கண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்!

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல்!

காது கேளாதோர் பள்ளியில் முதலிடம் பெற்ற பிளஸ்-2 மாணவி!

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மாணவி காது கேளாதோர் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்றார்.
சென்னை திருவல்லிக்கேனியைச் சேர்ந்த கார் டிரைவரான பி.எம். முகம்மது அப்துல்லாஹ்-எம்.எஸ். நாகூர் மீரா தம்பதிகளின் மகள் ஃபாத்திமா பானு. பிறந்த சில மாதங்களிலே ஃபாத்திமா பானுக்குப் பேச்சுத்திறன், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரின் பெற்றோர் மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள்.

மகளின் எதிர்காலம் அவர்களின் கண்முன் வந்து நின்றது. முகம்மது அப்துல்லாஹ் தன்னுடைய குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டு, மகளின் குறைபாடு தெரியாமல் அவரைப் படிக்க முடிவு செய்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள ‘லிட்டில் பிளவர் கான்வென்ட்’ மேநிலைப்பள்ளியில் அவரைச் சேர்ந்தார்.

வாய் பேச முடியாவிட்டாலும், காது கேட்கும் திறனை இழந்து விட்டாலும் மாணவி ஃபாத்திமா பானு தனக்கு எதிரே பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை பெற்று இருக்கிறார். இந்த ஆற்றலே அவர் பிளஸ்-2வில் அதிக மார்க் எடுப்பதற்குத் துணை புரிந்தது.

பிளஸ்-2வில் பிசினஸ் மேக்ஸ் பாடப் பிரிவை தேர்வு செய்து தேர்வு எழுதிய அவர், கடந்த 14.05.2010 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 1000-க்கு 953 மார்க் பெற்று பள்ளியிலே முதல் மாணவியாக தேர்வு பெற்றார்.

தமிழில் 177 மார்க்கும், பொருளாதாரத்தில் 196, வணிகவியலில் 198, கணக்குபதிவியலில் 189, பிசினஸ் மேக்ஸில் 193 மதிப்பெண்ணும் பெற்று இருக்கிறார். இந்த வெற்றி அவரையும் அவரின் பெற்றோர்களையும் மன மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பிளஸ்-2க்கு பிறகு பி.காம் படித்து, சி.ஏ.(ஆடிட்டர்) ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருக்கிறது.

முதலிடம் பெற்ற மாணவியைப் பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி, கட்டிப் பிடித்து “உன் விடாமுயற்சிக்கு பாராட்டுகள்” என்று கூறி வாழ்த்துத் தெரிவித்தார். பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி ஃபாத்திமா பானு இன்னும் ஓராண்டு ஆங்கிலக் கல்வியை அதே பள்ளியில் கற்க வேண்டியுள்ளது. அதன்பிறகு அடுத்த ஆண்டு (2011) அவர் கல்லூரிக்குச் சென்று தன்னுடைய லட்சியப் பயணத்தைத் தொடருவார்.

இது குறித்து பானுவின் தந்தை முகம்மது அப்துல்லாஹ் கூறியதாவது:-
“ஃபாத்திமா எனக்கு மூத்த மகள். பிறந்த சில மாதங்களிலே அவளால் பேசவும் கேட்கவும் முடியாது என்பது எங்களுக்குத் தெரியவந்தது. இது எங்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. மனதில் தோன்றிய காயங்களைத் தாங்கிக்கொண்டு, என் மகளின் எதிர்காலத்திற்காகப் பாடுபட்டு வருகிறோம். ஆண்டவனின் கருணையால் பிளஸ்-2 தேர்வில் அவள் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறாள். ஆடிட்டராக வர வேண்டும் என்பது அவளின் விருப்பம். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்”

நன்றி : தினத்தந்தி

சோனியா வாகனத்தை நிறுத்திய ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட்

https://i0.wp.com/www.ndtv.com/convergence/images/fullimage/ver1/s/soniagandhi.jpg
ரேபரேலி : உ.பி.,யில் காங்., தலைவர் சோனியாவின் பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தியது தொடர்பாக ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், ரயில்வே கேட் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, உ.பி., ரேபரேலி தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள் ளார். தலமு என்ற இடத்தில் இருந்து உன்சாகருக்கு சோனியா சென்று கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு வாகனங்கள் அவருக்கு முன் சென்று கொண்டிருந்தன. அப்போது, ஜலால்பூர் அருகே ரயில்வே கேட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஜகதீஷ் என்ற ஊழியர், பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் தேஸ்ராம் ரவாத், ரயில்வே கேட் ஊழியர் ஜகதீஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இச்சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்!

Audio/Videoஅனைத்து சமயத்தவரும் கேட்டு பயணடைய வேண்டிய, அனுபவமிக்க மனோதத்துவ நிபுணரின் குழந்தைகள் வளர்ப்பது தொடர்பான அறிவுரைகளும் எச்சரிக்கைகளும்.

வழங்குபவர்: Dr. அப்துல்லாஹ் (Dr. பெரியார்தாசன் – சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி

இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாய்யியா, ஜித்தா

வெளியீடு:
இஸ்லாமிய அழைப்பகம், ஸனாய்யியா, ஜித்தா, Tel. 6369549

உங்களில் ஒருவன் நான்

Masjid Haram

பந்தா பண்ணுவதற்கு நமக்கு யாரும் சொல்லித் தரவே தேவையில்லை. நாலு ஆதரவாளர்கள் நமக்குப் பின்னால் வ ருவதற்குக் கிடைத்தால் போதும்; உடனே பெருமையால் தலை கனத்து விடுகிறது; பின்வரும் கூட்டத்தின் ‘வாழ்க’  முழக்கத்தில் கிறக்கம் ஏற்பட்டுவிடுகிறது. உடனே சவடால் பேச்சும் வாயிலிருந்து மடை திறந்த வெள்ளமாகப்  பொழிகிறது.
ஆனால் இந்த அகிலத்திற்கே அருட்கொடையாக இறைத்தூதராக வந்த அண்ணலாரின் வாழ்வில் காணப்படும்  எளிமை நம்மை வியக்க வைக்கிறது.
ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் நீண்ட பயணத்தில் இருந்தார்கள். கண்ணுக்கு எட்டிய  தொலைவுவரை ஒரே மணற்காடு. கடும் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மருந்துக்குக்கூட நிழல் இல்லை. பயணத்தின் ஊடாக திடீரென அடர்த்தியான பேரீச்சை மரங்கள் கொண்ட பாலைவனச் சோலை ஒன்று கண்ணில்  பட்டது. அந்தச் சோலையைக் கண்டதும் எல்லாருடைய மனங்களிலும் மகிழ்ச்சி. அங்கு தங்கி உணவருந்தி ஓய்வெடுத்துவிட்டுப்  பயணத்தைத் தொடரலாம் என்று அண்ணலார் முடிவு செய்தார். அடுத்த கணமே நபித்தோழர்கள் சுறு சுறுப்பாகச் செயல்படத் தொடங்கிவிட்டார்கள். சிலர் அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தினார்கள்; சிலர் உணவு  சமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்; சிலர் ரொட்டிக்காக மாவு பிசையத் தொடங்கினார்கள்; சிலர் தண்ணீர்  எடுத்து வந்தார்கள்; சிலர் தாம் ஏறிவந்த ஒட்டகங்கள் அனைத்துக்கும் தீவனமும் நீரும் புகட்டினார்கள். அண்ணல் நபிகளார் தம்முடைய பங்கிற்கு விறகு சேகரித்து வரக் கிளம்பினார். நபித்தோழர்கள் அனைவரும் பாசமும்  அன்பும் மேலிட அண்ணலாரைத் தடுத்தார்கள். ‘‘வேண்டாம், இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஓய்வெடுங்கள். எல் லா வேலைகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.’’ அண்ணலார் கூறினார்கள்: ‘‘எல்லா வேலைகளையும் நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்.  ஆனால் உங்களில் இருந்து மாறுபட்டவனாக இருக்க நான் விரும்பவில்லை. தமது தோழர்களிலிருந்து விலகி இரு ப்பவனை இறைவன் நேசிப்பதில்லை.’’  இந்த எளிமையும் பணிவும் நம் வாழ்விலும் இருந்துவிட்டால் எத்தனை நன்றாக இருக்கும்!

-இறை நேசன்-


ஜெயலலிதா தங்கும் சிறுதாவூர் பங்களா நிலம் ஆர்ஜிதம்: அரசு உத்தரவு

Front page news and headlines today

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் அடிக்கடி சென்று தங்கி வரும் சிறுதாவூர் பங்களா அமைந்துள்ள நிலத்தை கையகப்படுத்த, அரசு உத்தரவிட்டு உள்ளது. எனினும், சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக உள்ள வழக்கு முடியும் வரை மீட்பு நடவடிக்கையை நிறுத்தி வைக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலுகா சிறுதாவூர் கிராமத்தில் பிரம்மாண்ட பங்களா உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் இந்த பங்களாவை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பங்களா அமைந்துள்ள நிலம், அரசால் இலவசமாக ஏழைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட தாகவும், அந்த நிலம் அபகரிக்கப் பட்டுள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டினர். முறைகேடாக இந்த நிலம் அபகரிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க, ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்ரமணியம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. 2006 ஜூலை 27ம் தேதி அமைக்கப்பட்ட இந்த கமிஷன், இரண்டு மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு உட்பட பல காரணங்களால், மூன்று ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் தாமதமாக, கடந்த பிப்ரவரியில் கமிஷனின் அறிக்கை, அரசிடம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் படிக்க…

ஈரானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்கர்களை குடும்பத்தவர் சந்திக்க அனுமதி

File:Mahmoud Ahmadinejad.jpg

தெஹ்ரான்: ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய குற்றச்சாட்டிற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று அமெரிக்கர்களை அவர்களது குடும்பத்தினர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூன்று அமெரிக்கர்களையும் அவர்களது குடும்பத்தினர் சந்திப்பதற்காக ஈரானுக்கு பயணிப்பதற்கான விசாவினை வழங்குமாறு அமெரிக்காவிலுள்ள ஐ.நா.தூதுவருக்கு ஈரான் உத்தரவிட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மனிதநேய அடிப்படையிலேயே ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் மனோச்சர் மொட்டாகி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்களான ஷனே பௌர்,சரா சௌட் மற்றும் ஜோஸ் பற்றால் ஆகியோர் ஈரானில் வேவு பார்ப்பதற்காக சட்டத்திற்கு முரணாக நாட்டுக்குள் நுழைந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த வருடம் ஜூலை 31 இல் எல்லை காப்பு படையினரால் கைது செய்யப்பட்டிருந்த இம்மூவரும் அமெரிக்க உளவுப்பிரிவுடன் தொடர்பினைக்கொண்டிருப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த மூன்று அமெரிக்கர்களும் நண்பர்களாக இருப்பதுடன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுமிருந்தனர்.

இந்நிலையில், இம்மூவரையும் குடும்ப உறுப்பினர்கள் சிறைச்சாலைகளில் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தும் அதற்குரிய திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

ஆனால், தமது பிள்ளைகளை சந்திப்பதற்கு ஈரான் மூன்றாவது தடவையாக இவ்வாறு அனுமதித்துள்ளதாகவும் ஒருபோதும் சந்திப்பதற்கு அனுமதி வழங்குவதில்லையெனவும் மூன்று அமெரிக்கர்களினதும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

-இறை நேசன்-

உங்கள் யு-ட்யூப் அக்கவுண்ட்


கூகுள் தரும் வசதிகள் பலவற்றில் இமெயிலுக்கு அடுத்தபடியாக, பலரின் விருப்பமாக இருப்பது யுட்யூட்தான். இதில் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய அல்லது நமக்குப் பிடித்த வீடியோ கிளிப்களை இதில் அப்லோட் செய்து அனைவரும் பார்க்கும் வண்ணம் பதிக்கலாம்.
நீங்கள் யு–ட்யூப் தளம் சென்று தேடிப் பார்த்தால், நாம் டிவி சேனல்களில் பார்க்கும் பல வீடியோ காட்சிகள் பதிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். திறமையான ரசிகர்கள் பலர், பிரபல திரைப்படங்களின் பாடல் காட்சிகளுக்கான பாடல்களில் மாற்றம் செய்து தங்களுக்குப் பிடித்த வகையில் அமைத்து வெளியிட்டிருப்பதனைப் பார்க்கலாம்.
பலர் தங்கள் குழந்தைகளின் வீடியோ கிளிப்களை அனைவரும் காணும் வகையில் அமைத்திருப் பதனையும் காணலாம். இங்கு இந்த யு–ட்யூப் அக்கவுண்ட்டை எப்படிக் கையாளலாம் என்று பார்ப்போம்.
முதலில் கூகுள் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தாலே, யு–ட்யூப் அக்கவுண்ட் அமைத்துக் கொள்ள முடியும். இவற்றை அமைத்தவுடன் யு–ட்யூப் தளம் சென்று உங்கள் அக்கவுண்ட் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே அக்கவுண்ட் பக்கத்திற்குச் செல்லுங்கள். வலது மேல் மூலையில் உள்ள Account
என்பதில் கிளிக் செய்தால், உங்கள் அக்கவுண்ட் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

அடுத்து இடது பக்கத்தில் ஒரு பிரிவு ‘Overview’ எனத் தலைப்பிட்டு இருப்பதனைக் காணலாம். இந்தப் பிரிவின் கீழ் உங்கள் அக்கவுண்ட்டை, வசதிப்படி வைத்துக் கொள்ள பல ஆப்ஷன்கள் கிடைக்கும். முதலில் Profile Setup என்பதில் தொடங்கலாம். இதில் கிளிக் செய்தால் நீங்கள் ‘About Me’ என்ற ஒரு புதிய பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு உங்கள் யூசர் நேம் அடிப்படையில் ஏதேனும் ஒரு படத்தை அப்லோட் செய்திடலாம். உங்களைப் பற்றி விவரிக்க ஏதேனும் தகவல்களைப் பதியலாம். உங்களுக்கென ஓர் இணைய தளம் இருந்தால், அதனை அங்கே எழுதி வைக்கலாம். கூடுதலாக உங்களின் தனிப்பட்ட தகவல்கள், பிடித்தவை, பிடிக்காதவையும் பதியலாம்,மேலும் படிக்க…

அரசு பஸ் டிக்கெட் பரிசோதகருக்கு தலைமை செயலகத்தில், ‘தர்மஅடி’

Important incidents and happenings in and around the  world

சென்னை : சென்னை மாநகர போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகரை, விசாரணைக்கு அழைத்து தலைமை செயலக ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோதி (55). இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில், டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை, தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பஸ் நிறுத்தத்தில், ஜோதி மற்றும் அவருடன் பணியாற்றும் பஞ்சாட்சரம், பாண்டியன் ஆகிய மூவரும் பஸ்களை நிறுத்தி, டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.

காலை 9:30 மணியளவில், திருப்போரூரிலிருந்து பிராட்வே செல்லும் தடம் எண் 521 பஸ், அந்த பஸ் நிறுத்தம் வந்தது. வழக்கம் போல் ஜோதி உள்ளிட்ட மூவரும் அந்த பஸ்சில் ஏறி, டிக்கெட் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்சில் பயணித்த, தலைமை செயலக பணியாளர்கள் நான்கு பேர், டிக்கெட் பரிசோதகர்களிடம், ”பீக் அவர்சில் ஏன் இப்படி பஸ்சை நிறுத்துகிறீர்கள்?” என்று கூறியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், டிக்கெட் பரிசோதகர்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியர், தன்னை தலைமை செயலரின் உதவியாளர் என்று கூறினார். பஸ்சை விட்டு பரிசோதகர்கள் இறங்கி விட, பஸ் கிளம்பியது. இதன்பின், டிக்கெட் பரிசோதகர் ஜோதியை அழைத்த மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், தலைமை செயலகத்திற்கு செல்லுமாறும், அங்கு விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜோதி, சக ஊழியர்களுடன், தலைமை செயலகம் சென்றார். தலைமை செயலர் அறையில் விசாரணை முடிந்து திரும்பிய போது, அந்த அறை வாசலில் நின்ற, டபேதார்கள் இருவர் மற்றும் பஸ்சில் வந்த ஊழியர் ஆகிய மூவரும் சேர்ந்து, டிக்கெட் பரிசோதகரை தாக்கியதுடன், அவரை கீழே தள்ளி மிதித்ததாக கூறப்படுகிறது.

இதில், ஜோதிக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமடைந்தார். உடன் சென்றவர்கள், அவரை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமை செயலக போலீசில், இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தலைமை செயலர் அறைமுன்பு நடந்த இந்த தாக்குதல் சம்பவம், போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை செய்யும் போது, மற்றொரு அரசு ஊழியர் ஒத்துழைப்பு அளிக்காததுடன், அவரை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

dinamalar

24 மணி நேரம் தொடர்ந்து உரையாடி 19 வயது இளைஞர் லிம்கா சாதனை

Tamilnadu special news update

திருவள்ளூர்; தனியார் தொலைக் காட்சியில் 24 மணி நேரம் தொடர்ந்து 507 நேயர்களிடம் உரையாடி, 19 வயது இளைஞர் லிம்கா சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் அடுத்த திருமுல்லைவாயல் வைஷ் ணவி நகரைச் சேர்ந்தவர் ராஜா மகன் விவேக்(19). இவர், கம்ப்யூட்டர் டிப்ளமோ படித்துவிட்டு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  மேலும், தனியார் தொலைக்காட்சியில் (ஜாக்) நிகழ்ச்சி தொகுப் பாளராகவும் மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

இவர் லிம்கா சாதனை மற்றும் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் காமெடி டைம், தெய்வீக நேரம், வாழ்த்தலாம் வாங்க, சிறுவர் நேரம், நேருக்கு நேர் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை (24 மணி நேரம்) நேரலை நிகழ்ச்சி திருவள்ளூரில் நடந்தது. இவர் உலக வரலாற்றிலேயே முதன் முதலாக இச்சாதனையை படைத் துள்ளார்.  லிம்கா உலக சாதனை புத்தகம் சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தாஸ், அறுவை சிகிச்சை நிபுணர் சந்திரன், பொது மருத்துவர்கள் ஜெயக்குமார், ராமநாதன், ஆசிரியர் ராஜிவ்குமார், ஆசிரியை சீதா உள் ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் உட்கார்ந்து நிகழ்ச்சியை கண்காணித்து மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சியின் இடையே சாதனை இளைஞர் விவேக் கின் உடல்நிலை குறித்து அடிக்கடி டாக்டர்கள் பரிசோதித்தனர். இந்நிகழ்ச்சியில் இளைஞர் விவேக்கை 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர் உள்ளிட்ட 75 பகுதிகளில் இருந்து 507 நேயர்கள் தொடர்பு கொண்டு பேசி னர்.

சாதனை குறித்து விவேக் கூறியதாவது: ‘நான் முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய புத்தகங் களை விரும்பி படிப் பேன். இளைஞர்கள் சாதனை புரிய வேண்டும் என்ற அப்துல் கலாம் கருத்து தான், என்னை இச்சாதனைக்கு தூண்டியது. நானும் சாதனை படைக்க வேண்டும் என தீவிர முயற்சியில் ஈடுபட்டு, தனியார் தொலைக் காட்சியில் (ஜாக்) பங்கேற்று இச்சாதனையை புரிந்துள்ளேன். இச்சாதனை புரிய என் தாய் விஜயா எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் நிகழ்த்திய இச்சாதனையை நானே முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம் பெறுவேன்’ என்றார்.

dinamalar

IAS, IPS,IFS தேர்வில் வெரும் 2.4% முஸ்லிம் மாணவர்ளே தேர்வு!

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஷா பைஸல் UPSC (IAS, IPS,IFS) தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக 875 பேரில் வெறும் 21 பேர் மட்டுமே முஸ்லீம்கள், ஆதாவது 2.4% மட்டுமே முஸ்லீம்கள். இந்தியாவையே ஆளும் மிக முக்கிய பதிவிகளான, கலெக்டர், காவல் துறை கமிஷ்னர் இன்னும் பல்வேறு துறை செயலாளர்களுக்கான தேர்வில் முஸ்லீம்கள் வெறும் 2.4% பேரே தேர்வானது கவலை அளிக்கின்றது. நமக்கு மட்டும் மத்தியில் 10% இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால், 21 பேருக்கு பதில் 87 பேர் தேர்வாகி இருப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொத்தமாக தேர்ந்தெடுக்கபட்ட UPSC (IAS, IPS,IFS) நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டஇட ஒதுக்கீடு இலச்சியத்தை அடைய இன்றே ஆயத்தமாவோம்.

S.சித்தீக்.M.Tech

TNTJ மணவர் அணி