சென்னையில் கண்காணிப்பு கேமரா: போக்குவரத்து அபராத தொகையை வசூலிக்க புதிய திட்டம்; கிரெடிட் கார்டு, வங்கியில் செலுத்தலாம்

சென்னை கோட்டூர்புரம் உள்பட 12 இடங்களில் தற்போது இந்த கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. சந்திப்பில் இருந்த படியே 24 மணி நேரமும் போக்குவரத்தை கண்காணிக்கும் இந்த கேமராக்கள் ஏற்கனவே 17 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

கோட்டூர்புரத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை போக்கு வரத்து கூடுதல் கமிஷனர் ரவி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
12 இடங்களில் கண்காணிப்பு கேமரா: போக்குவரத்து அபராத தொகையை     வசூலிக்க புதிய திட்டம்;    கிரெடிட் கார்டு, வங்கியில் செலுத்தலாம்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து கண்காணிப்பு “கேமரா” அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 216 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளது. மேலும் 25 இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 17 இடங்களில் கண் காணிப்பு கேமிரா மூலம் போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. தற்போது அந்தந்த சந்திப்புகளில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கும் வசதி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உலக வங்கி அளித்துள்ள ரூ.4 1/2கோடி நிதி உதவியில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தை சுற்றி வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப விளக்குகள் தானாக மாறும் நவீன சிக்னல்களும் நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன கோமராக்கள் நிறுத்த கோட்டை தாண்டி நிற்கும் வாகனங்களை படம் பிடித்து காட்டும். விதிமுறையை மீறிய வாகனங்ளுக்கு அனுப்பப்படும் அபராத சம்மனில் அந்த காட்சி இடம் பெறும்.
ஜனவரி முதல் இது வரை போக்குவரத்து விதிமுறை களை மீறியதாக 9 லட்சத்து 16 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.7 கோடியே 74 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சி.சி.டி.வி. மூலம் இது வரை 60 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் மூலம் ரூ.9 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிகளை மீறியதாக 60 மாநகர பஸ்கள் சிக்கியுள்ளன. போக்குவரத்து கழகத்திடம் இருந்து ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபாராத தொகை வசூலிப்பதில் போலீசார் மீது அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இது போன்ற தவறுகள், முறை கேடுகளை தடுக்க “இ.சலானிங்” திட்டம் நடை முறைக்கு வர இருக்கிறது. இன்னும் 3 மாதத்தில் இத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு உலக வங்கி நிதி உதவி அளிக்கிறது.
இதில் பதிவாகும் வாகனங்கள் குறித்த தகவல் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அபராத தொகையை நேரில் செலுத்த தேவையில்லை. வங்கியிலோ, அல்லது கிரெடிட் கார்டு மூலமோ செலுத்தலாம்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக இதுவரை 18 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட சாலை விபத்து இந்த ஆண்டு குறைந்துள்ளது. போக்கு வரத்து விதிமுறைகள் தீவிரமாக நிறைவேற்றப்பட்டதால் கொடுங்காயம் அடைந்தோர் எண்ணிக்கையும் ஆயிரம் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நவீன கேமராக்கள் சாந்தோம் சந்திப்பு, அண்ணா சாலை வெலிங்டன், ஆலிவர் ரோடு, டி.டி.கே. சாலை சந்திப்பு, அண்ணா சாலை செனடாப் சாலை சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு, ஈ.வி.ஆர். சாலை, தாசப்பிரகாஸ் சந்திப்பு, ராயப்பேட்டை பாயிண்ட், ஆரிய மன்றம், டவுட்டன் சந்திப்பு, மூப்பனார் மேம்பாலம், திருமங்கலம், அம்பத்தூர் எஸ்டேட் ரோடு சந்திப்பு, பெரியமேடு லெவல் கிராசிங் சந்திப்பு ஆகிய 12 இடங்களில் பொறுத்தப்பட்டுள்ளது.