அலஹாபாத் உயர்நீதி மன்ற நீதிபதிகள் நேர்மையற்றவர்கள்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

மத உரிமைக்கும், சொத்துரிமைக்கும் விரோதமாகவும், உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்த அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் பாபர் மசூதி குறித்த கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு நடுநிலையாளர்களின் கடுமையான கண்டனத்திற்கு ஆளானது. தற்போது, அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகள் குறித்து சுப்ரீம் கோர்ட் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் டிவிஷன் பெஞ்ச், உத்தர பிரதேச மத்திய சன்னி வக்ஃபு வாரியம், ஒரு நிலம் விஷயமாக தொடர்ந்த வழக்கில், கடந்த 26.11.2010 வெள்ளியன்று பரபரப்பான தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பில், அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகள் குறித்து தங்களுக்கு பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன; அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகளுள் பலர் நேர்மையற்றவர்கள்; தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி வருகின்றனர்; இந்திய சட்டத்துறை குறித்த பொதுமக்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்க்கும் வண்ணம் அதிர்ச்சியளிக்கக்கூடிய பல தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று கடுமையாக சாடியுள்ளனர்.

மேலும், அலஹாபாத் உயர்நீதி மன்றத்தை களையெடுத்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது; நீதிபதிகள் குறித்து வரும் புகார்கள், அவர்கள் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது என்று நீதிபதி மார்க்கண்டேய கட்சு மற்றும் நீதிபதி கியான் சுதான் மிஷ்ரா ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி அலஹாபாத் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காவிகள் கடுமையாக ஊடுறுவி உள்ளனர் என்பதற்கு தற்போதைய சுப்ரிம் கோர்ட்டின் தீர்ப்பு சான்றாக அமைகின்றது. மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமர் அங்கு தான் பிறந்தார் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்று, அநியாய தீர்ப்பினை அளித்தது இதே அலஹாபாத் உயர் நீதி மன்றம் தான். அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் இலட்சணம் தற்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

“… ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. … (குர்ஆன் – 5:8) ”

இதே போன்றே, பாபரி மஸ்ஜித் சட்ட விரோத தீர்ப்பை சுப்ரீம் கண்டித்து, தானாகவே முன்வந்து அவ்வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்தி, முஸ்லிம்களுக்கு நீதி வழங்கி, இந்திய இறையாண்மை மீது சாதாரண குடிமக்களின் நம்பிக்கையை மெய்ப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் பேரவா. சுப்ரீம் கோர்ட் செய்யுமா?

ரியாத் ஃபெய்ஸல்
tntj.net

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

”பொம்பள சிரிச்சாப் போச்சு” என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். இது எதைக் குறிக்கின்றது? ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.
ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்தப் பழமொழி தெரிவிக்கின்றது.
ஒரு பெண் ஓர் ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் வாழும் சமுதாய அமைப்பு முறை மேற்கண்டவாறு கோடிட்டுக் காட்டுகின்றது. ஆடவனிடம் பெண்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற நிலைபாட்டை சமுதாயம் அங்கீகரிக்கின்றது. காரணம் இதைச் சமுதாயம் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கின்றது.
இஸ்லாமிய மார்க்கம் இதைத் தான் வ­யுறுத்திக் கூறுகின்றது.  பெண்கள் ஆண்களிடம் குழைந்து, கொஞ்சி, நயந்து பேசினார்கள் என்றால் அது அவர்கள் சபல உணர்வுகளுக்குக் காட்டும் பச்சைக் கொடியாகி விடும் என்று  திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.

dubaitntj.blogspot.com