3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை தற்கொலை: காளி அம்மனுக்கு பலிகொடுத்த கொடூரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்த இந்து ஒருவர் , காளிக்கு தனது மூன்று குழந்தைகளையும் கழுத்தை அறுத்து பலி கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள மிர்புர்காஸ் நகரை அடுத்துள்ள மிர்வா கோர்ஜர்னி என்ற இடத்தில் வசித்து வந்தவர் திகம்தாஸ் மெக்வாரின் பெமோமல் (26).

இந்து குடும்பத்தை சேர்ந்த இவர் தனது தாய், மனைவி, குழந்தைகள் பார்வதி (6),ரெனா (4),ஆர்த்தி (1), மற்றும் சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். திகம்தாஸ் காளி அம்மனை தினமும் வணங்கி வந்தார். தனது வீட்டின் முதல் மாடியில் சிறிய காளி கோயில் ஒன்றை கட்டி, அதற்கு தினமும் பூஜைகள் நடத்தி வந்தார். நேற்று காலை அவரது மனைவி வெளியே சென்றிருந்தார். அப்போது திகம்தாஸ், குளித்து விட்டு, தனது தாயார் மற்றும் உறவினர் களை சந்தித்து காளிக்கு பரிகாரம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

பின், தனது வீட்டின் முதல் மாடியில் உள்ள காளி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்ட திகம்தாஸ், திடீரென ஆவேசமடைந்தவாக தனது மூன்று குழந்தைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக கழுத்தை அறுத்து கொலை செய்தார்.பின்னர், தனது கையின் மணிக்கட்டு பகுதியில் உள்ள நரம்புகளை அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட, மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த அவரது மனைவி வீடு திரம்பினார். வீட்டின் முதல் மாடிக்கு சென்று பார்த்த அவர் தனது மூன்று குழந்தைகளும், கணவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திகம்தாஸின் சகோதரர் முல்சந்த்திடம் கேட்டபோது,’ திகம்தாஸ் ஒரு காளி பக்தன். கோயில் பூசாரி ,’ என்று மட்டும் தெரிவித்தார்.

dinamalar.com