ஏர்லைன்ஸ் விமானத்தில் டயர் வெடித்ததா ? : டில்லி வந்த 102 பயணிகள் உயிர் பிழைத்தனர்


புதுடில்லி: டில்லி வந்த ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் மற்றொரு துயர சம்பவம் தவிர்க்கப்பட்டது. துபாயில் இருந்து மங்களூரூ வந்த விமானம் தரையிறங்கியபோது எரிந்து சாம்லான துயர சம்பவத்தில் 160 கருகி பலியாயினர். இந்த சம்பவ துயர அலை நீங்குவதற்குள் மீண்டும் ஒரு இந்திய விமானம் ஒரு பெரும் விபத்து நடக்க நேரிட்டு நூலிலையில் தவிர்க்கப்பட்டது.

மும்பை- போபால்- இந்தூர் – டில்லி செல்லும் ஏர்லைன்ஸ் ( ஐ. சி., 113 ) விமானம் இன்று காலை 11.10 மணி அளவில் டில்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் விமானத்தின் இரண்டு டயர்கள் ஒரே நேரத்தில் வெடித்தது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் 102 பேரும் என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தில் உறைந்தனர். பெரும் பதட்டம் அடைந்தனர். இதற்கிடையில் உடனுக்குடன் தகவல் பரிமாறப்பட்டு விமானத்தை சாதுர்யமாக பைலட் தரையிறக்கினார். தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டயர் வெடிக்கவில்லை;  ஏர் லைன்ஸ் மறுப்பு : இந்த சம்பவம் குறித்து ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது: டயர் வெடித்தது என்ற தகவல் பரவியது. ஆனால் டயர் வெடிக்கவில்லை காற்று வெளியேறி குறைவாக இருந்தது என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பைலட்டுக்கு தரையிறங்க உத்தரவிடப்பட்டது. தயார் நிலையில் இருந்த தீயணைக்கும் படையினர் தயராக இருந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து கூல் செய்தனர். பயணிகள் பத்திரமாக உள்ளனர்.

கடந்த 22 ம் தேதி ஏர் இந்திய விமான விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு சம்பவம் விமான பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு முறையான பராமரிப்பு , முன்சோதனை குறைபாடுதான் காரணமாக இருக்கும் என விமானத்தில் பயணிப்போர் கருத்து தெரிவிக்கின்றனர்.

dinamalar.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: