ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு : மசோதா தாக்கல்

புதுடில்லி :ஊழலை வெளிப்படுத்துபவர்களை பாதுகாப்பதற்கான சட்டம், வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரில், சில ஆண்டுகளுக்கு முன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிய, சாலை பணிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடுகளை சத்யேந்திர துபே என்ற இன்ஜினியர், வெளிப்படுத்தினார்.

11112866

இதையடுத்து, அவர் கொல்லப்பட்டார். இது போன்று பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. எனவே, ஊழலை வெளிப்படுத்துபவர்களை பாதுகாக்க தீர்மானம் கொண்டு வர சுப்ரீம் கோர்ட், கடந்த 2004ம் ஆண்டு பரிந்துரை செய்தது. இதையடுத்து, ஊழலை வெளிப்படுத்துபவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக, மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில், மேம்படுத்தப்பட்ட அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், சட்டம் கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் ஈடுபடுவர்.

இதுகுறித்து, பணி நியமனம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு துறை இணையமைச்சர் பிரித்விராஜ் சவான் கூறியதாவது:அமைச்சர் அந்தோணி தலைமையிலான மேம்படுத்தப்பட்ட அமைச்சர்கள் குழு, விரைவில் கொண்டு வரப்பட உள்ள மசோதாவில் காணப்படும் விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்வர். “பொது மக்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பவர்கள் பாதுகாப்பு மசோதா’, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட உள்ளது.இவ்வாறு பிரித்விராஜ் சவான் கூறினார்.

நன்றி: stopbribe.blogspot.com