பாம்பு கடி: 90 சதவீதத்தினர் பயத்தால் உயிரிழப்பு சுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில் தகவல்!


பாம்பு கடிபட்டவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே, விஷத்தால் உயிரிழக்கின்றனர்; 90 சதவீதம் பேர், பயத்தால் உயிரிழக்கின்றனர், பல கோடி ஆண்டுகளுக்கு முன் பல்லியாக இருந்தவை, பரிணாம வளர்ச்சியில் பாம்புகளாக மாறியுள்ளன. பாம்பின் பழமையான புதைப்படிவம், சகாரா பாலைவனத்தில் உள்ளது. உலகில் 2,700 வகையான பாம்புகள் உள்ளன.

இந்தியாவில் 20 வகையான கடற்பாம்புகள் உட்பட 270 வகையான பாம்புகள் வாழ்கின்றன; இவற்றில், 62 பாம்புகள் மட்டுமே, விஷத்தன்மை கொண்டவை.கட்டு விரியன், நாகப்பாம்பு, கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகியவற்றுக்கு மட்டுமே, மனிதரைக் கொல்லும் அளவுக்கு விஷத்தன்மை உண்டு. இந்தியாவில், ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர், பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர். இவர்களில், 10 சதவீதம் பேர் மட்டுமே, விஷத்தால் இறக்கின்றனர்; 90 சதவீதம் பேர், பயத்தால் சாகின்றனர்.விஷப்பாம்புகள் எல்லாக் கடிகளிலும் விஷத்தை உமிழ்வதில்லை. நாகப்பாம்பை விட, கட்டு விரியனின் விஷம், 15 மடங்கு வீரியமுள்ளது. கட்டு விரியன் கடித்தால், 45 நிமிடங்களில் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகும். கருப்பு உடலில் சீரான இடைவெளியில் இரட்டை வெள்ளைப்பட்டைகள் இருப்பதே, இதன் அடையாளம். கண்ணாடி விரியனின் விஷம், ரத்த அணுக்களை சேதப்படுத்தும்.சுருட்டை விரியன், ஒரே கடியில் 12 மில்லி விஷத்தை உமிழும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகமாகக் காணப்படும் ராஜநாகம், தரையில் வாழும் விஷப்பாம்புகளில் மிக நீளமானது. மொத்தம் 19 அடி வரை இருக்கும்.

இது ஒரு கடியின்போது ஏழு மில்லி விஷத்தை உமிழும். ஒரு மனிதன் இறப்பதற்கு, 0.3 மில்லி விஷமே போதுமானது. இருப்பினும் இது அரிதிலும் அரிதாகவே மனிதரைக் கடிப்பதால், பெரும்பாம்புகள் பட்டியலில் இல்லை.கூர்மையான பார்வை கொண்ட ராஜநாகம், தூரமாக மனிதர்கள் வரும்போதே பார்த்து ஓடிவிடும். எனவே, இதனை “ஜென்டில்மேன் ஸ்நேக்’ என்பார்கள். இரவு அல்லது அதிகாலை நேரங்களில்தான், பாம்புக்கடி ஏற்படுவதால், எந்த வகையான பாம்பு கடித்தது என்று பலருக்கும் தெரிவதில்லை. இதைக்கண்டு பிடிக்க சில அடையாளங்கள் உள்ளன.விஷப்பாம்புகள் கடித்தால் மூச்சுத் திணறல் ஏற்படும்; கண் இமை மூடி விடும்; தூக்கம் வரும்; நாக்கு மரத்துப் போகும். கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் கடித்தால், கடிபட்ட இடத்தில் எரிச்சலும், ஈறுகளில் ரத்தக்கசிவும் ஏற்படும். விஷப்பாம்பு கடித்தால், இரண்டு பற்களின் அச்சு பதிந்திருக்கும்; விஷமற்ற பாம்பு கடித்தால், பிறை வடிவில் பற்கள் பதிந்திருக்கும்.பாம்பு கடித்தவுடன், கடித்த இடத்துக்கு மேலே கட்டுப்போடுவது, காயத்தைக் கீறி ரத்தத்தை உறிஞ்சுவது ஆபத்தானது. ரத்த ஓட்டம் தடைபட்டு, நிலைமை மேலும் சிக்கலாகும். காயத்தைக் கீறுவதால், ரத்தம் அதிகம் வெளியேறியும் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. கடிபட்ட இடத்தை அழுத்தாமலும், அசையாமலும் வைத்து, மிக விரைவாக மருத்துவமனை செல்வதே சிறந்தது; பயப்படுத்தாமல், நம்பிக்கை ஏற்படுத்துவது மிக முக்கியம்.பாம்புகள், உட்செவிகள் மூலமாகவும், அதிர்வுகள் மூலமாகவும் ஒலியை உணர்கின்றன.

மெல்லிய அதிர்வைக் கூட, பாம்புகள் உணர முடியும். ஆண் பாம்பைக் கவர, பெண் பாம்பு வாசனைத் திரவத்தை உமிழும். மனிதர்களால் பெண் பாம்பு கொல்லப்படும்போது, இந்த வாசனை வெளிப் பட்டே அங்கு ஆண் பாம்பு வரும். இதை பழி வாங்க பாம்பு வந்ததாக கதை பரப்புகின்றனர்.பாம்பு பால் குடிக்கும்; கண்ணைக் கொத்தும்; பழி வாங்கும் என்பதெல்லாம் அப்பட்டமான மூட நம்பிக்கை. மரங்களில் வாழும் விஷமற்ற கொம்பேறி மூக்கன் பாம்பு,கடித்தவர் இறந்து விட்டாரா என்று சுடுகாட்டில் வந்து பார்க்கும் என்பதும் மூடநம்பிக்கையே.

kadayanalluraqsha.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: