நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டு கடன் திட்டத்தில் குளறுபடி

கடையநல்லூரில் நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டு கடன் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டதால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தமிழக அரசு கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்காக கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுபோல் நகர்ப்புறத்தில் வாழும் சாமானிய மக்களுக்காகவும் மானிய வட்டியுடன் கூடிய வீட்டு கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி காலிமனை வைத்திருப்பவர்கள் மாத வருமானம் ரூ.5 ஆயிரம் வரை இருந்தால் ரூ.1 லட்சமும், 5 ஆயிரத்திற்கும் மேல் இருந்தால் ரூ.1 லட்சத்து 60 ஆயிரமும் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டியில் மானிய மும் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற கடையநல்லூர் நகராட்சியில் 2,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இத்திட்டத்திற்கான பயனாளிகளிடம் இருந்து கலெக்டர் ஜெயராமன் கடந்த மாதம் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண் டார்.
மனுவுடன் வருமான சான்றிதழ், வில்லங்க சான்றி தழ் இணைக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் நலன் கருதி வருவாய்த்துறையினரே ஒவ்வொரு பகுதியிலும் முகாம் அமைத்து வருமான சான்றிதழ் வழங்குவதற்கு கலெக்டர் ஆணை பிறப்பித்தார். இதன்படி கடையநல்லூர் நகராட்சியில் வருமான சான்றிதழ் வழங்குவது குறித்த முகாம் நேற்று முன்தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நக ராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால் மாலை வரை வருவாய் அலுவலர்கள் யாரும் வரவில்லை.
பொறுமையிழந்த பொதுமக்கள் ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட் டது. தகவல் அறிந்ததும் தென்காசி தாசில்தார் விஜயா மற்றும் அலுவலர்கள் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். பயனாளிகள் கிராம நிர்வாக அதிகாரி, வரு வாய் அலுவலரிடம் உரிய சான்று பெற்று தென்காசி தாலுகா அலுவலகத்தில் வரு மான சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
பொதுமக்களின் நலன் கருதி அந்தந்த பகுதிகளிலே முகாம் அமைத்து வருமான சான்றிதழ் வழங்க கலெக்டர் ஆணையிட்ட நிலையில், தாசில்தாரின் புதிய அறிவிப்பு பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இத்திட்டத்தின் கீழ் கடன்பெற காலதாமதம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் நகராட்சி முற்றுகை
பொதுமக்களின் நலன் கருதி அந்தந்த பகுதிகளிலே முகாம் அமைத்து வருமான சான்றிதழ் வழங்க கலெக்டர் ஆணையிட்ட நிலையில், தாசில்தாரின் புதிய அறிவிப்பு பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இத்திட்டத்தின் கீழ் கடன்பெற காலதாமதம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.