கடையநல்லூர் கிளைகளின் ஒன்றினைந்த பொதுக் குழு கூட்டம் – சைபுல்லாஹ் காஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் பொதுக் குழுக் கூட்டம் கடந்த 19.06. 2011 ஞாயிறு அன்று சரியாக காலை 10 மணிக்கு ஆரம்பமானது. இந்தப் பொதுக் குழுவில் கடையநல்லூர் டவுண், ரஹ்மானியா புரம், மக்கா நகர், பேட்டையைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக் குழுவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள். தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்களும், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் அனைத்துக் கிளைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

முதலாவதாக சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ஏகத்துவக் கொள்கைக்காக நபிமார்களும், ஸஹாபாக்களும் பட்டதியாகங்களை எடுத்துரைத்து அது போன்று தவ்ஹீத் வாதிகளும் ஏகத்துவத்திற்காக தியாகம் செய்ய ஒரு போதும் தயங்கக்கூடாது என்பதை சுருக்கமாக தனது உரையில் எடுத்துரைத்தார்கள்.

அதன் பிறகு மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி ஷம்சுல்லுஹா அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவர் தனது உரையில் ஸஹாபாக்கள் சத்திய மார்க்கத்திற்கு எதிராக தம்முடைய இரத்த உறவுகளே நின்ற போதும் அவர்கள் குருதி உறவிற்கு சிறிதும் முக்கியத்துவம் வழங்கவில்லை. கொள்கை உறவிற்குத் தான் அவர்கள் முக்கியத்துவம் வழங்கினார்கள். ஆனால் இன்றோ சிலர் சொந்த பந்தங்கள் என்று வரும் போது தம்முடைய கொள்கையில் ஆட்டம் கண்டு விடுகின்றனர் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்து பெண்வீட்டு விருந்து எவ்வளவு பெரிய அனாச்சாரம் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.மேலும் படிக்க..