2002 குஜராத் கலவரத்தை நரபலி மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார்-ஜடாபியா வாக்குமூலம்

modi

அகமதாபாத்: 2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.

கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.

கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.

thatstamil

ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மீது குற்றப்பத்திரிக்கை

டெல்லி: ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவினர் இந்த குற்றப்பத்திரிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இந்திரேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்தான் இந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்திரேஷ் குமார் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஜெய்ப்பூரில் ரகசியக் கூட்டம் போட்டனர். அதில் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர்பான சதித் திட்டம் தீட்டப்பட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி வியாழக்கிழமை மாலை, ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற காஜா மொய்னுதீன் சிஷ்டி தர்காவில் குண்டு வெடித்தது. இதில், நான்கு பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.

ரம்ஜான் மாதத்தின் 3வது நாள் நோண்பை ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் ஒன்று கூடி முடித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.

பள்ளிக் கூட பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திரிக்கை குறித்து இந்திரேஷ் குமார் கூறுகையில், இது எனக்கு எதிரான, காங்கிரஸ் அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். இந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. இது அரசியல் சதி வேலை . விசாரணை அமைப்பை எனக்கு எதிராக காங்கிரஸ் பயன்படுத்துகிறது.

நாங்கள் வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை. அது எங்களது கொள்கைக்குப் புறம்பானது. நீதிக்காக கோர்ட்டை நான் நாடுவேன் என்றார்.

thatstamil