4 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு! ஆய்வறிக்கை

புதுதில்லி: நடப்பு நிதி ஆண்டில் சுமார் 4.34 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2009-10) ரூ. 70 ஆயிரம் கோடி நிதி வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம்  4.34  கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் 4.51 கோடி பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2009-10-ம் ஆண்டு பட்ஜெட்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ. 39,100 கோடி ஒதுக்கப்பட்டு டிசம்பர் மாதம் வரை ரூ. 24,758.50 கோடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 182.88 கோடி வேலை நாள்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் 29 சதவீத தாழ்த்தப்பட்ட பிரிவினரும் 22 சதவீத பழங்குடியின மக்களும் பலனடைந்துள்ளனர். 50 சதவீத பெண்கள் இத்திட்டம் மூலம்  பயனடைந்துள்ளனர்.

நன்றி:இந்நேரம்.காம்