முடிசாயும் கொடிசாயாது…

01.08.05 அன்று சவூதி மன்னர் ஃபஹத் மரணம் அடைந்தார். அவர் இறந்ததும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இப்படி உலகச் சந்தையை உலுக்கி எடுத்த அந்த சவூதி மன்னரின் மரணத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்தனர்.
உலகெங்கிலும் உள்ள நாட்டுத் தலைவர்கள் இறந்ததும் அரசாங்க விடுமுறை, அரைக் கம்பத்தில் கொடியைப் பறக்க விடுதல், அரசு மரியாதையுடன் கூடிய அடக்கம் போன்ற வழமைகள் எதுவுமின்றி சாதாரணமாக பொது மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றதைப் பார்த்து உலக மக்கள் ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் உறைந்து போயினர். அவர்களுக்கு இந்த மரணம் ஏதோ ஒரு செய்தியை உரைத்தது, உணர்த்தியது.
அது உணர்த்திய செய்தி என்ன என்பதை 03.08.05 அன்று வெளியான இந்து நாளேடு தெளிவாகவே போட்டு உடைத்தது. சவூதி அரசாங்கம் பின்பற்றுகின்ற வஹ்ஹாபியிஸம் தான் இதற்குக் காரணம் என்று விளக்கம் தெரிவித்திருந்தது.
வஹ்ஹாபியிஸம் என்ற தனிக் கொள்கை ஏதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை அதன் தூய வடிவில் நிலை பெறச் செய்தவர் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள். அதன் பின்னர் தூய இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு வஹ்ஹாபியிஸம் என்ற பெயர் வழங்கப்படுகின்றது. எனவே தூய இஸ்லாமிய அடிப்படையில் நடைபெற்ற சவூதி மன்னரின் அடக்கம் உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்தது.மேலும் படிக்க..