மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஒரு ஐயம்

கணக்கெடுப்பு பணி துவங்கிது

இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று இப்படி தெரிவிக்கிறது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சரியான விவரங்களை வழங்குமாறு அனைவரையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம்களை பொருத்தவரை மதம் என்னவென்ற கேள்விக்கு முஸ்லிம் என்றே பதிலளித்து பதிவுச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதங்கள் என்ற அட்டவணையின் கீழ் இஸ்லாம் என்று குறிப்பிடப்படாமல் முஸ்லிம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செய்த தவறாகும். இது குறித்து முஸ்லிம் சமுதாய அமைப்புகள் புகார் தெரிவித்தும் இது சரி செய்யப்படவில்லை. தற்போது நீதிமன்றம் சென்று முறையிடுவதற்கும் கால அவகாசம் இல்லை. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதுஇஸ்லாம் என்று குறிப்பிட்டால் அது முஸ்லிம் என்ற கணக்கில் சேர்க்கப்படாமல் இதர மதத்தினர் பட்டியலில் சேர்க்கும் அபாயம் உள்ளது. எனவே கவனமாக மதம் என்ற கேள்விக்கு முஸ்லிம் என்ற பதிலை மட்டும் அளிக்குமாறு முஸ்லிம் சமுதாயத்தினரை கேட்டுக் கொள்கிறேன். இது பற்றிய விழிப்புணர்வை துண்டு பிரசுரங்கள், தெரு முனைப் பிரச்சாரங்கள், பள்ளிவாசல் அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டு்க் கொள்கிறேன். கண்ணியத்திற்குரிய இமாம்கள் இது குறித்து ஜும்ஆவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சேகரிக்கும் விவரங்கள்… :

  1. பெயர்
  2. குடும்பத் தலைவருக்கு உறவுமுறை
  3. இனம்
  4. பிறந்த தேதி
  5. திருமண நிலை
  6. திருமணத்தின் போது வயது,
  7. மதம்
  8. எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவரா
  9. மாற்றுத் திறனாளியா
  10. தாய்மொழி
  11. அறிந்த பிறமொழிகள்
  12. எழுத்தறிவு நிலை
  13. கல்வி நிலையம் செல்பவரா
  14. அதிகபட்ச கல்வி
  15. கடந்தாண்டு வேலை செய்தவரா
  16. பொருளாதார நடவடிக்கை வகை
  17. தொழில்
  18. தொழில் (அ) வியாபார நிலை
  19. வேலை செய்பவரின் வகை
  20. பொருளீட்டா நடவடிக்கை
  21. வேலை தேடுகிறவரா (அ) வேலை செய்பவரா
  22. பணிக்கு பயணம் செய்யும் முறை
  23. பிறந்த இடம்
  24. கடைசியாக வசித்த இடம்
  25. இடப் பெயர்ச்சிக்கு காரணம்
  26. இடப் பெயர்ச்சிக்கு பின் வசிக்கும் காலம்
  27. உயிருடன் வாழும் குழந்தைகள்
  28. உயிருடன் பிறந்த குழந்தைகள்
  29. கடந்த ஆண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை

உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.nallurmuzhakkam.wordpress.com