சொல்கிறார்கள்

அப்பா கஷ்டத்தை நினைத்து படித்தேன்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 495 மார்க் எடுத்த, மாநிலத்தின் முதல் மாணவி ஜாஸ்மின்: சின்ன வயசில இருந்தே, நான் நன்றாக படிப்பேன். அப்பா, எட்டாம் வகுப்பு வரைதான் படிச்சார். அதனால, அவர் அடிக்கடி பேசும்போது, “நன்றாக படிக்கணும்மா… படித்தால்தான் குடும்பம் முன்னேற முடியும்… வேற எந்த நினைப்பும் உங்களுக்கு வேண்டாம்… படிக்கிற வயசுல ஒழுங்கா படிச்சா பிற்காலம் சந்தோஷமாக இருக்கும்’னு, சொல்லுவார். அது ரொம்ப உண்மைன்னு இப்பத் தெரியுது. நான் நன்றாக படித்ததால், எங்களின் இந்த சிறிய வீட்டைத் தேடி அமைச்சர்கள், எம்.எல்.ஏ., – எம்.பி.,க்கள்ன்னு, பலதரப்பட்ட பெரியவர்கள் வந்து, வாழ்த்திட்டுப் போறாங்க. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அப்பா காலைல எம்-80 பைக்ல துணிகளை எடுத்துக் கட்டிட்டு கிளம்புவாங்க. அப்ப நாங்க உதவி செய்வோம். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமம் கிராமமா போய் வியாபாரம் பார்ப்பாங்க. சில நேரம் இரண்டு நாள் கழிச்சுதான், திரும்பி வருவாங்க. “கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைக்கிறாங்களே’ன்னு, மனசுல வச்சுக்கிட்டே படிச்சேன். நான் மாநிலத்தில் முதல் மார்க் வாங்குனதுல என்னை விட எங்க அம்மா, அப்பாதான் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அப்பா வியாபாரம் செய்யப்போகும் பல கிராம மக்கள், பேப்பர்ல எங்க குடும்பப் படத்தைப் பார்த்துட்டு, அப்பாவுக்கு போன் பண்ணி வாழ்த்துச் சொன்னாங்க. அது மறக்க முடியாத சம்பவம். அண்ணன் இம்ரான், “குடல் இறக்கம்’ என்ற நோயால் அவதிப்பட்டார். உடனே ஆபரேஷன் செய்யணும்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. அந்தச் சமயம் அண்ணனுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு. எக்ஸாமா? ஆபரேஷனா? என பிரச்னை வந்தது. “எனக்கு நீதான்டா முக்கியம். எக்ஸாம் அப்புறம் எழுதிக்கலாம்’ன்னு, உடனே ஆபரேஷன் செய்யச் சொல்லிட்டார் அப்பா. இனிமேல் அவன் படிக்கிறேன்னு சொன்னது எனக்கு சந்தோஷமா இருக்குது.

dinamalar.com

ஏர்லைன்ஸ் விமானத்தில் டயர் வெடித்ததா ? : டில்லி வந்த 102 பயணிகள் உயிர் பிழைத்தனர்

புதுடில்லி: டில்லி வந்த ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் மற்றொரு துயர சம்பவம் தவிர்க்கப்பட்டது. துபாயில் இருந்து மங்களூரூ வந்த விமானம் தரையிறங்கியபோது எரிந்து சாம்லான துயர சம்பவத்தில் 160 கருகி பலியாயினர். இந்த சம்பவ துயர அலை நீங்குவதற்குள் மீண்டும் ஒரு இந்திய விமானம் ஒரு பெரும் விபத்து நடக்க நேரிட்டு நூலிலையில் தவிர்க்கப்பட்டது.

மும்பை- போபால்- இந்தூர் – டில்லி செல்லும் ஏர்லைன்ஸ் ( ஐ. சி., 113 ) விமானம் இன்று காலை 11.10 மணி அளவில் டில்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் விமானத்தின் இரண்டு டயர்கள் ஒரே நேரத்தில் வெடித்தது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் 102 பேரும் என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தில் உறைந்தனர். பெரும் பதட்டம் அடைந்தனர். இதற்கிடையில் உடனுக்குடன் தகவல் பரிமாறப்பட்டு விமானத்தை சாதுர்யமாக பைலட் தரையிறக்கினார். தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டயர் வெடிக்கவில்லை;  ஏர் லைன்ஸ் மறுப்பு : இந்த சம்பவம் குறித்து ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது: டயர் வெடித்தது என்ற தகவல் பரவியது. ஆனால் டயர் வெடிக்கவில்லை காற்று வெளியேறி குறைவாக இருந்தது என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பைலட்டுக்கு தரையிறங்க உத்தரவிடப்பட்டது. தயார் நிலையில் இருந்த தீயணைக்கும் படையினர் தயராக இருந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து கூல் செய்தனர். பயணிகள் பத்திரமாக உள்ளனர்.

கடந்த 22 ம் தேதி ஏர் இந்திய விமான விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு சம்பவம் விமான பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு முறையான பராமரிப்பு , முன்சோதனை குறைபாடுதான் காரணமாக இருக்கும் என விமானத்தில் பயணிப்போர் கருத்து தெரிவிக்கின்றனர்.

dinamalar.com