துபையில் சிறுவனை வன்புணர்ந்து கொன்றவனுக்கு மரண தண்டனை!

துபை: ஐக்கிய அரபு நாடான துபையில் கடந்த நவம்பர் மாதம் நான்கு வயது சிறுவனை கழிப்பறையில் வைத்து வன்புணர்ச்சி செய்து கொலை செய்த அந்நாட்டு பிரஜை ஒருவருக்கு துபை கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது.

முப்பது வயது நிரம்பிய துபை பிரஜையான அவர் கப்பல் கேப்டனாக பணிபுரியும் அவர் ஏற்கனவே பாலியல் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து கடந்த ஆண்டுதான் விடுவிக்கப்பட்டார் நீதிபதி தனது தீர்ப்பில் கேப்டன் அந்த குழந்தையிடம் கருணை காட்டாததினால் இந்த நீதிமன்றமும் அவருக்கு கருணை காட்ட வில்லை என்று கூறியிருக்கிறார். இத்தீர்ப்பு குறித்து பாஹிம் முனீர் என்பவர் கூறும்போது இத்தீர்ப்பு கூறப்பட்டபோது நீதிமன்றமே அமைதியானது என்றார்.

தலைமை பிராஸிக்கூட்டர் யூசுஃப் ஃபௌலாஸ் கூறும்போது கடந்த 2009  நவம்பர் மாதம் 29 ஆம் தேதி ஈத் தினத்தன்று பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மூசா குதாப்க்ஷ் என்ற சிறுவனை வன்புணர்ந்து கொன்ற இவனுக்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனையை தீர்ப்பளிக்கும்படி நீதிபதியை கேட்டு கொண்டதாக தெரிவித்தார். விசாரணையில் குற்றவாளி சிறுவனை கழிப்பறைக்கு அழைத்து சென்றதையும் அங்கு அவனை வன்புணர்ந்ததையும் மனித நடமாட்டம் கேட்டதால் அச்சிறுவனை தலையை தரையில் அடித்து கொன்றதாக ஒப்புகொண்டான்.

தீர்ப்பின் போது அச்சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.இதனை தொடர்ந்து மருத்துவர்கள் கொலையாளியை மருத்துவ பரிசோதனை செய்து அவ்ர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக சான்றளித்தனர், அடுத்த 15 தினங்களில் இவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் எனத்தெரிகிறது