துண்டிக்கப்பட்ட உடல் உறுப்பை மீண்டும் வளர வைக்கும் ஜீன்: விஞ்ஞானிகள் ஆய்வு!

விபத்தில் சிக்கி கை, கால் துண்டிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் துன்பம் கொடுமையானது. இதுபோல் விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடந்துவருகின்றன இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் அஜீஸ் அபூபக்கர் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

பல்லியின் வால் துண்டிக்கப்பட்டாலும் அது கொஞ்ச நாளில் மீண்டும் வளர்ந்துவிடும். அதுபோல சில உயிரினங்களின் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டாலும் அது மீண்டும் வளர்ந்துவிடும். இதுபோலவே பிளானேரியன் எனப்படும் புழுவின் தலை துண்டிக்கப்பட்டாலும் அது இறந்துவிடுவதில்லை. கொஞ்ச நாளில் அதன் தலை வளர்ந்துவிடும். தலை மட்டுமின்றி அந்த புழுவின் மூளை சேதம் அடைந்தாலும் அது மீண்டும் வளர்ந்துவிடும்.

இப்படி வித்தியாசமான உடல் அமைப்பு கொண்ட இந்த புழுவை அடிப்படையாக வைத்து டாக்டர் அஜீஸ் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியது. பிளானேரியன் புழுவின் உடலில் ஏற்படும் இந்த மாற்றத்துக்கு காரணமான ஜீன் எது என்பதை முதலில் கண்டுபிடித்தனர். “ஸ்மெட் பெர்ப்“ எனப்படும் இந்த ஜீன் தான் துண்டிக்கப்பட்ட தலை, சேதம் அடைந்த முளை ஆகியவற்றையும் மீண்டும் வளர வைக்கிறது என்பதை கண்டுபிடித்தனர்.

தற்போது இது குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் நடக்கிறது. இதே ஜீன் மனித உடலில் உள்ளதா? அல்லது அதுபோன்ற ஜீன் மனித உடலில் செலுத்தப்படும் போது புழுவின் உடலில் நடந்தது போல துண்டிக்கப்பட்ட உடல்உறுப்புகள் தானாகவே வளருமா? என்பது தான் அடுத்தகட்ட ஆய்வுகள் ஆகும்.

இந்த ஆய்வுகள் வெற்றி பெறும் போது உடல்ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு பெற முடியும். விபத்தில் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இழந்த உடல் உறுப்புகளை சில மாதங்களில் பெறமுடியும்.

தேடிததந்தவர்-அபு அஹ்சன்

tntj.net

சாதிக்க அரசுப் பள்ளியும் ஒரு தடையல்ல!ஜாஸ்மீன்


மே 26  அன்று வெளியான எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக சாதனை புரிந்த ஜாஸ்மினைப் பார்த்து பலரது புருவமும் சற்றே உயர்ந்தன. காரணம் அவர் படித்த பள்ளி. திருநெல்வேலி மாவட்டம் டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்த ஜாஸ்மின் மாநில அளவில் முதலிடம் பெற்று தனது பள்ளிக்கும், பள்ளியின் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

தமிழக மக்கள் மனதில் இன்று வரை பதிந்து விட்ட ஒரு செய்தி. மாநில அளவிலோ,மாவட்ட அளவிலோ  சாதிக்க வேண்டுமானால் புகழ்பெற்ற தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தாலே அது முடியும் என்பது. அதை மாற்றி புதிய சரித்திரம் படைத்துள்ளார் தெரு தெருவாக ஜவுளி வியாபாரம்  செய்து பிழைப்பு நடத்தும் சேக் தாவூதின் மகள்  ஜாஸ்மின்.

தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளைக் கட்டணத்தில் தன் பிள்ளைகளை சேர்த்தால் மட்டுமே கல்வி தரமானதாக இருக்கும் என்று என்னும் பெற்றோர்கள் இனியாவது அரசுப் பள்ளி ஆசிரியர்களின்  முயற்சிகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போல அரசும் கல்வியில் தனிக் கவனம் செலுத்தி அரசுப் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து தமிழக மக்கள் அரசுப் பள்ளிகளில் முண்டியடித்து தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.

-இறை நேசன்-

விடுதி வசதி : முஸ்லிம் மாணவியர் சேர்க்கை ஆரம்பம்

வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது

Image

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம் மாணவியர் இடைவிடாது கல்வி பயிலும் நோக்கில் சிறுபான்மையினர் நலத்துறை வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இவ்விடுதிகளில் மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
விடுதியில் 4ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவியர் சேர்க்கப்படுவர். மாணவியர் முஸ்லிம் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.  மாணவியின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இலவச உணவு மற்றும் உறைவிடம், அனைத்து அடிப்படை வசதிகள் அளிக்கப்படும். மேலும் 4ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு இரண்டு செட் இலவச சீருடை வழங்கப்படும்.  பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவியருக்கு இலவச சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். தொலைதூரத்திலிருந்து வந்து கல்வி பயில்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5:45 மணி வரை, அனைத்து மாவட்ட கலெக் டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந் தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது சம்பந் தப்பட்ட விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி விடுதிக்கு, ஜூன் 10ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும், கல்லூரி விடுதிக்கு ஜூன் 24ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது

adhikaalai