அநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்.

இஸ்லாம் என்றால் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களில் ஈடுபடுவது மட்டும்தான் என்று பல எண்ணிக்கொண்டிருக்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச­லேயே தன் வாழ்கை கழித்தார்கள். உலக விஷயங்களைப்பற்றி நபிகளார் கவனத்தில் கொள்ளவில்லை, தொழுவதும் நோன்பு நோற்பதும்தான் அவர்களின் கடமையாக இருந்தது என்று எண்ணுகிறார்கள். அவர்கள் எண்ணும் வண்ணம் பல அறிஞர்களின் சொற்பொழிவுகளும் அமைந்திருக்கிறது.
வணக்க வழிபாடுகளை விட்டு விட்டு அரசியல் விஷயங்களில் ஈடுபட்டால் அது ஆன்மீகத்திற்கு எதிரானது என்றும் அநீததற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ஆன்மீகவாதிகள் இல்லை என்றும் எண்ணுகின்றனர்.
இவ்வாறு செய்பவர்களை காணும் பெற்றோர்கள், நீ உண்டு உன் தொழுகை உண்டு என்று இருக்க வேண்டியதுதானே என்று கண்டிப்பதைக் காண்கிறோம்.
ஆனால், உண்மையில் இஸ்லாம் அனைத்து துறைகளிலும் ஈடுபடவேண்டும் என்றும் அவ்வாறு செய்வதினால் மறுமையில் கூ­லி உண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
மார்க்க விஷயமாக இருந்தாலும் சரி, உலகவிஷயமாக இருந்தாலும் சரி, அநியாயம் நடக்கும்போதும் நீததற்கு மாற்றமாக காரியங்கள் நிகழும் போது அதை தட்டிக் கேட்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.
இவ்வாறு தீமையை தட்டிக் கேட்போர் நல்லடியார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர்ஆன் 3:114)
தீமைக்கு எதிராக போராடும் ஒரு கூட்டத்தினர் இவ்வுலுகில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்றும் இவர்கள் வெற்றியாளர்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
இவ்வசனம், தீமைக்கு எதிரான போராட்டம் மறுமைக்கு வெற்றித் தேடித் தரும் காரியம் என்பதை மிகத் தெளிவாக கூறுகிறது. நபி (ஸல்) அவர்களும் கூட தீமையைக் கண்டவர் எப்படி நடக்க வேண்டும் என்று வழிகாட்டியுள்ளார்கள்.

மேலும் படிக்க…