காஸா என்கிற சிறை!

Gaza.gif Gaza image by trendy2000
பூமியின் புனிதமான பகுதி பாலஸ்தீனம் என்பார்கள். அந்தப் பகுதி இன்றைக்கு உணவுக்காகக் கையேந்தும் நிலையில் இருக்கிறது. ஓயாத போர்களும், அரசியலும் சேர்ந்து மக்களை முடக்கிப் போட்டிருக்கிறது. சர்வதேசச் சட்டங்கள் அனைத்தும் வல்லரசுகளுக்கு ஆதரவாக வளைக்கப்பட்டிருக்கின்றன. மத ரீதியாகப் பொது முத்திரை குத்தப்பட்டு, அப்பாவிகள்கூட பயங்கரவாதிகளாகப் புனையப்பட்டிருக்கிறார்கள். யார் உரிமையாளர், யார் ஆக்கிரமிப்பாளர் என்ற உண்மைகள் திரிந்திருக்கின்றன. ஒடுக்கப்பட்ட மற்ற இனங்களைப் போல பாலஸ்தீனர்கள் ஆதரவற்றவர்களாக இல்லை என்பது மட்டும் கொஞ்சம் ஆறுதல்.

பாலஸ்தீனத்தைப் பற்றிச் சொல்லும்போது, 2006-ம் ஆண்டுத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட முடியாது. பாலஸ்தீனத்தின் இரு பகுதிகளான மேற்குக் கரை மற்றும் காஸô துண்டுப் பகுதி ஆகிய இரண்டுக்கும் சேர்த்து நடந்த தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது.

ஃபதா கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஹமாஸின் வெற்றியை இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஹமாஸ் தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்த முடியாது எனப் பின்வாங்கின.

கூட்டணி அரசில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,மேற்குக் கரையை விட்டு ஹமாஸ் வெளியேற்றப்பட்டது. இப்போது காஸô பகுதியில் மட்டும் ஹமாஸ் ஆட்சி செய்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரை, ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதால், காஸô துண்டுப் பகுதியை சர்ச்சைக்குரிய பகுதியாக அறிவித்துவிட்டது. அத்தோடு நில்லாமல், கடல்வழியான போக்குவரத்துத் தடையும் விதித்திருக்கிறது.

இஸ்ரேலின் இந்தக் கட்டுப்பாட்டால், உணவு மற்றும் மருந்துப் பொருள்களைத் தவிர வேறெதையும் கடல்வழியாக காஸôவுக்குள் கொண்டு செல்ல முடியாது. கட்டுமானத்துக்குப் பயன்படும் சிமென்ட் மற்றும் இரும்புச் சட்டங்கள்கூட தடை செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது நடக்கும் ராக்கெட் தாக்குதலுக்கு சிமென்டும் இரும்புச் சட்டங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பது இஸ்ரேலின் குற்றச்சாட்டு.

அது சரி, காஸôவுக்குள் இதைக் கொண்டு செல்லலாம், இதைக் கொண்டு செல்லக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்க இஸ்ரேலுக்கு என்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி எழலாம். அதற்கும் இஸ்ரேல் தரப்பில் பதில் இருக்கிறது. அதாவது, போர் தொடுப்பதற்காக எதிரிக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சர்வதேசச் சட்டங்கள் அனுமதி வழங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறிக் கொள்கிறது.

இஸ்ரேலின் தடைகளால், காஸô மிகப்பெரிய சிறை போல மாறியிருக்கிறது. உணவுப் பொருளும் எரிபொருளும் போதிய அளவு இல்லை. தேவையான அளவு மின்சாரம் தயாரிக்கவும் வழியில்லை. கடந்த ஆண்டில் எகிப்தின் ரஃபா எல்லையை மக்கள் ஆவேசமாகக் கடந்து சென்றதே காஸôவின் நிலைமைக்குச் சாட்சி. மண்ணெண்ணெய் மற்றும் ரொட்டியைத் தேடி பெண்களும் குழந்தைகளும் நாடு கடந்து போனதை அவ்வளவு எளிதாக நினைவிலிருந்து அகற்றவிட முடியாது.

கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து இஸ்ரேலின் கடல் போக்குவரத்துத் தடைகளை மீறி உதவிப் பொருள்களைக் கொண்டு செல்ல பல்வேறு அமைப்புகளும் பல முறை முயற்சி செய்திருக்கின்றன. காஸô விடுதலை இயக்கம் என்கிற அமைப்பு இதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆனால், இதுவரையில் பெரிய வெற்றியைப் பெற்றதில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் சர்வதேசக் குழுவினரை ஏற்றிக்கொண்டு 8 கப்பல்கள் காஸô நோக்கி கடந்தமாத இறுதியில் புறப்பட்டன. இஸ்ரேலால் தடைசெய்யப்பட்ட சிமென்ட் போன்ற பல்வேறு பொருள்களும் இந்தக் கப்பல்களில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நோபல் பரிசு பெற்றவர், பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த அணியில் சென்றனர். துருக்கியிலிருந்து செயல்படும் ஐஎச்எச் என்கிற அமைப்பைச் சேர்ந்த 400-க்கும் அதிகமானோர் இதில் அடங்குவர்.

இந்தக் கப்பல்களில் காஸôவை மறுநிர்மாணம் செய்வதற்கான பொருள்கள் இருப்பதாக பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூறினர். சர்வதேச கடல் பரப்பு வழியாக காஸôவை அடைவதை யாரும் தடுக்க முடியாது எனவும் அவர்கள் வாதிட்டனர். ஆனால், வழக்கம்போல இஸ்ரேல் தரப்பிலிருந்து எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டது.

இஸ்ரேலில் உள்ள ஆஸ்தோத் துறைமுகத்தை நோக்கி வருமாறு கப்பல்கள் அறிவுறுத்தப்பட்டன. கப்பல்களில் இருக்கும் பொருள்கள் அனைத்தும் ஆய்வுக்குப் பிறகு காஸôவுக்குள் அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

ஆனால், “எங்கள் இலக்கு காஸôதான்’ என்ற கோஷத்துடன் கப்பல்கள் தொடர்ந்து முன்னேறியதால், உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேல் கப்பல்கள் சுற்றி வளைத்தன. சண்டை மூண்டது. அப்போது மவி மர்மரா என்கிற கப்பலில் இஸ்ரேலிய வீரர்கள் ஏறி அங்கிருந்தவர்களை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 8 பேர் துருக்கியைச் சேர்ந்தவர்கள். கப்பல்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன. இப்படியாக, இஸ்ரேலின் தடையை மீறி காஸôவுக்குள் நுழைவதற்கான இன்னொரு முயற்சியும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், இஸ்ரேலுக்கு எதிரான இரண்டு விளைவுகள் இந்தச் சம்பவத்தால் ஏற்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் என்கிற நாட்டை அங்கீகரித்த முதல் பெரிய இஸ்லாமிய நாடான துருக்கியுடனான உறவில் இப்போது விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இது இஸ்ரேலின் வருங்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக அமையக்கூடும்.

அடுத்ததாக, காஸôவின் விடுதலைக்கு ஆதரவாக உலகின் பல நாடுகளிலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடப்பதற்கு இந்தச் சம்பவம் காரணமாக அமைந்திருக்கிறது. இஸ்ரேலுக்கு நெருக்கமான நாடுகளாகக் கருதப்படும் பிரிட்டன், கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.

இஸ்ரேலிய கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என ஸ்வீடன் துறைமுக ஊழியர்கள் அறிவித்திருக்கிறார்கள். இஸ்ரேலிய ராணுவ அதிகாரி கலந்து கொள்ள இருந்த பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கை நார்வே ரத்து செய்திருக்கிறது.

ஆனால், அமெரிக்க ஆதரவு என்கிற பெரும் பலம் இருக்கும்வரை இஸ்ரேல் எதற்கும் கவலைப்படப் போவதில்லை. எல்லா நாடுகளையும் விட கூடுதல் ராணுவ பலத்தை இஸ்ரேலுக்கு அளித்திருப்பது அமெரிக்காதான். ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்களில் இருந்து இஸ்ரேலைக் காப்பதும் அந்த நாடுதான்.

ஒபாமா அதிபரான பிறகு, இஸ்லாமிய நாடுகளை அரவணைத்துச் செல்லும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவரது முடிவுப்படி, இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன; ஆப்கனிலிருந்து கூட்டுப் படைகள் அடுத்த ஆண்டில் வெளியேறத் தொடங்கும். அந்த வரிசையில், காஸôவுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமானால், இஸ்ரேல் பற்றியும் முடிவெடுப்பாரோ என்னவோ?

எம். மணிகண்டன்.

பால் குடிக்கும் வயதில் சிகரெட் பிடிக்கும் குழந்தைகள் : ஓர் அதிர்ச்சி தகவல்!

Tamil news paper, Tamil daily news  paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political  news, business news, financial news, sports news, today news, India  news, world news, daily news update

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் யாவென் என்ற 3 வயதான சிறுமி ஒரு நாளைக்கு குறைந்தது 40 சிகரெட்டுகளை உபயோகிக்கிறாள். புகை பிடிப்ப துடன் மது அருந்தும் பழக்கத்தையும் இந்த சிறுமி கொண்டுள்ளாள். பாதுகாப்பான இடத்தில் வசிக்கும் இந்த சிறுமி தனது பெற்றோருக்குத்  தெரியாமல் பணத்தை திருடி வாங்குவதுடன் தனது தந்தை வைத்திருக்கும் சிகரெட்டுகளையும் திருடி குடிக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளாள்.
இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவுடன் தனது உடை அலங்காரத்தினையும் மாற்றிக் கொண்டாள்.

பெரும்பாலும் ஆண்கள் அணியும் உடைகளையே பயன்படுத்துகிறாள். மேலும் ஒரு நாளைக்கு 3 டம்ளருக்கு மேல் மது அருந்திய நிலையிலும் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் சிறுமி தெரிவித்துள்ளாள். கடந்த ஒரு வருடமாக இருக்கும் இந்த பழக்கத்தை இப்போதுதான் அவளது பேற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகளை ஊதி தள்ளும் 2 வயது சிறுவன்!

கடந்த வாரத்தில், இதே இந்தோனேசியாவில் ஆர்டி ரிசால் என்ற சிறுவன் ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகளை உபயோகித்து பரபரப்பை ஏற்படுத்தி விட்டான். மேலும் அச்சிறுவன் சிகரெட் பிடிக்கும் வீடியோ காட்சி யூ ட்யூப்பில் ஒளிப்பரப்பட்டது. வீடியோ காட்சி ஒளிப்பரப்பான சிறிது நேரத்தில் சுமார் 39 லட்சம் உலக மக்கள் பார்த்து வியந்தனர். இந்நிலையில் தனது உடல் நிலை கெட்டு விடுமோ என எண்ணி  40 சிகரெட்டுகளுக்கு பதிலாக 15 சிகரெட்டுகளை உபயோகிக்கின்றான்.

பரபரப்பு  வீடியோ காட்சி: http://www.dinakaran.com/Indonesian-baby-on-40-cigarettes-a-day.asp

dinakaran.com