ஒபாமாவிற்கு விலைவுயர்ந்த பரிசுகளை தந்தவர் சவுதி மன்னர்

https://i0.wp.com/odagam.com/wp-content/uploads/2011/01/Obama-and-abdullah.jpg

அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்ற பிறகு வெள்ளை மாளிகையின் முதல் ஒரு வருடத்தில் அவருக்கு அதிக மதிப்புள்ள பரிசுகளை வழங்கியவர் சவுதி மன்னர் என்று அமெரிக்க அரசு செய்தி வெளியிட்டு உள்ளது. சவுதி மன்னர் அப்துல்லாஹ் 2009 ஆம் ஆண்டில் மட்டும் ஒபாமா குடும்பத்திற்கு 190,000 டாலர்கள் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கொடுத்து உள்ளார். இதன் இந்திய மதிப்பு 86 லட்சம் ரூபாய். இதில் ஒபாமாவின் மனைவிக்கு கொம்பு, வைர நகைகள், காதணி, மோதிரம், காப்பு  மற்றும் கழுத்து மாலை என அவருக்கு மட்டும் அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொடுத்து உள்ளார். ஆனால் இது போன்ற நகைகள் அவர் அணியும் பழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர் அப்துல்லாஹ்வை அடுத்து அவருக்கு அதிக மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கியவர் என்ற இரண்டாவது இடத்தில் இருப்பவர் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுச்கோம் (Silvia Berluscom). இவர் பதினைந்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொடுத்து இருக்கிறார் என்றாலும் அதில் ஒரு லட்சத்திற்கு விதவிதமான collar tie(சவடி இழுவைமரம்) கொடுத்து இருக்கிறார்.

சீனா அதிபர் ஹு ஜின்டோ (Hu Jintao) பத்து லட்சம் மதிப்புள்ள பட்டு பூத்தையல்(silk embroidery) பரிசளித்துள்ளாராம். மேலும் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கொழி (Nicolas Sarkozy) இரண்டு லட்சம் மதிப்புள்ள கிறிஸ்டியன் டியோர் (Christian Dior) கம்பெனி பரிமளப் பை(Perfume) ஒன்றை வழங்கியுள்ளார்.

பிரிட்டிஷ் அதிபர் கோர்டன் ப்ரௌன் (Gordon Brown) பேனா, பேனா ஸ்டாண்ட் மற்றும் வின்ஸ்டன் சர்சில் பற்றிய சுயசரிதை என இவர் வழங்கியுள்ள பரிசுகளின் மதிப்பு எழரை லட்சம் இருக்குமாம்.

இஸ்ரேலிய அதிபர் சைமன் பெரேஸ்(Shimon Peres) ஒரு பெண் புறாவை பறக்க விடுவது போன்ற ஒரு வெண்கலச் சிலை ஒன்றை பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு  மூன்றரை லட்சம்.

ரோமன் கதோலிக மார்க்கத்தாரின் பிரதான குருவான போப் மூன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்கள் மற்றும் புத்தகங்களை கொடுத்துள்ளார்.

பிரிட்டனின் எலிசபெத் ராணி (Elizabeth Rani) தன்னுடைய ஓவியம் ஒன்றை பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு நாப்பதாயிரம்.

பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் (Mahmoud Abbas)இருபத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கியுள்ளார், அதில் நாலாயிரம் மதிப்புள்ள ஒலிவ் எண்ணெய்களும் அடங்கும்.

odagam.com