லேப்டாப் தீப்பிடித்து வெடித்த விபத்தில் வாலிபர் பலி


கொல்கத்தாவில் இன்னொருவரின் உயிரைக் குடித்துள்ளது லேப்டாப் ஒன்று. ஆனால் இந்த முறை தவறு அந்த இளைஞரின் மீதுதான்.

கொல்கத்தாவில் 3 மாதங்களுக்கு முன்பு சயன் செளத்ரி என்ற பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவன ஆலோசனை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அருகே சார்ஜரில் மாட்டப்பட்டிருந்த லேப்டாப்பும், இயர்போன்கள் அவரது காதுகளில் மாட்டப்பட்டும் இருந்தது.

இந்த நிலையில் லேப்டாப்பால் இன்னொரு உயிர் போயுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சப்தரிஷி சர்கார். 30 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அருகில் எரிந்த நிலையில் லேப்டாப் கிடந்தது.அறை முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வந்து கதவைத் திறந்தபோது இந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், அறைக்குள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் சர்க்கார். அறை ஜன்னல்கள், கதவு மூடப்பட்டிருந்தது. அறை முழுவதும் புகையாக காணப்பட்டது. மூச்சுத் திணறி அவர் இறந்துள்ளார்.

லேப்டாப் ஒன்று வெடித்து எரிந்த நிலையில் காணப்பட்டது. அவர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்று தெரிகிறது. சிகரெட் பிடித்தபோது அது லேப்டாப்பில் விழுந்து அது தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

இதில் எந்த சதியும் இருப்பதாக தெரியவில்லை. விபத்தாகவே தெரிகிறது என்றனர்.

லேப்டாப்பில் அஜாக்கிரதை- உயிரைக் குடிக்கும்

லேப்டாப்பை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். படுக்கை அறையில் வைத்து அதைப் பயன்படுத்துவதோ, அதை அப்படியே அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதோ கூடாது என்கிறார்கள்.

படுக்கையானது மிகவும் மென்மையாக இருப்பதால், லேப்டாப்பின் கீழ்ப்பகுதி வழியாக காற்று புகுவதைத் தடுக்குமாம். சரியான காற்றோட்டம் லேப்டாப்புகளுக்குத் தேவை. அது தடைபடும்போது லேப்டாப் சூடாகி வெடிக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே லேப்டாப் வெடித்து உயிர்ப் பலி ஏற்பட்ட சம்பவங்கள் ருமேனியா மற்றும் நியூசிலாந்திலும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சார்ஜ் செய்து கொண்டே லேப்டாப்பை பயன்படுத்தியதால் விபத்து நடந்தது. bharathcommunication.blogspot.com


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: