தொப்பி, ஸ்கார்ப், டர்பன் அணிய முஸ்லீம், சீக்கியர்களுக்கு நியூயார்க் அனுமதி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நியூ யார்க் : நியூயார்க்கில் உள்ள அனைத்து போக்குவரத்து அமைப்புகளிலும் பணியாற்றும் முஸ்லீம், சீக்கியர்களுக்கு தொப்பி, தலைப்பாகை அணிவதில் விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து நியூயார்க் மாகாணத்தில் பேருந்து, ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் தலையில் தொப்பி, தலைப்பாகை, டர்பன், ஸ்கார்ப், ஹிஜாப் உள்ளிட்டவை அணியும் போது அதில் போக்குவரத்து அலுவலகத்தின் சின்னம் பொறிக்கப்பட்டதை தான் அணிய வேண்டும் என்று கட்டுபாடு விதிக்கப்பட்டது.

மார்ச் 2002ல் அமுல்படுத்தப்பட்ட உத்தரவுக்கு சீக்கியர்களும் முஸ்லீம்களும் தங்களை தனிமைப்படுத்துவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சட்டத்தை வாபஸ் பெற மெட்ரோ போக்குவரத்து அமைப்பு மறுத்தது. 2004ல் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக 8 ஆண்டுகள் கழித்து முஸ்லீம்களும் சீக்கியர்களும் எவ்வித கட்டுபாடுகளும் இன்றி தலைப்பாகை, தொப்பி, ஸ்கார்ப் உள்ளிட்டவற்றை அணியலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சீக்கிய கூட்டமைப்பின் தலைவர் அமர்தீப் சிங் இது வரை தங்கள் நம்பிக்கை அல்லது வேலை இரண்டில் ஒன்றை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலையிலிருந்து சிறுபான்மையினரை காப்பாற்றிய தீர்ப்பை வரவேற்பதாகவும் இரட்டை கோபுர தாக்குதலுக்காக பழிவாங்கபட்ட அப்பாவி சீக்கிய மற்றும் முஸ்லீம் மக்களின் துயரம் முடிவுக்கு வந்ததற்காகவும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

குஜராத் கலவரத்தில் நரபலி மோடியின் பங்கு — உரிய விசாரணை தேவை– ராஜூ ராமச்சந்திரன்

கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த கலவரத்தில் அம்மாநில முதல்வர் மோடியின் பங்கு பற்றி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமிக்கஸ் கரியான ராஜு ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

 குல்பர்க் ஸொஸைட்டி கலவரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம் பி இஹ்ஸான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மோடிக்குத் தொடர்பில்லை என எஸ் ஐ டி அறிக்கை கொடுத்திருந்தது. குல்பர்க் ஸொஸைட்டி வழகுக்கு மட்டும் கொடுத்த அறிக்கையை வைத்துக்கொண்டு குஜராத் கலவரத்தில் மோடிக்குத்தொடர்பில்லை என பாஜகவினரும் அவர்களது ஆதரவாளர்களும் கூறினர். இதுபற்றி விளக்கமாக ரமது தளத்தில் வணங்காமுடி விடைப்பகுதியிலும் விவரிக்கப்பட்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. குஜராத் கலவர வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த அமிகஸ் கரி ராஜூ ராமச்சாந்திரன் தமது அரிக்கையைத் தாகல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–

குஜராத் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.காவல்துறை அதிகாரிகள் பலரும் சில அரசு வழக்கறிஞர்களும் சரியான முறையில் சட்டப்படிச் செயல்படவில்லை; கலவர வழக்குகளை அவர்கள் சரியாகக் கையாளவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்புக்குப் பின்னர் அதுதொடர்பான செய்தி குஜராத் முழுவதும் பரப்பப்பட்ட விதம் பற்றியும் அதைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டதா என்பது குறித்தும் தீர விசாரிக்க வேண்டியுள்ளது.

மேலும் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 11 மணியளவில் முதல்வர் மோடியின் இல்லத்தில், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதாக அப்போதைய உளவுப் பிரிவு துணை ஆணையரான சஞ்சீவ் பட் கூறியதில் உண்மை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடியின் தலைவர் கூறியுள்ளார்.

ஆனால், அப்போது மூத்த உளவுப் பிரிவு அதிகாரியாக சஞ்சீவ் பட் இருந்தார் என்பதால், அவர் கூட்டத்தில் கலந்து கொண்டாரா என்பது குறித்து ஆராய வேண்டியது அவசியமாகிறது. அவர் கலந்து கொண்டதற்கான நேரடி ஆதாரம் பட்டிடம் இல்லாவிட்டாலும் கூட, சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரம் இருக்கிறதா எனன்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் இந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்று முதல்வர் மோடி கூறியதாக பட் கூறியுள்ள வாக்குமூலம் முக்கியமானது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். மோடி அப்படிக் கூறினாரா இல்லையா என்பது உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம். ஒரு வேளை அவர் அப்படிச் சொல்லியிருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். மேலும் எனது கருத்துப்படி, மோடி மீது தொடக்க நிலையிலேயே 1 153A (1) (a) மற்றும் (b), 153B (1) (c), 166 மற்றும் 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு  செய்ய முடியும். இருப்பினும் இதுகுறித்து கோர்ட்டே முடிவு செய்ய வேண்டும்.

அகமதாபாத் நகர முன்னாள் இணை ஆணையர் எம்.கே.டாண்டன், அகமதாபாத் முன்னாள் துணை கமிஷனர் பி.பி.கோண்டியா ஆகியோர் மீது ஐபிசி 304A  மற்றும் 166 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது..

நரபலி மோடி நுழைய இங்கிலாந்திலும் தடை?

 

 

 

 

 

 

 

 

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மனித இனப் படுகொலைகள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் 2005 ஆண்டு முதல் அமெரிக்காவில் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தும் நரேந்திர மோடிக்குத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

பிரிட்டன் அரசு மனித உரிமை மீறல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற உள்ளது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை இங்கிலாந்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளதாக மனித உரிமைப் பிரசாரகர்கள் தெரிவித்துள்ளனர்.

2005-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் நுழைய மோடிக்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்திலும் அவர் நுழைய விரைவில் தடைவிதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த தெற்காசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மற்ற நாடுகளில் மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்படுபவர்களை பிரிட்டன் கண்காணிப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் இதுபோன்ற சட்டம் இயற்றப்பட்டால் அதைப் பயன்படுத்தி நரேந்திர மோடி வருவதைத் தடுக்க வேண்டும்.

ஏனெனில் குஜராத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதில் நரேந்திர மோடிக்கு பங்கு உள்ளதாக பல்வேறு மனித உரிமைக் குழுக்களும், ஆம்னஸ்டி உள்ளிட்ட சுயேச்சை அமைப்புகளும் தெரிவித்துள்ளன  என்று  அச்செய்தித் தொடர்பாளர் சுட்டிக் காட்டினார்.

சிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா??

ஏப்ரல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தம்புள்ளை மாநகரில் பௌத்த பிக்குகள் தலைமையில் சுமார் 2000 சிங்கள பௌத்தர்கள் மாபெரும் பேரணியொன்றில் கலந்துகொண்டனர்.

“ரங்கிரி விகாரையை மையமாகக் கொண்ட தம்புள்ளைப் புனித பூமியில் ‘சட்டவிரோதமாக’ நிர்மாணிக்கப்பட்டுள்ள அல் ஹைரியா முஸ்லிம் பள்ளிவாயில் மற்றும் ஹிந்துக் கோவில் என்பவற்றை இடித்துத் தகர்த்து, புனித பூமியைத் தூய்மைப்படுத்துவோம், சிங்கள பௌத்தத்தைக் காக்க அணி திரள்வோம், அந்நிய சக்திகளை வெளியேற்றுவோம்” எனும் எதிர்ப்புக் கோஷங்களை முழங்கியபடி பேரணியாளர்கள் முன்னேறிச் சென்றனர்.

இந்தப் பேரணி இடம்பெறுவதற்கு முதல் நாள் நள்ளிரவில் பள்ளிவாயிலை நோக்கிப் பெட்ரோல் குண்டு ஒன்று எறியப்பட்டிருந்தது. ஆனால், அதன் மூலம் யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்தக் கலவரமான சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை ரத்து செய்யப்பட்டது. தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்கள் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். பேரணியாளர்கள் முஸ்லிம் பள்ளிவாயிலை இடித்துத் தகர்க்கும் நாசகாரப் பணியில் ஈடுபட்டபோது, காவல்துறையினரும் விசேட பாதுகாப்புப் படையினரும் தலையிட்டு, தம்புள்ளை கைரியா முஸ்லிம் பள்ளிவாயிலை மூடி “சீல்” வைத்தனர்.

வெற்றிப் பெருமிதத்தில் மிதந்த இனவாத பௌத்தர்கள் முன்னிலையில், ஒரு முன்னணி பௌத்தப் பிக்கு, “இதற்குப் பின் இந்தப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிமுக்கு சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்க மாட்டோம்,மேலும் படிக்க…

சவூதி: இருநாள் வார விடுமுறை கட்டாயம்?

சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகத் திட்டத்தின் படி, அனைத்து ஊழியருக்கும் (அரசுத்துறை, தனியார்) இரு நாள்கள் வார விடுமுறை வழங்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது.

அமைச்சகத்தின் இத்திட்டம்  பல்லாயிரக்கணக்கான தனியார் துறை ஊழியர்களை மகிழ்ச்சியுறச் செய்துள்ளது.தற்சமயம் சவூதி அரசு அலுவலகங்கள் வியாழன் வெள்ளி இருநாள்கள் வார விடுப்பு அளிக்கும் நிலையில்,  பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் வெள்ளி மட்டுமே வார விடுமுறை அளிக்கின்றன.

சவூதியில் மண்ணில் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நேஷனலிசேஷன் (அ) சவூதிசேஷன் எனப்படும் உள்நாட்டுமயமாக்கல் திட்டப்படி தனியார் நிறுவனங்கள் சவூதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வந்த போதும், ஒப்பீட்டளவில் அரசுத்துறை சார் பணிகளையே சவூதி இளைஞர்கள் விரும்புகின்றனர். அதன் காரணிகளாக, தனியார் துறையின் அதிக வேலை நாள்கள் உள்ளிட்ட அம்சங்கள் இருந்துவந்தன. இந்நிலையில், வார விடுப்புகளைப் பொருத்த வரை, அரசுத் துறையை பின்பற்றி தனியார் நிறுவனங்களும் இருநாள்கள் வார விடுமுறை அளிக்கும்படி பணிக்கப்பட்டால், சவூதி இளைஞர்கள் தனியார் நிறுவனங்களையும் விரும்ப வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பொதுவாக சவூதியின்  வார இறுதிகளாக வியாழன் வெள்ளி அமைவதை வெள்ளி, சனி என்று மாற்றி அமைப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.

பிரசித்திப் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளர் மார்க் எல்.பொகோக் கூறுகையில், இருநாள் வார விடுமுறை மிகவும் வரவேற்கத்தக்கது; ஊழியர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது என்றார். மேலும், “உலகெங்கும் சனி, ஞாயிறு வார இறுதிகளாக அமைகையில் சவூதியில் வியாழன், வெள்ளி என்று அமைவது பொருந்தவில்லை; வேலையளவில் உலகத்தோடு ஒட்ட மூன்று நாள்களே கிடைக்கின்றன” என்று ஆதங்கம் தெரிவித்தார்.

தலால் அல் ஹாதி என்னும் சவூதி இளைஞர் கூறுகையில் “குடும்பத்தோடு செலவிட ஒரு நாள் வாரவிடுப்பு நிச்சயம் போதாமையாகவே இருக்கிறது. அந்த ஒரு நாளிலும் அடுத்தடுத்த நாள்களில் தொடர உள்ள பணியழுத்தம் குறித்தே சிந்திக்க வேண்டியதாகிறது. எனவே, இருநாள் வார விடுப்பை நான் மிகவும் வரவேற்கிறேன்.தாமதமின்றி இதை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்

inneram.com

ஒபாமாவை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் : பிரிட்டிஷ் எம்.பி

லண்டன் : அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை பிடித்து கொடுப்பவருக்கு 10 மில்லியன் பவுண்ட் வழங்கப்படும் என்று அறிவித்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிலாளர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

2008 மும்பை தாக்குதலில் பங்குண்டு என்று கூறி பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையத்தை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் டாலர் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.

ஹபீஸ் சையது தலைக்கு விலை வைத்த அமெரிக்காவின் செயல் உலக முஸ்லீம்களை இழிவுபடுத்தும் செயல் என்று கூறிய லார்ட் நசீர் அஹ்மது ஒபாமாவையும் புஷ்ஷையும் பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் அளிப்பதாக கூறியதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

லார்ட் அஹ்மதின் இத்தகைய கருத்துகள் ஏற்று கொள்ள முடியாதவை என்று கூறிய தொழிலாளர் கட்சி தற்காலிகமாக அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. தான் அவ்வாறு ஒபாமாவின் தலைக்கு விலை வைக்கவில்லை என்று கூறியுள்ள லார்ட் அஹ்மது ஈராக்கிலும் ஆப்கனிலும் நடத்திய கொடூரங்களுக்காக புஷ்ஷூம் டோனி ப்ளேயரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று மட்டும் தான் கூறியதாக சொன்னார்.

அமெரிக்கா திடீர் பல்டி: ஈரான் அணுசக்தித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கத் தயார்!

மக்கள் நலத்தினை  முன்னிறுத்தும் அணுசக்தித் திட்டங்களுக்காக ஈரான் செயற்பட்டால் அதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க அணுகுமுறை மாற்றம் அடைந்துவருவதை இச்செய்தி தெரிவிக்கிறது.

அணுஆயுதங்களை ஈரான்  தயாரிப்பதை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா அவையில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் முறையிட்டு வந்தன. இதையே காரணம்காட்டி ஈரான் மீது இராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டி அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தன. ஆனால், ஈரான் சுப்ரீம் தலைவர் அலி கமேனி, அதிபர் அகமதி நிஜாத் ஆகியோர், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பதிலடி கொடுத்தனர்.

இதற்கிடையில், ஈரானில் செயல்படுத்தப்படும் அணுசக்தித் திட்டங்களை பார்வையிட ஐ.நா. குழுவை அனுமதிக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இவ்விரு தரப்புக்கும் துருக்கி உள்பட சில நாடுகள் சமரச முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன.  ஈரானிலும், அமெரிக்கா, சவூதி உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என்று முன்னாள் அதிபர் ரஃப்சஞ்சானிகருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்பாரா மாற்றமாக “அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை என்பதைஈரான் நிரூபித்தால், மக்கள் நலனுக்கான அணுசக்தித் திட்டங்களை ஏற்றுக் கொள்வோம்” என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்த தகவலைதுருக்கி பிரதமர் தய்யிப் எர்தோகனிடம் கூறி, அதை ஈரான் தலைவர்களிடம் தெரிவிக்கும்படி ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, ஒபாமாவின் தகவலைஅலி கமேனியிடம் தய்யிப் கடந்த வாரம் தெரிவித்து விட்டார் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன

inneram.com

அமெரிக்காவின் “டைம்” இதழின் டாப் 100 மனிதர்கள்

மூன்றாம் இடத்தில் (?)நரபலி மோடி.
உலக புகழ் பெற்ற அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை இந்த வருடத்திற்குறிய 100 முன்னனி மனிதர்களின் பட்டியலை வெளியிடுவதற்குறிய வாக்கெடுப்பை இணையதளம் மூலம் நடத்தி வருகின்றது.
இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மூன்றாவது இடம் என்று அதன் தற்போதைய நிகழ்வுகள் சொல்கின்றன. ஆம் இது வரைக்கும் டாப் 100 மனிதர்கள் பட்டியலில் மோடிக்கு ஆதரவாக பதியப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை  256003 மோடிக்கு எதிராக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 265664 ஆதரவாக கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இவர் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்று வாக்குப் பதிவாகியுள்ளது.
 
மோடி பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று வாக்களித்தவர்களை விட இவர் பட்டியலில் இடம் பெறக் கூடாது என்று சுமார் பத்தாயிரம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளார்கள்.
 
இவரைப் பற்றி டைம் இதழின் வாக்களிக்கும் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியில் இந்தியாவை வழிநடத்திச் செல்ல சிறந்த பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் பல்லாயிரக் கணக்கான முஸ்லீம்களை இவர் கொலை செய்த காரணத்தினால் இவர் முஸ்லீம்களுக்கு எதிரி என்ற பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும் இதுவரைக்கும் (இந்தச் செய்தி எழுதப்படும் வரை) மோடிக்குக் கிடைத்திருக்கும் வாக்கின் அடிப்படையில் டாப் 100 மனிதர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்மணி

அமெரிக்காவின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்மணிகராச்சி: கடந்த வெள்ளிக்கிழமை (30.03.2012) பயங்கரவாதக் குற்றச்செயலில் ஈடுபட்டார் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய நரம்பியல் நிபுணரான டாக்டர் ஆஃபியா ஸித்திக்கியை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, பாகிஸ்தான் தலைநகரில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது.

இப்பேரணியில் கலந்துகொண்டு கருத்துரைத்த பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் கராச்சி பிராந்தியத் தலைவர் முஹம்மத் ஹுஸைன் மெஹந்தி, “ஆஃபியா ஸித்தீக்கியின் வழக்கில் அவருக்கு 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானதும் முற்றிலும் பாரபட்சமானதுமான தன்னுடைய போக்கை அமெரிக்க நீதிமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது ” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த சுலோகங்களைத் தாங்கிய ஆயிரக்கணக்கான பேரணியாளர்கள், ஆஃபியா ஸித்தீக்கியின் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வராமல் மௌனம் சாதிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கோழைத்தனத்தையிட்டுத் தமது அதிருப்தியை வெளிக்காட்டவும் தவறவில்லை.

2008 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கஸ்னி காவல் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அமெரிக்க எஃப்.பி.ஐ. அதிகாரிகள் மீதும் அமெரிக்கப் படைவீரர் ஒருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2010 செப்டெம்பர் மாதம் ஆஃபியா ஸித்திக்கிக்கு நிவ் யோர்க் நீதிமன்றம் 86 வருடச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்புக் குறித்து மேன்முறையீடு செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று குழந்தைகளின் தாயான ஆஃபியா ஸித்தீக்கி தன்னுடைய குழந்தைகள் சகிதம் 2003, மார்ச் 30 ஆம் திகதி கராச்சியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.

பயங்கரவாதக் குற்றச் செயல்களோடு தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் அமெரிக்கப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக மறுநாள் உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

அதைத்தொடர்ந்து அவரைப்  பற்றிய மிக ரகசியமாகவே பேணப்பட்ட நிலையில், அவர் காபூலில் உள்ள பக்ராம் சித்திரவதை முகாமுக்கு இரகசியமாக இடமாற்றப்பட்டு, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தகவல் தெரிவித்தன.

ஆஃபியா மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டு போலியானது, நீதியான விசாரணை மறுக்கப்பட்ட நிலையில் மூன்று குழந்தைகளின் தாயான அவர் தொடர்ச்சியாக மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவது சர்வதேச மனித விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது என உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான ஆர்வலர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் உரத்துக் குரல் எழுப்பத்தொடங்கிய நிலையில், மேற்படி போலிக் குற்றச்சாட்டின் பேரில், ஆஃபியா 2008 ஜூலை மாதம் நிவ்யோர்க்குக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு 2010 பெப்ரவரியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின் பின் நிவ்யோர்க் கார்ஸ்வெல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆஃபியாவின் உடல்நிலையும் மனோநிலையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய சகோதரியைச் சந்திக்க பலதடவை அனுமதி கோரியும் சிறை நிர்வாகத்தால் தொடர்ந்தும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் ஆஃபியாவின் சகோதரி டாக்டர் ஃபௌஸியா ஸித்தீக்கி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“கார்ஸ்வெல் சிறைச்சாலை மனிதத்துவத்துக்கு முற்றிலும் எதிரான நிலைமையில் இருக்கிறது.  உண்மையான நீதிக்கும் மனிதாபிமானதுக்கும் எதிரான இத்தகைய பாரபட்சமான நிலைமையை எதிர்த்து, நீதியையும் மனித நேயத்தையும் விரும்பும் அமெரிக்கப் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து குரல்கொடுக்க முன்வரவேண்டும்” என்று டாக்டர் பௌஸியா ஸித்தீக்கி அமெரிக்க மக்களை நோக்கி அழைப்பு விடுத்துள்ளார்.

inneram.com

மாணவர்களின் நலன் கருதி ஐ.பி.எல் போட்டிகளைத் தடை செய்ய கோரிக்கை!

10 ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள  ஐ.பி.எல் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

 

 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

 

தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி முதல் நடைபெற உள்ளது. ஆனால் அதே நாளில் ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது என்ற செய்தியும், அதற்காக செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்களும் கவலை அளிப்பதாக உள்ளது.

 

கிரிக்கெட் மோகம் கொழுந்து விட்டு எரியும் நம் நாட்டில் கல்வி என்பது இரண்டாம் பட்சமாக பார்க்கப் படுகிறது.  வாழ்கையின் முக்கியமான தருணத்தில் உள்ள மாணவர்கள் கிரிக்கெட் போதையில் தங்கள் வாழ்கையை தடுமாறத்திற்கு உள்ளாக்கி விடுவார்களோ என்ற பயம் பெற்றோர்களுக்கும், மாணவர்களின் வாழ்கையில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.

 

ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்காவிட்டால் எதையோ பறிகொடுத்த போக்கில் பல மாணவர்கள் அலைவதும், கிரிக்கெட் போட்டிகளை குறித்து பல மணிநேரம் அரட்டை அடித்து நேரத்தை வீணாக்குவதும், ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்த வேண்டிய பொதுத்தேர்வு நேரத்தில் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

 

ஆபாசத்தின் உச்சக்கட்டத்தை விளையாட்டு போட்டிகளின் வாயிலாக கடை விரிக்கும் கலாச்சாரத்தை இந்தியாவில் துவக்கி வைத்த ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடரை உடனடியாக தடுத்து நிறுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.

 

ஐபிஎல் எனும் குழுவை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பி.சி.சி.ஐ  மாணவர்களின் வாழ்க்கையை குறித்து யோசிக்காமல் முடிவெடுத்ததில் வியப்பில்லை.

 

பணம் சம்பாதிப்பதற்காக யாரைப் குறித்தும் கவலைப்படாத சாராய வியாபாரிகளும், சமுதாயத்திற்கு மோசமான காரியங்களை கற்று தரும் நடிகர்களும் முதலாளிகளாக இருக்க கூடிய ஐபிஎல் குழு, மாணவர்களின் வாழ்கையை காவு வாங்க காத்துக் கொண்டிருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

 

ஒரு பொறுப்புள்ள அரசு மாணவர்களின் எதிர்காலம் குறித்து கண்டிப்பாக சிந்திக்கும். எனவே தமிழகத்தை 2023ல் ஆசியாவின் முதல் இடத்தில் வைக்க நினைக்கும் தமிழக அரசு அதற்கு அச்சாணிகளான மாணவ சமுதாயத்தைக் காக்கும் வகையிலும், பெற்றோர்களின் மனக்கவலைகளை போக்கும் வகையிலும் ஐபிஎல் டுவென்டி20 போட்டிகளை பொதுத் தேர்வுகள் முடிவடையும் வரை நடத்த அனுமதிக்க கூடாது.

 

ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ள சோனி மாக்ஸ் தொலைகாட்சியின் ஒளிபரப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து சமுதாய மாணவர்களின் சார்பாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுக்கிறது.