மகளுடன் 34 வருடங்களாக பாலியல் உறவுகொண்ட நபருக்கு 3 வருட சிறை


தனது மகளுடன் சுமார் 500 தடவைகள் பாலியல் உறவு கொண்டுவிட்டு அதனூடாக 3 பிள்ளைகளுக்கு அப்பெண்ணை தாயாக்கிய ஜேர்மனிய நபருக்கு ஜேர்மன் நீதிமன்றமொன்று 3 வருடங்களுக்கு குறைவான சிறைத்தண்டனை விதித்துள்ளமை தொடர்பில் பெண்கள் அமைப்புகள் அதிருப்தி தெரவித்துள்ளன.

அடோல்வ் பி எனும் 69 வயதான நபருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நபர் தனது மகளை அப்பெண்ணின் 12 ஆவது வயதிலிருந்து 30 வருடங்களுக்கு மேலாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார்  என பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு உரிமை அமைப்புகள் தெரிவித்திருந்தன.

 தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கொடுமைப்படுத்தியதாக அந்நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவருக்கு 14 வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டுமென வழக்குத் தொடுநர்கள் கோரினர்.

ஆனால், நியூரம்பர்க் நகரிலுள்ள நீதிமன்றமொன்றின் நீதிபதி மேற்படி பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். இது வல்லுறவு அல்ல எனவும் சம்மதத்துடனேயே அந்நபர் உறவுகொண்டுள்ளார் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்படி நபருக்கு இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அடோல்வ்,கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த 34 வருடங்களாக 497 பாலியல் வல்லுறவுக் குற்றங்களைப் புரிந்தாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

இப்போது 46 வயதாகும் அப்பெண் அடோல்வ்வுடனான உறவுமூலம் 3 குழந்தைகளுக்கு தாயானார். அவற்றில் இரு குழந்தைகள் இறந்துவிட்டன.

இந்த உறவு முறைக்கு அவள் மிகவும் விருப்பம் என அடோல்வ் தெரிவித்துள்ளார்.

எனினும் அப்பெண் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், ‘இது குறித்து யாரிடமாவது சொன்னால் நான் உன்னை கொன்று விடுவேன். நீ எங்கு சென்றாலும் நான் உன்னை கண்டுபிடித்து கொன்று விடுவேன்’ என கூறி தன்னை தனது தந்தை அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அப்பெண் தற்போது ஜேர்மனியில் உள்ள வில்மெர்ஸ்பெச் எனும் கிராமத்தில் தனது தாயுடனும் சகோதர சகோதரிகளுடனும் வசித்து வருகின்றார்.

அப்பெண்ணும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் அடிக்கடி தாக்குதல்  மற்றும்  அடக்குமுறை குறித்த அச்சத்துடன் வாழ்ந்துள்ளனர்.

மேற்படி தீர்ப்பு குறித்து ஜேர்மனியிலுள்ள, வல்லுறவு நெருக்கடி குழுவொன்றின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘இவ்வழக்கின் தீர்ப்பு ஆச்சரியமாகவுள்ளது.  நீதிபதி இது என்னவென்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார். அந்த 12 வயது பெண் எவ்வாறான தெரிவுகளை மேற்கொண்டிருக்க முடியும்’ என்று கூறியுள்ளார்

ஒரு பதில்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: