பேஸ்புக் தகவல் பரிமாற்றம் மூலம் இளம் பெண்கள் பலரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுக்கு 50 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவின் ஜொகன்னஸ்பேர்க் நகரைச் சேர்ந்தவர் தாபோ பெஸ்டர் (வயது-22). இவர் பேஸ்புக்கில் மொடலிங் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது பெயரை தோமஸ் பெஸ்டர் என்றும், தன்னிடம் வருவோருக்கு மொடலிங் வாய்ப்பு அளிப்பதாகத் தெரிவித்திருந்தார். இதை நம்பிய பல இளம்பெண்கள், தாபோ பெஸ்டரின் வலைக்குள் சிக்கியுள்ளனர். அவர்களில் பல பெண்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார் தாபோ. மேலும், இரண்டு பணக்காரப் பெண்களை ஆயுதம் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களையும் பறித்துக் கொண்டார். இப்படியாக குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த தாபோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற விசாரணையின்போது கதறி அழுத தாபோ, தனக்கு பெற்றோர் யார் எனத் தெரியாது எனவும், தன்னை வளர்த்த ஒரு குடிகார பாட்டியினால் பலமுறை செக்ஸ் கொடுமைகளை அனுபவித்ததாகவும் தெரிவித்தார்.
அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதி பெண்களைக் கற்பழித்து, அவர்களிடம் கொள்ளையிலீடுபட்ட பெஸ்டன், சமுதாயத்திற்கு ஓர் ஆபத்தான நபர். தென் ஆபிரிக்காவில் ஆண்டுதோறும் 56ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெஸ்டனின் குற்றங்களுக்காக 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Filed under: பொதுவானவை | Tagged: பேஸ்புக்-மூலம்-இளம்பெண்க |
மறுமொழியொன்றை இடுங்கள்