மாணவர்களின் நலன் கருதி ஐ.பி.எல் போட்டிகளைத் தடை செய்ய கோரிக்கை!


10 ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள  ஐ.பி.எல் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

 

 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

 

தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி முதல் நடைபெற உள்ளது. ஆனால் அதே நாளில் ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது என்ற செய்தியும், அதற்காக செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்களும் கவலை அளிப்பதாக உள்ளது.

 

கிரிக்கெட் மோகம் கொழுந்து விட்டு எரியும் நம் நாட்டில் கல்வி என்பது இரண்டாம் பட்சமாக பார்க்கப் படுகிறது.  வாழ்கையின் முக்கியமான தருணத்தில் உள்ள மாணவர்கள் கிரிக்கெட் போதையில் தங்கள் வாழ்கையை தடுமாறத்திற்கு உள்ளாக்கி விடுவார்களோ என்ற பயம் பெற்றோர்களுக்கும், மாணவர்களின் வாழ்கையில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.

 

ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்காவிட்டால் எதையோ பறிகொடுத்த போக்கில் பல மாணவர்கள் அலைவதும், கிரிக்கெட் போட்டிகளை குறித்து பல மணிநேரம் அரட்டை அடித்து நேரத்தை வீணாக்குவதும், ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்த வேண்டிய பொதுத்தேர்வு நேரத்தில் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

 

ஆபாசத்தின் உச்சக்கட்டத்தை விளையாட்டு போட்டிகளின் வாயிலாக கடை விரிக்கும் கலாச்சாரத்தை இந்தியாவில் துவக்கி வைத்த ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடரை உடனடியாக தடுத்து நிறுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.

 

ஐபிஎல் எனும் குழுவை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பி.சி.சி.ஐ  மாணவர்களின் வாழ்க்கையை குறித்து யோசிக்காமல் முடிவெடுத்ததில் வியப்பில்லை.

 

பணம் சம்பாதிப்பதற்காக யாரைப் குறித்தும் கவலைப்படாத சாராய வியாபாரிகளும், சமுதாயத்திற்கு மோசமான காரியங்களை கற்று தரும் நடிகர்களும் முதலாளிகளாக இருக்க கூடிய ஐபிஎல் குழு, மாணவர்களின் வாழ்கையை காவு வாங்க காத்துக் கொண்டிருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

 

ஒரு பொறுப்புள்ள அரசு மாணவர்களின் எதிர்காலம் குறித்து கண்டிப்பாக சிந்திக்கும். எனவே தமிழகத்தை 2023ல் ஆசியாவின் முதல் இடத்தில் வைக்க நினைக்கும் தமிழக அரசு அதற்கு அச்சாணிகளான மாணவ சமுதாயத்தைக் காக்கும் வகையிலும், பெற்றோர்களின் மனக்கவலைகளை போக்கும் வகையிலும் ஐபிஎல் டுவென்டி20 போட்டிகளை பொதுத் தேர்வுகள் முடிவடையும் வரை நடத்த அனுமதிக்க கூடாது.

 

ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ள சோனி மாக்ஸ் தொலைகாட்சியின் ஒளிபரப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து சமுதாய மாணவர்களின் சார்பாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுக்கிறது.

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: