாதீர்கள் என்று பரவலாக எச்சரிக்கை செய்தும், கோரிக்கை வைத்தும் கூட அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்க முடிய வில்லை.

காரணம் புத்தாண்டு என்றாலே அதைக் குடித்து விட்டுத்தான் கொண்டாட வேண்டும் என்று இளைஞர்கள் எண் ணிக் கொண்டிருப்பதுதான். இதற் கேற்றாற் போல் தமிழக அரசும் வீதிக்கு வீதி மதுக்கடைகளையும், பார்களையும் திறந்து சமூக சேவை செய்து கொண் டிருக்கிறது.
இதனால் பாட்டிலும், கையுமாய் இளை ஞர்கள் புத்தாண்டை கோலகலமாய் கொண்டாடினர். குடித்துவிட்டு பைக்கில் சாகசங்கள் செய்வது, தெருக்களில் ஆவேசமாக கத்தியபடி செல்வது என்ற புத்தாண்டு சாகசங்களால் சென்னையில் மட்டும் வாகன விபத்துகளில் 125 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர். 4 பேர் விபத்துக்களில் பலியாகி உள்ளனர்.

புத்தாண்டு தினத்தன்று சாலை விதிமுறைகளை மீறியதாக சென்னையில் மட்டும் சுமார் 4000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவான்மியூர் கடற்கரையில் நள்ளிரவில் குடித்துவிட்டு கும்மாளமிட்ட இளைஞர்கள் பலர் அங் கேயே மட்டையாகி விட, காலை யில் வாக்கிங் செல்ல வந்தவர்கள் கடற்கரை முழுவதும் ஆங்காங்கே போதையில் மூர்ச்சையாகி டி சர்ட், ஜீன்ஸாடு படுத்துக் கிடந்தவர்களின் முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்து எழுந்திருக்காமல் போகவே வாக்கிங்க செல்ல வழியில்லாமல் திரும்பச் சென்றுள்ளனர்.

இளைஞர்கள் குடித்துவிட்டு போட்ட பாட்டில்களை பொறுக்க மட்டும் பெருங்கூட்டம் கூடியிருக்கிறது. அது மட்டுமில்லாமல் குடித்துவிட்டு குழு மோதல்களும்  பல இடங்களில் ஏற்பட் டிருக்கின்றன. புதுவையில் குடித்துவிட்டு கும்மாளமிட்ட இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னையில் நைஜிரிய வாலிபர் ஒருவர் இதேபோல் புத்தாண்டு பார்ட்டியில் வீட்டில் வைத்து கொல்லப்பட்டுள்ளார்.

போதை தலைக்கேறி புத்திப்பிசகிப் போய் புத்தாண்டை வரவேற்கிறோம் என்று இளைஞர்கள் அடிக்கும் கூத்துக் களைபற்றி தமிழகத்தின் எந்த அரசி யல் கட்சிகளும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. தமிழ்ப் புத்தாண்டைக் கூட எந்த கோலாகலமும் இன்றி கழிக்கும் தமிழர்கள் ஆங்கிலப் புத்தாண்டை ஏன் இவ்வளவு கொண்டாட்டங்களோடு வரவேற்கிறார்கள். குடிக்கலாச்சரத்தை ஊக்குவிக்கும் மேலைநாட்டு மோகத்தில் தமிழ்ச்சமுதாயம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் வீழ்ந்துதான் போயிருக்கிறது.

இதில் முஸ்லிம் இளைஞர்களும் விதிவிலக்கல்ல, சமுதாய அமைப்புகளின் தாக்கங்களால் முஸ்லிம் சமுதாயம் இந்த புத்தாண்டு குடிக்கலாச்சாரத்தில் இருந்து விலகி இருந்தாலும் மார்க்கம் அறியாத முஸ்லிம் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாடங்களில் பங்கேற்பதை பரவலாக காணமுடிந்தது, முஸ்லிம்கள் நிறைந்து வாழும் மண்ணடி பகுதியில் கூட இளைஞர்கள் மோட்டர் பைக்குகளில் சீறிச் செல்வதை காண முடிந்தது.

இந்துத்துவ அமைப்புகள் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோவில்களை திறக்ககூடாது என்று கோஷமிட்டதோடு சரி. கோவையில் ஒரு சில இந்து அமைப்பு கள் நட்சத்திர ஒட்டல்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர் அவ்வளவுதான். டாஸ்மாக்கில் குடிப் பவர்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

விநாயகர் சதுர்த்தி போன்ற கலவரங் களை உண்டாக்கும் நிகழ்ச்சிகளை தமி ழகம் முழுக்க நடத்தும் சங்பரிவார்கள் புத்தாண்டு என்ற பெயரில் கும்மாளமிடும் இந்து இளைஞர்கள் நல்வழியில் செல்ல ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்து ஆன்மிக அமைப்புகள் உட்பட அனைத்து சமூக இயக்கங்களும் ஒன்றிணைந்து முயற்சித்தால்தான் தமிழகத்தில் குடிக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியும். வரும் ஆண்டுகளிலாவது குடி இல்லாத, வன்முறை இல்லாத, விபத்தில்லாத ஆங்கில புத்தாண்டு மலருமா???
இனியவன்

பெண்களின் கற்பு குறித்த கூத்தாடி குஷ்பு வின் கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!


3868பெண்களின் கற்பு குறித்து கூத்தாடி குஷ்பு தெரிவித்த கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு கூத்தாடி குஷ்பு அளித்த பேட்டியில், பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். நோயோ, அநாவசியமான கர்ப்பமோ ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பு முறைகள் மிக அவசியம். ஒரு படித்த ஆண் தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று கூறியிருந்தார்.

இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குஷ்புவை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 23 வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி கூத்தாடி குஷ்பு உயர் நீதி்மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் வழக்குகளை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் பல நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த எல்லா வழக்குகளையும் சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து குஷ்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், பேச்சுரிமையை பறிக்கும் வகையில் எனக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனவே அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இன்று (19-1-2010) இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி, பெண்கள் குறித்த குஷ்புவின் கருத்துக்கள் ஏற்க முடியாதவையாக உள்ளன. அவரது கருத்துக்கள் ஜீரணிக்க முடியாதவை என்று கூறியதோடு இது குறித்து இரு வாரங்களில் விளக்கமளிக்குமாறு குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

இந்த விஷமக்கருத்து கூறப்பட்டது 2005, பெண்களை கற்பிழந்த ஒழுக்கங்கெட்டவர்களாக கூறும் கூத்தாடியின் இந்த விஷமக்கருத்து ஜீரணிக்க முடியாது என்பை கண்டுபிடிக்க 5 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய தான்…
tntj.net என்ற தளத்திலிருந்து….

85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?

பெய்ரூட்: எத்தியோப்பியாவைச் சேர்ந்த விமானம் ஒன்று 85 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் மத்திய தரைக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 85 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இன்று அதிகாலையில், பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய ஐந்து நிமிடங்களில் இந்த விமானம் விபத்தில் சிக்கியது.

விமானம் கிளம்பிய ஐந்து நிமிடத்திலேயே அது ரேடாரின் கண்களிலிருந்து மறைந்தது. விபத்துக்குள்ளான விமானம் போயிங் 737 ரக விமானம் எனக் கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்த பயணிகளில் 50 பேர் லெபனான் நாட்டவர் ஆவர். மற்றவர்கள் எத்தியோப்பியர்கள் எனத் தெரிகிறது. 7 பேர் விமான ஊழியர்கள் ஆவர்.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு இந்த விமானம் கிளம்பியது.

விமானம் தீப்பிடித்த நிலையில் கடலில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதில் இருந்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது.

ஈரான் விமானத்தில் தீ: 46 பேர் காயம்..

இதற்கிடையே ஈரானின் வடகிழக்கு நகரான மஷ்ஹத் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய விமானம் ஒன்றில் தீப் பிடித்தது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 46 பேர் காயமடைந்தனர்.

விமானத்தின் பின் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அதில் 157 பயணிகளும், 13 விமான பணியாளர்களும் இருந்தனர்.

டுபோலேவ் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. தீ விபத்தில் விமானம் பெருக்க சேதமடைந்தது.

ஈரானின் விமானங்கள் சமீபகாலமாக அடிக்கடி விபத்தை சந்தித்து வருகின்றன. இதற்கு பராமரிப்புக் குறைபாடே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
Read: In English
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளால் ஈரானால் கடந்த 20 ஆண்டுகளாக புதிய விமானங்களை வாங்க முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் மூடு பனிக்கிடையே குடியரசு தின அணிவகுப்பு

இந்தியாவின் 60வது குடியரசு தினமான இன்று தலைநகர் டெல்லியில் நிலவிய கடுமையான மூடுபனியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க குடியரசு தின அணிவகுப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இன்று காலை 9.45 மணிக்கு டெல்லியிலுள்ள அமர் ஜவான் நினைவுச் சதுக்கத்தில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மன்மோகன் சிங்.

அமர் ஜோதி சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் வணக்கம் செலுத்த, அவருடன் முப்படைகளின் தலைமைத் தளபதிகளும் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தினர். அருகில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை தலை கீழாக நிறுத்தி வணக்கம் செலுத்த, அஞ்சலி கீதம் முழங்கப்பட்டது.

டபஐ டட்ர்ற்ர்ஊஐகஉஅதன் பிறகு டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தின அணிவகுப்பு துவங்கியது. அணிவகுப்பு மரியாதையை ஏற்க வந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலையும், அரசு விருந்தினராக தென் கொரிய நாட்டின் பிரதமரையும் பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்றார்.

தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கொடி வணக்கம் செலுத்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், நாட்டின் பாதுகாப்பிற்காக வீரசேவை புரிந்த மூவருக்கு இராணுவ உயரிய விருதான அசோக் சக்ராவை வழங்கி கெளரவித்தார்.

மேஜர் சிறிராம் குமார், மேஜர் மோஹித் சர்மா, ஹவில்தார் இராஜேஷ் குமார் ஆகியோருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மேஜர் மோஹித் குமாருக்கு பதிலாக அவரது மனைவி மேஜர் ரிஷிமாவும், ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான குப்வாராவில் நடந்த மோதலில் வீரமாகப் போராடி உயிர் நீத்த ஹவில்தார் இராஜேஷ் குமாருக்கு வழங்கப்பட்ட அசோக் சக்ராவை அவரது மனைவியும் பெற்றுக் கொண்டனர்.

இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையை பறைசாற்றும் குடியரசு தின அணிவகுப்பினை அணிவகுப்பு கட்டளைத் தளபதி பரம்ஜித் சிங், தனி வாகனத்தில் வந்து குடியரசுத் தலைவருக்கு வணக்கம் செய்துச் செல்ல துவங்கியது.

டோக்ரா ரெஜிமெண்ட், 61வது குதிரைப் படை ஆகியோர் அணிவகுத்து வர, அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அதி நவீன போர் வாகனமான அர்ஜூனா டாங்கிகள் அணி வகுத்து வந்தன.

அவைகளைத் தொடர்ந்து ராக்கெட் ரெஜிமெண்ட் என்றழைக்கப்படும் பல்குழல் பீரங்கிப் படையும், போர்க் களத்தில் முன்னேற்றத்தை உறுதி செய்யும் சர்வாத்ரா பொறியல் படை வாகனங்களும், அவற்றைத் தொடர்ந்து களத்திலிருந்து தகவலளிக்கும் அதிநவீன தகவல் தொடர்பு மற்றும் சம்யுக்தா ராடார் படை வாகனங்களும் அணி வகுத்து வந்தன. டெல்லியில் மூடு பனிக்கிடையே குடியரசு தின அணிவகுப்பு புதுடெல்லி, செவ்வாய், 26 ஜனவரி 2010( 12:59 ஐநப )

இந்தியாவின் 60வது குடியரசு தினமான இன்று தலைநகர் டெல்லியில் நிலவிய கடுமையான மூடுபனியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க குடியரசு தின அணிவகுப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இன்று காலை 9.45 மணிக்கு டெல்லியிலுள்ள அமர் ஜவான் நினைவுச் சதுக்கத்தில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மன்மோகன் சிங்.

அமர் ஜோதி சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் வணக்கம் செலுத்த, அவருடன் முப்படைகளின் தலைமைத் தளபதிகளும் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தினர். அருகில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை தலை கீழாக நிறுத்தி வணக்கம் செலுத்த, அஞ்சலி கீதம் முழங்கப்பட்டது.

அதன் பிறகு டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தின அணிவகுப்பு துவங்கியது. அணிவகுப்பு மரியாதையை ஏற்க வந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலையும், அரசு விருந்தினராக தென் கொரிய நாட்டின் பிரதமரையும் பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்றார்.

தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கொடி வணக்கம் செலுத்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், நாட்டின் பாதுகாப்பிற்காக வீரசேவை புரிந்த மூவருக்கு இராணுவ உயரிய விருதான அசோக் சக்ராவை வழங்கி கெளரவித்தார்.

மேஜர் சிறிராம் குமார், மேஜர் மோஹித் சர்மா, ஹவில்தார் இராஜேஷ் குமார் ஆகியோருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மேஜர் மோஹித் குமாருக்கு பதிலாக அவரது மனைவி மேஜர் ரிஷிமாவும், ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான குப்வாராவில் நடந்த மோதலில் வீரமாகப் போராடி உயிர் நீத்த ஹவில்தார் இராஜேஷ் குமாருக்கு வழங்கப்பட்ட அசோக் சக்ராவை அவரது மனைவியும் பெற்றுக் கொண்டனர்.

இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையை பறைசாற்றும் குடியரசு தின அணிவகுப்பினை அணிவகுப்பு கட்டளைத் தளபதி பரம்ஜித் சிங், தனி வாகனத்தில் வந்து குடியரசுத் தலைவருக்கு வணக்கம் செய்துச் செல்ல துவங்கியது.

டோக்ரா ரெஜிமெண்ட், 61வது குதிரைப் படை ஆகியோர் அணிவகுத்து வர, அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அதி நவீன போர் வாகனமான அர்ஜூனா டாங்கிகள் அணி வகுத்து வந்தன.

அவைகளைத் தொடர்ந்து ராக்கெட் ரெஜிமெண்ட் என்றழைக்கப்படும் பல்குழல் பீரங்கிப் படையும், போர்க் களத்தில் முன்னேற்றத்தை உறுதி செய்யும் சர்வாத்ரா பொறியல் படை வாகனங்களும், அவற்றைத் தொடர்ந்து களத்திலிருந்து தகவலளிக்கும் அதிநவீன தகவல் தொடர்பு மற்றும் சம்யுக்தா ராடார் படை வாகனங்களும் அணி வகுத்து வந்தன.

சவுதிக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு புதுகட்டுப்பாடு

துபாய் : சவுதி அரேபியா சென்று பணியாற்ற விரும்பும் இந்தியர்கள், பணியாளர் விசா பெற, போலீசாரின் தடையின்மை சான்றிதழ் பெற்று (கிளியரன்ஸ் சர்டிபிகேட்) சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, “அரபு நியூஸ்’ என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:சவுதி அரேபியாவில் பணியாற்ற விசா பெற விண்ணப்பிக்கும் இந்தியர்கள் அனைவரும், அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு முன், போலீசாரின் தடையின்மை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறையை கண்டிப்பாகப் பின்பற்றும்படி, இந்தியாவில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு பணி நியமன நிறுவனங்கள் ஆகியவை, இந்த புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என, டில்லியில் உள்ள சவுதி தூதரகம் மற்றும் மும்பையில் அமைந்துள்ள துணை தூதரகம் ஆகியவையும் கேட்டுக் கொண்டுள்ளன.

“இந்த புதிய சட்டத்தால், குற்றப்பின்னணி உடையவர்கள், சவுதி அரேபியாவிற்கு வருவது தடுக்கப்படும்’ என, பணி நியமனம் செய்யும் நிறுவனம் ஒன்றின் மேலாண்மை இயக்குனரான இப்ராஹிம் குட்டி என்பவர் தெரிவித்தார்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், “”இந்தப் புதிய சட்டம் இரு நாட்டு ஒப்புதலின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் மட்டுமே, சவுதிக்கு வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தலாம்” என்றார்.

ரூ3600 கோடியில் விஐபிக்களுக்கு ஹெலிகாப்டர்கள்: இத்தாலி நிறுவனத்திடம் வாங்க திட்டம்

டெல்லி: மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகள் குறித்து பேசிவரும் நிலையில், விஐபிக்களின் போக்குவரத்துக்காக ரூ.3,600 கோடி செலவில் புதிதாக 12 ஹெலிகாப்டர்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த 12 ஹெலிகாப்டர்களையும் இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற ஒரே நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் வழங்க துடித்துக் கொண்டிருக்கிறது.

இதுதொர்பான ஒப்பந்தங்கள் எல்லாம் கிட்டதட்ட முடிந்து விட்டதாகவே தெரிகிறது. ஆனால், விஐபி ஹெலிகாப்டர்கள் புதிதாக வாங்குவதற்கு ஏற்கனவே திட்டமிட்டபடி நிதியமைச்சகம் ரூ.1,400 கோடிக்கு மட்டுமே ஒப்புதல் தந்துள்ளது.

இதற்கு மிஞ்சிய தொகை தருவதற்கு நிதியமைச்சகம் தயக்கம் காட்டிவருகிறது. இதுதொடர்பாக இரண்டு அமைச்சகங்களுக்கும் இடையே கடந்த ஐந்து மாதங்களாகவே பிரச்சனை நடந்து வருவதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு கொள்முதல் செய்வதற்கான அரசு ஒப்பந்தத்தில் பல விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக டாமன் எம்.பி ஒருவரும் மத்திய புலனாய்வு மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.

விஐபி ஹெலிகாப்டர்களுக்கான செலவு, முன்னணி போர் விமானம் வாங்குவதற்கு ஆகும் செலவை நெருங்குவதாக இருப்பது தெரிந்த போதிலும் பாதுகாப்பு அமைச்சகம் இதில் தனி அக்கறை காட்டிவருவதாகவும் அந்த எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

உலகெங்கும் அரசுகள் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் கூட சமீபத்தில் அதிபருக்கான அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துபையில் சிறுவனை வன்புணர்ந்து கொன்றவனுக்கு மரண தண்டனை!

துபை: ஐக்கிய அரபு நாடான துபையில் கடந்த நவம்பர் மாதம் நான்கு வயது சிறுவனை கழிப்பறையில் வைத்து வன்புணர்ச்சி செய்து கொலை செய்த அந்நாட்டு பிரஜை ஒருவருக்கு துபை கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது.

முப்பது வயது நிரம்பிய துபை பிரஜையான அவர் கப்பல் கேப்டனாக பணிபுரியும் அவர் ஏற்கனவே பாலியல் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து கடந்த ஆண்டுதான் விடுவிக்கப்பட்டார் நீதிபதி தனது தீர்ப்பில் கேப்டன் அந்த குழந்தையிடம் கருணை காட்டாததினால் இந்த நீதிமன்றமும் அவருக்கு கருணை காட்ட வில்லை என்று கூறியிருக்கிறார். இத்தீர்ப்பு குறித்து பாஹிம் முனீர் என்பவர் கூறும்போது இத்தீர்ப்பு கூறப்பட்டபோது நீதிமன்றமே அமைதியானது என்றார்.

தலைமை பிராஸிக்கூட்டர் யூசுஃப் ஃபௌலாஸ் கூறும்போது கடந்த 2009  நவம்பர் மாதம் 29 ஆம் தேதி ஈத் தினத்தன்று பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மூசா குதாப்க்ஷ் என்ற சிறுவனை வன்புணர்ந்து கொன்ற இவனுக்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனையை தீர்ப்பளிக்கும்படி நீதிபதியை கேட்டு கொண்டதாக தெரிவித்தார். விசாரணையில் குற்றவாளி சிறுவனை கழிப்பறைக்கு அழைத்து சென்றதையும் அங்கு அவனை வன்புணர்ந்ததையும் மனித நடமாட்டம் கேட்டதால் அச்சிறுவனை தலையை தரையில் அடித்து கொன்றதாக ஒப்புகொண்டான்.

தீர்ப்பின் போது அச்சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.இதனை தொடர்ந்து மருத்துவர்கள் கொலையாளியை மருத்துவ பரிசோதனை செய்து அவ்ர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக சான்றளித்தனர், அடுத்த 15 தினங்களில் இவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் எனத்தெரிகிறது

ஈஜிப்ட் ஏர் விமானத்தில் புகை 320 பயணிகள் உயிர் தப்பினர்!

ஜித்தா: சவூதி துறைமுக நகரான ஜித்தாவில் உள்ள அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை எகிப்து நாட்டிற்கு புறப்பட தயாராக இருந்த ஈஜிப்த் ஏர் என்ற எகிப்திய பயணிகள் விமானம் ஒன்றில் திடீரென கரும் புகையுடன் கூடிய வாசம் வந்ததை தொடர்ந்து அவ்விமானம் உடனடியாக ஓடுபாதையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

போயிங் 777, எண் 607 என்ற விமானம் 320 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த்து அப்போது அதன் பின்புறத்திலிருந்து எரிந்து கருகும் வாசம் வந்தது இதனை தொடர்ந்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர், விசாரணை குழுவினர் விசாரணைக்காக அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்றும் விமான நிலைய தலைமை இயக்குனர் மாஸின் கஷோகி தெரிவித்தார் மேலும் தீயணைப்பு படையினர் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மின்சார வயர்கள் எரிந்ததினால் இந்த வாசம் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது

ஆனால் இதுவரையில் அதற்கான காரணம் கண்டறியப்படவில்லை விமான நிலையத்தின் தேர்ச்சி பெற்ற பொறியாளர்கள் தொடர்ந்து விமானத்தை பரிசோதித்து கொண்டிருப்பதாகவும் புகை வந்ததிற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் காஷோகி கூறினார்.இதனிடையே பயணிகள் பத்திரமாக வெயிட்டிங் லவுஞ்சுக்குள் அமர வைக்கப்பட்டனர் அவர்களிடையே எந்த பதற்றமோ பயமோ இன்றி நல்ல நிலமையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

முஸ்லிம்கள், பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிக்கை

புதுவை : புதுச்சேரி முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினருக்கு அறிவித்த இட ஒதுக்கீட்டை, வரும் கல்வியாண்டிற்குள் அமல்படுத்த வேண்டும் என, சமூக நீதிப் பேரவையின் நிறுவன தலைவர் விஸ்வநாதன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.

புதுச்சேரி சமூக நீதிப் பேரவை கூட்டம் எனது (விஸ்வநாதன்) தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி  பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக கண்ணோட்டத்தோடு அமைக்கப்பட்டது. கடந்த காலங்களில் சமுதாயத்திற்கான அங்கீகாரம் தொடர்பாக சமூக நீதிப் பேரவை மூலம்  பல்வேறு திட்ட அறிக்கைகளை கொடுத்துள்ளோம். அப்போது ஆணையராக இருந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக கண்ணோட்டத்தோடு குறைகளை சரி செய்தனர். ஆனால் இப்போதுள்ள ஆணைய உறுப்பினர்கள் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் வேண்டியவர்களாக செயல்படுவதால் ஆணையத்தின் செயல்பாடுகளில் குறைபாடு உள்ளது.

இஸ்லாமியர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அறிவித்த திட்டங்களை அரசு நிறைவேற்றாமல் இருப்பது வஞ்சிக்கின்ற செயலாக உள்ளது. இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினருக்கு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டிற்குள் அமல்படுத்த வேண்டும்.மிக மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை சரிசமமாக இருப்பதற்கேற்ப 33 சதவீதத்தை 60:60  என்று சமமாக பிரித்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும், மாநில அரசையும் சமூக நீதிப்பேரவை வற்புறுத்துகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு விஸ்வநாதன் எம்.எல்.ஏ., கூறினார். அமைப்பாளர் சம்பந்தம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அமெரிக்காவில் தொடர்ந்து கர்ப்பமடையும் ஆண்கள்!

அமெரிக்கா: கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு ஆண்மகன் ஒருவர் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள  போகிறார். அமெரிக்கா, ஓரிகான் மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன் பீட்டில் என்ற ஒரு ஆணுக்கு, குழந்தை பிறந்தது. அவரை அடுத்து தற்போது, கலிபோர்னியா மாநிலத்தில், ஸ்காட் மூர் என்ற ஆண், கர்ப்படைந்துள்ளார்.பெண்ணாகப் பிறந்து, லாரா என்ற பெயருடன் இருந்த ஸ்காட் மூர், சில ஆண்டுகளுக்கு முன் ஆணாக மாற விரும்பி, அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

எனினும், உடலில் பெண்ணுக்கான உள்ளுறுப்புகள் எதுவும் நீக்கப்படவில்லை. இவரைப் போலவே தாமஸ் என்பவரும், பெண்ணாகப் பிறந்து, ஆணாக மாறினார். ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவரும், 2007ல் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.இவர்களில் ஸ்காட் மூருக்கு, உடல் உள் உறுப்புகள், பெண்ணுக்கு இருப்பது போலவே உள்ளதால், செயற்கை கருவூட்டல் முறையில், கடந்த ஜூனில், மகப்பேறு கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, ஸ்காட் மூர் வயிற்றில் குழந்தை வளர்கிறது. வரும் பிப்ரவரியில், அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. இது குறித்து, ஸ்காட் மூர் கூறுகையில், நாங்கள் இருவரும், ஆவலுடன் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். மிக மகிழ்ச்சியாக உள்ளது. நான் கருவுற்ற செய்தியை முதன்முதலில் கேட்டது முதல்  உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்றார். இச்செய்தியை, பிரிட்டனிலிருந்து வெளியாகும், “டெய்லி மெயில்’ என்ற தினசரி பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்நேரம். காம்-என்ற தளத்திலிருந்து….

முஸ்லிம் பிரதமர் வேண்டும் : அமர்சிங் கூறுகிறார்!

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மனம் புண்பட்டுள்ள முஸ்லிம்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியிலிருந்து அண்மையில் விலகிய அமர்சிங் கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமர்சிங் அண்மையில் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார். இந்நிலையில் மும்பை பீவண்டி சட்டசபைத் தொகுதிக்கு நடைபெறம் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அபூ அஜ்மியின் மகன் பர்ஹான் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அமர்சிங், முஸ்லிம்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் இந்தியாவின் பிரதமராக முஸ்லிம் ஒருவர் வரவேண்டும் என்று கூறினார்.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி மற்றும் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட எந்த தலைவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால், சீக்கியரான மன்மோகன் சிங் பிரதமர் பதவியேற்ற பின், 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியருக்கு எதிரான கலவரத்திற்கு மன்னிப்புக் கோரினார் என்றும் அமர்சிங் கூறினார்.

இந்நேரம். காம்-என்ற தளத்திலிருந்து….

சவுதி செல்கிறார் மன்மோகன் சிங்!

பிப்ரவரி கடைசி வாரத்தில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் சவுதி அரேபியா நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று சவுதி அரேபியா தூதர் பைசல் எச்.டிராட் தெரிவித்தார்.

2006 ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ், பிரதமர் மன்மோகன்சிங்கை தங்களது நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்ததாகவும், அதை ஏற்று மன்மோகன்சிங் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் சுற்றுப்பயணத்தின் போது சவுதி அரேபியா நாட்டு சிறையில் உள்ள இந்திய கைதிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஒப்பந்தம் உள்பட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் அவர் கூறினார்.  இந்நேரம். காம்-என்ற தளத்திலிருந்து…

மும்பை தாக்குதலின் போது வடமாநில கமாண்டோக்கள்தான் உதவினர்: ராகுல்காந்தி

மும்பை தாக்குதலின் போது வடமாநில கமாண்டோக்கள்தான் உதவி செய்தனர் என்று மும்பை மராத்தியர்களுக்கே என்று கோஷமிடும் சிவசேனாவுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள சிவசேனா கட்சி அரசியல் பிழைப்புக்காக பிரிவினையை தூண்டும் வகையில் நடந்து வருகிறது. “மும்பை மராட்டியர்களுக்கே சொந்தமானது” என்ற கோஷத்தை சிவசேனா தலைவர் பால்தாக்கரே எழுப்பி உள்ளார்.

மும்பையில் உள்ள மராட்டியர்களுக்கே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும், மும்பையில் உள்ள மற்ற மாநில மக்கள் கண்டிப்பாக மராட்டிய மொழியை கற்க வேண்டும் என்றெல்லாம் சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இதற்கு தெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவரை சிவசேனா தலைவர்கள் கடுமையாக திட்டி தீர்த்துவிட்டனர்.

சிவசேனாவின் மும்பை உரிமை கோரிக்கை மற்ற எல்லா கட்சிகளிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. “மும்பை அனைவருக்கும் சொந்தமானது. இந்தியர்கள் அனைவரும் அங்கு வாழவும் பணியாற்றவும் உரிமை உள்ளது” என்று காங்கிரஸ் கூறியது.

சிவசேனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.எஸ்.எஸ், “மும்பை நகரம், அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது. மொழி அடிப்படையில் பிரச்சினை உண்டாக்குபவர்களிடம் இருந்து வடமாநில மக்களை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் காப்பாற்ற வேண்டும்” என்று கருத்து வெளியிட்டது. இதற்கு பா.ஜ.க. ஆதரவு தெரிவித்தது.

பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி இது பற்றி கூறுகையில், “இந்தியர் எவரும் நாட்டின் எந்தப்பகுதியிலும் குடியேறி, தொழில் செய்து வாழலாம் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. மாநிலம், மொழி, மத அடிப்படையில் எந்தவித பாகுபாடும் காட்டப்படக்கூடாது, பிரிவினையை பா.ஜ.க. ஒருபோதும் ஏற்காது” என்றார்.

இதனால் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மும்பை பற்றிய விமர்சனம் ராகுல்காந்திக்கும், சிவசேனாவுக்கும் இடையில் கடும் மோதலை உண்டாக்கியுள்ளது. பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சிவசேனாவுக்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:-

இந்தியா, இந்தியர்களுக்கு சொந்தமானது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உடையது. பால்தாக்கரே அல்லது ராஜ் தாக்கரே போன்றவர்கள் சொல்லும் கருத்துக்களில் நான் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்திய மக்கள், இந்தியாவின் எந்த பகுதிக்கு செல்லவும் உரிமை இருக்கிறது. பீகார், உத்தரபிரதேச மக்கள் மராட்டியத்துக்குள் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. பீகார், உத்தரபிரதேச மக்களை மராட்டியத்துக்குள் வரவிடாமல் தடுத்தால் என்னால் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

மும்பை மராட்டியர் களுக்கே சொந்தம் என்று வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது மராட்டிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் வடமாநில மக்களுக்கு இடம் இல்லை என்று கூறப்படுவதை நான் முழுமையாக எதிர்க்கிறேன்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது உத்தரபிரதேசம், பீகார் உள்பட எல்லா மாநிலத்தை சேர்ந்த கமாண்டோ வீரர்களும் இருந்தனர். அவர்கள் தான் மும்பை மக்களை காப்பாற்றினார்கள். அந்த சமயத்தில் வடமாநில கமாண்டோக்கள் மும்பையை விட்டு வெளியேறுங்கள் என்று ஏன் சொல்லவில்லை.

இந்தியா இப்போது வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறுகிய மனப்பான்மையை கைவிட வேண்டும். எல்லாரும் சேர்ந்து முன்னேறுவோம்.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

ராகுல்காந்தியின் பேட்டி சிவசேனா தலைவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தவ்தாக்கரே இன்று காலை மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மும்பை தாக்குதலின்போது ஹேமந்த் தாக்கரே, அசோக் காம்தே, விஜய் கவஸ்கர், துக்காராம் உள்பட பலர் தங்கள் உயிரை கொடுத்து தியாகம் செய்தனர். அவர்களது தியாகத்தை ராகுல்காந்தி அவமதித்துவிட்டார்.

மும்பை மக்களுக்கு எதிராக ராகுல் பேசுவதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது ராகுல்காந்தி எங்கே போனார்?

இவ்வாறு உத்தவ்தாக்கரே கூறினார்.

முஸ்லிம்கள் தொழுகைக்கு முன் துப்புரவு செய்ய நவீன கருவி!

முஸ்லிம்கள் தொழுகைக்காக தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஒளுச் செய்ய அவர்களுக்கு உதவி செய்யும் நவீன கருவியொன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
குறைந்த அளவே தண்ணீரைப் பயன்படுத்தி ஒளுச் செய்ய இது உதவும் என்று இதைக் கண்டுபிடித்த  மலேசிய நிறுவனம் AACE டெக்னாலஜீஸ் தெரிவித்துள்ளது.
இந்தப் பச்சை நிற உபகரணத்தில் தொட்டியுடன் தானியங்கி உணர்விகள் (Automatic Sensors) உள்ளனவாம். மேலும், ஒளுவின் போது, குர்ஆனிலிருந்து பிரார்த்தனை வசனங்களையும் இது ஒலித்தவண்ணம் இருக்குமாம்.

“வருங்காலங்களில் நீர் வீணடிப்பைத் தடுப்பதும், நீரைச் சேமிப்பதும் இன்றியமையாததாக இருக்கும்” என்று கருத்து தெரிவித்த நிறுவனத் தலைவர் அந்தோணி கோமஸ், இந்தக் கருவியின் மாதிரி செயற்பாட்டை கோலாலம்பூரில் நிகழ்த்திக் காட்டினார்.

ஆறுமாத காலங்களில் சந்தைக்கு வர இருக்கும் இந்தக் கருவி  தொடக்கத்தில் 3000 முதல் 4000 அமெரிக்க டாலர்கள் வரை விலை வைக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த ஹஜ்ஜின் போது, ஏறத்தாழ இருபது இலட்சம் மக்கள் ஒளுச் செய்ய, தினமும்,  சுமார் 50 இலட்சம் லிட்டர்கள் நீரைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அந்தோணி, இந்த உபகரணத்தால் அதில் 40 இலட்சம் லிட்டரை, தினமும் மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

துபாய் விமானநிலையத்தில், விரைவில், இந்தக் கருவிகளை நிறுவ உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

- ரியாத்-திலிருந்து இப்னு ஹம்துன்

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ.

1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள்.

2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.

4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்பு போதும். கடுமையான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் கூட உப்பைக் குறைக்க வேண்டி இருக்கும்.

6. நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.

7. ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். சில வகை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு குடிக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருக்கலாம். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொள்ளுங்கள்.

8. பச்சைத் தேயிலை (கிரீன் டீ- Green Tea) இதயத்திற்கு நல்லது

9. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.

10. வீட்டு வேலைகளை நாமே செய்தல், லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறுதல் போன்றவை மறைமுக உடற்பயிற்சியாகும்.

11. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

12. புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.

13. மதுபானங்களா! வேண்டவே வேண்டாம்.

14. நேரத்திற்கு தூங்குங்கள்.

15. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

16. இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

17. வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.

18. மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.

19. சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.

20. வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.

21. சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

22. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிš எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

23. நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

24. பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

25. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மருத்துவர் சொல்லியிருந்தால் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு அபுதாபியில் வேலை வாய்ப்பு!

சென்னை: ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு அபுதாபியில் உள்ள புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்புள்ளதாக தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேஷன் தெரிவித்துள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு ஐ.டி.ஐ.​ கல்வித் தகுதியுடன் சம்மந்தப்பட்ட தொழிலில் ஆறு ஆண்டுகள் உள்நாட்டு அனுபவம் அல்லது மூன்று ஆண்டுகள் வளைகுடா நாடுகள் ஒன்றில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். மூன்று வருட பட்டயப் படிப்பு ​(டிப்ளமோ)​ முடித்தவர்கள் மூன்று ஆண்டுகள் உள்நாட்டு அனுபவம் அல்லது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வளைகுடா அனுபவம் இருக்க வேண்டும்.​ மேலும் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் நன்றாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மனுதாரக்களுக்கு ரூ.​ 12,000 முதல் ரூ.​ 13,000 வரை அவர்களின் தகுதிக்கேற்றவாறு ஊதியம் வழங்கப்படும்.

மேலும் இலவச உணவு,​​ இலவச இருப்பிடம் மற்றும் இலவச விமானப் பயணச்சீட்டு ஆகியன வேலையளிப்போரால் வழங்கப்படும். எனவே தகுதியுடையவர்கள் தங்களது கல்வி,​​ அனுபவம்,​​ பாஸ்போர்ட் மற்றும் அதன் நகல்களுடன் போட்டோவை இணைத்து பிப்ரவரி 10ஆம் தேதி காலை 9 மணிக்கு,​​ அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு 044  2446 4268,​ 044  2446 4269 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசின் “ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேஷன்” தலைவர் குத்சியா காந்தி தெரிவித்துள்ளார்.

சிவசேனா கருத்தை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்! – முதல்வர் கருணாநிதி

சென்னை: மும்பை மராத்தியர்களுக்கே சொந்தம் என்ற சிவசேனாவின் கோரிக்கைக்கு மகாராஷ்டிராவிலேயே மக்கள் ஆதரவு இல்லை. அதனைப் புறக்கணித்துவிட்டார்கள், என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தென்னிந்திய மக்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் என்ற கருத்தும் தவறு என்றார் கருணாநிதி.

மகாராஷ்டிராவில் உள்ள வடஇந்தியர்களுக்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் பாதுகாப்பு அளிக்கும் என்று அதன் தலைவர் மோகன் பகவத் அறிவித்தார். இதையடுத்து, முதலில் தென்னிந்திய மக்களுக்கு இந்தி கற்றுக் கொடுங்கள் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.

ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.

1. சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது?

நான் படித்த ஒரு கட்டுரையில் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75% குறையும் வரை பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உணர மாட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா?

இது முழுக்க உண்மை. சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 70-80மூ அவற்றின் வேலைத் திறனை இழக்கும் வரை நம் அடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. அதனால் ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து மிகவும் கடினமாக உள்ளது.

2. என்றாலும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன என்று தெரிந்தால் அதை வைத்து சிலரேனும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை அறிந்து பயன் பெற உதவக் கூடுமல்லவா?

திடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால் முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில் இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இரவில்) சிறுநீர் கழித்தல்.

உண்மையில் சொல்லப் போனால் தங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு. இவைகளில் ஏதேனும் கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும்.

3. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமா?

அப்படியல்ல. அது வரை சரியான அளவு அதாவது பகலில் 3-4 முறை இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு முறை சிறுநீர் கழிப்பு என்று இருந்தவர்கள் திடீரென அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முதல் காரணம் சிறுநீரக பையில் கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை அழற்சி (புண்) பெண்களுக்கு ஆண்களை விட இது இன்னும் அதிகம். இது எளிதில் குணபடுத்தக் கூடிய ஒரு சிறிய தொந்தரவு தான்.

ஆண்களுக்கு முக்கியமாக வயதானவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி (மூத்திரக்காய்) வீக்கம் சிறுநீர் அடைப்பு காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு வரலாம். எதையும் நீங்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் இதை தெளிவு செய்து கொள்ள வேண்டும்.

அதே போல அது வரை நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருந்த ஒருவர் காரணம் எதுவும் இல்லாமல் அடிக்கடி சோர்ந்து போவது, எளிதில் களைத்து விடுவது, கவனக் குறைவு, அதீத ஞாபக மறதி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அதற்கு சிறுநீரக செயலிழப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து முன்பே சொன்னபடி சில எளிய பரிசோதனைகள் மூலம் அதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

இதே போல தோல் உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச்சல், பசி இல்லாமல் இருப்பது, சிறுநீரகங்கள் உள்ள இருபுற விலாஎலும்புகளின் கீழ் வலி. கணுக்கால்களுக்கு கீழ் வீக்கம் (ஆரம்பத்தில்) போன்ற அறிகுறிகள் இருந்தாலும் சிறுநீரகங்களை பரிசோதித்தல் தவறில்லை. மேலும் சிறுவயதில் (35 வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிறுநீரகங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் (எந்த வயதினரும்), அடிக்கடி சிறுநீரில் கிருமித் தாக்குதல் வருபவர்கள், சிறுநீரக கற்கள் வந்தவர்கள், குடும்பத்தில் வேறு யாருக்கேனும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் சிறுநீர்கங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் இயலும்.

4. இந்த ஆரம்ப பரிசோதனைகளத் தவிர வேறு பரிசோதனைகளும் வேண்டி வருமா?

மேற்குறிப்பிட்ட எளிய பரிசோதனைகளில் கோளாறு இருப்பதாக தெரிய வந்தால் அதை மேலும் உறுதி செய்த கொள்ளவும் சிறுநீரக பாதிப்பின் தன்மை. கடுமை, சில சமயங்களில் முன்னேறிய சிறுநீரக பாதிப்பினால் வேறு உறுப்புக்கள் (முக்கியமாக இதயம்) பாதிப்பு என்பதை அறிய பல்வேறு சோதனைகள் தேவைப்படலாம்.

(சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் பற்றி சிறுநீரகங்களுக்கான பரிசோதனைகள் என்ற கையேட்டில் விரிவாகக் காணலாம்)

5. சரி இந்த பரிசோதனைகளில் சிறுநீரக பாதிப்பூஃ- செயலிழப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இனி என்ன நடக்கும்.

வெறும் சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு (சிறுநீரக ஸ்கான் செய்யும் போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்களுக்கு (சிறுநீரக நுண்தமனி அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற ஒரு பரிசோதனை தேவைப்படலாம்.

இந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து சில மருந்துகளை குறிப்பிட்ட காலம்வரை மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்வதன் மூலம் சிலவகை சிறுநீரக வியாதிகளை முழுவதும் குணப்படுத்தவோ அல்லது நன்கு கட்டுப்படுத்தவோ முடியலாம். சிறுநீரக தாரையில் கிருமி தாக்குதல், சிறுநீரக பாதையில் கற்கள் உள்ளவர்கள் அதற்குரிய வைத்தியத்திற்கு பின்னரும் இவை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்வதால் இத்தொந்தரவுகள் மீண்டும் மீண்டும் வராமலும் அதனால் சிறுநீரகங்களின் செயல்திறன் பாதிக்கப்படாமலும் காப்பாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் சில பிரத்யேக மருந்துகளின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெருமளவு குணப்படுத்தலாம்.

6. முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் செய்ய வேண்யது என்ன?

சிறுநீரக பாதிப்பு/செயலிழப்பு உள்ளவர்களின் சிறுநீரக பாதிப்பை பல்வேறு கட்டங்களாக பிரிக்கலாம்.

1.ஆரம்ப கட்டம் (நிலை-1) சிறுநீரக பாதிப்பு மாத்திரம் (சிறுநீரக செயலிழப்பு இல்லை) உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை, கால, உடல் வீக்கம் ஆகிய தொந்தரவுகள் இருக்கலாம்.

2. லேசான சிறுநீரக செயலிழப்பு (நிலை-2): இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு-2. மி.கி. புள்ளிக்கு கீழே). இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, ஆகார, மாற்றம், சிறுநீரக பாதிப்பு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கும் சில மருந்துகளை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் மருந்துகள், காரணங்கள் (உதாரணமாக வலி மருந்துகள், நாட்டு மருந்துகள்) ஆகியவற்றை தவிர்த்தல் ஆகிய செயல்களின் மூலம் சிறுநீரக பாதிப்பை பெருமளவு சரிசெய்யலாம் அல்லது மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தி வைக்கலாம்.

3. அதிக சிறுநீரக செயலிழப்பு (நிலை-3)- இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எலும்புகளுக்கான மருந்துகள் இவைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 6 மி.கிக்கு மேல் ஆகும் போது அடுத்த கட்ட முற்றிய சிறுநீரக செயலிழப்பில் மேற்கொள்ள சிகிச்சையான டயாலிசிஸ் சிகிச்சைக்கு தேவையான சில முன்னேற்பாடுக்களை செய்து கொள்ள வேண்டும். அவையாவன தொடர் டயாலிசிஸ் சிகிச்சைக்கு இரத்த குழாய்களிலிருந்து மீண்டும் மீண்டும் இரத்தம் எடுப்பதை எளிதாகும். இரத்த நாள இணைப்பு அறுவை சிகிச்சை (@ பிஸ்டுலா ஆபரேஷன்) செய்து கொள்ள வேண்டும். அதை சரியான சமயத்தில் செய்து கொள்ளுவதால் பின்வரும் காலத்தில் பலவித செலவுகளை வெகுவாக குறைக்கலாம். டயாலிசிஸ் சிகிச்சையில் மிக எளிதாகி விடுகின்றது. ஈரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ்-டீ என்ற வைரஸ் கிருமியிலிருந்து நம்மை பாதுகாக்கும் தடுப்பூசியையும் மருத்துகள் உங்களுக்கு பரிந்துரைப்பார் இதனால் டயாலிசிஸ் சிகிச்சையின் போது இந்த கிருமி வேறு யாரிடமிருந்தும் நமக்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

4. முற்றிலும் சிறுநீரக செயலிழப்பு (நிலை-4) இந்த கட்டத்தில் சிறுநீரகங்களின் மொத்த செயல் திறன் 10 சதவிகிதத்திற்கும் கீழே வந்து விடுகின்றது அப்போது இரத்தத்தில் கிரியேட்டின் அளவு 6-7 மி.கி க்கு. மேலும் பெரும்பாலும் இரத்த அளவும் மிகவும் குறைந்து விடும். அப்போது நமது உடலின் பல்வேறு உறுப்புக்களும் பாதிக்கப்பட்டு பல்வேறு வித உபாதைகள் வரலாம். இந்த சமயத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் மட்டுமே ஒருவர் தொடர்ந்து ஆரோக்யத்துடன் உயிர் வாழ முடியும். எனவே முன்பு கூறியிருந்தது போல இதற்கான ஏற்பாடுகளை தகுந்த நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும். அதற்குரிய காலம் வந்தவுடன் டயாலிசிஸ் சிகிச்சையை தாமதமின்றி தொடங்கி முறையாக செய்து வந்தால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த பின்னரும் கூட தொடர்ந்து நல்ல ஆரோக்யத்துடன் வாழ்வை தொடர முடியும். சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ள தகுதி உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு பதில் அந்த சிகிச்சையை முயற்சி செய்யலாம்.

துபாய் கடலில் செயற்கை தீவுகள்

துபாய் அருகே கடலில் புதிதாக தீவுகள் அமைக்கும் பணி 2001ல் துவக்கப் பட்டது. பாமாயில் மரம் போன்று அமைக்கப்பட்டுள்ளதற்கு ஜுமாரியா என்றும் “பாம்’ தீவு எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

இதற்காக கடலில் இருந்தும், வேறு இடங்களில் இருந்தும் ஐந்து கோடி கியூபிக் மீட்டர் அளவு மணல் சேகரிக்கப் பட்டு இங்கு கொட்டப் பட்டது.பெர்சியன் கடலில் அமைந்துள்ள இந்த தீவு.
கடல் மட்டத்தை விட உயரமாக அமைக்கப் பட்டுள்ளது.அடுத்ததாக 2003ல் பணி துவங்கி 2008ல் குட்டி, குட்டியாக “உலக தீவு’ என 300 தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.இதற்காக 32 கோடி கியூபிக் மீட்டர் மணல், 3.7 கோடி டன் பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தீவுகளில் கடல் நீர் புகாதவாறு பாதுகாப்பு அமைப்பு உள்ளது.

பாகிஸ்தானுடனான பேச்சுக்களை தொடர இந்தியா முடிவு

இந்தியாவின் மும்பை நகரில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்தியா திட்டமிட்டுள்ளது.

இரு நாடுகளின் வெளியுறவுச் செயலர் நிலையிலான பேச்சுவார்த்தையைத் துவக்க இந்தியா திட்டமிட்டிருப்பதாக இந்திய வெளியுறவுச் செயலக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். பயங்கரவாதம் உட்பட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேசப்படும் என இந்திய ஊடகங்களுக்கு மற்ற அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை நடத்தப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தியா எதைப்பற்றிப் பேசத் தயாராக உள்ளது என்பது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கேட்டிருப்பாதக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக, இந்தியாவின் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமத் குரேஷி, பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் இந்தியாவிடமிருந்து கிடைத்தபிறகு, தேதி முடிவு செய்யப்படும் என்றும், எல்லாப் பிரச்சினைகளையும் ஆக்கப்பூர்வமான வகையில் பேசித் தீர்த்துக் கொள்ள பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

காஷ்மீர் உள்பட இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சுவார்த்தை துவங்கியது. ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பேச்சுவார்த்தையை இந்தியா இடைநிறுத்தியது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், அவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என்றும் இந்தியா கூறிவந்தது.

இன்னும் இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பகத்தன்மை ஏற்படாவிட்டாலும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர வேண்டும் என்ற விருப்பம், இரு அரசுகளிடமும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

சிவசேனா போட்ட திட்டத்தை பொடிப்பொடியாக்கிய ராகுல் காந்தி


மும்பை: ராகுல் காந்திக்குக் கருப்புக் கொடி காட்டி, அவரது நிகழ்ச்சிகளை சீர்குலைத்து அதன் மூலம் தனது பலத்தைக் காட்ட சிவசேனா திட்டமிட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ராகுல் காந்தி போட்ட பலே திட்டம், அப்படியே சிவசேனாவை தடம் புரளச் செய்து விட்டது. மேலும் மும்பை மக்களிடையே ராகுல் காந்திக்கு திடீர் செல்வாக்கு உயரவும் காரணமாகி விட்டது.

ராகுல் காந்தியின் மும்பை பயணம் ஒரு சாதாரண பயணமாக மட்டும் இல்லாமல், சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சிகளுக்கு கடுமையாக விடப்பட்ட சவாலாகவும் மாறியுள்ளது.

பெரும் அமளியில் முடியும் என்று நாடே எதிர்பார்த்திருந்த நிலையில் அப்படியே மாறிப் போய், ஒட்டுமொத்த மும்பை மக்களின் ஆதரவையும் அப்படியே சம்பாதிதது விட்டார் ராகுல்.

மும்பைக்கு ஹெலிகாப்டரில் வந்த ராகுல் காந்தி, விலே பார்லே என்ற புறநகர்ப் பகுதியிலிருந்து கட்கோபர் வரைக்கும் மின்சார ரயிலில் பயணித்த அந்த சில நிமிடங்கள்தான் சிவசேனா சரிந்து போனதும், ராகுல் உயர்ந்து நின்றதற்கும் காரணமாக அமைந்தது.

ராகுல் இப்படி ரயிலில் பயணிப்பார் என்று யாருமே நினைக்கவில்லை – சிவசேனாவினர் உள்பட. படு துணிச்சலாக ரயிலில் ஏறிப் பயணம் செய்த ராகுலின் செயல் மும்பை மக்களுக்கு வியப்பையும், ஒட்டுமொத்த ஆதரவையும் தேடிக் கொடுத்து விட்டது.

மேலும் மராத்தி அரசியலின் மையப் புள்ளியாக கருதப்படும் தாதருக்கு அவர் சென்றதும் சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவினரை பெரிதும் சரிவுக்குள்ளாக்கி விட்டது.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மும்பையில் சுற்றினார் ராகுல். ஒரு இடத்தில் கூட அவரது நிகழ்ச்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் நிலையங்களில் மக்களை சந்தித்துப் பேசினார். ரயிலி்ல் பயணம் செய்தபோதும் மக்களிடம் பேசினார்.

மொத்தத்தில் அவர் சர்வ சுதந்திரமாக, எந்தவித அச்சுறுத்தலுக்கும், இடையூறுக்கும் ஆளாகாததே சிவசேனாவுக்கு பெரும் தோல்வி என்று கருதப்படுகிறது. காரணம் சிவசேனாவினரின் திட்டமே அதுவாகத்தான் இருந்தது. அதுவே நடக்காமல் போனதால் சிவசேனா சவ சவ சேனாவாகி விட்டது.

மேலும் சிவசேனாவினர் காட்டியக் கருப்புக் கொடிகளும் ராகுலை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. மாறாக மும்பை மக்கள் காட்டிய பாசக் கொடியால், சிவசேனாவினர் காட்டிய கருப்புக் கொடிகள், கலகலத்துப் போய் விட்டன.

ராகுல் பயணம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் குறித்து முதல்வர் அசோக் சவான் மகிழ்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ராகுல் காந்தி ரயிலில் பயணம் செய்வது என்பது திடீரென நடந்தது. அதுபோன்ற திட்டம் முன்பு இல்லை. திடீரெனதான் அவர் முடிவெடுத்தார்.

சேனா தோல்வியடைந்திருப்பது மிகவும் சந்தோஷமான ஒன்று. சிவசேனா- மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா போன்றோரின் அரசியலுக்கு சமூகத்தில் இடமில்லை என்பதை ராகுல் பயணம் நிரூபித்து விட்டது என்றார்.

ராகுல் காந்தியின் ரயில் பயணத் திட்டம் அவரது மனதில் கடைசி நேரத்தில் தோன்றியதாம். இதனால் அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கே அது தெரியவில்லை. குறிப்பாக மும்பை போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத்தான் பெரும் சிக்கலாகி விட்டதாம்.

அதேசமயம், கமிஷனர் சிவானந்தனுக்கு மட்டும் இது தெரியும் எனக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் பயணத்தின்போது சிவசேனாவினரால் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்பதே பெரும் மகிழ்ச்சியாக உணர்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் ராகுல் காந்தி…

இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று மாலை புதுச்சேரிக்கு விசிட் அடித்தார்.

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து மாணவர்களுடன் அவர் உரையாடினார்.

அப்போது மகாராஷ்டிர விவகாரம் குறித்து ஒரு மாணவர் கேள்வி கேட்டார்.

அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி,

நாட்டில் அமைதியை விரும்பும் மக்கள் 99 சதவீதம் பேராக இருக்கின்றனர்.​ அவர்கள் மெளனமாக இருக்கின்றனர்.​ பிரிவினைவாதிகள் 1 சதவீதம் பேர்தான்.​ நம் நாடு ஜனநாயக நாடு.

பிரிவினைவாதிகளும் பேசுவதற்கு அனுமதி அளிக்கத்தான் வேண்டும்.​ அதனால்தான் அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.​ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது.​ நாம் இந்தியர்களாக இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையை விட்டுவிட்டு வேறு பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்.​ ஜவஹர்லால் நேரு சோஷலிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.​ சோஷலிசக் ​ கொள்கையை இந்திரா காந்தி பின்பற்றினார் என்றார்.

நீங்கள் எது போன்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு,

நேருவும்,​​ இந்திரா​ காந்​தி​யும் ஏழை மக்களுக்கு கல்வி,​​ சுகாதாரம் போன்ற வசதிகள் சென்று சேர வேண்டும் என்ற கொள்கை உடையவர்களாக இருந்தார்கள்.

என்னுடைய எதிர்கால கொள்கை என்று இப்போது எதுவும் சொல்வதற்கில்லை.​ ​ இருப்பினும் நாட்டின் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குச் சென்று வருகிறேன்.

நம்நாட்டில் கிராமப்புறங்களில் வாழும் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு நல்ல கல்வியும்,வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

அப்போதுதான் நம் நாட்டின் முழு மனித வளத்தையும் பயன்படுத்தி வளர்ச்சியை எட்ட முடியும் என்றார் ராகுல்.

தொடர்ந்து அவர் கூறுகையில், அரசியலில் எல்லோரும் எளிதாக நுழைய முடியாது.​ யாராவது உறவினர்கள் இருக்க வேண்டும் அல்லது நண்பர்கள் இருக்க வேண்டும்.​ அப்படித்தான் அரசியல் இருக்கிறது.​ அதை மாற்றி எல்லாரும் அரசியலில் நுழைய முடியும் என்பதை நிலைநாட்டதான் இளைஞர் காங்கிரஸுக்கு உள்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமித்துள்ளோம்.

இந்தத் தேர்தலை எதிர்க்கட்சிகள்கூட பஞ்சாப்பிலும்,​​ கேரளத்திலும் வரவேற்று பின்பற்றியுள்ளன.​ எல்லாருக்கும் ஏதாவது ஒருவகையில் தலைமைப் பண்பு இருக்கிறது.​ அதனால் அரசியலுக்கு வர முடியும் என்றார் ராகுல்.

விலைவாசி கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது.​ நல்ல உணவு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று ஒரு மாணவி கேட்டபோது,

உலக அளவில் இந்தப் பிரச்னை பேசப்பட்டு வருகிறது.​ இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.​ விரைவில் நிலைமை சீராகும்.

இப்போது நம் நாட்டில் தொழில்நுட்பத்துறை, சேவைத் துறைக்கு அளித்த முக்கியத்துவம் வேளாண்துறைக்குக் கொடுக்கப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.​ இந்த நிலை மாற்றப்படவேண்டும் என்றார் ராகுல்.

ஆமை, எலி, பூச்சிகளை விண்வெளிக்கு அனுப்பிய ஈரான்!

டெஹ்ரான்: ஈரான் தனது ராக்கெட் தொழில்நுட்ப வல்லமையை வெளிப்படுத்தும் வகையில் எலி, ஆமை மற்றும் பூச்சிகளை கொண்ட ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

ஈரான் அதிபர் முகமது அகமதினிஜாத் கடந்த 3ம் தேதி இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒரு எலி, இரண்டு ஆமைகள் மற்றும் பல்வேறு புழு வகைகளை ராக்கெட்டில் வைத்து அனுப்பியதன் மூலம் ஈரான் ஈடு இணையில்லாத அறிவியல் மைல்கல்லை தொட்டிருப்பதாக ஈரான் அதிபர் பெருமையாக கூறினார்.

விண்வெளிக்கு ஆமை அனுப்பியது ஈரானுக்கு இதுவே முதல் முறை. ஆனால், விண்வெளிக்கு உயிரனங்களை அனுப்புவது ஒன்றும் அறிவியல் துறையில் புதிதல்ல. கடந்த 1961ம் ஆண்டு பிரான்ஸ் முதல்முறையாக எலியை விண்வெளிக்கு அனுப்பியது.

இதைத்தொடர்ந்து சீனா 1964 மற்றும் 65ம் ஆண்டுகளில் சுண்டெலிகளை அனுப்பியது. சோவித் யூனியன் முதல்முறையாக ஆமையை 1968ல் விண்வெளிக்கு அனுப்பியது.

இதன் பின்னர் பல உயிரினங்கள் பல்வேறு நாடுகளின் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உயிரியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரான் தனது ஆமைத்திட்டத்தை பெருமையாக அறிவித்திருப்பது ஏன் என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில்,

தனது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சியை ஈரான் அமைதியான முறையில் வெளிப்படுத்துகிறது. மத்திய கிழக்கில் உள்ள போர் முனையங்கள் மீது ஈரான் தனது ராக்கெட்டை செலுத்த முடியும் என்பதை தான் இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது’ என்றனர்.

சிவசேனா குரங்குக் கூட்டம்! – காஜோல் காட்டம்

மும்பை: சிவசேனா ஒரு குரங்குக் கூட்டம். அவர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம். நாங்கள் எப்போதும் ஷாரூக்கனான் பக்கம்தான் என்று கூறினார் நடிகை காஜோல்.

மும்பையில் பாகிஸ்தான் வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா அறிவித்தது. ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற வேண்டும் என்று பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் கூறினார்.

இதையடுத்து ஷாருக்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா மிரட்டல் விடுத்தது. ‘ஷாருக்கானுக்கு தேசப்பற்று இல்லை. அவர் இந்தியத் தாயின் மகனல்ல… பாகிஸ்தான் வீரர்களை ஆதரித்துப்பேசிய தற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று சிவசேனா எச்சரித்தது. ஷாருக்கான் படங்களை மும்பையில் திரையிட விட மாட்டோம் என்றும் எச்சரித்தது.

ஆனால் ஷாருக்கான் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஷாருக்கான் இன்று மும்பை திரும்பினார். சிவசேனா போராட்டத்தை எதிர்க்கொள்ள தயார் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு இந்தி நடிகர், நடிகைகள் தங்களது ஒட்டு மொத்த ஆதரவை தெரிவித்துள்ளனர். ‘ஷாருக்கான் கருத்தில் எந்த தவறும் இல்ல’ என்று நடிகர், நடிகைகள் கூறி உள்ளனர். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் தனது முழு ஆதரவை ஷாரூக்கானுக்கு வழங்கியுள்ளார்.

நடிகை காஜோல், ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமின்றி சிவசேனா கட்சியையும் கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில் இப்படி எழுதியுள்ளார்:

சிவசேனா கட்சி நமது நாட்டின் கோமாளிக் கூட்டமாக மாறியுள்ளது. அவர்கள் எப்போதும் வெறுப்பை மட்டுமே வெளியிட்டு வருகிறார்கள். இதைத் தவிர ஒன்றும் அவர்களுக்குத் தெரியாது.

சிவசேனாவை குரங்குகளின் படை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த குரங்கு படையால் எங்களை எதுவும் செய்ய இயலாது. தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகும் அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வில்லை.

இப்படிப்பட்ட அசிங்கம் பிடித்த அரசியலால் தான் நாம் உலகில் பின்னணியில் இருக்கிறோம். நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதன் மூலம் தான் நாம் ஜனநாயக சக்தியை உலகுக்கு காட்ட முடியும்…”என்று பொரிந்து தள்ளியுள்ளார் காஜோல்.

ருசிகா வழக்கு மாஜி டிஜிபி ரத்தோருக்கு சரமாரி குத்து


சண்டிகர்: சிறுமி ருசிகா கற்பழிப்பு வழக்கில் சாதாரண அளவிலான தண்டனை பெற்ற மாஜி டிஜிபி ரத்தோரை, இன்று சண்டிகர் கோர்ட் வளாகத்தில் தேசிய வடிவமைப்புக் கழக முதுநிலை மாணவர் ஒருவர் சரமாரியாக குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பன்ச்குலாவில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் இன்று ருசிகா வழக்கு தொடர்பான ரகசிய விசாரணை நடைபெற்றது. இதற்காக ரத்தோர் தனது வக்கீலும், மனைவியுமான அபாவுடன் வந்திருந்தார்.

வழக்கை முடித்து விட்டு அவர் வெளியே வந்தபோது திடீரென ஒருவர் பாய்ந்து வந்தார். அவரது கையில் கத்தி இருந்தது. ரத்தோரை நெருங்கிய அந்த நபர், ரத்தோரின் முகத்தில் மூன்று முறை பலமாக குத்தினார்.

இதில் நிலை குலைந்தார் ரத்தோர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விரைந்து வந்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து விலக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர். ரத்தோர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் உத்சவ் சர்மா என்று தெரிய வந்துள்ளது. அவர் சண்டிகரில் உள்ள தேசிய வடிவைப்புக் கழகத்தில் முதுநிலை டிப்ளமோ படித்து வருகிறார்.

இதுகுறித்து அக்கழகத்தின் இயக்குநர் பிரத்யுமா வியாஸ் கூறுகையில், இங்கு படிக்கும் மாணவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கழகம் நடவடிக்கை எடுக்கும். அதன் அடிப்படையில், உத்சவ் சர்மா மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கழகத்தின் செய்தித் தொடர்பாளர் சமீர் மோரே கூறுகையில், உத்சவ் சர்மா இங்கு அனிமேஷன் மற்றும் திரைப்பட வடிவமைப்பு தொடர்பான முதுநிலை டிப்ளமோ படித்து வருகிறார். 2 ஆண்டுகளை அவர் முடித்துள்ளார். இருப்பினும் இன்னும் அவர் இன்டர்ஷிப்பை முடிக்காததால், அவருக்கு டிப்ளமோ தரப்படவில்லை.

சர்மாவின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

ஆந்திராவில் முஸ்லிம்களின் உரிமை பறிப்பு!

ஆந்திராவில் உள்ள முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடஒதுக்கீடு உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறைந்த காங்கிரஸ் முதல்வரான ராஜசேகர ரெட்டி மூலம் ஆந்திரா முஸ்லிம்களுக்கு நான்கு சதவிகித இடஒதுக்கீடு 2007ல் வழங்கப்பட்டிருந்தது.

அதன் பலனை அங்குள்ள முஸ்லிம்கள் அனுபவித்து வந்தனர். இந்நிலையில் அந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த ஒரு வழக்கில் கடந்த திங்கள் அன்று (08-02-2010) தீர்ப்பு வெளியாகியது.

ஏழு பேர் கொண்ட பென்ச் அளித்த அந்த தீர்ப்பில் ஆந்திரா அரசு வழங்கியிருந்த அந்த ஒதுக்கீடு செல்லாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இருப்பினும் இதுவரை இச்சலுகையால் பயன் அடைந்தவர்களுக்கு பாதிப்புகள் இருக்காது என்ற குறிப்பையும் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியிருக்கிறது.

தீர்ப்பு வெளியானவுடன் ஆந்திராவில் பல முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.

tntj.net என்ற தளத்திலிருந்து….

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?

valentineகிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.

உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.
(நூல்: நஸயீ 3183)

மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல்  பாதுகாக்க வேண்டும்.

ஆனால்  மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை  பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க  யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.

என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறைய கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு  ஏற்படுமா?

வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை”  அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு  தெரியும்.

இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக்  கொண்டிருப்பதினால்  தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

பிப்ரவரி 14  ம் டிசம்பர் 1 நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காகசெய்யப்ட டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை). அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல்  கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.

-தொகுப்பு:

எஸ்.எம் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி -

tntj.net என்ற தளத்திலிருந்து….

இ‌ந்‌தியா‌வி‌ல் அ‌திக‌ரி‌க்கு‌ம் ஒ‌வ்வாமை

ஒ‌வ்வாமை என‌ப்படு‌ம் அலர்ஜி காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள மக்களே அதிக ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் நகர்ப்புற மக்களையே இந்த ஒவ்வாமை அதிகம் தாக்குகிறது.சு‌ற்று‌ச்சூழ‌ல் ‌சீ‌ர்கேடு‌ம், இயந்திரமயமான வாழ்க்கை முறையு‌ம் 40 சதவீதம் பேர் ஒவ்வாமையால் அவதியுற‌க் காரணமா‌கிறது.ஒவ்வாமை என்பது சுகாதாரமற்ற சூழலா‌ல், ஒரு ம‌னித‌னி‌ன் சுகாதார‌ம் பா‌தி‌க்க‌ப்படுவதா‌ல் ஏ‌ற்படு‌ம் எதிர்விளைவே ஒவ்வாமையாகும்.உடலு‌க்கு ஒ‌‌வ்வாத ஒரு பொரு‌ள், உடலுக்குள் செல்லும் நிலையில், அது குறித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக எ‌தி‌ர் தா‌க்குத‌ல் நட‌த்து‌கிறது. அத‌ன் தா‌க்க‌‌த்தை‌த்தா‌ன் நா‌ம் ஒ‌வ்வாமையாக உண‌ர்‌கிறோ‌ம். ஒ‌வ்வாமை‌யி‌ன் அ‌றிகு‌றிக‌ள் பல உ‌ள்ளன. ‌திடீரென ஏ‌ற்படு‌ம் தொட‌ர் தும்மல், மூக்கு, கண்களில் எரிச்சல், நீர் ஒழுகுதல், சருமத்தில் தடிப்பு, ‌சில நேர‌ங்க‌ளி‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது கூட ஒவ்வாமையின் அறிகுறியாகும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களுக்கு ஒ‌‌வ்வாமை உண்டாகும். பொதுவாக சுகாதாரமற்ற சுற்றுச்சூழலால்தான் பெரும்பாலானோருக்கு ஒ‌வ்வாமை உருவாகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் சுகாதார சீர்கேடு அதிகம் ஏற்படுகிறது. நகரத்தை சுற்றி எண்ணற்ற தொழிற் கூடங்கள் அமைந்துள்ளன. நகர வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல இலட்சங்களை தாண்டிவிட்டது. இந்த தொழிற்சாலைகளும், வாகனங்களும் வெ‌ளியே‌ற்று‌ம் புகையே காற்று மண்டலத்தை மாசடைய செய்துவிட்டன. இந்தக் காற்றை சுவாசிக்கும் மனிதர்களின் உடலானது பலவகையில் பாதிக்கப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் ஒவ்வாமை.மாசடை‌ந்த கா‌ற்று, சுகாதாரமற்ற குடிநீர், பூ‌ச்‌சி‌க் கொ‌‌ல்‌லி மரு‌ந்துக‌ள் சே‌ர்‌த்து ப‌‌‌யி‌ரிட‌ப்ப‌ட்ட பொரு‌ட்க‌ள், கல‌ப்பட உணவு, தேங்கி நிற்கும் சாக்கடை நீர், நாற்றம் வீசும் குப்பைகள், மனிதக் கழிவுகள் இவற்றாலும் உடலில் ஒ‌வ்வாமை ஏற்பட வாய்ப்பு ஏ‌ற்படு‌கிறது.மேலும் சிலருக்கு உணவுப் பொருட்களாலும் ஒவ்வாமை உண்டாகும். முட்டை, பால், கருவாடு, கத்தரிக்காய் போன்றவற்றாலும், புளித்துப்போன பொருட்களாலும் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும்

சிலரு‌க்கு வேதிப்பொருள்கள் கலந்த குளியல் சோப்பு, ஷாம்பு வகைகள் போ‌ன்றவற்றாலும், தரமற்ற ஆடைகளாலும் ஒவ்வாமை ஏற்படலாம். ‌பிற‌ர் பய‌ன்படு‌த்‌திய ‌விஷய‌ங்களை ம‌ற்றொருவ‌ர் பய‌ன்படு‌த்‌தினாலு‌ம் ஒ‌வ்வாமை ஏ‌ற்படு‌ம். ‌ஒரு ‌சிலரு‌க்கு ‌சில மரு‌ந்து பொரு‌ட்க‌ள் ஒ‌வ்வாமையை ஏ‌ற்படு‌த்த‌க் கூடியதாக இரு‌க்கு‌ம்.

குளிரூட்டப்பட்ட அறைகளில் நீண்ட நேரம் இருப்பவர்கள், உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய மாத்திரை, மருந்துகள் இவற்றாலும் ஒவ்வாமை உண்டாகிறது.

சிகரெட் புகை, வேதிப் பொருள்கள், குளிர்காற்று உள்ளிட்ட தட்பவெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் நாசிகளில் உள்ள திரவப் படலம் வீக்கம் உண்டாகி ஒ‌வ்வாமை ஏற்படுகிறது.

வீட்டைப் பொருத்தவரை தூசு, நுண் பூச்சி, பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளின் முடியில் குடியிருக்கும் நுண்ணிய கிருமிகள், தலையணை, மெத்தை விரிப்பு, போர்வை இவைகளில் ஒளிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத மாசுப் பொருட்கள் ஒவ்வாமையை உருவாக்க காரணமாகின்றன.

கரப்பான் பூச்சி, எலிகள், கம்பளிப் பூச்சி இவைகள் சருமத்தில் ஒ‌வ்வாமை உண்டாக்கும். தோட்டங்களுக்கு விடப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் அலர்ஜி உருவாகிறது. உணவு‌ப் ப‌ண்ட‌ங்க‌ளை ‌ப‌யி‌ரிடு‌ம் போது பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம் பூ‌ச்‌சி‌க் கொ‌ல்‌லி மரு‌ந்‌துக‌ளினா‌ல் ‌சில உணவு‌ப் பொரு‌ட்களா‌ல் கூட ஒ‌வ்வாமை ஏ‌ற்படு‌கிறது.

ஒவ்வாமை ஏ‌ற்படுவது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். இதற்கு முக்கிய காரணம் உடலில் உ‌ள்ள நோய் எதிர்ப்பு சக்தி‌யி‌ன் அளவாகு‌ம். உடலுக்கு ஒவ்வாத பொருட்களை அழிக்கும் தன்மையுடைய வெள்ளையணுக்கள் சக்தியின்றி இருப்பதால் ஒவ்வாமை உண்டாகிறது.

WD

இதனால் தொடர்ந்து ஜலதோஷம், தும்மல், மூக்கின் சுவாசப் பாதையில் அடைப்பு, வறட்டு இருமல், முகப்பகுதியில் வலி, எந்த வாசனையைம் அறியமுடியாத நிலை, குரலில் மாற்றம், ஒற்றைத் தலைவலி, தலையில் நீர் கோர்த்துக் கொள்வது போன்றவை உண்டாகும். ‌சிலரு‌க்கு தோ‌லி‌ல் அ‌ரி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவது‌ண்டு.

மேலும் ஒவ்வாமை காரணமாக காது பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு காதுவலி உண்டாகும். நாள் செல்லச்செல்ல காதில் சீழ் வடிய ஆரம்பிக்கும்.

மூ‌ச்சு‌க்குழா‌யி‌ல் தொட‌ர்‌ந்து ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வாமை காரணமாக ‌சிலரு‌க்கு ‌ஆ‌ஸ்துமா நோ‌ய் ஏ‌ற்படவு‌ம் கூடு‌ம். சைன‌ஸ், ஆ‌ஸ்துமா போ‌ன்ற நோயா‌ளிகளு‌க்கு ஒ‌வ்வாமைகளா‌ல் அ‌திக பா‌தி‌ப்பு ஏ‌ற்பட‌க் கூடு‌ம்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: மேற்கு வங்க அரசு முடிவு

மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் ​ 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசு முடிவுசெய்துள்ளது.​ இதற்கான அறிவிப்பினை திங்கள்கிழமை மாநில அரசு வெளியிட்டது.இந்த இடஒதுக்கீடு மாநிலத்தில் கல்வி,​​ சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் ​(ஓ.பி.சி.)​ பிரிவின் கீழ் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் ​ தெரிவித்ததாவது:​ ​சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ரங்கனாத் மிஷ்ரா குழுவின் பரிந்துரையை அமல்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.​ இந்த விஷயத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்பார்க்காமல் விரைந்து செயலாற்ற இந்த அரசு உத்தேசித்துள்ளது.​ இதற்காக மாநிலத்தில் கல்வி,​​ சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மற்ற மாநிலங்களில் உள்ளது போலவே இங்கும் எஸ்.சி.,​​ எஸ்.டி.,​​ மற்றும் ஓ.பி.சி.,​​ பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது,​​ கணக்கெடுப்பிற்கு பிறகு சம்பந்தபட்ட இஸ்லாமியர்களுக்கு இதர பிற்படுத்தபட்டோர் ​(ஓ.பி.சி.)​ பிரிவின் கீழ் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்தார்.​ ​ ​
மதஅடிப்படையிலான இடஒதுக்கீடு அல்ல:​​ இந்த இடஓதுக்கீடு குறித்து இடதுசாரிகள் தலைவர் பிமன் போஸ் கூறுகையில்,​​ இந்த இடஒதுக்கீடு சமூக மற்றும் ​ பொருளாதரத்தில் பின் தங்கியுள்ளவர்களின் முன்னேற்றத்திற்கு கொண்டுவரப்படுகிறது என்றார்.​ மேலும் மத அடிப்படையிலான ஒதுக்கீடு அல்ல இது என்றும் கூறினார்.
கோல்கத்தாவில் மாநகராட்சித் தேர்தல்கள் வரும் மே-ஜூன் மாதங்களில் ​ நடைபெறவிருக்கும் வேளையில் இத்தகைய இடஒதுக்கீடு அறிவிப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாம் ஓர் அழகிய சுவனப்பாதை

தேசத் தந்தை மஹாத்மா காந்தி

இஸ்லாத்தை பற்றி நன்கு ஆராய்ந்த காந்தியடிகள் இவ்வாறு கூறுகிறார்:

இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும் செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்

ஆண்டவன் ஒருவனே கடவுள் ஒன்றுதான் என்பதை எள்ளளவும் குழப்பமின்றி உறுதிப்படுத்தியது இஸ்லாம்தான்.  குர்ஆனைப் பக்திப் பரவசத்துடன் படிக்கும் போது எனக்கு ஒரு வித காந்த சக்தி ஏற்படுகின்றது. என் இந்து சகோதரர்கள் இதைப் பரிசுத்த உள்ளத்துடன் படித்தால் உண்மை உபதேசம் வெளியாவதை உணர்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) பற்றி காந்தியடிகளின் கருத்து

அம்மஹானின் சிறிதும் பிசகாத ஆடம்பரமற்ற வாழ்க்கையும் தான் என்ற அகம்பாவத்தை அறவே நீக்கிய தன்மையும் கொடுத்த வாக்குறுதியை தவறாது கண்ணியப்படுத்துதலும் நண்பர்களிடத்தும் தம்மைப் பின்பற்றியவர்களிடத்தும் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பும் அவருடைய ஆண்மையும் அசாமையும் கடவுளினிடத்திலும் தாம் கொண்ட வேலையிடத்தும் தளராத நம்பிக்கையும் ஆகிய இவைகளே அவருடைய வெற்றிக்குக் காரணமாயிருந்து எதிர்த்துவந்த பல இடையூறுகளையும் வென்றன. (யங் இந்தியா 21. 03. 1929)

அத்தகைய மகானை உண்மையை நாடும் என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு கண்ணியப்படுத்தாதிருக்க முடியும்?

பண்டித ஜவஹர்லால் நேரு

அரசியல் சக்தியாக பாரதத்திற்குள் நுழைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒரு மார்க்கம் என்ற நிலையில் இந்திய நாட்டின் தென்பகுதியை அடைந்துவிட்டது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இஸ்லாத்தைப் பரப்பபும் துணிவால் அவர் தம்மீதும் தமது கொள்கைமீதும் எத்துணை உறுதி பூண்டிருந்தார் என்பது தெளிவு.

இத்தகைய உறுதியான மனோபாவத்தை அன்றைய சூழ்நிலையில் அவர் உண்டாக்கிக்கொண்டது ஆச்சிரியப்படத் தக்கதே! இத்தகைய ஒரு உறுதியால்தான் மனித வாழ்க்கைக்கு புறம்பான நிலையிலிருந்த காட்டரபிகளைக் கொண்டு உலகில் சரிபாதி பகுதியிலே வெற்றிக்கொடி நாட்டினார்.

இத்தகைய வெற்றிக்குக் காரணம் முதலாவதாக முஹம்மத் நபி (ஸல்) கொண்டிருந்த உறுதிஊக்கம். இரண்டாவதாக இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் சகோதரத்துவம். (டிஸ்கவரி ஆப் இந்தியா)

இலக்கியத்திற்காக நேபால் பரிசு பெற்ற ரபீந்திரநாத் தாகூர்

முசல்மான்களை ஒன்றாக இணைப்பது அவர்களுக்குத் தர்மத்திலுள்ள பற்றே. சடங்குகளிலுள்ள பிடிப்பபு அல்ல. அனாவசியமான கட்டுப்பாடுகள் அவர்கள் செய்யும் வேலைகளை அடக்கவில்லை. இஸ்லாமிய தர்மம் அவர்களை மிகவும் நெருக்கமாக ஒன்றுபடுத்தியிருக்கிறது.  ஒரு கொள்கையைப் பல அர்த்தங்களைக்கொண்டு பார்க்காமல் ஒரே கருத்துடன் வழிபடுகின்றனர். அழைத்த மாத்திரம் எல்லோரும் ஒன்று சேர்ந்து விருப்பத்துடன் உயிரைத் தரக்கூடிய தன்மை வாய்ந்தது இவர்களின் தர்ம உணர்வு. (புத்தகம்-கோரா நாவல்)

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய Dr. அம்பேத்கார்.

பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தை கிடையாது. -

தந்தை பெரியார்

இன இழிவுகளை நீக்கி சிக்கலைத் தீர்க்கக் கூடிய மார்க்கம் இஸ்லாம்தான். இன இழிவுகள் நீங்க அதுவே நன்மருந்து.

சர்வபள்ளி டாக்டர் ராதா கிருஷ்ணன்.

பகுத்தறிவுக்குப் புரியாத விடயங்கள் எதுவும் இஸ்லாத்தில் கிடையாது. இஸ்லாத்தின் பலமும் அழகும் அதன் எளிய தன்மையிலேயே இருக்கின்றன. அது ஓர் இயற்கை மதம். (மார்க்கம்)


அறிஞர் அண்ணா

முஹம்மது போதித்த மார்க்கம் இஸ்லாம் வைரம் போன்றது.ஒரே இனம் ஒரே குலம் ஒரே மறை ஒரே வணக்கம் இவைகளைச் சிந்திக்கத் தலைப்பட்டேன். இஸ்லாம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் எனக்கு விடை தரவில்லை

கவிக்குயில் சரோஜினி நாயுடு

சகோதரத்துவப் பாடத்தை சுதந்திர உணர்வை சமத்துவப் பண்பாட்டைப் போதித்து இவ்வவுலகைப் பொலிவுறச் செய்த பெருமைக்குரிய அண்ணல் நபியின் திருப்பெயர் உலகம் உள்ளளவும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

நவீன உலகத்தில் உண்மை ஜனநாயக அரசியலை இஸ்லாம் நிலை நாட்டிற்று என்னும் ஒரே அம்சத்தில்தான் இம்மதம் ஏனைய மதங்களைக் காட்டிலும் உயர்ந்தது எனக் கூறுகிறேன்.

உலகம் இன்று எதை வேண்டி நிற்கிறது? உலக மக்களின் தற்போதைய வேண்டுதல் ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய ஒரு சமூக அமைப்பைப் படைக்க வேண்டும் என்பதுதான்.

இந்த உயர்நிலை இலட்சியத்தை தேவையைப் பாலைவனத்தின் தீர்க்கதரிசி ஒட்டகமோட்டி (அண்ணல் நபி) பதிமூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே உபதேசித்து அருளினார். (கட்டுரைத் தொகுப்புகள்) நன்றி:Salemexpress.blog spot.com

இடஒதுக்கீடு முஸ்லிம்களின் உரிமை – இ.எம்.அப்துல் ரஹ்மான்

“நீதி, நிர்வாகம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமையின் அடிப்படையிலான விகிதாச்சார பங்களிப்பு முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அதனைப் பெற முஸ்லிம்கள் போராட முன்வர வேண்டும்” எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயலர் இ.எம். அப்துல் ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.

கத்தாரிலுள்ள இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம்(India Fraternity Forum) என்ற அமைப்பு வெள்ளிக்கிழமையன்று இரவு 8 மணிக்குக் கத்தார் ரெட் க்ரசண்ட் கேட்போர் கூடத்தில் நடத்திய “இடஒதுக்கீடு சலுகையா? உரிமையா?” என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் அவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ற உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வரையறுத்துள்ளது. இது சமூக ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமேயல்லாது பொருளாதார ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று வரையறுக்காதது குறிப்பிடத்தக்கது. 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்த உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, அனைத்து சமுதாயங்களை விட மிக மோசமான அளவுக்குப் பின் தங்கிய நிலையிலேயே இன்று இந்திய முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அனைவருக்கும் சம உரிமையும் சம அந்தஸ்தும் உறுதிபடுத்தும் முகமாக, மண்டல் கமிசன் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மற்றும் தலித்களுக்காக இடஒதுக்கீடு பரிந்துரைத்தது. அதனை தலித், யாதவ சமூகங்கள் மிக சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், மாயாவதி என தலித், யாதவ சமுதாய மக்களின் பிரதிநிதிகள் சட்டமியற்றும் மையங்களில் பிரதிநிதித்துவப் படுத்த முடியும் போது, 20 கோடி முஸ்லிம்களுக்கு அந்த உரிமைகளுக்காக போராடும் அளவுக்குக் கூட விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது ஆச்சரியமானதாகும்.

இடது, வலது என மதச்சார்பற்ற வேடமிடும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த 20 கோடி முஸ்லிம்களையும் பரிசோதனை கூடங்களாக பயன்படுத்துவதற்கு வழியமைத்துக் கொடுத்ததே இதற்கான காரணமாகும். 40 ஆண்டுகாலமாக கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் சுமார் 20 சதவீத முஸ்லிம்களின் நிர்வாகப் பங்களிப்பு வெறும் 5 சதவீதம் மட்டுமே. மதச்சார்பற்ற வேடமிட்டு 40 ஆண்டுகாலமாக இந்தச் சமுதாயத்தை ஏமாற்றி வரும் கம்யூனிஸ்ட்கள், அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தலுக்காக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் நோக்கில் முஸ்லிம்களைக் கவர மட்டுமே சமீபத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதை எவரும் உணர்ந்து கொள்வர். இந்தியாவிலேயே சற்று மெச்சப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் வாழும் கேரளத்திலும் மற்ற சமுதாயங்களை ஒப்பிட்டு நோக்கினால் மிகப் பின் தங்கிய நிலையிலேயே கேரள முஸ்லிம்களும் உள்ளனர்.

நோய்களைக் கண்டுணர மருத்துவர்களை ஆய்வாளர்களாக நியமிப்பது போன்று அவ்வபோது மண்டல், சச்சார், மிஸ்ரா என மருத்துவர்களை நியமிப்பதோடுத் தங்களின் கடமை முடிந்து விட்டது என்ற நிலையிலேயே இடது, வலது கட்சிகள் நடந்து கொள்கின்றன. கண்டறியப்பட்ட நோய்க்கு மருந்தளித்துக் குணமாக்க எவருமே முன்வர தயாரில்லை.

இதுவரையிலான கமிசன்களிலேயே நீதிபதி சச்சார் தலைமையிலான கமிசன் மட்டுமே இந்தியாவில் முஸ்லிம்களின் யதார்த்த நிலையை மிகத் தெளிவாக ஆய்வு செய்து அறிக்கைச் சமர்ப்பித்துள்ளது. ஆனால், அதுவே, முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது என்ற நிலைக்குச் சச்சார் கமிட்டி அறிக்கையை முஸ்லிம் அமைப்புகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. ஆனால், நோய் என்ன என்பதை மட்டும் தான் சச்சார் கமிசன் கண்டறிந்து கூறியுள்ளதே தவிர, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையைக் குறித்து எந்தப் பரிந்துரையும் அது செய்யவில்லை என்பதைக் கவனித்தால், நீதிபதி சச்சார் கமிசன் அறிக்கையும் தெளிவாக முஸ்லிம்களின் வயிற்றில் அடித்துள்ளது என்றே எடுத்துக் கொள்ள முடியும்.

முஸ்லிம் சமுதாயத்தின் பின் தங்கிய நிலையினை முன்னேற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிசன் மட்டும் தான் 10 சதவீத இடஒதுக்கீடு அனைத்து முஸ்லிம்களுக்கும் வழங்குவது மட்டுமே சரியான தீர்வு என்று அரசுக்குப் பரிந்துரை செய்தது. முஸ்லிம் சமுதாயத்துக்குப் பாதுகாவலன் என அவ்வபோது கண்துடைப்பு நாடகம் நடத்தும் காங்கிரஸ், அந்தப் பரிந்துரையை வாங்கி அழகாக அட்டைப் போட்டு, குளிர்சாதன அறையில் ஒதுக்கி வைத்து விட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், பிரதமருக்கு அளிக்கப்பட்ட அந்த அறிக்கை லீக்கான விஷயம் மட்டும் நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய விஷயமாக பேசப்பட்டது. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பரிந்துரைக்கப்பட்ட அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதை விட்டுத் தடுப்பது மட்டும் தான் அதன் நோக்கம் என்பதை எவரும் அறிந்து கொள்ள முடியும். இந்த விஷயத்தில் மதச்சாரபற்ற வேடமிடும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளிலிருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாக நாடாளுமன்றம் கண்ட 30 முஸ்லிம் எம்பிக்களில் ஒருவர் கூட மிஸ்ரா கமிசன் பரிந்துரையை நாடாளுமன்ற ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதைக் குறித்து வலியுறுத்தாதது மகா அயோக்கியத்தனமாகும்.

ஒருபோதும் இல்லாமல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பட்ட முறையில் காங்கிரஸுக்கு அதிக எம்பிக்கள் கிடைத்ததோடுக் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. இதற்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜகவுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைந்து காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அந்தோ கடந்த நாடாளுமன்ற அவையில் இருந்த 36 எம்பிக்களின் எண்ணிக்கை இந்த முறையாக 30 குறைய மட்டுமே செய்தது. இது தான் முஸ்லிம் சமுதாயத்திற்குக் கிடைக்கும் பரிசு. 543 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலைப்புச் சட்டம் வழங்கும் உரிமையின் அடிப்படையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமெனில் குறைந்தது 86 முஸ்லிம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இதே நிலை தான் அதிகாரம், நிர்வாகம், நீதித்துறைகளிலும் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கும் மிக மிக குறைந்த அளவிலான பிரதிநிதித்துவமே முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலை மாற வேண்டும். 80 சதவீதம் முஸ்லிம்கள் மட்டுமே வாழும் மாவட்டத்தில் கூட நாடாளுமன்ற உறுப்பினராக, உயர்ஜாதியைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியே காங்கிரஸின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குப் பிரதிநிதியாக அழைத்துச் செல்லப்படுகிறார் எனில், இடது வலது என்ற வித்தியாசம் இன்றி 20 கோடி முஸ்லிம்கள் காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்டுக்கும் எவ்வாறு பரிசோதனை கூடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலை மாற வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை – அவை வெறும் சலுகைகள் அல்ல; நமது உரிமைகள் என்பதைப் புரிந்து கொண்டு அவற்றைப் – பெறுவதில் முஸ்லிம் சமுதாயத்தின் ஒவ்வொரு இளைஞனும் போராட முன்வர வேண்டும்” என்று இ.எம்.அப்துல் ரஹ்மான் அக்கலந்துரையாடலில் பேசினார். சிறப்புரைக்குப் பின், இடஒதுக்கீடு, முஸ்லிம்களின் உரிமைகளைப் பெறுவதற்கான செயல்திட்டம் போன்றவை குறித்து பார்வையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். நன்றி:இந்நேரம்.காம்

பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்

பிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது.

கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.

உங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.

காதலிப்போர் கவனத்திற்க்கு :

காதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.

பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல,

ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.

சினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.

காதல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் :

இளம் பெண்களே! பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.

காதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா? சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே! ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்

படிக்கும் இளைஞர்களே!

காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.

இளைஞர்களே!

உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே! இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.

காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்

காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.

இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது”

(நூல்: புகாரி 6243)

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா? ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா?’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!

டிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்

எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

வெளியீடு :

இளைஞர்களை நல்வழிபடுத்தும் பணியில் TNTJ மாணவர் அணி

அநீதிக்கு எதிரான நடவடிக்கை என்ன? நீதிபதி கேள்வி

Thackeraysநாசகாரச் செயல்கள்: “தாக்ரேக்கள், ராணே ஆகியோர் மீது மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” உச்ச நீதிமன்றம் கேள்வி.

கட்சித் தொண்டர்களைத் தூண்டி விட்டு, கடந்த ஆண்டில் மட்டும் பலமுறை பொதுமக்களின் சொத்துகளை நாசப்படுத்தியுள்ள அரசியல் தலைவர்களான பால் தாக்ரே, உத்தவ் தாக்ரே, ராஜ் தாக்ரே மற்றும் நாராயண் ராணே போன்றோர் மீது இதுவரை நடைவடிக்கையெடுக்காத மாநில அரசினை மும்பை உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை 03.02.2010 அன்று கடுமையாகக் குற்றம் சாட்டியது.

ஜெ.என் படேல், பி.ஆர் கவய் ஆகியோரின் தலைமையில் செயல்படும் விசாரணைக் குழு, பிரபல முன்னாள் ஐப்பீஎஸ் (IPS ) அதிகாரி ஜுலியோ ரிபெரோ மூலம் தாக்கல் செய்யப் பட்ட மக்கள் நல வழக்கை, அதன் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் ஆய்வு செய்கிறது. அதில், “குற்றவாளிகளிடம் இருந்து நிரூபிக்கப் பட்ட நான்கு நாசகாரச் செயல்களுக்குப் பகரமாக முறையான நஷ்ட ஈடு அபராதமாக வசூலிக்கப்பட வேண்டும்” என்று ரிபெரோ கோரியுள்ளார்.

வழக்குத் தொடுக்கப்பட்ட நாசகாரச் செயல்கள்:

(1)  சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவுத்தின் தலைமையில் சிலர் கும்பலாக இன்டெர் காண்டினண்டெல் ஹோட்டலின் சொத்துகளை நாசப்படுத்தியது,

(2)  மும்பை நவ் நிர்மாண் சேனா எனும் ராஜ் தாக்ரேயின் கட்சியின் மூலம் மும்பைப் பல்கலைக் கழகம் மீதான தாக்குதல் நடத்தியது,

(3) அழகு நிலையங்களின் மீதான தாக்குதல்களை நடத்திச் சேதம் விளைவித்தது,

(4)   நாராயண் ராணேவின் ஆதரவாளர்கள் மூலம் ‘நவாகாள்’ எனும் தினசரியின் அலுவலகத்தில் நடத்திய தாக்குதல்கள் ஆகும்.

“இன்டெர் காண்டினண்டெல் ஹோட்டலின் சொத்துகளை நாசப்படுத்தியது தொடர்பாக, பால் தாக்ரே மற்றும் உத்தவ் தாக்ரே மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” என்று நீதிபதி படேல் கேள்வி எழுப்பினார்.

“இவர்களைப் போன்ற உயர்மட்டத் தலைவர்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு, இதுபோன்ற அராஜகச் செயல்களை ஏவுகின்றனர். மேலும் ராஜ் தாக்ரே மற்றும் நாராயண் ராணே சம்பந்தப்பட்ட இன்னபிற அடாவடி சம்பவங்களுக்காக அவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” என்றும் கேட்டார். மேலும், “அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநில அரசு விரும்பா விட்டால், அரசே அவற்றுக்கான நஷ்ட ஈட்டை வழங்கட்டும்” என்றும் அவர் கூறினார்.

அரசாங்க சார்பில் இதற்கு பதிலளிக்கையில், நிரஞ்சன் பண்டித் எனும் அதிகாரி நாசகாரச் செயல்களுக்குத் தலைமை வகித்த தலைவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு சம்பவங்களில் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீதிபதி படேல் மேலும் இதுபற்றி விபரமாகக் கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் மூலம் இது போன்ற விவகாரங்களைக் கையாளுதல், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உள்ளன” என்று குறிப்பிட்டார்.

“மேற்காணும் தலைவர்கள் மீது எடுக்க உள்ள நடவடிக்கைகள் பற்றி, அரசாங்கத்தின் நிலைபாட்டையும் விசாரணையின் விபரங்களையும் விபரமாக உள்துறைத் தலைமைச் செயலாளர் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைப் பற்றி அவர்கள் யாராக இருப்பினும் எவ்விதத் தயக்கமோ அச்சமோ இல்லாமல் பொதுநலப் புகார் மனு தாக்கல் செய்திட வேண்டும். அதை அரசும் நீதிமன்றமும் முறையாக விசாரித்து, குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி தண்டனையும் அபராதமும் விதிக்க முன் வரவேண்டும்.

பொதுமக்கள் இதுபோன்ற சுயநலவாதிகளை இனம் கண்டு, அவர்களது அடாவடிகளுக்கு மௌன ஆதரவளித்திடாமல் புறக்கணித்து, அவர்களுக்குத் தங்கள் முழு பலத்தினை, நடுவுநிலையாகவும் முறையாகவும் உணர்த்திட வேண்டும்.

அப்போதுதான் சட்டத்தைத் துச்சமாகக் கருதி எதையும் யாரையும் சிறிதும் மதிக்காமல் விஷக்கருத்துக்களை விதைக்கும் விதமாக எழுதியும் பேசியும் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்கின்ற, வன்முறையைத் தூண்டி விடுகின்ற, பொதுமக்களின் உயிர்-உடமை-நிம்மதிக்கு ஊறு விளைவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்ற சுயநல விஷமிகளின் கொட்டம் அடங்கும். நன்றி:சத்தியமார்க்கம்.காம்

ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

1

மவ்லித் வரிகள்

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ        اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !

கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا           وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,

அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ    وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!

சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)

2

மவ்லித் வரிகள்

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ      تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ    وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்!

நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!

புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22)

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)

3

மவ்லித் வரிகள்

حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ   مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ
صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ   لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ

தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது.

இது எங்களின் பாவக் கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும்.

தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக!

அவர் இழப்பினை அடையவில்லை.

குர்ஆன் வரிகள்

அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:74)

4

மவ்லித் வரிகள்

اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ     مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ
وَمَا يَخِيْبُ النَّزِيْلُ     فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ

நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.

குர்ஆன் வரிகள்

நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! நீர்) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)
அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41)

5

மவ்லித் வரிகள்

اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ    وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ

அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.

குர்ஆன் வரிகள்

“மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?” என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)

6

மவ்லித் வரிகள்

صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ        وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ

வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.

குர்ஆன் வரிகள்

“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201)
“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

7

மவ்லித் வரிகள்

اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ     اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ

எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160)
“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)

8

மவ்லித் வரிகள்

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்

குர்ஆன் வரிகள்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)

8

மவ்லித் வரிகள்

ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ      فَجِئْتُ هذَا الْبَابْ
اُقَبِّلُ اْلاَعْتَابْ        اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ
وَالسَّادَةُ اْلاَخْيَارِ

எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.

குர்ஆன் வரிகள்

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27:62)

9

மவ்லித் வரிகள்

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ    عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.

குர்ஆன் வரிகள்

“இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன் 13:28)

10

மவ்லித் வரிகள்

قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ       فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ

அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.

குர்ஆன் வரிகள்

“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:56)

11

மவ்லித் வரிகள்

بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ      اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ

என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.

குர்ஆன் வரிகள்
“எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:86)

நபி மொழி

நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)

12

மவ்லித் வரிகள்

وَانْظُرْ بِعَيْنِ الرِّضَالِيْ دَائِمًا اَبَدًا

கருணைமிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)
அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 109)

13

மவ்லித் வரிகள்

وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ        فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ

என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.

குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன் 11 : 90)

14

மவ்லித் வரிகள்

إِنَّا نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ

நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.

குர்ஆன் வரிகள்

தீமைகளைச் செய்தோரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 10 : 27)
மவ்லித் வரிகள் நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.

நபி மொழிகள்

அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத் 2829)

சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)

15

மவ்லித் வரிகள்

اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ     وَمُقِيْلُ الْعَثَرَاتِ

எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.

اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.

يَا مَنْ يَّرُوْمُ النَّعِيْمَا      بِحُبِّهِ كُنْ مُقِيْمًا

وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا      لَدَيْهِ بُرْعُ  السَّقَامِ

நயீம் எனும் சுவனத்தை நாடுபவனே! நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.

குர்ஆன் வரிகள்

நான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)

நபி மொழி

மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)

16

மவ்லித் வரிகள்

مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ       فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ

மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.

குர்ஆன் வரிகள்

“அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக! “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. (அல்குர்ஆன் 3:126)

17

மவ்லித் வரிகள்

اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ           مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ
ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا        مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

நரக நெருப்பின் ஜவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும். நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜவாலையை அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.

குர்ஆன் வரிகள்

யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)

“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

tntj.net என்ற தளத்திலிருந்து…

பள்ளிகளில் இரவு நேரம் பாடம் நடத்த தடை

இர‌வு நேர‌த்‌தி‌ல் பாட‌ம் நட‌த்த ப‌‌ள்‌ளிகளு‌க்கு அனுமத‌ி ‌கிடையாது எ‌ன்று‌ம் அப்படி இரவு நேரத்தில் பாடம் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க‌ப்படு‌ம் எ‌ன்று‌‌ம் த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அடுத்த மாதம் 10ஆம் வகுப்பு, பிளஸ்2 துவங்க இருப்பதையொட்டி பல மெட்ரிக்குலேஷன் பள்ளிக் கூடங்களில் இரவு 10 மணி வரை ‌சிற‌‌ப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. ‌சில பள்ளிக் கூடங்களில் மாணவ- மாணவிகளை இரவு பள்ளிக் கூடங்களிலேயே தங்கவைத்து காலையில் தான் அனுப்புகின்றனர். இதனா‌ல் மாணவ- மாணவிகளை ஓய்வின்றி படிக்க வைப்பதால் அவர்களது மன நிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

எனவே இரவு நேர வகுப்புகளை நடத்த அரசு சிறப்பு அனுமதி கொடுத்துள்ளதா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது. இது பற்றி தமிழ் மக்கள் பண்பாட்டு கழக மாநில அமைப்பாளர் ரவி, காஞ்‌சிபுரம் மாவட்ட கல்வி அதிகாரி மோகன குமாரிடம் விளக்கம் கேட்டு மனு கொடுத்தார்.

அந்த மனுவை அவர், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் வாசுதேவனுக்கு அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்து மெட்ரிகுலேஷன் ஆய்வாளர் எழுதியுள்ள கடிதத்தில், இரவு நேரங்களில் பள்ளிக் கூடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி எதுவும் கொடுக்கவில்லை.

பள்ளிக் கூட நேரம் தவிர மற்ற நேரங்களில் மாணவர்களை பள்ளியில் தங்க வைத்து பாடம் நடத்த கூடாது. அப்படி இரவு நேரத்தில் விடிய விடிய தங்க வைத்து பாடம் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கூடங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்றோர் விருப்பம் தெரிவித்தாலும் கூட இரவு நேரங்களில் மாணவர்களை தங்க வைத்து தனி வகுப்பு நடத்த கூடாது எ‌ன்று அவர் கூறியுள்ளார்.

24dunia.com-என்ற தளத்திலிருந்து…

ரியாத் சர்வதேச இந்தியப் பள்ளியில் தீவிபத்து

துபாய்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்திலிருந்து 4500 மாணவ, மாணவியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பள்ளியின் மகளிர் வளாகப் பகுதியில் இந்த விபத்து நடந்தது. இந்த வளாகம் 3 மாடிக் கட்டடமாகும். அங்குள்ள பாதுகாப்பாளர் அறைக்கு வெளியே தீவிபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொருட் சேதமும் ஏற்படவில்லை என்று பள்ளியின் தலைவர் இம்தியாஸ் தெரிவித்தார்.

தீவிபத்து குறித்து ஆசிரியை ஒருவர் கூறுகையில், வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென புகையுடன் தீ கிளம்பியதால் அனைவரும் மாடிக்கு ஓடினோம். அங்கிருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டு வெளியேற்றினோம். இதனால் மாடிப்படிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் யாரும் காயமடையவில்லை என்றார்.

தீவிபத்தைத் தொடர்ந்து அனைவரும் வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி மைதானத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.

மஃப்டி போலீசாரை கட்டி வைத்து உதைத்த கிராம மக்கள்!

புளியங்குடி அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீசாரை ஊர்மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நிட்சபேச நதியிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து புளியங்குடி டிஎஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் போலீசார் பூசைப்பாண்டி, மாணிக்கராஜ், வேலுச்சாமி, சிவலமுத்து ஆகிய 4 பேர் நள்ளிரவு சாதாரண உடையில் பைக்கில் ரோந்து சென்றனர்.

அப்போது நெல்கட்டும்செவலை சேர்ந்த சிலர் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர்.

ஆனால் அவர்கள் அதற்குள் ஊர் எல்லையை தொட்டு விட்டனர். தங்களை பின் தொடர்ந்து வருவது போலீசார் என தெரியாத அவர்கள் வேறு யாரோ தங்களை விரட்டி வருவதாக ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஊர் மக்கள் திரண்டு வந்து 4 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் போலீஸ் [^]காரர்கள் பூசைப்பாண்டி, மாணிக்கராஜ் ஆகியோர் மட்டும் சிக்கிக்கொண்டனர். மற்ற இருவரும் தப்பினர்.

ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் பிடிப்பட்ட 2 பேரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். அப்போது அவர்கள் நாங்கள் இருவரும் போலீஸ்காரர்கள், அடிக்காதீர்கள் எனக் கூறி சத்தம் போட்டனர் ஆனாலும் மக்கள் விடவில்லை.

அதற்குள்ளாக, தகவல் அறிந்த டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களை மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக நெல்கட்டும் செவலை சேர்ந்த 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த போலீஸ்காரர் சீவலமுத்து வாசுதேவநல்லூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நன்றி :

மக்கள் தொந்தரவால் தாகத்துடன் திரும்பும் ‘யானை கூட்டம்’

சத்தியமங்கலம் வனக்குட்டையில் யானைகள் தண்ணீர் குடிக்கும் இடத்தில் பொதுமக்கள் தினமும் கூட்டமாக நிற்பதால், யானைகள் தண்ணீர் குடிக்காமல் மீண்டும் வனப்பகுதிக்குள் தாகத்துடன் திரும்புகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டெருமைகள், புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன.

தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் வழியில் வனத்துறையினர் அமைத்துள்ள குட்டையில் தண்ணீர் தேடி காட்டு விலங்குகள் வருகின்றன.

தற்போது யானைகள் அதிகமாக வசிக்கும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தினமும் மாலை நேரத்தில் இந்த வனக்குட்டைக்கு தண்ணீர் குடிக்க யானைகள் படையெடுத்து வருகின்றது. இந்த காட்சியை காண மதியம் 3 மணி முதல் பண்ணாரி அருகே உள்ள வனக்குட்டை முன் இருகர மற்றும் நான்கு கர வாகனங்களை நிறுத்திக் கொண்டு பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் யானைகள் தண்ணீர் குடிக்க குட்டைக்குள் வந்தவுடன் ஓ.. என்று சத்தமிடுவதும் அருகில் சென்று போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் யானைகள் பயந்து தண்ணீர் குடிக்காமல் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.

யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் கூறுவதை பொதுமக்கள் கேட்பதில்லை.

நன்றி :

கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை! காதலன் தற்கொலை முயற்சி

நாகர்கோவில்: காதலித்து பின் திருமணம் செய்ய மறுத்த கல்லூரி பேராசிரியை காதலானால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சிதறாலை சேர்ந்த மேள்சி தாஸ் மற்றும் கனகம் தம்பதியரின் மூத்த மகள் ஷர்மிலி. சிறுவயதில் குளத்தில் குளிக்க சென்ற போது இவரது ஒரு தங்கையும், தம்பியும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இந்த அதிர்ச்சியில் மேள்சிதாஸ் இறந்து போனார்.

தந்தையை இழந்த ஷர்மிலி தாயின் பராமரிப்பில் வளர்ந்து எம்.இ., படித்து முடித்தார். ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.ஷர்மிலியை அதே பகுதியை சேர்ந்த ஷாஜன் என்பவர் காதலித்தார். தினமும் பின்தொடர்ந்த ஷாஜனை, ஷர்மிலியும் விரும்பினார். எம்.பில்., முடித்து விட்டு பி.ஹெச்டி., படிப்பதாக ஷாஜன் கூறியுள்ளார். ஆனால், ஷாஜன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று தோழிகள் எச்சரித்ததை தொடர்ந்து, அவரது படித்த கல்விச் சான்றிதழை  ஷர்மிலி கேட்டுள்ளார். இதனால், உஷாராகி போன ஷாஜன் சட்டப்படிப்பு படிப்பதாக மாற்றிக் கூறியுள்ளார்.முன்னுக்கு பின் முரணாக கூறியதால், சந்தேகம் அடைந்து ஷாஜனை உதறிய ஷர்மிலி  தனது தாயிடம் தனக்கு வேறு இட்த்தில் வரன் பார்க்கும்படி, கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை ஒருவர் பெண் பார்க்க வருவதை தெரிந்து கொண்ட ஷாஜன், வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் சென்று ஷர்மிலியை வெட்டி கொலை செய்தார். பின், மார்த்தாண்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதறால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி:இந்நேரம்.காம்

நாகூர் கந்தூரியும் நாசமாகும் அமல்கள்

தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர். ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள் தெரியாது. இதற்குக் காரணம் அவர்கள் அந்தந்த மாதத்தில் நடக்கும் அவ்லியாக்களின் கந்தூரிகளை வைத்து மாதத்தைக் கணக்கிடுவது தான்.

ரசூலுல்லாஹ் மவ்லிது (ரபிய்யுல் அவ்வல்), முஹ்யித்தீன் மவ்லிது (ரபிய்யுல் ஆகிர்), பஷீரப்பா கந்தூரி (ஜமாதில் அவ்வல்), ஷாகுல் ஹமீது மவ்லிது (ஜமாதில் ஆகிர்), காஜா நாயகம் மவ்லிது (ரஜப் மாதம்) என அவ்லியாக்களின் பெயரிலேயே மாதப் பிறையைக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு அவ்லியாக்களின் கந்தூரிகள் அவர்களை ஆக்கிரமித்து நிற்கின்றன.

ஜமாதில் ஆகிர் மாதம் பிறக்கவிருக்கின்றது. பெண்கள் கணக்குப்படி ஷாகுல் ஹமீது மவ்லிதுப் பிறை, நாகூர் கந்தூரிப் பிறை பிறக்கவிருக்கின்றது.
பிறை 1 முதல் 14 நாட்கள் நடக்கும் இந்தக் கந்தூரி நாகூரில் படு விமரிசையாக நடைபெறும்.

நாகூர் செல்ல முடியாதவர்களுக்காக ஷாகுல் ஹமீது தர்காவின் கிளைகளும் சில ஊர்களில் உண்டு. அந்தக் கிளைகளில் அவர்கள் கந்தூரிகளைக் கொண்டாடி தங்கள் பக்திகளை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

இக்கந்தூரியில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் கூட பக்தர்கள் வந்து நாகூர் சன்னதியில் குழுமுவார்கள்.

இப்படி இவர்கள் வந்து நாகூரில் குழுமுவதன், கூடுவதன் நோக்கம் என்ன? “இவையெல்லாம் அவ்லியாக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத் தரும். இவை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் காரியங்கள்” இது தான் இவர்களது எண்ணம். அதற்காகத் தான் இத்தனை பெரிய பயணம், செலவுகள், 14 நாட்களுக்கு மேற்கொள்ளும் சிரமங்கள்.

நாம் இங்கே பார்க்கப் போவது இவர்கள் செய்கின்ற இந்தக் காரியங்கள் இவர்களுக்கு எள் அளவாவது, எள் முனையளவாவது பயனளிக்குமா? என்பதைத் தான்.

இந்தக் கேள்விக்கு, நன்மையையும் தீமையையும் பிரித்துக் காட்ட வந்த அல்குர்ஆன் அளிக்கும் பதிலைப் பார்ப்போம்.
என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.
அல்குர்ஆன் 18:102

இந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று அழைப்பதுடன் இவர்களின் இந்தக் காரியங்களுக்குத் தண்டனையாக நரகம் தான் பரிசு என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

(ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும் போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத் தான் காண்பான். அப்போது அவனது கணக்கை நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
அல்குர்ஆன் 24:39

இவர்கள் செய்கின்ற இந்த வணக்கங்களை கானல் நீர் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது.
இந்தக் கானல் நீரை தண்ணீராகக் காண்பவர்கள் மாபெரும் நஷ்டவாளிகள்!
இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகின்றான்.
“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!

இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 18:103, 104

1. மாபெரும் நஷ்டவாளிகள்
2. இவர்களது முயற்சி இவ்வுலகிலேயே வீணாகி விடுகின்றது.
3. தீமையைச் செய்து விட்டு அதை நன்மை என்று நம்பி ஏமாறுகின்ற கொடுமை!
ஒருவன் ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்து மாட்டிக் கொண்டு தண்டனை பெறுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு தண்டனை பெறுகின்ற அவன், தனக்கு அந்தத் தண்டனை நியாயமானது தான் என்று உணர்ந்தே ஏற்றுக் கொள்கிறான். இதில் அவனுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. ஆனால் அதே சமயம், டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்த ஒருவன், தான் வாங்கிய டிக்கெட் போலியானது என்றாகி, அதற்காகத் தண்டனை பெறும் போது அவன் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாகி விடுகின்றான். அதை அவனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதன் மூலம் அவன் அடைகின்ற ஏமாற்றத்திற்கு ஓர் அளவே இல்லை.

அவ்லியா பக்தர்களின் நிலை இதைப் போன்றது தான்.
கடவுள் மறுப்புக் கொள்கையுள்ள ஒருவன் அல்லாஹ்வை நம்பப் போவதில்லை; மறுமையையும் நம்பப் போவதில்லை. நாளை மறுமையில் அவன் தண்டனை பெறுகின்ற போது அது அவனுக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தரப் போவதில்லை. காரணம், தான் செய்த தப்புக்கு அந்தத் தண்டனை என்று அவன் ஏற்றுக் கொள்ளப் போகின்றான்.

ஆனால் அவ்லியா பக்தர்களின் நிலை அவ்வாறல்ல! அவர்கள் தாங்கள் செய்த காரியங்களை நன்மை என்று நம்பியவர்கள்! அதனால் அவர்களது ஏமாற்றம் அளவிட முடியாதது.

ஷாகுல் ஹமீது மீது பக்தி கொண்டு மவ்லிது ஓதுவது, சந்தனக்கூடு எடுப்பது, கொடி ஏற்றுவது, பீரோட்டம் ஓடுவது, நாகூருக்குப் பயணம் மேற்கொள்வது, அங்கு 14 நாட்கள் தங்குவது போன்ற எல்லாமே மார்க்கத்தின் பெயரால் நன்மை என்று கருதிச் செய்யப்படும் வீணான காரியங்கள்.
வீணான காரியங்களை நன்மை என்று செய்பவர்கள் அல்லாஹ்விடம் மாபெரும் நஷ்டத்திற்குரியவர்கள். நரகத்தைத் தங்குமிடமாக ஆக்கிக் கொள்பவர்கள்.

எனவே ஷாகுல் ஹமீது கந்தூரி மட்டுமல்ல! ஒவ்வொரு அவ்லியா கந்தூரி கொண்டாடும் முஸ்லிமும் இந்தப் பட்டியலில் தான் இடம் பெறுவார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தப் பட்டியலில் ஈடுபடுவோர் தாங்கள் நல்லமல்களைச் செய்திருக்கிறோம் என்று நம்புகிறார்கள். அந்த அமல்கள் அனைத்தையும் காற்றில் பறக்கும் புழுதிகளாக, கரைந்து போகும் சாம்பல்களாக இறைவன் ஆக்கி விடுகின்றான். இதனால் இவர்களது அமல்களை நிறுப்பதற்குத் தராசைக் கூட வைப்பதில்லை.

அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.
அல்குர்ஆன் 18:105, 106

இத்தனைக்குப் பிறகும் ஒருவர் நாகூர் செல்வாரானால் அவர் அல்லாஹ்வின் இந்த வசனங்களைக் கேலிப் பொருளாக்கியவர் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

ஷாகுல் ஹமீது மவ்லிது தொடர்பான கதை கப்ஸாக்களையும், கவிதை வரிகளையும், கந்தூரி என்ற பெயரில் நடக்கும் மடைமைத்தனங்களையும் மவ்ட்டீகங்களையும் இந்த இதழ் உங்களுக்கு அடையாளம் காட்டுகின்றது.

நேர்வழி காட்டுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

tntj.net என்ற தளத்திலிருந்து…

துபாய்: மரண தண்டனையை எதிர்நோக்கும் 12 இந்தியர்கள்!

மதுக் கடத்தல், போட்டிக் குழுவைச் சேர்ந்த இருவரை கடத்திச் சித்திரவதை செய்து, ஓரினச் சேர்க்கை கொடுமையைச் செய்து, உயிரோடு புதைத்துக் கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள 12 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தான் நாட்டவருக்கு மரண தண்டனை கிடைக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த 13 பேரும் சேர்ந்து மதுக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போட்டி குழுவைச் சேர்ந்த இருவரைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, உயிரோடு வைத்து இருவரையும் புதைத்துக் கொன்று விட்டனர்.

13 பேரும் கைது செய்யப்பட்டு துபாய் [^] கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின்போது தங்கள் மீதான குற்றச்சாட்டை இவர்கள் 13 பேரும் மறுத்துள்ளனர்.

நேற்று இவர்கள் மீது கடத்தல், கொலை மற்றும் உடல்களை மறைத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டனர். 5 பேர் மீது செக்ஸ் சித்திரவதை குற்றச்சாட்டுப் பதிவானது. 10 பேர் குடிபோதையில் இருந்ததாக ஒரு குற்றச்சாட்டுப் பதிவானது.

கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி இந்த 13 பேரும் சேர்ந்து அபு பக்கர் நுஜிலா என்பவரையும், இன்னொருவரையும் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் அவர்களை இரும்புக் குழாய்கள், குச்சிகள், கத்திகள் ஆகியவற்றை வைத்து தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.

13 பேரில் 5 பேர் அந்த இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். பின்னர் அந்த இருவரையும் ஒரு இடத்தில் குழி தோண்டி உயிரோடு புதைத்து மேலே மண்ணைப் போட்டு மூடி விட்டனர்.

இந்த 13 பேரும் கடந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 13 பேருக்கும் மரண தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.

12 இந்தியர்களில் 3 பேர் கொத்தனார்கள் ஆவர். ஒருவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். 8 பேர் வேலையில்லாமல் இருந்தவர்கள் ஆவர். கைதான பாகிஸ்தான் நபர் டிரைவர் ஆவார். அனைவரும் 21 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் ஆவர்.

கைதான இந்தியர்கள் 12 பேரும் எந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

நன்றி: kadayanallur.org

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம். மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் வாசகர்கள் கவனத்தில் கொள்க!

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?

தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?

இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

‘மவ்லித்’ என்பதின் பொருள்

‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் :

மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?

மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர்,தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

ஆஹா மெகா ஆஃபர்

உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுயைக பாதுகாப்பு பெற வருடத்தில் ஒருமாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.

மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி

மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.

”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன? என்று கூறுவதை பாருங்கள் : நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்,(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(23 : 1-11)

செலவு செய்யும் முறை

நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : ”உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்ய விரும்புவேன்” என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஆனால் திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள்

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)

மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?

”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

அமுத சுரபி மவ்லித்

அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம்.
”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார்.மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி

எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித்.
”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள்,ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான் மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4 : 19)

மலக்குகளின் வருகை

”எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் : அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும் மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.’ அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார்,மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.

ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

தொகுப்பு:-எம்.ஐ சுலைமான்

tntj.net என்ற தளத்திலிருந்து…

சவூதி அரேபியா வாழ் அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

சவூதிஅரேபியா வாழ் வெளிநாட்டினர்கள் அவர்களின் அரசாங்கம் சார்ந்த கீழ்க்கண்ட தகவல்களை அறிய சவூதி அரேபிய அரசின் உள்விவகாரதுறை அமைச்சகம் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்;

உங்கள் குடும்பத்தினர்களின் விசா வரவு மற்றும் வெளியேற்றம் அறிய வேண்டுமா?
உங்களுக்கு இந்த வருடம் ஹஜ் செய்வதற்கு அனுமதியுள்ளதா / தகுதிபெற்றவரா?
உங்களின் சுகாதார அட்டை புதுப்பிக்கப் பட்டுள்ளதா?
உங்களுடைய ஆதரவில் வேலை செய்பவர்களின் குடியரசு அட்டை நிலை என்ன?
உங்களின் குடியரசு அட்டை (இக்காமா) நிலை என்ன?
உங்களின் விசா நிலை என்ன? (Exit / Re-Entry)
உங்களின் கைரேகை எடுக்கப்பட்டு அது அங்கீகரிக்கப் பட்டுவிட்டதா?
உங்களுக்கு போக்குவரத்து துறையின் அபராதம் உள்ளதா?
உங்கள் வாகனத்திற்கு எதுவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?
இதுபோன்ற தகவல்களையும், மேலும் தகவல்களையும் பெற…

http://www.moi. gov.sa/wps/ portal

என்ற மேலேயுள்ள சுட்டியை அழுத்தி, E-Services Tab என்ற பகுதியை அழுத்தி ”Passports” என்ற தலைப்பை அழுத்துங்கள்.


நாம் எதிர்பாராமல் திடீரென்று பயணம் செல்ல நேரலாம், மேலேயுள்ள எதாவது ஒன்றின் தடங்கலால் உங்கள் பயணம் செல்லமுடியால் ஆகலாம். எனவே இன்றே இவைகளை சரிபார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் கடவுச்சீட்டு (Passport) கலாவதியாகியிருந்து நீங்கள் அவசரமாக பெறவேண்டியிருந்தால் “தட்கல்” என்ற அவசரமுறையில் இந்தியத் தூதரகத்தை அனுகினால் தருவார்கள் அவர்களின் இணையதள முகவரி

http://www.indianem bassy.org. sa
(Tatkal service for issue of passport is also available)

”பிரச்னைகள் வருமுன் காப்போம்”.

உங்களுக்கு தெரிந்த சவூதிவாழ் அன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Thanks and Regards,
B. ASHRAF KHAN
hp – Service Center
Nahil Computer Co.
Riyadh, K.S.A

ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு : மசோதா தாக்கல்

புதுடில்லி :ஊழலை வெளிப்படுத்துபவர்களை பாதுகாப்பதற்கான சட்டம், வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரில், சில ஆண்டுகளுக்கு முன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிய, சாலை பணிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடுகளை சத்யேந்திர துபே என்ற இன்ஜினியர், வெளிப்படுத்தினார்.

11112866

இதையடுத்து, அவர் கொல்லப்பட்டார். இது போன்று பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. எனவே, ஊழலை வெளிப்படுத்துபவர்களை பாதுகாக்க தீர்மானம் கொண்டு வர சுப்ரீம் கோர்ட், கடந்த 2004ம் ஆண்டு பரிந்துரை செய்தது. இதையடுத்து, ஊழலை வெளிப்படுத்துபவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக, மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில், மேம்படுத்தப்பட்ட அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், சட்டம் கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் ஈடுபடுவர்.

இதுகுறித்து, பணி நியமனம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு துறை இணையமைச்சர் பிரித்விராஜ் சவான் கூறியதாவது:அமைச்சர் அந்தோணி தலைமையிலான மேம்படுத்தப்பட்ட அமைச்சர்கள் குழு, விரைவில் கொண்டு வரப்பட உள்ள மசோதாவில் காணப்படும் விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்வர். “பொது மக்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பவர்கள் பாதுகாப்பு மசோதா’, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட உள்ளது.இவ்வாறு பிரித்விராஜ் சவான் கூறினார்.

நன்றி: stopbribe.blogspot.com

பிரசவத்தின்போது…அபராசிதன்

ஒரு பெண்ணிற்கு வாழ்வின் முக்கிய கட்டம் எதுவென்றால், அவள் குழந்தை பெற்றுக்கொள்ளும் அந்த தருணத்தைக் குறிப்பிடலாம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்றும் அந்த நிமிடங்களை அவளால் என்றுமே மறக்க முடியாது. தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களை, கிராமப்புறங்களில் ‘பெற்றுப் பிழைத்தவள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பிரசவ நேரத்தில் அப்படி என்னதான் நடக்கிறது? பிரசவ நேரத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன? என்பதைக் கீழே காணலாம்.

  • தயாராகுங்கள்


மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் ஊட்ட வசதியாக முன்பக்கம் திறப்பு வைத்த உடை, நீண்ட கவுன் போன்ற மாற்று உடைகள், காலணிகள், குழந்தைக்குத் தேவையான துணிகள், ஈரம் உறிஞ்சும் துண்டுகள் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஏற்கனவே உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும். அதேபோல் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் தேவையான உடைகள், சோப்புகள், நாப்பிகள், துப்புரவுத் துணிகள் போன்றவற்றை தயாராக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்களோ, உங்களை கவனித்துக் கொள்பவரோ கடைக்குச் செல்ல முடியாத நிலையில் இவை கைகொடுக்கும்.

உங்கள் மருத்துவர், மருத்துவமனை, கணவர், நண்பர், அவசரத்திற்கு கூப்பிட்டால் ஓடிவரும் உறவினர்கள் போன்றோரின் செல் நம்பர்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவசர நேரத்தில் அவர்களை அழைப்பதற்கு உதவியாக இருக்கும். பிரசவத்தின்போது மருத்துவமனைக்குச் செல்லும் வாகன ஏற்பாட்டையும் தயார் செய்து கொள்ளுங்கள்.

  • பிரசவத்தின் இறுதி நேரம்


முதன்முறையாக குழந்தை பெறும்போது பிரசவ நேரம் பொதுவாக சுமார் பதிமூன்று முதல் பதினான்கு மணி நேரமும், ஏற்கனவே குழந்தை பெற்றிருந்தால் சுமார் எட்டு முதல் ஒன்பது மணி நேரமும் நீடிக்கும். கர்ப்பகாலம் முழுவதும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து பிரசவத்திற்குத் தயாராகும்.  கர்ப்பத்தின் கடைசிக் காலத்தில் இந்த சுருக்கங்கள் அடிக்கடி நிகழும். தொடக்கத்தில் மிகக்குறைந்த அளவிலான தசைச் சுருக்கங்களே காணப்படும். ஒவ்வொரு சுருக்கத்திற்கும் சிறிது இடைவெளி இருக்கும். படிப்படியாக சுருக்கங்கள் அதிகமாகி, அடிக்கடி வரத் தொடங்கும். இந்த நேரத்தில் ஏற்படும் வலி சற்று அதிகமாவே இருக்கும். இதுதான் பிரசவம் நிகழப்போகும் நேரம்.

பிரசவ வலி எப்போது எடுக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. அதிகமாக வலி எடுத்தால் சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளை குளிப்பாட்டுவர். இளஞ்சூடான நீரில் குளித்தால் ஆரம்பகால பிரசவ வேதனையை சற்று தணிக்கும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள். தாங்க முடியாத வலி ஏற்படும்போது சில குறிப்பிட்ட வலி நிவாரணிகளை மருத்துவர் தருவார். பேறு காலத்தில் ஏற்படும் வேதனையை நினைத்து கவலைப்படுவதால் வலி அதிகரிக்கும். எனவே, வலியைக் குறைக்க மூச்சுப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சுவாசிக்கும்போது மார்பகச்சுவர் விரிவடைந்து, உதரவிதானம் அதிகளவு கீழ் இறங்குவதுதான் முழுமையான சுவாசம். நீங்கள் சரியான வழியில் சுவாசித்தால் குழந்தைப்பேற்றின்போது மிகச்சுலபமாக குழந்தை வெளித்தள்ளப்படும்.

பிரசவ வலி துவங்கும்போதோ அல்லது பிரசவத்தின் முதற்கட்டத்திலேயோ, கருப்பைக் கழுத்துப் பகுதியிலிருந்து கோழையானது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதற்கு ‘பிரசவத்திற்கு முன்னான கோழைக்கசிவு’ என்று பெயர். இது பசைத்தன்மையுடன் இளஞ்சிவப்பு நிறமான சளியாக இருக்கும். பிரசவ வலிக்கு முன்னர் ஏற்படும் இந்தக் கசிவின்போது, சளியுடன் கலந்து சிறிது ரத்தமும் வெளியேறும். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். பிரசவ வலி ஆரம்பித்தவுடன் குழந்தை மிதந்து கொண்டிருக்கிற பனிக்குடம் உடைந்து விடும். இந்த பனிக்குட நீர் உங்களின் பிறப்புறுப்பு வழியாக தாரைதாரையாக வெளியேறும்.

மருத்துவர் உங்களுடைய நாடித்துடிப்பு, உடல் வெப்பம், ரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதிப்பார். உங்கள் அடிவயிற்றைத் தொட்டு குழந்தையின் கிடைநிலை, இதயத்துடிப்பு ஆகியவற்றையும் கண்டறிவார். பிரசவத்தில் மொத்தம் இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் கருப்பைக் கழுத்து படிப்படியாக விரிகிறது. அப்போது தசை சுருங்கி விரியும் நிலை தீவிரமாகும். வலி அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறை தசைச்சுருக்கம் வரும்போதும் கருவை உந்தி வெளியே தள்ள வேண்டும் என நினைப்பீர்கள். கருப்பைக் கழுத்து முற்றிலுமாகத் திறந்து குழந்தையின் கழுத்து வெளியே தெரியும் வரை முக்கக்கூடாது. கர்ப்பிணிகளுக்கு இந்த நேரத்தில் மன உளைச்சலும், அயர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

இரண்டாவது நிலை 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை கூட நீடிப்பதுண்டு. கருப்பை தசைச்சுருக்கம் அதிகமாகி, குழந்தையைப் பிடுங்கி வெளியே போட்டுவிடலாமா என்று எண்ணக்கூடிய நிலையை கர்ப்பிணிகளுக்கு ஏற்படுத்திவிடும். கருப்பை வாய் போதுமான அளவு அகலமாகத் திறந்தவுடன், தசைச்சுருக்கங்கள் தங்கள் இயல்பு நிலையை மாற்றிக்கொண்டு அதிவேகத்தோடு இயங்கும். ஒவ்வொரு சுருக்கத்திற்குப் பிறகும் கருப்பையின் தசைநார்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறுகத் தொடங்கும். இதனால் குழந்தை யோனிக்குள் தள்ளப்படுகிறது.

யோனித்திறப்பில் குழந்தையின் தலை அரைப்பாகம் தெரிய ஆரம்பித்த உடனேயே வாயால் காற்றை உள்ளிழுத்து வேகமாக, அதேசமயம் நேர்த்தியாக முக்க வேண்டும். இல்லையென்றால் தசைகளும், திசுக்களும் கிழிந்து போக வாய்ப்பு ஏற்படும். தலை வெளியே வந்ததும், அடுத்தடுத்த முக்குதல்கள் மூலம் எஞ்சியுள்ள உடற்பகுதிகள் சுலபமாக வெளியே வந்துவிடும். குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை அறுத்துவிட்டு குழந்தையை சுத்தம் செய்வர். பின்னர் எடை, உயரம் போன்றவற்றைக் கணக்கிடுவார்கள். குழந்தைநல மருத்துவர் வந்து குழந்தையை பரிசோதித்து குறிப்பு எழுதி வைப்பார்.

சில சமயங்களில் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள். எல்லா நேரங்களிலும் சிசேரியன் செய்ய வேண்டிய அவசியமில்லை. பனிக்குடத்தில் அதிக நீர் இருத்தல், கருப்பைக் கோளாறுகள், பிரசவத்தின்போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, குழந்தை தடம் மாறியிருத்தல், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படுதல்  போன்ற சிக்கலான நேரங்களில் மட்டுமே சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. மயக்கமருந்து  கொடுத்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்படும்.

நன்றி:pularimgz.blogspot.com

நைஜீரிய ஜனாதிபதியாக ஜொனதனே தொடர்வார்

நைஜீரிய அதிபர் உமர் யார் அடுவா

நைஜீரியாவின் ஜனாதிபதி உமர் யார் அடுவா சவுதி அரேபிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நாடு திரும்பிய நிலையிலும் அந்த நாட்டின் துணை அதிபர் குட்லக் ஜோனாதன் தொடர்ந்து நாட்டை வழி நடத்திச் செல்லுவார் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

யார் அடுவாவின் உடல் நிலை மிகவும் மேம்பட்டுள்ளதாக கூறிய ஜனாதிபதியின் பேச்சாளர், ஐனாதிபதிக்கு சிகிச்சைக்கு பின்னான ஒய்வு தொடர்ந்து தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இருதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு ஜீட்டாவில் உள்ள மருத்துவமனையில் மூன்றுமாத காலம் சிகிச்சை பெற்ற பிறகு இன்று அதிகாலை விமானம் மூலம் ஜனாதிபதி தலைநகர் அபூஜா திரும்பினார்.

யார் அடுவா அவர்களுக்கு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெளிவாகவில்லை என்று அபூஜாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

நன்றி:

http://www.worldservice.com/tamil

இரயில்வே பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்.

மத்திய இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, 2010-2011ஆம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட்டை இன்று (24-02-2010) தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* மேலும் 10 துரந்தோ ரயில்கள் அறிமுகம்
* பெண் பயணிகள் பாதுகாப்பு அதிகரிப்படும்.
* 93 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்.
* 21 ரயில் மார்க்கங்களின் தூரம் நீட்டிக்கப்படும்.
* விளையாட்டு வீரர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும்.
*  2011 நிதி ஆண்டில் புதிதாக 54 ரயில்கள் இயக்கப்படும்.

*  வரும் நிதி ஆண்டிற்குள் மேலும் 117 ரயில்கள் இயக்கப்படும்.
* ஒரே ஆண்டில் 1000 கி.மீ., இரயில் பாதைகள் அமைக்கப்படும்.
* 16 வழித்தடங்களில் புதிதாக 16 சுற்றுலா ரயில்கள் இயக்கப்படும்.
* மும்பைக்கு புதிதாக 101 புறநகர் ரயில் நிலையங்கள் இயக்கப்படும்.
* காமன்வெல்த் 2010 போட்டிகளுக்காக சிறப்பு ரயில்கள் இ‌யக்கப்படும்.
* மேலும் பல மேம்படுத்தப்‌பட்ட சரக்கு காப்பகங்கள் உருவாக்கப்படும்.
* ஏ.சி., வகுப்பு சேவை கட்டணம் ரூ. 40ல் இருந்து ரூ. 20 ஆக குறைப்பு.
* ஐ.ஐ.டி., காரக்பூரில் ரயில்வே துறை குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* ரயில்வே பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுவர்.
* சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை நவீனமயமாக்கப்படும்.
* பயணிகள் அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்த 1300 கோடி ஒதுக்கப்படுகிறது.
* மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் ரயில் டிக்கட் கவுன்டர் அமைக்கப்படும்.
* செகந்தரபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் விளையாட்டு அகடமிகள் தொடங்கப்படுகின்றன.
* ரயில் பெட்டிகள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பரிசோதனை நிலையம் பெங்களூருவில் அமைக்கப்படும்.
* உணவு தானியம் மற்றும் மண்ணெண்ணெய் ஏற்றி செல்லும் சரக்கு ரயில்களுக்கு சரக்கு கட்டணம் குறைப்பு.
* ரயில்வே பெண் ஊழியர்கள் வசதிக்காக அவர்கள் குழந்தைகளுக்கென பாதுகாப்புமையங்கள் அமைக்கப்படும்.
* ரயில்வே துறைக்காக குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அம்பாலா, திருவனந்தபுரம், அமேதி, நாசிக் உள்ளிட்ட 6 இடங்களில் தொடங்கப்படும்.
* ரவீந்தரநாத் ‌தாகூரின் 150வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பாரத் தீர்தா என்ற பெயரில் நாட்டின் அனைதது முக்கிய யாத்திரை இடங்களுக்கும் ரயில் விடப்படும்.
* அடுத்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகத்துடன் இணைந்து வீடு கட்டித்தரப்படும்.
* மொபைல், இ. டிக்கெட் சேவையை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகிய இடங்களில் பெற ஏற்பாடு செய்யப்படும்.

ஓவியர் M.F.உசேனுக்கு கத்தார் நாட்டுக் குடியுரிமை இந்தியாவுக்கு அவமானம்!?

Imageஓவியர் எம்.எப். உசேனுக்கு கத்தார் நாட்டுக் குடியுரிமை சுதந்திரமாக நடமாடக்கூட அனுமதிக்காத இந்தியாவுக்கு அவமானம் : இந்தியாவின் முன்னணி ஓவியரான எம்.எப்.உசேனுக்கு கத்தார் நாடு குடியுரிமை வழங்கி கவுரவித்துள்ளது.

கத்தார் நாடு குடியுரிமை  வழங்கி இருப்பது குறித்து துபாயில் வசித்து  வரும் உசேன் தன் கைப்பட எழுதிய அறிவிப்பை சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அனுப்பி இருக்கிறார்.

இரட்டைக் குடியுரிமையை இந்தியா ஏற்றுக் கொள்ளாது. ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியக் குடிமகன் என்ற தகுதியை மட்டுமே இந்தியர் ஒருவர் பெறமுடியும். எனவே உசேன் பிறந்து, வளர்ந்து கொண்டாடப்பட்ட இந்திய மண்ணின் குடி உரிமையை அவர் துறக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கத்தார் நாட்டின் குடியுரிமை கோரி அந்நாட்டு அரசாங்கத்திடம் உசேன் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய ஓவியங்களின் சிறப்பை அறிந்த கத்தார் நாட்டு அரசு அவருக்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கி கவுரவிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

இந்து கடவுள்களை ஓவியம் மூலம் விமர்சித்ததால் அவருக்கு எதிராக இந்தியாவில் உள்ள சங்பரிவார் கும்பல் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கியது. இதனால் அவருக்கு எதிராக பல்வேறு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. அவர் வரைந்த ஓவியங்கள் கூட காவிக் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டன. அவருடைய ஓவியக் கண்காட்சியையும் பல்வேறு இடங்களில் சங்பரிவாரக் கும்பல் சீர்குலைத்தது.Image

இந்துத்துவா கும்பலின் தொடர் தொல்லைகளால் அவர் 2006 ஆம் ஆண்டு முதல் துபாயிலும், லண்டனிலும் மாறிமாறி வசித்து வருகிறார். இந்தியாவில் பிறந்த இந்தியக் குடிமகனான அவர், இந்தியாவைத் தவிர வேறு எந்த  உலக நாடுகளிலும் அவரால்  சுதந்திரமாக வலம் வரமுடிகிறது. ஆனால் இங்குள்ள இந்துத்துவா கும்பல் அவருடைய உயிருக்கு குறிவைத்து அலைவதால் அவரால், இந்தியாவில் நடமாடக் கூட முடியவில்லை.  அவருக்கு எதிராக இந்திய நீதிமன்றங்களில் 900-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் உசேனை, இந்தியாவுக்கு  மீண்டும் திரும்ப வரவழைத்து காவிக்கும்பலிடமிருந்து காப்பாற்றி அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க  இந்திய அரசின் நிர்வாகத்திற்கு ஆண்மை இல்லை.  இந்தியாவின் பாஜக, காங்கிரசு கூட்டணி ஆட்சிகள் இரண்டுமே உசேனின் கருத்துச் சுதந்திரத்தைக்  காப்பாற்ற  எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கவில்ல்லை என்பதுதான் உண்மை.

உசேனுக்கு எதிரான  சங்பரிவாரின் தொல்லைகள் 1996 முதல்  தொடங்கிவிட்டன. 1970-களில் அவர் வரைந்த ஓவியங்களை இந்தி மொழி பத்திரிகை 1996-ல் வெளியிட்டது. இந்த ஓவியம் இந்துக் கடவுளை அவமதிப்பதாக அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஓவியத்தின் மூலம் இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாக இந்துத்துவாவாதிகள் எதிர்க் கூச்சலிட்டனர். அன்றுமுதல் காவிக்கூட்டம்  உசேனை தொடர்ந்து துரத்தி வருகிறது. இந்தியாவின் கலாசார மதிப்புகளை தூக்கிப் பிடிப்பதில் யாருக்கும் குறையில்லாத எம்.எப்.உசேனுக்கு இந்தியாவில் நிம்மதியாக வாழக்கூட முடியாத நிலை. இதனால்தான் வேறுவழி தெரியாத அவர் வெளிநாட்டில் அடைக்கலம் புகுந்தார். மதசார்பற்ற இந்தியக் குடியரசு  தேசம் அவருடைய கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும் அவருடைய  உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும்  எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதுதான் இந்த தேசத்தின் படைப்புச் சுதந்திரமும், படைப்பாளியின் பாதுகாப்பு முறையும்?   மத ரீதியாக எழுந்துள்ள உசேன் விவகாரத்தில் மதசார்பற்ற இந்திய தேசத்தின் அணுகுமுறை வெட்கக் கேடான ஒன்றே என்பதில் எவ்வித ஒளிவுமறைவுமில்லை.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம்  தாமதமாக தலையிட்டும் கூட  எம்.எப்.உசேனின் கருத்துச் சுதந்திரம் காப்பாற்றப்படுவதில் எவ்வித  முன்னேற்றமும் இல்லை.

Imageகோயில்களிலும், கஜூரோ சிற்பங்களிலும் வடிக்கப்பட்டுள்ள  ஆபாசமான பாலியல் ரீதியான ஓவியங்கள் வணங்கப்படும் நிலையில், இந்து  கடவுளை உசேனின்  ஓவியங்கள் ஆபாசமாக சித்தரிப்பதாக காவிக்கும்பல்  கூக்குரலிட்டு வருகிறது. இதனால் மதசார்பற்ற நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் அவரால் சுதந்திரமாக தமது கருத்துகளை வெளியிடவும், நடமாட முடியாத நிலையும் உள்ளது.

Imageஇந்நிலையில் 95 வயதான உசேன், துபாயில் தங்கி ஓவியங்கள் வரைந்து வருகிறார். தற்போது வியாபார நோக்கில் அவர் ஓவியங்கள் வரையாமல், இந்திய மற்றும் அரேபிய கலாசாரத் தொடர்புகள் குறித்த ஓவியங்களை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளார். உசேனின்   சிந்தனை வளமிக்க ஓவியம் பற்றி அறிந்த  அய்க்கிய அமீரகத்தின் கத்தார் நாட்டு முதல் பெண்மணியும், அதிபரின் மனைவியுமான ஷேக் மோஷா,  உசேனினின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த ஓவியங்களுக்கு மதிப்பளிக்க முன்வந்துள்ளார். இரு நாட்டு கலாசார உறவுகள் தொடர்பாக உசேனால்  வரையப்படும் ஓவியங்கள்,  தோஹா நகரில் உள்ள தனி அருங்காட்சியகத்தில் வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனை அடுத்து கத்தார் தேசம், உசேனுக்கு குடியுரிமை வழங்கி கவுரவிப்பதாகவும் அறிவித்துள்ளது. அந்நாடு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது என்பது மிகவும் அபூர்வம். ஆனால் எம்.எப்.உசேனுக்கு அந்த  உயரிய மரியாதை வழங்க அத்தேசம் முன்வந்துள்ளது.  அதேவேளை ஒரு மிகச்சிறந்த சிந்தனை வளம் கொண்ட  ஓர்  ஓவியரை இந்த தேசத்தில் சுதந்திரமாகக் கூட நடமாட முடியாமல்  செய்திருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் வருத்தம் தரக்கூடிய ஒன்றே. இந்த நாள் இந்தியாவின் துயரம் நிறைந்த நாளே.

நன்றி: www.adhikaalai.com

4 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு! ஆய்வறிக்கை

புதுதில்லி: நடப்பு நிதி ஆண்டில் சுமார் 4.34 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2009-10) ரூ. 70 ஆயிரம் கோடி நிதி வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம்  4.34  கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் 4.51 கோடி பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2009-10-ம் ஆண்டு பட்ஜெட்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ. 39,100 கோடி ஒதுக்கப்பட்டு டிசம்பர் மாதம் வரை ரூ. 24,758.50 கோடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 182.88 கோடி வேலை நாள்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் 29 சதவீத தாழ்த்தப்பட்ட பிரிவினரும் 22 சதவீத பழங்குடியின மக்களும் பலனடைந்துள்ளனர். 50 சதவீத பெண்கள் இத்திட்டம் மூலம்  பயனடைந்துள்ளனர்.

நன்றி:இந்நேரம்.காம்

டீசல், பெட்ரோல் விலை அதிகரிப்பால் பாதிப்பு : லாரி, ஆட்டோ, டாக்சி கட்டணங்கள் கிடுகிடு உயர்வு

Front page news and headlines today
சென்னை : பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பல மாநிலங்களில், லாரி, பஸ், ஆட்டோ, டாக்சி கட்டணங்கள், “கிடுகிடு’வென உயர்ந்துள்ளன. “சரக்கு போக்குவரத்துக் கான கட்டணத்தை உயர்த்துவது தவிர வேறு வழியில்லை’ என, தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம் கூறியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி, பெட் ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்குமாறு, மத்திய நிதியமைச் சர் பிரணாப் முகர்ஜியி டம் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை அறிவித்தார். உடனடியாக விலை உயர்வும் அமலுக்கு வந்தது. அதன் பாதிப்பு நேற்றே துவங்கிவிட்டது. விலை உயர்வை ஈடுகட்ட, சரக்கு போக்குவரத்துக்கான கட்டணத்தை உயர்த்தப் போவதாக, தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன் பொருளாளர் சென்னகேசவன் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த லாரிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்க, ஒரு கி.மீ.,க்கு 2.30 ரூபாய் சுங்க வரியாகச் செலுத்தப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன், டயர், டியூப் உட்பட உதிரிபாகங்களின் விலை 20 சதவீதம் அதிகரித்தது.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில், கனரக வாக னங்களுக்கான உற்பத்தி வரி 8லிருந்து 10 சதவீதமாகவும், பெட்ரோல், டீசல் விலை 2.75 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், நசிந்த நிலையில் உள்ள லாரி தொழிலில், மேலும் பாதிப்பு ஏற்படும். இது, லாரி தொழிலில் மட்டுமின்றி, அதை சார்ந் துள்ள பிற தொழில்களுக் கும் பாதிப்பு ஏற்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலை இழக்க வேண்டி வரும். இந்த விலை உயர்வை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில், சரக்கு கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு சென்னகேசவன் கூறினார்.

மதுரை லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சாத்தையா கூறியதாவது: வாகனங்களில் உபயோகப்படுத்தப்படும் பேட்டரி, உதிரி பாகங்களின் விலை 8 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், டயர் விலையும் உயரும். வேறு வழியின்றி, மார்ச் முதல் லாரி வாடகை கட்டணம் உயர்த்தப் படவுள்ளது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன், சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 5,856 ரூபாயாக இருந்தது. தற்போது, 3,744 ரூபாயாகக் குறைந்துள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம். இந்த விலை உயர்வு, ஏழை, நடுத்தர மக்களை நேரடியாக பாதிப்படையச் செய்யும். இவ்வாறு சாத்தையா கூறினார்.

லாரி வாடகை உயர்வை தொடர்ந்து, ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலையை உயர்த்த, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். டீசல் விலை உயர்வால், மாநில அரசு போக்கு வரத்துக் கழகங்கள், தனி யார் பஸ் உரிமையாளர் களும் மிகுந்த நஷ்டத்தை அடைய வேண்டியுள்ளது. எனவே, இவர்கள் நஷ்டத்தைக் குறைக்க, பஸ் கட்டணத்தை உயர்த்த, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கேரளாவில் ஸ்டிரைக்:கேரளாவிலும், டீசல் விலை உயர்வு காரணமாக, வரும் 2ம் தேதி தனியார் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் வேலை நிறுத்தம் அறிவித் துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகளையும், சாமானிய மக்களையும் கடுமையாக பாதிப்பதால், அவற்றுக் கான விலை உயர்வை வாபஸ் பெறுமாறு தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி:www.dinamalar.com

சவூதியில் மன்மோகன் சிங்கிற்கு சிறப்பான வரவேற்பு!

ரியாத்: இந்திய பிரதமர்  மன்மோகன் சிங்  மூன்று நாள் பயணமாக இன்று சவூதி அரேபியா தலைநகர் ரியாத் சென்றடைந்தார். அவரை சவுதி பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஜிஸ் ரியாத் விமான நிலையத்தில் வரவேற்றார்.  கடந்த 28 ஆண்டுகளில் சவூதி அரேபியா செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1982ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சவூதி சென்றிருந்தார் அவருக்கு பின் எவரும் செல்லவில்லை.

பிரதமரின் இந்த பயணத்தின்போது  தீவிரவாதிகள் உள்ளிட்ட குற்றவாளிளை ஒப்படைப்பது தொடர்பான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட 11 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகவுள்ளது. பிரதமருடன் முகேஷ் அம்பானி, சசி ரூயா, ஆசிம் பிரேம்ஜி, டாடா தலைமை நிர்வாக அதிகாரி ராமதுரை உள்ளிட்ட தொழிலதிபர் குழுவும் செல்கிறது

நாளை மறுநாள் சவூதி அரேபிய ஷூரா கவுன்சிலில் உரை நிகழ்த்துகிறார் மன்மோகன் சிங்.  தனது சவூதி பயணத்தின்போது மன்னர் அப்துல்லாவை சந்திக்கிறார் பிரதமர். அப்போது இந்திய சவுதி இருதரப்பு உறவுகள் குறித்தும் பாகிஸ்தான், தலிபான் பிரச்சினை, பாலஸ்தீன பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் அவர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்துவார்

மேலும் பிரதமர் வெளிநாடு வாழ் இந்திய சமுதாயத்தவர்களையும் சந்தித்து பேச இருக்கிறார், மேலும் சவூதி இந்திய இருதரப்பு வர்த்தக உறவுகள் கடந்த 2008-09 ஆம் ஆண்டுகளில் 25 மில்லியன் அமெரிக்க டாலார்களுக்கு மேல் இருந்த்து என்பது குறிப்பிடதக்கது

தனது பயணம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவூதி அரேபியப் பயணம் சிறப்பான முக்கியத்துவம் கொண்டதாகும். இரு நாடுகளுக்கும் இடையே, பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி, மனித வளம், அறிவு சார் தொழில் துறை ஆகியவற்றில் புதிய வளர்ச்சி காண இந்தப் பயணம்  மிகவும் உதவும் என்றார்.

நன்றி:இந்நேரம்.காம்

நிலநடுக்கத்தால் 20 லட்சம் பேர் பாதிப்பு! சிறை கைதிகள் தப்பி ஓட்டம்

சான்டியாகோ: சிலி தலைநகரில் தற்போதைய நிலவரப்படி சிலியில் உள்ள 15 மாநிலங்களில் ஆறு மாநிலங்கள் இந்த பூகம்பத்தில்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 20 லட்சம் பேர்  பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என, சிலி அதிபர் மிச்சேல் பேச்லெட் தெரிவித்துள்ளார். கன்செப்ஷன் நகரில் உள்ள 15 அடுக்கு கட்டடம், பூகம்பத்தால் தரைமட்டமானது. இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அளிப்பதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு, உடனடியாக 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகளை அளிப்பதாக தெரிவித்துள்ளது.

பசிபிக் கடலில் ஏற்பட்ட சுனாமியால் சிலி மட்டுமல்லாது ஜப்பான் ரஷ்யா நாடுகளும், அமெரிக்காவின் ஹவாய் தீவும் பாதிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா , பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். நியூசிலாந்தின் சதம் என்ற தீவை சுனாமி அலைகள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டன. ஜப்பானின் ஹொகைடோ பகுதியில் உள்ள ஒகினாவா கடற்கரை பகுதியில்  சுனாமி காரணமாக கடலில் 10 அடி உயரத்துக்கு அலைகள் சீறி எழுந்தன. இதனால், இந்த கடற்கரை அருகே வசித்த மூன்று லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சில பகுதிகளில் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

மினாமிடோரி என்ற சிறிய தீவு தான் சுனாமியால் நேரடி தாக்குதலுக்குள்ளானது. 30 செ.மீ., அளவுக்கு இந்த தீவில் சுனாமி பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் குரில் தீவு, சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மக்கள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளதால் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. மேலும் சான்டியாகோ நகரில் உள்ள மத்திய சிறை  பூகம்பத்தால் சேதமடைந்ததால் சிறையில் இருந்த 269 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி 28 கைதிகளை மீண்டும் கைது செய்துள்ளனர்

நன்றி:இந்நேரம்.காம்

கோவில் சுரங்க அறையில் விபசாரம் நடத்திய சாமியார் கைது

டெல்லி: சத்ய சாய்பாபாவின் சீடர் என்று தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ்முரத் திவேதி (39). இவர் கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோவில் கட்டி உள்ளார். அக்கோவிலில் தினமும் பஜனைப் பாடல்களை பாடியும் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதும் வழக்கம். டெல்லியில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர் மேலும் இவருக்கு டெல்லியில் உள்ள அரசியல்வாதிகளிடமும் பழக்கம் ஏற்பட்டதால் அவர் டெல்லியில் புகழ் மிக்க சாமியாராக வலம் வந்தார்.

இந்நிலையில் சாமியார் சிவ்முரத் திவேதி இந்து மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு விபசாரம் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் சிவ்முரத் திவேதி யையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர். போலீஸ் விசாரணையில் கான்பூர் சாய்பாபா கோவிலில் சுரங்க அறைகள் இருப்பதும் அங்கு விபசாரம் நடப்பதும் உறுதியாக தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் சிவ்முரத் திவேதியின் கோவிலில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு விபசாரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.

இதனை தொடர்ந்து உடனடியாக போலி சாமியார் சிவ்முரத் திவேதி கைது செய்யப்பட்டார். அவருடன் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 2 விமானப்பணிப் பெண்கள், கல்லூரி மாணவிகள் 2 பேர் பிடிபட்டனர்.  இந்தி படங்களில் நடித்து வரும் துணை நடிகை ஒரு வரும் இந்த வேட்டையில் சிக்கினார். மேலும் டெல்லியில் உள்ள பணக்காரர்களின் வீடுகளுக்கு செல்ல தயாராக இருந்த இளம் பெண்களும் போலீசாரிடம் பிடிபட்டனர்.

போலி சாமியாரின் பாபா கோவில் முழுக்க போலீசார் சோதனை நடத்தி னார்கள். அப்போது 5 டைரிகள் கிடைத்தன. அந்த டைரிகளில் இந்தியா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்களின் முகவரிகள், போன் நம்பர்கள் இருந்தன.  அவர்கள் அனைவரையும் போலி சாமியார் சிவ்முரத் திவேதி விபசாரத்தில் ஈடு படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் போலி சாமியாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி:இந்நேரம்.காம்

சாமியார் நித்தியானந்தமும், நடிகை ரஞ்சிதாவும் உல்லாசமாக இருக்கும் காட்சி: தமிழகம் முழுவதும் பரபரப்பு

பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் ஒரு அறையில் உள்ளனர். அது ஆசிரமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ர
ஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற நித்தியானந்த சாமியார், திருவண்ணாமலை, பெங்களூர் போன்ற இடங்களில் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் இவரது ஆசிரமத்துக்கு சென்று வரும் பக்தர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:இந்நேரம்.காம்

சாமியார் தொழிலை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும்


புழுத்துக் கிளம்பும் சாமியார்கள்!

கடந்த 10 ஆண்டு காலமாக விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு 2000 கோடி ரூபாய் கொள்ளையடித்த சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்ட சேதி ஏடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது; ஊடகங்களுக்கும் பெரும் தீனியாகவும் கிடைத்துவிட்டது.

இவ்வளவுக்கும் இந்த ஆசாமியின் பூர்வாங்கத்தை அறிந்தால், எவ்வளவு அடிமட்டத்து ஆசாமியும் சாமியார் வேடம் போட்டால் மிகப் பெரிய ஆளாக பெருந் தனவந்தராக, அரசியலில் செல்வாக்கு மிக்கவராக, பெரிய பெரிய மனிதர்களின் தோள்களில் கைபோட்டுப் பேசும் கூட்டாளியாக இமய மலைக்கு மேலே உயரமாக உட்காரலாம் என்பது அறியப்பட்டு விட்டது.

1988 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் என்ற இடத்தில் இருந்து பிழைப்புத் தேடி டெல்லி வந்து, உணவு விடுதியில் எடுபிடியாக, இரவுக் காவலாளியாக இருந்தவர்தான்; இரண்டுமுறை திருட்டு வழக்கிலும், விபச்சார வழக்கிலும் சிக்கி சிறைத் தண்டனையையும் அனுபவித்த இந்தக் கில்லாடி கடைசியில் தொடங்கியதுதான் இந்த சாமியார் தொழில்.

இது ஒன்றுதான் முதலில்லாத தொழில் மக்களை பக்தியின் பெயரால் மதி மயங்க வைத்து, தாம் விரிக்கும் வலையில் விழ வைக்கும் தொழில். அதுவும் பகவான் சாய்பாபாவின் சீடன் என்று சொல்லிக் கொண்டால் கேட்கவும் வேண்டுமா? அடுத்து கோயில் கட்டவேண்டியதுதானே. கோயில் கட்டுவது என்றால் கண்களை மூடிக்கொண்டு பணத்தைக் கொட்டுவார்களே! ஷிவ் முராத் திவிவேதி என்கிறபோது இவர் ஒரு பார்ப்பனர் என்பதும் வெளிச்சமாகிறது. தந்திரங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?

இவ்வளவு வேடம் போட்டால் பக்த கோடிகள் பெருகிவிடுவார்களே! அதன்பின் சாமியார் செல்வாக்கு கூடுமே! நமது மந்திரிமார்களுக்கு ஆஸ்தான ஜோதிடர், ஆஸ்தான சாமியார்கள் உண்டல்லவா! ஒரு சந்திரா சாமியார் இந்திய அரசியலில் எவ்வளவு பெரிய வேலைகளையெல்லாம் செய்தார்? ஆயுத வியாபாரியாக எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார்!

இவற்றையெல்லாம் கண்ணுக்கெதிரே பார்க்கிற ஆசாமிகள், சபாஷ், இதுதான் சரியான தொழில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்று வாயில் எச்சில் ஊறுகிறது.

விமானப் பணிப்பெண்களை உள்பட விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி, ஒரு விபச்சார சாம்ராஜ்யத்தையே அல்லவா நடத்தியிருக்கிறான்?

இவன் பின்னணியில் பிரபல அரசியல்வாதிகள் எல்லாம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வருவார்களா அல்லது அந்த செல்வாக்குப் பெற்ற அரசியல்வாதிகளைப் பயன்படுத்தி இந்தக் குற்றங்களிலிருந்து இந்த சாமியார் வெளியில் வருவாரா என்பதுதான் கேள்விக்குறி.

திருவண்ணாமலைக்கு பிச்சைப் பார்ப்பானாக ஓடி வந்த வெங்கட்ரமணன் இந்த நாட்டில் ரமண ரிஷியாகி, கோடிக்கணக்கில் சேர்த்த சொத்துகளை சகோதரனுக்கு எழுதி வைக்கவில்லையா?

சந்நியாசிக்கு வாரிசு ஏது என்று நீதி மன்றம் கேட்ட கேள்விக்கு, நான் சந்நியாசம் வாங்க வில்லையே! என்று அந்தர்பல்டி அடிக்கவில்லையா?

லோகக் குரு என்று சொல்லப்பட்ட காஞ்சிபுரத்து ஆசாமி ஒருவர் கொலை வழக்கில் சிக்கவில்லையா? பெண்கள் விஷயத்தில் ஆகட்டும் எவ்வளவு அசிங்கம்!

ஆனாலும் அந்த ஆசாமி பெரிய மனுஷராக பவள விழா கொண்டாடிக் கொண்டு வீதி உலா வந்து கொண்டுதானே இருக்கிறார்?

சாமியார் தொழிலை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு சாமியாரையும் விசாரணைக்கு உட்படுத்தி குற்றங்களின் அடிப்படையில் கடும் தண்டனையைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் ரமணரிஷிகளும், ஜெயேந்திரர்களும், ஷிவ் முராத் திவிவேதிகளும் நாளும் புழுத்துக் கொண்டு தானிருப்பார்கள், எச்சரிக்கை!

நன்றி:thamizhoviya.blogspot.com

நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலைகள் : நித்யானந்தா தலைமறைவு!

Swine Flu

சென்னை: பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் நித்யானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் நடத்தி வருபவர் பரமஹம்ச நித்யானந்தா (31). தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை உள்பட பல நகரங்களிலும் இவரது ஆசிரமங்கள் உள்ளன. உலகின் பல நகரங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இந்நிலையில், பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படுக்கை அறை வீடியோ காட்சிகள் நேற்று வெளியாயின. இது பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் நேற்று இரவு முற்றுகையிட்டனர். ஆசிரமத்துக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பதற்றம் அதிகரித்ததால், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவபாபு கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் தங்கியிருந்த 45 ஊழியர்கள் நேற்று நள்ளிரவு நித்யானந்தாவின் பேனர்கள், போஸ்டர்களை ஆவேசமாக கிழித்து எறிந்துவிட்டு வெளியேறினர். ஆசிரமத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊரான தி.மலையில் ஆசிரமம் அமைக்க நித்யானந்தா ஆசைப்பட்டார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் உள்ள நிருதிலிங்கம் அருகே 3 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர் தங்க சொகுசு அறையுடன் கட்டிடம் கட்டப்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும்போது அங்குதான் தங்குவார். கடந்த ஜனவரி 8&ம் தேதி பிறந்தநாள் விழாவை இங்கு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மலை மாவட்ட இந்து முன்னணி தலைவர் டி.எஸ்.சங்கர் கூறுகையில், ‘‘ஆடம்பர வாழ்க்கை வாழும் நித்யானந்தர் கிரிவலப்பாதையில் ஆசிரமம் கட்டக் கூடாது என்று ஏற்கனவே கூறினோம். அவரது சுயரூபம் தற்போது அம்பலமாகியுள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். தி.மலைக்குள் அவரை இனி விடமாட்டோம்’’ என்றார். புதுச்சேரி வில்லியனூர் ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்தை பொதுமக்கள் சூறையாடினர். ஜன்னல்கள், விளக்குகள், மின்விசிறிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாமியார் பேனரை தீவைத்து கொளுத்தி செருப்பால் அடித்தனர். பதற்றம் அதிகரித்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இந்து முன்னணி அமைப்பினர் மாநில பொதுச்செயலாளர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நித்யானந்தாவை கைது செய்து சொத்துக்களை முடக்க வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பினர்.
கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் பேனர்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கடலூர் மோகினிபாலம் பகுதியில் ஆசிரமத்தின் பெயர்பலகையை பொதுமக்கள் தார்பூசி அழித்தனர். நெல்லை டவுனில் உள்ள நித்யானந்தர் தியான மையத்தில் நித்யானந்தா படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர், போஸ்டர்களை நிர்வாகிகளே கிழித்து எறிந்தனர். இந்த மையத்தில் சில மாதம் முன்பு அவர் ஆன்மீக உரையாற்றியுள்ளார். சீர்காழி சட்டநாதபுரம் மனோன்மணியம் நகரில் நித்யானந்த பீடத்தை அவர் சமீபத்தில் திறந்துவைத்தார். இங்கு தினமும் பஜனை, தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. டிவியில் ஆபாச காட்சிகளை பார்த்த மக்கள் ஆவேசமடைந்து நித்யானந்தா படங்கள், பேனர்களை நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர்.
நன்றி:www.dinakaran.com

விபசார நடிகைகள் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? தமிழ்நாடு பத்திரிகைகள் சரமாரி கேள்விகள்

விபசார நடிகைகள் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என தமிழ்நாடு பத்திரிகைகள் சரமாரி கேள்விகள் எழுப்பியுள்ளன.
சில நாட்களுக்கு நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பத்திரிகைகளில் வெளியான செய்தியை கண்டித்து நடந்த ‌தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய நடிகர், நடிகைகள் பலரும் ஆபாசமாக பேசி பத்திரிகையாளர்களை விமர்சித்தனர்.
இந்தக் கூட்டத்தில், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கிப் பேசிய தகாத வார்த்தைகளை அச்சில் கூட ஏற்ற முடியாது.
பத்திரிகையாளர்களை வெட்டியிருப்பேன் என்று விஜயகுமார் கொந்தளித்தார். நடிகர் – நடிகைகளின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தற்போது தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் ‌தலைமையகம்.
லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் நித்தியானந்தா, அந்த நடிகையிடம் உல்லாசமாக படுக்கையை பகிர்ந்து கொள்வது போலவும், தண்ணீர் கொடுப்பது போன்றும், மாத்திரை கொடுப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
நித்யானந்தாருடன் கொஞ்சும் நடிகை ரஞ்சிதா, மெய் மறந்து இருக்கும் வீடியோ காட்சிகள், தற்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபிக்கும் காட்சிகள், ஆபாசத்தின் உச்ச கட்டம். இந்த சல்லாபம், ஒரு நாள் மட்டும் நடந்தவை அல்ல; பல நாள் நடந்தவை; இப்போது சந்திக்கு வந்துவிட்டது.
நடிகர் சூர்யா, சாமியாருடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுப்பாரா? எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்பி, கூட்டம் நடத்தி, கண்டன தீர்மானம் போடும் நடிகர் சங்கம், இந்த சர்ச்சைக்குரிய நடிகை மீதும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமா?
இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, தமிழ்த் திரையுலம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். குற்றத்தை சுட்டிக் காட்டுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு முன், தங்கள் மீது விபசார வழக்குகள் பாயாமல் தடுத்துக் கொண்டால், புண்ணியம்.
சினிமாக்காரர்கள் சொன்னதுபோல, “அடுத்து வரும் தலைமுறையும் அவர்களது குடும்பத்தினரும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்’ என்பதை ரஞ்சிதா போன்ற நடிகைகளும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிய தென்னிந்திய நடிகர் சங்கமும், இவர்களுக்காக சென்னையில் 90 ஏக்கர் வழங்கிய தமிழக அரசும் சிந்திக்கட்டும் என்று தமிழ்நாடு பத்திரிக்கைகள் சரமாரி கேள்விகள் எழுப்பியுள்ளன.
நன்றி:இந்நேரம்.காம்

மு.க.ஸ்டாலினுக்கு ஜெயலலிதா அனுப்பிய நன்றி கடிதம்

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்ட தொடக்க விழா நடந்தது. விழாவில் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

தமிழக ஊரக வளர்ச்சித்துறை பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதை எனது வாழ்வில் கிடைக்க பெறாத பெரும் பேறாக கருதுகிறேன்.

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று முதல் அமைச்சர் ஆணையிட்டார். அதனை நிறைவேற்றும் பொறுப்பையும் எங்களுக்கு வழங்கினார்.

அந்த தொடக்க விழாவை திருச்சியில் நடத்த வேண்டும் என்று கூறினார். அது மட்டுமல்ல இன்னொரு செய்தியையும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். தொடக்க விழாவில் யார் யாரை அழைக்க வேண்டும் என்றும் சொன்னார்.

சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்று கூறியதால் எதிர்கட்சிகள் தொடங்கி புரட்சி பாரதம் கட்சி வரை அத்தனை தலைவர்களுக்கும் கடிதம் எழுதி அழைப்பிதழ் தயாரிக்க வேண்டும் என்பதால் விழாவில் கலந்து கொள்வது பற்றி தங்களது விருப்பத்தை தெரிவிக்கும்படி நானே கடிதம் எழுதினேன்.

இங்கு வந்திருக்கின்ற தலைவர்கள் அனைவரும் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்து பதில் அனுப்பியவுடன் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கும் கடிதம் எழுதினேன்.

அதற்கு அவரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. மிக்க மகிழ்ச்சி. சில அலுவலக பணி காரணமாக நான் பங்கேற்க இயலாது என அவர் பதில் அனுப்பி இருந்தார். எதிர்கட்சி தலைவர் உள்பட அத்தனை பேருக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நன்றி:nakkheeran.in

ரஞ்சிதா தலைமறைவு:மணிரத்னம் கவலை

நடிகை ரஞ்சிதாவுடன் தான் இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து சாமியார் நித்யானந்தா தலைமறைவானார்.

இதையடுத்து தற்போது நடிகை ரஞ்சிதாவும் தலைமறைவாகியுள்ளார்.

ரஞ்சிதா 1992ல் பாரதி ராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, சத்யராஜுடன் அமைதிப்படை, அர்ஜுனுடன் கர்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.

மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார்.

கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியாயின.

இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக்கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்றார்.

தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் ரஞ்சிதா வசித்து வந்தார். சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதன் மூலம் மாதம் ரூ. 30 ஆயிரம் வரை வாடகை வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன.

வீடியோ படங்கள் பற்றி கருத்து கேட்க அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. வீடும் பூட்டி கிடக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2ஆம் தேதி இச்செய்தி வெளியானதில் இருந்து நித்தியானந்தாவும் தலைமறைவாகிவிட்டார்.

சுவாமி நித்யானந்தாவுடன் படுக்கையறையில் ரஞ்சிதா இருப்பது போல் வெளியான வீடியோ படக்காட்சிகளால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரஞ்சிதா மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்று தெரியவில்லை. ஏற்கனவே விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைதான போது நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் மணிரத்னம் ராவணா பட விசயமாக ரஞ்சிதாவை தொடர்பு கொள்ளமுடியாததால் டென்ஷனில் இருக்கிறார்.  இப்படி ஆரம்பத்ததில் இருந்தே சோதனை சோதனை மேல் அவருக்கு.  அதனால்தான் அப்செட்டாகி உள்ளார்.

நன்றி:nakkheeran.in

கதவை மூடு…காமம் வரட்டும்.

Quantcast

நித்யா நந்தா…இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர்.

விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோவில் மாஸ்க் செய்யப்பட்ட முகம் யாரென பட்டிமன்றம் நடத்த பயன்பட்டவர்.இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இந்த காவி மனிதர்களின் அக்கிரமங்களை..

இது ஒரு புறம் இருக்க தீர்த்தம் என்ற பெயரில் போதைக்கு அடிமையாக்கும் அடுத்த பகவன் அந்தப்புரம்..

சாமியார் போர்வையில் எவ்வளவு சல்லாபங்கள்..காவி போர்வையில் எவ்வளவு களிப்பு..என கிளர்ச்சியுறம் இம்மனிதர்களை கடவுளாய் நம்பும் கூட்டம் மாறவா போகிறது..

அடுத்த காவியை தேடும்..அவனை கடவுலாக்கும்..களிப்புறும்..பின் அவன் லீலை தெரியும் போது பக்தகோடி ஆத்திர மடையும்..கல்வீசும்..பேனர் கிழிக்கும்.

இந்த ஆனந்தாக்கள் வரிசையில் எத்தைனையோ ஆனந்தாக்ளும்,பகவான்களும் படைஎடுத்திருக்கிறார்கள்..படையெடுக்க காத்திருக்கிறார்கள்…பக்தகோடிகளை நம்பி..பக்தர்களே தயாராய் இருங்கள்..அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க..காசு கொடுத்து ஆசிரமம் வளர்க்க…

பின் ஒரு நாள் காவி காம களியாட்டம் வரும்..அன்று கல் எறியவும் உங்களை தயார்ப் படுத்தி கொள்ளுங்கள்..

நன்றி:padaipali.wordpress.com

நித்யானந்தா என்னை ஏமாற்றிவிட்டார்: நடிகை தாரா



கன்னடத்தில் முன்னணி நடிகையான தாரா, கிரிஷ் காசரவல்லி இயக்கிய ஹசினா என்ற படத்திற்காக 2005இல் தாரா, சிறந்த நடிகை தேசிய விருது பெற்றார். இந்தப் படத்தில் இவர் இளம் முஸ்லிம் தாயாக நடித்திருந்தார். 2001இல் இவர், கன்னூரு ஹெக்காடதி என்ற படத்திற்காக மாநில அரசின் சிறந்த நடிகை விருதினையும் பெற்றார்.
தமிழில் இங்கேயும் ஒரு கங்கை, நாயகன் என சில படங்களில் நடித்தவர். இவர் பாஜகவில் இணைந்து அரசியல் அத்தியாயத்தையும் ஆரம்பித்தவர்.
தாரா தற்போது,   நித்யானந்த சாமியார் ஒரு மோசடிப் பேர்வழி. அவரை நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி என்று புலம்பியுள்ளார்.

( நித்யானந்தமே பக்தர்களுக்கு ‘நித்திய ஆனந்தம்’ என்றும், கடவுள் அவதாரம் என்றெல்லாம் வெளிப்படையாக ஆதரவு அளித்தவர் தாரா. நித்யானந்தத்துக்காக பல ரியல் எஸ்டேட் டீல்களில் இவர் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. கன்னடத் திரையுலகில் நித்யானந்தன் புகழ் பரப்புவதில் முன்னணியில் இருந்தார்.
தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் நித்யானந்தனின் பெங்களூர் பிடாதி ஆசிரமத்துக்குப் போய் நாள் முழுக்க அங்கே சேவைகள் செய்வது தாராவின் வழக்கம்)


இந்த நிலையில் நித்யானந்தன் – ரஞ்சிதா பலான டிவிடி சன் செய்திகளில் ஒளிபரப்பாகி, நாடு முழுவதும் கொதிப்பைக் கிளப்ப, அதிர்ந்து போய்விட்டாராம் தாரா.

’’மனுசன் போவானா இனிமே அந்த ஆசிரமத்துக்குள்ள. ச்சே.. நான் எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன். என்னை மாதிரி எத்தனை லட்சம் பக்தர்கள் தெரியுமா அந்த ஆளுக்கு. இப்படி ஒரு அசிங்கம் நடந்த இடத்துல இனி நான் கால் வைப்பேனா?

இந்த பக்தர்களை ஏமாற்ற எப்படி நித்யானந்தனுக்கு மனசு வந்தது. இனி மனித உருவில் சாமிகள் என்று சொல்லும் யாரையும் நம்பக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இந்த ரஞ்சிதா விவகாரத்தின் முழுப் பின்னணியையும் வெளியில் கொண்டுவர வேண்டும். இந்த மாதிரி போலிச் சாமியார்களை ஒழிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

-வடபழனிவாலு

நன்றி:nakkheeran.in


செக்ஸ் சாமியார் நித்யானந்தா லீலைகள் மேலும் பல சீடிக்கள்

நித்யானந்தா சுவாமிகளின் காம லீலைகளை அம்பலப்  படுத்தி அவரது நிஜ முகம்  உலக மக்களுக்கு தெரியக் காரணமாக  இருந்தவர் அவரது சீடர் லெனின் எனத் தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த நித்ய தர்மானந்தா என்ற லெனின் போலி சாமியார் நித்யானந்தாவிடம் உதவியாளராகவும் டிரைவராகவும் வேலை பார்த்தவர் எனத் தெரிகிறது .

இன்று சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்த லெனின் சாமியார் சம்பந்தப் பட்ட மேலும் பல சி.டி க்களை ஆணையரிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது . மேலும் நித்யானந்தா குறித்து புகார் அளித்த லெனின் , நித்யானந்தா  தன்னுடைய பெண் பக்தர்களிடம் பாலியல் கொடுமையில் ஈடு பட்டதாகவும் அதன் காரணமாக பலர்  தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தாவினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அவர் காவல் துறை ஆணையரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ரஞ்சிதாவுடன் சாமியார் சல்லாபக் காட்சிகள் வெளியானவுடன் அதன் ஒளிபரப்புக்கு தடை கோரிய மனுவில் சாமியார் தரப்பு லெனின் என்ற பிரேமானந்தா என்ற தனது சீடரே இதற்க்கு காரணம் என கூறி இருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்நேரம்.காம்

குஜராத் நிலைமை தெரியுமா?????

அமிதாப் பச்சனுக்கு மல்லிகா சாராபாய்

திறந்த மடல்

எனதருமை பச்சன்ஜி,

குஜராத்தி என்ற முறையில் வாழ்த்துகிறேன். நீங்கள் உண்மையிலேயே ஒரு அற்புதமான நடிகர். நீங்கள் அறிவுகூர்ந்தவர். புத்திசாலித்தனமான வர்த்தகர். ஆனால் எந்தப் பொருளை வாங்க வேண்டுமென்று நீங்கள் விளம்பரங்களில் சொல்கிறீர்ளோ, அதை நான் நம்ப வேண்டுமா? உங்களுக்கு எதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறது என்பதைப் பார்க்கலாமா?(பெரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவ்வாறு சொல்வதாக இருந்தாலும்..!). பிபிஎல், ஐசிஐசிஐ, பார்க்கர் மற்றும் லக்சர் பேனாக்கள், மாருதி வெர்சா, காட்பரி சாக்கலேட்டுகள், நெரோலக் பெயிண்ட்ஸ், டாபர், இமாமி, எவரெடி, சஹாரா சிட்டி ஹோம்ஸ், டிஙடமாஸ், பினானி சிமெண்ட் மற்றும் ரிலையன்ஸ். இதுதான் அந்தப் பட்டியல். தற்போது குஜராத்.
உங்கள் வீடு பினானி சிமெண்டால் கட்டப்பட்டதா? காட்பரி சாக்கலேட்டோ அல்லது டாபர் நிறுவனத்தின் ஹாஜ்மோலாவையோ உண்மையிலேயே நீங்கள் விரும்புகிறீர்களா? எந்தப் பேனாவை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்? விளம்பரத்துக்கான படப்பிடிப்பு நேரத்தைத் தவிர, வேறு சமயத்தில் மாருதி வெர்சா காரை ஓட்டியதுண்டா? வீட்டிற்காக வாங்கச் சொல்லும் நெரோலக் பெயிண்டில் ஈயம் இருக்கிறது. அது உங்களையும், மற்ற பலரையும் கொஞ்சமாக, கொஞ்சமாக விஷமேற்றி விடும் என்பதை நீங்கள் அறிவீர்களா?(உங்கள் வீட்டில் அந்த பெயிண்டைதானே பயன்படுத்துகிறீர்கள்..?). இல்லையென்றால், வெறும் பணத்துக்காகத்தான் இந்த விளம்பரங்களில் தோன்றுகிறீர்களா?
ஆனால் எந்தவித நேரடியான வருமானத்தையும் பெற்றுக்கொள்ளாமல் குஜராத்தை முன்னிறுத்த ஒப்புக்கொண்டீர்கள்? பிராண்ட் குஜராத்தை முன்னிறுத்தும் முடிவுக்கு எப்படி சரி என்று சொன்னீர்கள்? மாநிலத்தின் நிலை என்ன என்பதை கேட்டீர்களா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த முடிவும், அறிவிப்பும் ஒரே ஒரு சந்திப்பிற்குப் பிறகு வெளிவந்தது. அதனால்தான் குஜராத்தில் உள்ள நிலைமை பற்றி நீங்கள் கவனமாகப் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன்.
அதனால் குஜராத்தி என்ற முறையில், எனது மாநிலத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த அனுமதி கொடுங்கள். துடிப்பான குஜராத் என்ற பெயரில் கடந்த இரண்டாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் விழாக்களின் மூலம் லட்சக்கணக்கான கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த ஒப்பந்தத்தைத் தாண்டி அடுத்த கட்டத்தை வெறும் 23 விழுக்காடு ஒப்பந்தங்கள்தான் அடைகின்றன என்பதை குஜராத் அரசே ஒப்புக்கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? பெரும் பணம் படைத்த வணிக நிறுவனங்களுக்கு எக்கச்சக்கமான மானியங்கள் அள்ளி வழங்கப்படுகின்ற வேளையில், 75 ஆயிரம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மூடப்பட்டு, அதனால் 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்பது தெரியுமா?
குஜராத்தை வளப்படுத்த பெரும் முதலாளிகள் வரிசையாக நிற்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். யாரை வளப்படுத்த? நமது ஏழைகள் பரம ஏழைகளாக மாறி வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 1993 முதல் 2005 வரையில் வறுமைக்குறைப்பில் அகில இந்திய சராசரி 8.5 விழுக்காடாகும். ஆனால் குஜராத்தில் அது வெறும் 2.8 விழுக்காடு மட்டும்தான். குடும்பத்தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த விவசாயக்குடும்பமே குஜராத்தில் தற்கொலை செய்து கொள்கிறது.
நர்மதா திட்டத்தில் 29 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளார்கள். இதுவரை 29 விழுக்காடு பணிதான் நடந்துள்ளது. அதிலும் கட்டுமானப் பணியின் தரம் மிக மோசம். கடந்த ஒன்பது ஆண்டுகளில் 308 இடங்களில் உடைப்பு(எந்த சிமெண்டில் கட்டினார்கள் என்பது உங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம்..!!) ஏற்பட்டது. லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். உப்பளங்களில் இருந்து உப்பு அடித்துச் செல்லப்பட்டது. 1999ல் 4 ஆயிரத்து 743 குஜராத் கிராமங்கள் குடிநீர் கிடைக்காமல் இருந்தன. இரண்டே ஆண்டுகளில் அது 11 ஆயிரத்து 390 ஆக உயர்ந்தது.
குஜராத்தின் தலைமை நிர்வாகியாக சித்தரிக்கப்படும் எங்கள் முதல்வரின் தலைமையில் கடனாளிகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளோம். 2001 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மீதான கடன் 14 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்போது 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியாகிவிட்டது. இந்தக்கடனைத் தீர்க்க ஒவ்வொரு ஆண்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறோம். இது எங்கள் மாநில பட்ஜெட்டில் 25 விழுக்காடாகும்.
இதற்கிடையில், கல்வித்துறையில் சரிவு. ஏழைகளுக்காக புதிதாக எந்த அரசு மருத்துவமனையும் கட்டப்படவில்லை. மீனவர்கள் பிச்சைக்காரர்களாக மாறி வருகிறார்கள். பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு பாலியல் பலாத்காரம், பெண்கள் மீது ஒரு நாளைக்கு சராசரியாக 17 தாக்குதல்கள், கடந்த பத்தாண்டுகளில் 8 ஆயிரத்து 802 தற்கொலைகள் மற்றும் “விபத்தால்” 18 ஆயிரத்து 152 பெண்கள் மரணம் என்ற புள்ளிவிபரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அரசால் தரப்பட்டுள்ளதாகும். உண்மையான விபரம் எவ்வளவு என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
சோமநாத் கோவிலும், காந்தியும் தன்னை ஊக்குவித்ததாக நீங்கள் கூறியுள்ளீர்கள். சோம்நாத் கோவில் மக்களுக்காகக் கட்டப்பட்டது. காந்தியும் மக்களோடு மக்களாக இருந்தவர். உங்களுக்கு உண்மையிலேயே இந்த மாநில மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? இருந்தால் உங்கள் முடிவு வேறுமாதிரியாக இருந்திருக்கும். இக்கடிதத்தை படித்து முடிவெடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

மல்லிகா சாராபாய்

நித்யானந்தாவை சுற்றி எப்போதும் 16 பெண்கள்!


சேலம் வருகை புரியும் நித்யானந்தாவைச் சுற்றி முக்கிய புள்ளிகள், சீடர்கள், அவருடன் வரும் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆசிரமத்துக்கு தினமும் வரும் சீடர்கள், பார்வையாளர்கள் ஒருவரும், நித்யானந்தா வந்து செல்லும் வரை அனுமதிக்கப்படுவதில்லை.

நித்யானந்தாவுடன் 16 பெண்கள் சேவை செய்வதற்காக பெங்களூரில் இருந்து உடன் அழைத்து வரப்படுவது வழக்கம். அவர்கள், நித்யானந்தாவின் மாளிகைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுவர். நித்யானந்தா முக்கிய புள்ளிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு மாளிகைக்கு திரும்பும் போது, பெண்கள் தயாராக சேவை புரிய காத்திருக்க வேண்டும்.

அவருக்கு கால் பிடித்து விடுவது, உடல்களை அமுக்கி விடுவது, குளிக்க வேண்டிய தண்ணீர் எடுத்து வைப்பது, சாப்பிட தேவையான உணவுகளை பரிமாறி, ஊட்டி விடுவது என சகல பணிகளும் ஆசிரம பெண்களை தவிர மற்றவர்கள் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. நித்யானந்தா, ஆசிரமத்தில் பெண்களுடன் ஆனந்த நிலையில் ஆட்டமிடுவதும் உண்டு.

“சிடி’ கேசட்டுகளில் பாடல்களை பாட விட்டு, பெண்கள் புடை சூழ நித்ய தாண்டவமிடுவதும் உண்டு. பெண்களுடன் ஆனந்த மோக நிலையில் ஆனந்தமிடும் நித்யானந்தா, தன்னை கண்ணபிரானாகவும், உடன் பெண்களை கோபியராக பாவித்து தழுவல் நிறைந்த நடன அசைவுகள் மூலம், “ஆன்மிக’ பாடம் நடத்துவதும் வழக்கம்.

நன்றி:nakkheeran.in

ரஞ்சிதாவைத் திருமணம் செய்ய சம்மதித்த நித்யானந்தா!- புதிய தகவல்கள்

“நித்யானந்தா தனதுபிரம்மச்சரியத்தைத் துறந்து, ரஞ்சிதாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டார். ஆனால் அப்படி திருமணம் செய்தால் பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் காப்பாற்ற முடியாது என்பதால் கடைசி நேரத்தில் மறுத்தார். அதன் விளைவுதான் ரஞ்சிதாவும் லெனின் கருப்பனும் திட்டமிட்டு சாமியாரைக் கவிழ்த்தனர்”, என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி:thatstamil.oneindia.in

ராஜ் தாக்கரே மீது 73 வழக்குகள்

மும்பை, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே மீது 73 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 6 வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றுள்ளார் என போலீஸôர் தெரிவித்தனர்.மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியிலிருந்து பிரிந்து மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா என்ற புதிய கட்சியை ராஜ் தாக்கரே தொடங்கினார்.மும்பை மராத்தியர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும், வட இந்தியர்கள் மராத்தியர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் கூறி, அவர்கள் மீது எம்.என்.எஸ். அமைப்பினர் கடந்த வருடம் மும்பையில் தாக்குதல்களில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே போலீஸôரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இந்தக் கலவரங்கள் அனைத்தும் ராஜ் தாக்கரேவின் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதாக அவர் மீது 73 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இவற்றில் 6 வழக்குகளில் ஜாமீன் தரப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் அனைத்தையும் தாக்கரே சந்திக்க வேண்டியுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தன. இந்த வழக்குகளில் தாக்கரேவுக்கு ஆதரவாக பிரபல குற்றவியல் வழக்கறிஞர் சாயாஜி நாங்ரே ஆஜராக உள்ளார்.

நன்றி:dinamani.com

நைஜீரியாவில் கொடூரம்… 500 பேர் வெட்டிக் கொலை!

அபுஜா : நைஜீரியாவில் நடந்த மோதலில் வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே இழுத்து போட்டு 500 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் ஜோஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தப்பகுதி மலைப்பாங்கான பகுதி ஆகும். இதன் அருகில் உள்ள அதாவது நைஜீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிராம மக்களுக்கும் பெரும்பகை இருந்து வருகிறது, பல ஆண்டுகளாக இந்த பகை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஜோஸ் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ஒரு வன்முறைக்கும்பல் கையில் கிடைத்தவர்களையெல்லாம் வெட்டித்தள்ளியது. பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் இறந்தவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர் .

இது குறித்து அதிபர் ஜேனாத்தான் கூறுகையில் இந்த சம்பவம் நடந்த பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் போடப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் முழு விவரம் இன்னும் விவரம் வரவில்லை. 300 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என கூறினார். உலக அளவில் இன, கோஷ்டி மோதலில் 500 பேர் வரை இறந்திருப்பது உலக அளவில் இது பெரும் கவலை தரும் செய்தி.

Related International News:

ஈராக்கிலிருந்து படிப்படியாக படைகள் வாபஸ்! – ஒபாமா

வாஷிங்டன்: ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படைகள் படிப்படியாக  வாபஸ் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் தற்போது அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. அங்கிருந்து அவை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஈராக்கில் பொதுத் தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அமெரிக்க படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என அதிபர் ஒபாமா அறிவித்து இருந்தார். இதற்கிடையே அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்த வன்முறை சம்பவங்களுக்கு இடையே தேர்தல் நடந்தது.

வன்முறையையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது ராணுவத்தை அங்கிருந்து வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. ஈராக்கில் நடைபெற்ற தேர்தல் குறித்து அதிபர் பராக் ஒபாமா கருத்து தெரிவித்தார்.

அப்போது, “பல வன்முறை சம்பவங்களுக்கு இடையே அங்கு தேர்தல் நடைபெற்றது ஒரு மைல்கல் ஆகும்.

தற்போது தேர்தல் நடைபெற்று விட்டதால் ஈராக் மக்களின் தேவைகள் முழுவதும் நிறைவேற்றப் பட்டு விட்டதாக கருதுகிறேன். எனவே அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் அமெரிக்க படை வீரர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதிக்குள் வாபஸ் பெறப்படுவார்கள்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் அடுத்த ஆண்டில் முற்றிலும் திரும்ப பெறப்படுவார்கள். இருந் தாலும் ஈராக்கில் அமைதி முழுமையாக திரும்பும் வரை அமெரிக்கா தொடர்ந்து உதவும்Ó என்றார்.

இதுகுறித்து ஈராக்குக்கான அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் ராய் ஒடியர்னோ ஒரு டெலிவிஷ னுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ஈராக்கில் அமெரிக்க ராணுவம் தனது வீரர்களை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

ஆகஸ்டு மாத இறுதிக்குள் தீவிரவாதிகளுடன் போரில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள். அவர்கள் தவிர பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்”, என்றார்.

Related InterNational News:

போலி சாமியார்களை அரசாங்கம் ஒழிக்க வேண்டும் யோகி ராம்தேவ் ஆவேசம்

மதத்தின் பெயரால் மோசடியான செயல்களில் ஈடுபடும் சாமியார்களுக்கும், மத குருக்களுக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று யோகா குரு சுவாமி ராம்தேவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிம்லாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசு கையில், ஏராளமான சாமியார்கள் மோசடி செயல் களில் சிக்கி அவர்கள் மீது பெருமளவில் வழக்குகள் தொடரப்படு வது பெரும் ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக் கிறது.

குறிப்பாக பாலியல் புகார்களுக்கு ஆளாகும், நிதி முறை கேடுகளில் சிக்கும் சாமியார்களின் எண்ணிக்கை அதிக ரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இதுபோன்ற தவறுகளைத் தடுக்க ஒருவர் பாபா (குரு) ஆக குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டியது கட்டாய மாகிறது. இதுதொடர்பாக முன்னணி மதத் தலை வர்களுடன் நான் பேசி வருகிறேன்.

மதத் தலைவர்களின் செயல்பாடுகளைக் கவனிக்க, கண் காணிக்க கமிட்டி என்று எதுவும் தனியாகத் தேவை யில்லை. இதற்கான தகுதி வாய்ந்த நபர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்களே இதைப் பார்த்துக் கொள்வார்கள்.

தவறு செய்யும் சாமியார்களுக்கு மரண தண்டனை கொடுத்தால்தான் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க முடியும் என்றார் ராம் தேவ்.

நன்றி:அதிரடி தமிழ் செய்தி


மருத்துவ குணம் நிறைந்த பழச்சாறுகள்

மாதுளம் பழம்


உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை பல்வேறு நாளிதழ்களும், மருத்துவ இதழ்களும் வெளியிட்டு மாதுளம் பழத்தின் புகழை மேலும் பிரபலப்படுத்தி விட்டன.

கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் மாதுளம் பழத்தின் அளவிடற்கரிய சத்துகளையும், மருத்துவ பலன்களையும் சொல்லி மாளாது. தற்போது ஹோட்டல்கள், ஜூஸ் கடைகள், விருந்து-விழா நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் மாதுளம் பழ ஜூஸ்-க்கு தனியிடம் கிடைத்துள்ளது.

உணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை `சூப்பர் புரூட்’ என அழைக்கிறார்கள். ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது.

முன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது. உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் இதன் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது.

அன்றாடம் மாதுளம் பழ ஜூஸ் அருந்தி வர, ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்றத்தை அது சீராக்கும் என்றும், பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது

சிகப்புத் திராட்சை


சிவப்புத் திராட்சை உண்பது உயர் குருதி அழுத்தம், கொழுப்புப் பாதிப்புகள், இதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் என்னும் இனிப்பான ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர் யூ.கே ஆராய்ச்சியாளர்கள்.

சிவப்புத் திராட்சையில் அதிக நார்சத்து மற்றும் விஷத்தன்மையை எதிர்க்கும் பொருட்கள் அதிகம் இருப்பதாகவும் இது உடலை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது எனவும் இந்த ஆராய்ச்சி விளக்குகிறது.

உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பைக் குறிப்பதன் மூலமாக இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இதய நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும் வலிமை இந்த சிவப்புத் திராட்சைக்கு இருக்கிறதாம்.

ஒரு எச்சரிக்கை

சமீபத்தில் பழச்சாறுகள் தொடர்பாக வெளியான ஒரு ஆராய்ச்சி அதிர்ச்சியூட்டுகிறது.
அதாவது பழச்சாறுகள் நாம் அருந்தும் மருந்தின் வீரியத்தைக் குறைத்து நோயிலிருந்து சுகம் பெறுவதில் சிக்கலை உருவாக்குமாம். குறிப்பாக இதய நோய், குருதி அழுத்தம் போன்ற நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்தின் வீரியத்தை இந்த பழச்சாறுகள் தடுக்கின்றனவாம்.
மருந்து மாத்திரைகள் உட்கொள்ளும்போது வெறும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் எனவும், பழச்சாறுகள் பயன்படுத்தக் கூடாது எனவும் ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இப்போது பழச்சாறு அருந்துவது மருந்தையே செயலற்றதாக்கிவிடும் எனும் செய்தி கூடுதல் கலவரமூட்டுகிறது

நன்றி:feroos.blogspot.com

வயாகராவில் பறவையின் கழிவுகள் – அதிர்ச்சி தகவல்

கிளுகிளுப்பைத் தூண்டுவதால் “வயாகரா” மாத்திரைக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது. உலகலாவிய தேவையைப்யனபடுத்தி  போலி வயாகரா மாத்திரைகளும் சர்வதேச சந்தையில் கிடைக்கிறது. இன்னிலையில் வயாகராவில் பறவைக் கழிவுகளும் கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக நியூசிலாந்திலிருந்து விற்கப்படும் மாத்திரைகளில் பெருமளவில் பறவைக் கழிவுகள் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வவ்வால் மற்றும் பறவைகளின் எச்சங்கள், உரோமங்கள், நுண்ணிய பூச்சிகள், மரக்கரி போன்றவையும் கலந்து  அவை தயாரிக்கப்படுவதாக அந்நாட்டு விஞ்ஞானி தல்லாஸ் மில்டன் ஹால் தெரிவித்துள்ளார்.

இவைதவிர நச்சுத்தன்மை வாய்ந்த உலோகங்கள் மற்றும் பாதரசம் போன்றவையும் வயாகராவில் கலக்கப்படுவதாக சுற்றுச் சூழல் அறிவியல் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

எனவே,ஆன்லைனில் இவற்றை மிகவும் கவனமாக வாங்க வேண்டும் என்று ஒட்டாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கிளார் ஸ்ட்ராசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்லாம் ஓர் அதிசயம்

ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால்நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.

எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும். ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள். வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள். முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.

இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன. ஆக அனைத்து  மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.

எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடை மனக்கண்கள் திறக்கின்றன. உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?

பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது. இது இன்றைய உலக நிலை. மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிளாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன. ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதல்களில் பார்க்க முடிகிறதா?

ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும். மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும். இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?

இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான். விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதே… இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை. மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.

முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை. ஐ.நா சபையில் ஆதிக்கம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது. ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே. முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம்கூட அவர்கள் பார்த்ததில்லை.

முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறு நீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.

தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை. ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும். இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே! இது எப்படி சாத்தியமாகின்றது?

இறைவன் தன்னுடைய திருமறையில் இப்படி கூறுகின்றான்;

يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)

உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன. கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான். மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை. கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.

Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை. மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது. ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.

இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது. அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது. கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது. போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. சர்க்கரையை யாரும் விளம்பரம் செய்ய அவசியமில்லை. அதன் இனிப்பு சுவைத்தவர்களுக்கு நன்கு தெரிகின்றது. விளம்பரம் இல்லாமல் அது தானே விற்பனையாகிறது. அது போலத்தான் இஸ்லாமும். நாம் சர்க்கரை உள்ள இடத்தைக் காட்டினால் போதும். மக்கள் தானே அதைப் பெற்றுக் கொள்வார்கள். இன்பம் அடைவார்கள்.


முஸ்லிம் லீக் மாநாட்டில் அழகிரி பங்கேற்பு! டெல்லிக்கு டிமிக்கி

சென்னை: மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இந்திய முஸ்லிம் லீக்கின் 62ம் ஆண்டு சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் பேசும்போது மகளிர் மசோதா நிறைவேற வேண்டிய நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தை தவிர்த்துவிட்டு, முஸ்லிம் லீக் மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் வந்தேன் என்று தெரிவித்தார்.

மாநாட்டில் மத்திய மு.க.அழகிரி கலந்துகொண்டு பேசுகையில், ‘இந்த மாநாட்டிற்கு வரவேண்டும் என என்னை டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் 185 ஓட்டுகளில் வெற்றி பெற்றது.

இதற்கிடையே நான் மாநாட்டிற்கு வருவதற்காக விமான நிலையத்துக்கு புறப்பட்டேன். நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதால் நீங்கள் டெல்லியிலேயே இருக்க வேண்டும் என சகோதரி கனிமொழி என்னை போனில் தொடர்பு கொண்டு கூறினார். நான் மாநாடுக்கு வருவதாக வாக்குறுதி அளித்துவிட்டேன். என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகக் கூடாது என கூறிவிட்டு வந்து விட்டேன் என்றார்.

மேலும், எனக்கு பதவியை பற்றி கவலையில்லை. மக்கள் என்மீது வைத்துள்ள அன்பு தான் பெரியது. இஸ்லாமிய சமுதாய மக்கள் என் மீதும், தலைவர் மீதும் வைத்துள்ள அன்பு 100 வயது வரை முதல்வரை பதவியில தொடரச் செய்யும்.

1947ம் ஆண்டு முதல் 1962 வரை அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் பதவியில் இல்லை. முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அண்ணாதுரை குரல் கொடுத்தார். இதனால் கடையநல்லூர் மஜித் அமைச்சரானார். தொடர்ந்து இன்று வரை பல இஸ்லாமியர்கள் எம்எல்ஏ, எம்பி, மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், வாரிய தலைவர்கள் பல்வேறு பதவிகளை அளித்து திமுக கவுரவித்து வருகிறது என்றார்

இந்நேரம். காம்

புகை பிடித்தால் அபராதம் : டில்லி பல்கலை அதிரடி உத்தரவு

General India news in detail

புதுடில்லி : “கல்லூரி வளாகத்திற்குள் புகை பிடிக்கும் மாணவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என, டில்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

டில்லி பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில், புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக, கல்லூரி வளாகத்திற்குள் புகை பிடிக்கும் மாணவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் பல்கலை துணைவேந்தர் தீபக் பென்டல் கையெழுத்திட்டுள்ளார். இருந்தாலும், புகை பிடிக்கும் மாணவருக்கு அபராதம் விதிப்பதா, வேண்டாமா என்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லி பல்கலைக்கழகத்தால் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு கல்லூரியிலும், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, ஓவியம் வரைவது, பிரசாரம் மேற்கொள்வது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விளக்கப்பட்டு வருகிறது. ஹன்ஸ்ராஸ் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேராசிரியர் ஸ்ரீவத்சவ் என்பவர் பேசினார். அப்போது அவர், “புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். குறிப்பாக, கலாசார நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்துவது மூலமாக இதை மாணவர்களுக்கு புரிய வைக்கலாம். அபராதம் விதிப்பது என்பது கடைசிக் கட்ட நடவடிக்கையாகவே இருக்க வேண்டும்’ என்றார்.

நன்றி:dinamalar.com

நித்தியானந்தா: கடவுளாக வணங்கப்பட்ட காமக் கொடூரன்!

இறைவனின் பெயரால் மக்களை ஏமாற்றும் கூட்டம் காலம் காலமாக இருந்துவருகின்றது. பணம், புகழ், உல்லாச வாழ்க்கைக்காக இந்த ஆசாமிகள் (போலி) சாமிகளாக மாறிவிடுகின்றனர். இந்த போலிசாமியார்களின் லிஸ்ட்டில் புதிதாய் சேர்ந்தவன் தமிழகத்தை சேர்ந்த ராஜசேகரன் என்கின்ற பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள். பிரபல நடிகையுடன் மிககேவலமாக நடந்துகொண்ட காட்சிகள் தொலைகாட்சிகளில் வெளிவந்த பிறகு இந்த காம கொடூரனின் சுயரூபம் வெளி உலகத்திற்க்கு வந்தது. கடவுளாக மக்களால் வணங்கப்பட்ட இந்த காம கயவனை  தமிழக, கர்நாடக அரசுகள் தேடி வருகின்றது.

ராஜசேகரன் என்கின்ற பரமஹம்ச நித்யானந்தா சுவாமி? :

திருவண்ணாமலையில் 1978-ல் பிறந்த இந்த ராஜசேகரன் முதலியார் சமூகத்தை சேர்ந்தவன். 12 வயதில் இந்த தொழிலுக்கு வந்தான். தமிழகத்தில் இவனுடைய பூச்சாண்டி எடுபடவில்லை என பெங்களூர் சென்றார். மக்களை கவரும் வண்ணம் பேச துவங்கியதால் இந்த தொழிலில் படுவேகமாக முன்னேறி மிக குருகிய வயதில் (போலி) கடளவுளானான்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவனுக்கு கோயில் உள்ளது.. இவனுடைய கதவை திற காற்று வரும் என்கின்ற பேச்சு (புத்தக வடிவிலும் உள்ளது) இவனுக்கு பெரும் புகழை தேடிதந்தது.    நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் இந்த  (போலி)  சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது.

இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது.  தியானம் கற்று தருகின்றேன், ஆசனம் கற்று தருகின்றேன் என்ற பெயரில் பலகோடிகளை சம்பாதித்துள்ளான் இந்த விடலை பையன். உடல் தேவைகளுக்காக பல் வேறு நடிகளைகளுடன் விபசாரத்தில் ஈடுபட்டு இன்று காவல் துறைக்கு பயந்து தலைமறைவாகி உள்ளான் இந்த சில்மிஷ இளைஞன்.

பத்திரிக்கைகளும் (போலி) சாமியார்களும் :

தமிழகத்தில் ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு ஆதரவான பத்திரிக்கை உண்டு. இந்த நித்தியானந்தாவின் ஆஸ்தான பத்திரிக்கை குமுதம் ஆகும்,  ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் பாபா, சுகபோனந்தா இந்த நித்தியானந்தா போன்ற சாமியார்களின் கிருக்கு வார்தைகளை தத்துவங்களாக மக்களிடம் எடுத்து செல்வது இந்த குமுதம், விகடன், நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள்.  (ஜக்கி வாசுதேவின் ஆஸ்தான பத்திரிக்கை நக்கீரன்).

இந்த ஈன பிறவியை இன்டெர்னெட்டில் பிரபலமாக்கியது சாரு நிவேதிதா. குறி சொல்லும் பையனை கார்ப்ரேட் சாமியாராக மாற்றியது குமுதம் பத்திரிக்கையும் சாரு நிவேதிதாவும் தான்.

ஏன் இவர்கள் சாமியார்கள் ஆனார்கள்

இன்றைக்கு அரசியலைவிட மிக அதிகமாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை கொள்ளையடிக்கும் தொழிலாக இந்த சாமியார் தொழில் உள்ளது. பல கோடிகளை கொள்ளை அடிக்கும் (உயர்பதவிகளில் இருக்கும்) அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இந்த சாமியார்கள்தான் புகழிடம். ஊர் பணத்தை ஏமாற்றுகின்றோமே என மன உலைச்சலில் வாடும் இவர்களுக்கு இந்த சாமியார்கள் யோகா மூலம் மன உலைசலை நீக்கி மேலும் கொள்ளை அடிக்க வழிவகை செய்கின்றனர்.

மேலும் பண்ணாட்டு நிறுவங்களில் பல லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் பெரும் மன அழுத்தத்திற்க்கு ஆளாகின்றனர், இவர்களிடமும் தியானம் கற்று கொடுக்கின்றோம் என ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை வாங்குகின்றனர் இந்த கார்ப்ரேட் சாமியார்கள் .  இப்படி கோடிகணக்கில் கொள்ளை அடிக்கும் பணத்திற்க்கு வருமான வரி கிடையாது.

இந்த சாமியார்களிடம் உள்ள பணத்தையும் சொத்துகளையும் பறிமுதல் செய்தாலே உலக வங்கியிடம் இந்தியா வாங்கி உள்ள கடனில் பெரும் பகுதியை அடைத்துவிடலாம் அவ்வளவு கோடிகணக்கான ரூபாய் மதிபுள்ள சொத்துகள்.

வீட்டில் கொள்ளை, வங்கியில் கொள்ளை என கேள்வி பட்டுஇருப்பீர்கள், எங்காவது ஆசிரமத்தில் கொள்ளை என கேள்வி பட்டதுண்டா, திருடர்கள் கூட திருடாத அளவிற்க்கு பாதுகாப்பான பணம்.

ஏன்? எங்கு? எப்படி? என்ற கேள்வி இல்லை : வருமான வரி துரை, சுங்க வரிதுரை இவை  அதிகமாக சொத்துகள் வைத்து இருப்போரிடன் அவ்வப்போது சோதனை (ரைடு) நடத்தும். இந்த சாமியார்களுக்கு அது (ரைடு)  கூட கிடையாது.

உல்லாச வாழ்க்கை : சாமியாராக இருப்பதினால் பெண்களிடம் அதிகமாக  நெருங்கிபழகும் வாய்ப்பு கிடைக்கின்றது. இதைவைத்து (போலிஸ் தொல்லை இல்லாமல்) பல பெண்களிடம் விபசாரத்தில் ஈடுபட்டு உல்லாச வாழ்க்கை நடத்துகின்றனர் இந்த காம சாமியார்கள் .

புகழின் உச்சி : இந்த காம வெறிபிடித்தவர்களுக்கு கடவுளின் அவதாரம் என்ற பட்டம், கோயில் கட்டி வழிபட ஒரு அறியாமை கூட்டம். என்னேரமும் புகழ்ந்து தள்ள துதிபாடும் கூட்டம்.

கோடிகணக்கில் பணத்தை கொட்ட தயாராக இருக்கும் அப்பாவி மக்கள், (கோடிகணக்கான பணதிற்கும் வரிகட்ட தேவை இல்லை). திருடர்கள் கூட தொடப் பயப்படும் பாதுகாப்பான பணம், பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் சொகுசு வாழ்க்கை, சமுதாயத்தில் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் (பிரதமர், குடியரசு தலைவராக இருந்தாலும்) காலில் விழுந்து வணங்கும் புகழின் உச்சி. இதற்க்குமேல் கடவுள் என்ற பட்டம். நினைக்கும் போதே கேட்பவர்களை சாமியாராக போய்விடலாமா என தூண்டக்கூடிய ராஜ வாழ்க்கை.

கடவுளின் பெயரால் பொய் சொல்லும் இவர்களுக்கு இப்படி பட்ட உல்லாச வாழ்க்கை ஆனால்  இறைதூதரான முஹம்மது (ஸல்) அவர்கள் மேற்சொன்ன எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் மிகவும் கஷ்ட்டப்பட்டு (இஸ்லாத்தை) உண்மையான வாழ்க்கை நெறியை நமக்கு போதித்தார்கள்.  இதிலிருந்தே இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

இந்த சத்திய போதனைகளை சொல்ல இறைவனின் எந்த தூதர்களும் மக்களிடன் எந்த கூலியும் கேட்கவில்லை.
அல்-குர் ஆன் 26:109 : உங்களிடம் நான் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.

இஸ்லாத்தில் மோசடி, பொய், விபசாரம் ஆகியவை  தடைசெய்யப்பட்டுள்ளது, எனவே இறைவனுக்கு கட்டுபட்டு வாழ்ந்தால் இதைவிட சிறந்த தூய்மையான வாழ்க்கையை இறந்த பிறகு இறைவன் தருவான் என்ற மறுமை நம்பிக்கையே நமக்கு நிரந்த சுகத்தைதரும்.

மக்களே! உண்மைமையான அமைதிபெற அழைக்கின்றது இஸ்லாம்

நாம் படும் கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் மிக அழகான தீர்வை சொல்கின்றது இஸ்லாம்.  முழுமையான இறை நம்பிக்கை இல்லாமை, முறையற்ற வழியில் பொருளாதாரத்தை ஈட்டுவது (மோசடி, லஞ்சம்),  விபசாரம், பொறாமை இது போன்ற தீய்மைகள்தான் மனிதனின் நிம்மதியை கெடுக்கின்றது. இந்த தீய்மைகளையெல்லாம் தடை செய்த இறைவன் இது போன்ற தீமைகள் இல்லாமல் எப்படி கவலையில்லாமல் வாழ்வது என்ற ஒரு வாழ்க்கை திட்டத்தை இஸ்லாம் என்ற வடிவில் வழங்கிஉள்ளான். உண்மையான இஸ்லாத்தை படித்து அதன்படி நடப்பதன் மூலம் நமது வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துகொள்ளமுடியும்.

அரசியல்வாதிகளே! அதிகாரிகளே! நீங்கள் மக்களிடம் அநியாயமான முறையில் (லஞ்சம், மோசடி) கொள்ளை அடிப்பதினால்தான் உங்கள் மனம் அமைதி இன்றி தவிக்கின்றது. போலீஸ் ரைடு வருமோ,பணம் திருடு போய்விடுமோ,  நம்மால் பாதிக்கப்பட்டவன் நம்மை கொன்றுவிடுவானோ என்ற அச்சம் தான் உங்கள் மன உலைச்சலுக்கு காரணம். நேர்மையாக இருந்துபாருங்கள், மக்களுக்கு நல்லது செய்துபாருங்கள், லஞ்சம் வாங்காமல் இருந்துபாருங்கள், எத்தனை மக்கள் உங்களை பாராட்டுவார்கள்,

பண்ணாட்டு நிறுவங்களில் (MNC) வேலை செய்பவர்களே!
பதஷ்ட்டம் இல்லாமல் வேலை பாருங்கள், இந்த நிறுவங்கள் நம்மை வேலையைவிட்டு தூக்கிவிடுவதாக மிரட்டி அடிமைபோல் வேலைவாங்குகின்றனர். இதற்க்கு காரணம் அவர்கள் கொடுக்கும் சொகுசு வாழ்க்கைக்கு நாம் அடிமையாவதே, இவர்கள் வேலையைவிட்டு தூக்கிவிட்டால் எங்கே நாம் வாழும் சொகுசு வாழ்க்கை போய்விடுமோ என்ற பயத்தில் நாம் அடிமைகள் போல் வேலை செய்து கொண்டு இருக்கின்ரோம். சிக்கனத்துடன் வாழ பழகிகொண்டால் இவர்கள் மிரட்டல் நம்மை ஏதும் செய்யாது, மன அழுத்தமும் வராது. சாமியார்களுக்கு கொடுக்கும் பணமும் மிச்சமாகும்.

இஸ்லாத்தை உண்மை வடிவில் அறிய நம்மை படைத்த இறைவனின் வார்த்தையான குர் ஆனையும்,  அதற்க்கு விளக்கமாக ஹதீஸையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.  இலவசமாக குர் ஆன் Download செய்ய www.onlinepj.com என்ற இனைய தளத்திற்க்கு செல்லுங்கள்.

சாமியார்கள் வேண்டாம்! சாமியார்களை படைத்த இறைவன் ஒருவன் போது அனைத்திற்க்கும்

நம்முடைய தேவைகளை பூர்த்திசெய்ய நம்மை படைத்த இறைவன் ஒருவன் போதும்.  இறைவனுக்கு இடைத்தரகர்கள் கிடையாது, அனைத்து செல்வங்களுக்கும் அதிபதி இறைவனே.  சாமியாரோ சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிரார் இறைவனோ எப்போதும் உங்கள் கூடவே இருக்கின்றான்.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (அல்-குர் ஆன் 2:186)

இறைவன் எல்லாவற்றிக்கும் அதிபதி என்பது உண்மையே, ஆனால் இறைவன் நமக்கு அதை (செல்வத்தை) வழங்குவானா?, நிச்சயம் வழங்குவான், அவன் கருனையாளர்களுக்கெள்ளாம் கருனையாளன்

சில நேரங்களில் ஏன் இறைவன் நம் பிரார்த்தனையை ஏற்பதில்லை ?:
நமக்கு உள்ள பிரச்சனைகளுக்கு நாம் நமக்கு தெரிந்த தீர்வை இறைவனிடம் கேட்கின்றோம்

ஆனால் அதைவிட சிறந்த தீர்வை இறைவன் அறிந்து வைத்துள்ளான். நாம் கேட்பதை கொடுப்பதைவிட நமக்கு எது சிறந்ததோ அதைகொடுக்கின்றான் நம் இறைவன். நம் தேவைகளை நம்மை விட இறைவன் அதிகம் அறிந்தவன். நாம் இறைவனுக்கு கட்டுபட்டு நல்ல காரியங்களை செய்து நமது தேவைகளை தொடர்ந்து இறைவனிடம் கேட்டுகொன்டே இருப்போம் இறைவன் நமக்கு எப்போதும் சிறந்ததையே வழங்கிகொண்டு இருப்பான், இறைவன் வழங்கியதில் திருப்தி கொள்வோம், அமைதியாக வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்.

சங்பரிவாரத்தின் பார்பன பக்தி : இந்த நித்தியானந்த சாமியார் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை கண்டித்து ஆசிரமங்களை சூரையாடும் இந்த சங்பரிவார கும்பல்கள், காஞ்சி சங்கராசாரியார் இதே போல் பெண்களிடம் சிலமிஷம் செய்ததாகவும், கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டபட்ட போது , காஞ்சி சங்கராசாரியாரின் ஆசிரமத்தை சூரையாடவேண்டியதுதானே. சங்கராசாரியார் விஷயத்தில் அடக்கிவாசித்தன இந்த சங்பரிவார கும்பல். ஏனென்றால் காஞ்சி சங்கராசாரியார் ஒரு பார்பனர். ஆனால் இவரோ ஒரு முதலியார். பார்பனர்களுக்கு ஒரு நீதி பாமரர்களுக்கு ஒரு நீதி என்ற மனு தர்மத்தை கடைபிடிக்கின்றனர் இந்த பார்பன விசுவாசிகள்.

S.சித்தீக்.M.Tech
TNTJ  மாணவர் அனி
tntj.net என்ற தளத்திலிருந்து….

குஜராத் முதல்வர் நரபலி மோடிக்கு புலனாய்வுக்குழு சம்மன்

Top world news stories and headlines detail

ஆமதாபாத் : குஜராத் வன்முறைகள் தொடர்பாக சாட்சியம் அளிக்க வரும்படி, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. குஜராத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின் வன்முறைகள் நிகழ்ந்தன. இதில், ஏராளமானோர் பலியாயினர். இந்த வன்முறைகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இந்தக் குழு, குஜராத் முதல்வர் மோடிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், “வரும் 21ம் தேதி குழு முன் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்’ என, கேட்டுக் கொண்டுள்ளது. குஜராத் வன்முறையின் போது, ஆமதாபாத்தில் குல்பர்க்கா சொசைட்டி பகுதியில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஈஷன் ஜாப்ரே என்பவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி ஜாகியா ஜாப்ரே கொடுத்த புகாரின் அடிப்படையில், மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. “”முதல்வர் மோடிக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அவரிடம் சில கேள்விகளைக் கேட்போம். இதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது. மோடியிடம் சம்மன் வழங்கப்பட்டுள்ளது,” என சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ராகவன் கூறினார்.

dinamalar.com

தமிழகத்தின் எழில்மிகு புதிய சட்டசபைக் கட்டடம்- திறந்து வைத்தார் மன்மோகன் சிங்

சென்னை: பிரமாண்டமான முறையில் எழுந்துள்ள புதிய சட்டசபை வளாகத்தை முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் பிரதமர்  மன்மோகன் சிங் இன்று மாலை திறந்து வைத்தார்.இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட், புதிய சட்டசபையில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று கருணாநிதி விரும்பினார். அதற்கேற்ப, சட்டமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில், வரும் 19-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்

20100312_SAU_PROFதமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று (மார்ச் 12) அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.மேலும் படிக்க…

நித்யானந்தாவின் சாமியார் தொழிலை தடுத்து நிறுத்த வேண்டும்: கி.வீரமணி

சாமியார் வேடத்தில் நித்யானந்தா என்பவர் செய்துள்ள ஒழுக்கக்கேடுகள், மோசடியாக சேர்த்த சொத்துக்கள் இவற்றின்மீது சி.பி.அய். விசாரணை நடத்திடவேண்டும் என்றும், நித்யானந்தாவின் சாமியார் தொழிலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி. வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓர் இளைஞன்   ராஜசேகரன் என்ற பெயருள்ளவர்   வெறும் டிப்ளமோ படித்தவர் என்று கூறப்படுகிறவர், ஆன்மிக வியாபாரம்   சாமியார்
மேலும் படிக்க…

பேய் விரட்டும் பூஜையில் வைக்கப்பட்ட மதுவை குடித்த மூதாட்டி உட்பட இருவர் பலி

Important incidents and happenings in and around the  world

தூத்துக்குடி : தூத்துக்குடியில், இளம்பெண்ணிற்கு பேய் பிடித்துவிட்டதாகக் கூறி, அதை விரட்ட நடத்தப்பட்ட பரிகார பூஜையில் வைக்கப்பட்ட மதுபானத்தை குடித்த மூதாட்டி உட்பட இருவர் பலியாயினர்.

தூத்துக்குடி, லூர்தம்மாள்புரம் முனியசாமி; கூலித்தொழிலாளி. மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்த அவரது மனைவி லதாவுக்கு(25), பேய் பிடித்துவிட்டதாகக் கூறிய உறவினர்கள், பூஜை செய்து பேயை விரட்ட முடிவெடுத்தனர். அதற்கான ஏற்பாடுகளை முனியசாமி செய்தார். அதன்படி, கடந்த 13 முதல் 16ம் தேதி (நேற்று முன்தினம்) வரை லதா வீட்டில் பேய் விரட்டும் பரிகார பூஜையை, திரேஸ்புரம் ‘குறி’ சொல்லும் கோடாங்கி பிச்சையா(45), செய்தார். உணவுவகைகள், முட்டை,தேங்காய், இளநீர், பழம், மதுபானம், சுருட்டு உள்ளிட்டவைகளை வைத்து நடத்தப்பட்ட அந்த பூஜையில், அவர்களது உறவினர்களும் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் பூஜை முடிந்தவுடன், அதில் படையல் வைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் முனியசாமி தரப்பினர் திரேஸ்புரம் கடலில் சென்று போட்டனர்.

ஆனால், பூஜையில் வைக்கப்பட்ட மதுபானமான ‘ரம்’, தனக்கு வேண்டுமென, பூஜையில் கலந்து கொண்ட அவர்களது உறவினர் திருமணமாகாத முனியம்மா(75), கேட்டு வாங்கிக் கொண்டார்.நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பாட்டிலில் இருந்த அந்த ‘ரம்’மை குடித்த முனியம்மா, அதை உறவினர்களான கந்தசாமி(56) துரை(40) ஆகியோருக்கும் கொடுத்து குடிக்கச் செய்தார். சிறிது நேரத்தில் மூவரும் மயங்கினர். அதில், முனியம்மா இரவு 10.30 மணியளவில் இறந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கந்தசாமி, நேற்று அதிகாலை 1 மணியளவில் இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் துரை, தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக, தாளமுத்துநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மது குடித்து இரண்டு பேர் இறந்ததை அறிந்ததும், பூஜைக்கு அந்த மதுவை வாங்கி வந்த திரேஸ்புரம் தாவாளை(60), பூஜை நடத்திய கோடாங்கி பிச்சையா தலைமறைவாகி விட்டனர். சம்பவம் தொடர்பாக முனியசாமி, உறவினர்களிடம் நெல்லை டி.ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன், தூத்துக்குடி எஸ்.பி., செந்தில்குமார் விசாரணை நடத்தினர். தலைமறைவாகவுள்ள கோடாங்கி உட்பட இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இறந்தவர்கள் குடித்தது போக பாட்டிலில் எஞ்சியிருந்த மதுபானம், பரிசோதனைக்காக நெல்லை அனுப்பப்பட்டது.

விஷம் கலந்தது கண்டுபிடிப்பு: இந்நிலையில், மதுவில் விஷம் கலந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசாரணை நடத்திவரும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் கூறும்போது, ”முனியசாமி வீட்டில் பேய் விரட்ட நடத்தப்பட்ட பரிகார பூஜைக்காக, தாவாளை என்பவர் வேறொரு நபர் மூலம் மூன்று ‘ரம்’ பாட்டில்களை வாங்கி தந்துள்ளார். பூஜையில் கலந்து கொண்டவர்கள் இரண்டு பாட்டில் மதுவை குடித்துவிட்டு, ஒன்றில் மட்டும் ‘ஆர்கனோ பாஸ்பரஸ்’ என்ற விஷத்தை கலந்துள்ளனர். அந்த விவரம் தெரியாமல் மது குடித்த முனியம்மா, கந்தசாமி இறந்துவிட்டனர். முனியசாமி குடும்பத்தில் நிலவும் பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் யாரையோ பழிவாங்க, மதுவில் விஷம் கலக்கப்பட்டுள்ளது. அந்த குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். அவர்களைப் பிடித்து விசாரித்தால், யாரைக் கொல்ல மதுவில் விஷம் கலக்கப்பட்டது என்பது தெரியவரும். தற்போதைக்கு இந்த வழக்கு சந்தேக மரணம் என்ற அடிப்படையில் பதிவு செய்யப்படவுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின், இது கொலை வழக்காக மாற்றப்படும்” என்றார்.

dinamalar.com

சிறப்பு புலனாய்வுக் குழுவின் சம்மன்:நரபலி மோடியே பதவி விலகு பெருகும் எதிர்ப்பலை!

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துள்ளத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், நெருப்பிலிட்டு  கொளுத்தியும்  கொல்லப்பட்டனர்.
கோத்ராவில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தை ஒரு சதியாக  மாற்றி முஸ்லிம்களின் மீது பழிபோட்டு சமூக விரோதிகள்¢இந்தக்காரியத்தை செய்து முடித்தனர். கோத்ரா விபத்தை முஸ்லிம்களின் சதி என நிரூபிக்க முடியாமல் கெடுமதி படைத்த சங்பரிவார் “சர்மதி எக்ஸ்பிரசை எரிக்க நான் தான் பெட்ரோல் சப்ளை செய்தேன்” என ஒரு முஸ்லிம் இளைஞரை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்தது, உள்ளிட்ட படுபயங்கர சதித்திட்டங்களை இரு ஆண்டுகளுக்கு முன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்தியது.

மேலும் படிக்க…

ஆன்மீக உண்மையை உணர்த்தியது யார்? நித்தியானந்தாவா? காதர் மொய்தீனா?

கடந்த மார்ச் 9 ஆம் தேதி அன்று நமது இணைதயளத்தில் காதர் மொய்தீன் அவர்கள் நித்தியானந்தாவின் உரைகள் அடங்கிய டிவிடியை வெளியி்டும் புகைப்படத்துடன் அபு அஹ்சன் அவர்கள் அனுப்பிய செய்தியை உங்கள் பகுதியில் வெளியிட்டிருந்தோம்.

மேற்கண்ட செய்தி இணையதளத்தில் வெளியிப்பட்டு அது முஸ்லிம்கள் மத்தியில் பரவியவுடன் சில அப்பாவி சகோதரர்கள், காதர் மொய்தீன் அவர்கள், சாமியார்களை தேடிச் சென்றது சத்திய இஸ்லாத்தை போதிக்கத்தான் என்று தவறாக எண்ணிக் கொண்டு அவர் மீது தாங்கள் வைத்துள்ள குருட்டு பக்தியின் காரணமாக சில கேள்விகளை நம் இணையதளத்திற்கு அனுப்பினர். அதற்கு அபு அஹ்சன் அளித்த பதில்  இதோ:

மேலும் படிக்க…

அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள்! பீதியில் மக்கள்

சென்னை: மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் உள்ள கடைகளில்  நேற்று ஒரே நாள் இரவில் கொள்ளையர்கள் அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசையில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கச்சேரி ரோடு வினாயகர் கோவில் தெருவில் தையல்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த பொருட்களை அள்ளிச் சென்றனர். மேலும் படிக்க…

குஜராத் கலவர வழக்கு – சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு நரபலி மோடி ஆஜராகவில்லை

modi

அகமதாபாத்: குஜராத் கலவர வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்ட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆஜராகவில்லை.

குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக குல்பர்க் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி ஈஷான் ஜெஃப்ரி உட்பட 70 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

மேலும் படிக்க…

நரைமுடி

வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும்.

குறைபாட்டை நீக்கும் முறைகள்:

1. சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.

உணவு:

இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவீதம் தவிர்க்க முடியும்.

பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்ப்பசையும் , நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான முறையில் ஹென்னாவைச் சேர்த்துப் போட வேண்டும். ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது ஒரே இடத்தில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்…

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?
கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன்
தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்
சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும். eegarai1.wordpress.com

விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் திருமாவளவன்


நேற்று (21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல – தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர். அனைத்து அமைப்புக்களும்’ பங்கேற்கும் என்று அழைப்பிதழில் குறிபிடப்பட்டிருந்தது – அதற்கேற்ப த.த.ஜ தவிர பெரும்பாலான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அமைப்புக்களும் கலந்துக்கொண்டன.

மேலும் படிக்க…

குஜராத் கலவரம் வழக்கு : சிறப்பு விசாரணைக்குழு முன் நரபலி மோடி 27ம் தேதி ஆஜர்

Top world news stories and headlines detail

ஆமாதாபாத் : குஜராத் வன்முறைகள் தொடர்பாக சாட்சியம் அளிக்க வரும்படி, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அனுப்பிய சம்மனுக்கு இணங்கி வருகிற 27ம் தேதி மோடி விசாரணைக்குழு முன் ஆஜராகிறார்.

குஜராத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின் வன்முறைகள் நிகழ்ந்தன. இதில், ஏராளமானோர் பலியாயினர். இந்த வன்முறைகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இந்தக் குழு, குஜராத் முதல்வர் மோடிக்கு சம்மன் அனுப்பியது. அதில் மேலும் படிக்க…

வினாத்தாள் மாறிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண்? 10ம் வகுப்பு தேர்வு குளறுபடியை சரிசெய்ய திட்டம்

Front page news and headlines today

சென்னை : ”பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் நடந்த தமிழ் முதல்தாள் தேர்வில் கேள்வித்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். அப்பாடத்தில் அவர்கள் தோல்வி அடையாத வகையில், தேர்வுத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்,” என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உறுதி அளித்துள்ளார். குளறுபடி நடந்த இடங்களில் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், ஆசிரியர்களை, இனி தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்றும், அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்தார்.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, நேற்று முன்தினம் துவங்கியது. எஸ்.எஸ்.எல்.சி., – மெட்ரிக் – ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் ஆகிய நான்கு போர்டு மாணவர்களும் கலந்து ஒரு அறையில் தேர்வெழுத வைக்கப்பட்டனர். முதல் நாள், தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளியில
மேலும் படிக்க…

3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை தற்கொலை: காளி அம்மனுக்கு பலிகொடுத்த கொடூரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்த இந்து ஒருவர் , காளிக்கு தனது மூன்று குழந்தைகளையும் கழுத்தை அறுத்து பலி கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள மிர்புர்காஸ் நகரை அடுத்துள்ள மிர்வா கோர்ஜர்னி என்ற இடத்தில் வசித்து வந்தவர் திகம்தாஸ் மெக்வாரின் பெமோமல் (26).

இந்து குடும்பத்தை சேர்ந்த இவர் தனது தாய், மனைவி, குழந்தைகள் பார்வதி (6),ரெனா (4),ஆர்த்தி (1), மற்றும் சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். திகம்தாஸ் காளி அம்மனை தினமும் வணங்கி வந்தார். தனது வீட்டின் முதல் மாடியில் சிறிய காளி கோயில் ஒன்றை கட்டி, அதற்கு தினமும் பூஜைகள் நடத்தி வந்தார். நேற்று காலை அவரது மனைவி வெளியே சென்றிருந்தார். அப்போது திகம்தாஸ், குளித்து விட்டு, தனது தாயார் மற்றும் உறவினர் களை சந்தித்து காளிக்கு பரிகாரம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

பின், தனது வீட்டின் முதல் மாடியில் உள்ள காளி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்ட திகம்தாஸ், திடீரென ஆவேசமடைந்தவாக தனது மூன்று குழந்தைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக கழுத்தை அறுத்து கொலை செய்தார்.பின்னர், தனது கையின் மணிக்கட்டு பகுதியில் உள்ள நரம்புகளை அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட, மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த அவரது மனைவி வீடு திரம்பினார். வீட்டின் முதல் மாடிக்கு சென்று பார்த்த அவர் தனது மூன்று குழந்தைகளும், கணவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திகம்தாஸின் சகோதரர் முல்சந்த்திடம் கேட்டபோது,’ திகம்தாஸ் ஒரு காளி பக்தன். கோயில் பூசாரி ,’ என்று மட்டும் தெரிவித்தார்.

dinamalar.com

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டக் காட்சிகள் -அதிர்ச்சி வீடியோ!

பக்தியின் பெயரால் மக்களை மாக்களாக மாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரமப் போலிச்சாமியார்களின் வரிசையில், கல்கி பகவான் என்ற பெயரில் விஜயகுமார் என்ற கல்கி விஜயகுமாரும் அவரின் மனைவியும் இணைகிறார்கள். அவர்கள் நடத்தும் ஆசிரமத்தில் ஆண்களும் பெண்களும் போதையில் பைத்தியங்களைப் போன்று நடமாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க…

நக்கீரன் அலுவலகம் முற்றுகை: தவ்ஹீத் ஜமாஅத் அதிரடி அறிவிப்பு!

நான் தான் நபிகள் நாயகம் என்ற தலைப்பிட்டு மார்ச் 23-26 நக்கீரின் இதழில் வெளியான செய்தியை கண்டித்து இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாளை (25-3-2010) சென்னையில் உள்ள நக்கீரன் அலுவகத்தை முற்றுகையிடும்!

நாள்: 25-3-2010

நேரம்: மாலை 3.30 மணி

இடம்: நக்கீரன் அலுவலகம், சென்னை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் அதிரடி ஆர்ப்பாட்டத்திற்கு அணி அணியாய் வாருங்கள்!

முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் நக்கீரனுக்கெதிரான உங்கள் கண்டனங்களை பதிவு செய்யுங்கள்!

ஆந்திர முஸ்லிம்களுக்கு அளித்த இட ஒதுக்கீடு செல்லும்: அதிரடி தீர்ப்பு அளித்த சுப்ரிம் கோர்ட்டுக்கு நன்றி!

ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு அளித்த நான்கு சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்றும் இதை நிறுத்தி வைத்த ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லாது என்ற இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

நியாயத்தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் மற்றும் இதற்கு மேல் முறையீடு செய்து முயற்சி செய்த ஆந்திர அரசுக்கு முஸ்லிம்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!

மேலும் நீதிபதி பாலகிருஷ்ணன் அடங்கிய நிதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் இது பற்றி முழுவதும் விசாரிக்க ஐவர் அடங்கிய பென்ஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு பற்றி ஆங்கிலத்தில் அறிய:

NDTV

PTINews

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானிக்கு எதிராக சாட்சியம்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர் அத்வானிக்கு எதிராக, அவரது பாதுகாப்பு முன்னாள் அதிகாரி அஞ்சு குப்தா சாட்சியம் அளித்தார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு உத்திரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக, அத்வானியின் பாதுகாப்பு முன்னாள் அதிகாரி அஞ்சு குப்தா ஐ.பி.எஸ். சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக் கிழமை (26-03-2010) அன்று நடைபெற்ற போது, அஞ்சு குப்தா ஆஜரானார். பாபர் மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று அஞ்சு குப்தா கூறினார்.

1990 ஐ.பி.எஸ். பிரிவைச் சேர்ந்த அஞ்சு குப்தா தற்போது டெல்லியில் இந்திய உளவு அமைப்பான “ரா”வில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

inneram.com

எஸ்ஐடி முன்பு நரபலி மோடி ஆஜர்: 3 மணி நேரம் விசாரணை- ராகவன் வரவில்லை

modi

டெல்லி: குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈஷான் ஜாப்ரி உள்பட 60க்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைக்கு இன்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி [^] ஆஜரானார். ஆனால் விசாரணைக் குழுத் தலைவர் ஆர்.கே.ராகவன் அப்போது இல்லை.

2002ம் ஆண்டு நடந்த குஜராத் மதக் கலவரத்தின்போது குல்பர்க் சொசைட்டியில் ஜாப்ரி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் படிக்க…

ஏப்ரல் ஃபுல்: ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!

ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சிலர் சிலரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவித்து வருகின்றனர்.

April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது

முஸ்லிம்களில் சிலரும் இதை செய்து வருகின்றனர்.

எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.

ஒரே ஒரு நிழற்படம்

குஜராத் குத்புத்தீன் அன்ஸாரீஇந்த நிழற்படத்தை நினைவில் கொள்ளாத இந்தியர்கள் வெகு குறைவு. குஜராத்தில் முஸ்லிம்களை சங்க் பரிவார குண்டர் கும்பல் 2002இல் கொன்று குவித்ததில் இவரது முகம் பரவலாக அறிமுகமானது.

இவர் யார்? இந்தப் படத்தின் பின்னணி என்ன? என்பனவற்றை விரிவாக அலசி ‘உயிர்மை’ இதழில் ஒவ்வொரு இந்தியரும் அறிய வேண்டிய ஓர் ஆக்கம் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கெ. மோகன்லால் நேர்கண்டு எழுதியதைத் தமிழில் ஸ்ரீபதி பத்மநாமா வழங்கியுள்ளார். அவர்கள் அனைவருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள்! – சத்தியமார்க்கம்.காம்

“நான், குத்புதீன் அன்சாரி! சமீபத்தில் ஓர் அடையாளச் சின்னமாக ஆனேன் –

டெல்லிக்கு இந்தியா கேட் போல; ஜெய்ப்பூருக்கு ஹவா மஹால் போல; கொல்கத்தாவுக்கு ஹவுரா பாலம் போல; மும்பைக்கு கேட் வே ஆஃப் இந்தியா போல; அகமதாபாதுக்கு ஓர் அடையாளச் சின்னம் இருக்கவில்லை. அடையாளச் சின்னம் இல்லாத நகரங்களுக்கு முகம் இல்லை. தனிப்பட்டுத் தெரிய ஓர் அடையாளமில்லாமல் அகமதாபாத் இருந்தபோதுதான், நான் அந்தக் குறையை நீக்கினேன். நுரைக்கின்ற கண்ணீரும் பத்திரிகைக் காகிதத்தில் உறைந்துவிட்ட என் அலறலும் கை கூப்பியடி நிற்கும் என் கெஞ்சலும் நெருங்கிவிட்ட மரணத்தை உங்களுக்குக் காட்டின. நான் அகமதாபாத்தின் அடையாளச் சின்னமானேன்.” மேலும் படிக்க…

Google Buzz பற்றிய ஒரு பார்வை

கூகிள் பற்றிய முன்னுரை கொடுக்கக்கூடிய அளவில் கூகிள் இல்லை என்பதால் நேராக விசயத்திற்கு வருகிறேன். கூகிள் பல பல புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது. அதில் சமீபத்திய அறிமுகமான Google Buzz பற்றிய செய்திகள் மற்றும் என் பார்வை தான் இந்த இடுகை.
இணைய உலகில் பெரும்பாலான விசயங்களில் கூகிள் முன்னணியில் இருந்தாலும் சமூக வலையமைப்பு தளங்களான Facebook, Twitter வளர்ச்சி கூகுளை உறுத்திக்கொண்டே இருந்தது ஆர்குட் என்ற பிரபலமான சேவையை தன் வசம் வைத்து இருந்தும். முன்பு Facebook Twitter தளங்கள் மேலை நாடுகளில் தான் பிரபலமாக இருந்தது ஆனால் தற்போது குறிப்பிடத்தக்க இணைய சந்தையான இந்தியாவிலும் அதிகம் இவற்றை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்,  எனவே அந்த விசயத்தில் நாம் பின் தங்கிவிடக்கூடாது என்பதற்காக கூகிள் ஆரம்பித்தது தான் இந்த Google Buzz.
கூகிள் மின்னஞ்சலை துவங்கிய போது இருந்தே திறமையான ஒரு மார்க்கெட்டிங் முறையை பயன்படுத்தி வருகிறது, அதாவது அழைப்பு இருந்தால் மட்டுமே முதலில் பயன்படுத்த முடியும். கூகிள் மின்னஞ்சல் துவங்கப்பட்ட போது அழைப்புக்காக மற்றவர்களிடம் வேண்டியவர்கள் அதிகம், இவ்வாறு இதன் மீதான எதிர்பார்ப்பை கூட்டி விடுகிறது. அதே போல Google Buzz க்கும் இதே போல எடுத்தவுடன் அனைவருக்கும் இந்த வசதியை கொடுத்து விடவில்லை , சிலருக்கு கொஞ்சம் காக்க வைத்து கொடுத்தது. ஃபிகர் உடனே பிக்கப் ஆனா ஒரு த்ரில் இருக்காது அது மாதிரி தான் ;-)
Google Buzz பயன் என்ன?
நம்மோட எண்ணங்களை நம்மை பற்றிய செய்திகளை நம் நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு இடம். இங்கே எதை வேண்டும் என்றாலும் பகிர்ந்து கொள்ளலாம் படங்கள் வீடியோ உட்பட, அதற்க்கு நம்மை பின் தொடர்பவர்கள் அதில் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்வார்கள். உலகில் நடக்கும் அனைத்து செய்திகளையும் இதில் நாம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலர் காஃபி, சாப்பாடு சாப்பிட்டேன், தூங்கிட்டு இருந்தேன் என்கிற அளவில் அனைத்தையும் எழுதிக் கொண்டுள்ளார்கள்.
Google Buzz பற்றிய சில செய்திகள்
Google Buzz முதலில் துவங்கிய போது ஒருவர் அதிகளவில் தொடர்பில் உள்ளவர்கள் (மின்னஞ்சல் மற்றும் உரையாடி[chat]) மின்னஞ்சல் முகவரிகளை அதுவே பின்தொடருபவராக ஏற்படுத்தி விட்டது. இதற்கு அனைவரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதெப்படி என்னோட அனுமதி இல்லாமல் இதை நீங்கள் செய்யலாம்? என்று. கூகிள் எப்போதும் ஒன்றை துவங்கியவுடன் அதோடு நின்றுவிடுவதில்லை அதில் குறைகளை கேட்டு அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்து விடுகிறது. இதையும் காலம் தாழ்த்தாமல் இரண்டே நாட்களில் சரி செய்தது. மேலும் படிக்க…

ஒரு இலட்சம் கிராமங்களை சென்றடைய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு முடிவு.


சமீபத்தில் டெல்லியில் ஏகல் வித்யாலயாவினரால் நடத்தப்பட்ட ஏகல் கும்பா என்ற பெரியதொரு விழானினை தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார்.வடமேற்க்கு டெல்லியில் உள்ள ரோஹினி என்ற இடத்தில் ஸ்வர்ண ஜெயந்தி பூங்காவில் 12000 திற்க்கும் மேற்ப்பட்ட ஏகல் வித்யாலாவின் உறுப்பினர்களான காட்டில் வசிக்கும் மக்களும் மலையில் வாழும் மக்களும் குழுமியிருந்தனர். இந்த மூன்று நாள் மாநாட்டில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் வனவாசிகள் கலந்து கொண்டனர்.24 ஏக்கரில் 8 நகர மாதிரிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒரு பொதுக்கூட்டம் நடத்தும் இடமும், பெரும் கண்காட்சி நடத்தும் இடமும், வரவேற்பு நிலையமும், மருத்துவ வசதிகளும், மற்றும் அலுவலகங்களும் பூங்காவில் மற்ற 20 ஏக்கரை ஆக்ரமித்திருந்தது.

இந்தியாவின் ரிமோட் பகுதிகளுக்கு கல்வி பணிகளை எடுத்துச் செல்லும் சேவகர்களின் பணிகளை ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பாராட்டிப் பேசினார்.மேலும்,”இந்த கல்விதான் இந்தியாவை தலைசிறந்த நாடாக மாற்றி வருகிறது. எதார்தத்தில் ஏகல் வித்யாலயாக்கள் மூலமாக வெறும் பள்ளிக்கூடங்களை நடத்தவில்லை மாறாக நமது கனவு இந்தியாவை உருவாக்க முயற்ச்சி செய்து வருகிறோம்.”என்று உரையாற்றினார்.

கூடியிருந்த மக்களுக்கு பாபா ராம்தேவ் உரையாற்றும் பொழுது, “இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் பிரதம திட்டம் இந்த ஏகல் இயக்கம் தான். மனித உடல் கோயில் போன்றதாகும். அதில் கடவுளுக்கு சேவை செய்வதே இந்த ஏகல் வித்யாலயா” என்று பகர்ந்தார்.வி.ஹெச்.பி.யின் தலைவர் அசோக் சிங்கால் பேசுகையில்,”சுதந்திரத்தின் செளகரியங்கள் ஏதும் இக்கிராமங்களுக்கு சென்றடையவில்லை.” என்று வருந்தினார்,(!)

1988 ஆம் ஆண்டு ஜார்க்ண்டில் தொடங்கப்பட்ட ஏகல் வித்யாலயா இயக்கம் இன்று 22 மாநிலங்களில் 27110 கிராமங்களில் பரவியுள்ளது. இந்த ஏகல் பள்ளிகளில் 7,78,965 மாணவர்கள் பயிலுகின்றனர். இந்தியாவை ‘சீக்க்ஷித், ஸ்வஸ்த், மற்றும் சம்ரித்’ (அறிவுமிக்க, ஆரோக்கியமான, ம்ற்றும் வளமான) இந்தியாவாக உரூவாக்குவதே தமது குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். சாத்வி ரிதம்பாரா இறுதி உரை நிகழ்த்தஒரு இலட்சம் கிராம்ங்களை சென்றடைய வேண்டும் என்ற முடிவோடு கூட்டம் கலைந்தது.

hinduextremistworld.blogspot.com

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மதுபான கம்பெனியான கிங்ஃபிஷரின் டீ-சர்ட் அணிந்து விளையாட மறுப்பு.

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரராக விளங்குபவர் யூசுஃப் பதான். தற்ப்பொழுது ஐ.பி.எல் டுவெண்டி-20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடரில் அதிவேக சதமடித்தவர் யூசுஃப் பதான்.

டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியின் பொழுது மதுபான கம்பெனியான கிங்ஃபிஷரின் சின்னம்(லோகோ) உடைய டீ-சர்ட் அணிய மறுத்துவிட்டார். இதுத் தொடர்பாக யூசுஃப் பதான் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “கிங்ஃபிஷர் ஆல்கஹால்(மதுபானம்) தயாரிக்கும் நிறுவனமாகும். மதுபானத்தை அருந்துவதோ அல்லது அதன் விற்பனைக்குத் தூண்டுவதான விளம்பரத்தில் பங்கேற்பதோ எனது சொந்த மத நம்பிக்கைக்கு எதிரானது” என்றார் அவர்.

பரோடாவில் உள்ள மஸ்ஜிதில் தனது இளைமை பருவத்தில் வளர்ந்த இவருடைய தந்தை முஅத்தினாக(மஸ்ஜிதில் அதான் கூறுபவர்) பணிபுரிந்து வருகிறார்.
இதுத் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இது ஒரு சிறிய விஷயம். இது அவருடைய சொந்த விருப்பம். அவர் நன்றாக பேட் செய்கிறார். அணி நிர்வாகம் அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது” என்றார்.

இதற்கு முன் இத்தகையதொரு முடிவை தென் ஆப்ரிக்காவின் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரரான ஹாஷிம் ஆம்லா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நீண்டநாள் ஸ்பான்சராக செயல்பட்டுவரும் பீர் கம்பெனியான கேசில் லேகர் என்ற நிறுவனத்தின் டீ சர்ட்டை அணிய மறுத்தார். இதற்கு தென் ஆப்பிரிக்க அணியும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

கள்ள பாலியல் உறவு, மது அருந்தவதற்கு துபை இரும்பு கரம்

வளைகுடா நாடுகளிலேயே உலகப் பொதுவர் மாநகர் (Cosmpolitan city) என்று பெயர் எடுத்த துபையில் ஒழுக்க கேடுகளான செயல்கள் தற்போது இரும்புக் கரம் நீட்டி தடுக்கப்பட்டு வருகின்றன.

இரு நுற்றாண்டு காலம் சிறப்பு கொண்ட துபை தனித்துவமிக்க கலாச்சார, பாரம்பரியம் கொண்ட நகரமாக இருந்த வேளையில் கடந்த 50 ஆண்டுகளாக உலக வணிக வர்த்தக சந்தையாக முன்னேறிய வேளையில் அமெரிக்க, ஐரோப்பியா, ரஷ்யா போன்ற நாடுகளின் வர்த்தக மற்றும் சுற்றுலாத் தொடர்புகளால் உள்ளூர் கலாசாரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உலக பொதுவர் மாநகரமாக பரிமாற்றம் கண்டது. ஆனால் அந்தத் தொடர்பு ஒழுக்க கேடுகளான மாற்றங்களை கொள்ளாத வகையில் தற்போது இரும்புக் கரம் நீட்டப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை (04-04-2010) அன்று பொது இடத்தில் மதுஅருந்தி கட்டியணைத்து முத்தமிட்ட பிரிட்டன் ஜோடியை ஒரு மாதம் சிறையில் அடைத்து தண்டனை வழங்கியுள்ளது துபை நீதிமன்றம். உணவகம் ஒன்றில் கட்டியணைத்து முத்தமிட்ட இந்த 20 வயது ஜோடி, குழந்தைகளுடன் அங்கு உணவருந்திய அரபுத் தாய் ஒருவர் கண்டித்ததின் தொடர்பில் ஏற்பட்ட நடவடிக்கையில் நீதிமன்றம் அந்த பிரிட்டன் ஜோடிக்கு இந்த தன்டைனையை வழங்கியுள்ளது.
மேலும் சென்ற மாதம் ஆபாச குறுந்தகவல் பரிவர்த்தனை செய்த இந்திய ஜோடி ஒன்றுக்கும் மூன்று மாதம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல அங்கு  புகழ்பெற்ற ‘ஜுமைரா’ எனும் கடற்கரை பூங்காவில் உடலறுவு கொண்ட பிரிட்டன் ஜோடியை மூன்று மாதம் சிறையில் அடைத்து, அவர்களது ‘வீசா’வினை ‘கேன்சல்’ செய்து நாட்டை விட்டு வெளியேற்றியது.

எல்லாவற்றையும்விட மேலாக பிரிட்டன் பெண் ஒருவர் குடித்து விட்டு யாரிடம் உடலுறவு கொண்டோம் எனத் தெரியாத சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். விடுமுறையில் துபை வந்த அவர் ஓட்டல் ஒன்றில் குடித்துவிட்டு அடுத்த நாள் தன்னை ஓட்டல் ஊழியர் ஒருவர் கழிவறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினரிடம் புகார் செய்தார். ஆனால் ஓட்டல் நிர்வாகம் இதை மறுத்தது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் அந்தப் பெண்ணிடம் உடலியல் சோதனை செய்ததில் அவர் மது அருந்திய பின்பு தனது காதலருடன் விருப்பப்பட்டே உடலுறவு கொண்டுள்ளார் என்பதும் அவர் போதையில் இருந்ததால் யாருடன் உடலுறவு கொண்டோம் என்பதும், இரவில் என்ன நடந்தது என்றும் தெரிந்திருக்கவில்லை என்றும் மேலும், அவர் திருமணம் ஆகாமலே உடலுறவு கொண்டதற்காகவும், தவறாக புகார் அளித்தற்காகவும் அவர் சிறையில் தள்ளப்பட்டார்.

Abdul Kader.

எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை!

சென்னை: சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 15 கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், டிசர்ட் உள்ளிட்டவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

MGR Medical Varsity

வரும் கல்வியாண்டு முதல் இந்த பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் சாதாரண ஃபார்மல் ஆடைகளையும், மாணவிகள் சல்வார் அல்லது புடவை அணிய வேண்டும் என பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜீன்ஸ், டிசர்ட், ஸ்கர்ட், மிடி, ஸ்போர்ட்ஸ் ஷூ, நகைகள், பெர்ஃபியூம்கள் பயன்படுத்துவதை பல்கலைக்கழக நிர்வாகம் தடை செய்துள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் இந்த சட்டதிட்டங்கள் முழுமையாக அமலுக்கு வரும் என பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் சென்னையில் நிருபர்களிடம் தெரிவிக்கையில், ‘நான் இளைஞர்கள் விருப்ப ஆடை அணியக்கூடாது என நினைப்பவன் அல்ல.

மருத்துவம் சார்ந்த சூழலில் சில ஒழுக்க முறைகளை நாம் பின்பற்றியாக வேண்டும். பூக்கள், வாசனை பொருட்கள், விரல் நகங்கள் போன்றவை நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.

மேலும் நோயாளிகளின் மனதை திசை திருப்பும் வகையில் மாணவிகள் ஆடைகள் அணிவதை தவிர்ப்பது நல்லது என்ற அடிப்படையில் மாணவிகள் டீசர்ட் போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளோம்’ என்றார்.

ஆனால், துணைவேந்தரின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ‘மிக சொற்பமான விலையில் டி-சர்ட் கிடைக்கும். ஆனால், ஃபார்மல் செட் வாங்க நிறைய செலவாகும்.

அதோடு, டிசர்டை துவைத்து மீண்டும் அணிவது மிகவும் சுலபமானது. ஆனால் ஹாஸ்டல்களில் ஃபார்மல் ஆடைகளை தயார் செய்வது பெரிய வேலை. அதெல்லாம் எங்களுக்கு ஒத்து வருவது கஷ்டம்’ எனக் கூறுகின்றனர்.

thatstamil

விதர்பா பிரச்சினையைத் தீர்க்க இஸ்லாமிய வங்கியே தீர்வு- எம்.எஸ்.சுவாமிநாதன்

சென்னை: விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகியுள்ளதைத் தீர்க்க இஸ்லாமிய வங்கி முறை சரியான தீர்வாக அமையும் என்று இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என புகழப்படும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

கருணா ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விதர்பா பகுதியில், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வசூலிப்பதால் அங்குள்ள விவசாயிகள் பெரும் கடனாளியாக மாறியுள்ளனர். இதனால் கடன் தொல்லை தாங்க முடியாமல் அவர்கள் விரக்திக்குத் தள்ளப்பட்டு தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

நேற்று கூட 30 பேர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வட்டியே இல்லாமல் கடன் கொடுக்கும் இஸ்லாமிய வங்கி முறையை அங்கு அமல்படுத்த வேண்டும். அதுதான் அங்குள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும்.

சிறு வயதில் எனது பெற்றோர் என்னிடம் இருந்த நகைகளை காந்திஜியிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர். இவ்வாறு தானமாக பெறப்பட்ட நகைகளை காந்திஜி ஏலத்தில் விட்டு அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு ஹரிஜன மக்களுக்கு உதவினார் காந்தி. எனது தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் . நம்மிடம் உபரியாக உள்ளதை இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறுவார். அதனபடி என்னிடம் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் கை வளையத்தை காந்தியிடம் கொடுத்தேன் என்றார் சுவாமிநாதன்.

கருணா ரத்னா விருது என்பது சுற்றுச்சூழலியல் மற்றும் சைவம் மீதான அகிம்சை, அன்பு .ஆகியவற்றை சிறந்த முறையில் வெளிப்படுத்திப் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் விருதாகும். சென்னையைச் சேர்ந்த கருணா இன்டர்நேஷனல் அமைப்பு இந்த விருதுகளை வழங்குகிறது.

இந்த விருதினை இஸ்லாம் மற்றும் சைவம் குறித்த ஆய்வுக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற முசாபர் ஹூசேன், புளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த சின்னி கிருஷ்ணா, சிபிஆர் பவுண்டேஷனைச் சேர்ந்த நந்திதா கிருஷ்ணா ஆகியோர் உள்ளிட்ட நான்கு பேர் பெற்றனர். அவர்களுக்கு விருதுடன் தலா ரூ. 1 லட்சம் பரிசும் அளிக்கப்பட்டது.

ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு!

“பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளது” என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விசா,​​ விமான பயணச்சீட்டு,​​ தங்குமிடம் ஆகியவை வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும். இவ்வேலைக்குப் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 22 முதல் 26 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும்,​​ தேர்வு செய்யப்படும் வேலையில் ஒரு ஆண்டு அனுபவம் பெற்ற,​​ திருமணமாகாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தட்டச்சு செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பத்துடன்,​​ கல்வி,​​ அனுபவம்,​​ பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களுடன் ஏப்ரல் 10-ம் தேதி திருச்சி மற்றும் திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்குக் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்:

99403 93617,​ 94436 90272.

inneram.com

11 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்து கொன்ற 11 ஆம் வகுப்பு மாணவன்!

Madurai during Monsoon Season

11 வயது சிறுமியை 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் பலாத்காரம் செய்து கொன்ற அதிர்ச்சியளிக்கும் சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மாணவனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் டவுன் காவல்துறை சரகம் பெரியமறவன் குளத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் 11 வயது மகள் அருணா, கடந்த 3-ந்தேதி குப்பை மேட்டில் பிணமாக கிடந்தார்.

இது தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெரியமறவன் குளத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பாலசந்தர்(16) என்பவர்தான் அருணாவைக் கொலை செய்தது உறுதியானது. காவல்துறைனர் தன்னைத் தேடுவதை அறிந்த பாலச்சந்தர் திருமங்கலம் துணை தாசில்தாரிடம் சரண் அடைந்தார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட பாலசந்தர், சிறுமையை எவ்வாறு கொன்றார் என்பதை வாக்குமூலமாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

அதில், “கடந்த சனிக்கிழமை இரவு பெரியமறவன் குளத்தில் கோவில் விழாவையொட்டி நாடகம் நடந்தது. நாடகம் பார்த்துவிட்டு அருணா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். அவளை அப்பகுதியில் உள்ள வயல் காட்டுக்குக் கடத்திச் சென்றேன்.

அங்கு பலாத்காரம் செய்தேன். இதில் அருணா மயங்கி விட்டாள். பயந்துபோன நான் விசயத்தை வெளியே சொல்லி விடுவாளோ? என கருதி அங்கு கிடந்த மின் வடத்தால் அருணாவைக் கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் பிணத்தை அங்கு உள்ள குப்பை மேட்டில் வீசி விட்டு தலை மறைவானேன். காவல்துறையினர் என்னைத் தேடுவதை அறிந்து சரண் அடைந்தேன்” என்று கூறியுள்ளார்.

சிறுமியைப் பள்ளி மாணவன் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

inneram.com

இஸ்லாத்தை தழுவிய குடும்பத்தினர்

கடையநல்லூர் அருகிலுள்ள மேலக்கடையநல்லூரைச் சார்ந்த ஒரு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இயற்கை மார்க்கமாகிய இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள்  இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை விளக்கி ஏகத்துவ உறுதி மொழி கலிமாவைச் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்கள் மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகக் கூறினர். வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்றபட்ட பல்வேறு மனோரீதியான..மேலும் படிக்க…

மாரடைப்பால் ஆபத்தான நிலையில் இருந்தாலும் காப்பாற்றி விடலாம்- ஐரோப்பிய மருத்துவர் குழு ஆய்வு முடிவுகள்


மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு முதலில் உடல் குளிர்ந்து பிறகு அவர்களின் இதயத் துடிப்பு அடங்கி உயிரிழப்பு ஏற்படும்.இப்போது அம்மாதிரிச் சூழ்நிலைகளில் நின்று போன இதயத்தை மீண்டும் இயங்க வைத்து பாதிக்கப் பட்டவரை உயிர் பிழைக்க வைக்க முடியும் என ஐரோப்பிய மருத்துவர் பேராசிரியர் மார்ட்கேஸ்டிரன்  தலைமையிலான ஒரு குழு ஆய்வு மூலம் நிரூபித்துள்ளது.

ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த இந்த மருத்துவக் குழுவினர் ஐரோப்பாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மாரடைப்பால் பாதிக்கப் பட்ட 200௦௦ நபர்களிடம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது .200 பேரில் 182 பேர் இந்த முறையில் உயிர் பிழைத்தனர்.உயிர் பிழைத்தவர்களில் ௮௩ பேர் 66 முதல் 71 வயது நிரம்பியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்களின் கண்டுபிடிப்பின்படி மாரடைப்பால் பாதிக்கப் பட்ட நபரின் மூக்கின் வழியாக `ரினோசில்` (பேட்டரியால் இயங்கும் ஒரு வகைப் பொருள்) என்ற கருவியின் மூலம் மூளையில் சிறிதளவு குளிர்ச்சியை ஏற்படுத்து நின்று போன இதயத்தை மீண்டும் இயங்க வைக்க முடியும்  எனக் கண்டறிந்துள்ளனர்.

ஒபாமாவின் ‘மாற்றம்’, மாறாது நிலைக்குமா?

“இஸ்லாமியத் தீவிரவாதம்”, “ஜிஹாதி பயங்கரவாதம்” தொடங்கி, “இன்னொரு சிலுவைப் போர்” வரை, இஸ்லாத்தின் மீது காழ்ப்பைக் கக்கும் சொல்லாட்சிகளை உலகுக்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மூலமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட களங்கத்தை, “மாற்றம்” என்ற ஒற்றை முழக்கத்தோடு பதவிக்கு வந்திருக்கும் அதிபர் பராக ஒபாமா துடைக்க முயலுவதாகத் தெரிகிறது.

‘அமெரிக்காவின் பாதுகாப்புத் தொலைநோக்கு’ எனும் திட்ட வரைவுகளிலிருந்து “இஸ்லாமியத் தீவிரவாதம்” எனும் சொல்லை நீக்குவதற்கு அண்மையில் ஒபாமா மேலும் படிக்க…

சுன்னத் ஜமாஅத்- பெயரை மாற்றுங்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை

சுன்னத் வல் ஜமாஅத்தினரே இது சுன்னத்தா? ஷிர்க்கா?

சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.

சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

இங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும். மேலும் படிக்க…

தமிழ்நாடு அரசின் சின்னமாக ஏன் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைய கூடாது?

இந்தியா மதசார்பற்ற நாடு. குறிப்பாக தமிழகம் சமயசார்பற்ற, அமைதி பூத்துக் குலுங்கும் சமதர்மபூமி. பெரியார், அண்ணா, காயிதே மில்லத் போன்ற பெருந்தகைகளால் பக்குவப் படுத்தப்பட்ட மண் இது.

ஆனால் தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது. அது எந்த ஊர் கோவில் என்பதே பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அந்த கோபுரம் உண்மையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர கோவில் கோபுரமாகும். தமிழகத்தில் ஸ்ரீவில்லிப் புத்தூரில் மட்டும்தான் கோவில் உள்ளதா?

1000 ஆண்டுகால பழமை கொண்ட தஞ்சாவூர் பெரிய கோவில், கட்டிடக்கலையில் சிறப்பிடம் பெற்ற மதுரைக்கோவில், ஸ்ரீரங்கம் கோவில் போன்றவைகள் இடம்பெறாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம் இடம்பெற்றதற்காக நாம் காரணங்கள் தேடி அலைய வேண்டியதில்லை. ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த குமாரசாமி ராஜா தமிழக முதலமைச்சராக இருந்துபோது தனது ஊரின் கோவிலை அரசு சின்னமாக அறிவித்து விட்டார். அவ்வளவுதான். ஆனால் தமிழக, அரசின் முக்கிய ஆவணங்களில், கோப்புகளில் கோபுரம் இடம்பெறுவது நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நெருடலையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியிருப்பது உண்மை.

மேலும் படிக்க…

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: பாதுகாப்பு இல்லாத பாதுகாப்புத்துறை!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 80 சி.ஆர்.பி.எஃப். படையினர் கொல் லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தியும் மற்றும் சுற்றிவளைத்து சரமாரியாக சுட்டும் கொன்று குவித்துள்ளனர்.

நக்சலைட்டுகளின் 43 ஆண்டு கால வரலாற்றில் இது படுபயங்கர தாக்குதலாக கருதப்படுகிறது.

8 மாநிலங்கள், 200 மாவட்டங்கள் என நக்சலைட்டுகளின் ஆதிக்கம் வனப்பகுதிகளில் கொடி கட்டிப் பறக்கிறது.

மாவோயிஸ்ட்டுகளின் செயல் பாட்டினை ஒடுக்க கிரீன் ஹன்ட் என்ற பெயரில் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதல் நடவடிக்கையினைக் கண்டித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு நக்சல்கள் ஏழு மாநிலங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தி னர். அதற்கு ஓரளவு ஆதரவும் கிடைத்தது கவலைக்குரிய ஒன்றாக கருதப்பட்டது.

நக்சல் தாக்குதலின்போது மலைபதுங்கு இடங்களில்  இருந்து, கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நக்ச லைட்டுகளின் தாக்குதலின் போது சி.ஆர்.பி. எஃப். படையினர் பலர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

150க்கும் மேற்பட்டோர் இன்ன மும் காணவில்லை. கொடூர மான தாக்குதலின் போது தப்பிஓடி விட்டார்களா? அல்லது மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப் பட்டார்களா? என்ற விபரம் இன்னமும் கிடைக்கவில்லை என பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் வேட்டையோடு, காணாமல் போன பாதுகாப்புப்படையினரையும் தேட வேண்டிய கூடுதல் சுமை இப்போது அதிகரித்துள்ளது.

மறைந்திருந்து தாக்கும் நக்சல்கள் கோழைகள், அவர்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் துடைத்தெறியப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பகிரங்கமாக சூளுரைத்த மூன்றா வது நாளில் இந்தக் கொடூர தாக்குதலை நக்சலைட்டுகள் நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க…

கொதிக்க கொதிக்க காய்ச்சி… குழந்தைங்க மேல ஊத்தி.. ‘வீல்’ பாயசம்!

post thumbnailபக்தி என்ற பெயரில் உ.பி-யில் கடந்த 4-ம் தேதி நடந்த இந்த காட்டுமிராண்டித்தனம், வட இந்தியாவை அதிர வைத்துள்ளது! உத்தரப் பிரதேசத்தின் தெய்வீக நகரமான காசி என்கிற வாரணாசியில்தான் அந்த கொடூரம். அன்றைய தினம் மதியம், நகரின் இதயப் பகுதியான சோக்கில் உள்ள அகர்சன் மஹாஜனி மஹா

வித்தியாலயா எனும் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தம் குடும்பத்தினருடன் கூடியிருந்தனர். கூட்டத்தின் நடுவே 18 அடுப்புகளை வரிசையாக மூட்டி அதன் மீது வைக்கப்பட்டிருந்த பானைகளில் அரிசி, சர்க்கரை மற்றும் பாலுடன் சேர்த்து பாயசம் கொதித்துக் கொண்டிருந்தது. கொதி பானைகளுக்கு முன் ‘ஜெய் ஷீத்லூ மாதா!’ என்றும் ‘ஷீத்லூ மாதா கி ஜெய் ஹோ!’ என்றும் கோஷமிட்டார் நின்றிருந்த பூசாரி கோவிந்த் பகத். கூட்டத்தினர் அவருக்கு சாமந்திப்பூ மாலைகளை அணிவித்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு இருந் தனர். இதன் பேக்ரவுண்ட் மியூசிக்காக உடுக்கை மேளம் முழங்க… அதன் பிறகு, அங்கு பார்ப்பவர் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் கொடூரம் அரங்கேறியது. தன் 6 மாதப் பச்சிளங் குழந்தையை ஒரு தாய் பக்தியுடன் பூசாரியிடம்


கொடுத்தார்.மேலும் படிக்க..

Usb Drive ஐ பயன்படுத்தி மறந்துபோன பாஸ்வேர்ட் ஐ ரீசெட் செய்யலாம்.

பாஸ்வேர்ட்  ஐ கணனிக்கு கொடுத்தபின் அதனை மறந்து அவதிபடுபவரா நீங்கள்? உங்களுக்காகவே மைக்ரோசொப்ட் தமது விண்டோ எக்ஸ்பியில் Password Reset Disk ஐ உருவாக்கும் வசதியை கொடுத்துள்ளது.இதனை எவ்வாறு உருவாக்குவது என பார்போம்.

* முதலில் start ஐ கிளிக் செய்து control panel ஐ தெரிவு செய்யவும்.
*பின்னர் User Account பிரிவிற்கு சென்று உங்கள் Account  இல் கிளிக் செய்யவும்.

* இப்போது ஓபன் ஆகும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரில் prevent a Forgotten Password என்று காணப்படும் பிரிவில் கிளிக் செய்யவும்.

* உடனே Forgotten password  விசார்ட் கிடைக்கும். இனி உங்கள் பிளாஷ் டிரைவ் ஐ செருகவும். மேலும் படிக்க…

ஈரான் பிரச்னைக்கு பொருளாதாரத் தடை தீர்வல்ல: “பிரிக்’ கருத்து

பிரெஸிலியா, ஏப்.17: ஈரான் மீது புதிதாக பொருளாதார தடை விதிப்பது பிரச்னைக்குத் தீர்வாக அமையாது. இதை தூதரக நடவடிக்கைகள் மூலம்தான் தீர்க்க முடியும் என்றுபிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.பிரேஸில் தலைநகர் பிரெஸிலியாவில் நடைபெற்ற இரண்டாவது “பிரிக்’ நாடுகளின் கூட்டத்தில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில் ஈரான் மீது தடை விதிக்கலாம் என்ற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் “பிரிக்’ நாடுகளின் கூட்டமைப்பில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஈரான் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், ரஷிய அதிபர் டிமித்ரி மெத்வதேவ், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, பிரேஸில் அதிபர் லூயி டி சில்வா ஆகியோரிடம் இந்த விஷயம் குறித்து விவாதித்தார். இந்த விஷயத்தில் நான்கு நாடுகளின் தலைவர்களின்கருத்துகளும் ஒரே மாதிரியாக இருந்தது. அனைத்துத் தலைவர்களுமே, பொருளாதார தடை மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வாக அமையாது என்று தெரிவித்தனர். இத்தகைய பொருளாதார தடை விதிப்பால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவர். அதேசமயம் வசதி படைத்தவர்கள் மத்தியில் இந்த தடைவிதிப்பு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.வெளிப்படையான, அதேசமயம் திறந்த மனதுடன் பேச்சு நடத்தப்பட வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.ஈரான் மீது தடை விதிப்பது தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்து விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு ஈரான் பயன்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது என்று மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக ஈரான் தெரிவித்து வருகிறது. ஆனால் உலக நாடுகளோ, அணுகுண்டு தயாரிப்புக்குத்தான் இதை ஈரான் பயன்படுத்துகிறது என சந்தேகிக்கின்றன. பொருளாதார தடை விதிப்பதன் மூலம் அந்நாடு அணுகுண்டு தயாரிப்பதை தடுத்து நிறுத்த முடியும் என உலக நாடுகள் கருதுகின்றன. ஆனால் புதிய பொருளாதார தடை விதிப்பை இந்தியா ஆதரிக்காது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் தெளிவாகக் கூறிவிட்டார். புதிதாக விதிக்கப்படும் தடையில், நிதி புழக்கம் கட்டுப்படுத்தப்படுமே தவிர, பொருள்கள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட மாட்டாது என்றே தோன்றுகிறது.ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பது தொடர்பான அறிக்கையை ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கொண்டு வந்தது. இது தொடர்பான அறிக்கை தற்போது சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள 5 நிரந்தரஉறுப்பு நாடுகளின் பரிசீலனைக்கு விடப்பட்டுள்ளது.

dinamani.com

மது கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்து எழும் கிரிக்கெட் வீரர்கள்

இந்தியாவை தாயகமாகக் கொண்ட பெருமைக்குரியவர் மதுபானத்தின் “லோகோ”வை தனது ஆடையில் அணிய மாட்டேன் என்ற அறிவிப்பின் மூலம் உலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.   அவர் பெயர் ஹாஷிம்ஆம்லா, கேசில் லேகர் என்ற மதுபான நிறுவனத்தின் லோகோவை அணிய மாட்டேன் என அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் தீமைகளி ன் தலையாய தீமையான மது பானத்திற்கு எதிரான போர்க்குரலை எழுப்பினார். இதன் மூலம் தனது தாய்நாடான இந்தியாவுக்கும், தன்னை வளர்த்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கும் பெருமை சேர்த்தார்.

ஹாஷிம் ஆம்லாவை பின்பற்றி, இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதானும் தன்னளவில் மதுபானத்திற்கு எதிரான போர்ப்பரணியை தொடங்கியிருக்கிறார்.

ஐ.பி.எல் ட்வென்டி&ட்வென்டி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், அதிவேக சதமடிப்பதில் பேர் பெற்றவர். இவர் மதுபான விளம்பரங்களை தனது சட்டையில் அணிவதில்லை என்ற துணிச்சலான முடிவினை மேற்கொண்டிருக்கிறார்.
தனது ஆட்டங்களின் போது சட்டையில் இருந்த கிங்ஃபிஷர் நிறுவன லோகோவை துணியால் மறைந்து களமிறங்கினார். மதுபான தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கிங்ஃபிஷர் நிறுவனம் கிரிக்கெட் விளையாட்டின் முக்கிய ஸ்பான்சராகவும், பெங்களூரு ராயல் சேலஞ்ச் அணியின் உரிமையாளராகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் யூசுப் பதானின் இம்முடிவை சமூகநல ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.

குஜராத் மாநிலம் பரோடாவில் உள்ள பள்ளிவாசலின், மோதினார் என அழைக்கப்படும் தொழுகை அழைப்பாளரின் மகனான இவர், மதுபான ஒழிப்புக்கு தனது செயலின் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
-அபூசாலிஹ்,tmmk.in

ஆபாசம் நிறைந்த பைபிள். 1

ஆசிரியர் U. R. ISMAVELAN.

அன்பான  சகோதரர்களே
இறைவேதம் என்பது  அனைவரும்  படித்து  அதன்படி  ஒழுகுவதற்காக அருளப்பட்டதாகும் .பைபிள் கர்த்தரால்  அருளப்பட்டதாக நீங்கள்நம்புகிறீர்கள் பைபிளை படிக்குமாறு  உங்கள் பிரச்சார  சபையினர்  கூறுகின்றனர்.புனிதமானது  என்றும்  உயர்வானது  என்றும்  பிரச்சாரம்  செய்கிறார்கல் பைபிளை  படித்து  பார்த்தால் அதில்   ஏராளமான   ஆபாசமான கதைகளும் நம்ப முடியாத  கதைகளும் மலிந்து  உள்ளன.சில உதாரணங்கள் மட்டும்  இங்கு தரு கிறோம்.இதை  படித்தாவது  பைபிள் முழுவதும்  இறைவாக்கல்ல என்று நம்புவீர்கள்

1  தந்தையும் ஹுமாரத்திகளும்
பின்பு  லோத்து சோவாரியே குடியிருக்கப்  பயந்து  சோவரை  விட்டு  போய் அவனும்  அவனோடே  கூட அவனுடைய  இரண்டு  குமாரத்திகளும் மலையிலே வாசம்  பண்ணினார்கள்.அங்கே அவனும்  அவனுடைய இரண்டு  குமாரத்திகளும் ஒரு  கெபியிலே குடியுருந்தார்கள்.
அப்போது  மூத்தவள் இளையவளைப்  பார்த்து:நம்முடைய  தகப்பன் முதிர் வயதானார்:பூமியெங்கும் நடக்கிற முறையின்படி நம்மோட சேரப்  பூமியிலே ஒரு  புருஷனும் இல்லை .
மேலும் படிக்க..

இந்தியாவை ‘ஹிந்து’ நாடாக அறிவிக்க வேண்டும்- தீவிரவாதி பிரவீன் தொகாடியா.






இந்தியாவின் சவால்களை எதிர் கொள்ள இந்தியாவை இந்து நாடக அறிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது தீவிரவாத விஷ்வ ஹிந்து பரிஷத். இந்தியா ஹிந்து நாடாக இருந்தால் மட்டுமே இது முடியும் என அது கூறியுள்ளது. இதுகுறித்து தீவிரவாத வி.எச்.பியின் தலைவர் தொகாடியா கூறும்பொழுது “வி.எச்.பி அமைப்பு இந்தியாவை ‘ஹிந்து’ நாடாக மாற்ற விரும்புகிறது. எப்படி இங்கிலாந்து சீர்திருத்தத் திருச்சபையாளர்கள் (Protestants) மட்டும் ஆட்சி செய்து அதை உலகின் முன்னணி ஜனநாயகமாக திகழ செய்துள்ளார்களோ, அது போல இந்தியாவை ‘ஹிந்து’க்கள் மட்டும் ஆட்சி செய்தால் இந்தியா சந்தித்துள்ள தீவிரவாதம், சவால்கள் ஆகியவற்றை எதிர் நோக்க முடியும்.” என்று கூறியுள்ளார்.

மேலும் “இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான், இந்தியாவில் பெரிய மாற்றம் உண்டாகும், அது பா.ஜ.க அல்லது காங்கிரஸ் யார் ஆட்சி செய்தாலும் சரி” என கூறிய அவர் “இவ்வாறு அறிவிக்கப்பட்டால் யாரும் சிறுபான்மை இட ஒதுக்கீடு பற்றி பேச மாட்டார்கள், ‘வந்தே மாதரம்’ பாட எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.” என்றார்.”பண்டைய காலங்களில் இருந்து இந்தியா ‘ஹிந்து’ நாடு தான், அதை மீண்டும் உருவாக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலணாய்வுக் குழு விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் தீவிரவாதி பிரவீன் தொகடியாவுக்கு, திங்கள் கிழமை (19-04-2010) அன்று விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளது. எங்களுடைய பன்னாட்டுப் பொதுச் செயலாளர் தொகாடியா சிறப்புப் புலனாய்வுக் குழு முன் ஏப்ரல் 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்துள்ளதாக விசுவ ஹிந்து பரிஷத் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று 69 நபர்களுடன் கொல்லப்பட்ட மக்களவை முன்னாள் உறுப்பினர் இஹ்ஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி கொடுத்த புகாரின் அடிப்படையில் தொகாடியாவுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

பாசிச பயங்கரவாதம்.

செக்ஸ் நடிகை ரஞ்சிதா மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

eventsimg

சென்னை: நித்யானந்தன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்றிருந்த ரஞ்சிதா மீது நடிவடிக்கைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆர்.சி.மனோகரன் இன்று ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில் கூறி இருப்பதாவது:

ஆன்மீகப் பணிகளில் பிரபலமான நித்யானந்தா சாமியாருடன் பிரபல நடிகை ரஞ்சிதா படுக்கையில் இருந்த காட்சி சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. நித்யானந்தாவுடன் ரஞ்சிதா இருக்கும் படங்கள் பத்திரி கைகளிலும் வெளியானது.

இது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற ஆபாச காட்சிகள் மக்கள் மனதை கெடுக்கக் கூடியதாகும்.

இளைய தலைமுறையினரும், பெண்களும் சமுதாய சீரழிவில் சிக்கி விட இது காரணமாக அமையலாம். எனவே ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட நடிகை ரஞ்சிதா மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த மாதம் தபால் மூலம் புகார் கொடுத்தேன்.

ஆனால் போலீஸ் கமிஷனர் என் மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே நடிகை ரஞ்சிதா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறி உள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Entertainment News:

செக்ஸ் சாமியார் நித்தியானந்தா கைது – ரஞ்சிதா என்ன ஆனார்?

கர்நாடக மாநிலம் பிடதி என்ற இடத்தை தலைமை இடமாகக் கொண்டு உலகின் பல்வேறு இடங்களிலும் ஆசிரமங்கள் நடத்தி வந்தவர் பரமஹம்ச நித்யானந்தா. பிரமச்சர்யத்தை போதித்த நித்யானந்தா தன்னுடைய வசீகரமான பேச்சால் உலகம் முழுவதிலும் பக்தர்களை பெற்றவர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 3 ம் தேதி அன்று தனியார் தொலைக் காட்சிகளில் நித்யானந்தா பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளி பரப்பப் பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்கள் அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கினர்.

அதன் பின் தலைமறைவான செக்ஸ் சாமியார் நித்யானந்தா அவ்வப்போது தன்னுடைய விளக்க விடியோவை தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டு வந்தார்.  சில தனியார் தொலைக் காட்சிகளுக்கும் பேட்டி அளித்து வந்தார். போலி சாமியார் நித்யானந்தாவுக்கு  சேவை செய்த நடிகை ரஞ்சிதாவும் தலைமறைவானார்.

இந்நிலையில் கர்நாடக மாநில காவல்துறைக்கு சாமியார் நித்யானந்தா இமாச்சல பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக் வந்த தகவலை அடுத்து கர்நாடக காவல்துறை இமாச்சல பிரதேசத்துக்கு விரைந்தது. இமாச்சல பிரதேச காவல்துறையினரின் உதவியுடன் சோலன் என்ற  இடத்தில் பதுங்கி இருந்த சாமியாரை காவல்துறை கைது செய்தனர். கைது செய்யப் படும் போது வேறு யாரும் அவருடன் இருந்தார்களா என்பது குறித்த தகவல்கள் கிடைக்க வில்லை.

சாமியாரை பெங்களூருக்கு கொண்டு வரும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார்கள் எனத் தெரிகிறது. 50 நாட்களாக காவல்துறைக்கு தண்ணி காட்டிய நித்யானந்தாவை விசாரணை  நடத்த ஏதுவாக  காவல்துறையினர் போலீஸ்  காவலில் எடுத்து விசாரிப்பார்கள் எனத் தெரிகிறது.

அவரிடம் நடத்தப் படும் விசாரணையில் நடிகை ரஞ்சிதா குறித்த மர்மம் விலகலாம் என்றும் எதிர் பார்க்கப் படுகிறது. சாமியார் நித்யானந்தா மீது அமெரிக்காவிலும் பாலியல்  புகார் அளிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திரா கோர்ட்டு, சானியா, சோயிப் மாலிக் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு!

Shoaib Malik Sania Mirza wedding photos

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திரா கோர்ட்டு, சானியா, சோயிப் மாலிக் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்ய நேற்று உத்தரவு இட்டது.  மஸ்லுமின்-உம்மதை முகமதியா என்ற முஸ்லிம் அமைப்பின் தலைவர் மௌலிம் மோஸின் பின் உஸைன், சோயப் மாலிக்கின் தந்தையின் பெயர்கள் இரண்டு நபர்கள் இருப்பது மாதிரி குறிப்பிடப் படுகின்றன. சானியா, சானியா தந்தை- இம்ரான் மிர்ஜா, அஜாருத்தீன், இரு காஜிக்கள் உட்பட 14 பேர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

செக்ஸ் சாமியார் நித்யானந்தா ஆசிரமத்தில் செக்ஸ் ஒப்பந்தம் போட்டு சீடர்கள் சேர்ப்பு !

Front page news and headlines today

பெங்களூரு: நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் சேரும் பக்தர்களிடம் ஒப்பந்த ஆவணத்தில் செக்ஸ் தொடர்பு கொள்ளவும் சம்மதம் தெரிவிக்கும் ஒரு காலமும் சேர்க்கப்பட்டுள்து. இதில் ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் செக்ஸ் உறவு வைத்து கொள்ளவும் சீடர்கள் தயாராக இருக்க வேண்டும். இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் நிபந்தனையுடன் கூடிய ஆவணப்பத்திரம் சி.ஐ.டி., போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதனால் இன்னும் திடுக்கிடும் மர்மத்தகவல்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இமாச்சலபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட செக்ஸ் சாமியார் நித்யானந்தா நேற்றிரவு பெங்களூரு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து ராம் நகர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த காட்சிகள் வெளியானது. சாமியார் மீது லெனின் என்பவர், சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இதை வைத்து, சாமியார் நித்யானந்தா மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, கொலை மிரட்டல், சதி செய்தல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. பின்னர் இந்த வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில் நித்யானந்தாவும், அவருடன் இருந்த சிலரும் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

செக்ஸ் சாமியார் நித்யானந்தா ஒப்பந்தம்.

{“ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் சீடர்களாக.. இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ள நேரிடும். அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்க கூடாது. செக்ஸ் உறவில் சம்பந்தப்பட்டவர்கள் அந்த விஷயத்தை வெளியே யாரிடமும் கூறக்கூடாது. நிர்வாணமும் உடலுறவும் ஆத்மாவின் விடுதலைக்கு அவசியம். யாரும் யாருடனும் உறவு வைத்துக்கொள்ளலாம். இதனால் சிலருக்கு உடல் அளவிலோ மனதளவிலோ சங்கடமாக இருந்தால் அதை தாங்கிக் கொள்ள வேண்டும் .}—-மேலும் படிக்க…

மருத்துவ கல்லூரி அனுமதிக்கு ரூ.2 கோடி லஞ்சம் ; தரம் காக்க வேண்டிய தலைமை பொறுப்பு கைது

Top world news stories and headlines detail

புதுடில்லி: மருத்துவ தரம் காக்க வேண்டிய தலைமையே தரம் தாழ்ந்து போனது. இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெறும் போது லஞ்ச ஒழிப்பு மற்றும் சி.பி.ஐ., போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மருத்துவ தரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மருத்துவம் தரம் காத்திட மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் தரம் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி துவங்குவதற்கு தரத்தின் அடிப்படையில் அனுமதி வழங்குவது,பட்டம் பதிவு செய்யும் அதிகாரம் , டாக்டர்களின் பதிவுச்சான்று உள்ளிட்ட மேலான பொறுப்பு கொண்டது.

இந்த அமைப்பின் பணி நாட்டின் நம்பிக்கைக்குரிய இடம் ஆகும். ஆனால் இங்கும் லஞ்சம் தலைவிரித்தாடியிருக்கிறது. சாதாரண ஊழியர் மட்டோடு லஞ்சம் இருந்திருந்தாலே யாராலும் ஏற்க முடியாது. ஆனால் தலைமை பொறுப்பில் இருக்கும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் சிக்கியிருக்கிறார் என்பது தான் ஹைலைட்.

திடீரென போலீஸ் வந்தது : இங்கு தலைவராக இருப்பவர் கேதான் தேசாய். இந்த அமைப்பின் சர்வ அதிகாரமும் படைத்தவர். பஞ்சாப் மாநிலத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி துவங்குவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களிடம் ரூ . 2 கோடி கேட்டிருக்கிறார். பணம் தருவதாக ஒத்துக்கொண்ட இந்த தனியார் நிர்வாகத்தினர் , மத்திய குற்றப்புலனாய்வு ( சி.பி.ஐ) பிரிவினருக்கு தகவல் கொடுத்தனர். இங்கிருந்து தலைவரை பொறி வைத்து பிடிக்க திட்டமிடப்பட்டது. ரூ. 2 கோடி பணம் கைமாறும் போது போலீசார் கேதான் தேசாயை லபக் செய்தனர். திடீரென போலீஸ் வந்தது கண்டு அதிர்ச்சியுற்ற தேசாய் திரு, திருவென முழிக்க மட்டுமே முடிந்தது. மேலும் அவருடன் இருந்த அதிகாரி ஜே,பி., சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து டில்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட இது தொடர்பான அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. மேலும் படிக்க…

செக்ஸ் சாமியார் நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையில் புது தகவல்கள்

பெங்களூரு:கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரின் வசமுள்ள சாமியார் நித்யானந்தாவிடம் நேற்று ரகசியமாக விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது, அவரிடமிருந்து புதுப் புது தகவல்களைக் கேட்ட சி.ஐ.டி., போலீசார், அதிர்ந்தனர். நேற்று அவரை பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர் எதிரிலேயே சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று மறுத்து விட்டனர்.இமாச்சல பிரதேசத்திலிருந்து பெங்களூரு வந்த நித்யானந்தாவையும், அவரது சீடர் நித்ய பக்தானந்தாவையும், நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில், ராம்நகருக்கு அழைத்து வந்தனர். ராம்நகர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். இரவு 10.25 வரை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

பின், நீதிபதி புஷ்பாவதி வீட் டிற்கு, இருவரும் காரில் அழைத்து செல்லப்பட்டனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி புஷ்பாவதி வீட்டில் சாமியாரும், அவரது சீடரும், இரவு 10.35 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.பின், வெளியே வந்த அரசு வழக்கறிஞர் வாரப் கூறுகையில், ”நித்யானந்தாவையும், அவரது சீடர் பக்தானந்தாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் கேட்டுக் கொண்டனர். நாளை மறுதினம் வரை இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நித்யானந்தாவை, போலீசார் துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், நல்லபடியாக கவனிப்பதாகவும் நீதிபதி முன்னிலையில் நித்யானந்தா கூறினார்,” என்றார்.நீதிபதி வீட்டிலிருந்து நித்யானந்தாவை போலீசார் வெளியே அழைத்து வந்த போது, யாரோ ஒரு நபர், சாமியாரை தகாத வார்த்தையால் திட்டியவாறு அடிக்க முயற்சித்தார். உடனடியாக அருகிலிருந்த போலீசார், அந்த மர்ம நபரை இழுத்துச் சென்றனர். பின், அந்த நபரை போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின், சாமியாரையும், அவரது சீடரையும், போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.பெங்களூரு பேலஸ் ரோட்டிலுள்ள சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், நித்யானந்தாவிடம் நேற்று காலையிலிருந்து அதிகாரிகள் குழு விசாரணையை துவக்கினர்.விசாரணை நடத்துவதற்காக பெரிய கேள்வி பட்டியலையே தயாரித்து வைத்திருந்தனர். கேள்வி கேட்கக் கேட்க, நித்யானந்தா புதுப் புது தகவலை கூறியதால், போலீசார் அதிர்ந்தனர்.நேற்று பிடதி ஆசிரமத்திற்கு சாமியாரை அழைத்துச் சென்ற போலீசார், அவர் முன்னிலையிலேயே அங்கு சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய போலீசார், அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.நித்யானந்தா, தன் மீதான வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, கர்நாடகா ஐகோர்ட் டில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

நேசன்.

செக்ஸ் சாமியார் நித்யானந்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை!

நித்யானந்தா ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்து வருவதால், உண்மை கண்டறியும் சோதனை மூலம் விசாரணை நடத்த கர்நாடக போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நித்யானந்தாவிடம் 3வது நாளாக இன்று காலை 11 மணிக்கு கர்நாடக போலீசார் விசாரணையை தொடங்கினர். நித்யானந்தாவின் முன்னாள் சீடர்கள் லெனின் கருப்பன், அமெரிக்காவைச் சேர்ந்த டக்ளஸ் மெக்கல்லர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நித்யானந்தாவுக்கு உதவியாளராக இருந்த கோபிகா தற்போது எங்கே இருக்கிறார். ரஞ்சிதா தலைமறைவாக இருக்கும் இடம் எங்கே போன்ற கேள்விகள் நித்யானந்தாவிடம் கேட்கப்பட இருக்கிறது.


இருப்பினும் நித்யானந்தா முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், தியான நிலையில் இருப்பதாக நாடகம் ஆடுவதாகவும் கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர். மிகவும் அழுத்தக்காகராக இருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.


நித்யானந்தாவுக்கான போலீஸ் காவல் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. ஆனால் நித்யானந்தா ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்து வருவதால், உண்மை கண்டறியும் சோதனை மூலம் விசாரணை நடத்துவதற்காக திங்கள் கிழமை அன்று நீதிமன்றத்தில் மனு செய்யவும் கர்நாடக போலீஸ் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே நித்யானந்தாவுக்கு எதிரான சாட்சிகளை பாதுகாப்பு கருதி, அவர்களுடைய வீட்டுக்கே நேரிடையாக சென்று காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து வாக்குமூலம் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

நித்யானந்தாவிடம் தற்போது நடத்தப்படும் விசாரணையில் எந்த உண்மையும் வெளிவராததால், உண்மை கண்டறியும் சோதனையில் உண்மைகள் அம்பலமாகும் என தெரிகிறது.

nakkheeran.

அமெரிக்காவில் சர்வதேச முஸ்லிம் தொழிலதிபர்கள் மாநாடு!

வாஷிங்டன்: உலகின் முக்கியமான 55  நாடுகளில் மிகப்பெரிய முஸ்லிம் தொழிலதிபர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை அமெரிக்கா அடுத்த வாரம் நடத்துகிறது. அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம்களை மட்டும் அழைத்து நடத்தும் முதல் மாநாடு இதுதான்.

நியூயார்க், உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு முஸ்லிம்கள் என்றாலே அமெரிக்காவில் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள், படிப்பு, வேலை வாய்ப்பு விஷயத்தில் பாரபட்சமாக நடத்துகிறார்கள் என்று உலகம் முழுவதும் பரவியுள்ள எண்ணத்தைப் போக்கும் விதத்தில் இந்த மாநாட்டை அதிபர் பராக் ஒபாமா ஏற்பாடு செய்திருக்கிறார்.

மேலும் முஸ்லிம்களுக்கு அமெரிக்க அரசு மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பது பிரதான நோக்கமாக இருந்தாலும்  சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் முஸ்லிம் தொழிலதிபர்களுடன் அமெரிக்கா நேரடியாகத் தொடர்பு கொண்டால் அது வாணிபம் பெருக மிகுந்த உதவியாக இருக்கும், அதன் மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பும் வருவாயும் பெருகும் என்பவை மற்ற நோக்கங்களாகும். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் பேசவிருக்கிறார்கள். அடுத்த முஸ்லிம் தொழிலதிபர்களின் கருத்துகளையும் இருவரும் கேட்பார்கள்.

இராணுவத் தகவல் தொடர்புக்கான தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் இந்த மாநாட்டு ஏற்பாட்டில் முக்கியமானவர். முஸ்லிம் நாடுகளுடன் வலுவான வர்த்தக உறவு அவசியம் என்று அமெரிக்க அரசு கருதுவதாக சர்வதேச வர்த்தகத்துக்கான துணைச் செயலர் பிரான்சிஸ்கோ சாஞ்சஸ் தெரிவிக்கிறார். 2008-ம் ஆண்டில் முஸ்லிம் நாடுகளுடன் அமெரிக்கா நடத்திய வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 16 லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் என்று சாஞ்சஸ் தெரிவிக்கிறார். வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, சுமுகமான நல்லுறவு ஆகியவற்றுக்கு இந்த மாநாடு பெரிதும் உதவும் என்பதால் ஒபாமா இதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறார் என்பது குறிப்பிட்த்தக்கது.

inneram.com

கேதன்தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார்

Front page news and headlines today

இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் பதவிக்காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,)அங்கீகாரம் வழங்கி வருகிறது. மருத்துவக் கல்லூரியில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனை வசதிகள், அங்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை, பேராசிரியர்கள் எண்ணிக்கை ஆய்வு நடத்தப்பட்டு எம்.சி.ஐ., அங்கீகாரம் வழங்கப்படுகிறது. எம்.சி.ஐ., தலைவராக இருப்பவர் கேதன் தேசாய். இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நாட்டில் தற்போது 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 28 ஆயிரத்து 742 இடங்கள் உள்ளன. கேதன் தேசாய் எம்.சி.ஐ.,யின் தலைவராக இருந்த காலகட்டத்தில், 60க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 40க்கும் மேற்பட்டவை தனியார் மருத்துவக் கல்லூரிகள்.கேதன் தேசாய், புது மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க ஒவ்வொரு கல்லூரிக்கும் 30 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. அவர் எம்.சி.ஐ., தலைவராக பதவி வகித்த காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், இதன் மூலமாகவே கேதன் தேசாய் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக பெற்றிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.மேலும் படிக்க…

இஸ்லாத்தின் பார்வையில் ஊடகங்களின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும்.

http://mindofandre.files.wordpress.com/2008/01/1876984873_2a026900d4.jpg?w=491&h=491

இன்றைய நவீன உலகத்தின் இயக்கம் ஊடகத்துறையில்தான் அமைந்துள்ளது.சமய கலாசார பொருளாதார அபிவிருத்தி அனைத்துத் துறைகளிலும் இதன் பங்களிப்பு செல்வாக்குச் செலுத்துகின்றது.உலக வரலாற்றை நாம் சற்று உற்று நோக்கும் போது ஐரோப்பிய மறுமலர்ச்சி,பிரான்சிய மறுமலர்ச்சிக்கு முன்பு மேற்க்கத்திய நாடுகள் அறிவுத்துறையில் இருன்டே காணப்பட்டன.ஆயினும் இங்கு ஏற்பட்ட மறுமலர்ச்சி அறிவியல் துறையில் வித்திட்டதென மேற்கத்திய வாதிகள் கூறுகின்றனர்.இருப்பினும் ஆராபியத் தீபகற்பத்தில் வளர்ச்சி கண்ட அறிவியல் துறைபற்றிய உண்மைகளை வரலாற்று ஆசிரியர்கள் மறந்து விட்டனர்……… ஆனால் அறிவியலின் வளர்ச்சியை சீர் தூக்கிப் பார்ப்பவர்கள் இவ்வுண்மைகளை மறந்துவிடலாகாது.

ஊடகத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களும் அத்தீப கற்பத்தில் வாழ்ந்தவர்களே.தற்காலத்தைப் போன்று அன்று நவீன யுக்திகள்,சாதனங்கள் காணப்படாத போதும் கூட,ஆங்கு வானியல்,மருத்துவம்,கணிதவியல்,பூகோலவியல் போன்ற துறைகளில் தேற்ச்சிபெற்றவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.இதனை அராபிய வரலாறு என்ற நூலை எழுதிய பேராசிரியர் ஹிட்டி என்பவர் தன்னுடைய புத்தகத்திலே அடிக்கடி குறிப்பிடுகின்றார்.

மேலும் படிக்க…


ரியாத்தில் ரத்ததான முகாம்



ரியாத் : சவுதி அரேபிய தலைநகரான ரியாத்தில் பல்வேறு மனிதநேயப் பணிகளை தொடர்ந்து செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம், தனது 8 வது ரத்ததான முகாமை ஏப்ரல் 23ம் தேதியன்று ரியாத் மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடத்தியது. காலை 10 மணிக்கு துவங்கிய இந்த முகாமில் நூற்றுக்கணக்கான குருதிக் கொடையாளிகள் பங்கு பெற்றனர். தமிழகம், இலங்கை போன்ற தமிழ் பேசும் மக்களுடன் இந்தியாவின் பிற மாநிலத்தவர்கள்,சவுதி அரேபியா, எகிப்து, பங்களாதேஷ், சிரியா போன்ற பிற நாட்டவர்களும் கலந்து கொண்டனர். பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்துவரும் இந்த சேவையை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டன.

ஹஜ் பயணிகளுக்காக, சுதந்திர தினத்தின் போது, அவசர தேவைக்காக என அடிக்கடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரத்ததான முகாம்களை நடத்துவதால் சவுதி அரேபியாவின் எப்பகுதியில் யாருக்கு இரத்தம் தேவைப்பட்டாலும் அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக ரத்தம் வழங்கி உயிர்காத்து வருகின்றது. சவுதி அரேபியாவிலேயே அதிகமானோர் ரத்ததானம் வழங்கியவர்கள் என்ற இடத்தை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழர்களால் நடத்தப்படும் இந்த முகாம்களால் கடல் கடந்த மனித நேயத்தை அரேபியர்களும் பாராட்டி வருகின்றனர்.
- தினமலர் வாசகர் முஹம்மது மாஹீன்

தேநீர்’… சில உண்மை!

`டீ` எனப்படும் `தேநீர்` நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. நாம் பொதுவாக `சுறுசுறுப்பு பானமாக` அறிந்த டீ, பல விசேஷமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பது தேநீர்ப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

நாம் அன்றாடம் பருகும் `தேயிலை டீ` தவிர பல்வேறு வகையான டீக்கள் உண்டு. அவற்றின் மகத்துவங்கள் இங்கே…

* சூடான லவங்கப்பட்டை டீ, பெண்க ளுக்கு அற்புதம் நிகழ்த்தும். இது மனஅழுத் தத்துக்கு நல்லது. தளர்விலிருந்து உடம்பு விடுபட்டுச் சுதந்திரமாக உணர உதவும். மேலும், சுவாசம், செரிமானம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கும் உதவுகிறது.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு `மசாலா டீ`யும், `சிலோன் டீ`யும் இதமளிக்கும்.

`கிரீன் டீ`யில் உள்ள `பாலிபினால்கள்` அல்லது `பிளேவனாய்டுகள்` ஒட்டுமொத்த உடல்நலத் துக்கு நல்லது. குறிப்பாக புற்றுநோய் வராமல் தடுப்பதில். புற்றுநோய் போன்ற ஆபத்து களுக்குக் காரணம், செல்களின் சிதைவாகும். அதைத் தடுக்கும் பணியில் டீயில் உள்ள `ஆன்டிஆக்சிடன்ட்கள்` உதவுகின்றன.

* `மூலிகை டீ`யில் `டேனின்` இல்லை. எனவே நெருக்கடியான வாரம் அல்லது அதிகமான அழுத்தங்களின்போது மூலிகை டீ அருந்த லாம். மூலிகை டீயில் தேர்ந்தெடுப்பதற்கு அதிக வகைகள் உள்ளன என்பதும் மகிழ்ச் சிக்குரிய செய்தி.

* `இஞ்சி டீ` கொஞ்சம் காரசாரமாக இருந்தாலுமë, இதமான உணர்வைக் கொடுக்கும். பசியைத் தூண்டும். வாந்தி உணர்வைத் தடுக்கும். அதிகமாகப் புத்துணர்வு அளிக்கும்- குறிப்பாகப் பெண்களுக்கு.

* `அஸ்வகந்தா டீ` மனநிலையை உயர்த்தும், மனதுக்கும் உடம்புக்கும் ஓர் துடிப்பை ஏற்படுத்தும். தவிர நல்ல பலத்தைக் கொடுப்பதுடன், நோய்கள், கட்டிகள், ஞாபக இழப்பு ஆகியவற்றைத் தடுக்கும். மனநிலைக்கு ஊக்க சக்தி அளிக்கும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.

* டீயுடன் `ஸ்வீட் ரூட்` அல்லது `லீகோரைஸை` சேர்த்தால் வழுக்கை, பொடுகு, பற்சிதைவு, தொண்டைப் புண், காசநோய், உடம்பு துர்நாற்றம், மனஅழுத்தம், சோர்வு, தூக்கமில்லாமை, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகளைக் குறைக்கும்.

* ஏலக்காய் டீயை எவர் விரும்ப மாட்டார்? அது இதமளிக்கும், வாநëதி உணர்வைத் தடுக்கும், ஜலதோஷம், இருமலுக்கு மிகவும் ஏற்றது. மனஅழுத்தத்தைக் குறைத்து உடலுக்குப் புத்துயிர் அளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஏலக்காய் டீ நல்ல சுவையாகவும் இருக்கும்.


இந்திய தருதலை ஜமாஅத்

நான் தவ்ஹீத் வாதியல்ல எனக்கு எம்மதமும் சம்மதமே

25-4-2010 தினகரன் நெல்லை பதிப்பில் வெளியான செய்தி இது. சிலை திறக்கும் தேவநாதன் பக்கத்தில் இருப்பது யார் தெரிகின்றதா? ”நபிகள் நாயகத்திற்கு சிலை வைக்காத சமுதாயமடா இது” என மேடைகளில் அக்ரோஷமாய் வீர வசனம் பேசிய அதே பாக்கர் தான்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!

யார் இவர்?

இவருடைய கொள்கை என்ன?

இவரின் தற்போதைய நிலை என்ன?

புரிந்து கொள்ள முடிகிறதா?

இவர்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற ஓர் உன்னதமான ஜமாத்தால் ஒழுக்கம் கெட்டவர் என்றும்,மக்கள் பணத்தை மேசடி செய்தவர் என்றும் நிரூபிக்கப் பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஜமாத்தின் அடிப்படை உருப்பினர் அந்தஸ்து கூட இல்லை என்று கூறி ஜமாத்தை விட்டு நீக்கப் பட்ட பாக்கர் என்ற பூசாரி.
இவரை ஜமாத் நீக்கம் செய்த உடன் மக்களிடம் தான் ஒரு யோக்கியன் என்றும் தான் உத்தமன் என்றும் கூறித்திரிந்தார் ஆனால் இவர் யார் என்பதை இவரே பல முறை மக்கள் மன்றத்தில் நிரூபித்தும் இருக்கிறார்.


இறுதியாக யாதவர் சமுதாயத்தினருடன் சேர்ந்து சிலைத் திறப்பு விழாவில் பங்கெடுத்து தான் ஒரு எம்மதமும் சம்மதம் என்ற கருத்தில் உள்ளவன்தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
சிலை வணக்கத்தை வேரடி மண்ணோடு புதைக்க வந்த மார்க்கமாம் இஸ்லாத்தில் இருந்து கொண்டு அழகு முத்துக்கோன் சிலை திறப்பு விழாவுக்கு செல்கின்ற பாக்கர் போன்ற நபர்களை இன்னும் தவ்ஹீத்வாதிகளென்றும் ஏகத்துவவாதிகள் என்றும் நம்பும் சகோதர சகோதரிகளே உங்களின் பகுத்தறிவை கொஞ்சம் பயன்படுத்தி சிந்தித்து பாருங்கள். இந்த இலட்சணத்தில் இருந்து கொண்டு பாக்கர் போன்றவர்கள் பிற மத சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்கிறார்களாம்.
rasminmisc

டி.வி., ரியாலிட்டி ஷோவில் நிர்வாண நடனத்தால் பரபரப்பு


Obscene dance in Tv reality show

டி.வி.,க்களில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதும், ஆட்டம் போடும் பெண்களை ஆபாசமாக வர்ணிப்பதும் டி.வி., சேனல்களுக்கு புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முளைத்து, இன்று விஸ்வரூபமாக வளர்ந்திருக்கும் இந்த புது கலாச்சாரத்தில் சமீபகாலமாக குழந்தைகளும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் சினிமா திரையில் தோன்றும் கவர்ச்சி நடிகைக்கு நிகராக குழந்தைகளை மேடையில் ஆட விட்டு ரசிக்கிறார்கள். இந்த விவகாரம்தான் இப்போது ஆந்திர சின்னத்திரை வட்டாரத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளை அரை நிர்வாண ஆட்டம் போட வைக்கும் தனியார் டி.வி., சேனல்கள் மீது ஆந்திராவை சேர்ந்த சமூக சேவகி ஒருவர் மனித உரிம‌ை கமிஷனில் புகார் செய்தார். அதில், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனியார் டி.வி.க்கள் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட வைக்கின்றனர். இது பிஞ்சு உள்ளங்கள் மனதில் விஷ கலாசாரத்தை பரப்புவதாக உள்ளது. தனியார் டி.வி.க்கள் தங்களது நிகழ்ச்சியை பிரபலப்படுத்த எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அதை விட்டுவிட்டு குழந்தைகளை அலங்கோலமாக்கி ஆட வைப்பது நல்லதல்ல. இது அந்த சிறுமிகளின் எதிர் காலத்தை கடுமையாக பாதிக்கும். பெற்றோர்களும் டி.வி. சானல்கள் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் குழந்தைகளை ஆட விடுகிறார்கள். எனவே குழந்தைகளை நிர்வாணமாக ஆட விடும் டி.வி.சானல் உரிமையாளர்கள், பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

சின்னத்திரை உலகத்தையே பரபரக்க வைத்த இந்த புகார் குறித்து ஆந்திர மனித உரிமை கமிஷனர் சுபாஷன் ரெட்டி விசாரித்தார். அப்போது அரை நிர்வாண நடனம் ஆடிய குழந்தைகளின் பெற்றோர் மற்றும் டி.வி., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது சுபாஷன் ரெட்டி கூறுகையில், டி.வி., சானல்களில் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட விடுவது குற்றமாகும். இது நம் நாட்டின் கலாசாரத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது. குழந்தைகளை வலுக்கட்டாயமாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் பெற்றோர் ஆட விடக்கூடாது. இது குழந்தைகளின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இனியும் பெற்றோரும், டி.வி. சேனல் நிர்வாகிகளும் குழந்தைகளை அலங்கோலப்படுத்தி ஆடவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரத்தில் திருந்த வேண்டியது தனியார் டி.வி., சேனல்களா அல்லது டி.வி., மோகத்தால் குழந்தைகளை அரைகுறை ஆடையுடன் ஆபாச ஆட்டம் போடவைக்கும் பெற்றோர்களா?

dinamalar

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!

Tamil news paper, Tamil daily news  paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political  news, business news, financial news, sports news, today news, India  news, world news, daily news update


அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ‘ பார்க்கும்’ வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி ‘ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ‘ ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது. இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் , பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள். அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.

dinakaran

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை விற்ற இந்திய பெண் தூதரக அதிகாரி கைது .

Masjid Wazir Khan by HsnAli.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய பெண் தூதரக அதிகாரி கைது!

டெல்லி: நாட்டின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்று வந்த இந்திய பெண் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த மாதுரி குப்தா (53) என்ற அந்த ஐபிஎஸ் அதிகாரி, பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடஙகளாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார். அவரை கண்காணித்து வந்த இந்திய உளவுப் பிரிவினர் இப்போது அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய ‘ரா’ உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மா மீதும் சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடமும் இந்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இது குறித்து உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறுகையில், இஸ்லாபாத்தில் உள்ள ரா பிரிவுத் தலைவரிடமிருந்து தகவல்களைப் பெற்று அதை பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு மாதுரி குப்தா வழங்கி வந்துள்ளார்.

அவர் எந்த வகையான தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால், பாதுகாப்பு தொடர்பாக ரகசிய தகவல்களை பாகி்ஸ்தானுக்கு விற்று வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்பியுள்ள மாதுரி குப்தா, கோலாலம்பூர் உள்பட சில நாடுகளிலும் பணியில் இருந்துள்ளார்.

மாதுரி குப்தாவை கடந்த 2 வருடமாக கண்காணித்து வந்தனர். அவர் தவறு செய்தது உறுதியானதையடுத்து இரு நாட்களுக்கு முன் பணி நிமித்தமாக என்று கூறி டெல்லிககு வரவழைத்து இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Read: In English

அவரிடம் ரா, ஐபி மற்றும் டெல்லி உளவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து நீதிமன்றத்தில் ரகசியமாக ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரி்க்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



மருத்துவ கவுன்சிலா… ஊழல் கவுன்சிலா…? தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்

Front page news and headlines today

பஞ்சாப் பாட்டியாலா மருத்துவக் கல்லூரியில் 2010-11ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.,) தலைவர் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டார். இவருடன், இடைத்தரகர் ஜிதேந்தர்பால் சிங், தனியார் மருத்துவக் கல்லூரி டாக்டர் கன்வல்ஜித் சிங், பஞ்சாப் மருத்துவக் கல்லூரி துணைத் தலைவர் சுரீந்தர் சிங் ஆகிய மூன்று பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

புதிய மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கும் முன், எம்.சி.ஐ., குழு, சம்பந்தப்பட்ட கல்லூரியில் நேரில் ஆய்வு நடத்தும். அக்குழுவின் அறிக்கை எம்.சி.ஐ., நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டு, கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படும். பஞ்சாப் மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்த எம்.சி.ஐ., குழு, பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தது. இந்த அறிக்கை பிப்ரவரி 5ம் தேதி நடந்த எம்.சி.ஐ., நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், குறைபாடுகளையும் மீறி சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு 2010-11ம் ஆண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதி வழங்குவதற்காக, கேதன் தேசாய் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.

டில்லி, புனே, சண்டிகர், மும்பை, ஆமதாபாத் என நாடு முழுவதும் பல இடங்களில் கேதன் தேசாயின் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய ரெய்டில், ஆவணங்கள், பணம், நகை மற்றும் வங்கிக் கணக்குகள், லாக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவரிடமிருந்து 1,801 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 1,500 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இத்தகவலை சி.பி.ஐ., மறுத்தது. நம் நாட்டில் 300க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளைக் கண்காணிக்கும் உயரிய அமைப்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது, இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான அனுமதியை புதுப்பிப்பது, படிப்பை முடித்த டாக்டர்களை பதிவு செய்வது, டாக்டர்கள் தங்களது பணியில் ஒழுங்காக நடந்துகொள்கிறார்களா என்பதை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை எம்.சி.ஐ., செய்து வருகிறது.

கேதன் தேசாய் 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை எம்.சி.ஐ., தலைவராக இருந்தார். 2001ம் ஆண்டு, 65 லட்சம் ரூபாய் வாங்கிய வழக்கில், கைது செய்யப்பட்டார். 2009ம் ஆண்டு, அந்த 65 லட்சம் ரூபாயும் கேதன் தேசாய்க்கு கிடைத்த அன்பளிப்பு (!) என, வழக்கு கைவிடப்பட்டது. அந்த ஆண்டே கேதன் தேசாய் மீண்டும் எம்.சி.ஐ., தலைவரானார். அவர் பதவி வகித்த ஏழு ஆண்டுகளில், 40 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியிருக்கலாம் என சி.பி.ஐ., வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன. இதனால், அவருடைய பதவிக் காலத்தில் அனுமதி பெற்ற மருத்துவக் கல்லூரிகள் குறித்த விவரங்களை சி.பி.ஐ., தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.மேலும் படிக்க…

அடுத்த அதிர்ச்சி – காலாவதி உணவுப் பொருட்கள்!

மனிதர்களின் உயிரோடு விளையாடி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த காலாவதி மருந்துப் பொருள்கள் விற்பனை குறித்த செய்திகள் அண்மையில் தமிழகத்தை உலுக்கி எடுத்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு காலாவதி பிரச்சனை வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. இதுவும் உயிரோடு விளையாடும் செயல்தான். விளையாட்டுக்குப் பலியாகிறவர்கள் வழக்கம் போலவே நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தாம்.

காலாவதி மருந்தைப் போன்று காலாவதியான உணவு மற்றும் நறுமணப் பொருள்கள் விற்கப்படுவதாக வரும் தகவல்கள் உண்மையிலேயே வயிற்றில் புளியைக் கரைப்பதாக உள்ளது.

சாக்கு மூட்டைகளில் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த அரிசி உள்பட அனைத்து உணவுப் பொருள்களும் தற்போது கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. காகிதத்தில் மடித்துத் தரும் பொருள்களைவிட பாக்கெட்டுகளில் விற்கப்படுபவையே தரமான பொருள்கள் என்று நம்பி மக்கள் வாங்குகின்றனர்.

மோசடிக் கும்பல் மக்களின் இந்த நம்பிக்கையை முதலீடாக்கி கோடிக் கணக்கில் லாபம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

காலாவதியான உணவுப் பொருள்களை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை அழகிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து, தேதியை மாற்றி விற்பனை செய்யப்படுவதாகவும், காலாவதியான உணவுப் பொருள்களை வாங்கி சேமித்து வைப்பதற்கென்றே கிடங்குகள் உள்ளன என்றும் தற்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இதுபோன்றதொரு கிடங்கில் பொதுமக்களின் புகார்களை அடுத்து, நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் சோதனை செய்தனர்.

அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளான பற்பசை, டீத்தூள், சேமியா, அப்பளம், பாடிஸ்பிரே, பருப்பு, பாஸ்மதி அரிசி உள்பட 50-க்கும் மேற்பட்ட பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்தபொது இவை அனைத்தும் 3 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியானவை என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து குடோன் உரிமையாளர் முத்துப்பாண்டியை தப்பிச் சென்றுவிட்டார். அதிகாரிகள் இந்த கிடங்குக்கு சீல் வைத்தனர்.

இப்படி பல கிடங்குகள் சென்னையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

inneram.com

மர்ம காரில் வெடிகுண்டு: நியூயார்க்கில் பெரும் பீதி

Top world news stories and headlines detail

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க்கில்உள்ள, ‘டைம்ஸ்’ சதுக்கத்தில், நேற்று மர்ம காரில் இருந்த வெடிகுண்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நியூயார்க் போலீசார் விரைந்து செயல்பட்டு அக் குண்டை செயலிழக்கச் செய்தனர். இதனால், பயங்கர குண்டு வெடிப்பு தவிர்க்கப்பட்டது. போலீசாரின் விரைவான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்அமெரிக்க அதிபர் ஒபாமா.

அமெரிக்காவின் நியூயார்க்நகரத்திலுள்ள, ‘டைம்ஸ்’ சதுக்கம், உலகின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. உலகின் பலபகுதிகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர். அதனால் இப்பகுதி எப்போதும் பரபரப்பும் நெரிசலும் மிகுந்ததாக இருக்கும்.நேற்று முன்தினம் மாலை, இங்குள்ள 45வது தெருவில், ஒரு மர்ம கார் நின்றிருந்தது.விளையாட்டுப் போட்டியில் பயன்படுத்தப்படும், ‘நிசான் பாத்பைண்டர்’ ரக அடர்பச்சை நிறம் உடைய அந்தக் காரின் பின்புறத்திலிருந்து புகை வெளிவந்திருக்கிறது. ஆபத்துக் காலத்தில் எரியும் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அருகில் இருந்த ‘டி-ஷர்ட்’கடையின் வியாபாரி, மர்மகாரிலிருந்து வரும் புகையையும் விளக்கு ஒளிர்வதையும் பார்த்து விட்டு, போலீசாருக்குத் தகவல் அனுப்பினார். உடனடியாக அப்பகுதியில், நியூயார்க் போலீசார் குவிக்கப்பட்டனர்.தொடர்ந்து காரிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், உள்ளே வெடிகுண்டு ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்காக, வெடிகுண்டு சோதனை நிபுணர்கள்வரவழைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் காரில் குண்டு இருப்பது உறுதியானதும், ‘டைம்ஸ்’ சதுக்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்த ஆயிரக்கணக்கான ஓட்டல்கள், கடைகள், உணவுவிடுதிகளை அடைக்கச் சொல்லி போலீசார் உத்தரவிட்டனர்.அப்பகுதியில் குவிந்திருந்தசுற்றுலாப் பயணிகள், அங்குக்குடியிருந்தவர்கள், ‘ப்ராட்வே’பகுதியில் இருந்த சினிமா தியேட்டர்களுக்கு வந்தவர்கள் என ஆயிரக்கணக்கான மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றினர்.அப்பகுதியின் 43வது தெருவிலிருந்து 48வது தெருவரை ஆறு தெருக்கள் முற்றிலுமாக அடைக்கப் பட்டன.அதன்பின், காரின் பின்புற ஜன்னல் உடைக்கப்பட்டு, ரோபாட் கருவி ஒன்று உள்ளே அனுப்பப் பட்டது. அதில், காரின் பின்புற இருக்கையில், ‘ப்ரோபேன்’ வாயு அடங்கிய மூன்று பெட்டிகள், பெட்ரோல் நிரப்பப்பட்ட 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு கேன்கள், குறைந்த சக்தி கொண்ட வெடிபொருள் பவுடர், இரண்டு டைமர் கடிகாரங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக, செயலில் இறங்கிய வெடிகுண்டு நிபுணர்கள் அவற்றின் இணைப்பைத் துண்டித்து வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர்.

நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் கூறுகையில், ‘மிகப் பெரிய விபத்து அதிர்ஷ்டவசமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. யார் எதற்காக இதைச் செய்தனர் என்பது தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.நியூயார்க் போலீஸ்துறையின் கமிஷனர் ரேமண்ட் கெல்லி, ‘காரில் இருந்தது சக்தி குறைந்தவெடிகுண்டுதான். கார் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்களின் காட்சிகள்பரிசோதிக்கப்படும்’ என்றார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா,’நியூயார்க் போலீசார் விரைந்து செயல்பட்டு, வெடிகுண்டைச்செயலிழக்கச் செய்துள்ளனர்’ என்று பாராட்டியுள்ளார்.ஏற்கனவே 2001 செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர சம்பவத்தில் அதிர்ந்திருக்கும் நகரில், நேற்றைய சம்பவம் அதிக பரபரப்பைஏற்படுத்தியது. ஆனால் பாதுகாப்பு போலீசார் மேற்கொண்டமுயற்சிகள் உடனடியாகஅசம்பாவிதங்களைத் தடுத்து விட்டது.

dinamalar

ஆறுகளை உருவாக்கி நாட்டை வளமாக்கும் மேற்கு தொடர்ச்சி மலை

Tamilnadu special news update

தேனி: இந்தியாவில் பெரும்பாலான நதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே உருவாகின்றன. இவற்றில் உருவாகும் ஆறுகள் தான் நாட்டின் வளத்திற்கு முக்கிய காரணம். மேற்கு தொடர்ச்சி மலை குஜராத் மாநிலம் தப்தியில் துவங்கி தமிழகத்திலுள்ள கன்னியாகுமரி வரை கர்நாடகா, கேரளா என பரவியுள்ளது.
இவற்றில் குஜராத் மாநிலத்தில் நர்மதா, தப்தி ஆகிய ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலை துவங்கும் இடத்தில் உருவாகுகின்றன. இவை குஜராத் மாநில வளத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.  இதையடுத்து கிருஷ்ணா, கோதாவரி ஆறுகள் மலையின் மத்திய பகுதியில் உருவாகி ஆந்திர மாநிலத்தை வளம் கொழிக்க செய்கின்றன. கர்நாடக மாநில பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் கபினி, தமிழக பகுதிக்கு காவிரியாக வந்து சேர்ந்து தஞ்சை, திருச்சி மாவட்டங்களை வளம்கொழிக்கசெய்கிறது.  கேரள பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் நெய்யாறு, அமராவதி ஆறாக தமிழகத்திற்குள் வருகிறது.  இதே போல் கேரள பகுதியில் முல்லையாறு, பெரியாறு ஆகியவை மலைப்பகுதிகளில் ஓடிவந்து பெரியாறு அணையில் தேங்கி முல்லைப்பெரியாறாக தமிழகத்திற்கு ஓடி வருகிறது. இதை நம்பி தென்மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் உள்ளன.  மேகமலை பகுதியில் இருந்து மூலவைகை ஆறு உருவாகி வைகை அணைக்கு வைகை ஆறாக வந்து சேர்கிறது.  நாட்டின் முக்கிய நதிகள் அணைத்தும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே உருவாகின்றன. ஆற்றில் தண்ணீர் வளம் குன்றாமல் வர மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது அவசியம். இந்த பணியில் தான் கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தை பாதுகாத்து வரும் பெரியாறு பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.  மேற்கு தொடர்ச்சி மலை வனங்களை பாதுகாப்பது அவசியம். அங்குள்ள மரங்களை வெட்டாமல், வன விலங்குகள் அழியாமல் இருந்தால் நமக்கு தேவையான மழை கிடைக்கும். காடு வாழ்ந்தால், நம் ஒவ்வொருவரின் வீடும் வாழும்

dinamalar

இராக் சிறையில் கைதிகள் சித்ரவதை

http://www.president-bush.com/saddam-bush.jpg

இராக் தலைநகர் பாக்தாத்தின் இரகசிய சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

உடலில் மின்சாரம் பாய்ச்சப்படுதல், பாலியல் பலாத்காரம் போன்ற சித்ரவதைகளை இவர்கள் தொடர்ந்தும் அனுபவித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சிறையில் முன்பு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களிடம் பிபிசி பேசியபோது, இராக்கிய பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டு வழிமுறை வகுத்து தங்களை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததை உறுதிசெய்துள்ளனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இக்கைதிகள் சொன்ன விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

முதானா இரகசிய தடுப்புக் காவல் மையம்

முதானா விமான தளத்தில் உள்ள இந்த இரகசிய தடுப்புக்காவல் மையம் தற்போது மூடப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த மாத முற்பகுதி வரையில் இந்த இடத்தில்தான் நானூறுக்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு மிகக் கொடூரமான சித்ரவதைகளை மாதக்கணக்கில் அனுபவித்துவந்திருந்தனர்.

“எங்கள் தலையை பிளாஸ்டிக் பையால் மூடுவதிலிருந்து சித்ரவதைகள் ஆரம்பிக்கும். எங்கள் மேலே தண்ணீரை ஊற்றிவிட்டு பின்னர் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சுவார்கள்” என்று இங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் கூறுகிறார். தனது அடையாளத்தை வெளியில் சொல்ல அவர் பயப்படுகிறார்

இவருக்கு நடந்த விஷயங்களும் இந்த இடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேறு நாற்பது பேர் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ள விஷயங்களும் நிரம்பவும் ஒத்துப்போகின்றன.மேலும் படிக்க…

மாதந்தோறும் 5000 இந்தியர்கள் பஹ்ரைன் வருகை

Photo  Bahrain Images

இந்தியாவிலிருந்து மாதந்தோறும் 5000 இந்தியத் தொழிலாளர்கள் பஹ்ரைன் வருவதாக புள்ளி விவரத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

பஹ்ரைனுக்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பஹ்ரைனில் மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். பஹ்ரைன் நாட்டு மக்கள் தொகையே 7 லட்சத்து 53 ஆயிரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை பஹ்ரைனுக்கான இந்தியத் தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பஹ்ரைன் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். சில ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைனில் 1 லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்களே இருந்தனர்.

இந்தியத் தொழிலாளர்களின் நல்லொழுக்கம், குணநலம் உள்ளிட்டவை காரணமாக பஹ்ரைனில் இந்தியர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால்தான் இதுவரை இல்லாத அளவு, அதிக அளவிலான இந்தியர்கள் பஹ்ரைனில் குவிந்து வருகின்றனர்.

சமீப காலமாக வங்கதேசத்தவரை வேலைக்கு எடுப்பதை பஹ்ரைன் நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. காரணம், வங்கதேசத்தவர் பெருமளவில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் அவர்களை பஹ்ரைனியர்கள் விரும்புவதில்லை. இது இந்தியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

கடந்த ஜனவரி 31ம் தேதியுடன் முடிவடைந்த பொது மன்னிப்புகாலத்தில் முறையான விசா, வேலை பெர்மிட் இல்லாமல் தங்கியிருந்த 8000 இந்தியர்கள் நாடு திரும்பினர். இருப்பினும் 22 ஆயிரம் பேர் தங்களது விசாவை முறைப்படுத்திக் கொண்டு பஹ்ரைனிலேயே தங்கி விட்டதாக ஷெட்டி தெரிவித்துள்ளார்.

-இறை நேசன்-

அந்த நாள் இனிய நாள்..

http://atlasshrugs2000.typepad.com/atlas_shrugs/images/dubai.jpg

எனது அமீரகவிஜயத்தின் பொழுது இத்தனை சந்தோஷங்கள் கிட்டும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை,என் உற்றவர்களின்,இரத்தபந்தங்களின் அன்பு மழையில் ந‌னைந்த நான் என் அன்பு சக வலைப்பூ சகோதரிகளின் அன்புவெள்ளத்திலும் நனைவேன் என்று நினைக்கவில்லை.ஏதோ தமது வீட்டு விஷேஷத்திற்கு அழைத்து நான் வந்து இருந்தது போல் அனைவரும் கைபேசியில் அழைத்து அன்பை வெளிப்படுத்தி திக்குமுக்காட வைத்துவிட்டனர்.

விமானநிலையத்தில் இருந்து வந்ததில் இருந்து மீண்டும் விமானநிலையம் செல்லும் வரை என் செல்பேசிக்கு ஓய்வே இல்லை.அன்பு மனோ அக்காவின் வருகை ,நீண்ட நாள் ஸ்நேகிதிபோல் எளிமையுடன் பழகி பொழுதை மகிழ்ச்சிகரமாக்கினார்.ஜலீலா என் வருகையால் சிறு குழந்தையாவே மாறி என்னை பரவசப்படுத்துவிட்டார்.,தினமும் காலையிலும்,மதியத்திலும்,இரவிலும் போன் செய்து அளவளாவும் நேசம்,தங்கை ஹுசைனம்மா பதிவர் சந்திப்பு நிகழ்ந்தே தீரவேண்டும் என்று உத்வேகத்துடன் செயல் பட்டு நிகழவும் வைத்து விட்டார்.
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று குறிப்பிட்ட பகுதிக்கு நெருங்கி போன் செய்தால் திரும்பி பாருங்கள் என்று சொன்ன திக்கில் திரும்பினால் அங்கு மூன்று பேர்.ஜலீலா,ஹுசைனம்மா,மலிக்கா…பார்த்ததுமே பேச்சே வராமல் பரவசத்தில் மூழ்கிவிட்டோம்.
ஜலீலாவை ஏற்கனவே புகைப்படத்தின் மூலம் பார்த்து இருக்கிறேன்.ஹுசைனம்மா,மலிக்காவைப்பார்த்து இருக்காததால் அவர்களை என்னால் யூகிக்க இயலவில்லை.ஒரு வழியாக அவர்தான் ஹுசைனம்மா என்று கண்டுபிடித்து நான் சொன்னதும் எங்களிடம் இருந்து வெளிப்பட்ட சிரிப்பொலி அருகில் விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டு இருந்த மலர் கொத்துகளிடையே புகை வருவதைப்போல் உணர்ந்தேன்.
ஏற்கனவே திட்டமிட்டபடி பார்க்கிற்கு அழைத்து சென்றனர்.அங்கு ஒரு இன்ப அதிர்ச்சி.நான் சற்றும் எதிர்பாராத தோழி ஆசியா.அத்தனை தூரத்தில் இருந்து வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.என்னைகண்டதும் அவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார்.இன்முகத்துடன் “ஸாதிகா” என்று அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.அவரின் அன்பயும்,மென்மையான ஸ்நேகிதத்தையும் மின்னஞ்சல் மூலமாக அறிந்திருந்த நான் அன்று நேரிலும் பார்த்த்து பரவசப்பட்டேன்.மேலும் படிக்க…

தலை வீங்கிய குழந்தைக்கு கோவையில் சிகிச்சை

Important incidents and happenings in and around the  world

கோவை : தலை வீங்கிய நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆறு மாத குழந்தை, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., டாக்டர் சிவப்பிரகாசம் கூறியதாவது: திருப்பூர் – தாராபுரம் ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை அருகே, தலை வீங்கிய நிலையில் இருந்த ஆண் குழந்தை நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக இக்குழந்தை நேற்று, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் சேர்க்கப்பட்டது. குழந்தைக்கு ‘ஹைட்ரோ செப்பாலஸ் (தலையில் நீர்கோர்ப்பு)’ என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆறு மாத குழந்தையின் தலை அரைக்கிலோ எடைதான் இருக்க வேண்டும். ஆனால், இக்குழந்தையின் தலைப் பகுதி மட்டும் ஐந்து கிலோ எடை உள்ளது; ஆறு மாத சராசரி குழந்தையின் மொத்த எடை 5 கிலோ இருக்க வேண்டும். மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இக்குழந்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படும். நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறை நிபுணர்கள் பரிசோதித்த பின், இக்குழந்தைக்கு மேற்கொண்டு, அறுவை சிகிச்சை அளிக்கப்படுமா என்பது குறித்து தெரிய வரும். தற்போது குழந்தையின் உடல் நிலை நன்றாக உள்ளது. இவ்வாறு, ஆர்.எம்.ஓ..தெரிவித்தார்.

dinamalar

முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை – நியூயார்க் மேயர் எச்சரிக்கை

http://www.ogilvy.co.uk/ogilvy-one/wp-content/uploads/2008/08/new_york_1.jpg

நியூயார்க்: நியூயார்க்கில் கார் குண்டு மூலம் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானிய அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளதன் எதிரொலியாக முஸ்லீம்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்க எடுக்கப்படும் என நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் எச்சரித்துள்ளார்.

நியூயார்க்கில் கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பைசல் சஷாத் என்ற பாகிஸ்தானிய அமெரிக்கர் கைதாகியுள்ளார். இதையடுத்து முஸ்லீம்கள் மீது அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பதட்டம் எழுந்துள்ளது.

இதுகுறித்து நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் கூறுகையில், பாகிஸ்தானியர்களுக்கு எதிராகவோ, முஸ்லீம்களுக்கு எதிராகவோ யாரேனும் தாக்குதலில் இறங்கினால் அவர்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று எச்சரித்தார்.

நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லீம்களுக்கும், சீக்கியர்களுக்கும் எதிராக அமெரிக்காவின் பல பகுதிகளில் தாக்குதல் நடந்தது நினைவிருக்கலாம். ஆப்கானிஸ்தானியர்கள் வைத்திருப்பதைப் போன்ற நீண்ட தாடியுடன் இருப்பதால் சீக்கியர்களும் தாக்குதலில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

thatstamil

விசாரணைக் கைதிகள் -வெள்ளை அறிக்கை தேவை

இந்தியாவில் இருக்கும் சிறைச்சாலைகளில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
போதைப் பொருள் புழக்கம், பாலியல் சீரழிவு, அதிரடித் தாக்குதல்கள், உரிமைகளைக் கேட்பவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சலுகைகளுக்காக நடைபெறும் லஞ்ச ஊழல்கள் என்று முடை நாற்றமடிக்கும் இடங்களாக இந்தியச் சிறைகள் திகழ்கின்றன.

பெண்கள் சிறைச்சாலைகள் மிக மோசமான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகுவதாக மனித உரிமை அமைப்புகள் கவலைப்படுகின்றன.

இதில் வேதனைக்குரிய முக்கிய விஷயம் நீண்ட காலமாக விசாரணைக் கைதிகளாக வாடுபவர்கள் பற்றியதாகும். குணங்குடி ஹனீபா, உள்ளிட்ட முஸ்லிம் விசாரணைக் கைதிகள் குறித்து த.மு.மு.க. மே&5, 2010&ல் நீதிமன்றம் நோக்கி கவனஈர்ப்புக் கண்டன பேரணி நடத்தப்பட்டிருக்கிறது.

நளினி போன்ற ஆயுள் தண்டனைக் கைதிகள் குறித்து தமிழின உணர்வாளர்கள் கருத்தியல் போரை நடத்துகிறார்கள். பல ஆண்டுகளாக பெருங்கவிஞர் பெருஞ்சித்தரனாரின் மகன் பொழிலன் போன்ற தமிழ்தேசிய உணர்வாளர்களும் நீண்ட நாள் கைதியாக வாடுகிறார்கள்.

பிரபலங்கள், அரசியல் புள்ளிகள் குறித்த விவகாரங்கள் ஏதாவது ஒரு வகையில் கவனப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த வாய்ப்புகளும், பின்புலங்களும் இல்லாத ஆயிரக்கணக்காண விசாரணைக் கைதிகளும், ஆயுள் தண்டனைக் கைதிகளும் எதிர்காலம் பற்றிய கவலைகளோடு சிறையிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

பலர் பொருளாதார வசதிகளில்லாததால் வழக்குகளைக் கூட நடத்த முடியாமல் சிறைகளில் வாடுகிறார்கள். பலர் வெளியில் உள்ள குடும்பத்தினர் கைவிட்டதால், விரக்தியில் தங்கள் விடுதலை அதன் போக்கில் நிகழட்டும் என மனதை பழக்கப்படுத்திவிட்டார்கள்.

இன்றும் பல முதிய வயது கைதிகள் விடுதலை பெற்று வெளியே சென்றாலும், ஆதரிப்பதற்கோ, மறுவாழ்வு அளிப்பதற்கோ யாரும் இல்லாததால், சிறைதான் நமது வாழ்க்கை என்று தாங்களாகவே தீர்ப்பு எழுதிக் கொண்டு விட்டார்கள்.

தீவிரவாதத்தின் பெயரால் போலித்தனமாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்கள், பிரிவினைவாத முத்திரையுடன் மண்ணுரிமை போராட்டம் நடத்தியவர்கள், நக்ஸல் பாரி சிந்தனையாளர்கள், மக்கள் உரிமை போராட்டக்காரர்கள் என ஒரு பெரும் கூட்டம் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, விசாரணைகள் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டு சிறைகளில் தவிக்கிறார்கள்.

இவர்களது நிலை குறித்த விவரங்கள் நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களைக் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் மேற்பார்வையில் “உண்மை அறியும் குழு” மாநில வாரியாக அமைக்கப்பட வேண்டும்.

இக்குழு அந்தந்த மாநிலங்களில் உள்ள சிறைச்சாலைகளில் நேரடி கள ஆய்வு செய்து திரட்டும் அறிக்கையை நாடாளுமன்றம் ஏற்று அதையே வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு விவாதிக்கப்பட வேண்டும். இதில் நடைமுறை சட்ட சிக்கல்கள் இருந்தால் அவை நீதிமன்ற வழிகாட்டலின்படி சரிசெய்யப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

அதன் பேரில் விசாரணைக் கைதிகள் விரைந்து தீர்ப்பைப் பெறவும், நீண்டகால ஆயுள் தண்டணைக் கைதிகள் முன் விடுதலைப் பெறவும், வழக்காட முடியாத கைதிகள் நீதி பெறவும், வயதான கைதிகள் விடுதலையாகி மறுவாழ்வு பெறவும் வழி காணப்பட வேண்டும்.

tmmk

நித்யானந்தா, ரஞ்சிதா, துறவறம், சினிமா!

[bn204.jpg]

நான் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேரந்தவன் என்ற ரீதியில் சுவாமி நித்யானந்தா, மற்றும் நடிகை ரஞ்சிதா விவகாரம் தொடர்பாக ஒரு சில கருத்துக்களை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.

சுவாமி நித்யானந்தா அவர்களை விமர்சிக்க நான் இங்கே வரவில்லை. மாறாக, இந்து சமுதாய அன்பர்களுக்கு மாத்திரம் இங்கு ஒரு விடயத்தைக் கூற ஆசைப்படுகின்றேன். ஒரு மதத்தை சரி பிழை என்பதை தீர்மானிப்பதற்கு உங்களது வேதத்தை அளவுகோளாகக் கொள்ள வேண்டுமே தவிர தயவு செய்து உங்களைப் போன்ற ஆறறிவுள்ள மனிதர்களை அளவு கோளாக கொள்ளாதீர்கள்.

நித்யானந்தன் போன்ற சுவாமிகள் செய்கின்ற அசிங்கமான மானக்கேடான செயற்பாடுகளால் இந்து மதத்திற்கு எவ்வித கலங்கமும் ஏற்படவில்லை. ஏற்படவுமாட்டாது. இதே மாணக்கேடான செயல்களை உங்களது மத நூல் சொல்லியிருந்தால்தான் இந்து மதத்திற்கு அசிங்கம். ஆனால் அவ்வாறு இல்லை என்பதை இந்த ஈனச்செயலுக்கெதிரான ஒட்டு மொத்த இந்து மக்களின் கொந்தளிப்பினாலேயே விளங்கிக்கொள்ள முடிகின்றது.

இந்து மக்கள் தவறாக எடுத்துக்கொள்ளாவிடில் இஸ்லாம் மார்க்கம் தொடர்பான ஒரு கருத்தை சுருக்கமாக இங்கு பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன். அதாவது, இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்தவரைக்கும் ஆபாசங்களையும் அசிங்கங்களையும் நேரடியாக தடைசெய்வதோடு மட்டும் நின்று கொள்ளாமல் அவற்றின் பால் ஒரு மனிதனை இட்டுச்செல்லுகின்ற வாயில்கள் அனைத்தையும் மூடிவிடும். அதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் தன்னிகரில்லா சிறப்பம்சமாகும்.

முதலில் சுவாமி நித்யானந்தா அவர்களை எடுத்துக்கொள்வோம். அவர் இதுபோன்ற ஈனச்செயலில் ஈடுபடுவதற்கு அடித்தளமிட்டது எது? துறவறம் என்பதை எவராலும் மறுக்க முடியாதல்லவா?  மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஆசைகள், உணர்ச்சிகள் இருக்கவே செய்கின்றன. அந்த ஆசைகளும் உனர்ச்சிகளும் வரையரையோடு இருந்தால் அவன்தான் மனிதன். வரையரையை விட்டும் அப்பாற்பட்டு விட்டால் அவன் மிருகமாக மாறி விடுகின்றான்.மேலும் படிக்க…

நித்யானந்தாவுடன் செக்ஸ் ஒப்பந்தம் போட்டவர்களுக்கு ஓர் அறிவிப்பு

ranjitha_070513_f4 ஆசிரமத்தில் சேர விரும்பும் அனைவரையும் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தி நித்யானந்தா கையெழுத்து வாங்கியுள்ள ஆவணங்கள் போலீசார் கையில் சிக்கியுள்ளன.

குறிப்பாக பிரம்மச்சரியம் என்கிற பெயரில் இளம்பெண்கள், இளைஞர்களிடையே அந்த கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது.

உடலுறவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கக்கூடாது.   நிர்வாணப்படம், நிர்வாண நடனம் ஆகியவை ஏற்க வேண்டும்.  அப்படி ஏற்பவர்கள் மட்டுமே ஆசிரமத்தில் அனுமதிக்கப்படுவர் என்று அந்த ஆவணத்தில் உள்ளது.

நித்யானந்தா கட்டாய பாலுணர்வை விதித்தது சட்டப்படி குற்றம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வழக்கறிஞர் சரவணன்,   ‘’சட்டத்திற்கு புறம்பான காரியத்தையோ, செய்ய முடியாத காரியத்தையோ யாரும் ஒப்பந்தம் போட முடியாது.   ஆனால் இந்த ஒப்பந்தத்தை பார்க்கும் போது ஏதோ தவறான செய்கைக்காக இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றதாக தெரிகிறது.

இந்த ஒப்பந்தங்கள் சட்டத்தின் முன் செல்லுபடி ஆகாது’’என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,   நித்யானந்தா மீதுள்ள நம்பிக்கையால் ஒப்பந்தத்தை படித்து பார்க்காமல் கையெழுத்து போட்டு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று கர்நாடக போலீசார் அறிவித்துள்ளனர்.

nakkheeran.

உலகில் முதன் முதலாக பரபரப்பை ஏற்படுத்திய “செக்ஸ்” ஊழல்


உலகில் முதன் முதலாக பரபரப்பை ஏற்படுத்திய "செக்ஸ்" ஊழல்
இப்போதெல் லாம் மந்திரிகள் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்படுவதும், அதனால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்வதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.

இதுபோலவே `செக்ஸ்’ விவகாரத்தில் சிக்கி அதன் காரணமாக பதவி இழந்த சம்பவங்களும் உண்டு. பண்டைய கால மன்னர்கள் ஆட்சி ஆனாலும் சரி, இக்காலத்து அரசியல் ஆனாலும் சரி, இந்த `செக்ஸ்’ விவகாரம் பல பிரபலங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவர்களுடைய பதவிகளுக்கு வேட்டு வைத்து இருக்கிறது.


சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில்கிளிண்டனுக்கும், வெள்ளை மாளிகை (ஜனாதிபதி மாளிகை) பணிப்பெண் மோனிகா லெவின்ஸ்கிக்கும் இடையே ஏற்பட்ட `செக்ஸ்’ விவகாரம் புயலை கிளப்பியது. கோர்ட்டு வரைக்கும் சென்ற இந்த விவகாரம், ஒரு வழியாக சுமூகமாகி கிளிண்டனின் பதவி தப்பியது.

இந்த `செக்ஸ்’ விவகாரம் இன்று நேற்றல்ல 40 ஆண்டுகளுக்கு முன்பே அரங்கேறி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதன் முதலாக “செக்ஸ்” விவகாரத்தில் சிக்கி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மந்திரி ஒருவர் பதவியை இழந்தார். இது 1963_ம் ஆண்டில் நடந்தது.


அந்த மந்திரியின் பெயர் பிரபிïமோ. இங்கிலாந்து மந்திரி சபையில் யுத்த மந்திரியாக பதவி வகித்தார். கன்சர்வேடிவ் (பழமையாளர்) கட்சியைச் சேர்ந்தவர். 48 வயதான மந்திரி பிரபிïமோ திருமணம் ஆனவர். மனைவி பெயர் வேலரி காட்சன். இவர் நடிகையாவார்.


பிரபிïமோவுக்கும், கிறிஸ்டியன் கீலர் என்ற அழகிக்கும் காதல் ஏற்பட்டது. இதே சமயம் கீலருக்கும், ரஷிய கடற்படை அதிகாரிக்கும் தொடர்பு இருந்தது.


அழகி கீலரின் தொழிலே விபசாரம்தான். இதனால் மந்திரி பிரபிïமோ _ கீலர் காதல் விவகாரம் பத்திரிகைகளில் வெளியாகியது. “கீலர் ஒரு விபசாரி. ரஷிய அதிகாரியுடனும் தொடர்பு வைத்திருக்கிறாள். எனவே, இங்கிலாந்து நாட்டின் ராணுவ, அரசாங்க ரகசியங்கள் பிரபிïமோ மூலம் கீலருக்கு தெரிந்து, ரஷியாவுக்கும் போய்விட்டன” என்று பத்திரிகைகள் எழுதின.


இதனால் இந்த விவகாரம் இங்கிலாந்து அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.
ஆனால், இந்த விவகாரத்தை பிரபிïமோ திட்ட வட்டமாக மறுத்தார். “எனக்கும், அவளுக்கும் (கீலர்) தொடர்பு இல்லை. அப்படி கூறப்படுவது சுத்தப்பொய்” என்று கூறினார்.

அவருடைய இந்த மறுப்பு வெகு நாளைக்கு நிலைக்கவில்லை. குட்டு உடைந்து உண்மை வெளிவந்தது. கீலர் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டு முதல் சாட்சியாக விசாரிக்கப்பட்டாள். அந்த விசாரணையின்போது அவள் “எனக்கும், பிரபிïமோவுக்கும் தொடர்பு உண்டு” என்று கூறிவிட்டாள்.


இதனால் கீலருடன் உள்ள தொடர்பை மந்திரி பிரபிïமோவும் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1963_ம் ஆண்டு ஜுன் 5_ந்தேதி மந்திரி பதவியை பிரபிïமோ ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை இங்கிலாந்து பிரதமருக்கு அனுப்பி வைத்தார். அந்த ராஜினாமா கடிதத்தில் அவர் கூறி இருந்ததாவது:-

“அரசாங்க ரகசியங்கள் எதையும் நான் கீலருக்கு தெரிவிக்கவில்லை. என்றாலும் உண்மையை மறைத்து, கீலருடன் எனக்கு தொடர்பு இல்லை என்று கூறி இருந்தேன். என் குடும்ப கவுரவத்திற்காக நான் பொய் சொல்லிவிட்டேன். அப்படி பொய் சொன்னதால் இனி பதவியில் நீடிக்க எனக்கு அருகதை இல்லை. மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன்.”


இவ்வாறு பிரபிïமோ தெரிவித்து இருந்தார். `செக்ஸ்’ விவகாரத்துக்காக உலகில் முதல் முதலில் பதவியை இழந்த மந்திரி இவர்தான்.

IAS, IPS,IFS தேர்வில் வெரும் 2.4% முஸ்லிம் மாணவர்ளே தேர்வு!

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஷா பைஸல் UPSC (IAS, IPS,IFS) தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக 875 பேரில் வெறும் 21 பேர் மட்டுமே முஸ்லீம்கள், ஆதாவது 2.4% மட்டுமே முஸ்லீம்கள். இந்தியாவையே ஆளும் மிக முக்கிய பதிவிகளான, கலெக்டர், காவல் துறை கமிஷ்னர் இன்னும் பல்வேறு துறை செயலாளர்களுக்கான தேர்வில் முஸ்லீம்கள் வெறும் 2.4% பேரே தேர்வானது கவலை அளிக்கின்றது. நமக்கு மட்டும் மத்தியில் 10% இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால், 21 பேருக்கு பதில் 87 பேர் தேர்வாகி இருப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொத்தமாக தேர்ந்தெடுக்கபட்ட UPSC (IAS, IPS,IFS) நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டஇட ஒதுக்கீடு இலச்சியத்தை அடைய இன்றே ஆயத்தமாவோம்.

S.சித்தீக்.M.Tech

TNTJ மணவர் அணி

24 மணி நேரம் தொடர்ந்து உரையாடி 19 வயது இளைஞர் லிம்கா சாதனை

Tamilnadu special news update

திருவள்ளூர்; தனியார் தொலைக் காட்சியில் 24 மணி நேரம் தொடர்ந்து 507 நேயர்களிடம் உரையாடி, 19 வயது இளைஞர் லிம்கா சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் அடுத்த திருமுல்லைவாயல் வைஷ் ணவி நகரைச் சேர்ந்தவர் ராஜா மகன் விவேக்(19). இவர், கம்ப்யூட்டர் டிப்ளமோ படித்துவிட்டு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  மேலும், தனியார் தொலைக்காட்சியில் (ஜாக்) நிகழ்ச்சி தொகுப் பாளராகவும் மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

இவர் லிம்கா சாதனை மற்றும் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் காமெடி டைம், தெய்வீக நேரம், வாழ்த்தலாம் வாங்க, சிறுவர் நேரம், நேருக்கு நேர் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை (24 மணி நேரம்) நேரலை நிகழ்ச்சி திருவள்ளூரில் நடந்தது. இவர் உலக வரலாற்றிலேயே முதன் முதலாக இச்சாதனையை படைத் துள்ளார்.  லிம்கா உலக சாதனை புத்தகம் சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தாஸ், அறுவை சிகிச்சை நிபுணர் சந்திரன், பொது மருத்துவர்கள் ஜெயக்குமார், ராமநாதன், ஆசிரியர் ராஜிவ்குமார், ஆசிரியை சீதா உள் ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் உட்கார்ந்து நிகழ்ச்சியை கண்காணித்து மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சியின் இடையே சாதனை இளைஞர் விவேக் கின் உடல்நிலை குறித்து அடிக்கடி டாக்டர்கள் பரிசோதித்தனர். இந்நிகழ்ச்சியில் இளைஞர் விவேக்கை 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர் உள்ளிட்ட 75 பகுதிகளில் இருந்து 507 நேயர்கள் தொடர்பு கொண்டு பேசி னர்.

சாதனை குறித்து விவேக் கூறியதாவது: ‘நான் முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய புத்தகங் களை விரும்பி படிப் பேன். இளைஞர்கள் சாதனை புரிய வேண்டும் என்ற அப்துல் கலாம் கருத்து தான், என்னை இச்சாதனைக்கு தூண்டியது. நானும் சாதனை படைக்க வேண்டும் என தீவிர முயற்சியில் ஈடுபட்டு, தனியார் தொலைக் காட்சியில் (ஜாக்) பங்கேற்று இச்சாதனையை புரிந்துள்ளேன். இச்சாதனை புரிய என் தாய் விஜயா எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் நிகழ்த்திய இச்சாதனையை நானே முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம் பெறுவேன்’ என்றார்.

dinamalar

அரசு பஸ் டிக்கெட் பரிசோதகருக்கு தலைமை செயலகத்தில், ‘தர்மஅடி’

Important incidents and happenings in and around the  world

சென்னை : சென்னை மாநகர போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகரை, விசாரணைக்கு அழைத்து தலைமை செயலக ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோதி (55). இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில், டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை, தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பஸ் நிறுத்தத்தில், ஜோதி மற்றும் அவருடன் பணியாற்றும் பஞ்சாட்சரம், பாண்டியன் ஆகிய மூவரும் பஸ்களை நிறுத்தி, டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.

காலை 9:30 மணியளவில், திருப்போரூரிலிருந்து பிராட்வே செல்லும் தடம் எண் 521 பஸ், அந்த பஸ் நிறுத்தம் வந்தது. வழக்கம் போல் ஜோதி உள்ளிட்ட மூவரும் அந்த பஸ்சில் ஏறி, டிக்கெட் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்சில் பயணித்த, தலைமை செயலக பணியாளர்கள் நான்கு பேர், டிக்கெட் பரிசோதகர்களிடம், ”பீக் அவர்சில் ஏன் இப்படி பஸ்சை நிறுத்துகிறீர்கள்?” என்று கூறியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், டிக்கெட் பரிசோதகர்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியர், தன்னை தலைமை செயலரின் உதவியாளர் என்று கூறினார். பஸ்சை விட்டு பரிசோதகர்கள் இறங்கி விட, பஸ் கிளம்பியது. இதன்பின், டிக்கெட் பரிசோதகர் ஜோதியை அழைத்த மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், தலைமை செயலகத்திற்கு செல்லுமாறும், அங்கு விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜோதி, சக ஊழியர்களுடன், தலைமை செயலகம் சென்றார். தலைமை செயலர் அறையில் விசாரணை முடிந்து திரும்பிய போது, அந்த அறை வாசலில் நின்ற, டபேதார்கள் இருவர் மற்றும் பஸ்சில் வந்த ஊழியர் ஆகிய மூவரும் சேர்ந்து, டிக்கெட் பரிசோதகரை தாக்கியதுடன், அவரை கீழே தள்ளி மிதித்ததாக கூறப்படுகிறது.

இதில், ஜோதிக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமடைந்தார். உடன் சென்றவர்கள், அவரை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமை செயலக போலீசில், இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தலைமை செயலர் அறைமுன்பு நடந்த இந்த தாக்குதல் சம்பவம், போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை செய்யும் போது, மற்றொரு அரசு ஊழியர் ஒத்துழைப்பு அளிக்காததுடன், அவரை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

dinamalar

உங்கள் யு-ட்யூப் அக்கவுண்ட்


கூகுள் தரும் வசதிகள் பலவற்றில் இமெயிலுக்கு அடுத்தபடியாக, பலரின் விருப்பமாக இருப்பது யுட்யூட்தான். இதில் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய அல்லது நமக்குப் பிடித்த வீடியோ கிளிப்களை இதில் அப்லோட் செய்து அனைவரும் பார்க்கும் வண்ணம் பதிக்கலாம்.
நீங்கள் யு–ட்யூப் தளம் சென்று தேடிப் பார்த்தால், நாம் டிவி சேனல்களில் பார்க்கும் பல வீடியோ காட்சிகள் பதிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். திறமையான ரசிகர்கள் பலர், பிரபல திரைப்படங்களின் பாடல் காட்சிகளுக்கான பாடல்களில் மாற்றம் செய்து தங்களுக்குப் பிடித்த வகையில் அமைத்து வெளியிட்டிருப்பதனைப் பார்க்கலாம்.
பலர் தங்கள் குழந்தைகளின் வீடியோ கிளிப்களை அனைவரும் காணும் வகையில் அமைத்திருப் பதனையும் காணலாம். இங்கு இந்த யு–ட்யூப் அக்கவுண்ட்டை எப்படிக் கையாளலாம் என்று பார்ப்போம்.
முதலில் கூகுள் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தாலே, யு–ட்யூப் அக்கவுண்ட் அமைத்துக் கொள்ள முடியும். இவற்றை அமைத்தவுடன் யு–ட்யூப் தளம் சென்று உங்கள் அக்கவுண்ட் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே அக்கவுண்ட் பக்கத்திற்குச் செல்லுங்கள். வலது மேல் மூலையில் உள்ள Account
என்பதில் கிளிக் செய்தால், உங்கள் அக்கவுண்ட் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

அடுத்து இடது பக்கத்தில் ஒரு பிரிவு ‘Overview’ எனத் தலைப்பிட்டு இருப்பதனைக் காணலாம். இந்தப் பிரிவின் கீழ் உங்கள் அக்கவுண்ட்டை, வசதிப்படி வைத்துக் கொள்ள பல ஆப்ஷன்கள் கிடைக்கும். முதலில் Profile Setup என்பதில் தொடங்கலாம். இதில் கிளிக் செய்தால் நீங்கள் ‘About Me’ என்ற ஒரு புதிய பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு உங்கள் யூசர் நேம் அடிப்படையில் ஏதேனும் ஒரு படத்தை அப்லோட் செய்திடலாம். உங்களைப் பற்றி விவரிக்க ஏதேனும் தகவல்களைப் பதியலாம். உங்களுக்கென ஓர் இணைய தளம் இருந்தால், அதனை அங்கே எழுதி வைக்கலாம். கூடுதலாக உங்களின் தனிப்பட்ட தகவல்கள், பிடித்தவை, பிடிக்காதவையும் பதியலாம்,மேலும் படிக்க…

ஈரானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்கர்களை குடும்பத்தவர் சந்திக்க அனுமதி

File:Mahmoud Ahmadinejad.jpg

தெஹ்ரான்: ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய குற்றச்சாட்டிற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று அமெரிக்கர்களை அவர்களது குடும்பத்தினர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூன்று அமெரிக்கர்களையும் அவர்களது குடும்பத்தினர் சந்திப்பதற்காக ஈரானுக்கு பயணிப்பதற்கான விசாவினை வழங்குமாறு அமெரிக்காவிலுள்ள ஐ.நா.தூதுவருக்கு ஈரான் உத்தரவிட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மனிதநேய அடிப்படையிலேயே ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் மனோச்சர் மொட்டாகி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்களான ஷனே பௌர்,சரா சௌட் மற்றும் ஜோஸ் பற்றால் ஆகியோர் ஈரானில் வேவு பார்ப்பதற்காக சட்டத்திற்கு முரணாக நாட்டுக்குள் நுழைந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த வருடம் ஜூலை 31 இல் எல்லை காப்பு படையினரால் கைது செய்யப்பட்டிருந்த இம்மூவரும் அமெரிக்க உளவுப்பிரிவுடன் தொடர்பினைக்கொண்டிருப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த மூன்று அமெரிக்கர்களும் நண்பர்களாக இருப்பதுடன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுமிருந்தனர்.

இந்நிலையில், இம்மூவரையும் குடும்ப உறுப்பினர்கள் சிறைச்சாலைகளில் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தும் அதற்குரிய திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

ஆனால், தமது பிள்ளைகளை சந்திப்பதற்கு ஈரான் மூன்றாவது தடவையாக இவ்வாறு அனுமதித்துள்ளதாகவும் ஒருபோதும் சந்திப்பதற்கு அனுமதி வழங்குவதில்லையெனவும் மூன்று அமெரிக்கர்களினதும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

-இறை நேசன்-

ஜெயலலிதா தங்கும் சிறுதாவூர் பங்களா நிலம் ஆர்ஜிதம்: அரசு உத்தரவு

Front page news and headlines today

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் அடிக்கடி சென்று தங்கி வரும் சிறுதாவூர் பங்களா அமைந்துள்ள நிலத்தை கையகப்படுத்த, அரசு உத்தரவிட்டு உள்ளது. எனினும், சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக உள்ள வழக்கு முடியும் வரை மீட்பு நடவடிக்கையை நிறுத்தி வைக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலுகா சிறுதாவூர் கிராமத்தில் பிரம்மாண்ட பங்களா உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் இந்த பங்களாவை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பங்களா அமைந்துள்ள நிலம், அரசால் இலவசமாக ஏழைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட தாகவும், அந்த நிலம் அபகரிக்கப் பட்டுள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டினர். முறைகேடாக இந்த நிலம் அபகரிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க, ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்ரமணியம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. 2006 ஜூலை 27ம் தேதி அமைக்கப்பட்ட இந்த கமிஷன், இரண்டு மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு உட்பட பல காரணங்களால், மூன்று ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் தாமதமாக, கடந்த பிப்ரவரியில் கமிஷனின் அறிக்கை, அரசிடம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் படிக்க…

உங்களில் ஒருவன் நான்

Masjid Haram

பந்தா பண்ணுவதற்கு நமக்கு யாரும் சொல்லித் தரவே தேவையில்லை. நாலு ஆதரவாளர்கள் நமக்குப் பின்னால் வ ருவதற்குக் கிடைத்தால் போதும்; உடனே பெருமையால் தலை கனத்து விடுகிறது; பின்வரும் கூட்டத்தின் ‘வாழ்க’  முழக்கத்தில் கிறக்கம் ஏற்பட்டுவிடுகிறது. உடனே சவடால் பேச்சும் வாயிலிருந்து மடை திறந்த வெள்ளமாகப்  பொழிகிறது.
ஆனால் இந்த அகிலத்திற்கே அருட்கொடையாக இறைத்தூதராக வந்த அண்ணலாரின் வாழ்வில் காணப்படும்  எளிமை நம்மை வியக்க வைக்கிறது.
ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் நீண்ட பயணத்தில் இருந்தார்கள். கண்ணுக்கு எட்டிய  தொலைவுவரை ஒரே மணற்காடு. கடும் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மருந்துக்குக்கூட நிழல் இல்லை. பயணத்தின் ஊடாக திடீரென அடர்த்தியான பேரீச்சை மரங்கள் கொண்ட பாலைவனச் சோலை ஒன்று கண்ணில்  பட்டது. அந்தச் சோலையைக் கண்டதும் எல்லாருடைய மனங்களிலும் மகிழ்ச்சி. அங்கு தங்கி உணவருந்தி ஓய்வெடுத்துவிட்டுப்  பயணத்தைத் தொடரலாம் என்று அண்ணலார் முடிவு செய்தார். அடுத்த கணமே நபித்தோழர்கள் சுறு சுறுப்பாகச் செயல்படத் தொடங்கிவிட்டார்கள். சிலர் அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தினார்கள்; சிலர் உணவு  சமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்; சிலர் ரொட்டிக்காக மாவு பிசையத் தொடங்கினார்கள்; சிலர் தண்ணீர்  எடுத்து வந்தார்கள்; சிலர் தாம் ஏறிவந்த ஒட்டகங்கள் அனைத்துக்கும் தீவனமும் நீரும் புகட்டினார்கள். அண்ணல் நபிகளார் தம்முடைய பங்கிற்கு விறகு சேகரித்து வரக் கிளம்பினார். நபித்தோழர்கள் அனைவரும் பாசமும்  அன்பும் மேலிட அண்ணலாரைத் தடுத்தார்கள். ‘‘வேண்டாம், இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஓய்வெடுங்கள். எல் லா வேலைகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.’’ அண்ணலார் கூறினார்கள்: ‘‘எல்லா வேலைகளையும் நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்.  ஆனால் உங்களில் இருந்து மாறுபட்டவனாக இருக்க நான் விரும்பவில்லை. தமது தோழர்களிலிருந்து விலகி இரு ப்பவனை இறைவன் நேசிப்பதில்லை.’’  இந்த எளிமையும் பணிவும் நம் வாழ்விலும் இருந்துவிட்டால் எத்தனை நன்றாக இருக்கும்!

-இறை நேசன்-


கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்!

Audio/Videoஅனைத்து சமயத்தவரும் கேட்டு பயணடைய வேண்டிய, அனுபவமிக்க மனோதத்துவ நிபுணரின் குழந்தைகள் வளர்ப்பது தொடர்பான அறிவுரைகளும் எச்சரிக்கைகளும்.

வழங்குபவர்: Dr. அப்துல்லாஹ் (Dr. பெரியார்தாசன் – சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி

இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாய்யியா, ஜித்தா

வெளியீடு:
இஸ்லாமிய அழைப்பகம், ஸனாய்யியா, ஜித்தா, Tel. 6369549

சோனியா வாகனத்தை நிறுத்திய ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட்

http://www.ndtv.com/convergence/images/fullimage/ver1/s/soniagandhi.jpg
ரேபரேலி : உ.பி.,யில் காங்., தலைவர் சோனியாவின் பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தியது தொடர்பாக ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், ரயில்வே கேட் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, உ.பி., ரேபரேலி தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள் ளார். தலமு என்ற இடத்தில் இருந்து உன்சாகருக்கு சோனியா சென்று கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு வாகனங்கள் அவருக்கு முன் சென்று கொண்டிருந்தன. அப்போது, ஜலால்பூர் அருகே ரயில்வே கேட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஜகதீஷ் என்ற ஊழியர், பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் தேஸ்ராம் ரவாத், ரயில்வே கேட் ஊழியர் ஜகதீஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இச்சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்!

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல்!

காது கேளாதோர் பள்ளியில் முதலிடம் பெற்ற பிளஸ்-2 மாணவி!

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மாணவி காது கேளாதோர் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்றார்.
சென்னை திருவல்லிக்கேனியைச் சேர்ந்த கார் டிரைவரான பி.எம். முகம்மது அப்துல்லாஹ்-எம்.எஸ். நாகூர் மீரா தம்பதிகளின் மகள் ஃபாத்திமா பானு. பிறந்த சில மாதங்களிலே ஃபாத்திமா பானுக்குப் பேச்சுத்திறன், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரின் பெற்றோர் மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள்.

மகளின் எதிர்காலம் அவர்களின் கண்முன் வந்து நின்றது. முகம்மது அப்துல்லாஹ் தன்னுடைய குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டு, மகளின் குறைபாடு தெரியாமல் அவரைப் படிக்க முடிவு செய்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள ‘லிட்டில் பிளவர் கான்வென்ட்’ மேநிலைப்பள்ளியில் அவரைச் சேர்ந்தார்.

வாய் பேச முடியாவிட்டாலும், காது கேட்கும் திறனை இழந்து விட்டாலும் மாணவி ஃபாத்திமா பானு தனக்கு எதிரே பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை பெற்று இருக்கிறார். இந்த ஆற்றலே அவர் பிளஸ்-2வில் அதிக மார்க் எடுப்பதற்குத் துணை புரிந்தது.

பிளஸ்-2வில் பிசினஸ் மேக்ஸ் பாடப் பிரிவை தேர்வு செய்து தேர்வு எழுதிய அவர், கடந்த 14.05.2010 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 1000-க்கு 953 மார்க் பெற்று பள்ளியிலே முதல் மாணவியாக தேர்வு பெற்றார்.

தமிழில் 177 மார்க்கும், பொருளாதாரத்தில் 196, வணிகவியலில் 198, கணக்குபதிவியலில் 189, பிசினஸ் மேக்ஸில் 193 மதிப்பெண்ணும் பெற்று இருக்கிறார். இந்த வெற்றி அவரையும் அவரின் பெற்றோர்களையும் மன மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பிளஸ்-2க்கு பிறகு பி.காம் படித்து, சி.ஏ.(ஆடிட்டர்) ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருக்கிறது.

முதலிடம் பெற்ற மாணவியைப் பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி, கட்டிப் பிடித்து “உன் விடாமுயற்சிக்கு பாராட்டுகள்” என்று கூறி வாழ்த்துத் தெரிவித்தார். பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி ஃபாத்திமா பானு இன்னும் ஓராண்டு ஆங்கிலக் கல்வியை அதே பள்ளியில் கற்க வேண்டியுள்ளது. அதன்பிறகு அடுத்த ஆண்டு (2011) அவர் கல்லூரிக்குச் சென்று தன்னுடைய லட்சியப் பயணத்தைத் தொடருவார்.

இது குறித்து பானுவின் தந்தை முகம்மது அப்துல்லாஹ் கூறியதாவது:-
“ஃபாத்திமா எனக்கு மூத்த மகள். பிறந்த சில மாதங்களிலே அவளால் பேசவும் கேட்கவும் முடியாது என்பது எங்களுக்குத் தெரியவந்தது. இது எங்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. மனதில் தோன்றிய காயங்களைத் தாங்கிக்கொண்டு, என் மகளின் எதிர்காலத்திற்காகப் பாடுபட்டு வருகிறோம். ஆண்டவனின் கருணையால் பிளஸ்-2 தேர்வில் அவள் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறாள். ஆடிட்டராக வர வேண்டும் என்பது அவளின் விருப்பம். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்”

நன்றி : தினத்தந்தி

பாலஸ்தீன சிறுவர்களின் நிலை…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.

சமீபத்தில் பாலஸ்தீன சிறுவர்களின் நிலை குறித்த ஒரு கட்டுரையை “உன்னதம்” இதழுக்காக மொழிப்பெயர்க்கும் வாய்ப்பு கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ். மனதில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய அந்த கட்டுரை உங்கள் முன் இங்கு பதியப்படுகிறது…

சர்வதேச சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு (Defense for Children International – Palestine Section) – பாலஸ்தீன கிளை, ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதை தன் குறிக்கோளாக கொண்ட அமைப்பு.

ரிபத் கஸ்சிஸ் (Rifat Kassis) இதனுடைய தலைவராக 2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தற்போது இரண்டாவது முறையாக பதவியில் உள்ளார். சமீபத்தில் “The Electronic Intifada” என்னும் இணையப்பத்திரிக்கையை சேர்ந்த அட்ரி நிவ்ஹோப் (Adri nieuwhof) இவரிடம் நேர்க்காணல் நடத்தினார். அப்போது ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்களின் நிலை குறித்து ரிபத் கஸ்சிஸ் விளக்கினார்.

அட்ரி நிவ்ஹோப்: உங்கள் அமைப்பை பற்றியும், நீங்கள் இங்கு செய்யக் கூடிய பணி பற்றியும் விளக்கவும்.

ரிபத் கஸ்சிஸ்: எங்கள் அமைப்பு பணியாற்ற தொடங்கி இது பத்தொன்பதாம் வருடம். இதை நான் மற்றவர்களுடன் சேர்ந்து தொடங்கினேன். சின்னதாக எளிமையாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பை இப்போது பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. இங்குள்ள சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதும், குறிப்பெடுத்துக் கொள்வதும், அந்த சிறுவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் தான் எங்களின் முதன்மையான பணி.
அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு கலவரங்களில் சிறுவர்கள் பாதிக்கப்படாமல் காப்பதும் எங்கள் பொறுப்பு. உதாரணத்துக்கு இங்குள்ள (பாலஸ்தீனம்) கல்வி அமைச்சகத்துடன் இணைந்து, சிறுவர்கள் உடல் ரீதியாக தண்டிக்க படுவதையும், மற்ற சமூக தொண்டு நிருவனங்களுடன் சேர்ந்து சிறுவர்களின் உரிமைகளை காப்பதும், அவர்களை பணிகளில் சேர்ப்பது பற்றியும், சிறுவர்கள் தங்களுக்கான உரிமைகளை தெரிந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அழைப்பு விடும்படியும், அதன்மூலம் உள்நாட்டு கலவரங்களையும், சிறுவர்கள் உடல் ரீதியாக தண்டிக்கப்படுவதையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் எண்ணுகிறோம்.
அ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டு என்ன?
ரி: எங்களிடம் உள்ள தகவலின் படி ஒவ்வொரு வருடமும் சுமார் 700 சிறுவர்கள் இஸ்ரேலிய நீதிமன்றங்களால் குற்றஞ்சாட்டபட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், அதாவது சுமார் 26%, இஸ்ரேலிய ராணுவத்தின் மீது கல்லெறிந்ததால் பிடிக்கப்பட்டவர்கள்.
மற்ற காரணங்கள், தடை செய்யப்பட்ட அரசியல் பணிகளில், ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றது போன்றவை. இப்படி சிறையில் உள்ள சிறுவர்களில் பனிரெண்டு வயது சிறுவர்கள் கூட உண்டு.
அ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்களின் அனுபவங்கள் குறித்து கூற முடியுமா?
ரி: நாங்கள் இந்த சிறுவர்களிடமிருந்தும், அவர்களது பெற்றோர்களிடமிருந்தும், அவர்களது வழக்கறிஞர்களிடமிருந்தும், ஒரே விதமான தகவல்களையே பெறுகிறோம். அதாவது இஸ்ரேலிய வீரர்கள் இரவிலோ, விடியற்காலையிலோ, சிறுவர்களின் வீட்டிற்கு வருவார்கள். பெரும் இரைச்சல் போட்டுக்கொண்டு காட்டமான முறையில் வீட்டிற்குள் நுழைவார்கள். அந்த சிறுவர்களின் பெற்றோர்களிடம் எந்த ஒரு காரணமும் கூறாமல் சிறுவர்களை அழைத்து சென்று விடுவார்கள். சில சிறுவர்கள் சோதனைச் சாவடிகளில் வைத்து கைது செய்யப்படுவதும் உண்டு.
சிறுவர்கள் அவர்களது வீட்டிலிருந்து அழைத்து செல்லப்படும்போது அந்த வீரர்கள் கத்துவார்கள், “இங்கே யார் முஹம்மது”. அந்த முஹம்மது என்ற சிறுவனுக்கு 12-13 வயது இருந்தாலும் சரி, கண்டுக்கொள்ளமாட்டர்கள். அவனை உதைப்பார்கள், கண்ணை கட்டுவார்கள், அவன் கைகளை பிளாஸ்டிக் கயிறுகளால் அவன் வலியுனால் துடிக்குமளவு கட்டுவார்கள். பின்னர் அவர்களது வாகனத்திற்கு பின்னால் அவனை போட்டுக்கொண்டு சென்று விடுவார்கள். வாகனத்தில் வைத்தும் அடிப்பார்கள். இது அந்த சிறுவர்களுக்கு உளவியல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தும்.
அந்த சிறுவர்கள் கொண்டு செல்லப்பட்ட இடத்தில், ஒன்று சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது கேள்வி கேட்க அழைத்து செல்லப்படுவார்கள். கேள்வி கேட்கப்படும்போதும் அவர்கள் உதைக்கப்படுவார்கள், அடிக்கப்படுவார்கள், தவறான வார்த்தைகளால் திட்டப்படுவார்கள். அவர்களது குடும்பங்களை அழித்து விடுவோம் என்றும், அவர்களுடைய தாய்மார்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்றும் மிரட்டப்படுவார்கள்.மேலும் படிக்க…

அல்குர்ஆன் கூறும் சூராவளி எச்சரிக்கைகள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)

இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!

சூராவளி என்பது என்ன

சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். மேலும் படிக்க…

மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 159 பேர் பலி

Tamil news paper, Tamil daily news  paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political  news, business news, financial news, sports news, today news, India  news, world news, daily news update

மங்களூர், மே.22: துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 159 பேர் பலியானார்கள்.

துபாயில் இருந்து இன்று காலை 166 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் மங்களூர் விமான நிலைத்துக்கு வந்தது. விமான நிலையத்தின் ஓடு தளத்தில் தரையிறங்க முற்பட்ட போது தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 159 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. விமானத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.  விமானத்தில் பயணம் செய்தவர்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

விமான ஊழியர்கள் 6 பேர் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 166 பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

விபத்திற்குள்ளான விமானம் போயிங் 737 ரகத்தைச் சேர்ந்தது. இந்த விமானத்தின் பைலட் ரஷ்யாவைச் சேர்ந்தவர்.

மத்திய அமைச்சர்கள் பிரபுல் பட்டேல், வீரப்ப மொய்லி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு  விரைந்துள்ளனர்.

ஏர்-இந்தியா தகவல் உதவிப் பிரிவுக்கான தொலைபேசி எண்கள்:

மங்களூர்: 0824-2451046, 2451047

பெங்களூர்: 080-66785172, 080-22273310

மும்பை: 022-22796161

துபை: 00971-2165828, 2165829

மங்களூர் விபத்து: கறுப்பு பெட்டி கிடைத்தது

mangalore air india accident, Air India on Mangalore  air crash,  Mangalore: Air India aircraft overshoots runway, Air India Crash in  Mangalore Kills 163 People

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.துபாயில் இருந்து 166 பயணிகளுடன் வந்த மங்களூரில் தரை இறங்கும்போது வெடித்து தீப்பிடித்ததில் 158 பேர் உடல் கருகி இறந்தனர்.
விபத்து நடந்தது எப்படி என்பது பற்றி கண்டுபிடிப்பதற்காக இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டனர்.விமானத்தின் முன் பகுதி சிதைந்து கிடந்த இடத்தில் கறுப்பு பெட்டி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்ய மும்பை அல்லது டெல்லிக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
மங்களூர் விபத்து: அமெரிக்க குழு விசாரணை:
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மங்களூரில் விபத்துக்குள்ளான விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏதும் இருந்தா என்பதை கண்டறிய ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மங்களூர் விமான விபத்து குறித்து விசாரணை நடத்த அமெரிக்காவில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கழகத்தின் நிபுணர்கள் இந்தியா வர உள்ளனர். அவர்கள் வருகிற செவ்வாய்க்கிழமை மங்களூர் வருகிறார்கள்.
விபத்து குறித்து இந்திய நிபுணர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்வார்கள். அவர்கள் ஆய்வு நடத்திய பிறகு விபத்துக்கான முழு காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மங்களூரில் நெஞ்சை உருக்கும் சோகம் விமான விபத்தில் 159 பேர் பலி :
மங்களூர்: மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை நெஞ்சை உருக்கும்  மிகக் கோரமான விமான விபத்து ஏற்பட் டது. துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரை இறங்கும்போது ஓடுபாதையை தாண்டி மலையில் மோதி  வெடித்துச் சிதறியது. இதில், 19 குழந்தைகள் உட்பட 159 பேர் கருகி பலியாகினர். அதிர்ஷ்டவசமாக 7 பேர் உயிர் தப்பினர். இந்தியாவில் 10  ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மிக கோரமான விமான விபத்து இது.

மேலும் படிக்க…

விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்?

திருவனந்தபுரம்: மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மங்களூர் விமான விபத்தில் பலியான 158 பேரில் 22 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகி விட்டன. அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனைகள் ஒருபுறம் நடக்கின்றன. அத்தோடு பயணிகள் பட்டியலையும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியும் நடந்து வருகிறது.

இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரத்தில் உள்ள பஸ்போ்ர்ட் அலுவலக்களின் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர். அதில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் பலியான எட்டு பேருக்கு தங்கள் அலுவலகத்தில் இருந்து பாஸ்போர்ட் வழங்கவில்லை என்று கோழிக்கோடு, மலப்புரம் பாஸ்போர்ட் அலுவலகங்கள் தெரிவித்துள்ளன.

எனவே இவர்கள் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய பாஸ்போர்டுகளை தங்கள் வேலை செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விடவேண்டும். நாடு திரும்பும்போது மட்டும் அதை பெற்று கொள்ள முடியும்.

ஆனால் பல நிறுவனங்கள் அதைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதுண்டு. இதனால் இவர்களைப் போன்றவர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுப்பதற்காகவே வளைகுடா நாடுகளில் பல மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

நிறுவனங்களிடம் இருந்து பாஸ்போர்ட் முடியாதவர்கள் எப்படியாவது நாடு திரும்ப வேண்டும், என்பதற்காக பணம் கொடுத்து போலி பாஸ்போர்ட் பயணம் செய்கின்றனர். இப்படிதான் விபத்தில் சிக்கிய மங்களூர் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்நேரம்.காம்

டயர் வெடித்தது ஸ்பைஸ் ஜெட் விமானம்

டெல்லி: டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்ற ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானத்தில் டயர் வெடித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு திருப்பி அழைக்கப்பட்டு, தரையிறக்கப்பட்டது.

அகமதாபாத்தில் இருந்து டெல்லி வழியாக இந்த விமானம் ஸ்ரீநகர் சென்றது. டெல்லி விமான நிலையத்திலிருந்து பகல் 2 மணிக்கு விமானம் புறப்பட்டது. போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த விமானத்தில் 186 பயணிகள் இருந்தனர்.

அந்த விமானம் சென்ற சில நிமிடங்களில், தரையிறங்கிய இன்னொரு விமானத்தின் விமானிகள் ஓடு தளத்தில் டயர் துண்டுகள் சிதறி கிடப்பதைப் பார்த்து உடனடியாக தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அது ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் துண்டுகளாகத் தான் இருக்க வேண்டும் என்று கருதிய தரைக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் உடனே அந்த விமானத்தை டெல்லிக்கு திருப்புமாறு உத்தரவிட்டனர்.

அதற்குள் 15 நிமிடங்கள் ஓடிவிட்டன. இந்த நேரத்துக்குள் அந்த விமானம் 150 கி.மீ. தூரம் வரை பயணித்துவிட்டது. ஆனாலும், அந்த விமானம் உடனடியாக டெல்லிக்கு திருப்பப்பட்டது.

அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த விமானம் டெல்லிக்கு திரும்பி வந்தது.

விமானத்தை குறைந்த உயரத்தில் பறக்க வைத்து தொலைநோக்கிகள் மூலம் பார்த்தபோது அதன் வலது பக்க டயர்களில் ஒன்று வெடித்துள்ளது உறுதியானது.

இதையடுத்து விமானத்தை அதற்கேற்றார் போல தரையிறங்குமாறு (smooth sail landing) விமானிகளுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் டயர் மாற்றப்பட்ட அந்த விமானம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றது.

-nesan-

விடுதி வசதி : முஸ்லிம் மாணவியர் சேர்க்கை ஆரம்பம்

வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது

Image

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம் மாணவியர் இடைவிடாது கல்வி பயிலும் நோக்கில் சிறுபான்மையினர் நலத்துறை வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இவ்விடுதிகளில் மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
விடுதியில் 4ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவியர் சேர்க்கப்படுவர். மாணவியர் முஸ்லிம் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.  மாணவியின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இலவச உணவு மற்றும் உறைவிடம், அனைத்து அடிப்படை வசதிகள் அளிக்கப்படும். மேலும் 4ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு இரண்டு செட் இலவச சீருடை வழங்கப்படும்.  பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவியருக்கு இலவச சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். தொலைதூரத்திலிருந்து வந்து கல்வி பயில்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5:45 மணி வரை, அனைத்து மாவட்ட கலெக் டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந் தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது சம்பந் தப்பட்ட விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி விடுதிக்கு, ஜூன் 10ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும், கல்லூரி விடுதிக்கு ஜூன் 24ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது

adhikaalai


சாதிக்க அரசுப் பள்ளியும் ஒரு தடையல்ல!ஜாஸ்மீன்


மே 26  அன்று வெளியான எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக சாதனை புரிந்த ஜாஸ்மினைப் பார்த்து பலரது புருவமும் சற்றே உயர்ந்தன. காரணம் அவர் படித்த பள்ளி. திருநெல்வேலி மாவட்டம் டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்த ஜாஸ்மின் மாநில அளவில் முதலிடம் பெற்று தனது பள்ளிக்கும், பள்ளியின் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

தமிழக மக்கள் மனதில் இன்று வரை பதிந்து விட்ட ஒரு செய்தி. மாநில அளவிலோ,மாவட்ட அளவிலோ  சாதிக்க வேண்டுமானால் புகழ்பெற்ற தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தாலே அது முடியும் என்பது. அதை மாற்றி புதிய சரித்திரம் படைத்துள்ளார் தெரு தெருவாக ஜவுளி வியாபாரம்  செய்து பிழைப்பு நடத்தும் சேக் தாவூதின் மகள்  ஜாஸ்மின்.

தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளைக் கட்டணத்தில் தன் பிள்ளைகளை சேர்த்தால் மட்டுமே கல்வி தரமானதாக இருக்கும் என்று என்னும் பெற்றோர்கள் இனியாவது அரசுப் பள்ளி ஆசிரியர்களின்  முயற்சிகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போல அரசும் கல்வியில் தனிக் கவனம் செலுத்தி அரசுப் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து தமிழக மக்கள் அரசுப் பள்ளிகளில் முண்டியடித்து தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.

-இறை நேசன்-

துண்டிக்கப்பட்ட உடல் உறுப்பை மீண்டும் வளர வைக்கும் ஜீன்: விஞ்ஞானிகள் ஆய்வு!

விபத்தில் சிக்கி கை, கால் துண்டிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் துன்பம் கொடுமையானது. இதுபோல் விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடந்துவருகின்றன இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் அஜீஸ் அபூபக்கர் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

பல்லியின் வால் துண்டிக்கப்பட்டாலும் அது கொஞ்ச நாளில் மீண்டும் வளர்ந்துவிடும். அதுபோல சில உயிரினங்களின் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டாலும் அது மீண்டும் வளர்ந்துவிடும். இதுபோலவே பிளானேரியன் எனப்படும் புழுவின் தலை துண்டிக்கப்பட்டாலும் அது இறந்துவிடுவதில்லை. கொஞ்ச நாளில் அதன் தலை வளர்ந்துவிடும். தலை மட்டுமின்றி அந்த புழுவின் மூளை சேதம் அடைந்தாலும் அது மீண்டும் வளர்ந்துவிடும்.

இப்படி வித்தியாசமான உடல் அமைப்பு கொண்ட இந்த புழுவை அடிப்படையாக வைத்து டாக்டர் அஜீஸ் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியது. பிளானேரியன் புழுவின் உடலில் ஏற்படும் இந்த மாற்றத்துக்கு காரணமான ஜீன் எது என்பதை முதலில் கண்டுபிடித்தனர். “ஸ்மெட் பெர்ப்“ எனப்படும் இந்த ஜீன் தான் துண்டிக்கப்பட்ட தலை, சேதம் அடைந்த முளை ஆகியவற்றையும் மீண்டும் வளர வைக்கிறது என்பதை கண்டுபிடித்தனர்.

தற்போது இது குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் நடக்கிறது. இதே ஜீன் மனித உடலில் உள்ளதா? அல்லது அதுபோன்ற ஜீன் மனித உடலில் செலுத்தப்படும் போது புழுவின் உடலில் நடந்தது போல துண்டிக்கப்பட்ட உடல்உறுப்புகள் தானாகவே வளருமா? என்பது தான் அடுத்தகட்ட ஆய்வுகள் ஆகும்.

இந்த ஆய்வுகள் வெற்றி பெறும் போது உடல்ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு பெற முடியும். விபத்தில் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இழந்த உடல் உறுப்புகளை சில மாதங்களில் பெறமுடியும்.

தேடிததந்தவர்-அபு அஹ்சன்

tntj.net

சோரபுதீன் என்கவுண்டர்: குஜராத் காவல்துறையினர் மீது பிடி இறுக்கின்றது

shorabdeen and kauser at Tajசோரபுதீன் சேக்‍ தங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதினால் தற்காப்பிற்காக தாங்கள் அவர்களை சுட்டு கொன்றதாக பசப்பி வந்த  குஜராத் காவல்துறையினரின் குட்டு நீதிமன்றத்தில் உடைந்துள்ளது.
நவம்பர் 26, 2005 அன்று குஜராத்தில் சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கவுஸர்பீவி ஆகியோர் என்கவுண்டர் என்ற மோதல் சாவில் கொல்லப்பட்டதாக குஜராத் காவல்துறையினர் அறிவித்தனர். இந்த சம்பவத்தை முதலில் குஜராத் சி.ஐ.டி. துறையும் பிறகு குஜராத் ஏ.டி.எஸ்.சும் விசாரித்தனர். பிறகு உச்சநீதிமன்ற தலையீடு காரணமாக மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ) இந்த வழக்கை விசாரித்து குஜராத் மாநில உயர் காவல்துறை ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்ஜாரா, ராஜ்குமார் பாண்டியன் மற்றும் திலீப் குமார் உட்பட 14 காவல்துறை அதிகாரிகளை கைதுச் செய்தது. இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Vanzara in custodyகைதுச் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி வன்ஜாரா

இந்த விசாரணையின் போது பல சாட்சிகள் சோராபுதீன் காவல்துறையை நோக்கி சுடவில்லை என்று குஜராத் காவல்துறையின் கட்டுக் கதையை அம்பலப்படுத்தி வருகின்றார்கள். இந்த வரிசையில் தடய அறிவியல் அலுவலர் ஒருவரும் தனது சாட்சியத்தில் காவல்துறையினரை நோக்கி சோராபுதீன் சுடவில்லை என்று சாட்சியம் அளித்துள்ளார்.
சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவரது ஆடைகள் மற்றும் கைகள் தொடர்பான தடயங்களை ஐ.பி.எஸ். அதிகாரி வன்ஜாரா காந்திநகரில் உள்ள தடய அறிவியல் நிறுவனத்திடம் ஒப்படைத்தார். இந்த தடயங்களை ஆய்வுச் செய்த பிறகு தடய அறிவியல் நிபுணர் எஸ்.பி. பட்ரிவாலா நீதிமன்றத்திற்கு அளித்துள்ளா அறிக்கையில் சோராபுதீன் கை தடயங்களில் நைட்ரேட்டோ அல்லது ஈயமோ இருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கியை ஒருவர் பயன்படுத்தும் போது அவரது கைகளில் நைட்ரேட் அல்லது ஈயத்தின் தடயங்கள் நிச்சயமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள் என்றும் ஆனால் சோராபுதீன் கைககளில் இந்த உலோகங்களின் தடயங்கள் இல்லாதது அவர் மோதலின் போது காவல்துறையை நோக்கி சுட்டார் என்ற வாதம் தவிடுபொடியாகிவிட்டது என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கின்றது.
சோராபுதீன் உடலில் உள்ள குண்டு காயங்கள் அவர் சம்பவம் நடைபெற்ற போது அணிந்திருந்த சட்டையில் உள்ள துளைகளுடன் ஒப்பிடவில்லை என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு தடய அறிவியல் நிறுவனத்தின் ஆவணம் தெரிவிக்கின்றது.உடலில் உள்ள காயங்களுடன் சட்டடையில் உள்ள ஒட்டைகள் ஒத்துப் போக வேண்டும். ஆனால் சோரபுதீன் சம்பவத்தில் அவ்வாறு அமையவில்லை.
அஹ்மதாபாத்திற்கு வெளியில் இரு சக்கர வாகனத்தில் வந்த சோரபுதீனை தாங்கள் வழிமறித்த போது சறுக்கி அவர் விழுந்ததாக குஜராத் ஏ.டி.எஸ்.காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறினர். ஆனால் தடய அறிவியல் துறை நிறுவனத்தின் அறிக்கையில் நின்று கொண்டிருந்த நிலையில் அவர் சுடப்பட்டதாக தெரிவிக்கின்றது.  ஏ.டி.எஸ். தரப்பு அறிக்கை உண்மை எனில் சோராபுதீனின் உடலில் சிராய்ப்புகள் இருந்திருக்கும் என்றும் ஆனால் அப்படி எதுவும் அவரது உடலில் இல்லை என்றும் தடய அறிவியல் துறையின் அறிக்கை தெரிவிக்கின்றது. சோராபுதீன் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை தடய அறிவியல் துறை ஆய்வுச் செய்த போது அதில் சாதாரண உரசல்கள் தான் இருந்ததாக அத்துறை கூறுகின்றது.
அப்பாவி சோரபுதீனை சுட்டுக் கொன்ற வன்ஜாரா தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் மீது பிடி இறுக்கி வருகின்றது. நியாயம் பிறக்கட்டும். நீதி மலரட்டும்

tmmk

காஸா உதவிக் கப்பல்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்- 15 துருக்கியர்கள் பலி

ஜெருசலேம்: காஸாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கி நாட்டு உதவிக் கப்பல்கள் மீது இஸ்ரேலிய கமாண்டோப் படையினர் நடத்திய வெறித் தாக்குதலில் 15 பேர் பலியாயினர்.

இஸ்ரேலின் இந்த செயலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல்வேறு உலக நாடுகளும் இஸ்ரேலின் செயலைக் கண்டித்துள்ளன.

பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதிக்கு துருக்கியை சேர்ந்த 6 கப்பல்களில் உதவி பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றனர். அந்த கப்பல்களில் சுமார் 600 பேர் பயணம் செய்தனர்.

இதை அறிந்த இஸ்ரேலின் கப்பற்படை கமாண்டோ பிரிவினர் அக்கப்பல்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டுக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 15 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தூதரை திரும்பப் பெற்ற துருக்கி

இஸ்ரேலின் இந்த அடாவடி செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. துருக்கி நாட்டு அரசு இஸ்ரேலின் தாக்குதலை கடுமையாக கண்டித்ததோடு, இஸ்ரேலுக்கான தனது தூதரை உடனடியாக திரும்பப் பெற்றுக்கொண்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

இஸ்ரேலின் அடாவடித் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளும் தனித் தனியாக வெளியிட்ட அறிக்கைகளில், இஸ்ரேலின் தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது. காஸா பகுதியை முற்றுகையிட்டு, யாரும் அங்கு போகாமல் தடுத்து வரும் செயலை உடனடியாக இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். காஸா பகுதியை விட்டு அது விலக வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1860வது தீர்மானத்தை இஸ்ரேல் மதிக்க முன்வர வேண்டும். காஸா பகுதியை இஸ்ரேல் மூடிவைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, பாதக விளைவுகளையே ஏற்படுத்தக் கூடியது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

இந்தியா கண்டனம்

இந்தியாவும், இஸ்ரேலின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுஅமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்த சம்பவம் மிகவும் வேதனை தருகிறது. அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயிருப்பது பெரும் வருத்தத்தைத் தருவதாக உள்ளது. காஸா முற்றுகையை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மழுப்பல் அறிக்கை

இஸ்ரேல் என்ன செய்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் அமெரிக்கா காஸா சம்பவம் குறித்து மழுப்பலான, சொதப்பலான கருத்தைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான அமெரிக்க துணை நிரந்தரப் பிரதிநிதி அலெஜான்ட்ரோ உல்ப் கூறுகையில், சமீபத்திய வன்முறை அமெரிக்காவை கவலைக்குள்ளாக்கியுள்ளது. அப்பாவிகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதும், காயம் ஏற்படுத்தப்பட்டிருப்பதும் வருத்தத்திற்குரியது.

நடந்த விவரத்தை முழுமையாக அறிய முயன்று வருகிறோம். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இஸ்ரேல் அரசு நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் நேரடியாக உதவிகளை அனுப்புவது பொருத்தமற்றது என்பதை அனைவரும் உணர வேண்டும். காஸா பகுதிக்குப் போக வேண்டிய பொருட்களை வகைப்படுத்தி அதை எளிமையாக்க இஸ்ரேல் முயல வேண்டும் என்றார்.

இதற்கிடையே, ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் டேணியல் கார்மன் கூறுகையில், தாக்குதலுக்குள்ளான கப்பல் நிச்சயம் உதவிக் கப்பலாகத் தெரியவில்லை. அந்த நோக்கத்துடன் அது போனதாகவும் தெரியவில்லை.

மனிதாபிமான உதவிக்காக சென்றதாக அவை கூறப்பட்டாலும் கூட அப்படி நாங்கள் நினைக்கவில்லை. ஐ.நா. சபை, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றைத் தாண்டி எப்படி மனிதாபிமான சேவையை செய்ய முடியும்?.

மேலும் இஸ்ரேல் கமாண்டோப் படையினரை கத்திகள், கோடாலிகள் உள்ளிட்டவற்றால் அந்தக் கப்பலில் இருந்தோர் தாக்கினர். இவர்களை எப்படி மனிதாபிமான உதவிகளைச் செய்ய வந்தோர் என்று கருத முடியும்? என்றார்.

thatstamil

நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக புதுமணப்பெண் புகார்!

திருமணமாகி எட்டு மாதங்களே ஆன புதுமணப்பெண், கணவன் தன்னை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டுவதாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரூர் அருகேயுள்ள பச்சாபாளையம் கோவை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பக்தவச்சலம்.  அவருடைய மகள் சவுந்தர்ய பிரியாவுக்கும், புதுச்சேரியை சேர்ந்த ஐசக் கோபிநாத் என்பவருக்கும் கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த 8 மாதத்தில், கணவன் வீட்டிலிருந்து தனியாக தாய் வீடு திரும்பிய சவுந்தர்யபிரியா பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தன் கணவன் மீது ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில், “எனக்கும், புதுச்சேரியை சேர்ந்த ஐசக் கோபிநாத்துக்கும் கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக 25 பவுன் நகை, 1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் தரப்பட்டது. மேலும் ஐசக் கோபிநாத்துக்கு ஒரு மோட்டார் சைக்கிளும் வாங்கி கொடுத்தோம். 2 லட்சத்துக்கான காசோலையையும் எனது தந்தை வழங்கினார்.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே “மீண்டும் 10 லட்சம் வாங்கி வா” என்று எனது கணவர் என்னை சித்ரவதை செய்யத் தொடங்கினார். மேலும் என்னை நிர்வாணமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு இண்டர்நெட்டில் போட்டு விடுவேன் என்றும் மிரட்டுகிறார். அவரது சித்ரவதை தாங்க முடியாமல் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன்.

எனது பெரிய மாமியார் குடும்பத்திலுள்ள மேலும் 3 பேரும் அவருக்கு உடந்தையாக உள்ளனர். வரதட்சணை கேட்டும் நிர்வாண படம் எடுத்தும் என்னை மிரட்டும் எனது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” என்று கோரியுள்ளார்.

உலகம் முன்னேறுவதற்கு ஏற்ப, வரதட்சணை கொடுமை புரிபவர்களும் புதுப் புது விதமாக வரதட்சணை கேட்டு மிரட்டத் தொடங்கியுள்ளனர். இணையத்தில் நிர்வாண படத்தைப் போடுவதாக மிரட்டுவது புதிய ட்ரெண்ட். அதனை வரதட்சணைக்கும் பயன்படுத்த துவங்கியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத.

inneram.com

ஆண் குழந்தை ரூ.1 லட்சம்-பெண் குழந்தை ரூ.20,000: கடத்தல் கும்பலிடம் தொடர்ந்து விசாரணை

சென்னை: சமீபத்தில் பிடிபட்ட குழந்தை கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளிகளான கிரிஜா, லலிதா மற்றும் 7 பேரிடம் இருந்து 9 குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளனர்.இந்தக் கும்பல் ஆண் குழந்தைகளை ரூ. 1 லட்சத்துக்கும், பெண் குழந்தைகளை ரூ. 20,000க்கும் விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.ஒசூர் விசாரணையில் கிடைத்த துப்பு…ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சிகிச்சை பெறுவதற்காக பஸ்சில் வந்த ராமாத்தாள் என்பவரின் 3 மாத குழந்தையை, உடன் பயணித்த ஒரு பெண் கடத்திச் சென்றார்.இது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரைச் சேர்ந்த தனலெட்சுமி, சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவா, அவரது மனைவி கிரிஜா, இவர்களது கூட்டாளி ராணி ஆகியோரை கைது செய்தனர்.சிக்கிய மதபோதகர்கள்…இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சென்னை படப்பையைச் சேர்ந்த அல்போன்ஸ் சேவியர் (48), திண்டிவனத்தைச் சேர்ந்த செல்வம் (44) ஆகிய மத போதகர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ராமாத்தாளின் 3 மாத கைக்குழந்தையும் மற்றும் 3 வயது ஆண் குழந்தையும் மீட்கப்பட்டது.மேலும் படிக்க…

முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட்டிகளாக இருப்பார்கள்: ஆய்வில் தகவல்



லண்டன்,​​ ஜூன் 7:​ தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.ஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர் எரிகா கெய்லர் கூறியதாவது:​ ​ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் 9 மாத குழந்தைகளாக இருந்தபோதிலிருந்து எவ்வாறு தூங்குகின்றன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.அதே குழந்தைகளுக்கு 4 வயதான பின்பும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.தினசரி இரவு சீக்கிரமே தூங்கச் செல்வதுடன் 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள்,​​ சொல்வதை விரைவாகப் புரிந்து கொள்ளுதல்,​​ மொழிகளை எளிதாக கற்றுக் கொள்ளுதல்,​​ கணிதத்தில் புலியாக விளங்குதல் போன்றவற்றில் படுசுட்டிகளாக விளங்குகின்றன.குறித்த நேரத்தில் தூங்கச் செல்லாததுடன்,​​ 11 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அவ்வளவு சுட்டிகளாக விளங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே, ​​ தினசரி இரவு சீக்கிரமே குழந்தைகளைத் தூங்கச் செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அளவு தூக்கத்தை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது,​​ கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார்.குழந்தைகளை சீக்கிரமே தூங்கச் செய்ய வேண்டும் என்பதையே இதற்கு முந்தைய ஆய்வுகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

பால் குடிக்கும் வயதில் சிகரெட் பிடிக்கும் குழந்தைகள் : ஓர் அதிர்ச்சி தகவல்!

Tamil news paper, Tamil daily news  paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political  news, business news, financial news, sports news, today news, India  news, world news, daily news update

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் யாவென் என்ற 3 வயதான சிறுமி ஒரு நாளைக்கு குறைந்தது 40 சிகரெட்டுகளை உபயோகிக்கிறாள். புகை பிடிப்ப துடன் மது அருந்தும் பழக்கத்தையும் இந்த சிறுமி கொண்டுள்ளாள். பாதுகாப்பான இடத்தில் வசிக்கும் இந்த சிறுமி தனது பெற்றோருக்குத்  தெரியாமல் பணத்தை திருடி வாங்குவதுடன் தனது தந்தை வைத்திருக்கும் சிகரெட்டுகளையும் திருடி குடிக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளாள்.
இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவுடன் தனது உடை அலங்காரத்தினையும் மாற்றிக் கொண்டாள்.

பெரும்பாலும் ஆண்கள் அணியும் உடைகளையே பயன்படுத்துகிறாள். மேலும் ஒரு நாளைக்கு 3 டம்ளருக்கு மேல் மது அருந்திய நிலையிலும் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் சிறுமி தெரிவித்துள்ளாள். கடந்த ஒரு வருடமாக இருக்கும் இந்த பழக்கத்தை இப்போதுதான் அவளது பேற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகளை ஊதி தள்ளும் 2 வயது சிறுவன்!

கடந்த வாரத்தில், இதே இந்தோனேசியாவில் ஆர்டி ரிசால் என்ற சிறுவன் ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகளை உபயோகித்து பரபரப்பை ஏற்படுத்தி விட்டான். மேலும் அச்சிறுவன் சிகரெட் பிடிக்கும் வீடியோ காட்சி யூ ட்யூப்பில் ஒளிப்பரப்பட்டது. வீடியோ காட்சி ஒளிப்பரப்பான சிறிது நேரத்தில் சுமார் 39 லட்சம் உலக மக்கள் பார்த்து வியந்தனர். இந்நிலையில் தனது உடல் நிலை கெட்டு விடுமோ என எண்ணி  40 சிகரெட்டுகளுக்கு பதிலாக 15 சிகரெட்டுகளை உபயோகிக்கின்றான்.

பரபரப்பு  வீடியோ காட்சி: http://www.dinakaran.com/Indonesian-baby-on-40-cigarettes-a-day.asp

dinakaran.com

காஸா என்கிற சிறை!

Gaza.gif Gaza image by trendy2000
பூமியின் புனிதமான பகுதி பாலஸ்தீனம் என்பார்கள். அந்தப் பகுதி இன்றைக்கு உணவுக்காகக் கையேந்தும் நிலையில் இருக்கிறது. ஓயாத போர்களும், அரசியலும் சேர்ந்து மக்களை முடக்கிப் போட்டிருக்கிறது. சர்வதேசச் சட்டங்கள் அனைத்தும் வல்லரசுகளுக்கு ஆதரவாக வளைக்கப்பட்டிருக்கின்றன. மத ரீதியாகப் பொது முத்திரை குத்தப்பட்டு, அப்பாவிகள்கூட பயங்கரவாதிகளாகப் புனையப்பட்டிருக்கிறார்கள். யார் உரிமையாளர், யார் ஆக்கிரமிப்பாளர் என்ற உண்மைகள் திரிந்திருக்கின்றன. ஒடுக்கப்பட்ட மற்ற இனங்களைப் போல பாலஸ்தீனர்கள் ஆதரவற்றவர்களாக இல்லை என்பது மட்டும் கொஞ்சம் ஆறுதல்.

பாலஸ்தீனத்தைப் பற்றிச் சொல்லும்போது, 2006-ம் ஆண்டுத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட முடியாது. பாலஸ்தீனத்தின் இரு பகுதிகளான மேற்குக் கரை மற்றும் காஸô துண்டுப் பகுதி ஆகிய இரண்டுக்கும் சேர்த்து நடந்த தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது.

ஃபதா கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஹமாஸின் வெற்றியை இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஹமாஸ் தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்த முடியாது எனப் பின்வாங்கின.

கூட்டணி அரசில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,மேற்குக் கரையை விட்டு ஹமாஸ் வெளியேற்றப்பட்டது. இப்போது காஸô பகுதியில் மட்டும் ஹமாஸ் ஆட்சி செய்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரை, ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதால், காஸô துண்டுப் பகுதியை சர்ச்சைக்குரிய பகுதியாக அறிவித்துவிட்டது. அத்தோடு நில்லாமல், கடல்வழியான போக்குவரத்துத் தடையும் விதித்திருக்கிறது.

இஸ்ரேலின் இந்தக் கட்டுப்பாட்டால், உணவு மற்றும் மருந்துப் பொருள்களைத் தவிர வேறெதையும் கடல்வழியாக காஸôவுக்குள் கொண்டு செல்ல முடியாது. கட்டுமானத்துக்குப் பயன்படும் சிமென்ட் மற்றும் இரும்புச் சட்டங்கள்கூட தடை செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது நடக்கும் ராக்கெட் தாக்குதலுக்கு சிமென்டும் இரும்புச் சட்டங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பது இஸ்ரேலின் குற்றச்சாட்டு.

அது சரி, காஸôவுக்குள் இதைக் கொண்டு செல்லலாம், இதைக் கொண்டு செல்லக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்க இஸ்ரேலுக்கு என்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி எழலாம். அதற்கும் இஸ்ரேல் தரப்பில் பதில் இருக்கிறது. அதாவது, போர் தொடுப்பதற்காக எதிரிக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சர்வதேசச் சட்டங்கள் அனுமதி வழங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறிக் கொள்கிறது.

இஸ்ரேலின் தடைகளால், காஸô மிகப்பெரிய சிறை போல மாறியிருக்கிறது. உணவுப் பொருளும் எரிபொருளும் போதிய அளவு இல்லை. தேவையான அளவு மின்சாரம் தயாரிக்கவும் வழியில்லை. கடந்த ஆண்டில் எகிப்தின் ரஃபா எல்லையை மக்கள் ஆவேசமாகக் கடந்து சென்றதே காஸôவின் நிலைமைக்குச் சாட்சி. மண்ணெண்ணெய் மற்றும் ரொட்டியைத் தேடி பெண்களும் குழந்தைகளும் நாடு கடந்து போனதை அவ்வளவு எளிதாக நினைவிலிருந்து அகற்றவிட முடியாது.

கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து இஸ்ரேலின் கடல் போக்குவரத்துத் தடைகளை மீறி உதவிப் பொருள்களைக் கொண்டு செல்ல பல்வேறு அமைப்புகளும் பல முறை முயற்சி செய்திருக்கின்றன. காஸô விடுதலை இயக்கம் என்கிற அமைப்பு இதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆனால், இதுவரையில் பெரிய வெற்றியைப் பெற்றதில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் சர்வதேசக் குழுவினரை ஏற்றிக்கொண்டு 8 கப்பல்கள் காஸô நோக்கி கடந்தமாத இறுதியில் புறப்பட்டன. இஸ்ரேலால் தடைசெய்யப்பட்ட சிமென்ட் போன்ற பல்வேறு பொருள்களும் இந்தக் கப்பல்களில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நோபல் பரிசு பெற்றவர், பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த அணியில் சென்றனர். துருக்கியிலிருந்து செயல்படும் ஐஎச்எச் என்கிற அமைப்பைச் சேர்ந்த 400-க்கும் அதிகமானோர் இதில் அடங்குவர்.

இந்தக் கப்பல்களில் காஸôவை மறுநிர்மாணம் செய்வதற்கான பொருள்கள் இருப்பதாக பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூறினர். சர்வதேச கடல் பரப்பு வழியாக காஸôவை அடைவதை யாரும் தடுக்க முடியாது எனவும் அவர்கள் வாதிட்டனர். ஆனால், வழக்கம்போல இஸ்ரேல் தரப்பிலிருந்து எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டது.

இஸ்ரேலில் உள்ள ஆஸ்தோத் துறைமுகத்தை நோக்கி வருமாறு கப்பல்கள் அறிவுறுத்தப்பட்டன. கப்பல்களில் இருக்கும் பொருள்கள் அனைத்தும் ஆய்வுக்குப் பிறகு காஸôவுக்குள் அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

ஆனால், “எங்கள் இலக்கு காஸôதான்’ என்ற கோஷத்துடன் கப்பல்கள் தொடர்ந்து முன்னேறியதால், உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேல் கப்பல்கள் சுற்றி வளைத்தன. சண்டை மூண்டது. அப்போது மவி மர்மரா என்கிற கப்பலில் இஸ்ரேலிய வீரர்கள் ஏறி அங்கிருந்தவர்களை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 8 பேர் துருக்கியைச் சேர்ந்தவர்கள். கப்பல்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன. இப்படியாக, இஸ்ரேலின் தடையை மீறி காஸôவுக்குள் நுழைவதற்கான இன்னொரு முயற்சியும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், இஸ்ரேலுக்கு எதிரான இரண்டு விளைவுகள் இந்தச் சம்பவத்தால் ஏற்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் என்கிற நாட்டை அங்கீகரித்த முதல் பெரிய இஸ்லாமிய நாடான துருக்கியுடனான உறவில் இப்போது விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இது இஸ்ரேலின் வருங்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக அமையக்கூடும்.

அடுத்ததாக, காஸôவின் விடுதலைக்கு ஆதரவாக உலகின் பல நாடுகளிலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடப்பதற்கு இந்தச் சம்பவம் காரணமாக அமைந்திருக்கிறது. இஸ்ரேலுக்கு நெருக்கமான நாடுகளாகக் கருதப்படும் பிரிட்டன், கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.

இஸ்ரேலிய கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என ஸ்வீடன் துறைமுக ஊழியர்கள் அறிவித்திருக்கிறார்கள். இஸ்ரேலிய ராணுவ அதிகாரி கலந்து கொள்ள இருந்த பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கை நார்வே ரத்து செய்திருக்கிறது.

ஆனால், அமெரிக்க ஆதரவு என்கிற பெரும் பலம் இருக்கும்வரை இஸ்ரேல் எதற்கும் கவலைப்படப் போவதில்லை. எல்லா நாடுகளையும் விட கூடுதல் ராணுவ பலத்தை இஸ்ரேலுக்கு அளித்திருப்பது அமெரிக்காதான். ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்களில் இருந்து இஸ்ரேலைக் காப்பதும் அந்த நாடுதான்.

ஒபாமா அதிபரான பிறகு, இஸ்லாமிய நாடுகளை அரவணைத்துச் செல்லும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவரது முடிவுப்படி, இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன; ஆப்கனிலிருந்து கூட்டுப் படைகள் அடுத்த ஆண்டில் வெளியேறத் தொடங்கும். அந்த வரிசையில், காஸôவுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமானால், இஸ்ரேல் பற்றியும் முடிவெடுப்பாரோ என்னவோ?

எம். மணிகண்டன்.

ரசாயன சாத்தான்கள்- போபால் – சக்தி செல்லையா

http://4.bp.blogspot.com/_Noq9ZZmoEcM/TA9N78j_1XI/AAAAAAAAATg/ll0w37LsxqY/s1600/bhopal+child.JPG http://4.bp.blogspot.com/_Noq9ZZmoEcM/TA87yU0Ru7I/AAAAAAAAARw/okDQatqmzpY/s1600/Bhopal+gas.jpg-2.jpg

தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் பெரும்பாலும் அறிவாளிகளாகவும் சோம்பேறிகளாகவும் தான் இருப்பார்கள் போலும்.  அது அவர்கள் தவறில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வசதிகள் அதிகம். வாய்ப்புகள் அதிகம். கைப்பேசி கட்டணம் முதல் ஆரம்பித்து பஸ் வசதி, ரயில் வசதி, பொழுது போக்கு இடங்கள், அரசாங்கத்தின் கவர்ச்சியான திட்டங்கள் என்று இங்குள்ள மனிதனின் மூளையை எவ்வித சிந்தனையிலும் ஈடுபட விடாமல் எப்போதும் களிப்படைய வைத்து, மழுங்கடித்த சோற்றுப் பிண்டங்களாகத் தான் வைத்திருக்கிறார்கள்.  எல்லோர் வீட்டிலும் சுட்டி .டி.வி, சன் டி.வி, சன் மியுசிக், கலைஞர் டி.வி, கே டி.வி என்று தமிழ்நாடே ஒரே குடும்பமாகத் தான் வாழ்கிறது. ஒரே குடும்பமாகத் தான் தூங்குகிறது. தேவையான அனைத்தையும் அரசாங்கமும் இந்த சமூகமும் பல வழிகளில் தந்துவிட்டால் சோம்பேறிகளாகாமல் என்ன செய்வோம்?. எல்லாம் கிடைத்த பின் எதற்கு சண்டை, எதற்கு பித்தலாட்டம்.?.

மேலும் படிக்க…

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை ; எதிர்வரும் லோக்சபா தேர்தலில் ஒட்டு போட முடியும்

புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் நீண்டகால கனவான ஓட்டு போடும் உரிமை நிறைவேற இன்னும் கொஞ்சம் காலம் தான் இருக்கிறது. இதற்கான அடிப்படை பணிகள் ஒரளவுக்கு முடிந்து காபினட் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் இந்த சட்டம் முழுமை பெறும்போது இரட்டை ஓட்டுரிமை பெற்றவர்களாக மாறுவர். டில்லியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றும் இவர்களுக்கு கவுரவிக்கும் வகையில் ஓட்டுரிமை கிடைக்க வழி செய்யப்படும் என்று அறிவித்தார். இதன்படி தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு அமைச்சர் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியன் நலன் துறை அமைச்சர் வயலார் ரவி, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சிலால், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த குழுவின் ஒப்புதல் மத்திய காபினட் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் . பின்னர் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் அங்கீகாரம் பெற்று முழுமை பெறும்.

ஓட்டு போட ரெடியாகிடுங்க ! : இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அமைச்சர் வயலார் ரவி கூறுகையில்; இந்த சட்ட முன்னேற்பாடு அனைத்து பணிகளும் தயாராகி விட்டன. வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஜனநாயக கடமையை பூர்த்தி செய்வதன் மூலம் இந்திய வளர்ச்சிக்கு துணையாக இருக்க முடியும் என்றார்.

படிப்பு மற்றும் பணி காரணமாக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கும் ஓட்டு பட்டியலில் பெயர் நீடித்து இருக்க சில சலுகைகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு விடும் , வரும் லோக்சபா தேர்தலில் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ஓட்டு போட ரெடியாகிடுங்க !

dinamalar.com

வளைகுடாவில் அமைதி நிலவும் நாடுகளில் முதலிடத்தில் கத்தார், இந்தியாவுக்கு உலகளவில் 128வது இடம்.

Doha beach and skyscrapers.

குவைத் சிட்டி : சிட்னியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொருளாதார மற்றும் அமைதிக்கான மையம் பிரபல பத்திரிகையான எக்கானமிஸ்டுடன் இணைந்து ஒரு நாட்டில் நடைபெறும் கொலைகள், குற்றங்கள், சமூக அமைதியின்மை, ராணுவத்திற்கு செலவிடப்படும் நிதி, அந்நாட்டின் கைதிகள் போன்ற தகவலின் அடிப்படையில் உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலை தயாரித்துள்ளது.

அப்பட்டியலில் குவைத் வளைகுடாவில் மூன்றாமிடத்திலும் உலகில் 39வது இடத்திலும் உள்ளது. கத்தார் வளைகுடாவில் முதலாவது இடத்திலும் உலகில் 15வது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கத்தாரை தொடர்ந்து ஓமன் வளைகுடாவில் 2வது இடத்திலும் உலகில் 23வது இடத்திலும் உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் வளைகுடாவில் 4வது இடத்திலும் உலகளவில் 44வது இடத்திலும் உள்ளது. அதனை தொடர்ந்து பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியா பட்டியலிடப்பட்டுள்ளது. உலகளவில் நியூசிலாந்து மிக அமைதியான நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தை தொடர்ந்து ஐஸ்லாந்து, ஜப்பான், ஆஸ்திரியா, நார்வேயும் மிக அமைதியான நாடாக பட்டியலில் உள்ளது. அமெரிக்காவை விட மிக அமைதியான நாடாக கியூபாவும் சீனாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா 85ஆம் இடத்திலும் சீனா 80ஆம் இடத்திலும் உள்ளது. இந்தியாவும் 20 இடங்கள் பின் தங்கி 128ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஈராக், சோமாலியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் அமைதியிழந்த நாடுகளாக பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

inneram.com

ஏர்லைன்ஸ் விமானத்தில் டயர் வெடித்ததா ? : டில்லி வந்த 102 பயணிகள் உயிர் பிழைத்தனர்

புதுடில்லி: டில்லி வந்த ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் மற்றொரு துயர சம்பவம் தவிர்க்கப்பட்டது. துபாயில் இருந்து மங்களூரூ வந்த விமானம் தரையிறங்கியபோது எரிந்து சாம்லான துயர சம்பவத்தில் 160 கருகி பலியாயினர். இந்த சம்பவ துயர அலை நீங்குவதற்குள் மீண்டும் ஒரு இந்திய விமானம் ஒரு பெரும் விபத்து நடக்க நேரிட்டு நூலிலையில் தவிர்க்கப்பட்டது.

மும்பை- போபால்- இந்தூர் – டில்லி செல்லும் ஏர்லைன்ஸ் ( ஐ. சி., 113 ) விமானம் இன்று காலை 11.10 மணி அளவில் டில்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் விமானத்தின் இரண்டு டயர்கள் ஒரே நேரத்தில் வெடித்தது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் 102 பேரும் என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தில் உறைந்தனர். பெரும் பதட்டம் அடைந்தனர். இதற்கிடையில் உடனுக்குடன் தகவல் பரிமாறப்பட்டு விமானத்தை சாதுர்யமாக பைலட் தரையிறக்கினார். தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டயர் வெடிக்கவில்லை;  ஏர் லைன்ஸ் மறுப்பு : இந்த சம்பவம் குறித்து ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது: டயர் வெடித்தது என்ற தகவல் பரவியது. ஆனால் டயர் வெடிக்கவில்லை காற்று வெளியேறி குறைவாக இருந்தது என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பைலட்டுக்கு தரையிறங்க உத்தரவிடப்பட்டது. தயார் நிலையில் இருந்த தீயணைக்கும் படையினர் தயராக இருந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து கூல் செய்தனர். பயணிகள் பத்திரமாக உள்ளனர்.

கடந்த 22 ம் தேதி ஏர் இந்திய விமான விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு சம்பவம் விமான பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு முறையான பராமரிப்பு , முன்சோதனை குறைபாடுதான் காரணமாக இருக்கும் என விமானத்தில் பயணிப்போர் கருத்து தெரிவிக்கின்றனர்.

dinamalar.com

சொல்கிறார்கள்

அப்பா கஷ்டத்தை நினைத்து படித்தேன்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 495 மார்க் எடுத்த, மாநிலத்தின் முதல் மாணவி ஜாஸ்மின்: சின்ன வயசில இருந்தே, நான் நன்றாக படிப்பேன். அப்பா, எட்டாம் வகுப்பு வரைதான் படிச்சார். அதனால, அவர் அடிக்கடி பேசும்போது, “நன்றாக படிக்கணும்மா… படித்தால்தான் குடும்பம் முன்னேற முடியும்… வேற எந்த நினைப்பும் உங்களுக்கு வேண்டாம்… படிக்கிற வயசுல ஒழுங்கா படிச்சா பிற்காலம் சந்தோஷமாக இருக்கும்’னு, சொல்லுவார். அது ரொம்ப உண்மைன்னு இப்பத் தெரியுது. நான் நன்றாக படித்ததால், எங்களின் இந்த சிறிய வீட்டைத் தேடி அமைச்சர்கள், எம்.எல்.ஏ., – எம்.பி.,க்கள்ன்னு, பலதரப்பட்ட பெரியவர்கள் வந்து, வாழ்த்திட்டுப் போறாங்க. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அப்பா காலைல எம்-80 பைக்ல துணிகளை எடுத்துக் கட்டிட்டு கிளம்புவாங்க. அப்ப நாங்க உதவி செய்வோம். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமம் கிராமமா போய் வியாபாரம் பார்ப்பாங்க. சில நேரம் இரண்டு நாள் கழிச்சுதான், திரும்பி வருவாங்க. “கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைக்கிறாங்களே’ன்னு, மனசுல வச்சுக்கிட்டே படிச்சேன். நான் மாநிலத்தில் முதல் மார்க் வாங்குனதுல என்னை விட எங்க அம்மா, அப்பாதான் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அப்பா வியாபாரம் செய்யப்போகும் பல கிராம மக்கள், பேப்பர்ல எங்க குடும்பப் படத்தைப் பார்த்துட்டு, அப்பாவுக்கு போன் பண்ணி வாழ்த்துச் சொன்னாங்க. அது மறக்க முடியாத சம்பவம். அண்ணன் இம்ரான், “குடல் இறக்கம்’ என்ற நோயால் அவதிப்பட்டார். உடனே ஆபரேஷன் செய்யணும்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. அந்தச் சமயம் அண்ணனுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு. எக்ஸாமா? ஆபரேஷனா? என பிரச்னை வந்தது. “எனக்கு நீதான்டா முக்கியம். எக்ஸாம் அப்புறம் எழுதிக்கலாம்’ன்னு, உடனே ஆபரேஷன் செய்யச் சொல்லிட்டார் அப்பா. இனிமேல் அவன் படிக்கிறேன்னு சொன்னது எனக்கு சந்தோஷமா இருக்குது.

dinamalar.com

கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? விசாரணை குழு அமைப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரிக்க கல்வித்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாணவி சுரிதா (மாணவியின் நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். சுரிதா திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால், கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி கேட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார். கழிப்பறைக்கு சென்ற கதவை சாத்திக் கொண்ட மாணவி, சிறிது நேரத்தில் யாருடைய உதவியும் இன்றி தானாக குழந்தையை பெற்றுள்ளார். பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு எந்தவித பதற்றமும் இல்லாமல் வகுப்பறை வந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கழிப்பறைக்கு சில மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு, உள்ளே சென்று பார்த்த மாணவிகள் கழிப்பறைக்குள் அழுதுகொண்டிருந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடி வந்து ஆசிரியர்களிடம் இதுபற்றி தெரிவித்தனர்.மேலும் படிக்க…

கட்டப்பஞ்சாயத்துக் கொடூரங்கள்!

‘கட்டப்பஞ்சாயத்து செய்வோரைச் சட்டம் இரும்புக் கரம்கொண்டு அடக்கும்’ என்று அவ்வப்போது அரசாங்கம் குரல் கொடுக்கும். ஆனால், அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கும்?

கட்டப்பஞ்சாயத்துகள்பற்றி விரிவான ஆய்வு நடத்தி ஆதாரங்களைத் திரட்டி இருக்கும் மதுரை எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிரைச் சந்தித்தோம். அவர் அடுக்கிய விவரங்கள் எல்லாம், இதுவரை வெளியானதைவிடவும் கூடுதல் பகீர்தான்!

‘மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 167 கிராமங்களில் ஆய்வு செய்தோம். அதில், 94 கிராமங்களில் சாதி வித்தி யாசமின்றி ஒரே பஞ்சாயத்து முறையும், மற்ற கிராமங்களில், சாதிக்கு ஒரு பஞ்சாயத்தும் இருக்கிறது. அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடாவடித் தீர்ப்புகள் சொல்லப்படும் இந்தப் பஞ்சாயத் துகளில், பெண்களுக்காகப் பேசுவதற்கோ, கருத்து சொல்வதற்கோ உரிமை கிடையாது. இவர்கள் வழங்கும் தண்டனைகளும் வேடிக்கை, வேதனை!

பாலியல் வன்புணர்ச்சிக்கு எதிராக 88 கிராமங்களில் பஞ்சாயத்து கூடித்தான் தீர்ப்பு சொல் கிறார்கள். இதில் 12 கிராமங்களில்பெண்ணைக் கெடுத்தவனை ஊர்க் கூட்டத்தில் காலில் விழச் சொல் கிறார்கள். 50 கிராமங்களில் வெறுமனே அபராதம் மட்டும்தான். பலாத்காரம் செய்யப்பட்டவர் திருமணமாகாத இளம்பெண் என்றால், கெடுத்தவனே அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற காட்டுமிரண்டித்தனமான தீர்ப்புகள், 35 கிராமங்களில் வழங்கப்படுகின்றன. இந்த தீர்ப்பு உயர் சாதிக்காரனுக்கு மட்டும்தான். இதுவே தலித் இளைஞன் ஒருவன் மேல்சாதிப் பெண்ணைக் கெடுத்துவிட்டால், கடுமையான தண்டனையும் போலீஸ் நடவடிக்கையும் நிச்சயம் உண்டு!

விவாகரத்துப் பிரச்னைகள் இந்தக் கட்டப்பஞ்சாயத்தில் நொடியில் தீர்க்கப்படுகின்றன. வேடசந்தூர்ப் பகுதியில் சாதி இந்துப் பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்தார். இதற்காக ஒரு மாதம் கழித்து, அவர்களைப் பிடித்து கிடா வெட்டி, அதன் ரத்தத்தை இருவரின் தலையிலும் தேய்த்து, இருவரையும் பிரித்துவிட்டார்கள். தற்போது, அந்தப் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்துவிட்டனர். இப்படி, சடங்குத்தனமான தண்டனைகள் இன்னும் உண்டு… ஊர்க் கூட்டத்தில் வைத்து உலக்கையைத் தாண்டினாலோ, இரு வீட்டுக் கூரையையும் எடுத்து வந்து முறித்துப் போட்டாலோ போதும், அவர் கள் விவா கரத்து ஆனதாக அர்த்தமாம்!

இவைபோன்ற சாதிப் பஞ்சாயத்துத் தீர்ப்புகளால் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தப் பஞ்சாயத்து களை எதிர்த்து, போலீஸுக்குப் போகிற வர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதாவது, 167 கிராமங்களில் இதுவரை இவர்களுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை வெறும் 18-தான். அதிலும் 10 புகார்களே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. ஆறு வழக்குகளில் மட்டுமே கைது நடவடிக்கை நடந் துள்ளது!” என்றார்.

”இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?”


‘ஒவ்வொரு கிராமத்திலும் கட்டப்பஞ்சாயத்து முறை உள்ளதா என்று ஆய்வு நடத்தி, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதனை ஒழிப்பதற்காக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு தாலுக்காவிலும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்களைக்கொண்ட கண்காணிப்புக் குழுவை அரசு ஏற்படுத்த வேண்டும். கட்டப்பஞ்சாயத்துப் புகார்களுக்கான நடவடிக் கைக்காகவே மாவட்டத்துக்கு ஒரு சிறப்புக் காவல் நிலையம் தொடங்க வேண்டும். சமூகப் புறக்கணிப்பில் ஈடுபடுகிற கட்டப்பஞ்சாயத்துக் குழுக்கள் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கு முடியும் வரை தங்களது சொந்தக் கிராமத்துக்கு வர முடியாத அளவுக்குக் கடுமையான உத்தரவுகளை வெளியிட வேண்டும்!” என்றார் கதிர்.

கற்பக விநாயகம் போன்ற எத்தனை நீதிபதிகள் கடுமையாக உத்தரவிட்டாலும், கட்டப்பஞ்சாயத்துகளின் வீரியம், வீறிடவைத்துக்கொண்டேதான் இருக்குமா?

நன்றி: ஜூவி

அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் பத்து மடங்கு அதிக ஆபத்தானவை !


அஸ்ஸலாமு அலைக்கும்,,,

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மெல்ல மெல்ல நம்மை இயற்கையைப் புறந்தள்ளி, நமது நடைமுறை வாழ்க்கையில் எல்லாமே செயற்கையாகிவிட்ட நிலைமையைத் தோற்றுவித்து வருகிறது.
மனிதனின் அடிப்படை என்பதே தாய்மையிலிருந்துதான் தொடங்குகிறது. தாய், தாய்ப்பாசம், தாய்மை உணர்வு போன்றவை காலங்கள் மாறினாலும், சூழ்நிலைகள் மாறினாலும் மாறாதவை என்கிற உண்மையை யாரும் மறுக்க இயலாது. தாய்மையேகூட கொச்சைப்படுத்தப்படுவதும், தேவையற்ற பாரம் என்று கருதப்படுவதும், தாய்மைப் பேறு என்பதை செயற்கையாக்க முயல்வதும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.
சமீபகாலமாக நடைபெற்றுவரும் உலக சுகாதார நிறுவனத்தில் ஆய்வுகள், ஒருபுறம் மகப்பேறு முறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஒரு விபரீதமான போக்கையும் எடுத்துக்காட்டுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக நகர்ப்புறங்களில், அதிலும் குறிப்பாக, படித்த, பட்டணத்து மகளிர் மத்தியில், அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவம் பார்ப்பது அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன அந்த ஆய்வுகள். இதுபோன்ற அறுவைச் சிகிச்சை முறைகளும், ஆயுத உதவியுடன் பிரசவம் பார்க்கும் உத்திகளும் தாய்க்கும் சேய்க்கும் அதிகமான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியவை என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை ஒன்று.
லான்செட் என்கிற மருத்துவ இதழில் இந்தியாவில் நடைபெறும் மகப்பேறு பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்போது இந்தியாவில் நடைபெறும் பிரசவங்களில் ஐந்தில் ஒன்று அறுவைச் சிகிச்சை அல்லது ஆயுத உதவியுடன் நடத்தப்படுவதாகக் குறிப்பிடும் அந்தக் கட்டுரை, இது தாய்க்குப் பல பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் ஊறு விளைவிக்கும் தன்மையன என்று குறிப்பிடுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, ஆண்டுக்கு சராசரியாக 15 விழுக்காடு பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை முறையில் நடைபெறுவது தவிர்க்க முடியாது என்றாலும், இந்திய சராசரி அதைவிட 3 விழுக்காடு அதிகமாக 18 சதவிகிதம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது அந்தக் கட்டுரை. மேலும், இந்த 18 விழுக்காடு அறுவைச் சிகிச்சை முறையிலான பிரசவங்களில் ஏறத்தாழ 80 சதவிகிதம் நகர்ப்புறங்களில் நடைபெறுகின்றன என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் தகவல். நமக்கு மிகவும் கவலையளிக்கும் நடைமுறை தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள். முடிந்தவரை இயற்கையாகப் பிரசவம் பார்ப்பது என்கிற கடமை உணர்வு முற்றிலுமாக மாறி, தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களில் முன்பு 5 சதவிகிதமாக இருந்தது இப்போது 75 சதவிகிதம் வரை அறுவைச் சிகிச்சை மூலம், எந்தவித மருத்துவக் கட்டாயம் இல்லாமலேயே நடத்தப்படுவதாக உலக சுகாதார நிறுவன ஆய்வு இந்திய நிலைமையைச் சுட்டிக்காட்டுகிறது. மருத்துவமனைக்கு லாபம் சேர்க்கும் ஒரே குறிக்கோளுடன் மருத்துவர்கள் தாய்மார்களிடம் இதுபோன்ற அறுவைச் சிகிச்சை முறைக்குப் பரிந்துரைப்பதாக அந்த ஆய்வுகுறிப்பிட்டிருக்கிறது.
வேதனையில்லாமல் பிரசவம் செய்து கொள்ள வேண்டும் என்று தாய்மார்கள் கருதத் தொடங்கியிருப்பதும் இந்த நிலைமைக்கு ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அறுவைச் சிகிச்சை அல்லது ஆயுத உதவியுடன் மகப்பேறு என்பது ஆபத்துகளை உள்ளடக்கியது என்று தாய்மார்களிடம் மருத்துவர்களோ, அவர்களது பெற்றோர்களோ, சமூக ஆர்வலர்களோ சொல்லிக் கொடுப்பதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய ஒன்று. இயற்கையான பிரசவத்தைவிட, இதுபோல அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் பத்து மடங்கு அதிக ஆபத்தானவை என்பது தாய்மார்களுக்குத் தெரிவதில்லை.
மேலைநாடுகளில் கடந்த இருபது ஆண்டுகளாக இயற்கையான பிரசவத்தை வலியுறுத்தி இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக அறுவைச் சிகிச்சை முறை மற்றும் ஆயுத உதவியின்றி மட்டுமே பிரசவம் அமைய வேண்டும் என்றும் அப்போதுதான் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் உள்ள பாசம் நிரந்தரமாக இருக்கும் என்றும் பல தாய்மார்கள் மேலைநாடுகளில் வலியுறுத்துகின்றனர். பிரசவ வலியைப் பெண்மையின் தனித்துவம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரைத்தால் கேள்வி கேட்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைமை நமது நாட்டிலும் ஏற்பட வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது.
தேவையற்ற அறுவைச் சிகிச்சை மற்றும் ஆயுத உதவியுடன் சிகிச்சை போன்றவை தேசிய அளவில் நமது நிதியாதாரத்தையும், தீவிர மருத்துவ சிகிச்சைக்கான பல நோயாளிகளின் உடனடித் தேவைகளையும்கூடப் பாதிக்கின்றன. கிராமப்புறங்களிலும் இதே நிலை ஏற்படுமானால், மகப்பேறுக்கான நிதி ஒதுக்கீடு தேவையில்லாமல் அதிகரிக்கக் கூடும். தேவையற்ற அறுவைச் சிகிச்சைகள், மருத்துவர்களின் தலையீடு உண்மையாகவே தேவைப்படும் தாய்மார்களுக்கு சிகிச்சை கிடைக்காத நிலைமையைக்கூட ஏற்படுத்த வாய்ப்புண்டு.
மருத்துவர்களும், பெற்றோர்களும், தாய்மார்களும், இயற்கைக்கு முன்னுரிமை கொடுத்து முடியும்வரை மகப்பேறு என்பது ஆரோக்கியமான நன்மக்கள் பேறாக இருக்க உறுதிபூண வேண்டும். அதுதான் தாய்சேய் நலத்துக்கு உத்தரவாதம் அளிக்கும். லாப நோக்கில் செயல்படும் மருத்துவர்களும், சுலபமாகப் பிரசவித்துவிட வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்களும் ஆரோக்கியமாக வளர வேண்டிய குழந்தையின் எதிரிகள்…
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும் என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. இடுப்பு நோகாமல் பிரசவம் என்பது இயற்கைக்கு எதிரல்லவா?

kadayanalluraqsha

நரபலி மோடி,வருண்காந்தி பீகாரில் நுழைய நிதிஷ் குமார் தடை!

modi

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் இடையிலான மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.  பீகார் நாளிதழ்களில் மோடியுடன் கைகோர்த்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டதற்கு நிதிஷ் குமார் பலத்த ஆட்சேபனை தெரிவித்தார். அத்துடன் பீகார் வெள்ள சேதத்திற்கு குஜராத் மாநில அரசு வழங்கிய நிவாரண   நிதியை வெளியிட்டதற்கும் நிதிஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து குஜராத் அரசு சார்பில் மோடி வழங்கிய நிதியையும் நிதிஷ்குமார் திருப்பினார். அதனைதொடர்ந்து மோதல் உச்ச கட்டத்தை எட்டியது.

இந்நிலையிலும் பாஜக உடனான உறவு தொடர்வதாகவே ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் தெரிவித்தார். பாஜக ஐக்கிய ஜனதா தள உறவை நீட்டிக்க வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் நிதிஷ் குமார் மற்றொரு அதிரடி கருத்தினை உதிர்த்திருக்கிறார்.

பாஜக உடனான கூட்டணி தொடர வேண்டுமென்றால் தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத்  முதல்வர் நரேந்திர மோடியும் பாஜகவின் இளம் எம்பி வருணும் பீகாருக்குள் நுழையக்கூடாது என நிபந்தனை விதித்திருக்கிறார்.  இது பீகார் அரசியலில் மேலும் உஷ்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

inneram.com

பெண்களின் தற்காப்புக் கவசம்!

வீரர்களின் உயிர் காப்பது தலைக் கவசம் எனில்,

பெண்களின் மானம் காப்பது ஹிஜாப் எனும் கவசம்

இன்றைய காலத்தில் பெண்கள் தற்காப்புக் கலை என்ற பெயரில் கற்று வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கு முதல் முக்கிய தற்காப்பு எது தெரியுமா? அது தான் ஹிஜாப்.

பர்தா என்பதன் அரபிச் சொல் தான் ஹிஜாப். பெண்கள் தங்களின் அங்கங்களை மறைத்துக் கொள்ளும் வகையான ஆடையைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

இஸ்லாம் பெண்களை உயர்வாகவும், கண்ணியமானவர்களாகவும் மதிக்கிறது. ஒரு பொருள் பேணிப் பாதுகாப்படும் பொழுது தான் அதன் மதிப்பு உயரும். அது சிறப்புடனும் பேசப்படும். இவ்வாறு தான் பெண்களை உயர்வாகக் கருதி ஹிஜாப் முறையைக் கையாளச் சொல்கிறது இஸ்லாம். இதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:59)

தெருக்கள், கடை வீதி, பேருந்து நிலையம், மருத்துவமனை, வங்கி போன்ற அனைத்து இடங்களிலும் ஆண்களுடன் பெண்கள் கலந்து இருப்பார்கள். பெண்களை கெட்ட எண்ணத்துடன் பார்க்கும் ஆண்கள் இருக்கும் இப்படிப்பட்ட இடங்களில் பெண்கள் ஒழுக்கத்துடன் பயமின்றி சென்று வர ஹிஜாப் அவசியமாகின்றது.

ஹிஜாப் அணிந்த பெண் கெட்ட எண்ணம் கொண்ட ஆண்களின் பார்வைகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறாள். இப்படி ஹிஜாபின் சிறப்பை அறிந்தவர்கள் இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்ல. (எங்கள் ஊர் தொண்டியில்) மாற்று மதத்தைச் சேர்ந்த, பருவடைந்த மாணவிகள் ஹிஜாபுடன் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஹிஜாப் அணிந்து வெளியில் செல்பவர்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு, மேக்கப், லிப்ஸ்டிக் போட்டு, சென்ட் போன்ற நறுமணப் பொருட்களை உபயோகித்து ஹிஜாபுடன் சென்றால் ஹிஜாபின் நோக்கமே பாழாகிவிடும். ஹிஜாப் அணிபவர்கள் முகத்தையும், இரு முன் கைகளையும் தவிர வேறெந்த அலங்காரத்தையும் வெளிக்காட்டாக் கூடாது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும் (அல்குர்ஆன் 24:31)

மேலும் ஒழுக்கமுடன் வாழும் பெண்களுக்கு மறுமையில் அல்லாஹ் மகத்தான கூலியை வைத்திருப்பதாகக் கூறுகின்றான்.

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 33:35)

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை.

பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப்போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று.

ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு நிகாப்தான். நீச்சலுடை அல்ல என்கிறார் இஸ்லாத்தைத் தழுவிய முன்னால் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர். சுதந்திரக்குறியீடு மட்டுமல்ல, ‘ஹிஜாப்’தான் தங்கள் மானத்துக்கும், மரியாதைக்கும் இன்னும் சொல்லப்போனால் உயிருக்கும் கூட பாதுகாப்புக்கவசம் என்று புரிந்து கொண்டுள்ள பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகறித்தே வருகிறது.

இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும். அவற்றில் மிகச் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2911)

நல்லொழுக்கமுள்ள பெண்களின் அடையாளங்களில் ஹிஜாபும் ஒன்று என்பதை எவரும் மறுக்க முடியுமா என்ன?!

Posted by: Abu Safiyah

nidur.info

வரலாறு காணாத மிகப் பிரம்மாண்டப் பேரணி மாநாடு! மக்கள் வௌ்ளத்தில் மூழ்கிய சென்னை! புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

பேரணி மற்றும் மாநாடு புகைப்படங்கள் மற்றும் தீர்மானங்கள்

ஜூலை 2010ம் ஆண்டு 4ம் தேதி சென்னை தீவுத்திடல் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் எழுச்சியுடன் பங்கேற்ற, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாட்டில்’ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

நீதிபதி மிஸ்ரா, சச்சார் ஆகியோருக்கு நன்றி

1. இந்திய நாட்டை உருவாக்குவதிலும், இந்தியாவின் அடிமைத் தளையை உடைத்தெறிவதிலும் பெரும் பங்கு ஆற்றிய முஸ்லிம்கள் நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளன. முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் தெளிவான பரிந்துரை யையும் வழங்கியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இதற்காக இம்மாநாடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

கல்வியில் இட ஒதுக்கீடு

2. முஸ்லிம்களின் இந்த அவல நிலை மாறிட ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து மாநிலங்களில் உள்ள கல்லூரிகளிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க வேண்டும் என்று முஸ்ம் சமுதாயம் சார்பில் இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.

வேலை வய்ப்பில் இட ஒதுக்கீடு

3. அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மத்திய அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார்கள் நடத்தும் பெரிய நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.

மேலும் படிக்க…

சோனிகாந்தி , பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த TNTJ நிர்வாகிகள்!

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள். பகல் 12.25 முதல் 12.35 வரை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து இட ஒதுக்கீட்டை வலியுதித்தினார்கள்.

இது குறித்த முழு விபரம் வருமாறு:

மாநாட்டுக்கு முதல் நாள் ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தனி இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்துவதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கோரும் இரு கடிதங்கள் தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் மூலம் இருவருக்கும் சேர்ப்பிக்கச் செய்தோம்.

மாநாடு நடத்துவது மட்டும் போதாது. இட ஒதுக்கீடு தரும் இடத்தில் இருப்பவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? இட ஒதுக்கீடு தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா? இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுப்பூர்வமான மாநாடு மற்றும் பேரணி குறித்த தகவல்கள் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பை விரும்பினோம்.

பிரதமரும் சோனியா காந்தி அவர்களும் நேரம் ஒதுக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நேரம் ஒதுக்குவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.

மாநாடு முடிந்த மறுநாளே ஆறாம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.

தமிழக வரலாறு காணாத அளவுக்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உணர்ச்சிப் பிளம்பாகக் கலந்து கொண்ட தகவல் உளவுத்துறை மூலமும் மாநாட்டில் கலந்து கொண்ட சகோதரர் ஜெ. எம். ஹாருன் அவர்கள் மூலமும் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவருக்கும் செய்திகள் சென்றடைந்ததே இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் காரணமாக இருந்தது. பிரதமரி சந்திப்பின் போது இதைக் கண்டு கொண்டோம்.

தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் பி. ஜைனுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அஹமது ஆகியோர் காலை 7.00 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு குறித்த நேரத்தில் பிரதமரை சந்திக்கச் சென்றோம். வழக்கமான பாதுகாப்பு சோதனை முடிந்தபின் பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டோம்.மேலும் படிக்க…

அயோத்தி விவகாரம்-60 ஆண்டு கால மத-சட்டப் போராட்டம் கடந்து வந்த பாதை..

modi

டெல்லி: கடந்த 60 ஆண்டு காலமாக நாட்டு மக்களை அலைக்கழித்து வரும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகப் போகிறது. இதற்கான தடைகளை உச்சநீதிமன்றம்  அகற்றி விட்டது. கடந்த 60 ஆண்டு காலமாக நடந்துவரும் சட்டப் போராட்டம் குறித்த ஒரு பார்வை.60 ஆண்டு கால சட்டப் போராட்டமாக இது இருந்தாலும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலான மோதலாக இது நிலவி வருகிறது.

முதல் முறையாக 1949ம் ஆண்டு இந்த பிரச்சினை (அதாவது சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததா, அந்த இடம் யாருக்குச் சொந்தம், கோவிலை இடித்து விட்டுத்தான் மசூதி கட்டப்பட்டதா என்பது) கோர்ட்டுக்கு வந்தது. அந்த ஆண்டில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர், சீதையின் சிலைகள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது.

பாபர் மசூதி இந்த இடத்தில் கிட்டத்தட்ட 400 ஆண்டுளாக இருந்து வருகிறது என்பது ஒரு சாராரின் வாதம். இன்னொரு சாராரோ, அங்கு இருந்த மிகப் பெரிய கோவிலை இடித்து விட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக கூறுகின்றனர். இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார். அதையொட்டிதான் அங்கு கோவில் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர் அவர்கள்.

அயோத்திப் பிரச்சினையின் முக்கிய அம்சங்கள்-ஆரம்பத்திலிருந்து….

1528- அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது.

1853- சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கொண்டாடி முதல் முறையாக மிகப் பெரிய மதக் கலவரம் வெடித்தது. பலர் உயிரிழந்தனர்.

1859- ஆங்கிலேய அரசாங்கம் சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றி வேலி அமைத்தது. மேலும், இந்துக்களும், முஸ்லீம்களும் தனித் தனியாக வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தது. இதுதான் கடந்த 90 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

1949- டிசம்பர் மாதத்தில் ராமர், சீதையின் சிலைகள் மசூதியில் வைக்கப்பட்டன. இதனால் கலவரம் வெடித்தது. வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய இடத்தில் யாரும் நுழையக் கூடாது என்று அரசு தடை விதித்தது. அதை சர்ச்சைக்குரிய பகுதியாகவும் அரசு முதல் முறையாக அறிவித்தது.

1984- ராமர் கோவில் கட்டும் கோரிக்கையும், இயக்கமும் வலுப்பெற்றன. இந்து அமைப்புகள் இணைந்து ஒரு கமிட்டியை அமைத்தன. அத்வானி தலைவராக நியமிக்கப்பட்டார்.

1986- மசூதி அமைந்துள்ள பகுதியை இந்துக்கள் வழிபாடு நடத்த திறந்து விட வேண்டும் என மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

1986- பாபர் மசூதி நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டது.

1989- சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகே ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் நடத்தின.

1990- அப்போதைய பாஜக தலைவரான அத்வானி நாடு முழுவதும் ரத யாத்திரையை மேற்கொண்டார். இந்த சமயத்தில் விஎச்பி தொண்டர்கள் மசூதிக்குள் புகுந்து அதன் ஒரு பகுதியை சேதப்படுத்தினர். பிரதமராக இருந்த சந்திரசேகர் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்தார். ஆனால் பலன் இல்லை.

1991- ராமர் கோவில் கட்டும் இயக்கம் என்ற பெயரில் அத்வானி நடத்திய ரத யாத்திரையால் பாஜக அரசியல் ரீதியாக பலமடைந்தது. உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. நாடாளுமன்றத்தில் முதல் முறையாக முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

- அயோத்தியில் கரசேவகர்கள் குவியத் தொடங்கினர். நாடு முழுவதிலுமிருந்து செங்கற்கள் கொண்டு வரப்பட்டன.

1992- டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதியை இடிததனர் கரசேவகர்கள். நாடு முழுவதும் மதக் கலவரம் வெடித்தது. ஏராளமான அப்பாவி இந்து, முஸ்லீம்கள் உயிரிழந்தனர்.

- டிசம்பர் 16ம் தேதி நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு [^]

1993- நியமிக்கப்பட்டு 3 மாதங்கள் கழிந்த நிலையில் லிபரான் கமிஷன் தனது விசாரணையைத் தொடங்கியது.

2001- பிப்ரவரி 27ம் தேதி குஜராத்தின் கோத்ராவில் ரயிலுக்கு வைக்கப்பட்ட தீயில் சிக்கி 58 பேர் கொல்லப்பட்டனர். அனைவரும் அயோத்தியிலிருந்து வந்து கொண்டிருந்த இந்து அமைப்பினர் ஆவர். இதையடுத்து குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. 1000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

2002- ஏப்ரல் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னெள பெஞ்ச்சில் 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச், தீர்ப்பு தொடர்பான இறுதி விசாரணையைத் தொடங்கியது.

2003- ராமர் கோவில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்ததா என்பதை அறிய தொல்பொருள் ஆய்வுக்கு லக்னோ பெஞ்ச் உத்தரவிட்டது.

- செப்டம்பரில் பாபர் மசூதியை இடித்த செயலுக்குத் துணை போன இந்து மதத் தலைவர்கள், விசாரணைக்கு உட்பட வேண்டும் என லக்னெள பெஞ்ச் உத்தரவிட்டது. இருப்பினும் அத்வானி மீது எந்தப் புகாரும் கூறப்படவில்லை.

2007- அயோத்தி வழக்கில் மறு ஆய்வு மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

2009- லிபரான் கமிஷன் தனது 17 ஆண்டு கால விசாரணையை முடித்து ஜூன் 30ம் தேதி அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் முழு விவரங்கள் பொதுமக்களுக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

2010- செப்டம்பர் 24ம் தேதி அயோத்தி வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என லக்னெள பெஞ்ச் அறிவித்தது.

- செப்டம்பர் 23ம் தேதி அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

- செப்டம்பர் 28ம் தேதி இந்தத் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.

- செப்டம்பர் 30ம் தேதி அலகபாத் உயர் நீதிமன்றத்தி் லக்னெள பெஞ்ச் தனது தீர்ப்பை வெளியிடவுள்ளது.

thatstamil

இரட்டைகோபுரதாக்குதலை நடத்தியது அமெரிக்கா தான் – ஐநா சபையில் ஈரான் அதிபர் பகிரங்க குற்றச்சாட்டு!

President Mahmoud Ahmadinejad
நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதிநிஜாத். அவரது பேச்சைக் கண்டித்து அமெரிக்க குழுவினர் ஐ.நா.விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர்.

ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியதே அமெரிக்கா தான் என்று தான் உலகின் பெரும்பாலான மக்கள் நினைக்கி்ன்றனர். உலகளவில் சரிந்து வரும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும், சரிந்து விட்ட தனது பொருளாதாரத்தை சரி செய்யவும், வளைகுடாவில் தனது ஆதிக்கத்தை மீ்ண்டும் நிலைநாட்டி, இஸ்ரேலுக்கும் யூத சக்திகளுக்கும் உதவவும் அந்தத் தாக்குதலை திட்டமிட்டு அமெரிக்கா தான் நடத்தியது.

அமெரிக்க அரசில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று தான் பெரும்பாலான அமெரிக்க மக்களும், உலகின் பெரும்பாலான மக்களும், உலக அரசியல் தலைவர்களும் நினைக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அல்லது அந்தத் தாக்குதலை உண்மையிலேயே தீவிரவாதிகள் தான் நடத்தினர். ஆனால், அந்தத் தாக்குதலை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா என்றும் சொல்லலாம்.

இந்த நியூயார்க் தாக்குதலை முன் வைத்துத் தான், தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஆப்கானிஸ்தான் மீதும் இராக் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தது.

தான் மட்டும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, நாங்கள் (ஈரான்) அணு ஆயுதம் தயாரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்களையும் அமெரிக்கா வம்புக்கு இழுத்து வருகிறது என்றார்.

அகமதிநிஜாத் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே அமெரிக்க ஐ.நா. குழுவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளின் தூதர்களும் குழுவினரும் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பேசிய அகமதிநிஜாத், இதனால் நியூயார்க் தாக்குதல் குறித்து ஐ.நா. முழுமையான விசாரணை நடத்தி உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

அணு ஆராய்ச்சி விஷயத்தில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால், அது நேர்மையாகவும் மரியாதையுடனும் நடக்க வேண்டும்.

அடுத்த நாட்டுக்கு மரியாதை தராமல் செயல்பட்டால் பதிலுக்கு மரியாதை கிடைக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும். அதே போல ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து நமது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நினைத்தால் அதன் மீது கொஞ்ச நஞ்சம் உள்ள நம்பிக்கையும் போய்விடும்.

சர்வதேச அணு ஆராய்ச்சி மையத்தின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டே ஈரானிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மற்றபடி யாருடைய நெருக்குதலுக்கும் ஈரான் பணிந்ததில்லை, இனியும் பணியாது என்றார்.

thatstamil

பாபர் மசூதி தீர்ப்பு – அமைதி காப்போம்!

61 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், “பாபர் மசூதியின் கீழ் கோயில் இருந்ததா? மற்றும் பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம்?” ஆகிய இரு விஷயங்களின் மீது நாளை 30.09.2010 மாலை 3.30 மணிக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

கடந்த 24.09.2010 அன்று வழங்கப்படுவதாக இருந்த தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தடையுத்தரவு கோரிய வழக்கின் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. அவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.

450 ஆண்டுகால பழமைவாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல கலவரங்கள், ஏராளமான அப்பாவி மனித உயிர்கள் என பல கோர சம்பவங்கள் கடந்த 61 ஆண்டுகளில் நாட்டில் நடைபெற்றுள்ளது.

நாளையத் தீர்ப்பு எந்தத் தரப்புக்குச் சாதகமாக வந்தாலும் நாட்டில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கலாம் என அஞ்சும் அரசுகள், பதட்டம் நிறைந்த பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு, விடுமுறை போன்றவைகளை அறிவித்து பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

தீர்ப்பு எப்படி அமைந்தாலும் அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். இந்திய நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி, உயர் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் இறுதியானவை அல்ல. ஒரு வழக்கில் உயர் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும். ஆகவே, நாளை வழங்கப்படும் தீர்ப்பு எத்தகையதாக இருந்தாலும் இரு தரப்பாரும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்க வேண்டும்.

வன்முறை நெருப்பைத் தூண்டிவிட்டு தங்கள் ஆதாயங்களுக்காக குளிர்காய நினைக்கும் குறுமதியாளர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகி விடக்கூடாது. அயோத்’தீ’யை எரிய விடாமல் அனைவரையும் மதித்து, அரவணைத்து செல்லும் பொறுப்பை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது கடமையென செய்ய வேண்டும். வதந்திகளையோ, வன்முறை செய்திகளையோ பரப்பாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பாபர் மசூதி நிலத்தின் மீதான தீர்ப்பின் முக்கியத்துவம் கருதி ஊடகங்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆவேசமான கருத்துக்கள், தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். “பரபரப்புக்காக” இந்தத் தீர்ப்பை யாரும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நாளை மற்றொரு நாளாக இருக்க வேண்டுமே தவிர, வரலாற்றில் கறைபடியும் வகையில் மற்றொரு கறுப்பு நாளாக மாறி விடாமல் இருக்க இந்திய நாட்டின் இறையாண்மையைப் பேணி பாதுகாக்கும் வகையில் அனைவரும் அமைதி காப்போம்.

Inneram.com

Nallur Peer

பாபர் மசூதி தீர்ப்பு: கட்டப் பஞ்சாயத்து – இந்தியாவின் முன்னணி சட்ட நிபுணர்கள் கருத்து

உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மஸ்ஜித் வழக்கில் இன்று மாலை 5 மணி அளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

அந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்றும், அந்த இடத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை கோயிலுக்கும், இன்னொரு பகுதியை பள்ளிவாசலுக்கும், மற்றொரு பகுதியை நிர்மோகி அகோரா விற்கும் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விசுவ ஹிந்து பரிசத் வரவேற்றுள்ளது.

இத்தீர்ப்பு பலருக்கும் திகிலூட்டுவதாக பிரபல சட்ட நிபுணர் ராஜீவ் தவான் என்.டி.டி.வி தொலைக்காட்சி பேட்டிக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு என்றும் வர்ணித்துள்ளார். இதையே மற்றுமொரு சட்ட நிபுணரான பி.பி. ராவும் வழிமொழிந்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் இது குறித்து யாருக்கும் வெற்றியும்  இல்லை, தோல்வியும் இல்லை என்று கூறியுள்ளது.

சுதீர் குமார் அகர்வால் மற்றும் தர்ம் வீர் சர்மா ஆகிய நீதிபதிகள் ஒரு மாதிரியாகவும் சிபகத்துல்லா கான் வேறு மாதிரியாகவும் தீர்ப்பினை கொடுத்துள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர்கள் தீர்ப்பு குறித்து டெல்லியில் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய சூழலில் இத்தீர்ப்பை ஏற்றாலும், விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முஸ்லிம்கள்  தரப்பில் கூறப்படுகின்றது.

ஆர்.எஸ்.எஸ்ஸாக மாறிய நீதிமன்றம் : அயோத்தி தீர்ப்பு குறித்து திருமாவளவன் சீற்றம்

Thol Thirumavalavan Gallery

சென்னை: அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கில் 3 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் “ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் “என்று கூறினார்.

மேலும் அவ்வறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வரலாற்றை பார்க்காமல் வெறும் நம்பிக்கைகளை வைத்ஹு வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்.

ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டிக்கதக்கது என்று கூறிய திருமாவளவன் 450 ஆண்டுகள் மசூதி இருந்ததும், அது இடிக்கப்பட்டதும் நிகழ்கால வரலாறுகள் என்றும் எவ்வித வரலாற்று ஆதாரம் இல்லாத ராமர் பிறப்பை வைத்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாக கூறியுள்ள திருமாவளவன் மசூதி இடித்தவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதையும் சுட்டி காட்டியுள்ளார்.

முஸ்லீம்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய  நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது அனைவரின் கடமை என்றும் பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை  போராட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

inneram.com

பாபர் மசூதி தீர்ப்பு – சீதையின் சமையலறையில் கருகிய நீதி!

Babri Mosque Demolition

பாபர் மஸ்ஜித் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி நடுநிலையாளர்களுக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின்படி சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகள், ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் நிலைநாட்டியுள்ளமை உலக அரங்கில் இந்திய நீதிமுறையின் லட்சணத்தைக் கேலிக்கூத்தாக்கி உள்ளது!

நான்கரை நூற்றாண்டுகள் அனுபவ பாத்தியதையுள்ள பாபர் மசூதியை 1992, டிசம்பர் 6 அன்று சங்பரிவாரங்கள் வன்முறையாக ஆக்கிரமித்து இடித்துத் தகர்த்தனர். ஒருவரின் சொத்தை ஆக்கிரமிப்பதும், அவர் உடமைக்குச் சேதம் விளைவிப்பதும் சட்டவிரோதம். இதனைத்தொடர்ந்து மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது அதைவிடக்கொடிய கிரிமினல் குற்றம்.

இதற்கெல்லாம் காரணமானவர்களை விசாரித்துத் தண்டிக்க முயற்சி எடுக்காத நீதிமன்றங்கள், பாபர் மசூதி உரிமை குறித்த வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பு தேசிய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்கும் என்பதோடு மக்களுக்கு இருக்கும் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் தகர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. சட்டப்படியல்லாத இத்தீர்ப்பு(கட்டப்பஞ்சாயத்து), ஏற்கனவே ராமர் பெயரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சேதுக்கால்வாய் திட்டத்தையும் இதே நம்பிக்கையின் அடிப்படையில் நிரந்தரமாக முடக்கி வைக்க வழிகோலும்.

மேலும் படிக்க…

நவீன நிர்வாகக் கொள்கைகள் இஸ்லாம் வழங்கியதே : நிபுணர் பேச்சு!

குர்ஆனிலிருந்தும் நபிமொழிகள் எனப்படும் ஹதீஸ்களிலிருந்தும்தான்
நவீன உலகம் தனக்கான நிர்வாக மேலாண்மைக் கொள்கைகளைப் பெற்றுக்கொண்டுள்ளது என்கிறார் அய்குட் கிர்பாஸ். துருக்கியிலுள்ள தரச்சான்றிதழ் மையத்தின் தலைவரான இவர் அண்மையில் ஜெத்தா வந்திருந்தார். மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் நிகழ்வுற்ற மூன்றாவது தேசிய தகுதிசார் செவ்வியல் மேலாண்மை மாநாட்டில் இக்கருத்தை அவர் வெளியிட்டார்.
நிருபர்களிடம் பேசுகையில், “இன்றைக்கு உலகின் தலைச்சிறந்த நிறுவனங்களில் பின்பற்றப்படும் நிர்வாக முறைமைகள், கடந்த 1400 ஆண்டுகளாக முஸ்லிம்களிடம் உள்ளவையே. குறிப்பாக, நபிகளார் காலத்திய, பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளே அவை” என்று அவர் குறிப்பிட்டார்.

“செவ்விய மேலாண்மையின் முக்கியக்கூறாக தலைமைத்துவம் விளங்குகிறது. ‘உங்களில் மூவர் பயணம் செய்தாலும் அதில் ஒருவரைத் தலைவராக ஆக்கிக்கொள்ளுங்கள் (அபூதாவுது-2608)’ என்கிற நபிமொழி தலைமைத்துவத்தின் இன்றியமையாமையைத் தெளிவாக உணர்த்துகிறது” என்று கூறிய அய்குட்,

“தலைமையற்றுப் போனால், அது உறுப்பினர்களின் தான்தோன்றித்தனத்திற்கே வழிவகுக்கும்” என்றும் குறிப்பிட்டார். மேலும், “அது ஒட்டுமொத்த அணித்திறனையும் கடுமையாகப் பாதிக்கும்”. என்றார்.

“செவ்வியல் மேலாண்மையின் மற்றொரு பிரதான கூறு, உயர் நிர்வாகிகள் மாதாந்திரமாகவோ, குறிப்பிட்ட கால அளவிலோ சந்தித்து ஆலோசனை மேற்கொள்வதாகும். இது முஸ்லிம்களின் சமூக வாழ்க்கையேயன்றி வேறில்லை” என்றார் அய்குட். “ஒவ்வொரு சமூகப் பிரச்னைகளின் போதும் முஸ்லிம்கள் கலந்தாலோசித்து தீர்வு காண்பது நபிகளார் காலத்திலிருந்தே உள்ள நடைமுறை என்பதை வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறது” என்ற அய்குட் கிர்பாஸ், “ஆயினும் இந்த, நிர்வாகரீதி சந்திப்பு முறைமைகளை புதிய கண்டுபிடிப்புகளாக மேற்குலகம் சொல்லிக்கொண்டிருப்பது தான் விந்தை” என்றார்.

inneram.com

அநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்.

இஸ்லாம் என்றால் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களில் ஈடுபடுவது மட்டும்தான் என்று பல எண்ணிக்கொண்டிருக்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச­லேயே தன் வாழ்கை கழித்தார்கள். உலக விஷயங்களைப்பற்றி நபிகளார் கவனத்தில் கொள்ளவில்லை, தொழுவதும் நோன்பு நோற்பதும்தான் அவர்களின் கடமையாக இருந்தது என்று எண்ணுகிறார்கள். அவர்கள் எண்ணும் வண்ணம் பல அறிஞர்களின் சொற்பொழிவுகளும் அமைந்திருக்கிறது.
வணக்க வழிபாடுகளை விட்டு விட்டு அரசியல் விஷயங்களில் ஈடுபட்டால் அது ஆன்மீகத்திற்கு எதிரானது என்றும் அநீததற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ஆன்மீகவாதிகள் இல்லை என்றும் எண்ணுகின்றனர்.
இவ்வாறு செய்பவர்களை காணும் பெற்றோர்கள், நீ உண்டு உன் தொழுகை உண்டு என்று இருக்க வேண்டியதுதானே என்று கண்டிப்பதைக் காண்கிறோம்.
ஆனால், உண்மையில் இஸ்லாம் அனைத்து துறைகளிலும் ஈடுபடவேண்டும் என்றும் அவ்வாறு செய்வதினால் மறுமையில் கூ­லி உண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
மார்க்க விஷயமாக இருந்தாலும் சரி, உலகவிஷயமாக இருந்தாலும் சரி, அநியாயம் நடக்கும்போதும் நீததற்கு மாற்றமாக காரியங்கள் நிகழும் போது அதை தட்டிக் கேட்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.
இவ்வாறு தீமையை தட்டிக் கேட்போர் நல்லடியார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர்ஆன் 3:114)
தீமைக்கு எதிராக போராடும் ஒரு கூட்டத்தினர் இவ்வுலுகில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்றும் இவர்கள் வெற்றியாளர்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
இவ்வசனம், தீமைக்கு எதிரான போராட்டம் மறுமைக்கு வெற்றித் தேடித் தரும் காரியம் என்பதை மிகத் தெளிவாக கூறுகிறது. நபி (ஸல்) அவர்களும் கூட தீமையைக் கண்டவர் எப்படி நடக்க வேண்டும் என்று வழிகாட்டியுள்ளார்கள்.

மேலும் படிக்க…

பால்தாக்கரேக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதே இந்துத்துவாவினரின் வேலையாகிவிட்டது. அவ்வப்போது இஸ்லாத்திற்கும் , முஸ்லிம்களுக்கும் எதிராக ஏதாவது ஒன்றைக் கூறி அமைதியைக் கெடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்துவதே இந்துத்துவாவினரின் ஒரே குறிக்கோளாகும்.

இந்த அடிப்படையில்தான் அடுத்த சர்ச்சையை இந்துத்துவா வெறியன் சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே கிளப்பியுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பால்தாக்கரே தமது கட்சி ஏடான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார். பர்தாவை தடைசெய்ய வேண்டும் என்பதற்கு பால்தாக்கரே கூறியுள்ள காரணம்தான் முட்டாள்தனமானதாகும்.

சாந்தாகுரூசில் வி.என்.தேசாய் மாநகராட்சி மருத்துவமனையில் பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண்குழந்தையை கடந்த பதினைந்தாம் தேதி பர்தா அணிந்த ஒரு பெண் திருடிச் சென்று விட்டாராம் . இதன் காரணமாகத்தான் திருட்டிற்குப் பயன்படும் பர்தா எனும் ஆடையை தடைசெய்ய வேண்டும் என்ற அறிவுப்பூர்வமான(?) காரணத்தை பால்தாக்கரே கூறியுள்ளான்.

பர்தாவை தடைசெய்ய வேண்டும் என்பதற்கு பால்தாக்கரே கூறியுள்ள காரணம் மிகவும் முட்டாள்தனமானதாகும். பர்தா என்பது பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் தரக்கூடிய ஒரு ஆடையாகும். இந்த கண்ணியமிக்க ஆடையை அணிந்து ஒருவர் ஒரு தவறை செய்து விட்டால் அந்த ஆடையையே தடைசெய்ய வேண்டும் என்பது முட்டாள்தனமானதாகும்.

எத்தனையோ பேர் போலீஸ் அதிகாரி போல் சீருடை அணிந்து மக்களை ஏமாற்றி பலகேடுகெட்ட காரியங்களைச் செய்கின்றனர். மேலும் வங்கி அதிகாரிகளைப் போல் சீருடை அணிந்து மிகப் பெரும் மோசடியில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் கூட வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல் நடித்து ஒரு வீட்டில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பத்ரிகைகளில் பரபரப்பான செய்தியாக வெளிவந்துள்ளது.

பல்வேறு துறைகளில் உள்ளவர்களின் சீருடைகளை அணிந்து சமூகவிரோதிகள் பல்வேறு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அனைத்து சீருடைகளையும் தடை செய்ய வேண்டுமென்று பால்தாக்கரே கூறுவரா?

காவியாடை அணிந்து எத்தனையோ பேர் காமலீலைகளில் ஈடுபட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டு ஊடகங்களால் கேவலப்படுத்தப்படுகின்றனர். எனவே காவியாடை அணிவதற்கு தடைவிதிக்க வேண்டுமென்று பால்தாக்கரே கூறுவாரா?

பர்தா என்ற கண்ணியமிக்க ஆடையை அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கூறுவதின் மூலம் அமைதியாய் உள்ள முஸ்லிம் சமுதாயத்தை தூண்டிவிட்டு பெரும் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்பதே பால்தாக்கரே போன்ற இந்துத்துவவாதிகளின் நோக்கமாகும்.

எனவே இதுபோன்ற சமூகவிரோத கருத்துக்களைத் தெரிவித்து முஸ்லிம்களின் கோபத்தை தூண்டும் பால்தாக்கரே மீது மத்திய அரசும், மகராஷ்டிர மாநில அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் இந்திய அளவில் முஸ்லிம்கள் மாபெரும் போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறோம்.

இப்படிக்கு

ஆர் ரஹ்மதுல்லாஹ்

மாநிலத் துணைத் தலைவர்

தவ்ஹீத் ஜமாஅத்.

ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மீது குற்றப்பத்திரிக்கை

டெல்லி: ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவினர் இந்த குற்றப்பத்திரிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இந்திரேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்தான் இந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்திரேஷ் குமார் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஜெய்ப்பூரில் ரகசியக் கூட்டம் போட்டனர். அதில் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர்பான சதித் திட்டம் தீட்டப்பட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி வியாழக்கிழமை மாலை, ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற காஜா மொய்னுதீன் சிஷ்டி தர்காவில் குண்டு வெடித்தது. இதில், நான்கு பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.

ரம்ஜான் மாதத்தின் 3வது நாள் நோண்பை ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் ஒன்று கூடி முடித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.

பள்ளிக் கூட பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திரிக்கை குறித்து இந்திரேஷ் குமார் கூறுகையில், இது எனக்கு எதிரான, காங்கிரஸ் அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். இந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. இது அரசியல் சதி வேலை . விசாரணை அமைப்பை எனக்கு எதிராக காங்கிரஸ் பயன்படுத்துகிறது.

நாங்கள் வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை. அது எங்களது கொள்கைக்குப் புறம்பானது. நீதிக்காக கோர்ட்டை நான் நாடுவேன் என்றார்.

thatstamil

 

2002 குஜராத் கலவரத்தை நரபலி மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார்-ஜடாபியா வாக்குமூலம்

modi

அகமதாபாத்: 2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.

கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.

கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.

thatstamil

சென்னை 3வது விவாதம். தானாக உளறிய அப்துல்லாஹ் ஜமாலி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் கடந்த இரண்டு (2010-10-23.24) நாட்களாக சென்னை டி நகர் தியாகராஜர் மண்டபத்தில் வைத்து பகிரங்க விவாதம் நடந்தது.
இதில் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.
சுன்னத் ஜமாத் ஐ.பேரவையின் நிலைபாடு :
சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் அசிங்கங்களும் குர்ஆன் ஹதீஸிற்க்கு மாற்றமான கருத்துக்களும் இருக்கின்றன.
தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு :
சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் எந்தவொரு அசிங்கங்களோ குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான கருத்துக்களோ இல்லையென்பதும்.ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களின் பேச்சுக்கள் எழுத்துக்கள் தப்ஸீர்கள் ஆகியவற்றில் தான் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களும் கயமைகளும் பொய்களும் ஆபாசங்களும் நிறைந்துள்ளன.

மேலும் படிக்க…

இடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்

“என் தேசத்தை; அதன் மீதான ஆக்ரமிப்பை; அது குற்றப் பின்னணி உடையவர்களாலும் யுத்த வெறியர்களாலும் ஆளப்படும் அவலத்தை;  அமெரிக்காவின் அப்பட்டமான சுயநல வெறியை; சுரண்டலை வெளிஉலகுக்குத் தெரிவிக்க அனைத்து உபாயங்களையும் நிச்சயம் மேற்கொள்வேன்” என்கிறார் அந்தப் பெண். உலகின் மிக தைரியமான பெண் என்றும் பாராட்டப்படுகிறார் அவர்.

உலகின் சக்தி வாய்ந்த 100 பேரில் ஒருவராக, கடந்த மே மாதம் டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்திருந்தவர்களுள் அவரும் ஒருவர். அவர் பெயர் மலலாய் ஜோயா. ஆஃப்கனிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.  ”எனது நாடு, அதன் முன்னேற்றம் குறித்து பெரும்கனவுகளைச் சுமந்தலைகிறேன்” என்கிறார்.

லோயா ஜிர்கா எனப்படும் ஆப்கன் மக்களவைக்கு 2007 ஆம் ஆண்டு, தன்னுடைய 28 வயதில் தேர்தல் வெற்றி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் மிக இளவயது நாடாளுமன்ற உறுப்பினர் (MP) ஆக இருந்த ஜோயாவை,  அவருடைய மூன்று நிமிட உரையை எதிர்கொள்ள முடியாத ஆஃப்கன் நாடாளுமன்றம் பதவிபறிப்பு செய்து அவரை வீட்டுக்கு அனுப்பியது. ஆனால் ஜோயாவின் பயணம் அதிலிருந்து தான் தொடங்கிற்று எனலாம்.

பன்மைச் சமுதாயங்களும் மனித உரிமைகளும் என்கிற தலைப்பில் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் கலந்துகொள்ள கனடாவின் மாண்ட்ரியல் நகரிலுள்ள மெக் -கில் பல்கலைக்கழகத்திற்கு கடந்த செப்டம்பரில் ஜோயா  வந்திருந்தார். உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சட்டநிபுணர்கள், அரச தந்திரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று உயர்நிலையில் உள்ள பலரும் கலந்துகொண்ட கருத்தரங்கு அது.

மாண்ட்ரியல் கருத்தரங்கில் இவருடைய உரையைக் கேட்ட ஒட்டாவா பல்கலை பேராசிரியர் டெனிஸ் ரான்கோர்ட் இப்படி எழுதுகிறார்: “இவருடைய உரை ஒரு கூரிய ஆயுதமாகச் செயற்பட்டு, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நேச நாடுகளின் போர்ப்பிரச்சார கடின வலையை சுக்குநூறாகக் கிழித்தெறிந்துவிட்டது. நம்முடைய எம்.பிக்கள் இவரிடம் பாடம் படிக்கவேண்டும்”

ஒபாமா சமாதானத்துக்கான நோபல் பரிசு வாங்கிய சமயம், ஜோயாவை முன்னிறுத்தி பிரபல மனித உரிமை ஆர்வலர் நோம் ச்சோம்ஸ்கி இப்படி குறிப்பிட்டார்: “நோபல் கமிட்டிக்கு என்ன நேர்ந்துவிட்டது, ஜோயா போன்ற எளிய வாய்ப்புகள் இருந்தும் கூட ….”

“எங்கள் விடுதலை வேட்கை நூறாண்டுகளைக் கடந்தது. கண்ணியமும் நீதமும் நிரம்பியது. ஆனால் அது மிக நீண்டதொரு பெரும் போராட்டம். சிறுதுளிகள் சேர்ந்தே பெருவெள்ளமாகும் என்பதை அறிந்தே வைத்திருக்கிறேன். எங்கள் மக்கள் மட்டும் நீதிக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் ஒன்றுபட்டு விடுவார்களேயானால் அது காட்டாற்று வெள்ளமாகிவிடும். யாராலும் தடுத்துநிறுத்த முடியாது” என்கிறார் ஜோயா.

“சிறுசிறு இனவாதப் பிரச்னைகளாலும், குழுச்சண்டைகளாலும் சிதறுண்டுப் போகாமல், நாட்டுநலன் நாடி பொதுஎதிரிக்கு எதிராக ஆஃப்கனியர் ஒன்று திரளவேண்டும்”

“தாலிபன்களையும்,அல்-காய்தாவையும் காரணம் காட்டி அமெரிக்கா சுரண்டலை மேற்கொள்கிறது. உண்மையில் தீவிரவாதத்திற்கெதிரான போர், தீவிரவாத வளர்ச்சிக்கே வித்திட்டது” என்கிறார் ஜோயா.

உள்நாட்டில் பலத்த ஆதரவையும் அரசியல் எதிர்ப்பையும் கணிசமான அளவு சம்பாதித்து வைத்திருக்கும் ஜோயா, ஒருசமயம் முஜாஹிதீன்களைப் பற்றி குறிப்பிட்டதும் சர்ச்சையை உண்டாக்கியது: “இரண்டு விதமான முஜாஹிதீன்கள் இருக்கிறார்கள். ஒரு தரப்பினர் நாட்டு விடுதலை என்கிற இலக்கு நோக்கி மனப்பூர்வமாகப் பாடுபட்டனர். அவர்களை மதிக்கிறேன். ஆனால் மற்றொரு தரப்பினர் பதவிச் சண்டைக்காக சொந்த நாட்டின் 60,000 மக்களை கொன்று குவித்தவர்கள்……”. உடனடியாக கம்யூனிஸ்ட் முத்திரை இவர்மீது குத்தப்பட்டது.  இவருடைய தந்தையோ முஜாஹிதீன்களுடன் சேர்ந்து சோவியத் ரஷ்யாவின் ஆக்ரமிப்பை எதிர்த்துப் போரிட்டு ஒருகாலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“மெளனம் ஒருபோதும் வாய்ப்பாகாது” என்கிற ஜோயாவிடம் “பன்னாட்டுச் சமூகத்திடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது “நீங்கள் (பன்னாட்டு அரசுகள், சமூகம், அமைப்புகள்) எங்களுக்குச் செய்ய முடிகிற மிகப் பெரிய உதவி, அமெரிக்காவின் பின்னால் போகாமல் இருப்பதுதான்”

“நேட்டோ படைகளுடன் சேர உங்கள் நாட்டுப் படைகளை அனுப்பாதீர்கள்” என்று உடனடியாக விடையிறுக்கிறார்.ஸ்வீடன் முதலான நாடுகளுக்கு இதே கருத்தை வலியுறுத்தி சுற்றுப்பயணமும் ஜோயா மேற்கொண்டிருந்தார்.

நான்கு முறைக்கும் மேல் தன் மீது நடத்தப்பட்ட மரணத்தாக்குதல்களிலிருந்து தப்பியிருக்கும் ஜோயா, பல நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறார். “உங்கள் பயணத்தில் நீங்கள் கண்டது என்ன?” என்று கேட்டால், “மக்களுக்கும் அரசுகளுக்கும் இடையே இருக்கும் தூரம்தான், அது கடக்க இயலாததாக மாறிவருகிறது” என்று பதிலளிக்கிறார்.

ஜாமியா மில்லியா பல்கலைகழகத்தின் கருத்தரங்கு ஒன்றிற்காக ஜோயா இந்தியாவுக்கும் வந்திருக்கிறார்.

inneram.com

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ரிஸானாவின் கதி என்ன?

இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நபீக் என்னும் பெண் சவூதி
அரேபியாவில் தான் பணிப்பெண்ணாக பணியாற்றிய வீட்டில் நான்கு மாத வயதுடைய சிசுவின் மரணத்துக்கு காரணமென குற்றஞ் சாட்டப்பட்டு ரிஸானாவுக்கு 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் சவூதி நீதிமன்றம் மரண தண்டனையைத் தீர்ப்பாக வழங்கியது. இக்காலப் பகுதியில் ஊடகங்களில் இச்செய்தி பரபரப்பாக பேசப்பட்டது யாவரும் அறிந்ததே. 

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ரிஸானா மேன்முறையீடு செய்திருந்தார். இம்மேன்முறையீடு ரியாத்திலுள்ள நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு ரிஸானாவின் மரணதண்டனை மீளவும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இம்மரண தண்டனையை சவூதி மன்னர் அங்கீகரிக்கும் பட்சத்தில் ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும்.

பெண்களை நிர்வகிப்பவர்களாக ஆண்களை அல்லாஹ் படைத்துள்ளான். பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கும் நிலையில் தகப்பன் சம்பாதிப்பதை விட்டு விட்டு பிள்ளையை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும் ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். (அல்குர்ஆன் 4:34)

பெண்கள் மஹ்ரமான ஆண் துணையின்றி பயணம் மேற்கொள்வதை தடுக்கின்ற மார்க்கமாக இஸ்லாம் மார்க்கம் உள்ளது. இந்த நிலையில் பெண் பிள்ளைகளை அதுவும் போலியான வயதைக் காட்டி நாட்டின் சட்டத்தையும் மதிக்காமல் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அனுப்பிய பெற்றோரை முதலில் கண்டிக்க வேண்டும். 

இதை ஒவ்வொரு பெற்றோரும் யோசிக்க வேண்டும். ஆண்களும் பெண்களை  வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாட்டில் பெண்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவதை தடை செய்யும் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.(அதிக அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்வதிலேயே அரசாங்கம் முன்னுரிமை காட்டுகிறது) அப்போது தான் பெண்களின் மானம் மரியாதை பாதுகாக்கப்படும். இதற்கு இஸ்லாம் மார்க்கம் தான் சரியான பாதுகாப்பு அரணை போட்டுள்ளது.

எந்த ஒரு பெண்ணும் மஹ்ரம் துணை இல்லாமல் ஒரு பரீத் –அதாவது 12 மைல்- தூரத்துக்கு பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: இப்னு குஸைமா பைஹகீ அபூதாவூத் ஹாகிம்
 

இதன் அடிப்படையில் பெண்கள் 12 மைல் தொலைவு உள்ள தூரத்துக்கு தனியாகப் பயணம் செய்ய அனுமதி உள்ளது. அதற்கு மேல் தனியாகப் பயணம் செய்ய அனுமதி இல்லை

பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும், மானத்தை பாதுகாக்கும் அரண்களை கட்டுப்பாடுகளை அல்லாஹ் நமக்கு அருளியுள்ளான். இதனைக் கவனிக்கத் தவறுகின்ற பட்சத்தில் நாமே நம்மீது கைசேதத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே, தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானனின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)

ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்புகளை பற்றி விசாரிக்கப்படும் மறுமை நாளைப் பயந்துஇ அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்துடன்  அவரவர் பொறுப்புகளை ஒழுங்காக செய்தால் ஈருலக நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம். மார்க்கத்தின் வரம்புகளைஇ வரையறைகளை மீறும் போது தான் கஷ்டங்களை துன்பங்களை அனுபவிக்க வேண்டி ஏற்படும். இவற்றைக் கவனத்தில் கொண்டு நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்பதையும் மனதிலிருத்தி எம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாக.

www.rasminmisc.blogspot.com

இந்திய இறையான்மையை கேள்விக்குறியாக்கிய ஒபாமாவின் வருகை.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமானம் செய்ததிலிருந்து இந்தியா வருவது இதுதான் முதல் தடவை.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பலத்த ஆயுத பொருளாதார போட்டி நடந்து கொண்டிருக்கும் இவ்வேலையில் அமெரிக்க அதிபர் இந்தியா வந்துள்ளது பல கேள்விகளை உண்டாக்கியுள்ளது.
சினாவின் பொருளாதார ஆயுத வளர்ச்சிகளை முடக்குவதற்கு இந்தியாவை அமெரிக்கா பயண்படுத்துகிறதா என்ற கேள்வியும் இதில் எழுந்துள்ளது.
ஒபாமாவின் வருகையும் செலவுகளும்.
ஒபாமாவின் இந்திய வருகைக்காக அமெரிக்க அரசு நாளொன்றுக்கு 900ம் கோடி செலவு செய்கிறது.
ஒபாமா வருகைக்கு முன்பே அமெரிக்க பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் பாதுகாப்பு ஆயுதம் தாங்கிய கப்பல் போன்றவற்றுடன் இந்தியா வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்.
இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய அமெரிக்க பாதுகாப்பு.
ஒபாமாவின் வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
உலகின் பலம் மிக்க இராணுவத்தை வைத்திருக்கும் நாடுகளில் முக்கியமானதாக கருதப் படும் இந்திய இராணுவத்தின் நம்பிக்கைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க இராணுவமே ஒபாமாவின் பாதுகாப்பிற்கு முழுப் பொருப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
அதாவது 40 விமானங்கள் 6 ஆயுதம் தாங்கிய கார்கள் உட்பட அமெரிக்க உளவுப் பிரிவு சார்பாக மும்மை டெல்லி ஆகிய நகரங்களில் இரண்டு இராணுவ முகாம்களும் அமைக்கப் பட்டுள்ளன.
இந்தியாவிற்குள் ஒபாமா செல்லும் ஒவ்வொரு இடத்தையும் அமெரிக்க உளவுப் பிரிவு உன்னிப்பாக கண்காணிக்கும்.
ஓபாமா மற்றும் அவருடைய மனைவி செல்வதற்காக மூன்று அதி நவீன கடற்படை ஹெலிகாப்டர்களும் வடிவமைக்கப் பட்டுள்ளன.அத்துடன் 30 மோப்ப நாய்களும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
அதிபர் ஒபாமா இந்தியாவில் தங்கும் நாட்களில் மொத்தமாக 3000ம் அமெரிக்க படையினரும் தங்குகின்றனர்.
ஒபாமா வந்திறங்கிய விமானம் தரையிரங்கிய போது அரை மணிநேரம் மும்பை விமான நிலையம் மூடப் பட்டது.இது தவிர கொலாபாவில் உள்ள சிகாரா ஹெலிகாப்டர் தளத்தையும் அமெரிக்க அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
அதி நவீன கார்.
அமெரிக்க அதிபர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது செல்வதற்காக அமெரிக்காவில் இருந்து 7000ம் கிலோ எடையுள்ள அதிநவீன கார் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அதிபர் மாத்திரம் பயணிப்பதற்காக பிரத்தியேகமாக செய்யப் பட்ட இந்தக் காரை ஜனரல் மோட்டர்ஸ் நிருவனம் வடிவமைத்துள்ளது.
இந்தக் காருக்கு காட்லாக் ஒன் என்று பெயரிப்பட்டுள்ளது.
இரசாயனத் தாக்குதல் தற்கொலைத் தாக்குதல் வெடி குண்டுத் தாக்குதல் துப்பாக்கிச் சூடு என எந்த ஒரு தாக்குதல் நடத்தப் பட்டாலும் இதற்கு எந்தச் சேதமும் ஏற்படாமல் இருப்பதே இதன் சிறப்பம்சமாகும்.
அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடலாம்.
காரின் மேற்புறத்தில் இராணுவ தரத்திலான பாதுகாப்பு ஸ்டீல் கவசங்கள் பொருத்தப் பட்டுள்ளன.துப்பாக்கிச் சூடுகளும் காரைத் துளைக்காது.காரின் ஜன்னல் கண்ணாடிகள் ஒவ்வொன்றும் 5 அங்குலம் தடிமன் கொண்டவை. உடைக்க முடியாத தொழிநுட்பத்தில் தயாரிக்கப் பட்டவை.
காருக்குள் இருந்த படியே அமெரிக்க வெள்ளை மாளிகை துணை ஜனாதிபதி மற்றும் அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி ஆகியோரை உடனே தொடர்பு கொள்ளும் வசதியும் செய்யப் பட்டுள்ளது.
முக்கிய அம்சமாக காருக்குள் இருந்த படியே அமெரிக்க அதிபர் அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிட முடியும்.
உலகிலேயே இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட ஒரு வாகனம் அமெரிக்க அதிபருக்காக மாத்திரம் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மொத்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு, படை பலம் அனைத்தும் அமெரிக்காவிடம் அடைமானம் வைக்கப் பட்டதன் பின்னால் அமெரிக் அதிபரின் வருகை அமைந்திருக்கிறது என்பது மாத்திரம் உண்மை.

www.rasminmisc.blogspot.com

தீவிரவாத செயல்களுக்காக கைதான இந்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸுடன் தொடர்பு-காங்கிரஸ்

நாக்பூர்: நாட்டில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இந்துக்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாக்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முஸ்லீ்ம்களை தேச விரோதிகள் என்று தொடக்கத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். கூறி வருகிறது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைதான இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸுடன் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர். இதற்கு ஆர்.எஸ்.எஸ். என்ன பதில் சொல்லப் போகிறது.

முஸ்லீம்கள் தீவிரவாதத்தைப் பரப்புகிறார்கள், ஆதரிக்கிறார்கள், அடைக்கலம் தருகிறார்கள் என்று கூறுகிறது ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைதானால் சதி நடக்கிறது என்று கூக்குரலிடுகிறது.

நாட்டில் நிலவும் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். முஸ்லீம்களும் அவர்களுடன் கை கோர்த்து நாட்டை வலிமைப்படுத்த, வளப்படுத்த பாடுபட வேண்டும்என்றார் திக்விஜய் சிங்.

thatstamil.

 

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 66 பேர் பலி; 90 பேர் படுகாயம்

Thevar Jayanthi

புதுடெல்லி: புதுடெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 66 பேர் பலியாகி உள்ளார்கள். மேலும் 90 பேர் படுகாயமடைந்தனர். இந்த 4 மாடிக் கட்டிடம் கட்டி முடித்து 15 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. மக்கள் நெரிசல் மிகுந்த கிழக்கு டெல்லியில் லட்சுமி நகரில் 4 மாடி கட்டிடம் நே‌ற்‌றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 66 பேர் உயிரிழந்தனர். 90 பேர் காயமடைந்தனர். இவர்களில் 4 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

மீட்பு பணிகள் தீவிரம்!

தீயணைப்புத் துறையினர், காவல‌‌ர்க‌ள், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சுவதாக காவ‌ல்துறை தெரிவித்து‌ள்ளது. இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.மேலும் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

15 ஆண்டுகள் நிறைவு!

கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் உள்ள இந்த 4 மாடிக் கட்டிடம் கட்டி முடித்து 15 ஆண்டுகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன. இந்த 4 மாடிக் கட்டிடத்தில் 400 மக்களுக்கு மேல் வசிக்கின்றனர்.

யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம்!

சமீபத்தில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்பகுதி வெள்ளத்தால் சூழ்ந்தது. அதன் காரணமாக கட்டடத்தின் அடித்தளம் பலவீனமடைந்திருக்கலாம் என சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின் நிதி அமைச்சர் ஏ.கே.வாலியா தெரிவித்தார். இதன் காரணமாக பிரமாண்டமான கட்டிடம் சில நிமிடங்களிலேயே தரைமட்டமானது.

டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று டெல்லி முதல்வர் ஷீலா தட்சித் பார்வையிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்

Dinakaran.

முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள் – கருணாநிதி பக்ரீத் வாழ்த்து!

முஸ்லிம்கள்  கல்வி, தொழில் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய என் வாழத்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தன்னுடைய பக்ரீத் வாழ்த்துச் செய்தியில் தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:

தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் 17.11.2010 புதன்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

பேரறிஞர் அண்ணா, இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல, ஒரு சிறந்த மார்க்கம். முகம்மது நபிகள் ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார், அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார் என்று இஸ்லாம் குறித்துக் கூறியுள்ளார்.

அந்த இஸ்லாம் மார்க்க வாயிலாக, மனித குலம் அறிந்திருந்த அனைத்து நற்பண்புகளை விடவும் மிக உன்னதமான பண்புகளைக் கற்றுக் கொடுத்த நபிகள் நாயகம், தாய் தந்தைக்கு நன்றி செய்யுங்கள், அவ்வாறே உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும், எப்பொழுதும் உங்களுடனிருக்கும் சிநேகிதர்களுக்கும், பிரயாணிகளுக்கும், உங்களிடமுள்ள பணியாளர்களுக்கும் அன்புடன் நன்றி செய்யுங்கள் என்று கூறி, மனிதர்கள் அனைவரிடமும் மனித நேயத்தை வளர்த்திடப் பாடுபட்டார்.

மக்கள் பகையை உணர்வில்லாது ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை நீங்கள் ஒருவருக்கொருவர் தண்டித்து வாழாதீர்கள், பிணங்கிக் கொள்ளாதீர்கள், கோபப்படாதீர்கள், பொறாமை கொள்ளாதீர்கள் என்று அறிவுறுத்தினார்.

நபிகள் பெருமானார் வலியுறுத்திய இத்தகைய இயல்பான, அமைதியான மனித சமுதாய மேம்பாட்டிற்குரிய அறநெறிகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கல்வியில், தொழிலில், பொருளாதாரத்தில் மேலும் மேலும் முன்னேற்றம் காண எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Kader.

வழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்

 

வழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்,

ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள் என்ற பழமொழி தமிழகத்தில் தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. மட்டைகள் தண்ணீர் நிறைந்த குட்டையில் நன்றாக ஊறிப்போனால் தான் நன்றாக வளையும் எனவேதான் இவ்வாறு இலக்கிய நயமாக சில பழமொழிகளை தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இன்று இந்த கட்டுரையில் இந்த பழமொழியை நாம் சற்று வித்தியாசப்படுத்தி விளக்க இருக்கிறோம்! வாருங்கள்!

வழிகேடு என்னும் குட்டையில் ஊறிப்போன மட்டைகள் இவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது அதாவது நல்ல குட்டையில் மட்டை ஊறிப்போனால் அது பயனுள்ளதாக அமையும் ஆனல் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளால் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அந்த மட்டைகளை தோலுரித்துக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் படிக்க…

மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளி சுவாமி ஆசிமானந்த் கைது!

Ajmer Image

மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படும் சுவாமி ஆசிமானந்தை சிபிஐ வெள்ளிக் கிழமையன்று கைது செய்தது.

சுவாமி ஆசிமானந்த் கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பித்து வந்தார்.

குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிமானந்த் ஆசிரமம் நடத்தி வருகிறார். நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் இந்த ஆசிரமத்தில் வைத்தே திட்டம் தீட்டப்பட்டது என காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தப் பகுதியில் பழங்குடியினருக்காக பள்ளி ஒன்றையும் ஆசிமானந்த் நடத்தி வருகிறார். கிறிஸ்தவ ஆதிவாசிகளை இந்து மதத்திற்கு மாற்றும் பணியையும் இவர் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

காவித் தீவிரவாத நெட்வொர்க்கின் மூளையாகக் கருதப்படும் சுனில் ஜோஷியுடன் ஆசிமானந்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ முன்னாள் அதிகாரி புரோஹித் மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா ஆகியோருடனும் ஆசிமானந்த்துக்கு தொடர்பு உள்ளதாகக் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் கண்காணிப்பு கேமரா: போக்குவரத்து அபராத தொகையை வசூலிக்க புதிய திட்டம்; கிரெடிட் கார்டு, வங்கியில் செலுத்தலாம்

சென்னை கோட்டூர்புரம் உள்பட 12 இடங்களில் தற்போது இந்த கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. சந்திப்பில் இருந்த படியே 24 மணி நேரமும் போக்குவரத்தை கண்காணிக்கும் இந்த கேமராக்கள் ஏற்கனவே 17 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

கோட்டூர்புரத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை போக்கு வரத்து கூடுதல் கமிஷனர் ரவி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
12 இடங்களில் கண்காணிப்பு கேமரா: போக்குவரத்து அபராத தொகையை     வசூலிக்க புதிய திட்டம்;    கிரெடிட் கார்டு, வங்கியில் செலுத்தலாம்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து கண்காணிப்பு “கேமரா” அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 216 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளது. மேலும் 25 இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 17 இடங்களில் கண் காணிப்பு கேமிரா மூலம் போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. தற்போது அந்தந்த சந்திப்புகளில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கும் வசதி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உலக வங்கி அளித்துள்ள ரூ.4 1/2கோடி நிதி உதவியில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தை சுற்றி வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப விளக்குகள் தானாக மாறும் நவீன சிக்னல்களும் நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன கோமராக்கள் நிறுத்த கோட்டை தாண்டி நிற்கும் வாகனங்களை படம் பிடித்து காட்டும். விதிமுறையை மீறிய வாகனங்ளுக்கு அனுப்பப்படும் அபராத சம்மனில் அந்த காட்சி இடம் பெறும்.
ஜனவரி முதல் இது வரை போக்குவரத்து விதிமுறை களை மீறியதாக 9 லட்சத்து 16 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.7 கோடியே 74 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சி.சி.டி.வி. மூலம் இது வரை 60 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் மூலம் ரூ.9 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிகளை மீறியதாக 60 மாநகர பஸ்கள் சிக்கியுள்ளன. போக்குவரத்து கழகத்திடம் இருந்து ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபாராத தொகை வசூலிப்பதில் போலீசார் மீது அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இது போன்ற தவறுகள், முறை கேடுகளை தடுக்க “இ.சலானிங்” திட்டம் நடை முறைக்கு வர இருக்கிறது. இன்னும் 3 மாதத்தில் இத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு உலக வங்கி நிதி உதவி அளிக்கிறது.
இதில் பதிவாகும் வாகனங்கள் குறித்த தகவல் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அபராத தொகையை நேரில் செலுத்த தேவையில்லை. வங்கியிலோ, அல்லது கிரெடிட் கார்டு மூலமோ செலுத்தலாம்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக இதுவரை 18 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட சாலை விபத்து இந்த ஆண்டு குறைந்துள்ளது. போக்கு வரத்து விதிமுறைகள் தீவிரமாக நிறைவேற்றப்பட்டதால் கொடுங்காயம் அடைந்தோர் எண்ணிக்கையும் ஆயிரம் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நவீன கேமராக்கள் சாந்தோம் சந்திப்பு, அண்ணா சாலை வெலிங்டன், ஆலிவர் ரோடு, டி.டி.கே. சாலை சந்திப்பு, அண்ணா சாலை செனடாப் சாலை சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு, ஈ.வி.ஆர். சாலை, தாசப்பிரகாஸ் சந்திப்பு, ராயப்பேட்டை பாயிண்ட், ஆரிய மன்றம், டவுட்டன் சந்திப்பு, மூப்பனார் மேம்பாலம், திருமங்கலம், அம்பத்தூர் எஸ்டேட் ரோடு சந்திப்பு, பெரியமேடு லெவல் கிராசிங் சந்திப்பு ஆகிய 12 இடங்களில் பொறுத்தப்பட்டுள்ளது.

சாமியாருக்கு கூன் போடும் குடியரசு தலைவர் – இந்திய நாட்டின் அவள நிலை…

படத்தில் இருப்பது புட்டபருத்தி சாய்பாபா! இந்த சாமியார் ஒரு டுபாகூர் பேர்வலி என்பதை பிபிசி செய்தி நிறுவனம், விடியோ ஆதாரத்துடன் வெளி்யிட்டு இவனின் உண்மை முகத்தை மக்களுக்கு தோலுரித்து காட்டி இருக்க, இந்திய நாட்டின் முதல் குடிமகனாக கருதப்படும் குடியரது தலைவர் இந்த சாமியாருக்கு கூன் போடும் காட்சி நேற்று சாமியாரின் பிறந்த நாளையோட்டி நடைபெற்ற மகளீர் நிகழ்ச்சியில் நிகழ்ந்துள்ளது. இதில் இன்னும் கொடுமையான விசயம் என்வெனில் 23 ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த சாமியாரின் பிறந்தாள் விழாவுக்கு பாரத நாட்டின் பிரதர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறாராம்.

இந்த சாமியார் மக்களை ஏமாற்றுகிறான் என்பதை பிபிசி வீடியோவை பார்க்கும் பாமரனும் புரிந்து கொள்வான் என்றிருக்க பாரத பிரமருக்கும் குடியரசு தலைவருக்கு புரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.

நாட்டின் தலைவர்கள் சாமியார்களிடம் தங்களது அறிவை அடகு வைக்கும் நிலை மாறினால் தான் நாடு முன்னேறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து..

படம்-பாதுஷா,tntj.net

நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டு கடன் திட்டத்தில் குளறுபடி

கடையநல்லூரில் நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டு கடன் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டதால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தமிழக அரசு கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்காக கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுபோல் நகர்ப்புறத்தில் வாழும் சாமானிய மக்களுக்காகவும் மானிய வட்டியுடன் கூடிய வீட்டு கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி காலிமனை வைத்திருப்பவர்கள் மாத வருமானம் ரூ.5 ஆயிரம் வரை இருந்தால் ரூ.1 லட்சமும், 5 ஆயிரத்திற்கும் மேல் இருந்தால் ரூ.1 லட்சத்து 60 ஆயிரமும் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டியில் மானிய மும் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற கடையநல்லூர் நகராட்சியில் 2,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இத்திட்டத்திற்கான பயனாளிகளிடம் இருந்து கலெக்டர் ஜெயராமன் கடந்த மாதம் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண் டார்.
மனுவுடன் வருமான சான்றிதழ், வில்லங்க சான்றி தழ் இணைக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் நலன் கருதி வருவாய்த்துறையினரே ஒவ்வொரு பகுதியிலும் முகாம் அமைத்து வருமான சான்றிதழ் வழங்குவதற்கு கலெக்டர் ஆணை பிறப்பித்தார். இதன்படி கடையநல்லூர் நகராட்சியில் வருமான சான்றிதழ் வழங்குவது குறித்த முகாம் நேற்று முன்தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நக ராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால் மாலை வரை வருவாய் அலுவலர்கள் யாரும் வரவில்லை.
பொறுமையிழந்த பொதுமக்கள் ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட் டது. தகவல் அறிந்ததும் தென்காசி தாசில்தார் விஜயா மற்றும் அலுவலர்கள் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். பயனாளிகள் கிராம நிர்வாக அதிகாரி, வரு வாய் அலுவலரிடம் உரிய சான்று பெற்று தென்காசி தாலுகா அலுவலகத்தில் வரு மான சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
பொதுமக்களின் நலன் கருதி அந்தந்த பகுதிகளிலே முகாம் அமைத்து வருமான சான்றிதழ் வழங்க கலெக்டர் ஆணையிட்ட நிலையில், தாசில்தாரின் புதிய அறிவிப்பு பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இத்திட்டத்தின் கீழ் கடன்பெற காலதாமதம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் நகராட்சி முற்றுகை
பொதுமக்களின் நலன் கருதி அந்தந்த பகுதிகளிலே முகாம் அமைத்து வருமான சான்றிதழ் வழங்க கலெக்டர் ஆணையிட்ட நிலையில், தாசில்தாரின் புதிய அறிவிப்பு பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இத்திட்டத்தின் கீழ் கடன்பெற காலதாமதம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண் விபச்சாரிகள் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம்-போப் 16ம் பெனடிக்ட்

ஆணுறைகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான நிலையைக் கொண்டுள்ள போப் 16ம் பெனடிக்ட், விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.ஆணுறைகளின் பயன்பாட்டுக்கு எதிரான நிலையைக் கொண்டுள்ளது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாட்டிகன். இது ஐ.நா, ஐரோப்பிய நாடுகள், எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரக் குழுக்களின் கண்டனத்தை சம்பாதித்தது.

குறிப்பாக ஆணுறைகளுக்கு எதிரான நிலையை எடுத்துள்ள போப்பாண்டவருக்கு எதிரான விமர்சனங்களும் வலுத்தபடி உள்ளன. ஆணுறைகள் குறித்து போப்பாண்டவர் முன்பு ஒருமுறை கூறுகையில், ஆணுறைகளை கொடுப்பதன் மூலம் எய்ட்ஸையும், எச்ஐவி பரவலையும் தடுத்து நிறுத்தி விட முடியாது. மாறாக ஆணுறைகளால் நிலைமை மோசமாகத்தான் செய்யும் என்றார்.

இந்த நிலையில், திடீரென தற்போது ஆணுறைகளுக்கு ஆதரவான கருத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் போப்பாண்டவர். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண் விபச்சாரிகள் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.

ஜெர்மன் நாட்டு பத்திரிக்கையாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியின்போது இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.

செயற்கைக் கருத்தரித்தல் முறை என்பதால் ஆணுறைகளுக்கு எதிரான நிலையை வாட்டிகன் மேற்கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் பல தார முறை அமலில் இருப்பதாலும், பாதுகாப்பற்ற உடலுறவு அங்கு படு சாதாரணம் என்பதாலும் அங்குதான் உலகிலேயே அதிக அளவில் எய்ட்ஸ் தாக்குதல் உள்ளது.

ஆனால் ஆப்பிரிக்காவில் ஆணுறைகளை கொடுப்பதன் மூலம் எய்ட்ஸைத் தடுத்து விட முடியாது என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து கடந்த ஆண்டு அவர் கூறுகையில், ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் அதிகம் இருக்கிறது என்பதற்காக ஆணுறைகளைக் கொடுத்து அதைத் தடுத்து விட முடியாது. அது சாத்தியமும் அல்ல. ஆணுறைகளைக் கொடுப்பதால் பிரச்சினை தீரும் என்று கூற முடியாது. மாறாக மோசமாகலாம் என்று கூறியிருந்தார் போப்பாண்டவர்.

திருமணமாகாத இளம்பெண்கள் செல்ஃபோன் உபயோகிக்கத் தடை !

 

 

 

 

 

 

 

 

 

முஸஃபர் நகர்: திருமணமாகாத இளம்பெண்கள் காதல் வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைத் தடுக்கும் முகமாக, அவர்கள் செல்ஃபோன் உபயோகிக்க கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ள சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தின் முஸஃபர் நகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸஃபர் நகர் மாவட்டத்திலுள்ள லன்க் என்ற கிராமத்தில் அனைத்து சாதி மற்றும் மத பஞ்சாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து செல்ஃபோனால் இளம்பெண்களுக்கு ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விவாதித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

திருமணமாகாத இளம்பெண்கள் காதல் வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைத் தடுக்கும் முகமாகவே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிராம பஞ்சாயத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர் கூறினார்.

திருமணமாகாத இளம்பெண்களையும், கணவனை இழந்த விதவைப் பெண்களையும், வெளிநாட்டில் பணிபுரியும் கணவன்மார்களின் மனைவிகளையும் குறி வைத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சமூக விரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இது போன்ற பெண்களுக்கு தவறவிட்ட செல்பேசி அழைப்பு (மிஸ்டு கால்) கொடுப்பது, பின்னர் அதன் மூலம் ஏற்படும் தொடர்பை பயன்படுத்தி அவர்களை தங்கள் காம வலையில் சிக்க வைத்து அவர்களது வாழ்வை சீரழிப்பது, அதன் பிறகு அவற்றை வீடியோக்களில், நிழற்படங்களில் பதிவு செய்து அவர்களை மிரட்டி அவர்களது பணம், நகைகளை சூறையாடுவது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன் நண்பர்களுக்கும் அவர்களை இரையாக்குதல், விபச்சார விடுதிகளில் அவர்களை விற்று விடுதல் போன்ற சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுவதை அன்றாடம் செய்திகளில் பார்க்க நேரிடுவது குறிப்பிடத்தக்கது.

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள சகோதர, சகோதரரிகளே மேற்கண்ட தலைப்பை படித்தவுடன் ஒரு நிமிடம் நீங்கள் மிரண்டுவிட்டீர்களா? நீங்கள் மட்டுமல்ல இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொருவனும் இந்த தலைப்பை கண்டு மிரளத்தான் வேண்டும் ஏனெனில் இந்த கேள்வியை கேட்பவன் நானல்ல மாறாக உங்களை படைத்து பரிபாலித்து பக்குவப்படுத்திய இறைவனாகிய அல்லாஹ்! (அல்ஹம்துலில்லாஹ்)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து தனது மனைவியையும் தனது பிள்ளையையும் சுடும் பாலைவன மணலில் தவிக்க விட்டார் பின்னர் அல்லாஹ் விடமிருந்து கட்டளை வந்ததும் மீட்டுவந்தார், அடுத்ததாக  அல்லாஹ்வின் மற்றொரு கட்டளைக்கு அடிபணிந்து தனது அருமை மகனை அறுத்து பலியிட துணிந்தார் இறுதியாக அல்லாஹ்வுடைய கட்டளை வந்ததும் பலி பிராணியை அறுத்து தன் மகனை மீட்டார்! இப்படிப்பட்ட மாநபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கம்தான் இஸ்லாம் அதனை பின்பற்றக் கூடியவர்கள்தான் முஸ்லிம்கள். ஆனால் இந்த மாநபியும் இவருக்கு பின்னால் வந்த அனைத்து நபிமார்களுக்கும்  இறுதியாக வந்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் பின்பற்றும் முஸ்லிம்களாக நாம் இன்று வாழந்து வருகிறோமா? மேலும் படிக்க…

அதிபர் ஒபாமா இஸ்லாத்தை தழுவ ஒபாமாவின் பாட்டி பிராத்தனை

ரியாத் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று தான் பிராத்தித்ததாக  ஹஜ் செய்வதற்காக சவூதி அரேபியா வந்திருக்கும் கென்யாவை சார்ந்த அவரின் பாட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தன்னுடைய ஹஜ் கடமையை முடித்து விட்டு ஜெத்தாவில் அல்-வதான் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பராக் ஒபாமாவின் 80 வயதான பாட்டி ஹாஜா சாரா ஒமர் “ என் பேரன் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று பிராத்தனை செய்தேன்” என்று கூறினார்.

ஹாஜா சாரா ஒமர் தன் மகனும் ஒபாமாவின் மாமாவுமான சயீத் ஹுசைன் ஒபாமா மற்றும் தன் நான்கு பேரக்குழந்தைகளுடனும் சவூதி அரசரின் சிறப்பு விருந்தினர்களாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் அரசியல் குறித்து தான் புனித யாத்திரையின் போது எக்கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார்.

மீண்டும் வெள்ளை மாளிகைக்கு ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவாரா என கேட்டதற்கு எதிர்காலத்தை அறியும் ஆற்றல் தனக்கு இல்லை என்றும் அல்லாஹ் ஒருவனே அதை அறிவான் என்றும் கூறினார். மேலும் நோய் வாய்ப்பட்டுள்ள சவூதி அரசர் விரைவில் குணம் பெற வேண்டும் என்றும் பிராத்தித்ததாகவும் கூறினார்.

சித்தி மனீலா பாடலுக்கு எதிராக ஊடக அமைச்சர் நடவடிக்கை.

காலம் கடந்து ஞானம் பிறந்த நிர்வாக சபையினர்.

இலங்கை விடி வெள்ளி பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை பாத்திமா ஷாஹினா என்ற சகோதரி அனுப்பியிருந்தார்.அதையே நாமும் வெளியிடுகிறோம்.

rasmin misc

விக்கிலீக் – தகவல் கசிவு இல்லை;இது அமெரிக்கா நடத்தும் திட்டமிட்ட நாடகம்:நஜாத்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் அஹமதி நஜாத், இந்தத் தகவல்கள் கசியவில்லை. இவை வெளியிடப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட நாடகம் என்று கூறியுள்ளார்.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாதிடம் பிரஸ் தொலைக்காட்சி விக்கிலீக் மூலம் தகவல்கள் கசிந்தது குறித்து கேட்டபோது, “நான் உங்கள் கூற்றைச் சரி செய்ய விரும்புகிறேன். இந்த ஆவணங்கள் கசியவிடப்படவில்லை. இவை ஒரு ஒழுங்கமைப்பில் வெளியிடப்பட்டுள்ளன” என்று கூறினார்.

இந்த ஆவணங்களை வெளியிட்டதே அமெரிக்க அரசுதான். இதன் மூலம் அவர்களாகவே தீர்ப்பு எழுத விரும்புகின்றனர். இந்த ஆவணங்களுக்கு சட்ட மதிப்பு எதுவும் இல்லை. இந்த ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் அமெரிக்கா விரும்பும் அரசியல் மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் ஈரானிய அதிபர் நஜாத் கூறினார்.

விக்கிலீக்ஸ் கசியவிட்டதாகக் கூறப்படும் இந்த நாடகமே கருத்து சொல்வதற்குத் தகுதியானதல்ல. இதனை ஆராய்வதன் மூலம் தங்களுடைய நேரத்தை விரயம் செய்ய எவரும் விரும்பமாட்டார்கள் என்றும் நஜாத் கூறினார்.

வளைகுடாப் பகுதியில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் மற்ற நாடுகளுடன் நட்பாகவே உள்ளன. இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதன் மூலம் நட்பு நாடுகளிடையே உறவுகள் பாதிக்காது என்றும் அவர் கூறினார்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என்று சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவை வலியுறுத்தியதாக வெளியான தகவலை மறுத்த நஜாத், இது ஈரானை மனோ ரீதியாக தாக்கும் அமெரி்க்காவின் போர் தந்திரமே என்று குறிப்பிட்டார்.

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

”பொம்பள சிரிச்சாப் போச்சு” என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். இது எதைக் குறிக்கின்றது? ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.
ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்தப் பழமொழி தெரிவிக்கின்றது.
ஒரு பெண் ஓர் ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் வாழும் சமுதாய அமைப்பு முறை மேற்கண்டவாறு கோடிட்டுக் காட்டுகின்றது. ஆடவனிடம் பெண்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற நிலைபாட்டை சமுதாயம் அங்கீகரிக்கின்றது. காரணம் இதைச் சமுதாயம் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கின்றது.
இஸ்லாமிய மார்க்கம் இதைத் தான் வ­யுறுத்திக் கூறுகின்றது.  பெண்கள் ஆண்களிடம் குழைந்து, கொஞ்சி, நயந்து பேசினார்கள் என்றால் அது அவர்கள் சபல உணர்வுகளுக்குக் காட்டும் பச்சைக் கொடியாகி விடும் என்று  திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.

dubaitntj.blogspot.com

அலஹாபாத் உயர்நீதி மன்ற நீதிபதிகள் நேர்மையற்றவர்கள்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

மத உரிமைக்கும், சொத்துரிமைக்கும் விரோதமாகவும், உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்த அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் பாபர் மசூதி குறித்த கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு நடுநிலையாளர்களின் கடுமையான கண்டனத்திற்கு ஆளானது. தற்போது, அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகள் குறித்து சுப்ரீம் கோர்ட் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் டிவிஷன் பெஞ்ச், உத்தர பிரதேச மத்திய சன்னி வக்ஃபு வாரியம், ஒரு நிலம் விஷயமாக தொடர்ந்த வழக்கில், கடந்த 26.11.2010 வெள்ளியன்று பரபரப்பான தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பில், அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகள் குறித்து தங்களுக்கு பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன; அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகளுள் பலர் நேர்மையற்றவர்கள்; தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி வருகின்றனர்; இந்திய சட்டத்துறை குறித்த பொதுமக்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்க்கும் வண்ணம் அதிர்ச்சியளிக்கக்கூடிய பல தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று கடுமையாக சாடியுள்ளனர்.

மேலும், அலஹாபாத் உயர்நீதி மன்றத்தை களையெடுத்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது; நீதிபதிகள் குறித்து வரும் புகார்கள், அவர்கள் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது என்று நீதிபதி மார்க்கண்டேய கட்சு மற்றும் நீதிபதி கியான் சுதான் மிஷ்ரா ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி அலஹாபாத் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காவிகள் கடுமையாக ஊடுறுவி உள்ளனர் என்பதற்கு தற்போதைய சுப்ரிம் கோர்ட்டின் தீர்ப்பு சான்றாக அமைகின்றது. மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமர் அங்கு தான் பிறந்தார் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்று, அநியாய தீர்ப்பினை அளித்தது இதே அலஹாபாத் உயர் நீதி மன்றம் தான். அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் இலட்சணம் தற்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

“… ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. … (குர்ஆன் – 5:8) ”

இதே போன்றே, பாபரி மஸ்ஜித் சட்ட விரோத தீர்ப்பை சுப்ரீம் கண்டித்து, தானாகவே முன்வந்து அவ்வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்தி, முஸ்லிம்களுக்கு நீதி வழங்கி, இந்திய இறையாண்மை மீது சாதாரண குடிமக்களின் நம்பிக்கையை மெய்ப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் பேரவா. சுப்ரீம் கோர்ட் செய்யுமா?

ரியாத் ஃபெய்ஸல்
tntj.net

செங்கோட்டை & சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ஏசி பெட்டிகளில் மூட்டைப்பூச்சி, எலித்தொல்லை பயணிகள் ஆர்ப்பாட்டம்

 

 

 

 

 

 

 

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டிகளில் கரப்பான், மூட்டை பூச்சி கள் தொல்லையால் தூக் கம் இழந்த பயணிகள் மதுரை ரயில் நிலையத்தில் இன்று காலை ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை & செங் கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6.15 மணிக்கு மதுரை வந்தது. இதில் உள்ள ஏசி பெட்டிகளில் எலி, கரப்பான், மூட்டை பூச்சிகள் தொல்லைகளால் தூக்கம் இழந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் மதுரை ரயில் நிலையத்தில் திடீரென ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இத னால் அங்கு பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து டிக்கெட் கட்டணத்தை திரும்பத் தர வேண்டுமெனக்கூறி ரகளையில் ஈடுபட்டனர். தகவலறிந்த கூடுதல் கோட்ட ரயில்வே மேலா ளர் வெங்கட சுப்ரமணியன் விரைந்து வந்து பயணி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ரிசர்வேஷன், பொது பெட்டி பயணிகள் ரயில் தாமதமாவதால் தங்களது பணிகள் பாதிக்கப்படுவ தாகக்கூறி வாக்குவாதத் தில் ஈடுபட்டனர்.
ஏசி பெட்டி பயணிகள் கூறிய குறைபாடுகளை சரிசெய்வதாக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித் தனர். இதனையடுத்து அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப் பட்டுச் சென்றது.
இதுகுறித்து ஏசி பெட் டியில் பயணம் செய்தோர் கூறுகையில், சொகுசு பயணத்திற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி ஏசி பெட்டிகளில் ரிசர்வேஷன் செய்கிறோம். பயணத்தின் போது பெட்டிகளுக்குள் எலி, கரப்பான், மூட்டை பூச்சிகள் தொல்லையால் தூக்கம், நிம்மதியை இழந் தோம். மேலும் ஏசியும் சரிவர இயங்கவில்லை. இதுபோன்ற தொல்லை கள் தொடர்ந்தால் ரயில் பயணத்தில் மக்களின் ஆர்வம் குறையத் துவங் கும்’ என்றனர்.

முஸ்லிம்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை மூன்றரை சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று சங்கரன்கோவிலில் நேற்று நடந்த தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கரன்கோவில் காந்திநகர் சமுதாயக் கூடத்தில் நேற்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தார். மாநில மேலாண்மை குழு உறுப்பினர் ஸைபுல்லா ஹாஜா மேற்பார்வையாளராக கலந்து கொண்டார். மாவட்டத் தலைவர் யூசுப் அலி, செயலாளர் செய்யது அலி, பொருளாளர் சாகுல், துணை தலைவர் ஜபருல்லா  முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர தலைவர் அப்துல் ஹக்கீம், நகர செயலாளர் காஜாமைதீன், பொருளாளர் அபுபக்கர் ஆகியோர் உட்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாபர் மசூதி தொடர்பாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணானது என்றும், வரும் ஜனவரி 4ம் தேதி மதுரையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொள்வது என்றும், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின்படி இந்திய அளவில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்றரை சதவீதம் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், தென்காசியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டமும், கடையநல்லூரை தனி தாலுகாவாகவும் அறிவிக்க வேண்டும்,  சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் உள்ள முஸ்லிம் நகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை சீரமைத்து திறக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

30 மாதத்தில் 3,222 பெண்கள் பலி தற்கொலையால் 2,182 பேர் சாவு

Suicide hanging

தமிழகத்தில் கடந்த 30மாதங்களில் 3ஆயிரத்து 222பெண்கள் இறந்துள்ளனர். தற்கொலை மூலம் 2ஆயிரத்து 182 பேரும், வரதட்சணை கொடுமை யால் 197பேரும் பலியாகி உள்ளனர்.

இளம்பெண்கள் மரணம் குறித்து மதுரையை சேர்ந்த எவிடன்ஸ் அமைப்பு 25மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது. கடந்த 2008 ஜனவரி முதல் இவ்வாண்டு ஜூன் வரை தமிழகத்தில் 3ஆயிரத்து 222 இளம் பெண்கள் இறந்தது தெரியவந்துள்ளது. அதில் 68சதவீத பெண்கள், அதாவது 2ஆயிரத்து 182 பெண்கள் தற்கொலை மூலம் உயிரை மாய்த்துள்ளனர்.

பெண்கள் சாவு பட்டியலில் வேலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 378 பெண்கள் இறந்துள்ளனர். விழுப்புரத்தில் 242, மூன்றாவது நெல்லையில் 219, காஞ்சிபுரத்தில் 194, கடலூரில் 184 பெண்கள் இறந்துள்ளனர். மொத்த மரணத்தில் 737 பேரும், தற்கொலை செய்து கொண்டவர்களில் 500 பேரும் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள்.

தற்கொலையில் வேலூர் (241 பேர்), நெல்லை (180), தூத்துக்குடி (136), கடலூர் (128), விழுப்புரம் (122) மாவட்டங்கள் முறையே முதல் 5இடங்களில் உள்ளது. விபத்தில் 621, வரதட்சணை கொடுமை யால் 197 பெண்கள் இறந்துள்ளனர்.

இந்த மரணத்திலும் வேலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சந்தேகம் மற்றும் கொலையால் 179 பெண்களும் இறந்துள்ளனர்.

இறந்தவர்களில் 931 பேர் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 2ஆயிரத்து 291 பெண்கள் 19முதல் 25வயதிற்கு உட்பட்டவர்கள்.எவிடன்ஸ் செயல் இயக்குனர் கதிர் கூறுகை யில், ‘பெண்கள் மீதான வன்முறைகளை விசாரிக்க பெண் டிஎஸ்பிக்களை நியமிக்க வேண்டும்.

வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கவும், வழக்கை அச்சமின்றி எதிர்கொள்ள சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மறுவாழ்வு இல்லங்களை அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தனது பிடதி ஆசிரமத்தில் ஆணுறைகள், மதுவுடன்தான் இருப்பார் நித்தியானந்தா-சாட்சியின் வாக்குமூலம்

பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா தனது பிடதி ஆசிரமத்தில் எப்போதும் ஆணுறைகள், மது வகைகளை வைத்திருப்பார். ஆணுறைகளை அவர் வைத்திருந்ததை நானே எனது கண்ணால் பார்த்துள்ளேன் என்று நித்தியானந்தா வழக்கில் ஒரு சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நித்தியானந்தா வழக்கில் ராம்நகர் கோர்ட்டில் கர்நாடக சிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையுடன் இந்த வாக்குமூலத்தையும் இணைத்துள்ளனர்.

பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பெண் சாட்சிதான் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவரிடம், மோட்சம் அடைவீர்கள் என்று சொல்லி சாமியார் நித்தியானந்தா உடல் ரீதியான உறவுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அந்தப் பெண் கூறுகையில், நான் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அப்போது என்னிடம் ஒரு மதுக் கடையிலிருந்து மது வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார் நித்தியானந்தா.

இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தேன். இருப்பினும் நித்தியானந்தாவின் போதனைகளால் எனது மனம் அந்த அதிர்ச்சியை புறக்கணித்தது. எந்த ஒரு குடும்பப் பெண்ணும் மதுக் கடைக்குச் சென்று மது வாங்க மாட்டார். ஆனால் நித்தியானந்தாவின் போதனையால் பிரெய்ன் வாஷ் செய்யப்பட்டிருந்த நான் ஆசிரமத்திற்கு அருகில் இருந்த மதுக் கடைக்குச் சென்று மது வாங்கி வந்தேன்.

பின்னர் அதை தனது அறைக்குக் கொண்டு வருமாறு கூறினார் நித்தியானந்தா. அங்கு கொண்டு போய்க் கொடுத்ததும் அதை வாங்கி அருந்தினார். என்னால் அந்த மதுவின் நெடியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் நான் வாந்தி எடுத்து விட்டேன். பின்னர் நான் மயங்கி விட்டேன்.

சில மணிநேரம் கழித்து நித்தியானந்தா எழுப்பிய பிறகே நான் கண் விழித்தேன். நான் மயக்கமாக இருந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. நான் படுக்கையில் படுத்திருந்தேன். என்னை அவர் என்ன செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் எனது உடைகள் கலைந்திருந்தன.

பிறகு என்னை டிரஸ் செய்து கொள்ளச் சொல்லி அங்கிருந்து போகுமாறு பணித்தார் நித்தியானந்தா. நான் ஆசிரமத்தில் சேர்ந்தபோது நித்தியானந்தா போட்ட விதிமுறைகளில் ஒன்றாக எனக்குக் கூறப்பட்டவை ஆசிரமத்திற்குள் மது அருந்தக் கூடாது என்பது. ஆனால் என்னையே மது வாங்கச் சொல்லி அனுப்பி வைத்தவர் நித்தியானந்தா.

அதேசமயம், நான் அவருக்கு மது வாங்கி வந்ததையும், அவர் அருந்தியதையும் யாரிடமும் கூறக் கூடாது என்று என்னை எச்சரித்தார் நித்தியானந்தா என்று அந்த பெண் கூறியுள்ளார்.

மது மட்டுமல்லாமல் ஆணுறைகளும் நித்தியானந்தா அறையில் இருந்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார். இவை இரண்டும் நித்தியானந்தா அறையில் எப்போதும் இருக்கும் என்றும் அப்பெண் கூறியுள்ளதாக அந்த வாக்குமூலம் தெரிவிக்கிறது.

thatstamil

தொல்புரம் பொக்கனைப் பகுதியில் பிடிபட்ட 10 தலை நாகம்

இலங்கையின் வன்னி தொல்புரம் பொக்கனைப் பகுதியில் 10 தலை நாகத்தை சிலர் கண்டுள்ளதோடு புகைப்படமும் எடுத்துள்ளனர்….

உங்கள் பார்வைக்கு புகைப்படம்…

kadayanallur.net

மனைவி மீது சந்தேகம்: 1 1/2 வயது குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை

மனைவி மீது சந்தேகப்பட்டு, 1 1/2 வயது குழந்தையின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த அந்தக் குழந்தையின் தந்தை பின்னர் காவல் துறையிடம் சரண் அடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட கம்பி கட்டும் தொழிலாளியான சுந்தரமும் நஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்த மஞ்சு என்பவரும் காதலித்தனர். திருமணத்திற்கு முன்பே இருவரும் உல்லாசமாக இருந்ததன் விளைவாக மஞ்சு கர்ப்பமானார். மஞ்சு 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது ஊர்பெரியவர்கள் பஞ்சாயத்து பேசி இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர்.

இந்நிலையில் திருமணமான சில மாதங்களில் மஞ்சுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மஞ்சுவுடன் சுந்தரம் சேர்ந்து வாழாமல் சுற்றி திரிந்தார். 2 நாட்களுக்கு முன் மாமியார் ஊரான நஞ்சாபுரத்திற்கு சுந்தரம் வந்து தான் திருந்தி விட்டதாகவும், மனைவி குழந்தைகளுடன் வாழ விருப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதை நம்பிய மஞ்சுவின் குடும்பத்தார் அவரை வீட்டில் சேர்த்தனர். அப்போது மனைவி மஞ்சுவிடம் இங்கு வாழ பிடிக்கவில்லை. எனவே இருவரும் வெளிïர் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என கூறினார். மஞ்சு இதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனைவி மேல் ஏற்பட்ட சந்தேகம் கொலை வெறியாக மாறியது. இதனால் தனக்குப் பிறந்த ஆண் குழந்தையை கொல்ல சுந்தரம் முடிவு செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது சுந்தரம் தனது 1 1/2 வயது ஆண் குழந்தையான சந்தோஷ்குமாரை வெளியே தூக்கிச்சென்றார். தூக்கத்தில் மஞ்சு விழித்து பார்த்த போது குழந்தையையும், கணவரையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். உடனே சந்தேகம் அடைந்த மஞ்சு மற்றும் அவளது பெற்றோர் வெளியே சென்று தேடிப்பார்த்தனர்.

சற்று தூரத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் குழந்தை சந்தோஷ்குமார் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். சுந்தரம் குழந்தையை கொடூரமாக கழுத்தை அறுத்து கொன்று விட்டு தலைமறைவாகி விட்டது அறிந்து மஞ்சு அதிர்ச்சியடைந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறைியனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாகி விட்ட சுந்தரத்தை வலைவீசி தேடினார்கள். இந்நிலையில் சுந்தரம் புதன் கிழமையன்று மாரண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கம் முன்னிலையில் காவல்துறையிடம் சரணடைந்தார்.

inneram.com

அமெரிக்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம்: வீடியோ காட்சிகள்!

Iraq checkpoint

பத்திரிகையாளர்கள் பேசிக்கொண்டு தெருவில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள் சின்னஞ்சிறு உருவங்களாய். அவர்களைக் குறிபார்த்து ஹெலிகாப்டர்கள் மேலே பறக்கின்றன. உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இயந்திர இரைச்சல்களோடு குண்டுகள் சீறுகின்றன. உயிருக்காக அங்குமிங்கும் ஓடி செத்து விழுகின்றனர் பத்திரிகையாளர்கள். நம் கண்முன்னால் நடப்பதாய் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் மனித உயிர்களை இரத்தச்சகதியில் வீழ்த்திவிட்டு, நகர்கிறார்கள். காட்சிகள் ஒன்றொன்றாய் தொடர்கின்றன. அதிர்ச்சியும், பதற்றமும் நம் நாடி நரம்புகளிலெல்லாம் துடிக்கிறது.

ஈராக் போரில் அப்பாவி பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் அமெரிக்க இராணுவத்தால் எந்த வறைமுரையுமற்று கொன்று குவிக்கப்பட்டனர் என்று செய்திகள் வந்த் போதெல்லாம் அமெரிக்கா அதனை மறுத்து வந்தது. தந்து நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ரியுட்டர்ஸ் நிறுவனம் அதற்கான ஆதாரங்களைத் திரட்ட எவ்வளவோ முயற்சித்தது. இப்போது விக்கிலீக்ஸ் அந்தக் கொடூரங்களை வீடியோக் காட்சிகளாக்கி உலகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறது.

இந்த அமெரிக்காதான் உலகத்துக்கே ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்கும். சுதந்திரம் குறித்து பெரிமிதம் கொள்ளும். மனித உரிமைகளுக்குத் தன்னை காவலனாய் முன்னிறுத்தும். ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற யுத்தவெறியும், மனித உயிர்களை ஒரு பொருட்டாக மதிக்காத அதன் குரூர மனநிலையும் இதுதான்.

சுமத்ரா நிலநடுக்கமும் சுனாமி, பேரலைகளும் – ஓர் பார்வை

நாம் வாழும் உலகில் அவ்வப்போது புயல், மழை, வெள்ளம், பூகம்பம், எரிமலை வெடிப்புக்கள் என ஏதாவது ஒரு சோதனை நடந்து கொண்டேயிருக்கின்றது.

1923-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்தனர். 1935ல் இந்தியாவின் குவெட்டாவில் 50,000 பேரும், 1939ல் சிலியில்  28,000 பேரும், அதே ஆண்டு துருக்கியில் 33,000 பேரும், 1960ல் மொரோக்காவில் 12,000 பேரும், 1976ல் சீனாவில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேரும், அதே ஆண்டு கவுதமாலாவில் 23,000 பேரும், 1978ல் ஈரானில் 25,000 பேரும், 1985ல் மெக்ஸிகோவில் 9,500 பேரும், 1988ல் ஆர்மீனியாவில் 25,000 பேரும், 1990ல் ஈரானில் 50,000 பேரும், 1993ல் இந்தியாவின் லட்டூரில் 10,000 பேரும், 1995ல் ஜப்பானில் 6,000 பேரும், 1998ல் ஆப்கானிஸ்தான் மற்றும் தாஜிஸ்தானில் 5,000 பேரும், 1999ல் துருக்கில் 17,000 பேரும், 2001ல் குஜராத்தில் 13,000 பேரும், 2003ல் ஈரானில் 41,000 பேரும் பூகம்பத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இவை பேரழிவு ஏற்படுத்திய பூகம்பங்களின் பட்டியல். இவை தவிர அவ்வப்போது சில ஆயிரக்கணக்கில் பலி கொண்ட பூகம்பங்களும் உண்டு.
இந்த நிலநடுக்கங்கள் எல்லாம் உலகை உலுக்கிக் குலுக்கியது. அப்போதெல்லாம் நாம் என்ன நினைத்துக் கொண்டிருந்தோம்? ஈரான் எங்கோ இருக்கின்றது என்று நினைத்து நாம் நம்முடைய பாவங்களில் மூழ்கிக் கொண்டிருந்தோம். அந்தப் பூகம்பத்திற்கும் நமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எண்ணி வீண் விளையாட்டுக்களில், காமக் கூத்துக்களில், களியாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.

dubaitntj.blogspot.com

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் அபினவ் பாரத் இந்து அமைப்பைச் சேர்ந்த தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் சர்மா ஆகியோர் மீது ஹைதராபாத் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்த இருவரும் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் மெக்கா மசூதியில், 2007ம் ஆண்டு மே 18ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்தது. மசூதி வளாகத்திற்குள் வெடித்த இந்த குண்டில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. வழக்கில் அபினவ் பாரத் என்ற வலதுசாரி இந்து தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் சர்மா, குப்தா உள்ளிட்ட 6 பேர் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் சர்மா, குப்தா ஆஜ்மீர் வழக்கில் சிக்கி கைதாகியிருந்தனர். அவர்களை ஹைதராபாத்துக்குக் கொண்டு வந்து விசாரித்த சிபிஐ, பின்னர் இருவரையும் ஹைதராபாத் சிறையில் அடைத்தது. வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்தீப் சாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா என்கிற ராம்ஜி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இன்னொரு குற்றவாளியான சுவாமி அஸ்னிமானந்த் சிபிஐயின் விசாரணை வளையத்தில் உள்ளார். இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷி என்பவர் 2007ம் ஆண்டிலேயே கொல்லப்பட்டு விட்டார்.

இந்த வழக்கில் நேற்று 14வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது சிபிஐ. 80 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் அபினவ் பாரத் அமைப்புதான் இந்த செயலுக்குக் காரணம் என குற்றம்  சாட்டப்பட்டுள்ளது.

thatstamil

பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாத்திற்கு துணை போவதில்லை – விக்கிலீக் வெளியிட்டுள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதரின் கடிதம்

இந்தியாவின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்துக்கு துணை போவதில்லை எனவும், அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கத் தூதரகங்கள் தங்களது தலைமையிடத்துக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய அரசுமுறை ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.

பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் டேவிட் முல்ஃபோர்டு அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமூகத்துடன் கலந்துவிட விரும்புவதால், பயங்கரவாதத் செயல்களுக்கு ஆளெடுப்பது மிகமிகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது.

இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவியை முஸ்லிம் ஒருவர் வகித்தது, அரசியலில் ஈடுபடவும் பொருளாதார வெற்றி பெறவும் முஸ்லிம் சமூகத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது எனவும் முல்ஃபோர்டு குறிப்பிட்டுள்ளார்.

தாய் சாபம் விட்டால் பழிக்குமா?

தாய் சாபமிட்டால் பழிக்கும் என்பதை பின்வரும் செய்திலி­ருந்து விளங்கி கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல் களால் ‘ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) ‘அவருக்கு நான் பதிலüப்பதா? தொழுவதா?’ என்று கூறிக் கொண்டார். (பதிலüக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், ”இறைவா! இவனை விபசாரிகüன் முகங்கüல்  விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!” என்று கூறி விட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு ‘இது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்கüடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, ”குழந்தையே! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அக்குழந்தை, ”(இன்ன) இடையன்” என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், ”தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ”இல்லை, கüமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறிவிட்டார். (மூன்றா மவர்) இஸ்ரவேலர்கüல் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டி ருந்தான். உடனே அவள், ”இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு” என்று துஆ செய்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, ”இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே” என்று கூறியது. பிறகு அவளது மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. லிஇந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்ததுலி பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், ”இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே” என்று கூறினாள். உடனே அக்குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு, ”இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு” என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ”ஏன் இப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டதற்கு அக்குழந்தை, ”வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்கüல் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) ‘நீ திருடிவிட்டாய்;  விபசாரம் செய்து விட்டாய்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்ய வில்லை” என்று பதிலüத்தது.
நூல் புகாரி : 3436

இதே போன்று செய்தி திர்மிதியில் 3370  வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியில்

மூன்று நபர்களின் பிரார்த்தனைகள் உடனே ஏற்றுக் கொள்ளப்படும். அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனை பிரயானியின் துஆ பிள்ளைகளுக்கு எதிராக பெற்றோர்களின் துஆ ஆகிய முன்று நபர்களின் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹீரைரா ர­ அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனாலும் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். என்றாலும் புகாரியில் இடம் பெற்றுள்ள செய்தியின் கருத்துக்கு ஒத்து இருப்பதால் இந்த செய்தி ஹசன் நல்லது என்ற நிலைக்கு வந்துவிடுகிறது.
எனவே பெற்றோர் விடும் சாபம் பிள்ளைகளிடத்தில் இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கு வந்தடையும்.

kadayanalluraqsha.com

நாகூர் தர்காவில் ரஜினி பிறந்த நாள் விழா?

வழிகேட்டிற்குள் வழிகேடு.
 

ஜின்னையும் இம்மனிதனையும் என்னைவணங்குவதற்காகவே தவிர(வேறு எதற்காகவும்) நான்படைக்கவில்லை.  (அல்குர்ஆன் 51 : 56)

வழிகேடுகளின் மொத்த உருவமாக திகழ்பவா்கள் அந்த வழிகேடுகளுக்குள்ளாக மீண்டும்இமீண்டும் வழிகேடுகளை செய்வதை அவதானித்திருப்போம்.
அந்த வகையில் இஸ்லாத்தில் இல்லாத கப்ரு வணக்கத்தை செய்யும் பரேலவி மதத்தினா் தங்களை ஒரு முஸ்லிமைப் போல் காட்டிக் கொள்வதும்இஅவர்களுக்கெதிரான ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு பதில் கொடுக்க முடியாமல் நாங்கள் கப்ருகளை வணங்கவில்லை ஸியாரத் தான் செய்கிறோம் என்று மழுப்பல் பதில்கள் சொல்லிக் கொண்டு அலைவதையும் நாம் தற்காலத்தில் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யைநொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.(இறைவனைப் பற்றி) நீங்கள்(தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.     (அல்குர்ஆன் 21 : 18)
கப்ரு வணக்கத்தை ஸியாரம் என்று வா்ணித்து வழிகேட்டிற்கு நபிவழிச் சாயம் புசுவதையே மேற்கண்ட வசனம் வண்மையாக கண்டிக்கிறது.
ரஜினியின் பிறந்த நாளும்,நாகூர் தர்காவும்.

நபிகள் நாயகம்(ஸல்)அவா்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதையே தடுக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களையும் முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்தக் கப்ரு வணங்கிகள் வழிகேட்டின் உச்ச கட்டமாக வழிகேட்டிற்குள் இன்னொரு வழிகேடாக ரஜ்னி காந்திற்கும் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்கள்.
அண்ணிய பெண்களுடன் வெக்கம்இமானம் ஏதுமின்றி கட்டிப்பிடித்து ஆட்டம் போடும் ஒருவனுக்கு வக்காலத்து வாங்கும் இந்தக் கூட்டம்.
மீலாதுன் நபி விழாவை நாம் எதிர்க்கும் போது கேட்கும் கேள்வி நமது வழிகாட்டி நபிகள் நாயகத்தை புகழ்ந்து பாராட்டி அவா்களின் பிறந்த தினத்தை கொண்டாடினால் தவறா?
செய்யும் வழிகேட்டிட்கும் ஒரு வக்காலத்துக் கேள்வி வேறு.
ஒரு வார்த்தைக்காக நபியவா்கள் நமது வழிகாட்டி என்பதற்காக நபியவா்களை புகழ்ந்து பிறந்த நாள் கொண்டாடுகிறீர்கள்.அப்படியானால் ரஜ்னி காந்த் யார்?
இமய மலையும்,நாகூர் தர்காவும்.

இஸ்லாத்தின் பெயரால் செயல் படும் இந்த யுத கலாச்சார,இந்துத்துவ ஏஜன்டுகளுக்கும் இமய மலைக்கும் உள்ள தொடர்பு இப்போது தெரிகிறதா?
இமய மலையில் இருப்பதாக ரஜ்னிகாந்த் நம்பிக் கொண்டிருக்கும் பாபா என்ற கற்பனை தெய்வத்திற்கும் அவ்லியா என்று நாகூறில் போற்றப் படுபவரும் இரு தரப்பாருக்கும் ஒருவர்தான்.
அவா் வேறு,இவா் வேறு என்பது இந்த வழிகேடர்களுக்குள் இல்லை.
ரஜ்னி காந்தின் பாபாவையும் இவா்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
இவா்களின் நாகூர் தெய்வத்தையும் ரஜ்னி காந்த் ஏற்றுக் கொள்கிறார்.
கிருத்தவா்களை அடியொட்டி அவா்களின் வழியில் செல்லும் இவா்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை?” என்று பதிலலித்தார்கள்.  (புகாரி (3456))
rasminmisc.blogspot.com

பாம்பு கடி: 90 சதவீதத்தினர் பயத்தால் உயிரிழப்பு சுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில் தகவல்!

பாம்பு கடிபட்டவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே, விஷத்தால் உயிரிழக்கின்றனர்; 90 சதவீதம் பேர், பயத்தால் உயிரிழக்கின்றனர், பல கோடி ஆண்டுகளுக்கு முன் பல்லியாக இருந்தவை, பரிணாம வளர்ச்சியில் பாம்புகளாக மாறியுள்ளன. பாம்பின் பழமையான புதைப்படிவம், சகாரா பாலைவனத்தில் உள்ளது. உலகில் 2,700 வகையான பாம்புகள் உள்ளன.

இந்தியாவில் 20 வகையான கடற்பாம்புகள் உட்பட 270 வகையான பாம்புகள் வாழ்கின்றன; இவற்றில், 62 பாம்புகள் மட்டுமே, விஷத்தன்மை கொண்டவை.கட்டு விரியன், நாகப்பாம்பு, கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகியவற்றுக்கு மட்டுமே, மனிதரைக் கொல்லும் அளவுக்கு விஷத்தன்மை உண்டு. இந்தியாவில், ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர், பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர். இவர்களில், 10 சதவீதம் பேர் மட்டுமே, விஷத்தால் இறக்கின்றனர்; 90 சதவீதம் பேர், பயத்தால் சாகின்றனர்.விஷப்பாம்புகள் எல்லாக் கடிகளிலும் விஷத்தை உமிழ்வதில்லை. நாகப்பாம்பை விட, கட்டு விரியனின் விஷம், 15 மடங்கு வீரியமுள்ளது. கட்டு விரியன் கடித்தால், 45 நிமிடங்களில் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகும். கருப்பு உடலில் சீரான இடைவெளியில் இரட்டை வெள்ளைப்பட்டைகள் இருப்பதே, இதன் அடையாளம். கண்ணாடி விரியனின் விஷம், ரத்த அணுக்களை சேதப்படுத்தும்.சுருட்டை விரியன், ஒரே கடியில் 12 மில்லி விஷத்தை உமிழும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகமாகக் காணப்படும் ராஜநாகம், தரையில் வாழும் விஷப்பாம்புகளில் மிக நீளமானது. மொத்தம் 19 அடி வரை இருக்கும்.

இது ஒரு கடியின்போது ஏழு மில்லி விஷத்தை உமிழும். ஒரு மனிதன் இறப்பதற்கு, 0.3 மில்லி விஷமே போதுமானது. இருப்பினும் இது அரிதிலும் அரிதாகவே மனிதரைக் கடிப்பதால், பெரும்பாம்புகள் பட்டியலில் இல்லை.கூர்மையான பார்வை கொண்ட ராஜநாகம், தூரமாக மனிதர்கள் வரும்போதே பார்த்து ஓடிவிடும். எனவே, இதனை “ஜென்டில்மேன் ஸ்நேக்’ என்பார்கள். இரவு அல்லது அதிகாலை நேரங்களில்தான், பாம்புக்கடி ஏற்படுவதால், எந்த வகையான பாம்பு கடித்தது என்று பலருக்கும் தெரிவதில்லை. இதைக்கண்டு பிடிக்க சில அடையாளங்கள் உள்ளன.விஷப்பாம்புகள் கடித்தால் மூச்சுத் திணறல் ஏற்படும்; கண் இமை மூடி விடும்; தூக்கம் வரும்; நாக்கு மரத்துப் போகும். கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் கடித்தால், கடிபட்ட இடத்தில் எரிச்சலும், ஈறுகளில் ரத்தக்கசிவும் ஏற்படும். விஷப்பாம்பு கடித்தால், இரண்டு பற்களின் அச்சு பதிந்திருக்கும்; விஷமற்ற பாம்பு கடித்தால், பிறை வடிவில் பற்கள் பதிந்திருக்கும்.பாம்பு கடித்தவுடன், கடித்த இடத்துக்கு மேலே கட்டுப்போடுவது, காயத்தைக் கீறி ரத்தத்தை உறிஞ்சுவது ஆபத்தானது. ரத்த ஓட்டம் தடைபட்டு, நிலைமை மேலும் சிக்கலாகும். காயத்தைக் கீறுவதால், ரத்தம் அதிகம் வெளியேறியும் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. கடிபட்ட இடத்தை அழுத்தாமலும், அசையாமலும் வைத்து, மிக விரைவாக மருத்துவமனை செல்வதே சிறந்தது; பயப்படுத்தாமல், நம்பிக்கை ஏற்படுத்துவது மிக முக்கியம்.பாம்புகள், உட்செவிகள் மூலமாகவும், அதிர்வுகள் மூலமாகவும் ஒலியை உணர்கின்றன.

மெல்லிய அதிர்வைக் கூட, பாம்புகள் உணர முடியும். ஆண் பாம்பைக் கவர, பெண் பாம்பு வாசனைத் திரவத்தை உமிழும். மனிதர்களால் பெண் பாம்பு கொல்லப்படும்போது, இந்த வாசனை வெளிப் பட்டே அங்கு ஆண் பாம்பு வரும். இதை பழி வாங்க பாம்பு வந்ததாக கதை பரப்புகின்றனர்.பாம்பு பால் குடிக்கும்; கண்ணைக் கொத்தும்; பழி வாங்கும் என்பதெல்லாம் அப்பட்டமான மூட நம்பிக்கை. மரங்களில் வாழும் விஷமற்ற கொம்பேறி மூக்கன் பாம்பு,கடித்தவர் இறந்து விட்டாரா என்று சுடுகாட்டில் வந்து பார்க்கும் என்பதும் மூடநம்பிக்கையே.

kadayanalluraqsha.com

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களும், முஸ்லீம்களின் நிலையும்.

Candlelight serviceவேதமுடையோரே! ஊங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே! ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. ஆல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

(அல்குர்ஆன் 4:171)
கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை கடவுளாகவும், கடவுளின் மகனாகவும், பரிசுத்த ஆவியாகவும் வணங்கி வருகிறார்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை ஈஸா (அலை) பிறந்த தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த கிறிஸ்மஸ் பண்டிகையின் வரலாறை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கூட தெரியாது இருக்கிறார்கள்.
கிறிஸ்மஸ் பண்டிகையின் வரலாறு

மேலும் படிக்க…

துரோகம் செய்தவர்கள்!

தலித் மக்களை விட மோசமான நிலையிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் தூக்கி நிறுத்த வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு.

தினமலர்.

சவூதி சிமெண்ட் நிறுவனத்திற்கு பொறியாளர்கள், டெக்னிஷியன்கள் தேவை

(Free Recruitment)

மும்பை : சவூதி சிமெண்ட் நிறுவனத்திற்கு கீழ்கண்ட பொறியாளர்கள், டெக்னிஷியன்கள் தேவைப்படுகின்றனர். நேர்முக தேர்வு         ஹைதராபாத்தில் ஜனவரி 1,2 அன்றும் மும்பையில் ஜனவரி 6,7 அன்றும் நடைபெற உள்ளது. தகுதி உள்ளவர்கள் 022 66665308 / 66665367 எனும் எண்ணுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிபடுத்தி கொண்டு செல்லவும்.  தகுதி உள்ளவர்கள் நேரிடையாகவும் செல்லலாம். ஆனால் அப்படி செல்பவர்களுக்கு பயணப்படி கிடைக்காது.

Interviews Details are as follows:

HYDERBAD

Date of Interview Position
1st Jan 2011 &  2nd Jan 2011 Chief Engineer, Mechanical
Draftsman, Mechanical
Engineer, Mechanical
Foreman, Mechanical
Foreman, Mechanical (Workshop)
Fitter
Rigger
Electronics Technician
Engineer, Electronics
Electrician
Engineer, Electrical
Engineer, WMRD
Foreman, Quarry Operations
H.E. Mechanic
Technical Executive
Venue: C/O GGheewala HR Consultnats 

2nd Floor, Hira Mansion,

Opp. Paigah Plaza

Basheerbagh,

Hyderabad – 500 063

MUMBAI

Date of Interview Position
6th Jan 2011 &  7th Jan 2011 Chief Engineer, Mechanical
Draftsman, Mechanical
Engineer, Mechanical
Foreman, Mechanical
Foreman, Mechanical (Workshop)
Fitter
Rigger
Electronics Technician
Engineer, Electronics
Electrician
Engineer, Electrical
Engineer, WMRD
Foreman, Quarry Operations
H.E. Mechanic
Technical Executive
Venue: GGheewala HR Consultants 

202 A, Bombay Market, Tardeo Road,

Mumbai – 34

Tel: 022 66665335/ 66665367

PLEASE CALL AND REGISTER YOUR NAME FOR THE INTERVIEW. TEL. NO: 022 66665308 / 66665367

Dress Code: Official (Formal Shirt & Trousers, Formal Shoes)

Your CV should be exactly matching the job description mentioned on our website http://www.ggheewala.com/saudicement.asp . Your CV will be subject to prior screening by the SCC delegates and will be considered for the interview only if found suitable by them. The decision of the SCC delegates will be considered as final.

If you find your CV suitable for the position as per the Requirement of the company then you are requested to come directly as a Walk-in candidate at the Venue.

You are required to carry the following documents for the interview, in 3 sets.

  • Detailed, updated résumé.
  • Original / Copy of Educational Certificates.
  • Original / Copy of Work experience certificates.
  • Original / Copy of the relevant Training Courses Certificates.
  • Original / Copy of Passport, valid for the next 12 months, and ECNR Status. Saudi visa, if present, should not be valid.
  • 20 Photographs; White background; 4×6 cm.

Travel reimbursement will not be provided to walk-in candidates

inneram.com

இஸ்லாமிய பங்கு வர்த்தகம் – மும்பையில் அறிமுகம்

 

 

 

 

 

 

 

 

 

 

மும்பை: மும்பை பங்கு சந்தையில் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வசதியை தக்வா அட்வைசரி & சரீஅத் சொலுசன்ஸ் என்ற அமைப்புடன் இனைந்து மும்பை பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் இஸ்லாமிய நிதி கொள்கைகளை பின்பற்ற கூடியவையாக இருக்கும். இதில் தற்போது டாடா கன்ஷல்டன்ஸி சர்வீஸஸ், பாரதி டெல், ரிலையன்ஸ், மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் இனணைந்துள்ளன. இஸ்லாமிய பங்கு வர்த்தகத்தில் இணையும் நிறுவனங்கள், தக்வா அட்வைசரி நிறுவனத்தின் கடுமையான பரிசீலனைக்கு பிறகே வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இதில் இனைய விரும்பும் நிறுவனங்கள், மது, சூதாட்டம், வட்டி  போன்ற வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

இந்த பங்கு வர்த்தகத்தில் மத ரீதியான எந்த வித தடங்கலும் இல்லை. யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். ஆரம்பித்த நாள் முதல் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து இருப்பதாக மும்பை பங்கு சந்தை தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு, இந்தியாவில் முஸ்லிம்களி நிலை குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி, முஸ்லிம்கள் முதலீட்டு விவகாரங்களில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று கூறியிருந்தது.

inneram.com

நர பலி மோடியைச் சந்திக்க மறுத்த நோபல் விஞ்ஞானி!

 

 

 

 

 

 

 

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தன்னுடைய குஜராத் சுற்றுப் பயணத்தின் போது குஜராத் முதல்வர் நர பலி மோடியைச் சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தான் கல்வி பயின்ற குஜராத் மாநிலம் பரோடாவிற்கு இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக வந்துள்ளார். அவரைச் சந்திப்பதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முயன்றுள்ளார். காந்திநகர் அல்லது பரோடாவில் குறைந்தது 30 நிமிடம் இச்சந்திப்பிற்கு நேரம் ஒதுக்குமாறு மோடி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ராமகிருஷ்ணன் ஏற்காமல் மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் காரணமாக உலகம் முழுவதும் அவப்பெயரைப் பெற்றுள்ள மோடியைச் சந்திக்க விருப்பமில்லை என்று விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

காலம் எனும் ஆயுதம்!

காலச் சக்கரத்தை சுழலச் செய்யும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்…
‘இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன்படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப்பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் (16:12)
புத்தாண்டு பிறக்கப் போகிறது. பல சாதனைகளை (?) செய்து புத்தாண்டை அடையப்போகும் மகிழ்ச்சியில் தட-புடல் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் இனி நடைபெறும். புது வருடத்தை அடைந்ததற்காக பூரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வண்ணமாக பல கருத்துள்ள(?) எஸ்.எம்.எஸ்-கள், ஈ-மெயில்கள் பரிமாறப்படும். தொலைபேசி வாயிலாகவும் கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் வாயிலாகவும் அன்பு(?) வெளிப்படுத்தப்படும்.மேலும் படிக்க..

செக்ஸ் சாமியார் நித்தியானந்தாவுக்கு 30 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்-லெனின்

செக்ஸ் சாமியார் நித்யானந்தா சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் ஆபாசமாக இருந்த வீடியோவை வெளியிட்ட நித்தியானந்தாவின் உதவியாளர், அந்த வீடியோவை தான் படம் பிடிக்கவில்லை என்று மறுத்துள்ளார்.

இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை ரஞ்சிதா, கடந்த 2 நாட்களுக்குமுன்பு பெங்களூரு நீதிமன்றத்தில் ஆபாச வீடியோவை வெளியிட்ட லெனின் மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.

நித்யானந்தாவுடன் வீடியோவில் ஆபாசமாக இருப்பது நானில்லை. லெனின் என்னை வன்புணர முயன்றார். நான் அதற்கு ஒத்துழைக்காததால் கிராபிக்ஸ் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார் என்றும் நடிகை ரஞ்சிதா கூறினார். இதனிடையே கடலூரைச் சார்ந்த சுப்ரியானந்தா என்ற நித்யானந்தாவின் பெண் சீடர் ஒருவரும் லெனின், தன்னை கற்பழிக்க முயன்றதாக புகார் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தாவின் நெருக்குதல்களால் தன்மீது தொடர்ந்து பொய்க்குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது குறித்து கருத்து சொன்ன லெனின் கருப்பன், “நித்யானந்தா மீதான வழக்குகள் வலுவாக உள்ளன.விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டால் அவருக்கு 30 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்பதால் என்மீது பொய் அடுத்தடுத்து புகார் கொடுத்துள்ளனர்.

நித்யானந்தாவின் படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்த என்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் கூறியிருந்தனர். இது தொடர்பாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உண்மையில் அந்த வீடியோவை நானே எடுக்க வில்லை. எனக்கு கிடைத்த வீடியோ காட்சியை மட்டுமெ வெளியிட்டேன். அவ்வளவுதான்’’என்று தெரிவித்துள்ளார்.

முடிசாயும் கொடிசாயாது…

01.08.05 அன்று சவூதி மன்னர் ஃபஹத் மரணம் அடைந்தார். அவர் இறந்ததும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இப்படி உலகச் சந்தையை உலுக்கி எடுத்த அந்த சவூதி மன்னரின் மரணத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்தனர்.
உலகெங்கிலும் உள்ள நாட்டுத் தலைவர்கள் இறந்ததும் அரசாங்க விடுமுறை, அரைக் கம்பத்தில் கொடியைப் பறக்க விடுதல், அரசு மரியாதையுடன் கூடிய அடக்கம் போன்ற வழமைகள் எதுவுமின்றி சாதாரணமாக பொது மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றதைப் பார்த்து உலக மக்கள் ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் உறைந்து போயினர். அவர்களுக்கு இந்த மரணம் ஏதோ ஒரு செய்தியை உரைத்தது, உணர்த்தியது.
அது உணர்த்திய செய்தி என்ன என்பதை 03.08.05 அன்று வெளியான இந்து நாளேடு தெளிவாகவே போட்டு உடைத்தது. சவூதி அரசாங்கம் பின்பற்றுகின்ற வஹ்ஹாபியிஸம் தான் இதற்குக் காரணம் என்று விளக்கம் தெரிவித்திருந்தது.
வஹ்ஹாபியிஸம் என்ற தனிக் கொள்கை ஏதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை அதன் தூய வடிவில் நிலை பெறச் செய்தவர் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள். அதன் பின்னர் தூய இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு வஹ்ஹாபியிஸம் என்ற பெயர் வழங்கப்படுகின்றது. எனவே தூய இஸ்லாமிய அடிப்படையில் நடைபெற்ற சவூதி மன்னரின் அடக்கம் உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்தது.மேலும் படிக்க..

காங்கிரஸின் கரசேவை! பறிக்கப்படும் பள்ளிவாசல் – நடந்தது என்ன?

http://nallurpeer.files.wordpress.com/2011/01/masjid.jpg?w=300

கடந்த ஜனவரி 12 ஆம் தேதி டெல்லி வளர்ச்சி ஆணையத்தினரால் இடித்து நீக்கப்பட்ட நூர் பள்ளிவாசல் இடம் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான கெஸட் ஆதாரம் வெளியாகியுள்ளது. அதே நேரம் இப்பள்ளிவாசலின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ள வால்மீகி கோவில் அரசு நிலத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டது எனவும் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை நீக்கம் செய்வதற்காக நடவடிக்கை துவங்கிய டெல்லி வளர்ச்சி ஆணையம் இக்கோயில் நிலத்தைக் கோயிலுக்காக விட்டுக்கொடுத்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பள்ளிவாசல் எனக்கூறி, டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்து நீக்கம் செய்த நூர் பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்த 350 சதுரமீட்டர் நிலம், முஸ்லிம்களுக்கென வக்ஃப் செய்யப்பட்டு வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான 1975 ஆம் ஆண்டு கெஸட் ஆதாரம் வெளியாகியுள்ளது. 1947-48 ஆம் ஆண்டின் ஜமாபந்தி(நிலத்தின் உரிமையாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பு)யில் இவ்விவரம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இப்பள்ளிவாசலை இடித்து நீக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க..

எக்ஸிமா, ஆஸ்த்மா, அலர்ஜி நோய்கள் ஏன் அதிகரிக்கின்றன

தடிமன், சளி, தொடர்ச்சியான இருமல் என பலர் இந்த மார்கழி, தை மாதத்தில் மருந்திற்கு வந்திருந்தனர். பனிக்குளிர் நேரத்தில் இது வழமையானதுதான். ஆயினும் ஒரு காலமும் ஆஸ்த்மா நோய் வராத சிலருக்கு ஆஸ்த்மா இருப்பதாகக் கூறியவுடன், நான் சொல்வது சரிதானா என்ற சந்தேகம் அவர்களிடம் எழுந்ததை உணர முடிந்தது.
ஒவ்வாமை நோய்கள்
ஆஸ்த்மா மாத்திரமின்றி அதனுடன் தொடர்புடைய பிரச்சனையான அலர்ஜி (Allergy) எனப்படும் ஒவ்வாமையும் உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

நூற்றுக்கு 50 பேர் ஒவ்வாமை ஏற்படுவதற்கு பதமாக இருக்கிறார்கள் எனச் சில ஆய்வுகள் கூகின்றன. இவை காரணமாக பலரும் ஏடொபிக் (Atopic) நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

சளி, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுகடி, ஆஸ்த்மா, எக்ஸிமா போன்ற பலவும் இத்தகைய ஏடொபிக் மனிதர்களுக்கே வருகிறது.

அதாவது அவர்கள் அத்தகைய நோய்கள் வருவதற்கு பதமாக இருக்கிறார்கள். இதைத்தான் எமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் ‘கிரந்தி உடம்பு’ என்று குறிப்பிடுகிறார்கள் என எண்ணுகிறேன்.

சுகாதாரமான சூழல் கோட்பாடு

அது சரி, இத்தகைய நோய்கள் இப்பொழுது அதிகரிப்பதற்குக் காரணம் என்ன?

(விளக்கப் படத்தை தெளிவாகப் பார்க்க அதன் மேல் கிளிக் பண்ணுங்கள்)

கிருமிகள் அற்ற  சுகாதாரமான சூழல்தான் (hygiene Hypothesis) காரணம் என்ற கோட்பாட்டை பல மருத்துவ ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள்.

முன்னைய காலங்கள் போல இப்பொழுது மனித இனம் தொற்று நோய்களுக்கு ஆளாவதில்லை.
மண்ணிலும் புழுதியிலும், அழுக்கிலும் இன்றைய குழந்தைகள் உழல்வதில்லை.

அவர்களது உணவு, சுற்றாடல் யாவும் சுத்தமாக சுகாதாரமாக இருப்பதால் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன.

இது நல்லதுதானே என்று கேட்கிறீர்களா?

இல்லை!

கிருமித் தொற்று ஏற்படும்போது எமது உடல் அதற்கு எதிராகப் போராடுகிறது. அதனால் உடலின் நோயெதிர்புச் சக்தி வளர்கிறது.

ஆனால் தொற்றுநோய்கள் குறைந்த தற்காலச் சூழலில் குறைந்தளவு நோயெதிர்புச் சக்தியே (Reduced Immune Stimulation) அவர்களில் ஏற்படுகிறது.

நோயெதிர்புச் சக்தி குறைந்ததாலேயே ஏடொபிக் (Atopic)  நோய்கள் அதிகமாகிவிட்டது என்கிறார்கள்.

ஆனால் மேற்கூறிய கோட்பாட்டை மட்டுமே அதிகரிக்கும் ஆஸ்த்மாவிற்குக் காரணமாகக் கூறமுடியாது. வேறு விடயங்களும் இருக்க வேண்டும்.

வைரஸ் தொற்று நோய் (Human Immunovirus Infections)

தற்காலத்தில் உலகெங்கும் அதிகமாகத் தொற்றும் கிருமியாக ஹியுமன் ரைனோ வைரசைக் (Human Immunovirus Infections) கூறுகிறார்கள்.
இதுவே தடிமனுக்குக் காரணமான வைரஸ் ஆகும். இதனை அழிக்கும் வைரஸ் கொல்லி மருந்துகள் கிடையாது.

தணிந்திருக்கும் ஆஸ்த்மா நோய் திடீரெனத் தீவிரமடைவதற்கு வைரஸ் தொற்று நோய்கள் காரணம் என்பது தெரிந்த விடயமே.

அத்துடன் சிறுவயதில் ரைனோ வைரஸ் தொற்றினால் மூச்சிழுப்பதில் சிரமம் ஏற்படும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பும் அதிகம் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.

இந்த ரைனோ வைரஸ் தொற்றானது சாதாரணமானவர்களிலும் ஏடொபிக் மனிதர்களிலும் வெவ்வேறு விதங்களில் செயற்படுகிறது.

ஏடொபிக் மனிதர்களில் ரைனோ வைரஸ் தொற்றினால் சுவாசத் தொகுதியின் கலங்கள் அழற்சியடைந்து, சேதமாவதுடன் சுவாசக் குழாய்களும் இறுக்கமடைகின்றன.

இதனால் அவர்களுக்கு வரும் ஆஸ்த்மா சற்று தீவிரமாக இருப்பதுடன் சிகிச்சைகள் பலனளிப்பதும் தாமதமாகிறது.

மார்கழி, தை ஆகியன குளிர் அதிகமான மாதங்கள். அத்துடன் சுற்றுச் சுழல் பாதிப்படைந்து பூமி வெப்பம் அடைவதால் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் அதிகமாக உருகுவதால் இவ்வருடம் வழமையை விடக் குளிர் அதிகம் என்கிறார்கள்.

ஹியுமன் ரைனோ வைரசையால் தடிமன் தொற்றும் அதிகமாயிருந்தது. இதுதான் இவ்வருடம் சளிசம்பந்தமான நோய்கள் அதிகரித்ததற்கும் பலருக்கும் ஆஸ்த்மா இழுப்பு வந்ததற்கும் காரணமாக இருக்கலாம். அதைத் தடுக்க இன்ஹேலர்களை உபயோகிக்கவும் நேர்ந்திருக்கலாம்.

இத்தகவல்கள் நோயாளிகளான உங்களை நீங்களே பாதுகாக்க எந்தவிதத்தில் உதவும் என்று புரியவில்லை.

ஆயினும் எதிர்கால மருத்துவ ஆய்வுகள் அத்தகைய வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்தவும், அதை மீறித் தொற்றினால் அதைக் குணப்படுத்தவும் புதிய சிகிச்சைகளைக் கொண்டு ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்கவும் ஆவன செய்யும் என நம்பலாம்.

நன்றி -டாக்டர்.எம்.கே.முருகானந்தன்.

ஒபாமாவிற்கு விலைவுயர்ந்த பரிசுகளை தந்தவர் சவுதி மன்னர்

http://odagam.com/wp-content/uploads/2011/01/Obama-and-abdullah.jpg

அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்ற பிறகு வெள்ளை மாளிகையின் முதல் ஒரு வருடத்தில் அவருக்கு அதிக மதிப்புள்ள பரிசுகளை வழங்கியவர் சவுதி மன்னர் என்று அமெரிக்க அரசு செய்தி வெளியிட்டு உள்ளது. சவுதி மன்னர் அப்துல்லாஹ் 2009 ஆம் ஆண்டில் மட்டும் ஒபாமா குடும்பத்திற்கு 190,000 டாலர்கள் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கொடுத்து உள்ளார். இதன் இந்திய மதிப்பு 86 லட்சம் ரூபாய். இதில் ஒபாமாவின் மனைவிக்கு கொம்பு, வைர நகைகள், காதணி, மோதிரம், காப்பு  மற்றும் கழுத்து மாலை என அவருக்கு மட்டும் அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொடுத்து உள்ளார். ஆனால் இது போன்ற நகைகள் அவர் அணியும் பழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர் அப்துல்லாஹ்வை அடுத்து அவருக்கு அதிக மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கியவர் என்ற இரண்டாவது இடத்தில் இருப்பவர் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுச்கோம் (Silvia Berluscom). இவர் பதினைந்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்து இருக்கிறார் என்றாலும் அதில் ஒரு லட்சத்திற்கு விதவிதமான collar tie(சவடி இழுவைமரம்) கொடுத்து இருக்கிறார்.

சீனா அதிபர் ஹு ஜின்டோ (Hu Jintao) பத்து லட்சம் மதிப்புள்ள பட்டு பூத்தையல்(silk embroidery) பரிசளித்துள்ளாராம். மேலும் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கொழி (Nicolas Sarkozy) இரண்டு லட்சம் மதிப்புள்ள கிறிஸ்டியன் டியோர் (Christian Dior) கம்பெனி பரிமளப் பை(Perfume) ஒன்றை வழங்கியுள்ளார்.

பிரிட்டிஷ் அதிபர் கோர்டன் ப்ரௌன் (Gordon Brown) பேனா, பேனா ஸ்டாண்ட் மற்றும் வின்ஸ்டன் சர்சில் பற்றிய சுயசரிதை என இவர் வழங்கியுள்ள பரிசுகளின் மதிப்பு எழரை லட்சம் இருக்குமாம்.

இஸ்ரேலிய அதிபர் சைமன் பெரேஸ்(Shimon Peres) ஒரு பெண் புறாவை பறக்க விடுவது போன்ற ஒரு வெண்கலச் சிலை ஒன்றை பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு  மூன்றரை லட்சம்.

ரோமன் கதோலிக மார்க்கத்தாரின் பிரதான குருவான போப் மூன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்கள் மற்றும் புத்தகங்களை கொடுத்துள்ளார்.

பிரிட்டனின் எலிசபெத் ராணி (Elizabeth Rani) தன்னுடைய ஓவியம் ஒன்றை பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு நாப்பதாயிரம்.

பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் (Mahmoud Abbas)இருபத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கியுள்ளார், அதில் நாலாயிரம் மதிப்புள்ள ஒலிவ் எண்ணெய்களும் அடங்கும்.

odagam.com

தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி!!!

http://nallurpeer.files.wordpress.com/2011/01/ms05.jpg?w=468

நாம் வளர்த்த இயக்கம் சமுதாய, அரசியல் ரீதியான பிரச்சனைகளில் தலையிடாமல் தூரப் போனது.
வெளிவந்தவுடன் சமுதாய, அரசியல் ரீதியிலான பிரச்சனைகளையும் நாம் கையில் எடுத்தாக வேண்டும் என்ற நம்முடைய வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்கானது. பற்பல ஊர்களில் பற்பல அமர்வுகள்!

சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுப்பது காலத்தின் கட்டாயம், ஒட்டுமொத்த தமிழகத்தில் அரசியல் ரீதியிலான பிரச்சனைகளில் முஸ்லிம்களுக்கு ஒரு வெற்றிடம் உள்ளது; அதை நம்மைத் தவிர வேறு யாரும் நிரப்ப முடியாது என்று விளக்கி, அதற்குக் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இன்னின்ன ஆதாரங்கள் என்று சமர்ப்பணம் செய்தோம்.மேலும் படிக்க..

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்த் கைது!

ஹைதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பு மற்றும் சம்ஜெளதா விரைவு ரயில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஒப்புதல் வாக்கு மூலமும் அளித்துள்ள சுவாமி அசீமானந்த் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சுவாமி அசீமானந்த் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அஜ்மீர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஏற்கனகே கைது செய்யப்பட்டு தேசிய உளவு நிறுனத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சுவாமி அசீமானந்தை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புக் காவல் படையினர் தங்களது பாதுகாப்பில் எடுத்து அஜ்மீர் நீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று முன்னிலைப்படுத்தினர்அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரித்து மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாஜிஸ்ட்ரேட்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தீவிரவாதத் தடுப்புப் படையினர் சுவாமி அசீமானந்தை தங்கள் காவலில் விசாரணைக்குக் கொண்டு சென்றனர். திங்கள் கிழமை மாலை மீண்டும் அவர் அஜ்மீர் மாஜிஸ்ட்ரேட் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்.

ஹைதரபாத் மக்கா மசூதி, மாலேகான் குண்டு வெடிப்பு மற்றும் சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள அசீமானந்த், ஹைதராபாத் குண்டு வெடிப்பில் தவறாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்து முஸ்லிம் கைதி ஒருவரின் நன்னடத்தையைத் தொடர்ந்து, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

தர்மத்தை வலியுறுத்த உலக பணக்காரர்கள் இந்தியா வருகை!

உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவரான பில்கேட்ஸும் மூன்றாவது இடத்தில் உள்ள பங்குச் சந்தை வர்த்தக மன்னரான பப்பெட் ஆகியோர், இந்திய பணக்காரர்களிடம் தர்மத்தை வலியுறுத்தி சமூக சேவையை ஊக்கப்படுத்துவது குறித்து விவாதிக்க இந்தியா வருகை தர உள்ளனர்.
உலகப் பணக்காரர்களில் ஒருவரும், சமூக சேவைகளில் சிறந்து விளங்குபவருமான பில் கேட்ஸ், தனது சேவையை சீனா மற்றும் இந்தியாவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, “நான், எனது மனைவி மெலிண்டா, மற்றும் பங்குச் சந்தை வர்த்தக மன்னரான பப்பெட் மூவரும் இந்த வருடம் இந்தியா சென்று, அங்குள்ள பணக்காரர்களிடம் சமூக சேவை செய்வதை ஊக்கப்படுத்துவது பற்றி விவாதிக்க உள்ளோம். இந்த விவாதக் கூட்டம் கடந்த வருடம் சீனாவில் நடந்ததைப் போன்று இருக்கும்.

பப்பெட்ஸும் நானும் அமெரிக்காவைச் சேர்ந்த பில்லியனர்கள் பலரை தங்களது செல்வத்தில் பாதியை தங்கள் வாழ்நாளுக்குள் அல்லது தங்கள் இறப்பின் போது சமூக சேவைக்குத் தர வற்புறுத்தி வருகின்றோம். Giving Pledge  எனப்படும் இந்த ஒப்பந்தத்திற்கு 57 பெரும் பணக்காரர்கள் கையெழுத்திட்டு உள்ளனர். சீனாவில் நடந்த கூட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததைப் போலவே இந்தியாவிலும் இருக்குமென எதிர்பார்க்கிறோம்.

சீனாவின் பணக்காரர்களுக்கு, அவர்கள் வழியில் சமூக சேவை செய்தாலும் எங்களின் முறையைப் பற்றி அறிந்து கொள்ளும் தாகம் அதிகமாக இருந்தது. பணக்காரர்களிடம் தனது செல்வத்தை மற்றவருக்குக் கொடுக்கும் எண்ணம் வளர சிறிது காலம் பிடிக்கும். Giving Pledge போன்ற திட்டங்கள் மூலம் உலகளவில் மனித இனத்திற்குச் சேவை செய்யும் தன்மையை அதிகரிக்க முடியும்.

அமெரிக்காவில் இத்திட்டத்தை செயல்படுத்த அதிக காலம் ஆனது. மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தங்கள் செல்வத்தை மற்றவருக்குக் கொடுக்க முன்வருகின்றனர்” என்று கூறினார்.

உலக பெரும் பணக்காரர்களில் பில் கேட்ஸ் $53 பில்லியன் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும் பப்பட் $47 பில்லியன் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தற்போது $34 பில்லியன் மதிப்புள்ள கேட்ஸ் பவுண்டேஷன் என்னும் சமூக சேவை நிறுவனத்தை நடத்துகிறார். இந்நிறுவனம் வளரும் நாடுகளின் ஆரோக்கியம் சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

inneram.com

பாபர் மசூதி தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு:

சென்னை, ஜன. 27,

பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது தலைமை தாங்கினார்.

நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு சட்டத்துக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.

எனவே உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு தானாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். மாநில துணைத் தலைவர் ரகமத்துல்லா உள்பட ஏராளமான பிரமுகர்களும் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பஸ்லிவேன்களில் வந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் ஐகோர்ட்டை நோக்கி முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்தை திருப்பி விட்டனர்.

27-1-2010 மாலை மலர்

ஹஜ் மானியம் சட்ட விரோதம் அல்ல – உச்ச நீதி மன்றம் தீர்ப்பு!

ஹஜ் யாத்திரிகர்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை எதிர்த்து நாடாளுமன்ற பாஜக முன்னாள் உறுப்பினர் தொடர்ந்த வழக்கில், “அரசு ஹஜ் மானியம் வழங்குவது சட்ட விரோதமல்ல” எனக்கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பா.ஜ.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபுல் கொராடியா என்பவர், ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிக்கப்படுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவில், “மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, அரசின் வரிப் பணம் பயன்படுத்தப்படுவது, அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறும் செயல். எனவே ஹஜ்ஜுக்காக அரசு வழங்கும் மானியத்தை ரத்து செய்து உத்தரவிடவேண்டும்” என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.

இருபக்க வாதப்பிரதிவாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “புனித யாத்திரை செல்பவர்களுக்காக, சிறிய தொகையிலான அரசுப் பணம் பயன்படுத்தப்படுவது, சட்ட விரோதமாகாது. சட்டத்தைப் பொறுத்தவரை, வருமான வரி மூலம் வசூலிக்கப்பட்ட ஒட்டு மொத்த தொகையில் கணிசமான பகுதியையோ, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்ட மற்ற வரிகள் மூலம் வசூலிக்கப்படும் ஒட்டு மொத்த தொகையில், கணிசமான பகுதியையோ, மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக செலவிட்டால் தான், அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறியதாகக் கருத முடியும். ஒட்டு மொத்த வருமான வரி வசூலில், 25 சதவீதத்தை குறிப்பிட்ட மதத்தினரை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தினால், அதுவும் விதிமுறைகளை மீறியதாகக் கூறலாம்.

ஆனால், சிறிய அளவிலான தொகையை இதற்காக செலவிடுவதைச் சட்ட விரோதமாகக் கருத முடியாது. பாகிஸ்தானில் உள்ள கோவில்கள் மற்றும் குருத்வாராக்களுக்குச் செல்வதற்காக, இந்து மற்றும் சீக்கிய மதத்தினருக்கும், சில மாநில அரசுகள் சார்பில் வசதிகள் செய்து தரப்படுகின்றன. இவையெல்லாம், அரசின் ஒட்டு மொத்த வரி வசூல் தொகையை ஒப்பிடும் போது, மிகவும் சிறிய தொகையே” என தீர்ப்பளித்து, பிரபுல் கொராடியா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

சங்பரிவாரும் தேசீயச் சின்னங்களும்

காஷ்மீரிலுள்ள மசூதி ஒன்றின்மீது பலவந்தமாக கொடிகட்டும் பாஜக, விஹெச்பி தொண்டர்கள்

உள்ளத்தை இந்தியாவுக்கு இணக்கமாகத் திருப்ப வேண்டிய நேரத்தில், குறுகிய அரசியல் லாபங்களுக்காக பீ ஜே பீ  காஷ்மீரில் கொடியேற்றும் நாடகத்தை நடத்த முயன்றது. பீ ஜே பீ இந்தியாவை ஆண்ட காலத்தில் காஷ்மீரும் இருந்தது; குடியரசு மற்றும் விடுதலைநாள் கொண்டாட்டங்களும் வந்தன; இப்போது கொடியேற்றுவதற்காகத் தனிவிமானத்தில் பறந்து சென்ற அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஆனந்த குமார் போன்ற பி ஜே பீ தலைவர்களும் அந்தக் கட்சியில்தான் இருந்தனர். ஆனால் அப்போது அவர்களுக்கு அங்கே கொடியேற்றும் எண்ணம் வராத மர்மம் என்ன? இப்போது இந்தியாவை ஆளும் காங்கிரஸுக்கும் காஷ்மீரை ஆளும் ஓமர் அப்துல்லாவுக்கும் நெருக்கடி கொடுக்க நினைத்ததைத் தவிர வேறு நோக்கம் என்ன?

பீ ஜே பீ யின் கொடியேற்றும் திட்டத்தால் பிரிவினை பேசுவோரின் வலிமையும் அவர்களுக்கு மக்கள் ஆதரவும் கூடுமே தவிர அவர்களின் நெஞ்சங்கள் இந்தியாவிடம் நெருங்கா!

“இந்தியாவில் எங்கும் கொடியேற்றும் உரிமை உண்டு” என முழங்கும் பீ ஜே பீ க்கு,  அவர்களின் தலைமைக் கட்சியான ஆர் எஸ் எஸ் தலைமையக நாக்பூர் அலுவலகத்தில் கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்புவரை இந்தியத்  தேசீயக்கொடி ஏற்றப்பட்டதில்லை என்ற உண்மை தெரியாதா?

RSS தலைமையகத்தில் காவிக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்நாட்டு விடுதலை நாளில் இந்நாட்டுக் குடிமக்களான முஸ்லிம்கள் தங்கள் அமைப்பு சார்பாக விடுதலைநாள் பேரணி நடத்தி மூவண்ணக் கொடியேற்றுவதற்கு எதிராகக் குரல் எழுப்பித் தடை கோர முயலும் சங்பரிவார் அமைப்புகளுக்கு, “இந்தியாவில் எங்கும் கொடியேற்றும் உரிமை உண்டு” என்பது வெற்றுக் கூச்சல்தானா?

நாட்டு விடுதலை மற்றும் தன்னாட்சி தொடர்பான நாட்களும் நாட்டுக் கொடியும் உணர்வு பூர்வமானவை; உண்மையான தேசபக்தனின் போற்றுதலுக்குரியவை. உண்மையான தேச பக்தர்கள் அவற்றைத் தம் குறுகிய ஆசை அல்லது லாபத்துக்காகப் பயன்படுத்த மாட்டார்கள். கோடிக்கணக்கான ஏழைப் பாட்டாளி மக்களின் உணவாகப் பயன்படும் மாடுகளை அறுப்பதற்கு எதிராக உணர்ச்சிக் குரல் எழுப்பும் சங்பரிவார், தேசீய நாட்களையும் தேசீயக் கொடியையும் சுயலாபத்துக்காகப் பயன்படுத்துவது தன் அரசியல் வாழ்விற்காகவும் வெடிகுண்டு வழக்குகளில் சிக்கியிருக்கும் சங்பரிவார் முகத்தைக் காப்பதற்காகவுமே என்பது இந்திய மக்களுக்குத் தெரியாதா?

சங்பரிவார் தலைவர்கள் திரைமறைவில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல்கள் தற்போது வழக்கு-விசாரணைகளில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருப்பதும் அவற்றைக் காஷ்மீரில் கொடியேற்றும் நாடகம்போல் எத்துணை முயன்றாலும் திசைதிருப்பிவிட முடியாது என்பதும் மக்களுக்குப் புரியாதா என்ன?.

- ரஸ்ஸல்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலத்தில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு ! தீர்மானங்கள், புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (30-1-11) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில்சேலத்தில் பரபரப்புடன் துவங்கியது.

இதில் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு என்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றது.

முதலாவதாக மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

புதிய மாநில நிர்வாகிகள்

தலைவர் பி.ஜே
பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ்
பொருளாளர் அன்வர் பாஷா
து. தலைவர் அப்துர் ரஹீம்
து. பொதுச் செயலாளர் சைய்யத் இப்ராஹீம்

மாநிலச் செயலாளர்கள்
அப்துல் ஹமீது
சாதிக்
அப்துல் ஜப்பார்
யூசுப் (திருவள்ளூர்)
அஷ்ரஃப்தீன் பிர்தௌசி
மாலிக் (ராம்நாடு)
சாதிக் ( கோபிசெட்டிபாளையம்)

பொதுக்குழு தீர்மானம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

2011 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சேலம் நேரு கலை அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

மேலும் படிக்க..


குற்றவாளிகளை பிடிப்பதில் இந்தியா முன்னணி: இன்டர்போல் பாராட்டு!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாரிஸ் : “”குற்றவாளிகளைப் பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீசை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது,” என, சர்வதேச போலீசின் செகரட்டரி ஜெனரல் ரொனால்டு கே.நோபிள் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சந்தேகத்திற்குரியவர்களை கண்டறியவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் சர்வதேச போலீசின் உதவியை நாடுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. “இன்டர்போல்’ என்னும் சர்வதேச போலீஸ் அமைப்பு மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்து, குற்றவாளிகளை எளிதில் கண்டறிகிறது. ரெட் கார்னர் நோட்டீசின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாடுகளில், இந்தியா மிக முக்கியமானது. குற்றவாளிகளை கண்டறியவும், அவர்களைப் பிடித்துக் கொண்டு வரவும், நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளை பிடித்துத் தருவது தொடர்பான ஒப்பந்தம் இருக்க வேண்டியது அவசியம். சர்வதேச போலீசார் மூலம், ஒரு குற்றவாளி பற்றி ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கும் போது, அந்த குற்றவாளி எளிதில் சுதந்திரமாக நாடுகளுக்கு இடையே உலவிட முடியாது.

ரெட் கார்னர் நோட்டீஸ் ஒரு சர்வதேச கைது வாரன்ட் இல்லை என்றாலும், அதன் மூலம் ஒருவரை கைது செய்யும்படி, உலக நாடுகளை குறிப்பிட்ட நாடு கேட்டுக் கொள்ள முடியும். குற்றவாளியைப் பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகோள் விடுக்கலாம். சர்வதேச போலீசின் தலைமையகம் பிரான்சில் உள்ளது. சர்வதேச போலீஸ் தன் திறனை மேம்படுத்தவும், உலக அளவில் அதன் பலம் அதிகரிக்கவும் இந்தியா மேலும் பல உதவிகள் அளிக்க வேண்டியது அவசியம். போலீசாரின் திறனை மேம்படுத்தும் பயிற்சி அளிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. எனவே, திட்டமிட்ட குற்றங்கள், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி தொடர்பான உயர் தொழில்நுட்ப குற்றங்கள் போன்றவற்றிலும் சர்வதேச போலீசுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். அதற்கு இந்திய அரசு உதவ வேண்டும். சர்வதேச போலீசுக்கு இந்தியா மிகவும் முக்கியமான நாடு. அவ்வப்போது திறமையான அதிகாரிகளை அனுப்பி வைக்கிறது. அவர்களும் சர்வதேச போலீசில் திறமையாகச் செயல்படுகின்றனர். பயங்கரவாதம் உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக நிபுணர்களின் கூட்டம் நடக்கும் போதெல்லாம், அதில், இந்தியாவும் பங்கேற்கிறது. இவ்வாறு ரொனால்டு கே.நோபிள் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதியின் மனதை மாற்றிய முஸ்லிம்!

ஹைதராபாத்,
ஜன.31:சிறையில் இரண்டு தடுப்புகளைத் தாண்டி தனிமையிலிருந்த முதியவரிடம் பேசத் துவங்கிய பொழுதும், அவருக்கு உணவும், குடிநீரும் கொண்டுவந்துக் கொடுத்த பொழுதும் எவ்வித குற்றமும் செய்யாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ள தான் விரைவில் இச்சிறையிலிருந்து விடுதலையாகி வெளியுலகை காணப் போகிறேன் என்பதை அப்து கலீம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்ட்டார்.
செய்யாத குற்றங்களுக்காக சித்திரவதைகளையும், சிறைவாசத்தையும் அனுபவித்து தளர்ந்துபோன அப்துல்கலீம் சமீபத்தில் விடுதலையான பொழுது தனது அனுபவத்தை நினைவுக் கூறுகிறார்:
“சஞ்சல்குடா சிறையில் நான் ‘அங்கிள்’ என்றழைத்த அஸிமானந்தாவின் மனமாற்றம், நான் மற்றும் அப்பாவிகளான இதர முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகளாக நிரூபிக்க உதவும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.”
ஷேக் அப்துல் கலீம் என்ற 19 வயது இளைஞர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்படுகிறார். 10 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை சேகரித்ததாகவும், குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய சிம் கார்டை பரிமாறினார் எனவும் போலீஸ் அப்துல் கலீம் மீது குற்றஞ் சுமத்தியது.தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அப்துல் கலீமுக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன. நிரபராதி என நீதிமன்றம் கூறிய பொழுதும் உள்ளத்தில் ஏற்பட்ட ஆறாத காயக்களுடன் அப்துல் கலீம் சிறையிலிருந்து விடுதலையானார்.
கடுமையான நிராசை, உதவுவதற்கு எவருமில்லாத சூழல் என்ற அப்துல் கலீமின் நிலைமை அஸிமானந்தாவின் உள்ளத்தை உருக வைத்தது.செர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது சகோதரன் காஜாவுக்கு மொபைல் ஃபோனை கொண்டு கொடுத்தார் எனக் குற்றஞ்சாட்டி மீண்டும் 2010 ஆம் ஆண்டு அப்துல் கலீம் சிறையிலடைக்கப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டி காஜாவை போலீஸ் கைதுச் செய்திருந்தது. ஆனால், சிறையில் போலீசாரே மொபைலைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு தன் மீது பொய்வழக்குப் போட்டதாக கூறுகிறார் அப்துல் கலீம்.என்னவாயினும், சஞ்சல்குடா சிறையில் என்னை அடைத்தது ஒருவகையில் எனக்கு அருள்தான் என அப்துல்கலீம் கூறுகிறார்.ஆறுமாத காலமாக நீண்ட இச்சிறை வாழ்க்கையின் போதுதான் அஸிமானந்தாவை அப்துல் கலீம் சந்தித்தார். சிறையில் வைத்து எப்பொழுதாவது முகமன் கூறுவதன் மூலம் இருவரும் அறிமுகமாகினர்.அஸிமானந்தாவுக்கு உணவும், குடிநீரும் கொண்டு கொடுத்துவிட்டு சிறைக் கம்பிகளுக்கு வெளியே நின்றுக் கொண்டு தனது கதையை கூறியுள்ளார் அப்துல் கலீம்.
அஸிமானந்தாவை அப்துல் கலீம் ‘அங்கிள்’ என அழைத்துள்ளார்.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில்தான் அப்துல் கலீமும் கைதுச் செய்யப்பட்டார் என அஸிமானந்தா அறிந்தபொழுது, அப்துல் கலீமின் வீட்டுச்சூழல் மற்றும் அவரது வாழ்க்கையைக் குறித்து விசாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார் அஸிமானந்தா.முஸாராம்பாகிலிருந்து கடந்த 2007-ஆம் ஆண்டு தானும் இதர முஸ்லிம் இளைஞர்களும் கைதுச் செய்யப்பட்ட நிகழ்விலிருந்து கூறத் துவங்கினார் அப்துல் கலீம். அங்கிருந்து ஒரு பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்றது, அங்கு வைத்து நான்கு தினங்களாக கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கியது, இரண்டுமுறை நார்கோ பரிசோதனைக்கு உட்படுத்தியது பின்னர் தான் உயிருள்ள சடலமாக மாறிய சூழல் வரை அனைத்தையும் அஸிமானந்தாவிடம் கூறியுள்ளார் அப்துல் கலீம்.
இதனைக் கேட்டு தலையை அசைத்துள்ளார் அஸிமானந்தா. பின்னர் கைதுச் செய்யப்பட்ட இதர இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப சூழல்களை குறித்து கேட்டறிந்துள்ளார். தனது சொத்துக்கள் அனைத்தையும் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப் போவதாக ஒருமுறை அஸிமானந்தா கூறியுள்ளார்.குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தனது தலைமையின் கீழ் செயல்பட்டவர்கள்தான் என அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை ஒரு சிறை அதிகாரி மூலமாக அறிந்துள்ளார் அப்துல்கலீம்.
“என்னைப் போன்ற நிரபராதிகளான இளைஞர்கள் பொய் வழக்குகளிலிருந்து விடுபட வழிவகுத்த இந்த ஒப்புதல் வாக்குமூலம் குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நான் இதற்கு காரணமல்ல, அல்லாஹ்தான் காரணம். என்னை நீதிமன்றம் குற்றமற்றவர் எனக்கூறி விடுவிக்கலாம். ஆனால், தீவிரவாதி என்ற முத்திரை எப்பொழுதும் எனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்”- தழுதழுத்த குரலில் கூறுகிறார்
அப்துல்கலீம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஒரு ஐயம்

கணக்கெடுப்பு பணி துவங்கிது

இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று இப்படி தெரிவிக்கிறது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சரியான விவரங்களை வழங்குமாறு அனைவரையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம்களை பொருத்தவரை மதம் என்னவென்ற கேள்விக்கு முஸ்லிம் என்றே பதிலளித்து பதிவுச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதங்கள் என்ற அட்டவணையின் கீழ் இஸ்லாம் என்று குறிப்பிடப்படாமல் முஸ்லிம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செய்த தவறாகும். இது குறித்து முஸ்லிம் சமுதாய அமைப்புகள் புகார் தெரிவித்தும் இது சரி செய்யப்படவில்லை. தற்போது நீதிமன்றம் சென்று முறையிடுவதற்கும் கால அவகாசம் இல்லை. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதுஇஸ்லாம் என்று குறிப்பிட்டால் அது முஸ்லிம் என்ற கணக்கில் சேர்க்கப்படாமல் இதர மதத்தினர் பட்டியலில் சேர்க்கும் அபாயம் உள்ளது. எனவே கவனமாக மதம் என்ற கேள்விக்கு முஸ்லிம் என்ற பதிலை மட்டும் அளிக்குமாறு முஸ்லிம் சமுதாயத்தினரை கேட்டுக் கொள்கிறேன். இது பற்றிய விழிப்புணர்வை துண்டு பிரசுரங்கள், தெரு முனைப் பிரச்சாரங்கள், பள்ளிவாசல் அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டு்க் கொள்கிறேன். கண்ணியத்திற்குரிய இமாம்கள் இது குறித்து ஜும்ஆவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சேகரிக்கும் விவரங்கள்… :

  1. பெயர்
  2. குடும்பத் தலைவருக்கு உறவுமுறை
  3. இனம்
  4. பிறந்த தேதி
  5. திருமண நிலை
  6. திருமணத்தின் போது வயது,
  7. மதம்
  8. எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவரா
  9. மாற்றுத் திறனாளியா
  10. தாய்மொழி
  11. அறிந்த பிறமொழிகள்
  12. எழுத்தறிவு நிலை
  13. கல்வி நிலையம் செல்பவரா
  14. அதிகபட்ச கல்வி
  15. கடந்தாண்டு வேலை செய்தவரா
  16. பொருளாதார நடவடிக்கை வகை
  17. தொழில்
  18. தொழில் (அ) வியாபார நிலை
  19. வேலை செய்பவரின் வகை
  20. பொருளீட்டா நடவடிக்கை
  21. வேலை தேடுகிறவரா (அ) வேலை செய்பவரா
  22. பணிக்கு பயணம் செய்யும் முறை
  23. பிறந்த இடம்
  24. கடைசியாக வசித்த இடம்
  25. இடப் பெயர்ச்சிக்கு காரணம்
  26. இடப் பெயர்ச்சிக்கு பின் வசிக்கும் காலம்
  27. உயிருடன் வாழும் குழந்தைகள்
  28. உயிருடன் பிறந்த குழந்தைகள்
  29. கடந்த ஆண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை

உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.nallurmuzhakkam.wordpress.com

எகிப்தில் மக்கள் புரட்சி வெற்றி-ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

கெய்ரோ: எகிப்தில் மக்கள் புரட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார். ஆட்சி பொறுப்பை ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு, குடும்பத் துடன் தலைநகர் கெய்ரோவை விட்டு வெளியேறினார்.
அதிபர் பதவியில் இருந்து முபாரக் (82) விலகியதாக துணை அதிபர் உமர் சுலைமான் நேற்று அறிவித்தார். ஆட்சி பொறுப்பை ராணுவம் ஏற்றதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு அதிபர் முபாரக் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
அதிபர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என சில வெளிநாட்டு தலைவர்கள் என்னை வலியுறுத்தி வருகின்றனர். யாருடைய கோரிக்கையையும் நான் ஏற்க மாட் டேன். செப்டம்பரில் என் பதவி காலம் முடிகிறது. அதுவரை பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. நாட்டு மக்களின் நலன் கருதியும், அரசியல் அமைப்பு சட்டத்தை பாது காக்கவும்தான் இத்தகைய முடிவை எடுத்துள்ளேன். அதே நேரம், துணை அதிபர் ஓமர் சுலைமானுக்கு சில அதிகாரங்களை வழங்கி உள்ளேன். அவர் எதிர்க்கட்சிகளின் போராட் டத்தை முடிவுக்குக் கொண்டு வருவார். இவ்வாறு முபாரக் தெரிவித்தார்.
குறிப்பாக, உடனடியாக பதவி விலகி நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.  இதன் மூலம், முபாரக் உடனடியாக பதவி விலகுவார் என்ற போராட்டக்காரர்களின் நம்பிக்கை தகர்ந்து விட்டது. தஹ்ரிர் சதுக்கத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்கள், அதிபரின்  பேச்சை கேட்டபிறகு Ôகழுதையே வெளியேறுÕ என கோஷம் எழுப்பினர்.  இதற்கிடையில் கடந்த 18 நாட்களுக்கு மேல் தொடரும் போராட்டத்தில் இதுவரையில் 150 பேர் பலியாகியுள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கெய்ரோ மற்றும்  முக்கிய நகரங்களில் நேற்று பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் மற்றும் போராட்டக்காரர்கள் இதில் கலந்து கொண்டனர். வானொலி மற்றும் தொலைக்காட்சி  நிலையங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு போராட்டம் வலுத்து வருவதால், அதிபர் முபாரக் தனது குடும்பத்தினருடன் கெய்ரோவை விட்டு வெளியேறிவிட்டார். எகிப்துக்குள் தனக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்றுக்கு  சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் அதிகாரம் மிக்க ராணுவ உயர் நிலைக் குழு நேற்று கெய்ரோவில் கூடி ஆலோசனை நடத்தியது.  இதற்கிடையில்,  நேற்று திடீர் திருப்பமாக, அதிபர் பதவியில் இருந்து முபாரக் விலகியதாக துணை அதிபர் உமர் சுலைமான் அறிவித்தார். ஆட்சி பொறுப்பை ராணுவம் ஏற்றது. தங்களது 18 நாட்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக கூறி, கெய்ரோ உட்பட நாடு முழுவதும் மக்கள்  வெற்றியைக் கொண்டாடினர்.

dinakaran.com

பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்!

பிரப்வரி 14 : காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது.

கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.

உங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.

காதலிப்போர் கவனத்திற்க்கு :

காதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.

பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல,

ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.

சினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.

காதல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் :

இளம் பெண்களே! பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.

காதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா? சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே! ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்

படிக்கும் இளைஞர்களே!

காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.

இளைஞர்களே!

உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே! இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.

காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்

காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.

இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது”

(நூல்: புகாரி 6243)

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா? ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா?’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!

டிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்

எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

TNTJ மாணவர் அணி

நெஞ்சில் கால் முளைத்த இந்திய சிறுவன்!

இந்த உலகத்தில் விசித்திரங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றது, அதில் சில விசயங்கள் அதிசயம் மற்றும் நம்மை வியப்பில் கொண்டு செல்லக்கூடியதாக உள்ளன.

மனிதனாக பிறக்கும் போதே ஒரு விசித்திரமான அங்க அமைப்பை கொண்டு பிறந்தவர்கள் பற்றி ஏராளமான செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

இந்தியாவின் Buxar, Bihar என்ற இடத்தில் வாழும் 8 வயது நிரம்பிய தீபக் குமார் பஸவான் என்ற சிறுவனின் நெஞ்சுப்பகுதியில் இருந்து மேலதிகமாக இரு கால்கள் வெளியே வந்து காணப்படுகிறது.

அதனுடன் சிறியதாக இரு கைகளும் காணப்படுகிறது. நெஞ்சில் காணப்படும் மேலதிகமான அந்த உடல் சிறுவன் நடக்கின்ற போழுதெல்லாம் அவனுக்கு பெரும் சுமையை தோற்றுவிக்கின்றது.

இந்த சிறுவனின் இந் நிலையை சரி செய்வதற்கு முயன்ற போதிலும், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் அவனுடைய பெற்றோருக்கு அது முடியாத செயலாகி விட்டது.

நாள் வருமானமாக வெறும் 200 ரூபாய் மட்டுமே பெறக்கூடிய என்னால் சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கும் மேலதிய உடலை அகற்ற எவ்வாறு மருத்துவரை நாடுவது என கவலை தெரிவித்துள்ளனர் இந்தச் சிறுவனின் பெற்றோர்.

newindianews.com

வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – சிறப்பு கட்டுரை

மத்திய கிழக்கில் கத்தரில் அதிக சம்பள உயர்வு.

2011 ல் ஓரளவு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மனித வள அதிகாரிகளுக்கு அதிக சம்பள உயர்வு.

அதிகரிக்கும் சீனர்களின் பரவல்.

ஐக்கிய அரபு அமீரகம் அதிகம் விரும்பப்படும் நாடு

மத்திய கிழக்கின் புகழ் பெற்ற வேலை வாய்ப்பு இணைய தளம் நடத்திய ஆய்வின் முடிவுகளின் சாரம் இந்நேரம் வாசகர்களுக்காக.

2011ல் வளைகுடா நாடுகளில் தனியார் நிறுவனங்களில் சம்பள உயர்வு சுமாராக இருக்கும், அதாவது 6.6 சதவிகிதம் இருக்கும் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இவ்வாய்வு ஆறு வளைகுடா நாடுகளில் உள்ள 1400 நிறுவனங்களிலும் 32,000 நபர்களிடமும் எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு வளைகுடா நாடுகளில் கத்தாரில் அதிகபட்சமாக 6.8 % ஊதிய உயர்வும், அதை தொடர்ந்து சவூதி அரேபியாவில் 6.7 %, ஓமனில் 6.4% மற்றும் குவைத்தில் 5.7 % ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் 5.2 % மற்றும் 4.9 % ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளின் சராசரி சம்பள உயர்வு எதிர்பார்க்கப்படுவது

நாடு 2010 2011 *
கத்தார் 6. 8 % 7. 2 %
சவூதி அரேபியா 6. 7 % 7. 0 %
ஓமன் 6. 4 % 7. 0 %
குவைத் 5. 7 % 5. 9 %
ஐக்கிய அரபு அமீரகம் 5. 2 % 6. 3 %
பஹ்ரைன் 4. 9 % 5. 1

  • 2010 ல் மக்களின் செலவழிக்கும் பழக்கம் அதிகரித்ததற்கேற்ப ரீடெய்ல் துறையில் அதிக பட்சமாக 6.4 % சம்பள உயர்வு கல்வி துறையில் குறைந்த பட்சமாக 3. 8 % சம்பள உயர்வும் இருந்தது. அது போல் மனித வளத்தில் பணி புரிகிறவர்கள் அதிக பட்சமாக 7. 1 % உயர்வும் வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்சமாக 4. 3 % உயர்வும் இருந்துள்ளது.

சவூதி மற்றும் கத்தரில் அதிகரித்த வேலை வாய்ப்புகள் மற்றும் திறமையான ஊழியர்களை தக்க வைக்கவே நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. ஒப்பீட்டளவில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட அதிக அளவில் இருந்ததால் ஆசியர்கள் சராசரியாக 6.1 % ஊதிய உயர்வும் மேற்கத்தியர்கள் 3.2 % ஊதிய உயர்வும் பெற்றுள்ளனர்

மத்திய கிழக்கின் வேலைவாய்ப்பில் புதிய அம்சமாக சீனர்களின் அதிகரிப்பை சொல்லலாம். வழக்கமாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தொழிலாளர்களை தருவிக்கும் மத்திய கிழக்கு நாடுகள் தற்போது ஓரளவு சீனர்களை தருவிக்க ஆரம்பித்துள்ளன. சவூதியின் ரயில் திட்டம், கத்தாரில் தோஹா துறைமுகம் உள்ளிட்ட திட்டங்கள் சீன நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுவதால் அவை பெரும்பாலும் சீனாவில் இருந்து ஆட்களை வரவைப்பதும் இதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம்.

அதிகமானோர் வேலைக்கு செல்லும் இடமாக கத்தார் மாறி வருகிறது. அதிகமான சம்பளம், சற்றே குறையும் விலை வாசி, அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள் போன்றவற்றால் கத்தார் கவர்ச்சிகரமான இடமாய் மாறி வருகிறது. ஆனால் அதிகமானோர் போக விரும்பும் நாடாக இன்னும் ஐக்கிய அரபு அமீரகம் தான் உள்ளது. அமீரகத்திற்கு செல்ல விரும்புவதாக 49 % நபர்களும், அதனை தொடர்ந்து 44 % நபர்கள் கத்தருக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அது போல் தற்போது அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களில் அதிகமானோர் அதாவது 72 % நபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணமாக உள் கட்டமைப்பு விளங்குவதாக சொன்னவர்கள் அதற்கு அடுத்த படியாக 59 % குவைத்திலேயே இருக்க விரும்புவதாகவும் மூன்றாவதாக 50 % கத்தாரிலேயே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

inneram.com

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு :- அத்வானி பெயரை நீக்கிய அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு தவறு- சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மீதான கிரிமினல் சதி குற்றச்சாட்டை நீக்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,உமாபாரதி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வினய் கட்டியார், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்பாரா மற்றும் மஹாந்த் அவிதயா நாத் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கிரிமினல் சதி குற்றச்சாட்டு நீக்கப்பட்டதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.
அதில் இவர்கள் மீதான மேற்கூறிய குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என சிபிஐ விடுத்த வேண்டுகோளை கடந்த ஆண்டு மே மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அம்மனுவில், அத்வானி உள்ளிட்டவர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டை நீக்கும் விடயத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் சரியான முடிவெடுக்கவில்லை என்றும், எனவே அவர்களுக்கு எதிரான கிரிமினல் சதி குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய புலனாய்வு கழகமான சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

- வெப்துனியா

சவூதி மன்னர் நாடு திரும்பினார்! 10 ,000 கைதிகள் விடுதலை!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சவூதி மன்னரின் மீள்வருகையை முன்னிட்டு பொது உரிமைமீறல் குற்றங்களில் கைதாகியிருந்தவர்களுள் 10,000 க்கும் மேற்பட்ட கைதிகள்  விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
விடுதலையாக உள்ளவர்களில் சவூதி மண்ணின் மைந்தர்களும், அந்நிய நாட்டவரும் அடங்குவர் என்று சவூதி  சிறைத் துறை தலைமை பொது இயக்குனர் அலீ பின் ஹுசைன் அல் ஹாரிதி தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் கூடலாமே தவிர குறையாது என்றார் அவர்.

அவர் மேலும் கூறுகையில், பொது உரிமைமீறல் குற்றங்களின் அடிப்படையில், சீர்திருத்த மையங்களிலும் சிறைகளிலும் 49 ,000 பேர் அடைபட்டுள்ளனர் என்றார்.

இந்த விடுதலை ஆணை, அரசின் பொது உரிமையை மீறிய குற்றவாளிகளுக்கே பொருந்தும் என்றும், தனி மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் மேலும் சொன்னார்.

சிலை திறப்பும், சீரழியும் வரிப்பணமும்…

குழந்தை ஒன்று அன்னைக்கு அருகில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதன் முகத்தில் கொத்துக் கொத்தாக ஈக்கள் மொய்க்கின்றன. மூக்கிலும், முகத்திலும் உள்ள அழுக்குகளால் ஈர்க்கப்பட்ட ஈக்களை தூக்கக் கலக்கத்திலேயே பிஞ்சுக் கைகள் துரத்துகின்றன. ஆனால் ஈக்கள் தூரப் போக மறுக்கின்றன. மீண்டும் மீண்டும் ஈக்கள் அந்தக் குழந்தையின் முகத்தில் படையெடுத்துத் தாக்கிக் கொண்டிருக்கின்றன.
அதிகாலை நேரத்தில் இரயி­ல் இருந்து இறங்கி மண்ணடி சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது இந்த அலங்கோலக் காட்சி கண்ணில் படுகின்றது. காண்போர் இதயங்களைக் கனக்கச் செய்கிறது. கண்களில் நீரை வரவழைக்கின்றது.
அவர்கள் உண்ணுவதும், உறங்குவதும் அங்கு தான். அவர்கள் சமைப்பதும், சட்டி சாமான்கள் கழுவுவதும் அங்கு தான். குளிப்பதும், துவைப்பதும் அந்த இடத்தில் தான். அங்கு நாய்களும், பன்றிகளும் நடமாடிக் கொண்டிருக்கும். கொளுத்துகின்ற வெயிலானாலும், கொட்டுகின்ற மழையானாலும் அந்த வீதிகள் தான் அவர்களின் வீடுகள். தாம்பத்ய வாழ்க்கைக்குக் கூட தகுந்த மறைவிடம் இன்றி தவித்து, தத்தளித்து அந்தத் தரைப் படையினர் தங்கள் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
சென்னைப் பட்டணத்தின் அகன்ற வீதிகளில் இது போன்று ஆயிரமாயிரம் அவலக் காட்சிகள்.
இப்படி ஒரு சாரார் குடிசை கூட இல்லாமல் தரைப் பிராணிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கூவம் நதிக் கரையில் குடிசை மக்கள்

சிங்காரச் சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்கின்ற போது, குபீரென்று ஒரு வாடை குடலைப் புரட்டுகின்றது. மக்கள் தங்கள் மூக்கைப் பொத்தத் துவங்குகின்றனர். கூவம் நதியைக் கடந்ததும் மூக்கிலிருந்து கையை எடுக்கின்றனர். கொஞ்ச நேரம், பேருந்து கூவம் நதியைத் தாண்டுவதற்குள்ளாக மக்களுக்கு அதன் வாடை குமட்டலைக் கொடுக்கின்றது; குடலைப் புரட்டுகின்றது.

ஆனால் அந்தோ பரிதாபம்! 24 மணி நேரமும் கூவம் நதிக் கரையினில் குடிசை கட்டிக் கொண்டு ஏழைக் குடும்பங்கள் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். நாற்றத்துடன் நாற்றமாக அவர்களது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இப்படி ஒரு சாரார் தங்கள் வாழ்க்கையைக் கூவத்தில் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய மக்களுக்கு மாற்று வழி ஏற்படுத்தாத அரசாங்கம், போட்டி போட்டுக் கொண்டு சிலைகளைத் திறப்பதில் மக்கள் வரிப் பணத்தை வாரியிறைத்து, பாழாக்குகின்றது.
கடந்த ஆட்சியில் வீழ்த்தப்பட்ட கண்ணகி சிலையை இந்த அரசு பொறுப்பேற்றதும் முதல் வேலையாக மீண்டும் நிறுவுகின்றது.
கண்ணகி சிலை இல்லாததால் ஐந்தாண்டு காலமாக யாரும் சாப்பிட வழியில்லாமல் திரிந்தது போன்று ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கண்ணகி சிலை திறக்கப்பட்டது.
இப்போது திரைப்பட நடிகர் சிவாஜிக்கு சிலை!

கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம் கற்சிலை நடுவதிலும் கல்லறை கட்டுவதிலும் காலி செய்யப்படுகின்றது. சிலை அமைப்பதற்கு மட்டும் செலவு செய்யப்படுவதில்லை. அதைத் திறந்து வைப்பதற்கு அரசு விழாக்கள் என்ற பெயரில் கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகின்றது.
இது போதாதென்று கடற்கரையில் இருக்கும் காந்தி சிலையை, சிவாஜி சிலை மறைக்கின்றது; அதனால் வேறு இடத்தில் சிலையை நிறுவ வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குகள் வேறு!

மேலும் படிக்க..


பக்ரைனில் புரட்சியாளர்களை ராணுவம் அடக்கியது

Shiite Bahraini youths burn tires near a shopping mall in Malkiya, Bahrain, Wednesday, March 16, 2011. (AP / Hasan Jamali)
Shiite Bahraini youths burn tires near a shopping mall in Malkiya, Bahrain, Wednesday, March 16, 2011. (AP / Hasan Jamali)
வளைகுடா நாடுகளில் ஒன்றான பக்ரைனில் மன்னர் ஹமார்த்துக்கு எதிராக பொதுமக்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் மன்னர் ஹமாத் தீவிரமாக இறங்கினார் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.
ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தை தீவிரப்படுத்தினர். தலைநகர் மனாமாவில் உள்ள பியர்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கில் புரட்சியாளர்கள் கூடினர். எனவே போராட்டத்தை தடுக்க சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடம் இருந்து பக்ரைன் மன்னர் ஹமாத் ராணுவ உதவியை நாடினார்.
மேலும் அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்தார். இந்த நிலையில், சவுதி அரேபியா மற்றும் அண்டை நாடுகளிடம் இருந்து சுமார் 2 ஆயிரம் ராணுவ விரர்கள் பக்ரைன் வந்தனர். அவர்கள் பியர்ஸ் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர்.
மற்றும் எந்திர துப்பாக்கியால் சுட்டனர். கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளால் சுட்டது. மேலும் அங்கு போராட்டக்காரர்கள் அமைத்து இருந்து கூடாரங்களுக்கு தீ வைத்தது. இதனால் அவை எரிந்து சாம்பலாயின. அத்துடன் அங்கிருந்த மரங்கள், குப்பை கூளங்களும் எரிந்தன.
இதனால் அப்பகுதி முழுவதும் ஒரே கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இருந்தும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஓடவில்லை. இதையடுத்து அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ராணுவம் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
பலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மனாமாவில் உள்ள சல்மானியா என்ற ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் அதையும் ராணுவம் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த புரட்சியாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன் மூலம் அவர்களின் போராட்டத்தை ராணுவம் ஒடுக்கி யது.

சவூதி: சலுகைகளின் சர்க்கரை மழை!


ஆளும்
வர்க்கத்திற்கெதிரான மக்கள் கிளர்ச்சி அரபுநாடுகளில் ஆங்காங்கே தொடர்ந்துவரும்  நிலையில், அடுத்துள்ள ஏமனிலும், பஹ்ரைனிலும் நடப்பதன் பக்க விளைவுகள் பெரிய அரபு நாடான சவூதியிலும் ஒருசில பகுதிகளில் மிகக் குறைவான அளவில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உணரப்பட்டன.

இந்நிலையில், சவூதி அரசர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மண்ணின் மைந்தர்களிடம்  தொலைகாட்சி வழியே  பிரத்யேக உரையொன்றை நிகழ்த்தினார். இறைவனுக்கு அடுத்தபடியாக, அரபு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் தன் குடிமக்களுக்கு மனமுவந்து நன்றி தெரிவித்த சவூதி மன்னர், தான் மனம்திறந்து உரையாடுவதாக அப்போது கூறினார். மக்களே தன் கவுரவம் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

அதில், குடிமக்களுக்கான அநேக சலுகைகளை அள்ளி இரைத்துள்ளார்.
சர்க்கரைப் பந்தலில் தேன் மழைப்  பொழிந்ததைப் போன்ற அந்த சலுகைகள் விவரம்:

  • சவூதி அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் மாதம் மூவாயிரம் சவூதி ரியாலாக உயர்த்தப்படுகிறது.
  • சவூதி அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம் உடனடி போனஸ்
  • வேலையில்லாதவர்களுக்கான உதவித் தொகை மாதம் இரண்டாயிரம் சவூதி ரியாலாக உயர்த்தப்படுகிறது.
  • இராணுவம், பாதுகாப்புத் துறைகள் 60 ,000   புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் .
  • 500 ,000 புதிய குடியிருப்புகள் கட்ட 250 பில்லியன் சவூதி ரியால்கள் ஒதுக்கீடு.
  • வீட்டுக்கடன் சவூதி ரியால்கள்  300 ,000 லிருந்து 500 , 000 ஆக உயர்வு.
  • சொந்த குடிமக்கள் வேலைவாய்ப்புறுதியை (சவூதிசேஷன்) விரைந்து நடைமுறைப்படுத்த ஆவன செய்யப்படும்.
  • பல்வேறு பெரு நகரங்களிலும் சிறப்பு மருத்துவ நகரங்கள் அமைக்கப்படும்.
  • மன்னருடைய நேரடி கண்காணிப்பில் ஊழல் தடுப்புப் பிரிவு அமைக்கப்படும்.

மன்னரின் இந்த அறிவிப்பை அடுத்து சவூதி நகரங்களில் மண்ணின் மைந்தர்களின் கொண்டாட்டம் பெரிதும் காணப்பட்டது.

ஆயினும், கடந்த 11m தேதி கூடிய சிறு அளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மார்ச் 20 அன்றும் தங்களின் ஆர்ப்பாட்டம் தொடரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்ததையொட்டி தலைநகரில் காவல் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

inneram.com

பணிந்தது மத்திய அரசு:அன்னா ஹசாரேவுக்கு வெற்றி:நாளை உண்ணாவிரதத்தை முடிக்கிறார்!

ஊழலுக்கு எதிராகவும், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரே போராட்டம் வெள்ளிக்கிழமை 4வது நாளாக தொடர்ந்தது.

இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டையை நீக்குவதற்காக, வெள்ளிக்கிழமை மாலை மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோரை அன்னா ஹசாரேவின் பிரதிநிதிகளான சுவாமி அக்னிவேஷ், கிரண்பெடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது இருதரப்பினரும் லோக்பால் மசோதா குறித்த தங்கள் வரைவு திட்டத்தை பரிமாறிக்கொண்டனர். இதற்கு வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி வரை, மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் வராததால், தனது உண்ணாவிரதம் நீடிக்கும் என்று ஹசாரே முதலில் அறிவித்தார். ஆனால், அவரது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து சனிக்கிழமை காலை தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.

ஹஸாரேவின் ஊழல் போர்… எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்??

Rajinikanth : Kamal Haasan helped me many timesகடந்த 5 நாட்களாக இந்தியாவே ஒரு புதிய புரட்சிக்காக ஆயத்தமானது, அன்னா ஹஸாரே என்ற 73 வயது காந்தியவாதியின் தலைமையில். ஆனால் இது ஆட்சி மாற்றத்துக்கான புரட்சி அல்ல. ஊழலுக்கு எதிரான புரட்சி.

‘India against corruption’ என்ற முழக்கம் மாநிலம், மொழிகள், இனங்கள் போன்ற அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முழுக்க எதிரொலித்தது. அனைத்துத் துறை சார்ந்தவர்களும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கத் தவறவில்லை.

குறிப்பாக இளைஞர்கள் அத்தனை துடிப்புடனும் ஆர்வத்துடனும் அந்த முதியவருடன் தோளொடு தோள் நிற்க ஓடி வந்தனர்.

பாலிவுட் எனப்படும் மும்பை திரையுலகமே ஹஸாரேவுக்கு ஆதரவாக ஓடிவந்தது. அமிதாப், ஆமீர்கான், ஷாரூக்கான், அனுபம்கெர், விவேக் ஓபராய், ப்ரியங்கா சோப்ரா, தீபிகா, தெலுங்கு நடிகர் மோகன்பாபு…. இப்படி ஏராளமானோர் அவருக்கு ஆதரவு கொடுத்து ஊழலை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டார்கள்.

ஆனால் தென்னிந்தியாவின் முக்கிய கவன ஈர்ப்பாகத் திகழும் தமிழ்த் திரையுலகம் மட்டும் கப் சிப்பென்று இருந்தது இந்த 5 நாட்களும். சூப்பர் ஸ்டார் தொடங்கி சுள்ளான் ஸ்டார்கள் வரை யாரும் இதுகுறித்துப் பேசவே இல்லை.

குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள், தங்கள் தலைவர் தேர்தலுக்கு வாய்ஸ் தராவிட்டாலும், ஹஸாரேவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

எனக்கு அரசியல் வேண்டாம், சாதி வேண்டாம், சாமியும் வேண்டாம், குடிமகனாக நின்று அரசியலை சுத்தப்படுத்த முடியும் என்று மேடை தோறும் பேசி வரும் கமல்ஹாஸனும் கூட அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சரி, அப்படிக் குரல் கொடுத்தால் அரசியலாகிவிடுமோ என இவர்கள்தான் யோசித்துக் கொண்டிருந்தார்கள்… ஊழலுக்கு எதிரான கட்சி என்று பெரிதாக விளம்பரப் படுத்திக் கொள்ளும் விஜயகாந்த் என்ன செய்து கொண்டிருந்தார்? நாளொரு வேண்டாத பரபரப்புகளை பிரச்சாரத்தில் கிளப்பிக் கொண்டிருந்தாரே தவிர, ஹஸாரேவுக்கு மறந்தும் கூட குரல் கொடுக்க முன்வரவில்லை.

சரி… புதிதாக கட்சி தொடங்குவேன், ஆட்சியைப் பிடிப்பேன் எனக் கூறிவரும் இளம் நடிகரான விஜய், அரசியலில் குதிக்க நாள் பார்த்துக் கொண்டிருக்கும் அஜீத், காற்றில் பஞ்ச் டயலாக் அடிக்கும் அசகாய சூரர்கள் தனுஷ், சிம்பு, ஓங்கிடிச்சா ஒன்றரை டன் எடை என்று சினிமாவில் வீரம் பேசும் சூர்யா, நான்கு படங்களில் நடித்து முடிப்பதற்குள் 100 பேரை அடிக்கும் ஆக்ஷன் ஹீரோவாகிவிட்ட கார்த்தி… சீஸனுக்கு சீஸன் நிறம் மாறும் சத்யராஜ்…. ம்ஹூம்.. ஒருவரும் ஊழலுக்கு எதிராக ஒரு சின்ன அசைவைக் கூட காட்டவில்லை.

‘இதானா இந்த அட்டைக் கத்திகளின் நேர்மையும் வீரமும்’ என நக்கலாய்ச் சிரிக்கிறது, ஊழலை வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக் கொண்ட தமிழகம்!

thats tamil

கோவை பொதுக்கூட்டத்தில் அதிமுக குண்டர்கள் வெறியாட்டம் – விளக்கு பிடித்து ஆள்காட்டிய மமக SDPI தொண்டர்கள்!

IMG-0061தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு மாநில பொதுச்செயலாளர் ரஹமத்துல்லா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா, திமுக கூட்டணியை TNTJ ஆதரிப்பது ஏன் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 9.45 மணியளவில் திடீரென அந்தக் கூட்டத்திற்குள் உருட்டுக்கட்டைகள் மற்றும் கற்களுடன் புகுந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த பெரிய ஸ்பீக்கரை கூட்டத்தினர் மீது பிடித்து தள்ள கூட்டத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

என்னவென்று சுதாரிப்பதற்குள் SDPI வேட்பாளர் உமர் தலைமையில் அங்கு வந்த மமகவின் பொருப்பாளர்கள் அங்கிருந்த விளக்குகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நேரத்தில் அதிமுக குண்டர்கள் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரின் வயரைப் பிடுங்கி விட அந்த இடமே இருளில் மூழ்கியது.

மேடைக்கு முன்னாள் திரண்டிருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த கலவர சூழ்நிலையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பெண்களையும் குழண்ட்தைகளையும் சுற்றி அரணாக நிற்க அவர்கள் மீது பிளாஸ்டிக் சேர்களை தூக்கி அடித்து விட்டு பெண்கள் கூட்டத்திற்குள் நுழைந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த இஸ்லாமிய பெண்களை வெளியே சொல்ல முடியாத கொச்சை வார்த்தைகளால் திட்டி அவர்கள் மீதும் சேர்களைத் தூக்கி அடிக்க, பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர்.

மேலும் படிக்க..

இறுதிப் போர் குறித்து பொய் தகவல்களைச் சொன்னது… 40000 தமிழரைக் கொன்றது இலங்கை! – ஐநா

நியூயார்க்: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய இறுதிப் போரில் 40000 தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர் என்றும், அனைத்து போர் விதிமுறைகளையும் அந்நாடு மீறிவிட்டதாகவும், போர் தொடர்பாக பொய்யான தகவல்களையே கூறி வந்ததென்றும் ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருந்தது. ஆனாலும் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் ரகசியமாக வெளிவந்தன. இப்போது ஐ.நா.சபை இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

முன்பு வெளிவந்த அத்தனை தகவல்களுமே உறுதியாகியுள்ளது, இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பார்க்கும்போது.

இந்த அறிக்கையின் சில முக்கிய பகுதிகள்:

இறுதிக்கட்ட போர் நடந்த நேரத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் ஒரே இடத்தில் முடக்கப்பட்டனர். அவர்கள் மனித கேடயமாகவும் பயன்படுத்தப்பட்டனர். அதில் இருந்து தப்பி ஓட முயன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஹ்களப் படை, விடுதலைப் புலிகள் இருதரப்புமே மனித உரிமைகளை மீறி போர் குற்றங்களைச் செய்துள்ளனர்.

பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் ராணுவம் தெரிந்தே குண்டுகளை வீசியது. மருத்துவமனை மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் குண்டுவீசி தாக்கினார்கள். இதன் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டோர் எண்ணிக்கை இதற்கு மேலும் கூட இருக்கலாம்.

போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட குண்டுகளை இலங்கை படைத் தரப்பு வீசியுள்ளது. இரு தரப்பினரும் பொதுமக்கள் அருகில் இருந்தபடியே ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்யவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. போர் பகுதிக்குள் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது.

தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமாக மானபங்கப்படுத்தியுள்ளது இலங்கை படைத்தரப்பு. கற்பழிப்புகள் சர்வசாதராணமாக நடந்துள்ளன. முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு

அங்கு நடந்த படுகொலைகள் போர் குற்றமாகும். எனவே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தலாம்.

அனைத்துமே பொய்யான தகவல்கள்

இலங்கையின் இறுதிக் கட்டப் போர் குறித்தும், கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்தும், தமிழர் பாதுகாப்பு குறித்தும் இலங்கை சொன்ன அனைத்துமே பொய்யான தகவல்கள் என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை

அதேபோல இறுதிப் போரின் போது, பாதுகாப்பு வலயப் பகுதிக்கு வந்த தமிழர்களில் 1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை அல்லது கணக்கில் காட்டப்படவில்லை. இந்த எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துக் காட்டியுள்ளது.

கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்கள்

புலிகளின் முக்கியத் தலைவர்கள் சரணடைய வந்தபோது, அவர்களை சர்வதேச சட்டங்களை மீறி சுட்டும் சித்திரவதைப்படுத்தியும் கொன்றுள்ளது இலங்கைப் படை.

இசைப்பிரியா போன்ற ஆயுதமேந்தாத கலைஞர்களையும் சிவிலியன்களையும் மிக மோசமாக சிதைத்துள்ளனர் ராணுவத்தினர்.

தங்களிடம் பிடிபட்ட போராளிகள், குறிப்பாக பெண் போராளிகளை உலகிலேயே இதுவரை யாரும் செய்யாத அளவு கொடூரமான முறையில் கொன்று குவித்திருப்பது தெரிகிறது. சில பெண்களை கொல்லப்பட்ட பிறகு ராணுவத்தினர் கற்பழித்து சிதைத்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை மனித இனத்துக்கே எதிரான மிகப் பெரிய குற்றங்கள். இதற்கு சேனல் 4 மற்றும் பல ஊடகங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்கள் தகுதியான சான்றுகளே.

மேலும் படிக்க…

ரவுடி மரியம்பிச்சை மரணம்! அதிமுக-தமுமுக ரவுடித்தனம்!! நேரடி ரிப்போர்ட்!!!

அமைச்சர் மரியம்பிச்சை சாலை விபத்தில் இறந்த பிறகு பலரும் மனிதாபிமான நோக்கில் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரக் கொழுப்பில் ஏற்பட்ட அந்த சாலை விபத்தும் சரி, அதன் பின் அ.தி.மு.க மற்றும் த.மு.மு.க காலிகள் திருச்சியில் செய்த கலவரங்களும் சரி மரியம்பிச்சையின் யோக்கியதையை நிரூபிக்கின்றன. அந்த கலவரங்கள் குறித்தும், ரவுடி மரியம்பிச்சை மந்திரியான கதையும் இங்கே தரப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த காலத்தில் இந்த ரவுடி மரியம்பிச்சை ம.க.இ.கவோடு மோதி மூக்குடைபட்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது. ஆக ‘அம்மா’ ஆட்சியில் நாம் நிறைய போராட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்பதை ரவுடி மரியம்பிச்சையின் மரணம் தெரிவிக்கிறது. படியுங்கள், பயம் கொள்ளாதீர்கள், அணி சேருங்கள்!

திருச்சி மேற்குத் தொகுதியில் தி.மு.க முன்னாள் அமைச்சர்  கே.என்.நேருவை தோற்கடித்து அ.இ.அ.தி.மு.க-வின் சட்ட மன்ற உறுப்பினராகவும், சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பேற்ற மரியம்பிச்சை கடந்த 22.05.2011 ஞாயிறு அன்று சென்னை செல்லும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார். உடன் வந்த நண்பர்கள், காவல் துறை ஆய்வாளர் ஆகியோரர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கண்ட விபத்து நடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் திருச்சி அமெரிக்கன் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள பெரும்பிடுகு முத்திரையர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மரியம்பிச்சையும், அமைச்சர் என்.ஆர்.சிவபதியும் ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனி காரில் சென்னைக்கு புறப்பட்டனர்.

மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!

11 மணிக்கு  அம்மாவைப் பார்க்க வேண்டும், எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற அவசரத்தில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணித்ததாகவும் முன்னாள் சென்ற டிரெய்லர் லாரியை முந்திச் செல்வதற்காக ஹாரன் அடித்துக்கொண்டே வேகமாக சென்ற போது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது என்றும்

மேலும் படிக்க..

செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!

Saudi Arabia Flag

ரியாத்: செளதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.

இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் செளதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுமியை வன்புணர்ந்த இருவருவருக்கு நடுத்தெருவில் தூக்குதண்டனை!

Iran Hanging Image

ஈரான் நாட்டில் 9 வயது சிறுமியை வன்புணர்ந்த இருவருக்கு நடுத்தெருவில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் விபச்சார வழக்குகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன் 9 வயது சிறுமியை வன்புணர்ந்து, அதை வீடியோ படமெடுத்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று தெருவில் மக்கள் முன்னிலையில் வைத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. காவல்துறை வாகனத்தின் மேல் இருவரையும் நிற்க வைத்த நிலையில், கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிய பின்னர் வாகனம் நகர்த்தப்பட்டது. உயிர் பிரிந்தப்பின் இருவரது உடலையும் தூக்குக் கயிற்றிலேயே சிறிது நேரம் மக்கள் காட்சிக்காக அப்படியே விடப்பட்ட பின்னர் காவல்துறையினர் உடலை அப்புறப்படுத்தினர். இதை ஆயிரகணக்கான மக்கள் பார்த்தனர்.

ஈரானில் இருந்து வெளிவரும் பத்திரிக்கையான ஈமா (IMA), கூடியிருந்த பொதுமக்கள் ‘இந்தத் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்தாக’ செய்தி வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் கணக்கிட்டால் இந்த வருடத்தின் 145வது மரண தண்டனை இதுவாகும் என்று ‘அசோசியேட்டட் பிரஸ்’ தெரிவித்துள்ளது. சென்ற வருடம் 179 மரண தண்டனை ஈரானில் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இதனைவிட அதிக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கழகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான், அதிக மரண தண்டனைகள் வழங்கும் நாடாக உலக அளவில் முதலில் இருக்கும் சினாவிற்கு அடுத்தநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

inneram.com

குரான் படிக்கிறார் டோனி பிளேர்

லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக  செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.  இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு நான்காவது இடம்

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு நான்காவது இடம்பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா, நான்காவது இடத்தில் உள்ளது. பெண் சிசுக் கொலை, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில். உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. காங்கோ குடியரசு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக் இந்தியா, சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.
பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வ தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் 3 நாடுகள் தெற்காசியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் கொடுமைகள், சுகாதார சீர்கேடு, பாலியல் அல்லாத கொடுமைகள், கலாச்சார ரீதியிலான சித்திரவதைப் பழக்கவழக்கங்கள், மதம் அல்லது பாரம்பரியம் சார்ந்த பெண்களுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், கடத்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாடுகள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை பெண் சிசுக் கொலை, சிசுக் கொலைகள், பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம். 2009ம் ஆண்டு இந்தியாவில் 1 கோடி பேர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியதாக ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவுக்குள் நடந்தவையாகும். மீதமுள்ள 10 சதவீதம் வெளிநாட்டுக் கடத்தல் சம்பவங்களாகும். மேலும் இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
கட்டாயத் திருமணங்களும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாக இருந்துவருகின்றது

maalaimalar.com

கடையநல்லூர் கிளைகளின் ஒன்றினைந்த பொதுக் குழு கூட்டம் – சைபுல்லாஹ் காஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் பொதுக் குழுக் கூட்டம் கடந்த 19.06. 2011 ஞாயிறு அன்று சரியாக காலை 10 மணிக்கு ஆரம்பமானது. இந்தப் பொதுக் குழுவில் கடையநல்லூர் டவுண், ரஹ்மானியா புரம், மக்கா நகர், பேட்டையைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக் குழுவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள். தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்களும், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் அனைத்துக் கிளைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

முதலாவதாக சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ஏகத்துவக் கொள்கைக்காக நபிமார்களும், ஸஹாபாக்களும் பட்டதியாகங்களை எடுத்துரைத்து அது போன்று தவ்ஹீத் வாதிகளும் ஏகத்துவத்திற்காக தியாகம் செய்ய ஒரு போதும் தயங்கக்கூடாது என்பதை சுருக்கமாக தனது உரையில் எடுத்துரைத்தார்கள்.

அதன் பிறகு மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி ஷம்சுல்லுஹா அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவர் தனது உரையில் ஸஹாபாக்கள் சத்திய மார்க்கத்திற்கு எதிராக தம்முடைய இரத்த உறவுகளே நின்ற போதும் அவர்கள் குருதி உறவிற்கு சிறிதும் முக்கியத்துவம் வழங்கவில்லை. கொள்கை உறவிற்குத் தான் அவர்கள் முக்கியத்துவம் வழங்கினார்கள். ஆனால் இன்றோ சிலர் சொந்த பந்தங்கள் என்று வரும் போது தம்முடைய கொள்கையில் ஆட்டம் கண்டு விடுகின்றனர் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்து பெண்வீட்டு விருந்து எவ்வளவு பெரிய அனாச்சாரம் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.மேலும் படிக்க..

தமிழ் மொழிபெயர்ப்பு சேவையை நேற்று அறிமுகப்படுத்தி அசத்தியது கூகுள் – இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்! தமிழை எந்த மொழிக்கும் மாற்றலாம்!!

தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது.

ஆம் ! இனி தமிழில் நாம் எழுதும் வாக்கியங்களை எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போன்று ஆங்கிலம் அரபி ஜெர்மனி போன் எந்த மொழியில் உள்ள வாக்கியங்களையும் யாருடைய துனையும் இன்றி தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

மற்ற மொழிகளில் உள்ள இணையதளங்களையும் நம் தாய் மொழி தமிழில் யாருடைய துனையின்றியும் படித்துக் கொள்ளலாம்.

எனக்கு ஆங்கிலம் தெரியும் , அரபி தெரியும் என்று யாரும் இனிமேல் பில்டப் கொடுக்க முடியாது.

நமக்கு தமில் தெரிந்திருந்தால் போதும் அது சகல மொழிகளும் தெரிந்ததற்கு சமம்…

Google Translate  என்று சொல்லப்படும் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இன்று 5 இந்திய மொழிகளுக்கான  (Bengali , Gujarati , Kannada , Tamil and Telugu) மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஆச்சிரியமாக உள்ளதா ? நீங்களே முயற்சி செய்து பாருங்கள்…

http://translate.google.com/#ta|en

எனினும் கூகுள் இதை மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று துள்ளியமான மொழிபெயர்ப்பாக (supported language) இதை அறிமுகப்படுத்தவில்லை alpha languages என்று சொல்லப்படும் பரிசோதனை மொழிபெயர்ப்பாக இதை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது இந்த தமிழ் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் முழுவதுமாக முடியவில்லை பரிசோதனையில் உள்ளது போகப் போகப் தமிழ் மொழிபெயர்ப்பின் தரம் மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று மிகத்துள்ளியமாக இருக்கும்.

அபு நபீலா-tntj.net

மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 21 பேர் பலி!

Mumbai Blasts Photos
மும்பையில் நேற்று மாலை 6.45 மணியிலிருந்து 7 மணி வரை கால் மணி நேரத்திற்குள் ஜவேரி பஜார், ஓபரா ஹவுஸ், தாதர் மேற்கு ஆகிய இடங்களில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து மும்பையை அதிர வைத்தன.இந்த கோர சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குண்டுவெடிப்பில் ஐஇடி வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இணைந்து இதை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மும்பையில் தற்போது என்ஐஏ குழுக்கள் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளன. என்எஸ்ஜி கமாண்டோப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்தும், ஹைதராபாத்திலிருந்தும் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழுவினர் மும்பை வந்துள்ளனர்.

நேற்று இரவு மும்பையில் கன மழை பெய்ததால் பல முக்கியத் தடயங்கள் அழிந்திருக்கலாம் என்று போலீஸார் அஞ்சுகின்றனர். இருப்பினும் குண்டுவெடித்த இடங்களை முடிந்தவரை பாதுகாப்புடன் வைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையே, தாதர் மற்றும் ஓபரா ஹவுஸ் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதில் சில உருப்படியான தகவல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

thatstamil.oneindia

நித்தியானந்தாவுக்கு பட்டுக்கம்பளமா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

போலிச்சாமியார் நித்தியானந்தாவுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கும் தமிழக காவல்துறையைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் வெளியிடும் கண்டன அறிக்கை:

இந்து மக்களால் இளைய விவேகானந்தராகக் கருதப்பட்ட நித்தியானந்தா எனும் போலிச் சாமியார் தனது காமக்களியாட்டத்தினால் இந்துக்களின் கடும் கோபத்துக்கு உள்ளானார். இத்தகைய கேவலமான போலிச்சாமியாருக்கு தமிழகக் காவல்துறை பட்டுக் கம்பளம் விரித்ததன் மூலம் தன்மீது தானே காரித்துப்பிக் கொண்டது.

மக்களால் மதிக்கப்படும் ஒருவர் கேவலமான செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்தால் அதை வெளியிடுவதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது ஊடகங்களின் கடமையாகும். போலிச்சாமியாரின் லீலைகளை அம்பலப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளிக்கும் புகாரை தமிழகக் காவல்துறை பெற்றுக் கொண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஊடகங்களின் உரிமையைப் பறிப்பதுமாகும்.

இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று நித்தியானந்தா கூறுவதை காவல் துறையினர் நம்பினால் அவர்கள் மாடுமேய்க்கத் தான் தகுதியானவர்களே தவிர காவல்பணிக்கு தகுதியானவர்கள் அல்ல. இது இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்று நித்தியானந்தா கூறுவதை காவல்துறை நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது.

ஏனெனில் இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் அல்ல என்று இந்துத்துவா கொள்கை கொண்ட கர்நாடக பாஜக அரசு சொல்லி விட்டது. அவர் மீது வழக்குப் பதிவு செய்ததும் பாஜக அரசு தான். ஓடி ஒளிந்து திரிந்த நித்தியானந்தாவை விரட்டிப்பிடித்து கைது செய்ததும் பாஜக அரசுதான். அவரை சிறையில் அடைத்தும் பாஜக் அரசு தான். பாஜக அரசு இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டது என்று தமிழக் காவல் துறை கருதுகிறதா?
அவரது கேவலமான செயல் இந்து மதத்துக்கு கரும்புள்ளீயாக அமைந்ததாலேயே கர்நாடக அரசு அவரைக் கைது செய்து வழக்குப் போட்டுள்ளது என்பது மூளையுள்ள யாருக்கும் தெரியும்.

ஜெயலலைதாவின் முந்தைய ஆட்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டாரே அது இந்து மதத்தின் மீதான தாக்குதலா? அவரை சிறையில் தள்ளியது இந்து மதத்துக்கு எதிரான நடவடிக்கையா? அவர் நீதி மன்றம் அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் மீது அழுகிய முட்டைகள் வீசப்பட்டதே அது இந்து மதத்துக்கு எதிரான செயலா? அவரது படத்துக்கு செருப்பு மாலை போடப்பட்டதும் செருப்பால் அடித்ததும் இந்து மதத்துக்கு எதிரான செயலா? நிச்சயமாக இல்லை. பகதர்களின் கொந்தளிப்பினால் தான் இவை நடந்தன. மேலும் ப்ல பெண்கள் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எதிராகச் சொன்ன பாலியல் புகார்களை ஜெயா டிவி ஒளிபரபியதே அது இந்து மதத்தை இழிவு படுத்தும் செயலா?
காஞ்சி சங்கராச்சாரியார் நித்தியானந்தா வழியில் ஜெயா டிவி மீதும் ஜெயலலிதா மீதும் புகார் கொடுத்தால் அதை காவல் துறையினர் பதிவு செய்வார்களா?

நிச்சயம் பதிவு செய்யமாட்டார்கள். எனவே காவல் துறையினரின் இந்தப் போக்கு அருவருப்பானது. அசிங்கமானது. கேவலமானது. நித்தியானந்தாவின் செயலை விட மோசமானது என்று தமிழ்நாடு தவ்ஹீத் கடுமையாகக் கண்டிக்கிறது.

இப்படிக்கு,

பி.ஜைனுல் ஆபிதீன்

மாநிலத் தலைவர்

TnTj.Net

TNTJ-தலைமையகத்தில் PRESS MEET: உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு மஹதி என்ற பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் இந்த ஊரைத் தவிர வேறு எங்குமே இல்லை. இவர்கள், தங்களின் மதக் குருக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்களை இத்தனை காலமும் நிர்பந்தித்து வருகின்றனர்..

பொதுவாக மஹதிகளைப் பொருத்தவரை ஒரு குணம் உண்டு. இவர்களை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களை அந்த ஊரில் உள்ள ஒரு தனிப்பள்ளிவாசலில் கட்டி வைத்து சித்ரவதை செய்வார்கள். முழுக்க முழுக்க இவர்கள் தங்களை ஒரு தனிப்பிரிவாகவே நினைத்துக் கொண்டு இஸ்லாம் காட்டித் தராத ஒரு தனி வாழ்க்கையை வாழ்கின்றனர்,

இந்த நிலையில் அங்கிருந்த மக்கள் சிலருக்கு ஏகத்துவக் கொள்கை கொஞ்சமாக ஊற்றெடுக்க, அவர்களின் கொள்கை இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்தைப் புரிந்து கொண்டு அங்குள்ள மஹதீகளுக்கு எதிராக அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யத் துவங்குகின்றனர்.

ஆனால் இந்த மக்கள் இதற்கு முன்னர் அந்தக் கூட்டத்தில் தான் இருந்து வந்தார்கள். அவர்களின் வழிமுறைகளைத் தான் பின்பற்றி வந்தார்கள். மேலும் படிக்க..

மும்பை தொடர் குண்டுவெடிப்புகள் விசாரணை என்ற பெயரில் வதைத்துக் கொல்லப்பட்ட ஃபயாஸ் உஸ்மான் தடம் புரளும் புலனாய்வுத்துறை??

ஜூலை 13ம் தேதி மும்பையில் நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப் புகளில் 21 பேர் பலியானார்கள்; 144 பேர் படுகாயமடைந்தனர். மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளான ஒபேரா ஹவுஸ், ஜாவேரி பஜார், தாதர் பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகளை சதிகாரர்கள் நிகழ்த்தியதன் மூலம் இந்தக் கொடியவர்கள் தாங்கள் ஒரு மனிதகுல விரோதிகள், இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.

 இத்தகைய கொடிய செயலை செய்பவர்கள் யார்? இவர்களது பின்னணியில் இயங்கும் உள்நாடு மற்றும் அயல்நாட்டு சக்திகள் எவை என்பதில் வழக்கம் போலவே புலனாய்வு அமைப்புகள் திணறி வருகின்றன.

நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாதச் செயலை செய்தவர் கள் யார்? என்பதைக் கண்டறிய தீவிரமாக நடுநிலைமையுடன் செயல்படாமல் மீண்டும் தங்களது வழக்கமான, கீழ்த்தரமான, முட்டாள் தனமான, முன்யோ சனை யற்ற, ஒருபக்க சார்பான விசாரணையை மேற்கொண்டு நாட்டையே சர்வதேச அவமானத் தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது மகாராஷ்ட்ரா காவல் துறை.

ஃபயாஸ் உஸ்மான் என்ற 35 வயது இளைஞரை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பின்னர் மும்பை சியான் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என குடும்பத்தினரிடம் மிகவும் துணிகரமாக சொல்லியிருக்கிறது. மகாராஷ்ட்ரா அரசு.

காவல்துறையினர் ஃபயாஸ் உஸ்மானை சித்திரவதை செய்து படுகொலை செய்து விட்டதாக கதறுகின்றனர் அவரது உறவினர்கள்.

ஹைபர் டென்ஷனில் பாதிக்கப் பட்டு இருந்த ஃபயாஸ் உஸ்மானை அச்சுறுத்தி, உருட்டி மிரட்டியே சாகடித்துள்ளனர் பாவிகள் என குமுறுகின்றனர் ஃபயாஸின் உறவி னர்கள்.

தனது தந்தையை சம்பவம் நடந்த அன்று இரவு 7 மணிக்கு யூனிபார்ம் அணியாத சில மர்ம மனிதர்கள் அழைத்துச் சென்றதாகவும், தங்களிடம் அது குறித்து எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல் இழுத்துச் சென்றதாகவும் படு கொலை செய்யப்பட்ட ஃபயாஸ் உஸ்மானின் மகன் அஜீம் உஸ்மானி கூறுகிறார்.
ஃபயாஸ் உடல்நிலை மோச மடைந்து இருப்பதாவும் அவரை சியோன் மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாகவும் உடனடியாக பார்க்க வருமாறும் எங்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் நாங்கள் மருத்துவமனைக்கு சென்ற போது ஃபயாஸ் உஸ்மானின் இறந்த உடலைத்தான் பார்க்க முடிந்தது என வெடிக்கிறார் ஃபயாஸின் அண்டை வீட்டுக்காரர் சலீம் ஸித்தக்கி..  மேலும் படிக்க..

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்.

ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.

மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்.

மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள ”மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு” சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.
கலவரத்தை தடுக்க மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை ஒரு மாநில முதல்வர் எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் சொல்லும் காரணங்கள் ஏற்கதக்க வகையில் இல்லை.
இந்த சட்டம் ஏதோ அவசரகோலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் அல்ல, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்த கலவரங்களில் சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்க படவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படவில்லை என அரசால் நியமிக்கப்பட்ட பல கமிஷன்கள் கூறியுள்ளன.
கலவரங்களை விசாரிக்க நீதிபதிகளின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் இந்த ‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டம்”.

மேலும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் அளித்த தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலும், கடந்த தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையிலும், பல்வேறு சட்ட வல்லுனர்களின் ஆலோசனைபடி தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என தமிழக முதல்வர் கூறியிருப்பது ஏற்கதக்க வகையில் இல்லை.
மனித உயிர்களைவிட மாநில உரிமை பெரிதல்ல என்பதை முதல்வர் உணர்ந்துகொள்ள வேண்டும், எனவே தமிழக முதல்வர் இந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கேட்டுகொள்கின்றது,
இந்தியாவில் கலவரங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை தண்டிக்கவும், கலவரத்தில் பாதிக்கபட்டோருக்கு நிவாரணம் வழங்கவும், சட்டம் இயற்றிய மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாராட்டுகின்றது
 
இப்படிக்கு
P. ஜெய்னுல் ஆபிதீன்
மாநில தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
www.tntj.net

TNTJ நிர்வாகிகள் கைது ! காவல் நிலையம் முற்றுகை !!

தமிழக முதல்வரை கண்டித்து போஸ்டர் ஒட்டிய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கைது!!! விடுவிக்கக் கோரி காவல்நிலையம் முற்றுகை!!!

கடையநல்லூரில் 01.08.2011 திங்கள் அதிகாலை 1:00 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பில் கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கும் ஜெயலலிதாவை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அப்பொழுது காவல் துறையினரால் நகர டவுண்கிளை செயலாளர் ஹாஜா மைதீன் மற்றும் மாணவர் அணி செயலாளர் ரமீஸ் ஹஸன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதனை கேள்விப்பட்ட நிர்வாகிகள் நள்ளிரவில் காவல் நிலையத்தை சகோதரர்களுடன் முற்றுகையிட்டனர்.அப்பொழுது கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜ்மீம் அவர்களிடம் ஜனநாயக முறைப்படி தமிழகம் முழுவதும் இது போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஆகவே கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை உடனே விடுவிக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அலுவல் செயலாளர் சகோ.சுலைமான் வலியுறுத்தினார்.அதற்கு அதிகாலை 5:00 மணிக்கு விடுவிப்பதாக கூறிய துணைக் கண்காணிப்பாளர் அவர்களை விடுதலை செய்யாமல் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.இதனைக் கேள்விப்பட்ட கடையநல்லூரைச் சார்ந்த நூற்றுக்கணக்கான சகோதரர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

kdnltntj.tk

மூடிக் கிடக்கும் கடையநல்லூர் ரயில் நிலைய கழிப்பிடம்-மக்கள் பெரும் அவதி

கடையநல்லூர்: வளர்ந்து வரும் முக்கிய நகரமான கடையநல்லூரில் உள்ள ரயில் நிலைய வளாகத்தில் இருக்கும் கழிப்பிடம் மூடியே கிடப்பதால் பயணிகள், குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில், கடையநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும. இங்கு ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கனக்கானோர் துபாய், சவுதி அரேபியா, குவைத் போன்ற வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.

அத்துடன் இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் தொழில் செய்தும், பணிபுரிந்தும் வருகின்றனர். இதனால் கடையநல்லூர் ரயில்வே ஸ்டேசன் ரயில் நேரங்களில் மிகவும் கூட்டமாக இருக்கும். தற்போது கடையநல்லூர் வழியாக மதுரைக்கும், சென்னைக்கும், ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கடையநல்லூர் ரயில்வே ஸ்டேசனில் கழிப்பறை செயல்படாமல் இருப்பதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரியிடம் கேட்டால் ரயிலில் ஏறி கழிப்பறை செல்லுமாறு பொறுப்பின்றி அலட்சியமாக கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் பயணிகளுக்கும் ரயில்வே அலுவலர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. அத்துடன் ரயில் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீரும், சுகாதாரமான சூழ்நிலையும் இல்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேபோல பயணிகள் காத்திருக்கும் அறையும் திறந்து வைக்கப்படாமல் பூட்டியே இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

உலக அளவில் புகழ் பெற்றதாக கூறப்படும் இந்திய ரயில்வே, நிர்வாக மேலாண்மை குறித்து ஐஐஎம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யும் இந்திய ரயில்வே, இப்படி பயணிகளுக்கு குறைந்தபட்ச வசதிகளை கூட செய்து தர மறுப்பது எந்தவகையில் நியாயம் என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.

பயணிகள் நலன் கருதி கடையநல்லூர் ரயில்வே ஸ்டேசனில் கழிப்பறை செயல்பட நடவடிக்கை எடுக்கவும், குடிநீர் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் ரயில்வே துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.

thatstamil

முஸ்லீம்களும், நோன்புக் கஞ்சி அரசியலும்.

 
 புனித ரமழான் மாதம் என்பது முஸ்லீம்களின் மிக முக்கியமான காலமாகும். உலகுக்கான வழிகாட்டி திருமறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம்.
 
காலை மூன்று மணிக்கே எழுந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள்.
பஜ்ருத் தொழுகைக்கு பள்ளியை நிறைக்கும் மக்கள் கூட்டம்.
லுஹர் தொழுகைக்கு தவறாமல் வருபவர்கள்.
அசர் தொழுகையுடன் சேர்த்து நோன்புக் கஞ்சி வாங்க வருபவர்கள்.
நோன்பைத் திறக்க வேண்டும், சூரியன் எப்போது மறையும் என வைத்த கண் வாங்காமல் காத்திருக்கும் உள்ளங்கள்.
தொழுகை தொழப் போக வேண்டும் அனைத்து  வேலைகளையும் இப்போதே முடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே சமையலில் ஈடுபடும் தாய்மார்கள். என்று அனைவரும் ஆசுவாசமாக போற்றிப் புகழும் மாதம் தான் இந்த ரமழான்.
இஸ்லாமிய ஆன்மீகக் கருத்துக்கள் எப்போதும் பேசப்படும் இம்மாதத்தில் தற்போது அரசியலும் கலக்கப்படுவது ஓர் கவலையான உண்மையாகும்.

அதிகாலையில் இருந்து மாலை வரை உண்ணாமல், பருகாமல் இறைவனுக்காக தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளும் மக்கள் சூரியன் மறையும் நேரத்தில் நோன்பைத் திறப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு அங்கென்ன வேலை என்ற கேள்வி எழுவது நியாயமானதே!
ஆம் எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற பாணியில் கொடிகட்டித் திரியும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு தங்கள் பச்சோந்தித் தனத்தை காட்டிக் கொள்ளக் கிடைத்த பெரும் சந்தர்ப்பமாக இந்த ரமழான் மாதத்தை நினைக்கிறார்கள்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோன்புக் கஞ்சி அரசியல் மிகவும் பிரபலமானதாகும் அம்மா வருகிறார், ஐயா வருகிறார், தமிழினக் காவலர் வருகிறார், முஸ்லீம்களின் இதயம் வருகிறார் என்றெல்லாம் வாசகங்கள் அடங்கிய “கட்டவுட்களை” நாடு முழுவதும் இம்மாதத்தில் காணக்கிடைக்கும்.
பள்ளிவாயல்களில் நோன்பு திறக்கும் நிகழ்வு என்று கூறி அரசியல் வாதிகள் வரவேற்கப்படுவார்கள்.
தொப்பி அணிந்து, சில நேரங்களில் ஜுப்பாவும் போட்டுக் கொண்டு, வெள்ளையும் சொல்லையுமாக வரும் அரசியல் பிரபலங்கள். ஆன்மீக அரங்கில் தங்கள் அரசியல் தர்பாருக்கான இடத்தைப் பிடிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
ஒரு முஸ்லிம் நோன்பு காலத்தில் நோன்பு திறப்பதில் நியாயம் இருக்கிறது.
ஆனால் பல இடங்களில் இஸ்லாத்திற்கே தொடர்பில்லாதவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் என்ற பெயரில் அரசியல் நாடகம் போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
 
நோன்பு திறத்தல் என்ற உண்ணதமான ஒரு நிகழ்வையும் அரசியல் சாக்கடையாக்க முனையும் இவர்களை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்பது ஒரு புனிதப் பணி. நோன்பு திறப்பதற்கு உதவி செய்யும் பொது மக்களின் பணத்தை வீண் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்ததாதீர்கள்.
அரசியலை அரசியலுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளுங்கள், ஆன்மீக செயல்பாட்டில் நுழைத்து, புனித செயல்பாடுகளின் புனித தன்மையை கெடுக்காதீர்கள்.

அரசியல் வாதிகளுக்கு அரங்கம் அமைத்துக் கொடுத்து, ஆன்மீகத்தைக் கெடுக்கும் அசிங்கமான செயல்பாட்டைத் தவிர்த்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக!
சகோ.ரஸ்மின் MISC

சமச்சீர் கல்வித் திட்டம்-அரசின் குழப்பத்தால் அநியாயமாக வீணாகிப் போன 60 நாட்கள்!

கடந்த 60 நாட்களாக விடை தெரியாமல் நீண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டக் குழப்பத்திற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஆனால் இனிமேல்தான் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பிரச்சினையே ஆரம்பமாகப் போகிறது.

அரசு – உனக்கு இலவச லேப்டாப் வேணுமா?
மாணவன் – வேண்டாம்
அரசு – இலவச சைக்கிள் வேண்டுமா?
மாணவன் – வேண்டாம்
அரசு – வேற என்ன வேணும்?
மாணவன் – படிக்க ஏதாவது ஒரு புக் கொடுங்க போதும்

இதுதான் கடந்த 60 நாட்களில் தமிழகத்தை அதிகமாக வலம் வந்த எஸ்.எம்.எஸ்-ஸாக இருக்க முடியும். அந்த அளவுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும், விரக்தியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.

மிக மிக எளிதாக அணுகப்பட்டிருக்க வேண்டிய ஒரு விஷயத்தை மிகப் பெரிய சட்டச் சிக்கலாக்கி கடைசியில் தனக்குப் பாதகமாக அதை முடித்துள்ளது தமிழக அரசு. மக்களின் மிகப் பெரிய வரவேற்புடன், அமோக ஆதரவுடன், ஆட்சிக்கு வந்த அதிமுக அரசுக்கு இது நிச்சயம் மிகப் பெரிய பின்னடைவுதான், சறுக்கல்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மேலும் படிக்க..

புனித ரமலான் மாதம்- ஒரு ஜெர்மானியப் பயணியின் இனிய அனுபவம்!

 German Touristதுபாய்: துபாயில் ரமலான் மாதத்தில் சுற்றுலாப் பயணியாக வருகை புரிந்த ஜெர்மனியைச் சேர்ந்த டேனியலுக்கு ரமலான் மாதம் இனிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து அவர் தெரிவிப்பதாவது :

வியட்நாம், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராகக் கருதப்படும் துபாய் வருகை புரிந்தவுடன் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் உணர்த்துகிறது.

கடுமையான வெயிலிலும் தொழிலாளர்கள் முதல் உயர்நிலைப் பணியாளர்கள் இறைக்கட்டளையான நோன்பை கடைப்பிடித்து வருவது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. கடுமையான வெயிலில் தண்ணீர் கூட அருந்தாமல் எப்படி சுமார் 14 மணி நேரம் இருக்க முடிகிறது என்பதனை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது.

இரவு நேரங்களில் அனைவரும் சிறப்புத் தொழுகைகளை தொழுது வருவது, சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் போட்டிகள் நடந்து வருவது, பகலில் நோன்பு வைக்காத பிற சமயத்தவர்கள் பொது இடங்களில் சாப்பிடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பல்வேறு இடங்களில் நோன்பாளிகளுக்கு பிரியாணி உணவு பரிமாறப்படுவதையே பார்த்து வந்த எனக்கு துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பாரம்பர்ய நோன்புக் கஞ்சியினை தினமும் 3000 பேருக்கு மேல் வழங்கி வருவது ஒரு வித்தியாசமான அனுபவம். மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படும் அதன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டுக்குரியவர்கள் என்று வியந்து பாராட்டினார்.

பின்னர், நோன்பு திறப்பதற்கு முன்பு பொது இடத்தில் அருந்தக்கூடாது என்ற சட்டம் இருப்பதன் காரணமாக தமிழகத்து நோன்புக் கஞ்சியினை பார்சல் வாங்கிக் கொண்டு வாழ்த்துக் கூறி விடைபெற்றார் ஜெர்மானிய சுற்றுலாப் பயணி டேனியல்.

thatstamil

கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்பெருநாள் தொழுகை

காயிதேமில்லத் திடலில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

ஷவ்வால் பிறை காணப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் 3 இடங்களில் திடலில் தொழுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் காலை 6 மணி அளவில் கடையநல்லூரைச் சார்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு. புத்தாடைகள் அணிந்து தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர். இவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் பேரீத்தம்பழம் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். 
காயிதே மில்லத் ஈத்கா திடலில் சரியாக 6.30 மணி அளவில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிய உரையில்- இஸ்லாம் என்பது சாந்தியையும் அமைதியையும் போதிக்கக் கூடிய மார்க்கம் கடந்த ஒரு மாத காலம் உண்டு, பருகி, மனைவியோடு உறவு கொண்டு இன்புற்றிருக்க வேண்டிய முஸ்லிம்கள் பகல் முழுக்க இவைகளையெல்லாம் விலக்கிக் கொண்டனர். யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் படைத்த ஏகப் பரம்பொருhகிய அல்லாஹ் பார்க்கிறான் என்ற எண்ணம்தான். இது உலக மக்கள் அனைவருடைய உள்ளத்திலும் ஏற்பட்டு விட்டால் லஞ்சம், ஊழல், மோசடி, தீவிரவாதம் போன்ற அநியாயங்கள். அக்கிரமங்கள். அக்கிரமங்கள் ஏற்பட வாயப்பில்லை.  இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஒரு உயிரை
வாழவைத்தவன் உலகமக்கள் அனைவரையும் வாழவைத்தவன் போன்றாவான். நியாயமின்றி அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்பவன் உலகமக்கள் அனைவரையும் கொலைசெய்தவனாவன் என்று திருக்குர்ஆன் தீவிரவாதத்திற்கு எதிராக உரக்க குரல் கொடுக்கின்றது. நோன்புப் பெருநாளில் கூட இஸ்லாமியர்கள் ஏழைகளின் பசிப் பணியைப் போக்குவதற்காக ஈகையுடன் நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுகின்றனர். இத்தகைய ஈகைப் பண்பை ஏற்படுத்துவதுதான் இஸ்லாம் என்று அவர் தன்னுடைய பெருநாள் பேருரையில் எடுத்துரைத்தார்.
கடையநல்லூர் முழுவதிலும் இருந்து இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வமுடன் பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

மேலும் 2 இடங்களில் திடல் தொழுகை

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 3 வது தெரு மர்யம் பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்லாமிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி அப்துந் நாஸிர் அவர்களும் மேலும் மக்காநகர் பள்ளிவாசல் சார்பில் மௌலவி பஷீர் அஹமது MISC அவர்களும் பெருநாள் தொழுகையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள். அனைவரும் தங்களது உரைகளில் இஸ்லாம் கூறும் ஈகை பற்றி எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்ஜித் மர்யம், மக்கா நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
தொழுகைக்கு முன்பாக கடையநல்லூர் நகரில் ஆயிரக்கணக்கான ஏழைஎளிய மக்களை கண்டரிந்து வீடு தேடி தலா 5கிலோ அரிசி வீதம் பித்ரா எனும் பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.  
கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சொக்கலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் கடையநல்லூர் நகரக் காவல்துறை ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் பெருநாள் தொழுகை நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. 

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாக்குகிறோம்…!

சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு…

சவூதியில் “ஹுரூப்” “Run away ” “هرب” என்ற விதியை இந்தியர்கள் மீது வழுக்கட்டாயமாக திணித்து அவர்கள் பாதிக்கப்படுவதை ரத்துசெய்யும் பணியில் இந்திய வெளியுறவு துறை, இந்திய ஜனாதிபதி, இந்தியாவின்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை, சவூதி மன்னரின் தனிப்பிரிவு போன்ற துறைகளின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று ஹுரூப் என்று சொல்லக்கூடிய அந்த கொடிய சட்டம் எந்த காரணமுமின்றி இந்தியர்கள் மீது பாயாமல் தடைசெய்ய, சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக மற்றும் கேரளா அசோகியேசன் இணைந்து கூட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றன. அதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆலோசனைகளும் பெற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இது சம்பந்தமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் கேரளா அசோசியேசன் நிர்வாகிகள் மூலம் நேரடியாக பேசப்பட்டுள்ளது. சவூதி வாழ் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு  இந்திய உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் தொடர..

பெற்ற குழந்தையை கொடுரமாக சாப்பிடும் மனிதன்!(படம் இணைப்பு)

தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசிகள் மாந்திரீக விழாக்களை கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு மாந்திரீக விழா கொண்டாடும்போது அண்மையில் அங்கு வசிக்கும் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை மிகவும் கொடுரமான முறையில் கடித்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

“பப்புவா, நியுகினியா சுரங்க குடியேற்ற வாசிகளால் இவர்கள் அண்மையில் மாந்திரீக விழா தொடங்கப்பட்டது. இதில் மாந்திரீகத்தில் மிக்க நம்பிக்கை உடைய ஒருவர் மிகவும் கொடுரமான ஒரு செயலை புரிந்துள்ளார். அவரது சொந்த மகனையே மிகவும் கோரத்தனமாக கடித்துக்குதறி சாப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த கிராம வாசிகள் அலறியடித்துக்கொண்டு பொலீசாரை வரவழைத்துள்ளனர். பொலீசார் மிகுந்த போராட்டத்தின் பின்னர் குறிதத்த நபர் உட்பட அவரது மனைவியையும் கைது செய்துள்ளர். எனினும் மிகுந்த காயங்களுக்கு உள்ளான குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என பொலீசார் தெரிவித்தனர். மற்றும் இது ஒரு சங்கடமான சம்பவம் எனவும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மிகுந்த பயத்துடனும், கவலையுடனும் வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.

எச்சரிக்கை:- மன்னிக்கவும், சென்சார் செய்யப்படாத புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது. தயவுசெய்து பெண்களோ, இளகிய மனம் கொண்டவர்களோ, சிறுவர்களோ, குறித்த புகைப்படத்தை பார்க்க கூடாது என எச்சரிக்கிறோம்.
Image Link http://athirchi.com/wp-content/uploads/2011/09/00-00-238.jpg

அமெரிக்கா: பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடியாக உயர்வு!

 வாஷிங்டன்: அமெரிக்காவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடி பேர் என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

இது கடந்த 50 ஆண்டுகளில் காணாத அதிகபட்ச எண்ணிக்கை என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.US Povertyஉலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அங்கு கடந்த 1983-ம் ஆண்டு முதலே வறுமைக்கோடு என்ற அளவீடு இருந்துவருகிறது.

அமெரிக்காவில் ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் வறுமையில் வாடுபவர்களாக கருதப்படுகின்றனர். அதாவது அவர்களின் பொருளாதார நிலை, தேவையின் அடிப்படையில் இந்த ரூ 10 லட்சம் மிகக் குறைந்த தொகையாகும்.

இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பசி பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 4 கோடியே 62 லட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இது அமெரிக்க மக்கள் தொகையில் 6-ல் ஒருபங்கு ஆகும்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாகாணங்களில் மிஸிஸிப்பி முதலிடம் வகிக்கிறது. அங்கு 22.07 சதவீதம் பேர் வறுமையில் வாடுகின்றனர். அதைத் தொடர்ந்து லூசியானா, கொலம்பியா, ஜார்ஜியா, நியூமெக்சிகோ, அரிஸோனா போன்ற மாநிலங்களும் வறுமையில் வாடுவதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

 
thatstamil
 
 

நபரின் ஆண்குறி வழியாக சிறுநீர்பைக்குள் புகுந்த 6 அங்குல விலாங்குமீன்

நபரொருவரின் ஆண்குறி வழியாக 6 அங்குல நீளமான விலாங்கு மீனொன்றை அந்நபரின் சிறுநீரகப் பையிற்குள் புகுந்த  விபரீத சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.

பின்னர் மருத்துவர்கள் 3 மணி போராட்டதிற்கு பிறகு  இந்த விலாங்கு மீனை அகற்றினர்.

சாங் நான் (வயது 56) எனும் இந்நபர் சீனாவிலுள்ள அழகு சிகிச்சை நிலையமொன்றில் தனது உடலின் தோல்களை சுத்தப்படுத்துவதற்காக நீரூற்றுகுளியலை மேற்கொண்டிருந்தார்.

அவ்வேளையிலேயே வில்லங்கமான ஒரு விலாங்கு மீன் அவரது ஆணுருப்பின் வழியாக சிறுநீர்பைக்குள் சென்றுள்ளது.

மீன்கள் நிறைந்த தடாகத்தில் மேற்கொள்ளும் குளியல் தன்னை பத்து வயது இளமையானவராக தோற்றமளிக்கச் செய்யும் என சாங் நான் எண்ணியிருந்தார்.

ஆனால், குளித்துக்கொண்டிருந்தபோது தனது அந்தரங்க உறுப்பில் அதிக வலியை அவர் உணர்ந்தார். மீனொன்று தனது ஆண்குறி வழியாக உடலினுள் செல்வதை அவர் அறிந்தார்.

இது தொடர்பில் சாங் நான் தெரிவிக்கையில், ‘நான் குளிப்பதற்காக தடாகத்தினுள் இறங்கிபோது எனது அந்தரங்க உறுப்பின் முனைக்கு அருகில் விலாங்கு மீனொன்று இருப்பதை உணர்ந்தேன்.  ஆனால் திடீரென எனது உடலில் சடுதியாக வலியேற்பட்டது. அப்போது எனது உறுப்பின் மறுமுனையை விலாங்குமீன் அடைந்துவிட்டதை அறிந்தேன’ எனக் கூறியுள்ளார்.

‘நான் அந்த விலாங்கு மீனை பிடித்து வெளியில் எறிவதற்கு முயன்றேன். ஆனால் அது நழுவிச்சென்று எனது உறுப்பிற்குள் காணாமல் போய்விட்டது’ எனவும் சாங் நான் கூறினார்.

இறந்த நிலையில் அம்மீன் சிறுநீர் பையிலிருந்து அகற்றப்பட்டது.

இது குறித்து சத்திரசிகிச்சை நிபுணர் ஜின் வோங் தெரிவிக்கையில், ‘விலாங்கு மீனாது இயற்கையாகவே நழுவிச் செல்லும் தன்மைக்கொண்டது. அதனால் அந்த விலாங்கு மீனாது மேற்படி மனிதரின் அந்தரங்க உறுப்பில் இலகுவாக ஊடுறுவியிருக்க முடியும்’ என்றார்.

Athirchi.com

மதக்கலவரத்தையும் சாதிகலவரத்தையும் உருவாக்கி உயிரை பலி வாங்கும் பிள்ளையார்!

விநாயகர் சதுர்த்தி, தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த விழா மிகச்சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளப்படும். ஒரு சில வட இந்தியர்கள் வாழும் பகுதிகளில் அவரவர்களின் வீடுகளில் மிக எளிமையாக கொண்டாடப்பட்டு வந்தது தமிழகமும் அமைதியாக இருந்தது.

இந்த அமைதியை தமிழகத்தில் விரும்பாத ஒருசில ராமகோபாலன் வகையறாக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை மதங்களுக்குள் மோதலை உருவாக்கி ஓட்டுக்கள் பொறுக்க ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் அதை புகுத்தி மத கலவரம் ஏற்பட்டதையும் அதனால்  ஒரு சில இடங்களில் பல உயிர்கள் கொல்லப்பட்டதையும் நாடே அறியும்.
அதில் ஒரு பகுதியாக இந்த வருடம்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆந்திரா மாநில குர்நூல் மாவட்டம் அதொனியில் மதக்கலவரம் ஏற்பட்டு இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர் மற்றும் பன்னிரெண்டு பேர் படுகாயமுற்றிருக்கின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும்  காவலர்களும் இதில் அடக்கம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் சென்றவர்கள் கஜிபுராவில் உள்ள மதினா மஸ்ஜித் வழியாக மேளதாளம் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் சென்றுள்ளனர். பொதுவாகவே வழிபாட்டு தளங்கள் முன்பாக மேள தாளம் அடித்துச்செல்ல தடை உள்ளது. அதையும் மீறி லுஹர் தொழுகை நடந்துகொண்டிருந்த நேரத்தில் அதிக சப்தத்துடன் மேள தாளம் அடித்துச்சென்றுள்ளனர். முஸ்லிம்கள் மேளதாள சத்தத்தை சிறிது தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஊர்வலம் சென்றவர்களோ மஸ்ஜிதின் மீது கல் எரிந்ததுடன் கலவரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
கலவரகாரர்கள் மஸ்ஜிதில் நுழைந்து தீ வைக்கவும் முயற்சித்துள்ளனர். மேலும் பள்ளியின் மினாராக்களை சேதப்படுத்தியும் உள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிர் இழந்துள்ளனர். 
முஸ்லிம்களின் வீட்டினுள் புகுந்து சமையல் எரிவாயு சிலிண்டரை வெடிக்கச் செய்ததுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான 10  லாரிகளையும் தீக்கிரையாக்கி சொத்துக்களுக்கு சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.
சியாசாத் இணையதள நிருபர் சிராஜுதீன் சம்பவ இடத்திற்கு சென்று செய்தி சேகரித்து கொண்டிருந்தார் அவருடைய இருசக்கர வாகனமும் கேமராவும் தீக்கிரையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவம் குறித்து உள்ளூர்வாசியான அலி ஹஸ்மி இது ஒரு திட்டமிட்ட கலவரம் எனக்கூறியுள்ளார்.
இவர் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது, ஊர்வலத்தை அமைதியாக நடத்த வேண்டும் என்று அவர்கள் உண்மையிலேயே நினைப்பவர்களாக இருந்திருப்பார்களேயானால், அவர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டதும் அமைதியாக ஊர்வலத்தை நடத்தியிருப்பார்கள். ஆனால் வேண்டுகோளை புறந்தள்ளி கலவரத்தில் ஈடுபட்டதை வைத்து பார்க்கும்போது கலவரம் ஏற்படவேண்டும் என்று திட்டமிட்டே வந்ததுபோல் தெரிவது உண்மை.
கலவரத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் கலவரத்தை நிறுத்த இயலவில்லை எனவே  போலீசார் வானத்தை நோக்கி சுட்டு கலவரத்தை நிறுத்தியுள்ளனர். அங்கு மூன்று நாட்களுக்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“இஸ்லாமியர்களுக்கும் இந்து மக்களுக்குமிடையே கலவரத்தை ஏற்படுத்தி உயிரை பலி வாங்கிய இந்த பிள்ளையார் ஊர்வலம் இந்த வருடம் தமிழகத்தில் இந்து மதமக்கள் மத்தியிலேயே ஜாதிக்கலவரமாக மாறியதுதான் கொடுமையிலும் கொடுமை. “
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வருடம் தோறும் அந்த ஊர் சார்பில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஒரு இடத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்படும். அந்த பிள்ளையாரை அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு நடத்தி, ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பார்கள்.
இந்த வருடம் தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாகவும், இதர மக்கள் தனியாகவும் பிள்ளையார் சிலைகளை வைத்துள்ளனர். இறுதியாக ஊர்வலம் இதர மக்கள் வசிக்கும் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால், தங்கள் பக்கம் ஊர்வலம் வரும்போது, மேளம் தாளம் இல்லாமல், எந்தவித சத்தமும் இல்லாமல் செல்ல வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல்துறை உதவியுடன் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பிள்ளையார் சிலையை மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்துள்ளனர்.
போலீஸ் உதவியுடன் பிள்ளையாரை கரைத்தவர்கள், சத்தம் போடாமல் போகச் சொன்னவர்களை, சம்மந்தப்பட்ட தெருவிலேயே ஆபாச வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது.
தாங்கள் வசிக்கும் தெரு வழியாகத்தான், இதர மக்கள் தங்கள் விவசாய வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்பதால், அவர்களை இந்த வழியாக வரக் கூடாது என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அந்த வழியாகச் சென்ற சுப்பிரமணியன் என்பவரை தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் தாக்கியுள்ளனர்.
இந்த செய்தி இருதரப்புக்கும் பரவியதையடுத்து, இருதரப்புக்கும் மோதல் உருவாகியுள்ளது. இந்த மோதலில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதில் இருவர் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் மோதல் உருவாகாமல் தடுப்பதற்காக கடலூர் மாவட்ட எஸ்பி பகலவன் தலைமையில், பண்ருட்டி டிஎஸ்பி, சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரஜேந்திரன், விருத்தாசலம் டிஎஸ்பி அறிவழகன், திட்டக்குடி டிஎஸ்பி வனிதா உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
மேலும்,காஞ்சிபுரம் அருகே நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் இடையே இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் பெண் ஒருவரும் பலியாகியுள்ளார்.காஞ்சிபுரம் பாரதி நகர் பகுதியில் நடந்த ஊர்வலத்தில் இருத்தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினரும் மாறிமாறி தாக்கி கொண்டார்கள். இந்த மோதலில் வையாவூர் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரின் மனைவி பவானி என்பவர், கலவரக்காரர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்து மத ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் பிள்ளையாரை வழிபாடு நடத்தி கொண்டு சென்று தண்ணீரில் கரைப்பது வழக்கம் என்று கூறிதான் இந்த விழா தமிழகத்தில் உட்புகுத்தப்பட்டது. ஆனால் இந்த பிள்ளையார் வழிபாட்டால் சாதி மோதல் உருவாகி ஒருவர் இறந்தும் 3 பேர் கவலைக்கிடமாகவும் உள்ளது நமக்கு கவலையாக உள்ளது. 
எனவே மக்களே சிந்தித்து பாருங்கள் இந்தபிள்ளயார் ஊர்வலத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதுடன் பல உயிர்கள் பலியாவதற்கும் காரணமாக இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
அவர்கள் கடவுளாக மதிக்கக்கூடிய ஒரு சிலையை வழிபட்டு சிறப்பு செய்து பிறகு அந்த சிலையை கொண்டு சென்று கழிவு நீர் செல்லக்கூடிய வாய்க்காலிலும்,அசுத்த நீர் நிலைகளிலும், சாக்கடைகளிலும்,கடல் உள்ள ஊர்களில் கடல்களிலும் சிலைகளை குப்புறத்தள்ளி உடத்து கால்களால் மிதித்து கரைத்து வருகின்றனர். இது அவர்கள் கடவுளை அவர்களே அவமதிப்பது போல் உள்ளது. 
இது போன்ற விழாக்களில் இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாத இஸ்லாமிய பெயர் தாங்கிகளும் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை பேணுகிறோம் என்ற பெயரில் ஈமானை இழக்கும் வேதனையான சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. 
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 78 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கடலூர் கடலில் கரைக்க, மார்க்கெட் கமிட்டி முன் ஊர்வலம் துவங்கியது. பஸ் நிலையம் முன் விநாயகர் சிலைகளுக்கு, இஸ்லாமியர்கள்(?) சார்பில், அவுலியா தர்கா டிரஸ்டி யாசீன், பாபு, தே.மு.தி.க., நகர செயலர் அக்பர் அலி உள்ளிட்டோர், இனிப்பு கொடுத்து வரவேற்பு அளித்தனர். என்ற செய்தியையும் நாழிதழ்கள் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மும்பையில் பிரசித்தி பெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு அம்சமாக இடம்பெற்ற பிள்ளையார் சிலை கரைப்பில், நண்பர்களுடன் சென்று உதவிய முஸ்லிம் பெயர் தாங்கி இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.
ஆட்டம் பாட்டம், கொண்டாட்டங்களுடன் நடைபெறும் இந்த பிள்ளையார் சதுர்த்தி விழாவில் பிற மதத்தின் பெயர் தாங்கிகளும் கூட கலந்துகொள்வதுண்டு.
மும்பையில் கடந்த வியாழன்று(01-09-2011) தொடங்கிய பிள்ளயார் சதுர்த்தி விழா, 10 நாட்கள் நடைபெறும்.நகர் முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிலைகள் அமைக்கப்பட்டு கணபதி மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பிள்ளையார் சிலை 3,5,7 மற்றும் 10 ஆவது நாட்களில் மும்பையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.
அதன் ஒரு அம்சமாகவே மும்பை அந்தேரி பகுதியில் உள்ள “சாத் பங்களா” (ஏழு பங்களா) என்ற இடத்தில் பிள்ளையார் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த விழாவில் தமது இந்து நண்பர்களுடன் சேர்ந்து விழா ஏற்பாடுகளை கவனிப்பது முதல் அனைத்து நடவடிக்கைகளிலும் லச்சாயா என்ற 20 வயது இஸ்லாமிய பெயர் தாங்கிய இளைஞர் ஒருவரும் கலந்துகொண்டிருக்கிறார்.
பிள்ளையார் சிலை கரைப்பு ஊர்வலம் தொடங்கியவுடன், நண்பர்களுடன் சேர்ந்து ஆடிப்பாடி, அருகிலுள்ள கடற்கரைக்கு சென்ற லச்சாயா, சிலையை கரைக்க நண்பர்களுடன் சேர்ந்து கடலில் இறங்கினார்.
அப்போது கடலுக்கு அடியில் திடீரென ஏற்பட்ட வேகமான நீரோட்டம் லச்சாயா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை நீருக்குள் இழுத்து சென்றது. அதில் லச்சாயா, கடலுக்குள் மூழ்கி உயிரிழந்துவிட்டார்.
உயிரிழந்த லச்சாயா,கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.உடல் ஊனமுற்ற தமது பெற்றோரைக் காப்பாற்றுவதற்காக மும்பை வந்து, தமது மாமா வீட்டில் தங்கியிருந்தபடியே வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் குடும்பத்தின் ஒரே வருவாய் ஈட்டக்கூடிய நபரான லச்சாயாவை இழந்தது அவரது பெற்றோர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
ஒரு மனிதனின் இறுதி நிலை எவ்வாறு அமைகிறதோ அதை வைத்தே மறுமையில் இறைவன் நமக்கு கூலி தருவான் இது போன்ற சிலை கரைப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மரணித்தவரின் நிலை?. எனவே இஸ்லாமிய பெயர் தாங்கிகளே சிந்திப்பீர்!!
இதில் ஏதோ விஷேஷம் இருப்பதாக நினைத்துக்கொண்டு தினமும் கூலி வேளைக்கு செல்லும் மக்கள் கூட தங்கள் கூலிப்பணத்தை கொண்டு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கி பூஜை செய்து அதை சாக்கடையில் தள்ளும் அவலமும் நடக்கிறது. இதனால் இந்தியா முழுக்க பல கோடி ரூபாய்கள் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் வீனடிக்கப்படும் வேதனையையும் நாம் காண்கிறோம்.
மேலும் இதுபோன்ற செயல்களால் சுற்றுச்சூழலுக்கு கேடுகளும், இதனால் மிகப்பெரிய பாதிப்பும் மக்களுக்கு ஏற்படும்,என்பதையும் கவனத்தில் கொண்டு ஆட்சியாளர்கள் மக்களுக்கும்,மக்களின் உயிர்களுக்கும், கேடு விளைவிக்கக்கூடிய,மதக்கலவரங்களையும், ஜாதிக்கலவரங்களையும் ஏற்படுத்தி வரும் இந்த கலவர ஊர்வலத்தை தடை செய்தால் மட்டுமே நமது நாடு அமைதிப்பூங்காவாக இருக்கும் என்பதை உணர்ந்து உடனே தடை செய்ய முன் வர வேண்டும்.
மதக்கலவரத்தை ஏற்படுத்தப்பட்ட ஊர்வலம் அவர்களுக்குள்ளேயே ஜாதிக்கலவரமோதல் ஊர்வலமாக மாறியதில் பிள்ளையாரின் நிம்மதி பறி போயிருக்கும் என்பது மட்டும் உண்மை.
நன்றி: உணர்வு வார இதழ்

 

சவூதி: இனி பெண்களுக்கும் வாக்குரிமை;தேர்தலில் நிற்கும் வாய்ப்பு!

 

 

 

இஸ்லாமிய மத சட்டத்திற்குட்பட்டு அரசாட்சி செய்வதாகக் கூறும் சவூதி அரபியாவில், இனி பெண்களும் சுயமாகத் தேர்தலில் நிற்கவும், தம் விருப்பப்படி வாக்களித்துத் தேர்ந்தெடுக்கவும் செய்யலாம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷூரா கவுன்சில் எனப்படும் சவூதியின் நாடாளுமன்றமான ‘அரசாலோசனை மண்டபம்’ நேற்று மீண்டும் கூடிய போது, சவூதி மன்னர் அப்துல்லாஹ் இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை பலத்த கையொலி வரவேற்புகளுக்கிடையே வெளியிட்டார். “இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே, மூத்த மார்க்க அறிஞர்களின் ஆலோசனை பெற்றே இவ்வறிவிப்பு செய்யப்படுகிறது” என்றார் மன்னர்.

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் முதல் சவூதி பெண்டிர் தேர்தலில் நின்று வென்று  ஷூரா கவுன்சிலிலும் பங்கு பெறலாம் என்றும் தேர்தலில் வாக்குரிமையும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் மன்னர் தனது ஐந்து நிமிட தொடக்க உரையில் குறிப்பிட்டார். (இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு எதிர்வரும் வியாழன் அன்று சவூதி நாடு தயாராகி உள்ளது இங்குக்  குறிப்பிடத்தக்கது)

சவூதி அரேபியாவின்  சமூக அரசியல் மாற்றங்களின்  முதல்படியாக இவ்வறிவிப்பு கருதப்படுகிறது. மேலும்  பாலினங்கள் ஒன்று சேர்ந்து கூட்டங்கூட தடை உள்ள சவூதி அரேபிய சமூகத்தில் இவ்வறிவிப்பு கலவையான உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

. “இது மகத்தான நற்செய்தி, இறுதியில் பெண்குரல் செவிசாய்க்கப்பட  வழி கோலப்பட்டுள்ளது ” என்று  சவூதி எழுத்தாளரும், பெண்ணுரிமைப் பேராளருமான வஜிஹா அல் ஹுவைதர் மன்னரின் அறிவிப்பை மகிழ்ந்து  வரவேற்றுள்ளார்.  “பெண்களுக்கான மற்ற தடைகளையும், குறிப்பாக வாகனம் ஓட்டுவதில் , ஆண் துணையின்றி விழாக்கள் நடத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும்  மன்னரின் நேற்றையஅறிவிப்பில், பெண்கள் வாகனமோட்டுவது குறித்த எந்தக் குறிப்பும் இல்லை. (சட்ட ரீதியாக சவூதியில் பெண்கள் வாகனமோட்ட தடை இல்லை எனினும், பெண்களுக்கு வாகன உரிமம் வழங்கப்படுவதில்லை என்பது அறியத்தக்கது )

குஜராத் முஸ்லிம்கள் படுகொலை: நரபலி மோடிக்கு எதிராக சாட்சி சொன்ன ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்து உள்ளே தள்ளிய நரபலி மோடி!!

குஜராத் முஸ்லிம்களை படுகொலை செய்த மோடிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை, உள்ளூர் நீதிமன்றே விசாரித்துக் கொள்ளலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவித்தை தொடர்ந்து நரபலி மோடி ஹிட்லரை மிஞ்சம் தனது அராஜக போக்கை ஆரம்பிக்க துவங்கி விட்டான்.

குஜராத் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சமீபத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் தத் மோடிக்குஎதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னதுஅனைவருக்கும் நினைவிருக்கலாம்.

”மோடி தான் கலவரத்தை கண்டு கொள்ளாமல் இருக்க சொன்னார்” என பகிரங்கமாக சாட்சி சொன்ன ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் தத் அவர்களை நேற்று மோடி அரசு கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது.

”ஏய் நான் யாரு தெரியுமா எனக்கு எதிரா சாட்சி சொன்ன, உன்ன ஃபொர்ஜரி கேஸ்ல உள்ள போட்ருவேன்” என்ற வில்லன்களின் டயலாக்கை வில்லனுக்கேல்லாம் வில்லனான மோடி தற்போது நடைமுறை படுத்தியுள்ளான்.

ஆம் , சஜ்ஜீவ் தத் மீது ஃபொர்ஜரி கேஸை புக் பன்னி உள்ளே தள்ளியுள்ளார் இந்த மோடி!. இவர் மீது 341, 342, 189, 193 , 195 இத்தனை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த அளவிற்கு எனில் கைது செய்த சஞ்சீவ் விற்கு தனது வளக்கரிஞரை சந்திக்க கூட அனுமதி இல்லை.

இது குறித்து அவரது மனைவி சுவேதா கமிஷனுருக்கு அளித்ததுள்ள புகாரில் ”எனது கவனர் கொலை செய்யப்படும் அபாயத்தில் உள்ளார். ஏனெனில் போலி என்கவுண்டர்களுக்கு பேர் போன சிட்டி கிரைம் போலிசாரால் எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞரை சந்திப்பதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. எனவே அவரது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்” எனக் தெரிவித்துள்ளார்.

மோடி இது போன்று  தனது ஹிட்லர் தனத்தை அதிகரிக்க காரணம், ”மோடி ஊரிலேயே மோடி தனது வழக்கை விசாரித்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது தான்.

பிஜேபி இந்த கைதை வரவேற்றுள்ளது. இது நியாயமான நடவடிக்கையாம்.

அதே நேரத்தில் காங்கிரஸ் இது பற்றி கூறுகையில், சஞசீவ் தத் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மேலும் மேலும் சோதனைகள் வருகின்றது குஜராத்தில் சட்ட ஒழுங்கே இல்ல எனத் தெரிவித்துள்ளது.

மோடியின் பிரதமர் கனவிற்கு நெருடலாக இருப்பது குஜாரத் முஸ்லிம்கள் படுகொலை, இதில் மோடி தான் வெற்றி  பெற, இன்னும் எத்தன நபர்களை பலியாக்க போகின்றானோ தெரிவில்லை!…

அபு அஜீபா

சவூதி: வாயுக் குழாய் வெடித்து நான்கு தொழிலாளர் காயம்

File:Dammam Highway.jpgசவூதி: தம்மாம் நகரில் உள்ள இரண்டாவது தொழிற்பேட்டையில், குளிர்பானங்களுக்கான தகரடப்பாக்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

அத் தொழிற்சாலையில் ‘வாயுக் கசிவு’ இருந்ததால், தொழிலாளர்கள் சிலர் அதனை சரிசெய்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வாயு வெடித்து வெளிப்பட்டதால், மூன்று இலங்கைத் தொழிலாளர்களும், ஒரு இந்தியத் தொழிலாளரும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சரத் அனில், அனில், லயோனல் என்கிற மூன்று இலங்கைத் தொழிலாளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், கண்பார்வை பாதிக்கப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கரீம் என்கிற மற்றொரு தொழிலாளர் நிலை ஒருவாறாக முன்னேற்றமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அத்தொழிற்சாலை அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே இருந்தது என்றும், பதினைந்து வருடத்தில் இதுவே முதல் விபத்து என்றும் அத் தொழிற்சாலையின் மனிதவளப் பிரிவு மேலாளர் அஹ்மத் அல்கிலைகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “தொழிலாளர்களை பாதுகாப்பதே எங்கள் முதல்வேலை” என்றார் அவர்.

இதற்கிடையில், இந்த வாயுக் கசிவின் பரவல் அந்தப் பகுதிகளில் உணரப்படுவதால், அப்பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ராக்காவில் உள்ள,இந்திய தூதரகப் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

பலருடன் தொடர்பு வைத்து உறவு கொண்டதால் ஷமீலாவைக் கொன்றேன்- கணவர் பரபரப்பு கடிதம்.

கோபிசெட்டிபாளையம் என்னைக் காதலித்து மணம் புரிந்த ஷமீலா, என்னைத் தவிர மேலும் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, நேரம் காலம் இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்ததால்தான் அவளைக் கொன்றேன். மேலும் டிவியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் நடிகனும் நேரம் காலம் இல்லாமல் தொடர்ந்து அவளுடன் தொடர்பு வைத்திருந்தான். இந்த ஆத்திரத்தையெல்லாம் அவளிடம் காட்டிக் கொலை செய்தேன் என்று தற்கொலை செய்து கொண்ட கணவர் மகேஷ் குமார் பரபரப்பு கடிதம் எழுதி வைத்துள்ளார்.Mageshkumar and Shameela மூணாறில் சென்னையைச் சேர்ந்த பெண் ஷமீலா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பெண்ணைக் கொன்றதாக கருதப்பட்ட மகேஷ் குமார் அவரது கணவர் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால் மகேஷும் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் பட்டிமணியக்காரன் பாளையத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் வழக்கில் பெரும் திருப்பு முனை ஏற்பட்டது.

 தற்கொலை செய்வதற்கு முன்பு மகேஷ் குமார் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட கடிதங்களை எழுதி வைத்திருந்தார். அதில் போலீஸாருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் பல பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.  மேலும் படிக்க…

 

குவைத் இளவரசருக்கு மரண தண்டனை!

சகோதரி மகன் உறவுமுறையிலுள்ள சக இளவரசர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற குற்றத்துக்காக, குவைத் இளவரசர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

குவைத் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இளவரசர் ஷேக் ஃபைஸல் அல் அப்துல்லாஹ் அல் சபாஹ் என்கிற அரச குடும்பத்து இளவரசர் தன் சகோதரி மகன் உறவுமுறையிலுள்ள ஷேக் பாசில் சாலிம் சபா அல்சலிம் என்கிற மற்றோர் இளவரசரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக, சட்ட அடிப்படையில் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளியான இளவரசர் ஷேக் ஃபைஸல் குவைத் இராணுவத்தில் ‘கேப்டன்’ அந்தஸ்தில் பணிபுரிபவர் ஆவார்.

கடந்த 2010 ஜூன்மாதம் கொலையுண்ட ஷேக் பாசிலைக் காண அவரது அரண்மனைக்கு வந்த ஷேக் ஃபைஸல் ‘உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்று அவரைச் சற்று வெளியே அழைத்ததாகவும், அதன் பின் ஒருசில நிமிடங்களில் துப்பாக்கி வெடித்த சப்தம் கேட்டு மற்றவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது, இரத்தவெள்ளத்தில் ஷேக் பாசில் கிடந்ததாகவும், அவசரமாக முபாரக் அல் கபீர் மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றும் பலனின்றிப் போனதாகவும் செய்தி வெளியானது.

அரசில் எந்தப் பொறுப்பும் வகிக்காததால், ஷேக் பாசிலின் கொலைக்கு எந்த அரசியல் காரணமும் இல்லை என்று அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.

கொலையுண்ட இளவரசர் ஷேக் பாசில், 1977 வரை குவைத் மன்னராக இருந்த ஷேக் சபாஹ் சாலிம் அல் சபாவுடைய பேரனாவார். அவருடைய தந்தை ஷேக் சாலிம் 1975 வரை அமெரிக்கா, கனடா, வெனிசுலா நாடுகளில் தூதராகப் பொறுப்புவகித்தவர் ஆவார். அதன்பின் நாடு திரும்பி, மந்திரிசபையில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருந்தார். எனினும், அண்மையில் உடல்நலக் காரணத்தால் அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

kadayanallur.org

ஆர்.எஸ்.எஸ் தனது கிளைகளை ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்களில் விரிவாக்க திட்டம்!

 

 

 

 

 

 

மும்பை:ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலும் இளைஞர்களை தனது அமைப்புகளில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முக்கியப் பகுதியாக ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்த வாரம் ஆர்.எஸ்.எஸ்யின் தேசிய செயற்குழு கோரக்பூரில் கூடியது. அக்கூட்டத்தில் பேசிய சங்க பரிவார தலைவர் மோகன் பகவத் தற்போது உலகில் உள்ள நவீன தொழிற்நுட்ப சவால்களை சந்திக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் புதிய வழிமுறைகளை மேற்கொள்ளாதது குறித்து தாம் கவலை தெரிவிப்பதாகவும் மேலும் சங்க பரிவார அமைப்புகளை தற்போதைய தொழிற்நுட்பத்திற்கு ஏத்த வகையில் உருவாக்க வேண்டும் என்பதில் தாம் ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார். எனவே ஆர்.எஸ்.எஸ்ஸை தொழிற்நுட்ப ரீதியில் முன்னேற்றும் பொறுப்பை தங்களின் கிளை அமைப்பான சேவா பாரதியிடம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் அதனுடைய வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்களை குறித்து கோரக்பூரில் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கேட்டு தெரிந்து கொண்டாதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

மேலும் பெரு நகரங்களில் தங்களுடைய அமைப்பை வேரூன்ற செய்வதற்காக முக்கிய நகரங்களுக்காக தனித்தனியே இணையத்தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் நகரங்களிலும் அதன் சுற்றியுள்ள ஊர்களுக்கும் விரைவில் இணையதளங்களை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இளைஞர்கள் மத்தியில் தன்னுடைய கொள்கைகளை பரப்புவதற்காக தனது வாழ்நாளில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக பிரசாரக்குகளாக பணிபுரிய இளைஞர்களை தயார்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரசாரக் என்றால் திருமணம் புரியாமல் வேறு எந்த பணிகளுக்கும் செல்லாமல் ஆர்.எஸ்.எஸ்ஸில் முழு நேர ஊழியர்களாக பணிபுரிய வேண்டும். இதற்கு பல இளைஞர்கள் விரும்பாததால் ஆர்.எஸ்.எஸ் தற்போது தன்னுடைய செயல் முறையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இனி பிரச்சாரக்குகள் தன்னுடைய வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அந்த அமைப்பிற்காக முழு நேர ஊழியர்களாக பணி புரிந்தால் போதுமானது என்றும் பிறகு அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்றும் முடிவெடுத்துள்ளது. தற்போது ஆர் எஸ் எஸ் அமைப்பில் பிரசாரக்குகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பணிகளை தொடர சமூக சேவை அமைப்புகள் என்ற முகமூடியில் நடத்தும் கிளைகளின் மூலம் பிரசாரக்குகளை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும் : நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கண்டனம்!

புது டெல்லி : “நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது” என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்” என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார்.

குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே மின்னஞ்சல்கள் அல்லது அலைபேசிகளில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மூலம் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் குறித்து முடிவுக்கு வருவதை வண்மையாக கண்டித்தார். “உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் கையில் கிடைக்கும் முஸ்லீம்களின் மீது காவல்துறை பொய் வழக்கு போடுகிறது” என்றார்.

“அது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரபரப்புக்காக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் கலந்துரையாடல்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகவோ அல்லது அபாராதம் மூலமாகவோ, அரசின் விளம்பரங்களைக் கொடுக்காமல் தடுப்பதன் மூலமாகவோ தேவைப்பட்டால் ஊடக உரிமங்களை ரத்து செய்வதன் மூலமாகவோ திருத்தப்பட வேண்டும்” என்றும் மார்க்கண்டே கட்ஜ் குறிப்பிட்டார்.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் டெல்லி என பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் குற்றவாளிகள் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் மூலம் இளம்பெண்களை வசப்படுத்திய இளைஞனுக்கு 50 ஆண்டுகள் சிறை

பேஸ்புக் தகவல் பரிமாற்றம் மூலம் இளம் பெண்கள் பலரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுக்கு 50 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் ஜொகன்னஸ்பேர்க் நகரைச் சேர்ந்தவர் தாபோ பெஸ்டர் (வயது-22). இவர் பேஸ்புக்கில் மொடலிங் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது பெயரை தோமஸ் பெஸ்டர் என்றும், தன்னிடம் வருவோருக்கு மொடலிங் வாய்ப்பு அளிப்பதாகத் தெரிவித்திருந்தார். இதை நம்பிய பல இளம்பெண்கள், தாபோ பெஸ்டரின் வலைக்குள் சிக்கியுள்ளனர். அவர்களில் பல பெண்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார் தாபோ. மேலும், இரண்டு பணக்காரப் பெண்களை ஆயுதம் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களையும் பறித்துக் கொண்டார். இப்படியாக குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த தாபோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்ற விசாரணையின்போது கதறி அழுத தாபோ, தனக்கு பெற்றோர் யார் எனத் தெரியாது எனவும், தன்னை வளர்த்த ஒரு குடிகார பாட்டியினால் பலமுறை செக்ஸ் கொடுமைகளை அனுபவித்ததாகவும் தெரிவித்தார்.

அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதி பெண்களைக் கற்பழித்து, அவர்களிடம் கொள்ளையிலீடுபட்ட பெஸ்டன், சமுதாயத்திற்கு ஓர் ஆபத்தான நபர். தென் ஆபிரிக்காவில் ஆண்டுதோறும் 56ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெஸ்டனின் குற்றங்களுக்காக 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடாஃபி லிபிய மக்களுக்குச் செய்த நன்மைகள்.

விடுதலை வீரர்களின் நண்பன்

உலக எண்ணெய் வளத்திலேயே லிபியாவில் உள்ள எண்ணெய் வளம்தான் மிகத் தூய்மையானது. சதாம் ஹுசேயின் அரபு நாடுகள் தமது எண்ணெய் விலையை அமெரிக்க டொலர்களில் நிர்ணயம் செய்யாமல் யூரோ நாணயத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியதற்காக கொல்லப்பட்டார். மும்மர் கடாஃபி எண்ணெய விலையை தங்கத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியதற்காகக் கொல்லப்பட்டார். கடாஃபியை கொல்லாமல் உயிருடன் பிடித்து விசாரித்திருந்தால் அவர் பல ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்குக் கொடுத்த இலஞ்சங்கள் வெளி வந்திருக்கும். ஒரு மடிக்கணனி(Laptop) இலவசமாகக் கொடுத்து ஐந்து ஆண்டுகாலம் ஆட்சியில் அமர்ந்து கொள்கிறார்கள். காடாஃபியோ அள்ளி அள்ளிக் கொடுத்தார்.                                                                              புரட்சி வீரர்களின் நண்பன்.

மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களின் நண்பன்

லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

1. அனைவருக்கும் மின்சாரம் இலவசம்.
2. லிபிய வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு வட்டி அறவிடப்படுவதில்லை.
3. மக்களுக்கு வீடு என்பது அடிப்படை உரிமை. லிபிய நாட்டின் அனைத்து மக்களுக்கும் வீடு கிடைக்கும் வரை தனது தந்தைக்கு கடாஃபி வீடு கொடுக்கவில்லை. கடாஃபியின் தந்தை இறக்கும் வரை ஒரு கூடாரத்திலேயே வசித்தார்.
4. லிபியாவில் திருமணமான தம்பதிகளுக்கு அறுபதினாயிரம் டினார்கள் (50,000அமெரிக்க டொலர்கள்) இலவசமாக அவர்கள் வீடு வாங்கவும் வாழ்க்கையை ஆரம்பிக்கவும் வழங்கப்படும்.
5 அனைவருக்கும் இலவசக் கல்வி. கடாஃபி ஆட்சிக்கு வரமுன் லிபியாவின் படித்தவர்கள் 25%. இப்போது 83%
6. அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.
7. லிபிய மக்கள் எவராவது விவசாயம் செய்ய விரும்பினால் அவர்களுக்கு இலவசக் காணி, வீடு, விவசாய உபகரணங்கள் வழங்கப்படும்.
8. லிபிய மக்களில் எவருக்காவது தேவையான கல்வியோ அல்லது மருத்துவ வசதியோ லிபியாவில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வெளி நாடு சென்று அவற்றைப் பெற அதற்குரிய செலவை லிபிய அரசு பொறுப்பேற்கும். அத்துடன் மாதமொன்றுக்கு அவர்களுக்கு அமெரிக்க டாலர்கள் 2300ஐ இலவசமாக வழங்கும்.
9 லிபிய மக்கள் எவராவது மகிழூர்தி(Car)வாங்க விரும்பினால் அரைவாசிச் செலவை லிபிய அரசு வழங்கும்.
10 லிபியாவில் பெட்ரல் விலை US $0.14. per litre.
11 லிபியாவிற்கு வெளிநாட்டுக் கடன் எதுவுமில்லை.அதன் வெளிநாட்டுச் சொத்து $150பில்லியன்கள்
12. பட்டதாரி ஒருவருக்கு வேலை கிடைக்கும் வரை சராசரி பட்டதாரிக்குரிய சம்பளத்தை லிபிய அரசு வழங்கும்.
13. லிபிய எண்ணெய் விற்பனை வருமானத்தின் ஒரு பகுதி நேரடியாக ஒவ்வொரு லிபிய மக்களினது வங்கிக்கணக்கில் வைப்பிலடப்படும்.
14. பிள்ளை பெறும் ஒரு தாய்க்கு அரசு US $5,000 வழங்கும்.
15 லிபியாவில் 40துண்டங்கள் அடங்கிய பாணின் விலை US $0.15
16. லிபிய மக்களில் 25% மானோர் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்.
17. உலகத்திலேயே பாரிய நீர்ப்பாசனத் திட்டம் – செயற்கை ஆறு லிபியாவில் மேற்கொள்ளபட்டது.
18. ஆபிரிக்காவிற்கான தொலை தொடர்புச் செய்மதியை ஒழுங்கு செய்ய கடாஃபி பணம் கொடுத்தார்.
19. ஆபிரிக்கக் கண்டத்திலேயே லிபியா மிகச் செல்வந்த நாடு.
20. ஆபிரிக்கக் கண்டத்திலேயே வாழ்கைத் தரம் மிக உயர்ந்தவர்கள் லிபியர்கள்.

கடாஃபிக்கு எதிரான கருத்துக்கள்·                     லிபியாவின் வெளிநாட்டுச் சொத்து $150பில்லியன்கள் ஆனால் கடாஃபியின் சொத்து $200 பில்லியன்கள். ·                     கடாஃபி சவுதி மன்னரிலும் பார்க்க மூன்று மடங்கு செல்வந்தர்.·                     கடாஃபி சிறப்பாக பொருளாதாரத்தை நிர்வகிக்கவில்லை.லிபிய வருமானத்தின் 5% கடாஃபியைப் போய்ச் சேரும். கடாஃபி நாட்டின் கட்டமைப்புக்களை(infrastructure) சரியாக அபிவிருத்தி செய்யவில்லை

அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கு கொழும்பு வந்திருந்தபோது கடாஃபியின் படத்தில் கையெழுத்து வாங்கப் பல இலங்கை அதிகாரிகள் திரண்டனர்.

கடாஃபியை மேற்குலகினர் ஏன் வெறுத்தனர்.·                     கடாஃபியின் பெயரை எப்படி எழுதுவது என்பதில் மேற்குலக ஊடகங்களிடை பெரும் குழப்பம்.·                     ஆபிரிக்காவிற்கான தொலை தொடர்புச் செய்மதியை ஒழுங்கு செய்ய கடாஃபி பணம் கொடுத்தார். இதனால் மேற்கத்திய வர்த்தகர்களுக்கு பெரு நட்டம் ஏற்பட்டது.·                     கடாஃபி தனது நாட்டில் சீனாவின் முதலீட்டை அதிகரித்தார். பல அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவிற்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கினார். காடாஃபிக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தவுடன் லிபியாவில் இருந்து 30,000க்கு அதிகமான சீனர்கள் வெளியேறினர்.·                     கடாஃபி ஒரு ஆபிரிக்க நாணய நிதியத்தை உருவாக்க முயன்றார். இது மேற்குலக ஆதிக்கத்தில் உள்ள பன்னாட்டு நாணய நிதியத்திற்கு பெரும் சவாலாக அமையும்.

ஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே பயன்பாட்டுக்கு வருகிறது.

இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்லவிருக்கும் முஸ்லிம்கள் மஷாயிர் ரெயில்வேயின் முழுஅளவு பயனையும் பெறலாம் என்று மக்கா நகர ஆளுநர் இளவரசர் காலித் அல் ஃபைசல் அறிவித்துள்ளார். மஷாயிர் ரெயில்வே திட்டமானது ஹஜ் கிரியைகளுக்கான புனித இடங்களாக அறியப்படும் மினா, அரஃபாத், முஜ்தலிஃபா, பகுதிகளை இணைக்கும் புதிய ரெயில்வே திட்டமாகும்.
சவூதி அரேபியாவின் மஷாயிர் ரெயில்வே  குறித்து மக்கா ஆளுநரும், சவூதி அரேபிய மத்திய ஹஜ் கமிட்டியின் தலைவருமான இளவரசர் காலித் அல்ஃபைசல் செய்தியாளர்களிடம் விளக்கினார். “அரஃபாத்திலிருந்து மினா வரை இத்திட்டம் பூர்த்தியடைந்துவிட்டது. மேலும், வெகுவிரைவில்,  ஹரமிலிருந்து அல்ஹரமைன் தொடர் வண்டி நிலையம் வரையிலான இணைப்பும் பூர்த்தி செய்யப்படும். இந்த வருடம் ஹஜ் யாத்ரிகர்கள் முழுவீச்சில் இதன் பயனைப் பெறலாம்” மேலும், “மினாவில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் யோசனையும்  ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார் ஆளுநர் காலித்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முஸ்லிம் பொறிஞர் பால் ஆண்டர்சன், ரியாத்-தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறுகையில், “ஒருமணிநேரத்திற்கு 72,000 பயணிகளைச் சுமந்து செல்லும் இந்தத் தொடர்வண்டி, உலக அளவில் பிரயாண வசதிகளில் முதன்மையானது” என்றார். ஜப்பான், சைனாவில் மேம்படுத்தப்பட்ட தொடர்வண்டிகள் 56,000 பேர் வரை சுமந்துசெல்கின்றன”.

மஷாயிர் ரெயில்வே திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றும் பால் ஆண்டர்சன், “இது ஹஜ் புனிதப் பயணியருக்கு மிகுந்த உதவிகரமானது மட்டுமின்றி காற்று மாசுபடுவதை பெருமளவு குறைக்கிறது “ என்றும் தெரிவித்தார். மேலும், ஹஜ்ஜுக் காலத்தில்,சுமார் 120,000 பேருந்துகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் 30டன் கெடுதியான வாயுக்களிலிருந்து பாதிப்படைவதினின்றும் சுற்றுப்புற சூழல் இனி பாதுகாக்கப்படும் என்றும், இதனால் யாத்ரிகர்களுக்கு இதயப் பிரச்னைகள், ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்க முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

“ஹஜ்ஜுக் காலங்களில் இதுவரை பேருந்துகள் ஒருமணிநேரத்துக்கு ஐந்து கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் தான் சென்றுவந்துகொண்டிருக்கின்றன, இதனால் குறிப்பிட்ட இடங்களை அடைய நான்கு(அ) ஐந்து மணி நேரங்கள் தேவைப்பட்டன.  ஒருமணிநேரத்துக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்தத் தொடர்வண்டிகள் அந்தத் தூரத்தை இனி எட்டே நிமிடங்களில் அடைந்துவிடும். மேலும் சாலைப் போக்குவரத்தால் ஏற்படும் நிறுத்துமிடப் பிரச்னைகளையும் இந்தத் தொடர்வண்டிகளைக் கொண்டு தீர்த்துவிட முடியும்” என்றார் ஆண்டர்சன்.

கடாபியின் மரணம் உணர்த்தும் உண்மைகள் – ஓர் ஆன்மீக, அரசியல் அலசல்.

மாபெரும்வீரன், இராணுவத் தளபதி, ஆபிரிக்காவின் விடிவெள்ளி, அமெரிக்காவின் எதிரி இது போன்றவார்த்தைகளினால்  ஒரு காலத்தில்புகழப்பட்டவர் தான் இந்த முஅம்மர் கடாபி.

 
கடைசி நேரத்தில் கதரக் கதர அவர் கொலை செய்யப்பட்ட காட்சியை ஊடகங்கள் வாயிலாக உலக மக்கள் அனைவரும் பார்த்தார்கள். 42 வருட காலங்கள் ஓர் நாட்டை ஆட்சி செய்த தளபதி ஒருவரின் மரணம் இப்படியும் அமையும் என்பதை அன்றுதான் உலகம் நிதர்சனமாக நேரடியாக கண்டிருக்கும்.
முஅம்மர் கடாபியின் வரலாறு என்ன? அவரின் நல்ல பக்கங்கள் இருக்கிறதா? அல்லது அவர் செய்தது அனைத்துமே கெட்ட செயல்கள் தானா? என்பதைப் பற்றி நிறையப் பேருக்கு தெரியாமல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கடாபியின் உண்மை வரலாற்றைப் பற்றிய சிகப்புப் பக்கங்களை சரியாக அறியாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.
இந்த ஆக்கம் கடாபியின் வாழ்க்கையின் நல்ல செயல்பாடுகள் மற்றும் மார்க்கத்திற்கு விரோதமான மார்க்கத்தையே இழிவு படுத்த நினைத்த அவரது செயல்பாடுகள் போன்றவற்றைப் பற்றி ஆராய்கிறது.மேலும்  படிக்க.. 

நிச்சயிக்கப்படும் திருமணங்கள். – இஸ்லாமியத் தீர்வு என்ன?

இஸ்லாமிய மார்க்கம் என்பது இவ்வுலக மக்களுக்குறிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டமாகும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளிலும் நுழைந்து தெளிவான தீர்வை சொல்லும் மிகச் சிறப்பான வழிகாட்டியாகும். இம்மார்க்கத்தில் எந்தவொரு செயல்பாட்டுக்கும் வழிகாட்டுதல் இல்லாமல் இல்லை.

இப்படியிருக்கையில் நமது சமுதாயத்தினர் மத்தியில் திருமணம் பற்றிய சரியான விழிப்புனர்வோ, இஸ்லாத்தின் உண்மையான சட்ட திட்டங்களோ முறையாக சொல்லிக் கொடுக்கப்படாததினால் அல்லது அவர்கள் முறையாக கற்றுக் கொள்ளாததினால் வாழ்கைத் தேர்வு முறையில் பல தவறுகளை செய்கிறார்கள்.
 
நமது காலத்தில் பெரும்பாலும் எல்லா இடத்திலும் திருமணங்கள் பல நிச்சயிக்கப்பட்டு வருடக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. ஆனால் இது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு மிகத் தெளிவானதாகும். அதைப் பற்றியே கட்டுரை ஆராய்கிறது.

என்றும் அழகு..இளமை..ஆரோக்கியம்..கிரீன் டீ..

”நான் யாருக்கும் அடிமையில்லை, சுதந்திரமாவன்” என்று மார்தட்டுபவர்கள் கூட, தேநீரின் சுவைக்கு சுகமான அடிமைகளாக இருப்பது சுவையான விஷயம் தான். உலகிற்கு காகிதம், பட்டு போன்றவற்றை கொடையாக அளித்த சீனர்கள் தாம் தேநீரையும் அறிமுகப்படுத்தினார்கள். கி.மு.2737 ல் சீனப்பேரரசர் சென் – நுங் என்பவரால் இது கண்டுபிடிக்கப்டடதாக கூறப்படுகிறது. ”கேமலியா சைனன்ஸிஸ்” என்பது இதன் தாவரவியல் பெயராகும். ”ச்சா” என்பது சீன மொழியில் தேநீரை குறிப்பதாகும். இதுவே, பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் ”ச்சாய்” என மாறியிருக்கக்கூடும். இன்று இந்தியா உட்பட 35 க்கும் மேலான நாடுகள் ”டீ” யை உற்பத்தி செய்கின்றன. உலகின் மொத்த ”டீ” உற்பத்தி ஆண்டுக்கு 3 மில்லியன் மெட்ரிக் டன்னை தாண்டுகிறது.
தேயிலை க்ரீன் டீ, பிளாக் டீ, ஒயிட் டீ, மஞ்சள் டீ, ஊலாய் டீ என பல்வேறு வகைகளாக அவதாரம் எடுத்து உள்ளது. இவை அனைத்துமே தேயிலையில் இருந்து வந்தாலும், தயாரிக்கப்படும் முறைகளாலும், பதப்படுத்தப்படும் முறைகளாலும் வேறுபடுகின்றன. இவற்றின் விளைவாக பெரும்பாலான ”டீ” வகைகள் நல்ல மருத்துவ குணங்களை இழந்து விட, இவற்றுள் தன்மை மாறாமல் அப்படியே நம் கைகளில் கிடைப்பது ”கிரீன் டீ” மட்டுமே.
ஜப்பானில் உள்ள டோகோஹூ பல்கலைக்கழக விஞ்ஞானி ஷன்சிகுரியாமா 40,530 நபர்களை வைத்து கிரீன் டீனை பற்றி மிகப்பெரிய ஆராய்ச்சியை நடத்தினார். அது 1994 ல் தொடங்கி 11 ஆண்டுகளாக நீடித்தது. அது மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள ஹார்வேர்ட், டோக்கிலோ போன்ற எண்ணற்ற பல்கலைக்கழகங்களும் கிரீன் டீ குறித்து ஆராய்ச்சிகள் செய்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆச்சரியப்படத்தக்க ஆராய்ச்சிகளின் முடிவுகள் வாழ்நாட்களையே நீட்டிக்க கூடிய அளவுக்கு நல்ல மருத்துவ குணங்கள் கொண்டது கிரீன் டீ என உறுதிப்படுத்தி உள்ளன.
”கிரீன் டீ” யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ”ஆன்டி ஆக்சிடெண்ட்கள்” (யுவெi ழஒனையவெ)தான். அதனை ”நோய் எதிர்ப்பு சக்தி” என தமிழில் அழைக்கிறோம். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக இதில் இருக்கிறது. சுருக்கமாக சொன்னால், ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜூஸூக்கு சமம்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா..! தொடர்ந்து படியுங்கள்.. நிறைய ஆச்சரியப்படலாம்..!
சூரியனின் வெப்பம், புற ஊதாக்கதிர், மாசடைந்த காற்று, சிகரெட் மற்றும் வாகன புகை, அழுக்கான தண்ணீர் என வெளிச்சூழல்கள் அனைத்தும் நம் உடலில் ”பிரீ ரேடிகல்ஸ்” என்னும் கெடுதல் தரும் வேதிப்பொருட்களை ஏற்படுத்துகின்றன. இவைகளே நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் பாதித்து, சீரழித்து சிறிய நோய்கள் முதல் இதய, புற்று நோய்கள் வரை அனைத்து பெரிய நோய்களுக்கும் வழிவகுப்பதோடு சீக்கிரமே நம்மை முதுமை நிலைக்கு தள்ளி விடுகின்றன. கிரீன் டீயின் உயர் தர ஆன்டி ஆக்சிடெண்டன்கள் அபாயகரமான பிரீ ரேடிகல்களை சமன்படுத்தி, நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்;களை நீடிக்க செய்கின்றன. எனவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரீன் டீயின் நன்மைகள் :
இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படவதை குறைக்கிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
நமது உடலில் திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
புற்று நோய் வராமலும், புற்று நோய் செல்களை வளர விடாமலும் தடுக்கிறது.
எலும்பில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
பற்களில் ஏற்படும் பல் சொத்தையும், வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.
ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
சருமத்தை பாதுகாத்து இளமையாக வைக்க உதவுகிறது. பருக்கள் வராமலும் தடுக்கிறது.
வயதான பின் வரும் ஞாபக மறதி நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது. (அல்சீமியர்ஸ் மற்றும் பார்க்கின்சன்ஸ்)
மன அழுத்தத்திற்கும், தலைவலிக்கும் மருந்தாக செயல்படுகிறது.
மூட்டு வாதத்தை குணமாக்க உதவுகிறது.
உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
புகை, மதுவின் விளைவாக உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.
கிரின் டீ உடலுக்கு ஆற்றலை தருவதிலும், நோய் எதிர்ப்பு சக்தி தருவதிலும் நிகரற்று விளங்குகிறது.
டாக்டர். டி. செந்தில்வேல் – சென்னை

Posted by mohamraonline

சவூதி அரேபியாவின்;சூனியக்காரிக்கு மரண தண்டனை

சூனிய வேலை செய்த சவூதி பெண்ணுக்கு  அந்நாட்டுச்  சட்டப்படி நேற்று (12.12.11 ) திங்களன்று மரண தண்டனை வழங்கப்பட்டது. இத்தகவலை சவூதி அரேபிய உள்துறை அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சவூதி அரேபியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான SPA (சவூதி ப்ரெஸ் ஏஜன்சி) வெளியிட்ட அறிக்கையில், இத்தண்டனை வடக்குப் பிராந்தியமான அல்ஜவ்ப்  நகரில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. சூனிய சித்து வேலைகளை நடைமுறைப்படுத்தியமைக்காக ஆமினா த/பெ அப்துல்ஹலீம் நாசர் என்ற சவூதி பெண்மணியே இவ்வாறு மரண தண்டனை பெற்றவர் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

சவூதியில் இவ்வாண்டு இதுவரை 73 பேர் மரண  தண்டனை பெற்றுள்ளார்கள். அவர்களில் பெண்கள் எத்தனை என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆயினும் கடந்த அக்டோபர் மாதம் தன் கணவனை உயிரோடு வீட்டில் கொளுத்திய பெண்ணொருவரும் மரணத்  தண்டனைப் பெற்றிருந்தார். அதன்பின்னர், அடுத்து இந்தச் சூனிய மாது தண்டனை பெற்றுள்ளார்.

சவூதியைப் பொருத்தவரை கடந்த 2009 ஆம் ஆண்டில் 67 பெரும்   2010 ஆம் ஆண்டில் 27 பேரும் இப்பெரும் தண்டனைக்கு ஆளாகியிருந்தனர் என்று மனித உரிமைக் கழக அறிக்கை தெரிவித்துள்ளது.

மகளுடன் 34 வருடங்களாக பாலியல் உறவுகொண்ட நபருக்கு 3 வருட சிறை

தனது மகளுடன் சுமார் 500 தடவைகள் பாலியல் உறவு கொண்டுவிட்டு அதனூடாக 3 பிள்ளைகளுக்கு அப்பெண்ணை தாயாக்கிய ஜேர்மனிய நபருக்கு ஜேர்மன் நீதிமன்றமொன்று 3 வருடங்களுக்கு குறைவான சிறைத்தண்டனை விதித்துள்ளமை தொடர்பில் பெண்கள் அமைப்புகள் அதிருப்தி தெரவித்துள்ளன.

அடோல்வ் பி எனும் 69 வயதான நபருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நபர் தனது மகளை அப்பெண்ணின் 12 ஆவது வயதிலிருந்து 30 வருடங்களுக்கு மேலாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார்  என பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு உரிமை அமைப்புகள் தெரிவித்திருந்தன.

 தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கொடுமைப்படுத்தியதாக அந்நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவருக்கு 14 வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டுமென வழக்குத் தொடுநர்கள் கோரினர்.

ஆனால், நியூரம்பர்க் நகரிலுள்ள நீதிமன்றமொன்றின் நீதிபதி மேற்படி பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். இது வல்லுறவு அல்ல எனவும் சம்மதத்துடனேயே அந்நபர் உறவுகொண்டுள்ளார் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்படி நபருக்கு இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அடோல்வ்,கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த 34 வருடங்களாக 497 பாலியல் வல்லுறவுக் குற்றங்களைப் புரிந்தாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

இப்போது 46 வயதாகும் அப்பெண் அடோல்வ்வுடனான உறவுமூலம் 3 குழந்தைகளுக்கு தாயானார். அவற்றில் இரு குழந்தைகள் இறந்துவிட்டன.

இந்த உறவு முறைக்கு அவள் மிகவும் விருப்பம் என அடோல்வ் தெரிவித்துள்ளார்.

எனினும் அப்பெண் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், ‘இது குறித்து யாரிடமாவது சொன்னால் நான் உன்னை கொன்று விடுவேன். நீ எங்கு சென்றாலும் நான் உன்னை கண்டுபிடித்து கொன்று விடுவேன்’ என கூறி தன்னை தனது தந்தை அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அப்பெண் தற்போது ஜேர்மனியில் உள்ள வில்மெர்ஸ்பெச் எனும் கிராமத்தில் தனது தாயுடனும் சகோதர சகோதரிகளுடனும் வசித்து வருகின்றார்.

அப்பெண்ணும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் அடிக்கடி தாக்குதல்  மற்றும்  அடக்குமுறை குறித்த அச்சத்துடன் வாழ்ந்துள்ளனர்.

மேற்படி தீர்ப்பு குறித்து ஜேர்மனியிலுள்ள, வல்லுறவு நெருக்கடி குழுவொன்றின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘இவ்வழக்கின் தீர்ப்பு ஆச்சரியமாகவுள்ளது.  நீதிபதி இது என்னவென்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார். அந்த 12 வயது பெண் எவ்வாறான தெரிவுகளை மேற்கொண்டிருக்க முடியும்’ என்று கூறியுள்ளார்

சுனாமியால் பிரிந்த குழந்தை 7 வருடங்களுக்குப் பின் பெற்றோருடன் சேர்ந்த அற்புதம்!

டிசம்பர் 26, 2004. யாராலும் மறக்க முடியாத அந்த தினத்தில்தான் சுனாமி என்ற பேரலைகள் தாக்கி ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். தற்போது இந்த சுனாமியில் சிக்கி உயிர் இழந்து விட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் குடும்பத்தினருடம் மீண்டும் இணைந்த அற்புத சம்பவம் நடைபெற்றுள்ளது.டிசம்பர் 26, 2004. யாராலும் மறக்க முடியாத அந்த தினத்தில்தான் சுனாமி என்ற பேரலைகள் தாக்கி ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். தற்போது இந்த சுனாமியில் சிக்கி உயிர் இழந்து விட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் குடும்பத்தினருடம் மீண்டும் இணைந்த அற்புத சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

 

 

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவையும் அன்றைய தினம் சுனாமி தாக்கியது. அந்த தீவிலுள்ள யுஜோஹ் பரோஹ் என்ற கிராமத்தில் வசித்து வந்த வதி என்ற பெண்ணும் அவருடைய குடும்பமும் சுனாமியினால் இழுத்துச் செல்லப்பட்டனர். வதியின் பெற்றோர்கள் வதியினையும் மற்ற இரு குழந்தைகளையும் காப்பாற்றிட பெரு முயற்சி மேற்கொண்டனர். மற்ற இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முடிந்த பெற்றோரினால் வதியைக் காப்பாற்ற இயலவில்லை. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வதியினை யாரும் அதன் பிறகு பார்க்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 21.12.2011 அன்று வதியின் தாத்தாவான இப்ராஹிம் வீட்டிற்கு ஒரு பெண்ணை அழைத்து வந்தார் இப்ராஹிமின் நண்பர். பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இந்தச் சிறுமி வதியைப் போல் இருந்ததால் அவரை விசாரித்திருக்கிறார் அந்த நண்பர். தாத்தா இப்ராஹிமின் பெயர் தவிர வேறு பெயர் நினைவில்லை என்றும் தனக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் உண்டு என்ற விபரத்தையும் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை இப்ராஹிமின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் அவர்.

உடனடியாக வதியின் தந்தைக்கும் தாயாருக்கும் தகவல் தரப்பட்டு அவர்கள் வந்து பார்த்தனர். சிறுமியின் உடலில் இருந்த மச்சத்தினையும் தழும்புகளையும் வைத்து அது வதிதான் என உறுதிப்படுத்தினார் தாய் யுஸ்னியார். தாயைக் கண்டதும் பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டார் வதி. வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட வதி ஒரு பெண்ணினால் தத்து எடுக்கப்பட்டு பிச்சை எடுக்க வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரத்தையும் வதி தெரிவித்துள்ளார். பந்தா ஏக் என்ற இடத்திலிருந்து பேருந்தின் மூலமாக இப்ராஹிமின் ஊரான மியுலோப் என்ற ஊருக்கு வந்துள்ளார் வதி. 7 வருடங்களுக்கு பின்பு தனது குடும்பத்தினருடன் வதி சேர்ந்தது அற்புதமான நிகழ்வுதானே!

inneram.com

புத்தாண்டு கொண்டாடலாமா? வாழ்த்து சொல்லலாமா?

கிறிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.
3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)
மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?
ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.
 
இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.
மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர். இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
959 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ رواه أبو داود
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள்.  (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன.  அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபி (ஸல்) கேட்டார்கள்.  அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான்.  அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்” என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (959)
புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும். 
ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவது தான் மார்க்கத்தில் தடை. நாம் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு “முஹர்ரம் பிறை 1 அன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது”
மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ”இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று சொல்வதும், அதை கொண்டாடுவதும் தவறாகும்.
Courtesy: www.Onlinepj.com

முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மதம் மாறினார்!

பாரீஸ் : ப்ரான்சிலிருந்து வெளி வரும் ‘லீ மாண்டே’ எனும் இதழுக்கு பேட்டியளித்த ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்களை விசாரித்த ப்ரான்ஸின் பெண் காவல்துறையினரில் கால்வாசி பெண் காவலர்கள் இஸ்லாத்தை தழுவியது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இத்தடையானது முஸ்லீம் பெண்களின் மத உரிமையை பறிப்பதாக எதிர்ப்பாளர்களும், ப்ரான்ஸின் மதசார்பின்மையை பாதுகாப்பதாகவும் இஸ்லாமிய தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய கூடியது என்றும் இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.

இஸ்லாத்தில் முளையவியல்.

பாத்திமா ஷஹானா (கொழும்பு)

அல்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயமாகிய அல் அலக் எனும் அத்தியாயத்தில் அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஓதுவீராக! ஏன்று கூறிவிட்டு மனிதன் படைக்கப்பட்ட விதத்தைப் பற்றிக் கூறுகின்றான்.
 

(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான் (அல்குர்ஆன் 96: 1,2)


மனிதனைப் படைத்த இறைவன் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சட்ட திட்டத்தை தன் தூதராகிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கும்போது மனிதனை தான் எவ்வாறு படைத்தான் என்ற உண்மையை முதன் முதலில் தெரியப்படுத்துகின்றான். அலக் என்ற அரபுப் பதத்தின் அர்த்தம் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது. அதாவது கருவுற்ற சினை முட்டை என்பது ஆணிணது விந்தும், பெண்ணினது சினை முட்டையும் கருக்கட்டப்பட்டு ஒன்றுடன் ஒன்று கோர்க்கப்பட்ட நிலையாகும். மனிதனது உருவாக்கத்திற்கு ஆணின் விந்தும், பெண்ணின் சினை முட்டையும் தான் காரணம் என்பதை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அவனது அல்குர்ஆனில் மேற்குறிப்பிட்ட வசனத்தின் மூலம் விவரிக்கின்றான்.மேலும் படிக்க.. 

இது இந்தியாவின் வெட்கக் கேடு!

டெல்லி: உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. இது ஒரு தேசிய அவமானமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.Hungerநாடு முழுவதும் பொருளாதாரரீதியில் மிகவும் கீழ் நிலையில் உள்ள 9 மாநிலங்களின் 112 மாவட்டங்களில் 73,000 வீடுகளில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது HUNGaMA (Hunger and Malnutrition) என்ற அமைப்பு. இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் கூறுகையில்,

நமது நாடு மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வந்தாலும், குழந்தைகளிடையே ஊட்டச் சத்து குறைபாடு ஏற்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த நாட்டில் 6 வயதுக்கு உட்பட்ட 16 கோடி குழந்தைகள் உள்ளனர். நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் எடை குறைவாக உள்ளன.

நமது நாட்டின் எதிர்காலம் இவர்கள் தான். இவர்களது நலனைப் பேணாவிட்டால் நாட்டின் எதிர்கால நலன் நிச்சயம் பாதிக்கப்படும்.

நான் முன்பே கூறியது போல, ஊட்டச் சத்து குறைபாடு என்பது தேசிய அவமானமாகும். இதைக் கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி பெறவில்லை.

73,000 தாய்மார்களிடம் நேரடியாகப் பேசி 1 லட்சம் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வருத்தத்தையும் தருகிறது, ஒரு நல்ல விஷயத்தையும் சொல்கிறது.

நல்ல விஷயம் என்னவென்றால், இந்த 112 மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆரோக்கியமான எடையை எட்டியுள்ளது என்பது தான். இதற்கு இந்த மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் அமலாக்கிய சில நலத்திட்டங்களும் காரணம்.

அதாவது ஊட்டச் சத்து குறைபாட்டை நீக்குவதில் நாம் 20 சதவீத வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம், நாட்டின் இன்னும் 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக, ஊட்டச் சத்து பற்றாக்குறையுடன் வாழ்கின்றன என்பது தான்.

தாயின் கல்வி நிலை, குடும்பத்தின் பொருளாதார நிலை, சுகாதாரம், தாய்ப்பால், குடும்பத்தில் பெண் நடத்தப்படும் முறை ஆகியவை, குழந்தைகளின் நலனில் முக்கிய பங்கு வகிப்பதை இந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

1975ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போதும் அமல்படுத்தப்பட்டு வரும் Integrated Child Development Services திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு இந்த ஊட்டச் சத்து குறைபாடு விஷயத்தை தீர்த்துவிட முடியாது. குழந்தைகள் விஷயத்தில் மிக மோசமான நிலையில் உள்ள மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தியாக வேண்டும்.

முதல்கட்டமாக ஊட்டச் சத்து குறைபாடு மிக அதிகமாக உள்ள நாட்டின் 200 மாவட்டங்களில் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார் பிரதமர்.

tamil.oneindia.in

 

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்? இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bokker-ன் பரபரப்பான வாக்குமூலம்

[ நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, ‘ஸ்டைல்’ என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.

எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் ‘நிகாப்’ அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, ‘நிகாப்’ அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ”அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது” என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.

பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு ‘நிகாப்’ தான். நீச்சலுடை அல்ல. – முன்னாள் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர்

அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.

 ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.

 நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?

செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ”கூடாரத்துக்குள்” அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.

அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குரானை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன்.

கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான ‘கவுன்’ ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து ‘பெரிய சுமை’ கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.

”பெண்களை அவமதிக்கும் மதம்” என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (ஹிஜப்) அணிந்து கொண்டாலும் நிகாபை (ணிஃஅப்) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

 எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது ‘ஹிஜாப்’ அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர ‘நிகாப்’ அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, ‘நிகாப்’ என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)

ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது ‘நிகாப்’ இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், “நான் ‘நிகாப்’ அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்” என்றேன்.

இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.

நான் ‘நிகாப்’ அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!) அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு ‘நிகாப்” அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.

பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன்.

நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, ‘நிகாப்’ அல்லது ‘ஹிஜாப்’ அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, ‘ஸ்டைல்’ என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன்.

எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் ‘நிகாப்’ அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, ‘நிகாப்’ அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ”அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது” என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு ‘நிகாப்’ தான் என்று.

சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் ‘நிகாப்’ அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான்.

நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின்  குறியீடு ‘நிகாப்’தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ”நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.”

madawalanews.com

உடல் எடை குறையனுமா? மனசால நினைக்கனுங்க….!

மாறிவரும் உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குண்டான உடலை குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்முடைய உடல் மீது அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

மனசால நினைக்கனும்

நம்முடைய உடல் எடையை குறைக்கவேண்டுமெனில் உளரீதியாக நினைக்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். அப்பொழுதுதான் நாவை கட்டுப்படுத்தமுடியும். அதை விடுத்து கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு பின்னர் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பதில் எந்த பலனும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். எனவே உடல் எடை குறைப்பு பயிற்சியை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும்.

நமக்கான உணவு எது?

நம்முடைய உடலுக்கு தகுந்த உணவு எது என்பதை நாம் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். ருசிக்காக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதை விடுத்து சத்தான உணவுகளை, குறைந்த கலோரி உள்ள உணவுகளை உண்ணவேண்டும் அப்பொழுதுதான் உடல் எடை எளிதாக குறையும். பாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

நார்ச்சத்துள்ள உணவுகள்

உடல் எடை குறைய முதலில் கவனம் செலுத்தவேண்டியது உணவு. அதுவும் சத்தான ராகி, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இது உடலுக்கு தேவையான சத்துக்களை நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது பசி தூண்டும் உணர்வையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தண்ணீர் குடிங்க

உடல் எடையை குறைப்பதில் தண்ணீரின் பங்கு மிக முக்கியமானது. எனவே உணவுக்கு முன்னரே தண்ணீரை குடித்தால் பசி கட்டுப்படும் உணவும் குறைவாக எடுக்கும். இதனால் உடலுக்கு குறைந்த அளவு கலோரியே கிடைக்கும். தண்ணீரானது உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.

மெதுவா சாப்பிடுங்க

உணவை நன்றாக அரைத்து மென்று உண்பது உடலுக்கு ஏற்றது. ஏனெனில் ஜீரணத்திற்குத் தேவையான என்சைம்கள் நாவில் இருந்துதான் கிடைக்கின்றன. எனவே சத்தான உணவுகளை அள்ளி விழுங்காமல் நன்றாக மென்று அரைத்து உண்பது அதிக அளவு உணவு உட்கொள்வதை தடுக்கும். உடல் எடையும் கட்டுப்படும்.

நொறுக்குத் தீனிக்கு பை

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னர் நொறுக்குத் தீனிக்கு பை சொல்வது அவசியட். எனவே குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்து சுகர் ஃப்ரி சுயிங்கம் மெல்லுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

குறைந்த உப்பு, சர்க்கரைக்கு நோ

தினமும் உபயோகிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொள்வது உடலுக்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை உடலின் கலோரியை அதிகரிக்கிறதாம். ஜூஸ், மில்க்ஷேக் போன்றவற்றிர்க்கு சர்க்கரை உபயோகிக்காமல் பருகுவது உடல் எடையை குறைக்கும் என்பது நிபுணர்களின் அறிவுரை. அதேபோல் உப்பின் அளவையும் குறைத்தே உபயோகிக்க வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனையாகும்.

உடற்பயிற்சி தேவை

உடற்பயிற்சி என்றாலே ஜிம் போய்தான் செய்யவேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே எளிமையான எக்ஸர்சைஸ்களை செய்யலாம். இதனால் உடலில் தேங்கும் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுவதோடு, உடல் நலமும் பாதுகாக்கப்படும். உடல் பருமனால் இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்க நடந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்லலாம். அதனால் கலோரியும் எரிக்கப்படும், உடலும் சிக் என்று ஆகும்.

புரதம் அவசியம்

உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று சத்தான உணவுகளை தவிர்க்க வேண்டாம். அது உடலின் பலத்தை குறைத்துவிடும். உடலின் திசுக்களுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த உணவுகளை அவசியமான அளவில் உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். முட்டையின் வெள்ளைக்கரு தினமும் எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள் கருவை தவிர்த்து விடலாம். ஏனெனில் அதில் அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளது.

thatstamil

 

பைபிள் இறை வேதமா – விவாதம் குறித்த ஒரு பார்வை!

 

 

 

 

 

 

 

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான  இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும்.
மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.
 
பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாக பிரச்சாரங்கள் செய்கிற வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான். மேலும் படிக்க…

முன்னால் கிருத்தவ கன்னியாஸ்திரி Irena Handono இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.

இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவகன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்துஎழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.
 
நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.
 
பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த Liaision Maria என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை)அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் Stray Sheeps என்று சொல்லப்படக் கூடிய காணாமல் போன ஆடுகளை தேடுவதாகும். காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல.மாறாக காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.மேலும் படிக்க..

லேப்டாப் தீப்பிடித்து வெடித்த விபத்தில் வாலிபர் பலி

கொல்கத்தாவில் இன்னொருவரின் உயிரைக் குடித்துள்ளது லேப்டாப் ஒன்று. ஆனால் இந்த முறை தவறு அந்த இளைஞரின் மீதுதான்.

கொல்கத்தாவில் 3 மாதங்களுக்கு முன்பு சயன் செளத்ரி என்ற பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவன ஆலோசனை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அருகே சார்ஜரில் மாட்டப்பட்டிருந்த லேப்டாப்பும், இயர்போன்கள் அவரது காதுகளில் மாட்டப்பட்டும் இருந்தது.

இந்த நிலையில் லேப்டாப்பால் இன்னொரு உயிர் போயுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சப்தரிஷி சர்கார். 30 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அருகில் எரிந்த நிலையில் லேப்டாப் கிடந்தது.அறை முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வந்து கதவைத் திறந்தபோது இந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், அறைக்குள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் சர்க்கார். அறை ஜன்னல்கள், கதவு மூடப்பட்டிருந்தது. அறை முழுவதும் புகையாக காணப்பட்டது. மூச்சுத் திணறி அவர் இறந்துள்ளார்.

லேப்டாப் ஒன்று வெடித்து எரிந்த நிலையில் காணப்பட்டது. அவர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்று தெரிகிறது. சிகரெட் பிடித்தபோது அது லேப்டாப்பில் விழுந்து அது தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

இதில் எந்த சதியும் இருப்பதாக தெரியவில்லை. விபத்தாகவே தெரிகிறது என்றனர்.

லேப்டாப்பில் அஜாக்கிரதை- உயிரைக் குடிக்கும்

லேப்டாப்பை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். படுக்கை அறையில் வைத்து அதைப் பயன்படுத்துவதோ, அதை அப்படியே அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதோ கூடாது என்கிறார்கள்.

படுக்கையானது மிகவும் மென்மையாக இருப்பதால், லேப்டாப்பின் கீழ்ப்பகுதி வழியாக காற்று புகுவதைத் தடுக்குமாம். சரியான காற்றோட்டம் லேப்டாப்புகளுக்குத் தேவை. அது தடைபடும்போது லேப்டாப் சூடாகி வெடிக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே லேப்டாப் வெடித்து உயிர்ப் பலி ஏற்பட்ட சம்பவங்கள் ருமேனியா மற்றும் நியூசிலாந்திலும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சார்ஜ் செய்து கொண்டே லேப்டாப்பை பயன்படுத்தியதால் விபத்து நடந்தது. bharathcommunication.blogspot.com


அந்த மாணவனின் கையில் யார் கத்தியைக் கொடுத்தது?

நேற்றைய தொலைக்காட்சிகளிலும், இன்றைய பத்திரிகைகளிலும் இதுவே முக்கிய செய்தி. தன்னை நோக்கி கத்தியுடன் வந்த மாணவன் இர்ஃபானைப் பார்த்து டீச்சர் உமாமகேஸ்வரிக்கு வந்த பயமும், பதற்றமும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இன்று வந்திருக்கிறது. அதனை  எதிர்கொள்ள, தப்பிக்க அல்லது முறியடிக்க  கூடவே சிந்தனைகளும் முளைக்கின்றன.

 
“அந்தச் சிறுவன் ஒரு மனநல நோயாளி”,  “அவனைத் தூக்கில் போட வேண்டும்”,  “வளர்ப்பு சரியில்லை எனவே பெற்றோரையும் தண்டிக்க வேண்டும்”,  “சினிமாக்களும், தொலைக்காட்சிகளும்தான் இதுபோன்ற வன்செயல்களுக்கு வித்திடுகின்றன” இப்படியான கருத்துக்கள் அதிகமாக வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
 
“யாரும் பெயில் கிடையாது என்னும் பெயரை சம்பாதிக்க  பள்ளிகள் மாணவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகளே காரணம்”,   “ மார்க்குகளை மட்டுமே முக்கியமாகக் கருதும் இந்தக் கல்விமுறையே காரணம்”, “தொடர்ந்த  கட்டாயங்களால் ஏற்படும் மன அழுத்தம் இதுபோன்ற குற்றங்களுக்கு கொண்டு செல்கிறது” என நிதானமாக கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
 
இவைகள் வெறும் உணர்ச்சிகளின் தரப்பிலிருந்தும் அல்லது  முற்றிலும் அறிவின் தரப்பிலிருந்தும் சமூகத்தின் முன்னே நடத்துகிற உரையாடல்களாகத் தெரிகின்றன.  தற்காலிகமான ஆனால் உடனடியான தீர்வுகளுக்கான அல்லது நிரந்தரத்தீர்வுகளுக்கான  வழிகளை ஆராய்வதாக இருக்கின்றன. இவைகள் யாவிலும் உண்மைகளின் கூறுகள் இருப்பினும், மனித மனங்கள் பற்றி நிறைய பேச வேண்டியிருகிறது நாம். ஒரு கொலை, அதன் பின்னணி, கொலை செய்யப்பட்டவர், கொலை செய்தவர், ஆயுதம்,  சாட்சிகள் என்ற ரீதியில் இதனை ஒரு கேஸ் கட்டுக்குள் அலசிடமுடியாது.
 
கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் மகள் தொலைக்காட்சியில் பேசுவதைப் பார்க்க  கஷ்டமாயிருந்தது. “எங்க அம்மா ரொம்ப நல்லவங்க. எல்லார்ட்டயும் அன்பா இருப்பாங்க” என்று குரல் தழுதழுக்கச் சொல்லும்போது நமக்கும் தொண்டை அடைக்கிறது.  எப்பேர்ப்பட்ட இழப்பு அந்த குடும்பத்துக்கு. இனி அதை யாரால், எப்படி திரும்பக் கொண்டு வந்து சேர்த்துவிட முடியும்? அந்தக் கேவல்களை எப்படி நிறுத்த முடியும்?
 
“நான் தவறு செய்துவிட்டேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். நான் என் பெற்றோர்களையும் பார்க்க விரும்பவில்லை” என இர்ஃபான் அளித்துள்ள வாக்குமூலம், அவன் தன்னை உலகிலிருந்தே துண்டித்துக் கொள்ள முயல்பவனாகக் காட்டுகிறது. “அந்த டீச்சர் கதறியது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது” எனச் சொல்வதில் அவன் அடையும் சித்திரவதை இருக்கிறது.
 
இப்படிப்பட்ட இர்ஃபான் கையில் கத்தியையும் அவனது சிந்தையில் தன் டீச்சரைக் கொல்ல வேண்டும் எனகிற வெறியை யார் திணித்தது? இரண்டுநாளாய் கத்தியை தனது புத்தக்கட்டுக்குள் வைத்து திட்டமிட்டு இருந்திருக்கிறான். தக்க தருணம் எதிர்பார்த்திருக்கிறான். ஒரு குத்து அல்ல. மாறி மாறி குத்தியிருக்கிறான். கையெடுத்துக் கும்பிட்ட பிறகும் குத்தியிருக்கிறான். அவ்வளவு ஆத்திம் அவனுக்குள் எப்படி விதைக்கப்பட்டது? இதுதான் பெரும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
 
பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் என் மனைவி செய்தியை படித்துவிட்டு, “இப்போல்லாம் பிள்ளைங்கள எதுவும் சொல்லவே பயமா இருக்கு. உடனே அழுது தள்ளிருவாங்க. நிப்பாட்டவே மாட்டாங்க.” எனச் சொல்லி வந்தவள், “ஆனா,  எல்லோரையும் பொதுவா சத்தம் போட்டா அமைதியா இருப்பாங்க. அல்லது சிரிக்கக்கூடச் செய்வாங்க” என்றாள்.  “அதே மாதிரி, தனியா அழைத்துப் போய் கடுமையாப் பேசினாலோ, புத்திமதி சொன்னாலோ கேட்டுக்குவாங்க. அழல்லாம் மாட்டாங்க. ஆனா அதுக்குல்லாம் எங்க நேரம்? ஒரு வகுப்பிலேயே நாப்பது ஐம்பது புள்ளைங்க இருக்காங்க” என்றும் சொன்னாள். இந்த இடம்தான் வெளிச்சம் காட்டுவதாக இருக்கிறது.
 
இன்றைய குழந்தைகள் பொதுவெளியில் தங்களுக்கு ஒரு தோல்வியோ, அவமானமோ நிகழ்ந்தால்  அதனைத்  தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். தவறுகளை எப்படி யாருக்கும் தெரியாமல் செய்கிறார்களோ அதுபோல  தண்டனைகளையும் மற்றவர்களுக்குத் தெரியாமலேயே அனுபவித்துவிட  தயாராய் இருக்கிறார்கள். வெளிப்படையாய் தங்கள் பலவீனங்களை ஒப்புக்கொள்ள மருக்கிறார்கள். மனித மனத்தின் பொதுவான தன்மைகள் இவற்றிலிருப்பினும் இன்றைய குழந்தைகள் மிக தீவீரமாகவும், நுட்பமாகவும் இவ்விஷயத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் உலகில் அவர்கள் தங்களை மட்டுமே மிக அதிகமாக நேசிக்கிறார்கள். அதல் சிராய்ப்புகள் வருவதைக் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தங்களிடமிருக்கும் இந்த அன்பை எப்படி உலகம் முழுமைக்கும் அவர்களை பரிமாற வைப்பது என்பதுதான் இன்றைய சமூகத்தின் சவால். நிகழ்காலத்தின் கேள்வி. டீச்சர் உமா மகேஸ்வரியின் மரணம் இரத்தம் சிந்த சிந்த படுகொலையாக நிகழ்த்தப்பட்ட புள்ளி இதுவாகவும் தெரிகிறது.
 
ஒருவேளை, நேற்று வகுப்பறையில் உட்கார்ந்திருந்த உமாமகேஸ்வரி டீச்சர், அந்த மாணவன் உள்ளே நுழைந்ததும்,  “வா, இர்ஃபான் முதல் ஆளா கிளாஸுக்கு  வந்திருக்கியே. சந்தோஷமாயிருக்கு. இப்படி இருந்தா நீ எவ்வளவோ சாதிக்கலாமே” என்கிற தொனியில் பேசி முகம் மலர்ந்து வரவேற்றிருந்தால் அந்தக் கத்தி இர்ஃபானின் பையிலேயே இருந்திருக்கலாம். உமா மகேஸ்வரி அவர்களும் இப்போது ஒரு வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்திருக்கலாம். நானும், நேற்றைய பதிவுக்கு nellaiconspiracy என்னும் நண்பர் கேட்டிருந்ததற்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்திருக்கலாம்.
 
யோசித்துக்கொண்டே இருக்கிறேன். கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

விபச்சாரத்தின் மறு பெயர் “காதல்”.

உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது.
 
இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன.
 
# முத்தமிடுவோர் தினம்,
 
# நிர்வாணமாக இருப்போர் தினம்,
 
# இறுகக் கட்டியணைப்போர் தினம்,
 
# ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்,
 
# பாலுணர்வைத் தூண்டுவோர் தினம் 
 
என்று நாளுக்கு நாள் தினங்களைப் பிரித்து வைத்து அதனைக் கொண்டாடி மகிழ்வதை ஒரு ஆரோக்கியமான செயல்பாடாக மேற்குலகு கருதுகின்றது.
 
கடந்த ஜனவரி மாதத்தில் நிர்வாணமாக இருப்போர் தினம் என்றொன்றை ரஷ்ய மக்கள் கொண்டாடியதும், ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் நிர்வாணமாக காட்சி தந்ததையும் மிகப் பெரிய சாதனையாக ஊடகங்கள் கொண்டாடின.
 
அதே ஜனவரி மாதத்தில் முழு உடம்பையும் காட்டிக் கொண்டு திரியும் சுமார் இருபத்தி ஐயாயிரம் பெண்களை ஓரிடத்தில் கூட்டி உலகிலேயே அதிகமான நிர்வாணிகள் ஒன்றினைந்த இடம் என்ற உலக சாதனையை(?) படைத்தமை ஒழுக்க விழுமியங்களை பேணிப் பாதுகாப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.
 
இது வரைக்கும் பல நாடுகளிலும் ஒழுக்க சீர் கேட்டை ஆதரிக்கும் தருதலைகள் முன்வைத்த ஒரு கோரிக்கைகளில் ஒன்றுதான் பாலியல் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். அதில் ஆண் பெண் வித்தியாசமின்றி பாலியல் தொடர்பான செய்திகள் செயல்பாட்டுடன் விபரிக்கப்பட வேண்டும் என்பது. மேலும் படிக்க…

இஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்பல்!

 
நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான “பூஜா லாமா” சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார். பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை “ஆம்னா ஃபாரூகி” என்று மாற்றிக் கொண்டதாக
 
கூறினார்.மேலும்”இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே 
 
இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்.” என்பதாக கூறினார்.
 
மேலும் அவர் கூறுகையில் “நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன் ,தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன்.இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியது நான் இப்பொழுது ஆபாசம்,மது ,புகை அகத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டு விட்டேன்.இஸ்லாத்தை பற்றி உலகம் கூறும் அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன்” என்றார் அவர்.
 
பூஜா லாமா என்ற தனது பழைய பெயரை கொண்டு தன் பழைய வாழ்கையை நினைவு படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இஸ்லாத்தை ஏற்ற பின் தனது நடிக்கும் தொழிலையும்,குடி,புகை போன்ற தீய பழக்கங்களை விட்டு விட்டார் ஆனால் இவர் ஆபாசமாக நடித்த படங்களைக்காட்டி இந்த பெண்ணின் மனதை நோகடித்துக் கொண்டிருக்கும் அவலமும் ஒரு புறம நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.அந்த பெண்ணிற்கு நேர் வழி காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்.

நரபலி மோடியை கைது செய்ய கோரி அமெரிக்காவில் மிகப் பெரும் பேரணி

modi நியூ யார்க் : கோத்ராவை தொடர்ந்து குஜராத்தில் சிறுபான்மையினர் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி அமெரிக்காவில் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த 40 குழுக்கள் ஒன்று திரண்டு நடந்த சம்பவங்களுக்கு நீதி வேண்டும் என்றும் மோடி உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரி மாபெரும் பேரணி நடத்தினர்.

பேரணியில் கலந்து கொண்ட 40 குழுக்களில் ஒன்றான மதங்களுக்கிடையான புரிந்துணர்வு குழுவின் தலைவர் மார்க் லூகென்ஸ் “எச்சமூகத்தை சார்ந்த எந்த ஒரு தனி நபரும் அவர் சார்ந்த மதத்தின் பெயரால் இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் போது அவர்களுக்கு ஆதரவாகவும் அநீதிக்கு எதிராகவும் போராடுவது எங்கள் மீது கடமையாக உள்ளது” என்று கூறினார்.

“மதத்தின் பெயரால் அநீதி இழைக்கப்படும் போது அம்மதத்தை சேர்ந்தவர்கள் முன்னின்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அதனால் தான் இப்பேரணியில் கலந்து கொள்ள முடிவு செய்தோம்” என்று ப்ரொகரஸிவ் இந்துக்களின் கூட்டமைப்பின் தலைவரான சுனிதா விசுவநாத் கூறினார்.

2005ம் ஆண்டு இதே குழுக்களின் முயற்சியினாலேயே நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுக்கு வருகை தர விசா மறுக்கப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2002 கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி விரைவாக கிடைக்க குஜராத் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

inneram.com

இஸ்ரேலிய குடியேற்றங்கள் – சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு: ஜெனீவாவில் தீர்மானம்

Security Council Meets on Sierra Leoneஜெனீவா: இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்த உத்தரவிடும் தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள், பாலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைக்கும் இத்திட்டத்தின் மூலம் தங்களது பகுதியை ஆக்கிரமிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு.

இது தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இஸ்லாமிய நாடுகள் சார்பில் பாகிஸ்தான் முன்வைத்தது. கியூபா, வெனிஸுலா நார்வே, இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட 36 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. இத்தாலி, ஸ்பெயின், உட்பட 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக அதாவது தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.

இத்தகைய தீர்மானங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு நிராகரித்துள்ளார். தங்களது பிரதேசத்தில் இத்தீர்மானம் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதும் இஸ்ரேலின் கருத்து.

Follow

Get every new post delivered to your Inbox.