செங்கோட்டை & சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ஏசி பெட்டிகளில் மூட்டைப்பூச்சி, எலித்தொல்லை பயணிகள் ஆர்ப்பாட்டம்

 

 

 

 

 

 

 

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டிகளில் கரப்பான், மூட்டை பூச்சி கள் தொல்லையால் தூக் கம் இழந்த பயணிகள் மதுரை ரயில் நிலையத்தில் இன்று காலை ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை & செங் கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6.15 மணிக்கு மதுரை வந்தது. இதில் உள்ள ஏசி பெட்டிகளில் எலி, கரப்பான், மூட்டை பூச்சிகள் தொல்லைகளால் தூக்கம் இழந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் மதுரை ரயில் நிலையத்தில் திடீரென ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இத னால் அங்கு பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து டிக்கெட் கட்டணத்தை திரும்பத் தர வேண்டுமெனக்கூறி ரகளையில் ஈடுபட்டனர். தகவலறிந்த கூடுதல் கோட்ட ரயில்வே மேலா ளர் வெங்கட சுப்ரமணியன் விரைந்து வந்து பயணி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ரிசர்வேஷன், பொது பெட்டி பயணிகள் ரயில் தாமதமாவதால் தங்களது பணிகள் பாதிக்கப்படுவ தாகக்கூறி வாக்குவாதத் தில் ஈடுபட்டனர்.
ஏசி பெட்டி பயணிகள் கூறிய குறைபாடுகளை சரிசெய்வதாக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித் தனர். இதனையடுத்து அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப் பட்டுச் சென்றது.
இதுகுறித்து ஏசி பெட் டியில் பயணம் செய்தோர் கூறுகையில், சொகுசு பயணத்திற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி ஏசி பெட்டிகளில் ரிசர்வேஷன் செய்கிறோம். பயணத்தின் போது பெட்டிகளுக்குள் எலி, கரப்பான், மூட்டை பூச்சிகள் தொல்லையால் தூக்கம், நிம்மதியை இழந் தோம். மேலும் ஏசியும் சரிவர இயங்கவில்லை. இதுபோன்ற தொல்லை கள் தொடர்ந்தால் ரயில் பயணத்தில் மக்களின் ஆர்வம் குறையத் துவங் கும்’ என்றனர்.