கடந்த ஜனவரி 12 ஆம் தேதி டெல்லி வளர்ச்சி ஆணையத்தினரால் இடித்து நீக்கப்பட்ட நூர் பள்ளிவாசல் இடம் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான கெஸட் ஆதாரம் வெளியாகியுள்ளது. அதே நேரம் இப்பள்ளிவாசலின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ள வால்மீகி கோவில் அரசு நிலத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டது எனவும் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை நீக்கம் செய்வதற்காக நடவடிக்கை துவங்கிய டெல்லி வளர்ச்சி ஆணையம் இக்கோயில் நிலத்தைக் கோயிலுக்காக விட்டுக்கொடுத்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பள்ளிவாசல் எனக்கூறி, டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்து நீக்கம் செய்த நூர் பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்த 350 சதுரமீட்டர் நிலம், முஸ்லிம்களுக்கென வக்ஃப் செய்யப்பட்டு வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான 1975 ஆம் ஆண்டு கெஸட் ஆதாரம் வெளியாகியுள்ளது. 1947-48 ஆம் ஆண்டின் ஜமாபந்தி(நிலத்தின் உரிமையாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பு)யில் இவ்விவரம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இப்பள்ளிவாசலை இடித்து நீக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க..
Filed under: பொதுவானவை | Tagged: காங்கிரஸின்-கரசேவைபறிக | Leave a comment »