தாய் சாபம் விட்டால் பழிக்குமா?

தாய் சாபமிட்டால் பழிக்கும் என்பதை பின்வரும் செய்திலி­ருந்து விளங்கி கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல் களால் ‘ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) ‘அவருக்கு நான் பதிலüப்பதா? தொழுவதா?’ என்று கூறிக் கொண்டார். (பதிலüக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், ”இறைவா! இவனை விபசாரிகüன் முகங்கüல்  விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!” என்று கூறி விட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு ‘இது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்கüடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, ”குழந்தையே! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அக்குழந்தை, ”(இன்ன) இடையன்” என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், ”தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ”இல்லை, கüமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறிவிட்டார். (மூன்றா மவர்) இஸ்ரவேலர்கüல் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டி ருந்தான். உடனே அவள், ”இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு” என்று துஆ செய்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, ”இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே” என்று கூறியது. பிறகு அவளது மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. லிஇந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்ததுலி பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், ”இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே” என்று கூறினாள். உடனே அக்குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு, ”இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு” என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ”ஏன் இப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டதற்கு அக்குழந்தை, ”வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்கüல் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) ‘நீ திருடிவிட்டாய்;  விபசாரம் செய்து விட்டாய்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்ய வில்லை” என்று பதிலüத்தது.
நூல் புகாரி : 3436

இதே போன்று செய்தி திர்மிதியில் 3370  வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியில்

மூன்று நபர்களின் பிரார்த்தனைகள் உடனே ஏற்றுக் கொள்ளப்படும். அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனை பிரயானியின் துஆ பிள்ளைகளுக்கு எதிராக பெற்றோர்களின் துஆ ஆகிய முன்று நபர்களின் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹீரைரா ர­ அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனாலும் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். என்றாலும் புகாரியில் இடம் பெற்றுள்ள செய்தியின் கருத்துக்கு ஒத்து இருப்பதால் இந்த செய்தி ஹசன் நல்லது என்ற நிலைக்கு வந்துவிடுகிறது.
எனவே பெற்றோர் விடும் சாபம் பிள்ளைகளிடத்தில் இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கு வந்தடையும்.

kadayanalluraqsha.com