நரபலி மோடி,வருண்காந்தி பீகாரில் நுழைய நிதிஷ் குமார் தடை!

modi

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் இடையிலான மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.  பீகார் நாளிதழ்களில் மோடியுடன் கைகோர்த்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டதற்கு நிதிஷ் குமார் பலத்த ஆட்சேபனை தெரிவித்தார். அத்துடன் பீகார் வெள்ள சேதத்திற்கு குஜராத் மாநில அரசு வழங்கிய நிவாரண   நிதியை வெளியிட்டதற்கும் நிதிஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து குஜராத் அரசு சார்பில் மோடி வழங்கிய நிதியையும் நிதிஷ்குமார் திருப்பினார். அதனைதொடர்ந்து மோதல் உச்ச கட்டத்தை எட்டியது.

இந்நிலையிலும் பாஜக உடனான உறவு தொடர்வதாகவே ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் தெரிவித்தார். பாஜக ஐக்கிய ஜனதா தள உறவை நீட்டிக்க வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் நிதிஷ் குமார் மற்றொரு அதிரடி கருத்தினை உதிர்த்திருக்கிறார்.

பாஜக உடனான கூட்டணி தொடர வேண்டுமென்றால் தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத்  முதல்வர் நரேந்திர மோடியும் பாஜகவின் இளம் எம்பி வருணும் பீகாருக்குள் நுழையக்கூடாது என நிபந்தனை விதித்திருக்கிறார்.  இது பீகார் அரசியலில் மேலும் உஷ்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

inneram.com