
கெய்ரோ: எகிப்தில் மக்கள் புரட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார். ஆட்சி பொறுப்பை ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு, குடும்பத் துடன் தலைநகர் கெய்ரோவை விட்டு வெளியேறினார்.
அதிபர் பதவியில் இருந்து முபாரக் (82) விலகியதாக துணை அதிபர் உமர் சுலைமான் நேற்று அறிவித்தார். ஆட்சி பொறுப்பை ராணுவம் ஏற்றதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு அதிபர் முபாரக் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
அதிபர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என சில வெளிநாட்டு தலைவர்கள் என்னை வலியுறுத்தி வருகின்றனர். யாருடைய கோரிக்கையையும் நான் ஏற்க மாட் டேன். செப்டம்பரில் என் பதவி காலம் முடிகிறது. அதுவரை பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. நாட்டு மக்களின் நலன் கருதியும், அரசியல் அமைப்பு சட்டத்தை பாது காக்கவும்தான் இத்தகைய முடிவை எடுத்துள்ளேன். அதே நேரம், துணை அதிபர் ஓமர் சுலைமானுக்கு சில அதிகாரங்களை வழங்கி உள்ளேன். அவர் எதிர்க்கட்சிகளின் போராட் டத்தை முடிவுக்குக் கொண்டு வருவார். இவ்வாறு முபாரக் தெரிவித்தார்.
குறிப்பாக, உடனடியாக பதவி விலகி நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இதன் மூலம், முபாரக் உடனடியாக பதவி விலகுவார் என்ற போராட்டக்காரர்களின் நம்பிக்கை தகர்ந்து விட்டது. தஹ்ரிர் சதுக்கத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்கள், அதிபரின் பேச்சை கேட்டபிறகு Ôகழுதையே வெளியேறுÕ என கோஷம் எழுப்பினர். இதற்கிடையில் கடந்த 18 நாட்களுக்கு மேல் தொடரும் போராட்டத்தில் இதுவரையில் 150 பேர் பலியாகியுள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கெய்ரோ மற்றும் முக்கிய நகரங்களில் நேற்று பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் மற்றும் போராட்டக்காரர்கள் இதில் கலந்து கொண்டனர். வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு போராட்டம் வலுத்து வருவதால், அதிபர் முபாரக் தனது குடும்பத்தினருடன் கெய்ரோவை விட்டு வெளியேறிவிட்டார். எகிப்துக்குள் தனக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்றுக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் அதிகாரம் மிக்க ராணுவ உயர் நிலைக் குழு நேற்று கெய்ரோவில் கூடி ஆலோசனை நடத்தியது. இதற்கிடையில், நேற்று திடீர் திருப்பமாக, அதிபர் பதவியில் இருந்து முபாரக் விலகியதாக துணை அதிபர் உமர் சுலைமான் அறிவித்தார். ஆட்சி பொறுப்பை ராணுவம் ஏற்றது. தங்களது 18 நாட்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக கூறி, கெய்ரோ உட்பட நாடு முழுவதும் மக்கள் வெற்றியைக் கொண்டாடினர்.
dinakaran.com
Filed under: பொதுவானவை | Tagged: எகிப்தில் மக்கள் புரட்சி வெற்றி | Leave a comment »