கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.துபாயில் இருந்து 166 பயணிகளுடன் வந்த மங்களூரில் தரை இறங்கும்போது வெடித்து தீப்பிடித்ததில் 158 பேர் உடல் கருகி இறந்தனர்.
விபத்து நடந்தது எப்படி என்பது பற்றி கண்டுபிடிப்பதற்காக இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டனர்.விமானத்தின் முன் பகுதி சிதைந்து கிடந்த இடத்தில் கறுப்பு பெட்டி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்ய மும்பை அல்லது டெல்லிக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
மங்களூர் விபத்து: அமெரிக்க குழு விசாரணை:
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மங்களூரில் விபத்துக்குள்ளான விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏதும் இருந்தா என்பதை கண்டறிய ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மங்களூர் விமான விபத்து குறித்து விசாரணை நடத்த அமெரிக்காவில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கழகத்தின் நிபுணர்கள் இந்தியா வர உள்ளனர். அவர்கள் வருகிற செவ்வாய்க்கிழமை மங்களூர் வருகிறார்கள்.
விபத்து குறித்து இந்திய நிபுணர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்வார்கள். அவர்கள் ஆய்வு நடத்திய பிறகு விபத்துக்கான முழு காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மங்களூரில் நெஞ்சை உருக்கும் சோகம் விமான விபத்தில் 159 பேர் பலி :
மங்களூர்: மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை நெஞ்சை உருக்கும் மிகக் கோரமான விமான விபத்து ஏற்பட் டது. துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரை இறங்கும்போது ஓடுபாதையை தாண்டி மலையில் மோதி வெடித்துச் சிதறியது. இதில், 19 குழந்தைகள் உட்பட 159 பேர் கருகி பலியாகினர். அதிர்ஷ்டவசமாக 7 பேர் உயிர் தப்பினர். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மிக கோரமான விமான விபத்து இது.
Filed under: பொதுவானவை | Tagged: மங்களூர்-விபத்து-கறுப்ப | Leave a comment »