என்றும் அழகு..இளமை..ஆரோக்கியம்..கிரீன் டீ..


”நான் யாருக்கும் அடிமையில்லை, சுதந்திரமாவன்” என்று மார்தட்டுபவர்கள் கூட, தேநீரின் சுவைக்கு சுகமான அடிமைகளாக இருப்பது சுவையான விஷயம் தான். உலகிற்கு காகிதம், பட்டு போன்றவற்றை கொடையாக அளித்த சீனர்கள் தாம் தேநீரையும் அறிமுகப்படுத்தினார்கள். கி.மு.2737 ல் சீனப்பேரரசர் சென் – நுங் என்பவரால் இது கண்டுபிடிக்கப்டடதாக கூறப்படுகிறது. ”கேமலியா சைனன்ஸிஸ்” என்பது இதன் தாவரவியல் பெயராகும். ”ச்சா” என்பது சீன மொழியில் தேநீரை குறிப்பதாகும். இதுவே, பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் ”ச்சாய்” என மாறியிருக்கக்கூடும். இன்று இந்தியா உட்பட 35 க்கும் மேலான நாடுகள் ”டீ” யை உற்பத்தி செய்கின்றன. உலகின் மொத்த ”டீ” உற்பத்தி ஆண்டுக்கு 3 மில்லியன் மெட்ரிக் டன்னை தாண்டுகிறது.
தேயிலை க்ரீன் டீ, பிளாக் டீ, ஒயிட் டீ, மஞ்சள் டீ, ஊலாய் டீ என பல்வேறு வகைகளாக அவதாரம் எடுத்து உள்ளது. இவை அனைத்துமே தேயிலையில் இருந்து வந்தாலும், தயாரிக்கப்படும் முறைகளாலும், பதப்படுத்தப்படும் முறைகளாலும் வேறுபடுகின்றன. இவற்றின் விளைவாக பெரும்பாலான ”டீ” வகைகள் நல்ல மருத்துவ குணங்களை இழந்து விட, இவற்றுள் தன்மை மாறாமல் அப்படியே நம் கைகளில் கிடைப்பது ”கிரீன் டீ” மட்டுமே.
ஜப்பானில் உள்ள டோகோஹூ பல்கலைக்கழக விஞ்ஞானி ஷன்சிகுரியாமா 40,530 நபர்களை வைத்து கிரீன் டீனை பற்றி மிகப்பெரிய ஆராய்ச்சியை நடத்தினார். அது 1994 ல் தொடங்கி 11 ஆண்டுகளாக நீடித்தது. அது மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள ஹார்வேர்ட், டோக்கிலோ போன்ற எண்ணற்ற பல்கலைக்கழகங்களும் கிரீன் டீ குறித்து ஆராய்ச்சிகள் செய்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆச்சரியப்படத்தக்க ஆராய்ச்சிகளின் முடிவுகள் வாழ்நாட்களையே நீட்டிக்க கூடிய அளவுக்கு நல்ல மருத்துவ குணங்கள் கொண்டது கிரீன் டீ என உறுதிப்படுத்தி உள்ளன.
”கிரீன் டீ” யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ”ஆன்டி ஆக்சிடெண்ட்கள்” (யுவெi ழஒனையவெ)தான். அதனை ”நோய் எதிர்ப்பு சக்தி” என தமிழில் அழைக்கிறோம். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக இதில் இருக்கிறது. சுருக்கமாக சொன்னால், ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜூஸூக்கு சமம்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா..! தொடர்ந்து படியுங்கள்.. நிறைய ஆச்சரியப்படலாம்..!
சூரியனின் வெப்பம், புற ஊதாக்கதிர், மாசடைந்த காற்று, சிகரெட் மற்றும் வாகன புகை, அழுக்கான தண்ணீர் என வெளிச்சூழல்கள் அனைத்தும் நம் உடலில் ”பிரீ ரேடிகல்ஸ்” என்னும் கெடுதல் தரும் வேதிப்பொருட்களை ஏற்படுத்துகின்றன. இவைகளே நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் பாதித்து, சீரழித்து சிறிய நோய்கள் முதல் இதய, புற்று நோய்கள் வரை அனைத்து பெரிய நோய்களுக்கும் வழிவகுப்பதோடு சீக்கிரமே நம்மை முதுமை நிலைக்கு தள்ளி விடுகின்றன. கிரீன் டீயின் உயர் தர ஆன்டி ஆக்சிடெண்டன்கள் அபாயகரமான பிரீ ரேடிகல்களை சமன்படுத்தி, நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்;களை நீடிக்க செய்கின்றன. எனவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரீன் டீயின் நன்மைகள் :
இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படவதை குறைக்கிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
நமது உடலில் திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
புற்று நோய் வராமலும், புற்று நோய் செல்களை வளர விடாமலும் தடுக்கிறது.
எலும்பில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
பற்களில் ஏற்படும் பல் சொத்தையும், வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.
ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
சருமத்தை பாதுகாத்து இளமையாக வைக்க உதவுகிறது. பருக்கள் வராமலும் தடுக்கிறது.
வயதான பின் வரும் ஞாபக மறதி நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது. (அல்சீமியர்ஸ் மற்றும் பார்க்கின்சன்ஸ்)
மன அழுத்தத்திற்கும், தலைவலிக்கும் மருந்தாக செயல்படுகிறது.
மூட்டு வாதத்தை குணமாக்க உதவுகிறது.
உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
புகை, மதுவின் விளைவாக உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.
கிரின் டீ உடலுக்கு ஆற்றலை தருவதிலும், நோய் எதிர்ப்பு சக்தி தருவதிலும் நிகரற்று விளங்குகிறது.
டாக்டர். டி. செந்தில்வேல் – சென்னை

Posted by mohamraonline

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: