நாம் வாழும் உலகில் அவ்வப்போது புயல், மழை, வெள்ளம், பூகம்பம், எரிமலை வெடிப்புக்கள் என ஏதாவது ஒரு சோதனை நடந்து கொண்டேயிருக்கின்றது.
1923-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்தனர். 1935ல் இந்தியாவின் குவெட்டாவில் 50,000 பேரும், 1939ல் சிலியில் 28,000 பேரும், அதே ஆண்டு துருக்கியில் 33,000 பேரும், 1960ல் மொரோக்காவில் 12,000 பேரும், 1976ல் சீனாவில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேரும், அதே ஆண்டு கவுதமாலாவில் 23,000 பேரும், 1978ல் ஈரானில் 25,000 பேரும், 1985ல் மெக்ஸிகோவில் 9,500 பேரும், 1988ல் ஆர்மீனியாவில் 25,000 பேரும், 1990ல் ஈரானில் 50,000 பேரும், 1993ல் இந்தியாவின் லட்டூரில் 10,000 பேரும், 1995ல் ஜப்பானில் 6,000 பேரும், 1998ல் ஆப்கானிஸ்தான் மற்றும் தாஜிஸ்தானில் 5,000 பேரும், 1999ல் துருக்கில் 17,000 பேரும், 2001ல் குஜராத்தில் 13,000 பேரும், 2003ல் ஈரானில் 41,000 பேரும் பூகம்பத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இவை பேரழிவு ஏற்படுத்திய பூகம்பங்களின் பட்டியல். இவை தவிர அவ்வப்போது சில ஆயிரக்கணக்கில் பலி கொண்ட பூகம்பங்களும் உண்டு.
இந்த நிலநடுக்கங்கள் எல்லாம் உலகை உலுக்கிக் குலுக்கியது. அப்போதெல்லாம் நாம் என்ன நினைத்துக் கொண்டிருந்தோம்? ஈரான் எங்கோ இருக்கின்றது என்று நினைத்து நாம் நம்முடைய பாவங்களில் மூழ்கிக் கொண்டிருந்தோம். அந்தப் பூகம்பத்திற்கும் நமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எண்ணி வீண் விளையாட்டுக்களில், காமக் கூத்துக்களில், களியாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.
dubaitntj.blogspot.com
Filed under: இஸ்லாம் | Tagged: சுமத்ரா-நிலநடுக்கமும்-சு | Leave a comment »