சவூதி மன்னர் நாடு திரும்பினார்! 10 ,000 கைதிகள் விடுதலை!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சவூதி மன்னரின் மீள்வருகையை முன்னிட்டு பொது உரிமைமீறல் குற்றங்களில் கைதாகியிருந்தவர்களுள் 10,000 க்கும் மேற்பட்ட கைதிகள்  விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
விடுதலையாக உள்ளவர்களில் சவூதி மண்ணின் மைந்தர்களும், அந்நிய நாட்டவரும் அடங்குவர் என்று சவூதி  சிறைத் துறை தலைமை பொது இயக்குனர் அலீ பின் ஹுசைன் அல் ஹாரிதி தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் கூடலாமே தவிர குறையாது என்றார் அவர்.

அவர் மேலும் கூறுகையில், பொது உரிமைமீறல் குற்றங்களின் அடிப்படையில், சீர்திருத்த மையங்களிலும் சிறைகளிலும் 49 ,000 பேர் அடைபட்டுள்ளனர் என்றார்.

இந்த விடுதலை ஆணை, அரசின் பொது உரிமையை மீறிய குற்றவாளிகளுக்கே பொருந்தும் என்றும், தனி மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் மேலும் சொன்னார்.